27 Dec 2018

சுழல் நகர்வுகள்,,,,,

தூக்கம்பிடிக்கவில்லைமனோகரிக்கு,புரண்டுபடுக்கிறாள்,மல்லாக்கப் படுத்துப் பார்க்கிறாள்,கால்களுக்குள்கையைவைத்தவாறுஇருக்கிக்கொண்டுபார்க்கிறாள். எது செய்தும் பலனினில்லாமல் போகவே எழுந்து அமர்கிறாள்,

படுத்திருந்த பாயில் நீட்டிக்கொண்டிருந்த சின்னதான கோரைக்குச்சி கால் பாதத்தின் அருகில் குத்தியது., தடவி விட்டவாறே எழப்பார்க்கிறாள், சலனம ற்றஅமைதி, வீடு முழுவதுமாய் போர்வையாய் போர்த்தியிருந்த மென் இருள், மேற்குப் பார்த்த ஜன்னல் வழியே புகை போல் வந்த வெளிச்சம் லேசாய் திறந்திருந்த ஜன்னல் கிராதியையும் ஜன்னலின் விளிம்பையும் நனைத்துக் கொண்டு வீட்டினுள் புக யத்தனித்தோஅனுமதி கேட்டோ நின்றது ஜன்னல் கிராதியிலிந்து உதிர்ந்த பூ ஒன்றுடன்/

இரவு சாப்பிட்ட உணவு நெஞ்சிலேயே நின்றது,பிள்ளைகளும் கணவரும் சாப்பிட்டது போக மிச்சமிருந்த சோறில் எண்ணை ஊற்றிசாப்பிட்டாள், நல்லெ ண்னைஇல்லை,கடலெண்ணெய்தான்ஊற்றிக் கொண்டாள்,தொடு கறி எதுவும் இல்லை,எலி கறும்பியது போல் யாரோ தின்று விட்டு வைத்திருந்த அரை தேங்காய்ச்சில்இருந்தது,காலையில்தான்கடையில்வாங்கியிருந்தாள்,கடைக் காரர்தான் சொன்னார்,”சோத்துக்குத் தொட்டுக்க தேங்காய்ச்சில்லு வாங்குற ஒரே ஆளு நீங்களாத்தான் இருப்பீங்கக்கா, ஏங் வயசுக்கும் அனுபவத்துக்கும் இப்பிடியெல்லாம் பாத்ததும் இல்ல, கேள்விப்பட்டதும் இல்லக்கா”,என்றார் சிரித்துக்கொண்டே/

வீட்டுக்காரர்தான்சாப்பிட்டிருக்க வேண்டும்,

சின்னவயதுபழக்கம்,இப்பொழுதுதீடீரெனபோஎன்றால்எப்படி,,,?பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்ததும் ஏதாவது தின்ன வேண்டும் போல் இருக்கிறவள் நேரடியாய் சமையலறைக்குள் புகுந்து கொஞ்சம் பொரி கடலை,கொஞ்சமாய் கடிக்கப்பட்ட தேங்காய்ச்சில்,பச்சை மிளகாய் சின்னதுண்டு என வாயில் போட்டுமென்று கொண்டே சிறிது நேரம் வீட்டிற்குள் வலம் வருவாள்,அவளது அம்மா கூட வைவாள்,”கொஞ்சம் உப்பையும் ரெண்டு கறி வேப்பிலையையும் சேத்துப்போட்டையின்னா தாளிச்சா மாதிரி ஆகிப் போகுமில்ல” என்பாள்,

அம்மாவின் பேச்சிற்கு சிரித்துக்கொண்டே ஓடிவிடுவாள்,

அப்பொழுதுசிரித்தசிரிப்புஇப்பொழுதுதன்வசமிருக்கும்அரிசி,பருப்பு,அரசலவில் இருந்து தேங்காய்ச்சில்லை மட்டும் எடுத்துக்கொள்ள வைத்துக்கொண்டிருக் கிறது இத்தனை ஆண்டுகள் கடந்தும்.

இரவு சாப்பிடும் போதே வீட்டுக்காரர் சொன்னார்,நாங்களெல்லாம் சாப்புட் டோம் இனி நீதான் சாப்புடணும்,கொழம்பு கொஞ்சமாத்தான் இருக்கு,நீ வேணு முன்னா ஊத்திக்க நான் தண்ணி ஊத்தி சாப்புட்டுக்குறேன் என்றார், இல்லை வேணாம் நான் சாப்புடகொஞ்சம் நேரமாகும் ,நீங்க சாப்புட்டு படுங்க என்ற வளின் அருகில் வந்தவர் அவளது முகப்போக்கை கவனித்தவராய் இரு என இருவருக்குமாய் சாப்பாடு போட்டுக்கொண்டு வந்து தட்டுகளை அருகில் வைத்தவர் இருந்த கொழம்ப ஒனக்கு ஊத்திருக்கேன்,நான் தண்ணி ஊத்தி சாப்புட்டுக்கிறேன் என்றவர் அவள் அருகில் அமர்ந்து வெண்மை படர்ந்த முடிகள் கலைந்திருந்த தலையை மென்மையாய் கோதி விட்டவாறு நெற்றி யில் முத்தம்மிட்டார்,

“சும்மா இருங்க ,இத்தன வயசுக்கு மேல போயிக்கிட்டு,புள்ளைங்க முழிச்சிக் கிட்டா மானக்கேடு என்றவள் அவரின் தோளில் சாய்ந்து கொண்டாள்.இப்ப மட்டும் புள்ளைங்க முழிச்சிக்கிறாதாக்கும், கிறுக்கி” என்றவர் ”முழிச்சா முழிச்சிப்பாக்கட்டுமே என்ன இப்ப கொறஞ் சிறப்போகுது விடு” என்றவாறு பிசைந்து வைத்த சோற்றை அவளுக்கு ஊட்டி விட்டார்,அவரது தோளில் சாய்ந்து கொண்டே சாப்பிட்டவள் அவரது தோள் மீது கொஞ்சம் சிந்தினாள், சிந்தாமசாப்புடு என லேசாக அவளது தலையில் தட்டி விட்டு அவரும் சாப்பி ட்டார்.

சாப்பிட்ட இடத்திலேயே தட்டில் கையை கழுவி விட்டு அப்படியே படுத்து விட்டாள்,எழுந்துலைட்டைப்போட்டவள்மணியைப்பார்க்கிறாள்,மணிமூன்று, கணவர் ஆழந்து தூங்கிக் கொண்டிருந்தார்,பிள்ளைகள் இருவரும் ஆளுக்கு ஒரு மூலை என தூங்கிக் கொண்டிருந்தார்கள்,கல்லூரியின் இளங்கலையும் முதுகலையுமான இருவரும் படித்து முடித்துத்தூங்க கொஞ்சம் தாமதம் ஆகியிருக்கும், ஆனால் கணவர் தூங்க எப்படியும் ஒரு மணிக்கு மேல் ஆகியி ருக்கும்.பரிட்சைக்குப்படிக்கிற பிள்ளைகள் கூட தோற்றுப் போகும் போல, அவ்வ ளவு படிக்கிறார்,அவ்வளவு பார்க்கிறார், அவ்வளவு கேட்கிறார்,எதற்கு இதெல் லாம் உதவப்போகிறது எனத்தெரியவில்லை,எனச்சொல்லும் போது படிப்பது வீணல்ல என்பார்.

அவர் சொல்வதும் உண்மை தான்,தெள்ளத்தெளிவான சிந்தனையோடும் ,செயலோடும்தான் இதுநாள்வரை இருக்கிறார்,அதற்க்காகவாவது அவரது படிப்பு அவருக்கு கை கொடுக்கட்டும். என்கிற ரீதியில் அவரை இடைஞ்சல் செய்வ தில்லை.

நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவர் எழுந்து விட்டார் மனோகரி லைட்டைப் போடவும்/ ”என்ன இந்நேரத்துக்கு என அருகில் வந்தவர் அவளது தலையை வாஞ்சையுடன் வாரிக்கொடுத்தவர் ஒடம்பு இப்ப எப்பிடி இருக்கு அசதியா இருக்குன்னு சொன்னியே சரியாயிருச்சா” என கேட்டார்,

“சரியாகுறது என்ன பெரிசா சரியாகுறது,நீங்க நாலு தடவை இப்பிடி கேட்டீங் கன்னாலேசரியாயிரும்” என்றவாறு கணவரது தோளில் சாய்ந்து கொள்கிறாள் மனோகரி/

”என்ன மதுரைக்காரம்மா நல்லாயிருக்கீங்களா என்கிற சப்தம் கேட்டுத்தான் திரும்பிப் பார்ப்பவளாகிப் போகிறாள் அவள், உள்ளபடிக்கும் அவள் எந்த ஊர் என்பது இவனுக்குத் தெரியாது,பின் எப்படி மதுரைக்காரம்மா என்கிற துணைப் பெயரைஅவள் மீது ஒட்டினான்எப்பொழுது ஒட்டினான் என்பது சரியாக ஞாபக மில்லை.ஊர் மீது வந்த உறவோ இல்லை,இல்லை எதன் மீது ஆன ஞாபகப் பிசகோதெரியவில்லை,ஒருவேளைவயதானதால்வந்தஞாபகதடுமாற்றமாய்க் கூட இருக்கலாம்,

எதானால் என்ன,,? கண் முன் பார்த்து பேசி பழகிய ஒருவரின் ஊர் பற்றிய ஞாகபத்தடுமாற்றம் அவளைப் பற்றி பெரிதாக நினைவின் அடுக்குகளில் பதிந் து வைத்துக்கொள்ளவில்லை என்கிற அர்த்தத்தைதானே விதைக்கிறது” என இவனுக்குள்ளாய் இவனாய் சொல்லிக் கொள்வதுண்டு இது போலான சமயங் களில்/

இவன் வேலை பார்க்கிற அலுவலகத்தில் ஒரு நாள் தற்செயலாய் பார்த்தது தான்,அப்பொழுது இவனின் பேச்சையும் அதிலிருந்த மிதம் மிஞ்சிய வாஞ்சை யையும் கண்ட அவள் எப்பொழுது அலுவலகம் வந்தாலும் அவனைத்தேடித் தான் வருவாள்,

பக்கத்து இருக்கைக்காரர் கூட கேட்பார் கேலியாக ”எண்ணண்ணே எப்ப வந்தா லும் அந்தம்மா ஒங்களத்தேடித்தான்வர்றாங்க,ஏன் எங்களையெல்லாம் பாத் தா அந்தம்மாவுக்கு ஆளாத் தெரியலையாமா என சிரித்துக்கொண்டே சொல் பவர்அந்தம்மாவுக்குமதுரைபோலஇருக்கு,எப்பப்பாத்தாலும்மதுரைமதுரைண்ணேபேசுவாங்க” என பேசிக்கொண்டிருந்த ஒரு நாளில் வந்த அந்தம் மாதான் வந்த வேலையை கொஞ்சம் சீக்கிரம் முடித்துத்தர இயலுமா என்றும், கொஞ்சம் தாமதமானால் பஜார் வரை போய் விட்டு வந்து விடுகிறே ன் எனவுமாய் சொன்ன அவளை “கொஞ்சம் நேரம் ஒக்காருங்க,இதோ சொடக்குப் போடுற நேரத்துலமுடிச்சிக் குடுத்துருறோம்வேலைய”எனச்சொன்னஇவனை ஏறிட்ட பக்கத்து இருக்கைக் காரர் ”என்ன சார் இது அந்தம்மா எப்ப வந்தாலும் கால்ல வெந்நித் தண்ணி ஊத்திகிட்டுதான்வர்றாங்க,நீங்களும்அவுங்கஅவசரத்துக்குஏத்தாப்புலநடந்துக் கிறீங்க,ஏன் சார் அப்பிடி”? என அவரிட்ட கேள்விக்குறியை மனதில் வாங்கிய வர் ”அப்பிடியில்லசார்,நம்ம பாடு என்னன்னு அவுங்களுக்கு தெரியாது,ஆனா அவுங்கதேவைவந்தவேலையசீக்கிரம் முடிச்சிட்டு போகணும்ங்குறது மட்டும் தான்.அத நம்ம முடிஞ்ச அளவுக்கு நிறைவேத்திக் குடுப்பமே  என்ன இப்ப கொறைஞ்சிறப் போகுது,,?” என்ற போது அவர் கடகட வென சிரித்தார்,

அவரது சிரிப்பில் குடிகொண்டிருந்த அர்த்தம் ஆயிரங்களை விதைத்து சென் றதாய்,அப்படித்தான்அவள் மதுரைக்காரம்மா என அறிமுகமாகிறாள் இவனுக் கு.

அன்றிலிருந்து இன்று வரை அவள் மதுரைக்காரம்மா தான் இவனுக்கு, எப்பொழுதாவது பஜார் அல்லது இது போலான பொது வெளிகளில்பார்க்க நேர்கிற போது இப்படித்தான் அழைத்துக் கொள்கிறான்.

பஸ்ஸை விட்டுஇறங்கியதும் நேராய் சந்து கடைக்கு போய் விடுவான் டீக் குடிக்க,

அதென்ன சந்துக்கடை, நல்லாயிருக்கு ஞாயம் கடைக்கின்னு ஒரு பேரு வேணாமா இப்பிடியா சந்து கடை பொந்து கடையின்னு பேரு சொல்லிக்கிட்டு போயி டீக்குடிப்பாங்க என்பார்கள். இவன் வீட்டில் பிள்ளைகளும் மனை வியும்,/

உண்மையில்அந்தக்கடையின்பெயர்ஆனந்தன்டீக்கடை,வைத்திருந்தபிளக்ஸ் போர்டு இத்துப்போய் பெயர் அழிந்து போன பிறகு கடைக்காரர் அதை மாற்றி வைக்க முயற்சிக்கவில்லை,

கேட்டதற்கு ”இருக்கட்டும் பேரு என்ன பேரு பெரிசா வாழுது,அதான் நீங்க ள்லாம் சொல்றீங்கில்ல சந்து கடைன்னு,அது போதாதா,அந்தப்பேரே அடையா ளமாகிப் போச்சி,நெலைச்சும் நின்னுருச்சி,இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்க”,என்பார்,

அவரது கடையில் மெலிதாக ஒலித்துக்கொண்டிருக்கும் சினிமாப் பாடல்களு க்கு அவர் உயிர் கொடுத்து நிறுத்துவார்.

கை தூக்கி உயர்த்தி ஆற்றுகிற டீக்கு உயிர் இருக்குமானால் டபராவிலிருந்து எழுந்து வந்து இவருடன் கலந்து இசையை ரசிக்க ஆரம்பித்து விடும்,

கடையின் உள்ளிருந்து கேட்கிற பாடல்கள் டீக்குடிக்க வருவோர் கவனத்தை முழுமையாய் ஈர்த்து விடுவதுண்டு,சில பேரானால் பாட்டுக்கேட்டுக் கொண் டே இரண்டு டீகூட குடித்து விடுவார்கள்,

”ஏன்பா ஒனக்கென்ன எள வட்டமுன்னு நெனைப்பா, வயசாகிப்போச்சி,இனி என்னவாம் ஆட்டம் பாட்டம், ரசிபுன்னுக்கிட்டு என்கிற வர்களின் கிண்டலுக்கு ஒடம்புக்குத்தான வயசு, மனசுக்கு என்ன அது இன்னும் துள்ளிக்கிட்டுதான் கெடக்குதுன்னு வையிங்களேன்” என்பவர் டீ என்று சொல்லிவிட்டு திரும்பும் முன் டீக்கிளாஸை முன்னால் நீட்டி விடுவார்,

“எண்ணண்ணேநீங்க,நான் வருவேன்னு எற்கனவேபோட்டுவச்சிருந்தீங்களா”  என்றால்,,,கடகடவென சிரிப்பார்,

”எப்பவும் போலத்தான் போட்டேன்,நீங்கதான் ஏங் வேகத்த வேடிக்கை பாக்குற ஆளாவும் அத சுட்டிக் காட்டி பேசுற ஆளாவும் வேற இருக்கீங்களா,அதான் ஒங்க தலை தெரிஞ்சதும் சட்டுன்னு ஒரு வேகத் தயாரிப்பு” என்பார்.

“ஏன்கிட்ட இருக்குற மிகப்பெரிய சொத்து இதுதான்னு நெனைக்கிறேன், அத முடிஞ்சஅளவு எத்தன வயசு வரைக்கும் வச்சி காப்பாத்த முடியுமோ காப்பா த்திக்கிற வேண்டியதுதா,இப்ப வயசு அம்பத்தி அஞ்சு ஆகுது, இனி என்ன கொஞ்சகாலம்இதே வேகம் இருக்கணுமுன்னு நெனைக்கிறேன்,பாப்போம் எது வரைக்கும் ஓடுதுன்னு/” என்பார் கேலி பேசிக்கொண்டும் டீப்போட்டுக் கொண்டுமாய்/

கூடவே கடையின் உள்ளிலிருந்து ஒலிக்கிற பாடல்களுக்கு தலையசைத் தவாறும் இசையின் லயங்களில் கரைந்தவராயும்/

அப்படியான ஒரு கரைதலுக்கு ஆட்பட்டவராய் அவரும் அந்தகரைதலின் கரைகளில் நின்று கொண்டே நீச்சல் அடிப்பவர்களில் ஒருவனாய் இவனும்,/

இவன் போன்ற இன்னும் பலருமாய் இருக்கும் வரை சந்துக் கடையில் டீயும் பிஸ்கெட்டும் கரை கடந்து ஓடும்,என நினைத்துக் கொண்டிருந்த நாளன்றின் ஒரு மாலை வேளையில் மழை விடாது பெய்து கொண்டிருந்தது,

பூமிக்கும் வானத்திற்கும் நட்டு வைத்தவெள்ளிக்கம்பிகளாய் நெசவிட்டிருந்த மழை தண்ணீர் தன் விருப்பம்கொள்ளுமளவுக்கு பெய்து தீர்த்டு விடலாம் என முடிவு கட்டிக்கொண்டிருந்தது போல் அடர்ந்திருந்த வானம்பிடிவாதம் காட்டி தன் விடாது தன்னை பதிவுசெய்தகொண்டிருந்ததாய்/

சாலையில்விரைந்துகொண்டிருந்த சைக்கிள்க்காரர் சைக்கிளை ஓரம் கட்டி விட்டு டீக்கடையோரம் ஒதுங்கினார்,

இப்பொழுதெல்லாம்சாலைகளில்சைக்கிளைப்பார்ப்பதுஅபூர்வமாகிப்போகிறது, பத்து இரு சக்கர வாகனங்களுக்கு மத்தியில் ஒரு சைக்கிளை பார்ப்பது அபூர்வமாகிப் போகிறது,

போன வாரத்தின் கடைசி நாளில்தான் வீட்டில் நின்ற சைக்கிளை விற்கக் கொடுத்து விட்டு வந்தான்.

இரு சக்கர வாகனம் இருந்ததால் சைக்கிள் மிதிப்பது குறைந்து போனது என இவன்தான் வம்படியாக வாங்கிப் போட்டான்.

ஆனால் நீண்ட நாட்களாகவே வெறும் காட்சிப்பொருளாகவே வீட்டில் நின்றி ருந்தது பொறுக்காமல் விலைக்குப்போட்டு விட்டான்,

”சும்மாவே நின்னா எப்பிடி,,?ஏதாவது ஒரு வேலையின்னா ஆத்திர அவசரத் துக்கு வண்டிய தூக்கீட்டுதான் ஓடுறோம்,இதுல இது வேற எதுக்கு பாரமா” என்றான் சைக்கிளை கடையில் விற்கப்போட்ட நாளன்று,

இப்பொழுது இது போன்று சைக்கிளை பார்க்கிற நாட்களில் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்கிற ஆசை திரும்பவுமாய் முளை விடுகிறது.

பார்ப்போம்எதுநிலைக்கிறதுஎன ,இரு சக்கரவாகனமா,சைக்கிளாஎன மனதில் நினைத்தவனாய்மழைஓய்ந்தபின்கிளம்பிப்போனான்.டீக்கடைக்காரர்இவனுக்காய் பாடவிட்ட பாடலைக் கேட்டவாறே/

கடையின் முன்னால் இருக்கிற புங்க மரத்திற்கு தண்ணீர் ஊற்றுகிறாரோ இல்லையோ தினமும் இசை ஊற்றி வளர்க்கிறார் போலும்/மரத்தின் வளர்ச்சி யிலேயே தெரிந்தது அது.

”ஐய்யைய்யோ சார், ஒங்களப்பாக்கலையில்ல,நல்லாயிருக்கீங்களா எனக் கேட்டவள், டாக்டர் கிட்ட வந்தோம்.பேத்தியாளுக்கு ஒடம்புக்கு முடியல என அருகில் நின்றிருந்த சிறுமியைக் காட்டினாள்.

அவளை பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த இவனிடம் நாலாப்பு படிக்கிறா, பார்வைக்கு ஒண்ணாப்புபடிக்கிற புள் ளையப் போல இருப்பா,அவுங்க அம்மா அப்பா இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க, அவங்க ரெண்டு பேரும் மில்லு வேலைக்குப் போறதால ஏங்கிட்டதான் வளருறா,நானும் ஊட்டிஊட்டிதான் வளக்குறேன்,ஆனாலும் தேறுவேனாங்குறா, அது ஒண்ணுமில்ல மூணாப்பு படிக்கிற வரைக்கும் அவங்க அம்மா அப்பாகிட்டதான் வளந்தா,

அவஅம்மாகாரி என்ன செய்வான்னா வாரத்துக்கு ரெண்டு தடவை மாவரை ச்சிவச்சிட்டுதினம்காலையிலையும் நைட்டும்தோசையா ஊத்திக் குடுத்துருக் கா, மதியம்தான் புள்ளைகளுக்கு ஸ்கூல்ல சோறு போட்டுறாங்கள்ல, அது னால சாப்பாட்டுல அதையே வழமையா கொண்டு வந்துட்டா,

காலையிலயும் இராத்திரிக்கும் தோசை,மதியத்துக்கு ஸ்கூல் சாப்பாடுன்னு ஆகிப்போகுது.

நம்மளப்போலபெரியாளுகளுக்கேஒருதடவைசாப்புட்டதஇன்னொரு மொறை சாப்புட்டா ஒரு மாதிரி இருக்கு.பாவம் சின்னப்புள்ள என்ன செய்வா, இப்பிடித்தான்சாப்புட்டும் சாப்புடாம தேவாங்கு மாதிரி இருக்கா பாத்துக்கங்க, என்றாள்,

பாரிய உடல் மாநிறம்,களைத்து போனமுகம்,அடர் கலரில் அவள் கட்டியிரு ந்த சேலை அவளை ஒட்டிய நிறத்திற்கே/

களைந்துபோனகேசத்தை ஏனோ தானோவெனவாரிமுடிந்திருந்தாள். நெற்றிக் கிட்டிருந்த பொட்டு கொஞ்சம் இடம் பிசகி அமர்ந்திருந்ததாய்/

அவசரமும்பரபரப்புமாய் நின்றிருந்த அவள் வியர் வையை சேலை முந்தா னையால் துடைத்தவாறே பஸ்ஸீக்கு நேரமாச்சி வர்றேன் சார் எனக் கிளம்பு கிறாள். தூரத்தில் பஸ் வெளிச்சமிட்டவாறு வந்து கொண்டிருந்தது,

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நண்பரே தங்கள் புது வலைப்பூவின் முகவரியினை ஆங்கிலத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்
வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

மரத்தின் வளர்ச்சியையும் ரசித்தேன்...

vimalanperali said...

அன்பும் நன்றியும் சார்,

vimalanperali said...

வணக்கம் சார்,
நன்றியும்,அன்பும்,,/