4 Nov 2018

சிந்தித்தெள்ளிய,,,,

போய் விட்டதா பேருந்து எனக்கேட்க நினைத்த கணத்தில் வந்து நிற்கிறது பேருந்து இளம் செவ்வந்திப்பூ நிறம் காட்டி,

புழுதி படர்ந்த சாலைகளில் இது போலான கலர்களில் பேருந்து ஓட்ட தனி தைரியம் வேண்டும்தான்,அது அவர்களுக்கு இருந்தது போலும்,,,/ 

வரட்டுமாஅப்ப,எனக்கேட்டநேரத்தில்தோசைசுட்டுக்கொண்டிருந்தாள்மனைவி.
தோசையம்மா தோசை,அம்மா சுட்ட தோசை அரிசி மாவும் உளுந்த மாவும் கொஞ்சம் கோதுமை மாவும் கலந்து சுட்ட தோசை,,,,,என பிள்ளைகள் இருவ ரும் பாடும் போது கொஞ்சம் கோபம் கொண்டு வைவாள் அவள்,

ஆமாடி இப்பிடியே பாடுப்பாடவும் கேலி பண்ணவுமா மட்டுமா இருங்க, வே லையில எதுவும் ஒதவீறாதீங்கடீ என்பாள் பல்லைக்கடித்துக்கொண்டே/

கடிக்கிற பல்லின் நறநற சப்தத்தில் வண்டு விடுகிற இவன் ஏங் பச்சைப் புள்ளைகளப் போட்டு வசை பாடுற,அதது கத்துக்க வேண்டிய தேவையும் நேரமும் வந்தா கத்துட்டுப்போகுதுங்க என்பவன் அவுங்க ரெண்டு பேருக்கும் காலேஜ் போக பாடத்தப்படிக்கன்னு தூங்கி எந்திருக்கன்னு இருக்கவே நேரம் சரியா இருக்கு,இதுல நீ சொல்றது போல சமையலறைய சுத்தி வந்துக்கிட்டு இருந்தாங்கன்னு வையி,அவ்வளதான் ,அவுங்க படிப்பும் பட்டமும்,,,,/

அது சரி நீங்க சொல்றது போல கொஞ்சம் விட்டுப்பிடிச்சும் அதுங்கங்களுக்கு தேவை வரும்போது கத்துக்கிற வேண்டியதுதானன்னு விட்டா நாளைக்கி இன்னொருத்தன் வீட்டுக்கு வாழப்போகையில தாங்கைய ஊனி கர்ணம் பாயிறதுக்காவது தெரிஞ்சிறுகணும் இல்லையா,என்பாள்.

இவனுக்கானல்கொஞ்சம் எரிச்சல்தான் ,”என்ன இது எப்பப் பாத்தாலும் ஏதா வது ஒரு வேலைய நோண்டிக்கிட்டு இருந்தா எப்பிடி,,?அந்தளவுக்கா குமிஞ்சி கெடக்கு வேலை,,?எனக்கேட்டவனை ஏறிடுபவள் ஒங்களுக்கென்ன காலை யில எந்திரிச்சி குளிச்சி முடிச்சி வேலைக்கு கெளம்பீர்றீங்க,நீங்க குளிச்சுக் கெளம்புற அந்த நேரத்துக்குள்ள ஒங்களுக்கும் புள்ளைங்க ரெண்டு பேருக்கு ம் காலையில டிபன் ரெடி பண்ணி,அதுக்கு சட்னி சாம்பார் ரெடி பண்ணி மதியம் குடுத்தனுப்ப சாப்பாட்டு செஞ்சி கூடவே தொணைக்கி கூட்டு பொரிய ல்ன்னு ஒங்களுக்கும் புள்ளைகளுக்கும் புடிச்சதா ஏதாவது ஒண்ணு வச்சி அதுல உப்பு புளி மொளாகா அளவா இருக்கான்னு பாத்துப்பாத்து செஞ்சி அத டிபன்ல அடைச்சிஒங்களுக்குகுடுத்தனுப்புனுப்பிட்டுநானும்அவசரஅவசரமாகெடச்சத அள்ளி வாயில் போட்டுக்கிட்டு நிக்குற காலையில நேரத்துக்கு அப்புறம்தான் எனக்கு வீட்ல இருக்குற வேலைங்குற ஒலகமே விரியுது,

”இதுல கொடுமை என்னான்னா இவ்வளவு கொறைஞ்ச நேரத்துக்குள்ள இவ்வ ளவுவேலைகள எப்பிடி என்னால செஞ்சி முடிச்சி ஒங்கள மனம் கோணாம அனுப்பி வைக்க முடியுதுன்னு நீங்களாவது புள்ளைகளாவது யோசிச்சிருப் பீங்களாங்குறது சந்தேகம்தான், இல்லையா,,,என்பாள் விழி உருட்டி/

பஸ்ஏறி உள்ளே போகும் போதுதான் கவனிக்கிறான்,இன்று கொஞ்சம் உட்கார் ந்து செல்லஇடமிருந்தது,

பொதுவாகஇப்படியாய்அமைந்து விடாதுதான்,ஒன்றுபடியில் நின்று கொண்டு பயணம் செய்கிற அளவிற்கு கூட்டம் அதிகமாய் இருக்கும்அல்லது உட்காந்து செல்ல நினைப்பதே இங்குகெட்ட வார்த்தை என எழுதி வைக்கப் பட்டிருக்காத குறையாய் பேருந்தின் இருக்கைகள் யாவும் ஆள் நிரம்பிக் காணப்படும்/

ஆண்கள் பெண்கள் என எழுதப்பட்டிருந்தாலும் கூட எல்லா இருக்கைகளிலும் எல்லோரும் கலந்து அமர்ந்திருப்பவர்களாக.

“என்னபடியில் தொங்கி நின்று போகிறவன் உள்வந்து நிற்கவேண்டியதுதான். படியில்கிடைக்க விட்டுப்போன பாதுகாப்பு உள்ளே கிடைத்து விடுகிறதுதான்,

உருட்டிய விழிகள் இரண்டும் செய்து வைத்தது பொருத்தியதைப்போல் அழகு காட்டி இமை மூடி இருந்தது,

மூடிய இமைகள் இரண்டை செதுக்கித்திறக்க தேவைப்பட்ட சிற்பியாய் இவன் கணவனாய் போய் தோள்பற்றிய நாட்களில் இமை மட்டுமல்ல மனமும் சேர்த்துத் திறக்கிறாள்.

அன்றி திறந்த மனமும் விழிகளும்தான் இன்று வரை இவன் மேல் படர்ந்து பாவி அவன் மேல் அரவணைப்பில் வைத்துக்கொள்வதாக,,,/

உண்மைதான் அவள் சொல்வதும்.அவளது காலை நேர சமையலறை பாடு பற்றியாய் இதுநாள்வரை இவன் கொஞ்சம், கொஞ்சம் பேசி வந்தாலும் கூட பிள்ளைகள் இது பற்றி மறந்தும் கூட பேசுவதில்லை.

மகா அக்கா கூட சொல்வார்கள்,”என்னடா புள்ளைகள வளப்பு வளத்து வச்சி ருக்குறநீ, வெளங்காத வளப்பா,,,,,/ஒருவீடுகூட்றதில்ல, வாசத் தெளிக்கிறதி ல்ல, கோலம் போடுறதில்ல,துணி தொவைக்கிறதில்ல, பாத்தரம்பண்டம் கழு வுறதில்ல,நாளைக்கி ஒரு வீட்ல போயி வாழப்போற புள்ளைகளுக்கு நீதா ண்டா இதெல்லாம் கத்துக் குடுக்கணும், ஓங் பொண்டாட்டிகாரி என்ன செக்கு மாடா,பாவம் ஒத்தையிலயே முழு வீட்டையும் கட்டி இழுக்குறா” என்பார்கள்.

அவர்கள் சொல்கிற நேரம் கொஞ்சம் கழிவிறக்கம் கொள்கிற மனது மனை வியின் வேலையில் இனி மனதையும் கையையும் கலந்து விட வேண்டும் கண்டிப்பாய் என முடிவெடுக்கும்,

எடுக்கிற முடிவு எடுக்கிற நேரத்தில் மனமெழுந்தும் படமெத்தும் நிற்பதோடு சரி.அதற்கப்புறமாய் நீர்த்துப் போய் விடுகிறதுதான்.

பஸ்ஸினுள்கேட்டபாடல்மனதைகவ்வியதாய்இருக்கிறதுதான்,எண்பதுகளில் கோலாச்சியவரின்பாடல்இப்பொழுதும் மனம் தாலாட்டுவதாய், காதலர்க ளின்மனதில் குடிகொண்டிருந்தஉணர்வுகளுக்குஉரமூட்டியபாடல்,ரசமூட்டிய வரிகள்,ராஜாங்கம்கொண்டஇசை.என்னஸ்பீக்கர்தான் கொஞ்சம் பிசிறு தட்டிக் காட்டியதாய்,,/

பாடல்களை கேட்ட கணத்தில் எங்கெங்கோ இருக்கும் காதலர்கள் சூமந்திர காளி போட்டது போல் ஒன்று சேர்ந்து விடுவார்கள் போலும்.

மகா அக்கா இவனிடம் சொல்லும் போதும் பேசும் போதும் ஊடாடும் பிள் ளைகள் “ஆமா நாங்க என்ன கல்யாணம் பண்ணிப்போறது இன்னொருத்த னுக்கு சமையல்பண்ணிப் போடுறதுக்கா”,,,என்பார்கள்.

சிரித்துக்கொண்டே பதிலளிக்கிற அக்கா ”அதுஅப்பிடியில்லை கண்ணுகளா, நான்பாக்குற வேலைக்கும் அலையிற அலைச்சலுக்கும் வீட்லவந்து வேலை செய்ய நேரம் இருந்ததில்ல.ஆனாலும் ஓம் மாமாவுக்கு ஒரு சுடுதண்ணி வச்சிக்குடுக்குறதுன்னாலும் நான் வந்து செஞ்சி குடுத்தாத்தான் நிம்மதிப் படுவாரு மனுசன்.அது போல எனக்கு சின்னதா ஒரு காய்ச்சல் தலைவலின் னாலும் கூட என்ன வேலைன்னாலும் எங்க இருந்தாலும் அப்பிடியே போட்டு ட்டு வந்து என்னைய ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு ஓடுவாரு,எனக்கு காய்ச் சல் சரியாகுற வரைக்கும் கோழி தான் குஞ்ச பாதுகாப்பது போல அப்பிடியே தனக்குள்ள பொத்திவச்சி வைச்சிக்காப்பாரு,நான் சம்பாதிக்கிற சம்பாதியத் துக்கு தினம் ஹோட்டல்ல வாங்கி சாப்புட்டுக்கலாம்தான்,அது போல ஏங் வீட்டுக்காரரும் அவருக்கிருக்கிற சௌரியத்துக்கு ஆள்கள கைகாட்டி விட்டு ட்டு வீட்டு வேலை செய்யச் சொல்லலாம்தான்.ஆனா அவரும் நானும்தான் அந்தந்தவேலைகளச்செய்வோம்.அப்பிடிச்செஞ்சாத்தான் எனக்கும் திருப்தி, அவருக்கும் மன நிறைவு ஆகும்,

“இதுல நாங்க ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு நான் என்ன ஒனக்கு சமைச்சிப்போடவா வந்தேன்னும் ,அவரு நான் என்ன நீ வச்ச வேலைக் காரனான்னும் பேசிக்கிட்டு திரிஞ்சமுன்னு வையிங்க,குடும்பம் தெருவுக்கு வந்துரும் இல்லையா,குடும்பம்ங்குறதே ஒருத்தருக்கொருத்தரு சார்ந்து வாழ் றதுதானப்பா,இதுல போயி நா பெரிசு நீ பெரிசுன்னு நின்னா வீணாப் போவம் ப்பா,

“இன்னைக்கு எத்தனையோ பெரிய பெரி ய வேலை பாக்குறவுங்க, எத்தனை யோ பெரிய பெரிய பொறுப்புல இருக்குறவுங்க தான் வேலைய தாந்தான் செஞ்சிக்கிறாங்க,சமையல் உட்பட/”பிடிவாதமா வேலைக்கி ஆள்கள கூட வச்சிக்கிறாம,நான் சொல்லுறது ஆண் பொண் ரெண்டு பேரையும் சேத்துத் தான்/

“இதுல போயி நீங்க என்னமோ நாங்க கல்யாணம் பண்ணிப்போறது ஒருத்த னுக்கு சமைச்சிப் போடுறதுக்கான்னு கேட்டு வீம்புக்கு நின்னுன்கின்னா குடும் பத்தோட சார்பே அழிஞ்சி போகுமேம்மா”,,,,,,எனச் சொல்கிற மகா அக்கா இவனின் ஒன்று விட்ட அக்கா இல்லை,

நாலாவது தெருவில் வசிக்கிறவள்.இவனது சொந்த ஊர்க்காரர்,ரத்தமும் சதை யும் உயிரும் உணர்வுமாய் இன்னும் சில கிராமங்களில் முடி கொண் டுள்ள பழக்கமாய் வேற்று ஜாதிகளுக்குள் உறவுமுறை வைத்து அழைத்துக் கொள்கிற பழக்கம் இவனது ஊரிலும் இருந்தது.அதில் அக்காவாய் கிளை விட்டு தோள் படர்ந்தவள்.மகா அக்கா/அந்த தோள் படரல் இன்றுவரைக்கும் உயிர்ப்பாய் இருக்கிறதுதான்,அல்லது அவளும் இவனது மனைவியும் அதைப் இழுத்துப்பிடித்து புதுப்பித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்/

பஸ்ஸினுள் இவன் நின்றிருந்த இடத்திற்கு அருகில் இருக்கிற சீட்டில் அமர்ந் திருந்தவர் ”சார் ரொம்ப நேரமா நின்னுக்கிட்டே வர்றீங்க பாவம், கொஞ்சம் உக்காருங்க” என தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து இடம் கொடு த்தார்/

எழுந்து நின்றவரை கவனிக்கிறான்.வலது காலில் முழங்காலுக்குக் கீழே கட்டைக்கால்பொருத்தப்பட்டிருந்தது.அவர் எழுந்து நின்ற வேகத்தில் ஜன்னல் வழியாக வந்த காற்றும் அவர் ஏந்திப்பிடித்திருந்த அவரது லுங்கியும் அவரது காலை காட்டிக்கொடுத்து விடுகிறது,

திடுக்கிட்டுப்போன இவன் ”அய்யா நீங்க எதுக்கு எந்திரிச்சிக்கிட்டுஅதுவும் இந்தக்காலவச்சிக்கிட்டு,நான்இந்தாஅடுத்தஊர்வந்ததும்எறங்கீறுவேன்,,,,என்றதும் தம்பி ஒங்களபோல உள்ளவுங்க சொல்லும் போதுதான் எனக்கு கட்டைக் காலு இருக்குறதே ஞாபகத்துக்கு வருது தம்பி,மத்தபடி அது ஞாபகத்துக்கு வர்ற தில்லதம்பி.நானும்நெனைக்கிறதில்ல,நெனைச்சேன்னுவையிங்க,மனசுதாழ்வு மனப்பான்மையில் கொமைஞ்சி போகும் கொமைஞ்சி,அதுனால அத நெனைக் கிறதும் இல்ல.நெனைச்சி மருகுறதும் இல்ல,

“இப்ப விட்டாலும் ஒங்களுக்கு சமமா ஓடுவேன்னு ஊர்க்கார வெடலைப் பசங்ககிட்டயும் சொந்தக்கார பசங்ககிட்டயும் மல்லுக்கு நிப்பேன், வழக்காடு வேன் அவுங்களும் சிரிச்சிக்கிட்டே ஏங்கூட நான் ஓடுற ஓட்டத்துக்கு தகுந் தது போல ஓடி வருவாங்க,அதுல எனக்கு ஒரு சந்தோஷம் இருக்குதுங்குறத அவுங்க புரிஞ்சிக்கிட்டு இந்தக்கெழட்டுப்பையலுக்கு வேற வேலையில்லைங் குறதுபோலஇருக்காம ஏங் எண்ணத்துக்கு ஒத்து வர்றாங்கல்ல.அதுவே பெரிய விஷயம் இல்லையா,,,,,?

“என்னதான் செல் போனும் கையுமா அலைஞ்சாலும் ஈ மெயில் இண்டர் நெ ட்டுன்னு பாத்துக்கெடந்த போதும் கூட அவுங்க இந்த மாதிரி விஷயத்தையும் யோசிக்கிறாங்க இல்லையா,அதுவே பெரிய விஷயம் ,என்னைக்கேட்டா அப்பிடி யோசிக்கிற மனசு அவுங்களுக்கு வாய்ச்சிருக்குறது அவுங்களுக்குக் கெடைச்ச மிகப்பெரிய பரிசுன்னு சொல்லுவேன்,”எனச் சொன்னவர்தான் விவசாயம் பண்ணுவதாகச்சொன்னார்,

“தம்பி நமக்கு சும்மாஇருந்து பழக்கம் இல்ல தம்பி.எங்கிட்டாவது போயிக் கிட்டும் வந்துக்கிட்டுமாத்தான் இருப்பேன் தம்பி,தோட்டத்துல கொஞ்சம் கீரை போட்டுருக்கேன்,கூடவே ஊடு சால்ல கத்திரி,தக்காளி அது இதுன்னு கொஞ் சம் ஊனி வச்சிருக்கேன்,காலையில வெள்ளன போயி தோட்டத்துல கீரை அறுத்து டவுனுக்கு கொணாந்துருவேன்,அத வித்து முடிச்சிட்டுப்போயி காய் கறிகள் பெறக்கி டவுனுக்குக் கொண்டுவருவேன்.கைவசம் ஒரு டூ வீலர் ஒண்ணு இருக்குது தம்பி, அதுதா என்னைய இழுத்துக்கொணாந்து டவுனுல சேக்கும்,திரும்ப ஊருக்குக் கொண்டு போகும்,இப்பிடி மாத்தி மாத்தி அலை யிற எனக்கும்ஏங்வண்டிக்கும்தெனசரியானசாப்பாடுடனுக்குள்ளதான் காத்துக் கிட்டு இருக்கும்,

“நான் போற நேரத்துக்கும் வர்ற நேரத்துக்குமா வீட்ல போயி சோத்துக்குன்னு ஒக்காந்துருந்தேன்னு வையிங்க,வேலை ஆகாது அதுனாலத்தான் வயித்துப் பசிய ஹோட்டலுக்கு அடகு வச்சிருவேன்,நமக்குன்னு நெரந்தரமா ஒரு கடை இருக்குதம்பி,அங்கதான்எல்லாமும்.இன்னைக்குவண்டியசர்வீஸீக்குபோட்டுரு
க்கேன்.அதுவர்ற வரைக்கும் பஸ்ஸீதான் என்றவரை ஏறிட்ட போது சும்மா ஏங் காலையே பாக்காதீங்க தம்பி உக்காருங்க என தோளைப்பிடித்து அழுத் தினார்,

அவரது தோள் தொடலிலும் அவரது வார்த்தைகளிலுமாய் பொதிந்திரு ந்த வாஞ்சை இவன் கண்களில் ஈரம் கசிய விட்டதாயும் நினைவுகளை பின் னோக்கி இழுத்துச்சென்றதாயும்/

இவன் மனைவி சொன்னது போலவே அவள் பண்ணிக்கொடுக்கிற காலை நேர டிபனும் மதியச்சாப்பாடும் எப்படி வருகிறது என்பதை கவனிக்கவும் மன தில் வைத்துக்கொள்ளவும் தவறியிருக்கிறான்தான் இதுநாள் வரை,/

என்ன இது போயிட்டு வரட்டுமா போயிட்டு வரட்டுமான்னு அரை மணி நேரமா கேட்டுக்குட்டு இங்கனயே சுத்திக்கிட்டு இருக்கீங்களே தவிர்த்து போற வழியக்காணோம் என்கிறாள்,

ஆமாசுத்திச்சுத்திவர்றாங்க வரமாட்டாம,என்னமோ நான் அப்பிடி சுத்திச் சுத்தி வரணுமுன்னு இருக்கு வர்றேன் ,சும்மாவா வர்றேன்,எனும் போது தோசைக் கரண்டியை ஓங்கி கொண்டே ”அடகிறுக்கு மனுசாஎன்னையச்சுத்தாம யாரைச் சுத்தப்போறீங்க” என்பாள்.

வாஸ்தவம்தான் அவள் சொல்வதும்.என நினைத்த கணத்தில் அவள் சுட்டுக் கொண்டிருந்த தோசை சட்டியிலிருந்து கிளம்பி மேலெழுந்த புகை அவளின் முகம் பட்டு சமையலறை ஜன்னல் வழியாக வந்த சூரிய ஒளியில் கலந்து வாசல் வழி சென்றதாக,/

சமையலறை முழுவதும் நறுக்கிப் போடப்பட்டிருந்த காய்கறித்துண்டுகளும் உரித்துப்போடப்பட்டிருந்தவெங்காயச்சருகுகளுமாய்கிடந்தது.கூடவேஅவளது வியர்வைத் துளிகளும் உழைப்பும் சிந்தித் தெள்ளியதாய்/

8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

ரசனையான நிகழ்வு...

vimalanperali said...

வணக்கம் சார் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,
நன்றி வருகைக்கு/

vimalanperali said...

நன்றியும் அன்பும் சார்,,,
கருத்துரைக்கும்,வருகைக்கும்,,/

ஸ்ரீராம். said...

இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்துகள்.

vimalanperali said...

மனங்கனிந்த தீபாவளித்திருநாள்
நல் வாழ்த்துக்கள்,,,/

வலிப்போக்கன் said...

,என்னைக்கேட்டா அப்பிடி யோசிக்கிற மனசு அவுங்களுக்கு வாய்ச்சிருக்குறது அவுங்களுக்குக் கெடைச்ச மிகப்பெரிய பரிசுன்னு சொல்லுவேன்

vimalanperali said...

வணக்கம் வலிப்போக்கன் சார்,
நன்றியும் அன்பும் பிரியமும் வருகைக்கு,,,/