21 Nov 2018

மின்னியது போலின்,,,,

கல்யாணத்திற்குபோகும்போதுபதினோருமணிஇருக்கலாம்என்பதாய்நினைவு,

சரியாகஞாபகமில்லை, மணியையும் பார்க்கவில்லை,பார்க்க நேரமுமில்லை, கையில் வாட்சும் கட்டி இருக்கவில்லை.

அதுஏனோதெரியவில்லைசமீப நாட்களாய் வாட்ச் கட்டும்பழக்கம்இல்லாமல் போனது,

வீட்டில் ஒன்றுக்கு இரண்டு கிடக்கிறதுதான்,அதுதான் செல் போனில் மணி பார்க்கிறவசதி இருக்கிறதே என்கிற மனத்தெம்பும் வாட்ச்கட்டாதனால் பெரிய இழப்போ பாதிப்போ ஏற்பட்ட தாய் உணராததினாலும் கட்டுவதில்லை.

திருமணமாகிஇருபத்தைந்துவருடங்கள்ஆகிவிட்டதெனஎடுத்துக்கொடுத்தாள். மனைவி/

அவளே கடைக்குக்கூட்டிப் போய் அவளே சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து அவளே வாங்கி கையில் கட்டியும்விட்டாள்.நல்லதான ஒரு லீவு நாளாய்ப்பார்த்து/

வேலை நாளின் மா லை வேளைகள் அதற்கேற்றதாய் அமைவதில்லை, அலுவலகம் விட்டு வீட்டி ற்கு வரவே நேரம் சரியாக இருக்கிறதுதான், அலு வலகம் அது சுமந்த பாடுகள் அதன் நினைவுகள் மற்றும் ஏற்ற தாழ்வான நிகழ்வுகள் என இன்னும் இன்னுமாய் மனம் ஆக்ரமிக்க அலுத்துப்போன உட லையும் அவிழ்ந்து போன மனதையும் அள்ளிக்கட்ட மனமில்லாமல் அப்படி யே அள்ளிக்கொண்டு வந்துவீட்டில் போட்டால் போதும்என்பதாய் ஆகிப் போ கிறது,

அதிலும் சிறப்பாய் ஏதாவது ஒரு சுகம் சுமந்த சுமை வந்து மனதில் ஒட்டிக் கொள்கிற நேரங்களில் இன்னும் கொஞ்சம் கூடுதலாய்,,,/

இதில் எங்கு போய் பஜார், சாமான்கள் அப்புறமாய் இதுபோலாய் வாட்ச் என நினைக்க,,,,?

வீடு ,டீ,நல்லதான ஒரு இரவுக்குளியல் தொலைக்காட்சி,நாடகம் அல்லது சினிமா,சாப்பாடு தூக்கம் என அடைபட்டுப்போகிறது அன்றைய தின நகர்வின் முடிவு.

ஏற்கனவே இடது கையில் கட்டியிருக்கிறேனேவாட்ச் எனச் சொன்னதைக் கூட ஏற்றுக்கொள்ளாமல் “அதுனால என்ன கட்டிக்கங்க கொஞ்ச நேரத்துத் தான கடையை விட்டுப்போகும்போது கழட்டி பையில வச்சிக்கலாம்” என வம்பு பண்ணி கட்டி விட்டாள்.

”ஏய் என்ன இது கிறுக்குத்தனமா பண்ணிக்கிட்டு வேணாம் வேணாமுன்னு சொல்லச்சொல்லவம்படியாகடைக்குக்கூட்டுக்கிட்டுவந்துஇப்பிடிப்பண்ணுனா எப்பிடி,,,”? என்ற இவனின் பொய்க்கோபத்திற்கு பதிலாய் அவள் சொன்னாள்,

“என்னமோ வாங்கிக் குடுக்கணுமுன்னு தோணுச்சி,, வாங்கிக் குடுத்தேன், கல்யாணமாகி இத்தன வருஷம் ஆனதோட ஞாபகார்த்தமா ஏதாவது குடுக்க ணுமுன்னு தோணுச்சி, வாங்கிக்குடுத்தேன்,”அப்ப நான் வாங்கிக் குடுக்குறது புடிக்கலையின்னா ஏங் ஆசையை நிராகரிக்கிறீங்கன்னு அர்த்தமா,.”? என்றாள் திரும்பவும் அதே பொய்க் கோபத்துடன்/

வந்த கோபம் மிதப்பட்டுதான் வந்தது என்றாலும் கூட கோபத்தின் உஷ்ண த்தில் கடைக்கருகிவிடுமோ என அச்சப்பட்ட வாட்ச்க் கடைகாரர் பில்லுக்கு வாங்கிய பணத்திற்கு மிச்சம் கொடுத்தவராய் இவர்கள் இருவரையும் கிளப்புவதிலேயே குறியாக இருந்தார்,

கடைக்காரரின் ஆசையையும் கெடுக்க வேண்டாமே என இவன்தான் மனைவியைக் கூட்டிக் கொண்டு வெளியே வந்தான்,

“ஏன் இப்ப இப்பிடி கழுத்தப்புடிச்சி தள்ளீட்டு வராதகொறயா கூட்டிக்கிட்டு வர் றீங்கஎன்ற போது அப்பிடியெல்லாம் இல்ல, கடைகாரரு அவசரப் படுத்துறாரு, நாமளும் வந்து எவ்வளவு நேரம்தான் கடையில நிக்கிறது,ஒரு மணி நேரத்துக்கு மேலஆகப்போகுது கடைக்குள்ள வந்து,ஒரு வாட்ச்வாங்கிக் குடுக் குறதுக்கு கடையவே ரெண்டு பண்ணுறயே,,” என இவன் அவளிடம் கண்ண டித்தபோது சீசும்மா இருங்க நடு ரோட்டுல வச்சிக்கிட்டு,என வெட்கப்பட்டாள், ”நடு ரோடு என்ன நடு ரோடு.நட்ட நடு வீதியில்வச்சிகூடஒன்னைய தலை யில தூக்கி வச்சி சுத்திக் கொண்டாடுவேன் பாத்துக்க” என்றான் இவன்.

பதிலுக்கு அவளிடமிருந்து தந்தி போல வரும் வெட்கத்தை கண்ணுருபவன் ஆகா இந்த வெக்கத்தப்பாக்குறதுக்காகவாவது எத்தனை தடவை வேணுமின் னாலும் வாட்ச் வாங்கலாம் போல இருக்கே என்றான் இவன்.

கூடவேஇன்னொறையும்இலவசஇனைப்பாய்ச்சேர்த்துச்சொன்னான்,”வாட்சக் கட்டிக்கிறதுக்குப் பதிலா ஒன்னையக்கட்டிக்கிறச்சொன்னா நல்லா இருந்துக் கும்,”

ஒரு வாரமாகவே திருமணத்திற்கு செல்ல வேண்டும் கண்டிப்பாக என முடிவு செய்து வைத்திருந்தான், முடிவு செய்து வைத்திருந்த எத்தனையோ விஷயங் கள் முடிவை எட்டாமல் போய் விடுகிற பரிதாபத்தில் முக்கியமானதாய் திருமணங்களில்கலந்துகொள்ளமுடியாமல் போவதும் ஒன்றாகிப் போகிறது தான்.

எத்தனையோ முறை அப்படியாய் தவற விட்டிருக்கிறான். இம்முறை அப்படி விட்டு விடக்கூடாது என்பதான நினைப்புடன் அலுவலகம் கிளம்புகிற தினத் தன்று காலை நண்பனின் மனைவி பத்திரிக்கை கொடுக்க வந்த போது எடுத்த முடிவுதான்,

நண்பனுக்கு வேலை இருக்கிறது என அவனது மனைவி பத்திரிக்கை கொடு க்க வந்த அன்று காலை இவன் குளித்துக் கொண்டிருந்தான்.குளித்து விட்டு வரும் வரை காத்திருந்து பத்திரிக்கையை கொடுத்து விட்டுப் போனாள்,

“முன்ன மாதிரி இல்லண்ணே ,செரமமாகிப் போச்சி, வீட்ல அவரையும் என் னையும் புள்ளைங்கசொந்தங்கா ரங்க வீட்டுப் பக்கம் போகக்கூடாதுன்றாங்க, சொந்தக்காரங்க எங்க வீட்டுப் பக்கம் வர்றதையும் விரும்பல அவுங்க,ஏன்னு கேட்டா சொல்ல மறுக்குறாங்க, அவுங்கதானடா நம்பள தூக்கி வளத்தது வச்சது ,,ஒங்கப்பாவக்கூட விடுங்கடா ,அவுங்க இல்லைண்ணா இன்னைக்கி நான் இந்தளவுக்கு வந்துருக்கவே முடியாதுடா,வெறகு வெட்டி பொழப்பு நடத்திக்கிட்டுருந்தவரோட மக நானு அவரப்போல ஏதோ ஒரு கூலிக் கார ருக்கு வாக்கப்பட்டு தெனம் சோத்துக்கு செரமப்பட்டுக் கிட்டு இருந்துருப்பேன்.

”ஆனா அப்பிடியில்லாம எனக்கு கல்யாணம் பண்ணனுமுன்னு எங்க வீட்ல முடிவெடுத்த ஒடனே சொந்தக்காரங்கள்ல உறுத்து உள்ள அத்தனை பேரும் ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்லி நல்லதான ஒரு முடிவ எடுத்து நல்ல யெடத்துல மாப்புளை பாத்து என்னைய கட்டி வச்சாங்க,அவருதான் ஒங்க அப்பா,அவரு கல்யாணம் ஆன அன்னையிலயிருந்து இன்னைக்கி வரைக்கும் என்னையஉள்ளங்கையிலயும்மனசுலயும்வச்சிதாங்குதாங்குன்னுதாங்குறாரு,

”அப்பிடியாப்பட்டவற ஏங்கிட்ட கொண்டு வந்து சேத்தவுங்க அந்த சொந்தக் காரங்கதாண்டா,,,,அப்பிடிவந்தவரலாத்தான்நான்ஒங்களுக்கு அம்மா ஆனேன், வைரம் மாதிரி ரெண்டு புள்ளைங்க எனக்குக் கெடைச்சிருக்கீங்க, அப்பிடி எங்கள சேத்துவச்ச சொந்தக்காரங்கள வேணாமுன்னு சொல்லுறீங்களேன்னு சொன்னா அப்பிடின்னாஅப்பிடித் தான்றாங்க,

“அப்பிடிச்சொல்றவுங்ககிட்ட என்ன சொல்றதுன்னு தெரியல/தெரிஞ்சி பேசுறா ங்களா,இல்லதெரியாமபேசுறாங்களான்னுதெரியல.சொல்லிப்பாத்துச்சொல்லிப் பாத்து அலுத்து நானும் விட்டுட்டேன்.ஆனாலும் அவுங்க அப்பிடியேத்தான் இருக்குறாங்க,

“ஒரு சமயம் நானும் வீட்டுக்காரரும் ரோட்டுல நடந்து போய்க் கிட்டு இருக் கும் போது ஒங்களப்பாத்தேன்க்கா,அப்பத்தான் ஏங்க வீட்டுக்காரரு சொன் னாரு,இவுங்கஏங்நண்பரோடமனைவின்னு,அன்னைக்கிப்பாத்ததுதான்,அதுக்கப் புறமா இன்னைக்கித்தான் பாக்குறேன் ஒங்கள,இதுக்கப்புறம் ஒங்கள பாக்க முடியுமோ இல்லையோ,இந்த கல்யாணத்துக்கப்பறம் இங்க இருக்கமோ இல்ல புள்ளைங்கள அண்டி பொழைக்கப்போயிருறமோ தெரியல,அது வரைக் குமாவது நம்ம ஒண்ணுக்கு ஒண்ணு பாத்துக்குவம் ,பழகிக்கிவோம் பேசிக்கி வோம்,,,”என அவள் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது இவன் வந்து விட் டான் குளித்து விட்டு,/

கையெடுத்துக் கும்பிட்டவாறே பத்திரிக்கையை வாங்கிக் கொண்டு வாசல் வரை சென்று அவளை வழியனுப்பி விட்டு வருகிறான்.

”ஆமாம் இப்ப நீங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு வர்றேன்னு அவுங்க கிட்ட சொல்லீட்டீங்க. கல்யாணமும் வேலை நாளாப்பாத்து வருது,நீங்க ஆபீஸீக்கு லீவு போட முடியாதுன்னு சொல்லுவீங்க,என்னையத்தான் போயிட்டு வரச் சொல்லி தொந்தரவு பண்ணுவீங்க,ஆளு தெரியாத யெடத்துல போயி அத்த னை ஜனங்களுக்கு மத்தியிலநானு ஒத்தைக்காட்டுக்கொரங்கு போல தனியா ஒக்காந்துக்கிட்டு என்ன செய்ய சொல்லுங்க,என்றவளை இடை மறித்தவ னாய் இல்ல நீ மட்டும் போகல ,நம்ம ரெண்டு பேரும் சேந்து போவோம். என்ற வனை ஏறிட்டவளுக்கு விரிந்த முகம் திருமணத்திற்கு சென்று திரும்பும் நாள்வரை அப்படியே இருந்தது/

அலுவலகம் விட்டு ஆறு மணிக்கு கிளம்பினாலும் கூட வீட்டிற்கு வர ஏழு மணியாகிப்போகிறது. அதுவும் இரு சக்கர வாகனத்தில் செல்கிற தினம் கொஞ்சம் சீக்கிரம் வந்து விடலாம்,பஸ்ஸை நம்பி பயணம் செய்கிற நாட்க ளில் ஒரு அரை மணி தாமதமாகும்.

அன்று கொஞ்சம் தாமதப்பட்டுத்தான் போனது,பஸ்ஸை விட்டு இறங்கி விட் டான், வறண்டு கிடக்கிறதே தொண்டை என டீக்கடைக்குப்போனது பெரிய தப்பாகிப்போனது போலும்,

டீக்குடித்து விட்டு வரும் பொழுது செல்வியக்கா பிடித்துக்கொண்டாள்,நிறைய படித்தவள், எவ்வளவு படித்தவள் என இவனுக்குத்தெரியாது,

இவனைவிட படித்ததால் நிறைய படித்தவள் என இவனாய் நினைத்துக் கொள் வதுண்டு,

“படிப்பு என்ன பெரியபடிப்பு தம்பி,சொரக்காய்ன்னு பேப்பர்ல எழுதவச்சி படிச்சா அது கறிக்கு ஆகுமா சொல்லு,என்னத்த நான் பெரிசா படிச்சிட்டேன், ஒன்னய விட ரெண்டு வகுப்பு கூடப்படிச்சிருக்கேன் அவ்வளவுதான்,,” என்கிற அவளது தோற்றைத்தை பார்க்கிற போது மெத்தப்படித்தவளின் முகம் அதில் உறைகொண்டு தெரியும், அப்படியாய் தெரிவு படுகிற முகத்தின் மேன்மை எப் பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.

அதில்தான் இவன் ஏமாந்து போனான்,”அது ஓந்தப்பு தம்பி,ஏன் அப்பிடியெல் லாம் ஏமாறுற,தோற்றத்தப்பாத்து எடை போடுறத நிறுத்து மொதல்ல என்ப வள் அப்பிடி என்ன படிச்சி என்ன செய்ய சொல்லு,நீ நெனைக்கிற மாதிரியே வச்சிக்கிருவம்.ஒன்னைய விட நான் என்ன அவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்கு றேன் ,உள்ளூரு விஷயத்துல இருந்து உலக விஷயம் வரைக்கும் கரெக்டா பேசுற ,கரெக்டா பாக்குற,கரெக்டா நிதானம் பண்ணி வச்சிருக்குற,,,,, நாங்க ளும்தான் டீ.வி பாக்குறோம்,பேப்பர் படிக்கிறோம்.மத்த மத்தத கேள்விப்படு றோம், ஆனா அதே டீவியிலயும் பேப்பர்லயும் வர்ற நீயூஸையும் சம்பவங் களையும் நீ பாக்குற விதமும் நாங்க பாக்குற விதமும் வேற வேறையா இருக்கு, ஏன் எதுக்கு என்ன எப்படின்னு அதப்பாத்த நீ எனக்கு விளக்கம் சொல்லுற,ஆனாஎன்னாலஅப்பிடியெல்லாம்ஒரு விஷயத்தப்பாக்கமுடியாது. பாத்தோம்கேட்டோம் சரி அவ்வளவுதான்னு போயிக் கிட்டே இருப்பமே ஒழிய அது தாண்டி வேறஒண்ணும்பெரிசா பேசீறமாட்டோம்,

”இவ்வளவு எதுக்கு ஒங்க நெருங்குன சொந்தத்துல இருக்குற கனகா சிந்துன பேச்சும் அள்ளுன பொரணியுமாதான் திரியுறா,அவன் அங்க போனான், இங்க வந்தான், இப்பிடி செஞ்சான் ,அப்பிடி செஞ்சான்னு,,,,,,வாயத்தெறந்தா ஒரே பொரணிதான்,ஓங் கூட நல்லா பேசுற மாதிரி பேசுவா ,ஆனா நீ அவள விட்டு கடந்த மறு நிமிஷமே ஒன்னையப்பத்தி அவ பேசுற பேச்சு வாட்ஸப் அளவு க்கு படம் விரிச்சிப்போயி நிக்கும்,இந்த ஏரியாவுல அவ பொரணி பேசாத ஆளுன்னா நான் ஒரு ஆளு மட்டும்தான்.ஏங்கிட்ட ஒரு நா இப்பிடித்தான் பேசிக்கிட்டே இருக்கும் போது எக்கா,எக்கா கொஞ்சம் கவனமா இருக்கான்னு ஏங் வீட்டுக்காரரப்பத்தியே பொரணி சொல்ல ஆரம்பிச்சிட்டா,எந்திரிச்சி போற யா இல்ல செருப்பக்கழட்டி அடிக்கவான்னு சத்தம் போட்ட ஒடனே போயி ட்டா,

“ஆனா அதெல்லாம் அவளுக்கு பெரிசில்ல,தொடைச்சி எறிஞ்சிட்டு மறு நிமி ஷமே யாரு காதையாவது கடிக்கப் போயிருவா,அவ வீட்டுல அவ புருசனும் புள்ளைங்களும்கூடஅவள மதிக்கிறதில்ல. அவ கூடஒட்டுறதில்ல.

“அப்பிடியாப் பட்டவளுக்கும் ஓடுதான வாழ்க்கை.அவளப்போல ஆட்க என்ன படிச்சி என்ன செய்ய சொல்லு,புத்திய எங்கிட்டாவது அடகு வச்சது போலத் தான,,,,,,”என்றவளைக்கடந்து வீடு வந்தான்,

இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் ஆறுமணி பஸ்ஸைத்தான் பிடிக்க முடிகி றது,அந்த பஸ்ஸில் வருவதிலும் ஒரு பிரயோஜனம் இருக்கிறதுதான். ஏறின திலிருந்து வீடு போய் சேர்கிற நேரம் வரை மனதை வருடும் பாடல்களை கேட்கலாம்தான்.சமயங்களில் கண்ணீர் வந்து விடுகிறது அப்படியான பாடல் களை கேட்கிற போது.

உடல் பொருள் ஆவி அனைத்துமாய் இயங்குற ஒற்றைத்தளமாய் மனது விரிந்து கிடக்கையில் இது போலான பாடல்கள் என்ன பார்க்கிற சம்பவங்கள் கூட கழிவிறக்கம் கொள்ள வைத்து விடுகின்றதுதான்.

மென் பனி தூவிய வெண் பனிக்காலத்தின் சுவடுகளாய் அடித்த குளிர் காலை யில் சீக்கிரம் எழுந்திருக்கச்விடவில்லை,அதிகாலை ஐந்து மணிக்கு வந்து விட்ட விழிப்பை கண்களின் அனுமதியுடன் இமைகளுக்குள் தேக்கி வைத்துப் பார்த்த போது எட்டாத தூரத்தில் தெரிந்ததாய் காட்சிப்பட்ட மனைவியும் பிள் ளைகளும் இவன் அருகாமை காட்டி தூங்கிக் கொண்டிருப்பது பட்டது.

பூத்திருந்த பூ படர்ந்திருந்தது,படர்ந்திருந்த பூ மலர்ந்திருந்தது,மலர்ந்திருந்த பூ ஒற்றைக்கொன்றையாய்அடர்ந்த்திருந்தது,அடர்ந்திருந்தமலர்களுக்கு சூட்டிய மகுடமாய் ஜீரோ வாட்ஸ் பல்பின் வெளிச்சத்தில் வீடு மின்னியது,

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல் ரசனை உண்மை...

vimalanperali said...

நன்றியும் அன்பும்!

வலிப்போக்கன் said...

பஸ்ஸின் இரைச்சல் , நடத்துனரின் விசில் சத்தம் இன்னும் பல இவற்றையெல்லாம் கடந்து மனம் பாடல்களில் லயிக்கிறது என்றால்... அது ஆச்சரியம் தான்.......

vimalanperali said...

வணக்கம் வலிப்போக்கன் சார்,
நன்றியும் அன்பும் வருகைக்கு./