13 Nov 2018

சென்ற திசை,,,,/

அவருடனான உறவின் முடி எப்பொழுதிலிருந்து ஆரம்பிக்கிறது என்பதை அறுதியிட்டு கூறிவிட முடியாத போதும் கூட அரிச்சலாய் ஞாபகம் இருக் கிறதுதான்,

அது 1985 இன் மத்திம காலம், ஈரப்பிசு பிசுப்பு மனம் முழுவதுமாய் ஒட்டிக் கிடந்த நேரம்,ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சாத்தூருக்கு மாறுதலாகி வருகிறேன் கண் முழியாத கோழிக்குஞ்சாய்/

பணி சாத்தூரில் .குடியிருப்பு மதுரை பாண்டியன் காலனியில் உள்ள அக்கா வீட்டில் என இருந்த நேரம்,

வேலை ,,,வேலை விட்டால் வீடு,வீடு விட்டால் வேலை என்கிறதான ஆகம விதிகளுக்குள் அடைபட மறுத்த மனது ,வயிற்றுக்கு அலுவலக வேலை மனதுக்கு,,,,,? என்கிற தேடலுடன் வலை விரித்த நாட்களில் மண் பிளந்து துளிர்த்து இலை விட்டு கிளை பரப்ப ஆரம்பித்திருந்த இயக்கம் பார்க்கக் கிடைக்கிறது,

இயக்கத்தின் வேர்களாய் அப்பொழுதான் கால் பாவி தரை உன்றியிருந்த ஜே,ஜே சீனிவாசன்,சேகர், தீக்கதிர் ராஜேந்திரன்,சந்துரு மற்றும்மற்றுமாய் துணை வேர்களாய் காட்சிப்பட்ட முருகன்,கெரோ கண்ணன்,அசட்டுச்சீனி(சீனி மன்னிக்கவும் பட்டப் பெயரை சொல்லவேண்டிய அவசியம்)இன்னும் இன்னு மான ஒரு மரத்து பறவைகளான தோழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஏதாவது ஒரு இயக்க வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது ஊர்ந்து செல்கிற எறும்பின் சுறுசுறுப்பை படம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்ததாய்,,/

இயக்கம் சம்பந்தமாய் போஸ்டர் ஒட்டினார்கள், நோட்டீஸ் கொடுத்தார்கள், பேனர் எழுதினார்கள். பொதுக்கூட்டம் என்றால் அந்த ஏரியா முழுவதும் தோரணம் கட்டி நிறைத்தார்கள்,கோரிக்கைள் எழுதி தட்டி போர்ட் வைத்தார் கள், ஊர் ஊராய் சைக்கிள் பிரச்சாரம் போனார்கள்,இப்படியெல்லாம் இயக்கம் கட்டுவறவர்களின் வேலையில் அப்படி என்னதான் நடக்கிறது என அவர்க ளுடன் கை கோர்த்த போதும், அவர்கள் தோள் தொட்டுப் பாவி படர்ந்த போதும் அவர்கள் செய்த வேலையில் மேம்பட்ட ஒரு உயிரோட்டம் தெரிகிறது,

ஆழ்ந்துபட்ட அந்த உயிரோட்டத்தின் கரம்பற்றியும்மனம்தொட்டும்உறவாடிக் கொண்டிருந்த நாட்களில் அவ்வியக்கத்தின் வேர்களில் ஒருவராய் இருந்த சேகர் அவர்கள் இயக்கப் பணிகளின் உச்சம் தொட்டு அவர் சார்ந்தி ரு ந்த இயக்கத்தின் உயர் பொறுப்பிற்கு வருகிறார்,

வந்த பின்னாய் அவருடனான உறவு கொஞ்சம் மட்டுப்பட்டதாய் தெரிந்தாலும் இன்னார் என்றால் இப்படித்தான் என என்னைப்பற்றிய ஒரு உயர் வரைவு அவரிடம் இருந்ததை தோழர்கள் சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன்,

இப்படியாய் அவர் பற்றி நானும் என் பற்றி அவருமாய் பரஸ்பரமானதொரு உயர் வரைவை மனம் தேக்கி வைத்திருந்த நாட்களில் அவருக்குள் குடி கொண்டிருந்தகொடிய நோயான கேன்சர் ரகசியம் காக்காமல் அவரது உயிரை குடித்துக் கொண்டு போய் விடுகிறது.

இனிய நண்பனாய் உற்ற தோழனாய் ,சகோதரனாய் அவர் இயக்கம் தவிர்த்து சக தோழர்களின் குடும்பங்களில் தன் மனம் கலக்க விட்டிருந்தார்,

ஒரு சமயம் இயக்கத்தோழர் ஒருவரின் பதினாறு வயது மகன் நண்பனின் வீட்டிற்கு படிக்கப் போகிறேன் எனச்சொல்லிப்போனவன் இரவு பதினோரு மணிக்கு மேலாகியும் வீட்டிற்கு வரவில்லை.

விஷயம் கேள்விப்பட்டதும்வந்துவிட்டார் நான்கைந்து தோழர்களுடன்/

இயக்கத் தோழரை பதட்டப்படாமல் இருக்கச் சொன்னவர் மகன் எங்கு போனான், அவன் சென்ற இடம் எது, என்கிறது போலான விபரங்களை கேட்டு விட்டு தோழரையும் இரு சக்கர வாகனத்தின் பின் அமரச் செய்து நகரின் முக்கிய வீதிகள் எங்கும் தேடிய பின் பணிரெண்டுமணி வரை பள்ளித் தோழ னின் வீட்டில் பரிட்சைக்கு படித்து விட்டு இப்பொழுதான் வருகிறேன் எனக் கூறி சிரித்தவனாய் வந்து கொண்டிருந்த தோழரின் மகனை அவரது இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர வைத்தும் தோழரிடம் மகனின் சைக்கிளை வாங்கிக் கொடுத்து விட்டுமாய் அவனை வீட்டில் கொண்டு போய் இறக்கி விட் டார் அதே நான் கைந்து தோழர்கள் புடை சூழ/

வீட்டிற்குபோய்பையனைவிட்டுதோழரிடம் சொல்லிக் கொண்டு அவர் கிளம் பும் போது அவர் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்த மகனிடம் தோழர் கேட்கிறார்,

”என்னடா அவரு போறதையே பாத்துக் கிட்டு இருக்க” என,,,,

,”அப்பா அவரு என்னைய வண்டியில இருந்து யெறக்கி விட்டுட்டுப் போகும் போது ஒண்ணு சொல்லீட்டுப் போனாருப்பா,

“நல்லதையே படிச்சி நல்லவனா வளந்து விருட்சமாகி நில்லுன்னு,,,/

அன்று அவர் சொன்னது போல் தோழரின் மகன் விருட்சமாகி நின்றானோ இல்லையோ நான் அறியேன்,

ஆனால்இன்று தோழர் சேகர் அவர்களின் புதல்வன் திரு.பகத்சிங் அவர்கள் நல்லதையேகற்றுநல்லவராய் வளர்ந்து ஆழக்காலூன்றிவேர்விட்டு நிற்கிறார் இம்மண்ணில்.

ஆழக்காலுன்றலும் வேர்விடலும் கடந்த 12.11.2018 அன்று காலை அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியாய் படம் விரித்து நிற்கிறதுநட்புகளும் தோழ மைகளும் உறவுகளும் புடை சூழ/

திரு பக்த்சிங்க் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நானும் எனது துணைவியாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு மன நிறை வுடன் திருமண மண்டபம் விட்டு வெளி வருகையில் கையிலெடுத்த ஒற்றை வெற்றிலையை புறம் பார்த்து திருப்பிப்போட்ட போது வெற்றிலையெங்கும் ஓடிக்காட்டியநரம்புகளின் பிணைப்பே மண்டபத்தினுள் அமர்ந்திருக்கிற நட்புக ளும் ,தோழமைகளும் ,உறவுகளும் இன்ன பிறர்களும் எனச்சொல்லிச் சென்ற தாய்,,,/

மண்டபத்தின் வாசல் படியை தாண்டுகையில்ச ப்தமிட்டு சொல்லிக் கொண்டு வருகிறேன்,

”போய் வருகிறேன் தோழர்  அவர்களே,போய் வருகிறேன்”என/

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தோழர் சேகர் அவர்களின் புதல்வன் திரு.பகத்சிங் அவர்களுக்கு வாழ்த்துகள்

vimalanperali said...

நன்றியும் அன்பும் சார்,முகம் தெரியாத
ஒருவரை வாழ்த்துகிற மனதுலேசில்
வாய்த்துவிடாதுதான்/

vimalanperali said...

நன்றியும் அன்பும் சார்,வருகைக்கு,,,/

வலிப்போக்கன் said...

யரென்று தெரியாத போதிலும் தோழராகி விட்டதால் வாழ்த்து சொல்லாமல் இருக்கக்கூடாது என்பதால் தோழர்க்கு வாழ்த்துக்கள்!!!!

vimalanperali said...

வாழ்த்துச்சொன்ன நல்ல மனதிற்கு நன்றி!