30 Dec 2018

நிமிடங்களும் ,மணியும் மற்றும் நொடிகளுமாய்,,,/

மணியைப் பார்க்கிறாள், சரியாகத்தெரியவில்லை,

எப்பொழுதோ வாங்கிய கடிகாரம், ஏதோ நினைத்து வாங்கியது பிடித்துப் போ னது பின்னாளில்/கேட்கநேர்கிறபாடல்களும் இசையும் படிப்பும் பேச்சும் மனம் ஒன்றிப் போவது போல/

ஆடுகிற பெண்டுலமும் சுற்றி வருகிற சின்னதும் பெரியதுமாய் கைகோர்த் திருக்கிற முட்களும் கூடவே சுற்றுகிற விநாடி முள்ளும் ஞாபகத்தின் கண்க ளில்/

அவளது ஞாபகத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக இருக்கலாம், முக்கோண சைஸில் மாடனாக இருக்கிறது என கணவர் வாங்கிவந்த கடிகாரம்,

கைக்கும் வாய்க்கும் பற்றாக்குறையாய் இருந்த நாட்களில் வாயைக் கொஞ் சம் கட்டிவைத்து விட்டு முன்னூற்றிச்சொச்சம் ரூபாய்க்கு அருகில் போய் வாங்கி வந்த கடிகாரம்,

வாங்கி வந்த நாளிலிருந்து கொடுத்த விலைக்கு வஞ்சனையில்லாமல் தன் உழைப்பை நிறுவிக்கொண்டிருக்கிறதாய்/

இது நாள் வரை பெரியதாய்ரிப்பேர் என எதுவும் வந்ததில்லை,வழக்கம் போல் பேட்டரி மட்டுமே, கடிகாரத்தின் பெண்டுலம் ஆடும் போது சின்ன வயதில் ஊரில் ”புகழையா” வீட்டில் பார்த்த பெரிய சுவர் கடிகாரம்தான் ஞாபகத்திற்கு வரும்,

ஒடுக்கமான நீள சைஸ் மரப்பெட்டிக்குள் அடைபட்டுக்கிடக்கிற கடிகாரத்தின் டயலும் சின்னதும் பெரியதுமான முட்களும்அதன் கீழே ”டிங் டாங்,டிங் டாங்,,,”என யார் சொல்லவும் தேவையில்லாமல் ,வலதும் இடதுமாய் அழகு காட்டியும்,தன் நேரம் காட்டியுமாய் ஆடிக்கொண்டிருக்கிற பெண்டுலத்தைப் பார்க்கிற பொழுது அதன் நுனிபிடித்து ஆடலாம் போலத் தோணும்,

கொஞ்சம் நேரம் அந்த வீட்டின் வாசலில் நின்று கடிகாரத்தை அண்ணாந்து பார்த்தவளாய்திறந்தவாய்மூடாமல் நின்று கொண்டிருக்கிறசமயமாய் வீட்டுக் காரர் புகழையா வந்துவிடுவார்,

”என்னகண்ணுகளாகடிகாரத்தப்பாத்தீங்களா,சரிபாத்ததுபோதும்,போய்வெளை யாடுங்க, கடிகாரத்த வேடிக்க பாக்குறதுல என்னஇருக்குபெரிசா,,? வெளையா ண்டாலாவது ஒடம்பு வேர்க்கும்,ரத்த ஓட்டம் நல்லாஇருக்கும், ஒடம்பும் மனசும்சுறுசுறுப்பாகும்,செய்யிறவேலை,படிக்கிறபடிப்புஇன்னும்நல்லாயிருக்கும், நல்ல மார்க் எடுக்கலாம், நல்ல பிள்ளை ன்னு பேர் எடுக்கலாமுன்னு ஒரு தன்னம்பிக்கை வரும்,எதையும் சாதிக்கலாம்ன்னு ஒரு முனைப்பு வரும், அதெல்லாம் வரும் போது நீ இப்பய விட இன்னும்நல்லா வருவ, அதுக்கான வழி எதோ அதப்பாக்குற விட்டுப்புட்டு இப்பிடி கெடிகாரத்த தெறந்த வாய் மூடாம பாத்துக்கிட்டிருந்தா என்ன கெடைக்கும் சொல்லுங்க,எனக்கு ஆடு மாடுதா பொழப்பு,பேட்டையில ரெண்டு கெடைக்கும் மேல ஆடுகளும்,அஞ்சி மாடுகளும் நிக்குது,அத விட்டுட்டு நான் கடிகாரத்த பாத்துக்கிட்டு இருந்தே ன்னு வையிங்க ஏங் பொழப்பு அம்பேல்தான்,பாக்குற நேரம் பாத்துட்டு அப்பிடி யேமத்தசோலிகளுக்குதாவிப்போயிறணும்,அதவிட்டுட்டு,,,போங்க, போங்க,,,” என பொதுவாய் சொல்லி விரட்டி விடுகிறஅவரின் வார்த்தைகள் இப்பொழுது ஞாபகம் வருகிறதாய்,/

ஆனால் அவர் போல் சொன்னால் கேட்பதற்கு பிள்ளைகள் ரொம்பவும் குறைச்சலாகி விட்டார்கள்.

இவளதுமகனும்கடைசி வீட்டுக்காரியின் பிள்ளையும் கிரிக்கெட் விளையாடப் போவதுகொஞ்ச ஆறுதலாய் இருக்கிறதுதான்,

தெரு முழுக்கவுமாய் இருக்கும் எட்டு பிள்ளை களில் இரண்டு வீட்டுப் பிள் ளைகள் மட்டும் வெயிலில் விளையாடும் பொழுது தெருவே கொஞ்சம் கேலி யாய்த்தான் பார்க்கும்,

“பேசாம டீ வி,கேம்ஸ்ஸீ கம்ப்யூட்டரு, இண்டர்நெட்டுன்னு,,,,இருக்குற விட்டு ட்டுவெளையாட்டு,வேர்வை,ஒடம்பு,மனசு,ஆரோக்கியமுன்னுபேசிக்கிட்டு,,,,,,  வேலையில்லாம” என்பார்கள்,

ஆனாலும் கேலி பேசியவர்களின் வீட்டுப்பிள்ளைகள் என்றாவது ஒரு நாள் இந்த இரண்டுடன் கை கோர்த்தும் மனம் கோர்த்துமாய்/

லைட்டைப் போடலாம் என எழுந்திரிக்க எத்தனிக்கிற மனதை உடல் சுமை யும் மனச்சுமையும் ஒரு சேர அழுத்தி உட்காரவைத்து விடுகிறது,

எழுந்து கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு பாத்ரூம் போய் வந்தால் தேவ லாம் போல் இருந்தது,

குளிர்காலம் ஆரம்பித்ததிலிருந்து சரியாக தண்ணீர் குடிப்பதில்லை, தாகமும் எடுப்பதில்லை, தாகம் எடுக்கவில்லையே என தண்ணீர் குடிக்காமல் விட்டு விட்டால் உடல் சூடாகிப் போகிறது,

நேற்று மதியம் ஒரு மணி போல் இருக்கும்,கண்களில் கட்டிய நீர் மாலை ஐந்து ஆறு மணி வரை தண்ணீராய் சுற்றிக்கொண்டே நின்றது, கவனமூன்றி எந்த வேலையையும் செய்ய முடியவில்லை.

“உடல் சூடுதான் ,இளனி குடித்தால் சரியாகிப்போகும் என்ற கணவனை ஆமா நீங்க என்னமோ ரெடியா என்னைய கூட்டிக்கிட்டுப்போற மாதிரிதாம் பேசுவீ ங்க, சும்மானாச்சும் அந்த வேலை ,இந்த வேலை இருக்குன்னு வண்டியத் தூக்கிட்டு அலையிவீங்களே ஒழிய வீட்டுலயே கெடக்காளே ஒருத்தி அவள கடைகண்ணிக்குகூட்டிக்கிட்டுப்போனோம்.ஏதாவதுரெண்டுவாங்கிக்குடுத்தோமுன்னு இல்லை, என்னமோ நாந்தான் இப்ப ஆம்பளமாதிரி எதுக்கெடுத்தாலும் தனியா போகணுமாம், தனியா வரணுமாம்,வீட்டுக்குத் தேவையான ஜாமன் கள வாங்கிக்கிறணுமாம்,என்னமோ சொன்னாப்புல இல்ல இருக்கு,

“என்னதான் வீட்டச்சுத்தி கடைக இருந்தாலும் கூட நாங்க போயி தனியா நின்னு கொஞ் சம் யெளைப்பாறி ஒக்காந்து நாலு பேச்சு பேசிக்கிற அளவுக்கு எங்கயாவது டீக்கடையோ,இல்ல காப்பி பாரோ,இல்ல வேற ஏதாவது இருக்கா சொல் லுங்க, இதுல தணியா போயி எளனி சாப்பிடுன்னா எங்கிட்டுப்போயி சாப்புடுறது,பத்துஆம்பளைங்கநிக்குறயெடத்துலஅப்பிடியெல்லாம்போகணுமுன்னா ஒன்னு கூச்சத்த உதுத்துட்டுப்போகணும்,இல்ல,நான் ஒங்களிலும் தைரியமா னவன்னு காண்பிச்சிக்கிற மனசு வாய்க்கணும்,இது ரெண்டும் எனக்கு இல்லாத போதுநான் எங்கிட்டுப்போயி எளனி சாப்புட, பஜாருக்குப் போறன் னைக்கு தேர் முட்டிக்கிட்ட குடிச்சாத்தான் உண்டு”என சப்தமிடுபவளை கைய மர்த்தி விட்டு அமைதியாய் சிரிப்பான்,நீ சொல்வதெல்லாம் வாஸ்தவம் தான்” என/

லைட்டைப்போட்டவள்மணியைப்பார்க்கிறாள்,மூன்றாகியிருந்தது,சிறிதுநேரம் கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள் பாத்ரூம் போய் விட்டு வந்து பாயில் அமர்ந்தாள்.

சிதறிக்கிடந்தது வீடு.அவளைப்பொறுத்த அளவில் வீடு என்பது கணவனும் பிள்ளைகளும்தான்,

கணவனின் அருகிலேயே பிள்ளைகள் இருவரும் படுத்திருந்தார்கள், சின்ன வள் எப்போதும் அவன் அருகில்தான் படுப்பாள்,பெரியவலை தனியாகப்போய் ரூமிற்குள் படுக்கும்படி இவள் சபதமிடுவாள்.

”ஏன்அப்பிடிச்சொல்றபடுத்தாபடுத்துட்டுப்போகட்டும்விடுஎன்பவனைமுறைத்தவளாய் அவஇன்னும்சின்னப்புள்ளைன்னு நெனைப்பாக்கும்” ஒங்களுக்கு” என்பாள்.

திரும்பவுமாய்கடிகாரத்தைப்பார்த்தவள்எரிந்து கொண்டிருந்தலைட்டைக்கூட அணைக்கத் தோணாமல்உட்கார்ந்திருந்தாள்,

வட்ட வடிவத்திற்குள்ளாய் சுற்றிய சின்னதும் பெரியதுமான முட்கள் தன் துணைக்கு விநாடி முள்ளையும் கைகோர்த்துக் கொண்டு சுற்றியது போல் பட்டது.

”முள்சுற்றம்மா முள் சுற்று, நேரம் காட்டலாம் முள் சுற்று,நிமிடம் காட்டலாம் முள் சுற்று, வஞ்சகமில்லாமல் முள் சுற்று ,எல்லோருக்கும் காட்டி முள் சுற்று,,,, என எனவாய் பலவாறாய் பாடிக்கொண்டே சுற்றியதாய் பட்டது அவ ளுக்கு,/

சின்னமுள்ளும் பெரியமுள்ளும் அதன் கூம்பு வடிவிலான முனைகளும் தன் கண்களிலிருந்துசொட்டுகிற நீர் கூம்பு வடிவ முனையில் துளியாய் தொங்கிக் கொண்டிருப்பது போல பட்டது.

ஒற்றைத்துளியில் அர்த்தம் பட்டுப் போகிற கணங்கள்.வாழ்நாள்முழுவதும் தன்னை தொடர்ந்து கொண்டிருக்கிறதுதான்.

சம்மனமிட்டு அமர்ந்து கொண்டிருந்தவள் கடிகாரத்தின் முட்கள் தன் கூர் முனைகொண்டுமனம் குத்துவதாய் கற்பனை செய்து கொள்கிறாள்.

இப்பொழுதெல்லாம் தன் மீதே தனக்கு அதிகமாய் கழிவிறக்கம் பிறந்து விடுகிறதுதான். சம்பந்தா சம்பந்தமில்லாமல் கண்களில் நீர் துளிர்த்து விடுகி றது,இல்லையானால் கண்களில் குளம் போல் நீர்கட்டிவிடுகிறது, வயதாகிப் போனதாலும் உடல்தள்ளாமையினாலும்வந்த பிரச்சனையே ,,/என தனக்குள் ளாய் சொல்லிக் கொண்டாலும் கூட கழிவிரக்கம் ஏற்படுவது கூடிக்கொண்டே போகிறதுதான்,

யாராவது ஒரு விஷயத்தில் ஏதாவது சொல்லி விடும் போதோ இல்லை மென் கருத்தாய் ஏதாவதொன்றை தெரிவித்து விடும் போதோ படக்கென பொங்கி விடுகிறது கண்ணீர்,

“என்னம்மா இது ஏன் இப்பிடி ,ரொம்ப உணர்ச்சி வசப்படுறயாநீ, முன்னயெல் லாம் இப்பிடி இருக்கமாட்டயே இப்ப ஏன் இப்பிடி,,,?என கணவன் தலை கோதுகிற கணத்தில் அவன் அப்படிக்கணத்தில் அவன் மார்பில் சாய்ந்தழுகத் தோன்றியது,அதை உணர்ந்தவகானவோ என்னவோ அவனும் அவளை தலை சாய்த்துக்கொள்ள அனுமதித்தவனாயும் மனம் கோதுகிறவனாயும்/

கடிகாரத்தை அண்ணாந்தவளாய் உட்கார்ந்திருந்தவளின் தலையை கோதிய கை கணவனின் கையாய் இருந்தது.

”என்ன இது ஏன் இப்பிடி அத்துவானமா ஒக்காந்துருக்க” என்றவன் அவள் தலை சாய்த்து முத்தமிட்டுவிட்டு அவளது மடியில் படுத்துக்கொள்கிறான்,

இது போலாய் விழிப்புத்தட்டிவிடும் அத்துவானங்களில் அவள் மடி மீது அவனும்,அவன் மடி மீது அவளுமாய் தலைசாய்த்துக்கொள்வார்கள்/ 


                                                                   பாகம் 2

ஆபரேஷன் பண்ணியதிலிருந்து தான் இப்படி ஆகிறது,அதற்கு முன் இப்படி யெல்லாம் இல்லை,

ராகுலன் டாக்டர்தான்ஆபரேஷுன்பண்ணினார்,ஆபரேஷன் பண்ணச்சொல்லி யோசனை சொன்னவரும் அவர்தான்.

என்ன இது வழக்கமில்லாத வழக்கமாய் இருக்கிறதே,சிசேரியன் பண்ணுவது வரை கேள்விப்பட்டிருக்கிறாள்,ஆனால் ஆபரேஷன் பண்ணி கர்ப்பப்பையை எடுப்பது இது நாள் வரை இவள் அறியாததும் கேள்விப் படாததுமாய் இருக்கி றதுதான், ஒரு வேளை வளர்ந்து வருகிற மருத்துவ விஞ்ஞானத்தை அறியாத வளாக இவள் இருக்கிறாளே என்னவோ,,,?

கர்ப்பப்பையை அகற்றுவது நினைத்துப்பார்த்தாலே கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது,”இதுல என்ன இருக்குடீ இவளே,ஒனக்கு வேணுமுன்னா இது புதுசா பெரிசா தெரியலாம்,பெரிய பெரிய ஊர்கள்லயெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமா தெனத்துக்கும்யாராவது ரெண்டு பேருக்கு கர்ப்பப்பைய எடுக்குற ஆபரேஷன் பண்ணிக்கிட்டுதான் இருக்குறாங்க,ஒனக்கு என்னைக்கி தோது இருக்குமுன்னு சொல்லு, போயி பண்ணிக்கிட்டு வந்துரு., கூடவே வேணு முன்னா நான் வந்து இருக்கேன் ,எனக்கு ஒண்ணும் பெரிய அளவுல வீட்டுல வேலைககெடையாது.புள்ளைங்கரெண்டும்பள்ளிக்கொடம்போனதுக்குஅப்பறம் துணிமணிகள தொவைச்சிட்டு சும்மா டீ வி பாத்துக்கிட்டுதான் இருக்கப் போ றேன்,அந்த நேரம் ஓங் கூட ஆஸ்பத்திரியில வந்து இருந்துட்டுப் போறேன் என்றார்.ஒனக்கும்ஒருஆறுதலா இருக்கும்,எனக்கும்ஒருமனதிருப்தி, தெரிஞ்ச வங்களுக்கு ஒரு உதவி பண்ணுனேன்னு இருக்கும் என்ற அக்கா நீ இவ்வளவு தூரம் யோசிக்கிறதப்பாத்தா இப்பதைக்குள்ள ஆபரேஷன் பண்ணிக்கிற மாதிரி தெரியலடீ,

“போன வாரம் எங்க சொந்ததுல ஒரு அம்மாவுக்கு இப்பிடித்தான் ஆகிப் போ ச்சி,காலையில டாக்டர் கிட்ட ஆலோசனை கேக்கப்போனாங்க ,அன்னைக்கி சாயங்காலமேஆபரேஷன்பண்ணுறக்குபோய்ஆஸ்பத்திரியில சேந்துட்டாங்க, ஒனக்குன்னாபரவாயில்ல,அவுங்களுக்கெல்லாம்ரத்தப்போக்குஅதிகமாவரும், வந்துச்சின்னாநிக்காது,ஒனக்காவதுகொஞ்சம் நின்னு நின்னு வருமுன்னுல்ல சொல்ற,அவுங்களுக்குஅப்பிடிக்கெடையாது,வந்துக்கிட்டேஇருக்குமாம்,அப்பிடியான நாட்கள்ல வீட்டுல ஒரு மூலையில ஒரு சாக்க மடிச்சிப்போட்டு ஒக்கா ந்துருவாங்க,ரெண்டுஉள் பாவடை கட்டீருப்பாங்க,அது நனைஞ்சி சேலை நனைஞ்சி சாக்கு நனைஞ்சி போற அளவுக்கு இருக்கும்,“பாக்குறதுக்கு நமக்கே பயமா இருக்கும்,

“அந்தக்காவப்பாக்கும்போது நானெல்லாம் சாமியக்கும்புட்டுக்கிருவேன், ”சாமி எனக்கெல்லாம் இப்பிடி ஒரு நெலைம வந்துருக்கூடாதுன்னு, அந்த நாட்கள்ல அவுங்களப்பாக்க ரொம்ப பாவமா இருக்குமுக்கா,ஒடம்பெல்லாம் வெளுத்துப் போகும்,கை காலெல்லாம் நடுக்கமெடுக்க ஆரம்பிச்சிடும், சத்து யெழந்து போயி ரொம்ப வீக்கா ஆயிருவாங்க,ஒடம்பெல்லாம் நடுங்கிப் போகும், சமயத் துல அப்பிடியே மயங்கி சரிஞ்சிருவாங்க/

ஏதாவதுசாப்புட்டே ஆகணுமுங்குறதுக்காக வம்படியா சாப்புடுவாங்க, சமைய லறைக்கிப் போயி நான்தான் சாப்பாடு போட்டுக்கொண்டு வருவேன், அவுங்க வீட்டுக்காரரு வேலைக்கிப் போயிருவாரு,புள்ளைங்க ரெண்டும் பள்ளிக் கொட த்துக்கு போயிருங்க,அந்தக்கா கூட சொல்லுவாங்க நீயி எதுக்கு ஓங் வேலை களப் போட்டுட்டு வந்து ஒக்காந்துகிட்டு இருக்க,போயி நீயி ஓங் வீட்ட கவனி, எனக்காக எதுக்கு இங்க வந்து ஒக்காந்துக்கிட்டுன்னுவாங்க,நாந்தான் இருக்கட்டுமுக்கா இத விடஎன்ன வேலை பெரிசா இருந்துறப்போகுது, அப் பிடியே இருந்தாஇருந்துட்டுப்போகுது.அந்தவேலைகள எப்பவேணுமின்னா லும் செஞ்சிக்கலாம்,ஆனா ஒங்களுக்கு இது போலான நாட்கள்லதான ஒதவ முடியும்?நான் ஒண்ணும் ஒங்க ஒடம்புக்கு இப்படி இருக்கு அப்பிடி இருக்கு ன்னு தெருவுக்கு ள்ளயோ இல்ல யெசக்கேடாவோ யாருகிட்டயும் போயி சொல்லீற மாட்டேன், ஏன்னா என்ன பேசுனா என்னவா உருமாறி நிக்கு முன்னு நல்லா தெரியும் எனக்கு/ அதுனால நான் எதுவும் யார்கிட்டயும் ஒங்க ஒடல் நெல பத்தி பேசவோ சொல்லவோ மாட்டேன்க்கான்னு சொன்னாத்தா அவுகங்களுக்கு கொஞ்சம் மனசாறும்,

”அப்பிடியேசொன்னாலும் கூட அந்தக்கா அத பெரிசா எடுத்துக்குற மாட்டாங்க விடு ஊர் ஒலத்துல யாருக்கும் வராத ஒண்ணா எனக்கு வந்துருச்சி, சொல் றவுங்கசொல்லட்டும்,பேசுறவுங்கபேச்சட்டும்இப்பஎன்ன கொறைஞ்சி போச்சி, சொல்லுன்னுசமாளிச்சிக்கிறுவாங்கமனவருத்தத்தவெளியிலகாட்டிக்காம/அந்தக்கா வீட்டுக்காரரு பாவம் கொத்தனாரு வேலைக்கிப் போறாரு,மாசம் பூரா அவுங்களுக்கு வேலை இருக்குமுன்னு சொல்ல முடியாது,கெடச்சன்னைக்கி போயிக்கிற வேண்டியதுதான்,அவரு கொஞ்சம் நல்ல வேலைக்காரருங்குற தாலயும் ஏதாவது சின்னவேலைக்கி கூப்புட்டாக்கூட போயி செஞ்சி குடுக்குற தாலயும் மாசத்துல இருபது நாளைக்கி கொறையாம வேலை கெடைச்சிரும், அதுனால முடிஞ்ச அளவுக்கு லீவு போடாம வேலைக்கிப் போயிக்கிருவாரு, போன மாசம் இப்பிடித்தான் அவரு வேலைக்கிக் கெளம்பிப் போறன்னைக்கி காலையில சமைலறையில வேலை செஞ்சிக்கிட்டிருந்த அந்தக்கா திடீர்ன்னு மயக்கமாகி விழுந்துட்டாங்க,வேலைக்கின்னு கெளம்பி வீட்டு வாசல் வரைக் கும் வந்த அந்த மனுசன் புள்ளைங்க சத்தம் போட்டதக் கேட்டு என்னன்னு ஓடிப்போயி பாத்துருக்காரு,மயங்கி கீழ விழுகும் போது சமையலறை மேடை தலையில அடிச்சி ரத்தம் வந்துக்கிட்டு இருந்துருக்கு, ஒடனே கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு ஓடிருக்காரு,அந்தக்கா நல்ல நெலைமையில இருந்திருந்தா அவுங்கள வண்டியிலயே ஒக்காற வச்சி கூப்புட்டுக்கிட்டு போ யிருப்பாரு,அன்னைக்கி வேற வழியில்லாமஆட்டோவுலதான் கூட்டிக்கிட்டுப் போனாரு,பக்கத்துவீட்டுக்காரப்பையந்தான்ஆட்டோக்கார தம்பி,அது அன்னை க்கி ஆட்டோவுக்கு காசு கூட வேணாமுன்னு சொல்லீருச்சி,

“ஆஸ்பத்திரியில யெறக்கி விட்டுட்டு இவுங்களுக்காக வெயிட் பண்ணிக் கிட்டு நின்னுக்கிட்டு இருந்துருக்கான்,இல்ல நீ போ தம்பி நாங்க வண்டியில வந்து ரோமுன்னுசொல்லீட்டுஅந்தக்காவஆஸ்பத்திரியில ஒக்காறவச்சிட்டு ஆட்டோ வுலயே வீட்டுக்கு வந்து புள்ளைங்கல ஸ்கூலுக்கு அனுப்பீட்டு இவரும் வண்டி எடுத்துக்கிட்டு வந்து அந்தக்காவ கூப்புட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்தாரு, அப்பிடிஅவுங்க வண்டியில ஜோடியா போறதுல ஒரு சூட்சுமம் இருக்கு, அப்பி டியே வண்டியில போயி ஏதாவது ஒரு கோயிலுக்குள்ளயோ இல்ல கூட்டம் அதிகமில்லாத ஒருஹோட்டலுக்குள்ளயோ போயி அவுங்க வாட்டுக்கு டீயோ காபியோ டிபனோ சொல்லீட்டு ஒக்காந்து மணிக்கணக்குல பேசிக்கிட்டு வருவாங்க,

”சும்மாசொல்லக்கூடாது ரெண்டு பேரும் வண்டியில ஜோடியா போகும் போது பாக்கணும் ,ஊரு கண்ணே பட்டுரும் போலஇருக்கும், அந்தண்ணங்கூட கொஞ் சம்சுமாராதான்இருப்பாங்கபார்வைக்கி,ஆனாஅந்தக்கா அவ்வளவு லட்சணமா இருப்பாங்க பாக்குறதுக்கு, சும்மா சாதாரணமாஒரு பூணம் சேலையத்தான் கட்டிக்கிட்டு வெளியில போவாங்க, பாக்குறதுக்குதொடச்சி வச்ச செல மாதிரி பளிச்சுன்னு இருப்பாங்க, பெரிசா ஒண்ணும் மேக்கப்பு,பவுடர் பூச்சுன்னு இருக் காது, தலைக்கி ஒரு மொழம் பூ கூட வச்சிக்கிற மாட்டாங்க,தலை முடிய அள்ளிச்சீவி பின்னாடி விட்டு முடிய லூசா விட்டு முனியில மட்டும் ஜடை பின்னி போட்டுருப்பாங்க, பாக்க அவ்வளவு அமைப்பா இருக்கும்,ஒல்லியான ஒடம்பு,கொஞ்சம் வளத்தியா இருப்பாங்க,லட்சணமான ஒடம்புவாகு, பாக்கப் பாக்க அவ்வளவு நல்லா இருப்பாங்க,சமயத்துல அவுங்க குடும்பத்தோட எங்கிட்டாவது போயிட்டு தெருவுக்குள்ள நொழையும் போது அப்பிடியே கை யெடுத்துக் கும்புடணும் போல இருக்கும். ஏங் வயசுக்கு இது நாள் வரைக்கும் இப்பிடி ஒரு குடும்பத்தப்பாத்தது இல்ல,எங்கிட்டோ பெரிய யெடத்துல பொற ந்துருக்க வேண்டியவுங்க,தப்பி இங்க வந்து பொறந்துட்டாங்க,

”சமயத்துல எனக்குக் கூட கொஞ்சம் பொறாமையா இருக்கும் அந்த மாதிரி வேளைகள்ல அவுங்கள பாக்கும் போது/

”அத அவுங்க கிட்ட சொன்னமுன்னா அடபோ அங்கிட்டு நீ ஒண்ணு வேலை யில்லாம,அழகுலட்சணமுன்னுட்டு,,,,ஒடம்புபடுத்துறபாட்டுக்கு”,என்னஇருந்து என்னசெய்ய,,,நானெல்லாம் இல்லாதவதான இல்லாதவ என்னைக்கும் பொல் லாதவதானன்னு சொல்லுவாங்க,,,போனமாசம் ஏதோ ஒரு விஷேச நாளு வந்துச்சில்ல,அன்னைக்கி இவுங்க குலதெய்வம் கோயிலுக்குப் போறதுக்காக மொத நாளு புளியோதரை ,தயிர் சாதமுன்னு ரெடி பண்ணிக்கிட்டு இருந்தா ங்க ,பொங்கல் வைக்க எங்க வீட்டுலதான் பொங்கப் பானை வாங்குனங்க, எல்லாம் ரெடி பண்ணி சாமி கும்புட சாமானெல்லாம் வாங்கி வச்சி ஆட்டோ வுக்குக் கூடசொல்லி வச்சி ரெடியாகி காலையில இத்தனைமணிக்கு கெளம் புறதுன்னு பேசி முடிவு பண்ணி ராத்திரிக்கு படுத்துட்டாங்க, காலையில எந்திரிக்கும் போது அந்தக்காவுக்கு எப்பயும் வர்றது போல ரத்தப்போக்கு வந்துருச்சி,அன்னைக்கி மட்டும் அந்தக்கா அழுத அழுகை இருக்கே நம்ம ஏரியா மொத்ததுக்கும் பத்தாது ஆமா,நா போயி சொல்றேன், அந்தக்கா வீட்டுக் காரரு சொல்லிப்பாக்குறாரு அழுகைய நிறுத்த மாட்டேங்குறாங்கு றாங்க அந்தக்கா, இல்ல ஏதோ சாமி குத்தம் இருக்கப்போயிதான் இந்த மாதிரி ஆகிப் போச்சி,நான் இந்த வீட்டு ராசி இல்லாதவ,என்னைய ஊசி போட்டு கொன்னு ருங்க,நான் வாழ லாயக்கில்லதவன்னு என்னென்னமோ பேச ஆரம் பிச்சிட் டாங்க, எனக்குன்னா ரொம்ப தர்ம சங்கடமாப்போச்சி ,அந்தக்காவப் பாக்கு றேன்,அந்தண்ணனப்பாக்குறேன்.மாறிமாறி ரெண்டு பேரையும் பாத்துக் கிட்டே இருக்கும் போது அந்தண்ணே படாருன்னு நீதாம்மா எனக்கு குலசாமி, ஒன் னைய விட எனக்கு யாருன்னு சொல்லுன்னு வீட்டு வாசல்ல வந்து நின்ன ஆட்டோவ அனுப்பிச்சிட்டு புள்ளைங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பீ ட்டு அந்தக்கா கூடயேவீட்டுள்ளயேஇருந்து அந்தக்க மனசுக்கு ஒத்தடம் குடுத்தாரு மனுசன். எதுக்குமே கலங்காத அந்தண்ணன் அன்னைக்கி ரொம்ப கலங்கிப் போனாரு/

”அதெல்லாம் பாக்கும் போது நீயி எவ்வளவோ பரவாயில்லைன்னு நெனைச் சிக்க,” என்பாள் அந்தக்கா./

ரத்தப்போக்கு அதிகமாய் இருந்த நாட்களில் யார் யாரிடமோ காண்பித்து விட்டு கடையில் ராகுலன் டாக்டரிம் தான் சென்றாள்,

முன்பெல்லாம்பீரியட்டைம்வந்தால் மூன்று நாட்களில் சரியாக நின்றுவிடும், மிஞ்சிப்போனால் மூணரை நாள்,சமயா சமயங்களில் இரண்டரை நாட்களில் நின்றுபோவதும்உண்டு,அது எப்பொழுதாவதுதான். நிரந்தரம் இல்லை,

ஆனால் இப்பொழுது ஒரு வருடமாகவே இப்படித்தான் ,ஒன்று நான்கைந்து நாட்களுக்குப் போகிறது, இல்லையென்றால் மூன்று நாட்களில் நின்று விட்டு அடுத்த பதினைந்து நாட்களிலேயே வந்து விடுகிறது,அதுவும் ரத்தப்போக்கின் அளவும் கொஞ்சம் கூடுதாலாகவே தெரிகிறது,

முதன் முதலாய் இப்படி ஆன போது இவள் பலசரக்கு வாங்கும் கடைக் கார ரின் மனைவியிடம்தான் பகிர்ந்து கொண்டாள்,

அவள்தான்சொன்னாள்,”என்னசெய்யக்கா, இப்படித்தான் இருக்கு, என்னைக்கி பொம்பளையா பொறப்பு எடுத்தமோ அன்னைக்கே இதெல்லாம் தாங்கிக்கிற வேண்டியதுதான், எனக்கும் இப்பிடித்தான் இருந்துச்சி,நானும் படாபட்டுத் தான் போனேன்,என்னசெய்யசொல்லுங்க,சாப்புடாத மாத்திரையி ல்ல, பாக்கா த வைத்தியமில்ல,கடைசியில ஒடம்புபுண்ணானதுதான்மிச்சம், கடைக்கி காய்கறிவாங்கவந்தஒருத்தங்கதான்சொன்னாங்க,இந்தமாதிரிராகுலன்டாக்டர் கிட்டப்போயிப்பாருன்னு.இப்பஅவருபாத்தவைத்தியமும்குடுத்தமாத்திரையும் தான் ரத்தப் போக்க கொஞ்சம்கட்டுக்குள்ளகொண்டு வந்துநிப்பாட்டிருக்கு.

ஆனா அவர்சொல்றாரு, இதுக்கெல்லாம் ஒரே வழி ஆபரேஷன் பண்ணுறது தான், வேறவழியில்லையா கேட்டா இல்லையின்னு சொல்லி அழகா சிரிக் கி றாரு,

“ஆனா நான் இன்னும் ஆபரேஷன் பண்ணிக்கல, கையில காசு இல்ல,கடை வருமானம்,கடைக்கும் குடும்பத்துக்கும் காணாமாப்போகுற அளவுல நிக்கும் போது எங்கிட்டுஆபரேஷன்பண்ணிக்கிறதுசொல்லுங்க, பாத்துக்கலாமுன்னு விட்டாச்சி,

“இப்பதைக்கிமருந்துமாத்திரைன்னுமட்டும்ஓடிக்கிட்டுஇருக்கு,சமயத்துலரத்த
ப்போக்குரொம்பஇருக்குறன்னைக்கிபேசாமாவீட்டுக்குள்ளயேஇருந்துகுருவேன், தானாசரியானப்பெறகுவந்து கடையிலஒக்காந்துருவேன்என அவள் சொன்ன நாளில் டாக்டரிடம் போய் ஆபரேஷன் பண்ண நாள் குறித்து விட்டு வர வேண் டியதுதான் என முடிவெடுக்கிறாள்/

11 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வெளையா ண்டாலாவது ஒடம்பு வேர்க்கும்,ரத்த ஓட்டம் நல்லாஇருக்கும், ஒடம்பும் மனசும்சுறுசுறுப்பாகும்,செய்யிறவேலை,படிக்கிறபடிப்புஇன்னும்நல்லாயிருக்கும், நல்ல மார்க் எடுக்கலாம், நல்ல பிள்ளை ன்னு பேர் எடுக்கலாமுன்னு ஒரு தன்னம்பிக்கை வரும்,

உண்மை
உண்மை

திண்டுக்கல் தனபாலன் said...

விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது... ஆனால் மருத்துவம்...?

ஸ்ரீராம். said...

​ஹிஸ்டெக்டமி செய்துவிட வேண்டியதுதான். சிம்பிள்.

vimalanperali said...

வளர்ந்து வருகிற விஞ்ஞானத்தில் மருத்துவம்
எளியவர்களுக்கு எட்டாக்கனியாகி நிற்கிறதுதான்/

vimalanperali said...

வணக்கம் சார்,ஹிஸ்டெக்டமி பிரச்சனையில்லை.
உடல் நிலை அப்படியாகிவிடுகிற போது ஏற்படுகிற
பாதிப்பைப்பற்றித்தான் கதை/

வலிப்போக்கன் said...

பெண்களுக்குத்தான் எவ்வளவு பிரச்சனைகள்.....உடலிலும் சமூகத்திலும்...

vimalanperali said...

உடல் ரீதியாக வருகிற பிரச்சனைகளே
பெரும்பாலுமாய் மனதை பாதிக்கிறது எனலாம்,
நன்றி கருத்துரைக்கு/

Thulasidharan V Thillaiakathu said...

அருமை சகோ! பெண்க்ளின் இந்த மெனோபாஸ் பிரச்சனையை ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகையில் அவளுக்கான அனுபவத்துடன் எதிர்கொள்கிறாள் என்றே தோன்றுகிறது. மெனோபாஸ் என்பது நீங்கள் குறிப்பிட்டது உடல் சார்ந்த ஒன்று என்றால் மனம் சார்ந்த விஷயங்கள் இதில் நிறைய உள்ளன...பெரும்பாலும் இந்த ஹார்மோன் பிரச்சனைகள் ஒரு சில பெண்களின் மனதையும் பாதிக்கும் என்பதால்தான் இந்த வயதுப் பெண்கள் தங்களை மன ரீதியாக உற்சாகமாகவும், ஏதேனும் நல்ல இடித்தமான விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ல வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள். இந்த ஆப்பரேஷன் செய்தாலும் அதன் பின்னும் மன ரீதியாக மாற்றங்கள் வரும் வாய்ப்புண்டு அதற்கும் மூன்று வரிகள் மேலே சொன்னதுதான்...

பொதுவாக இந்த ஆப்பரேஷன் வேண்டுமா வேண்டாமா எனும் குழப்பம் எல்லாப் பெண்களுக்கும் வரும் தான்...மனம் அந்த கடிகாரத்தின் பெண்டுலம் போல் ஆடும்...அங்குமிங்கும்...

நல்ல கதை சகோ...

கீதா

vimalanperali said...

நன்றி சார் நீண்ட கருத்துரைக்கும்,வருகைக்கும்/

Angel said...

மிக அதிக அளவில் மனோ ரீதியா மற்றும் உடல் ரீதியா மிடில் ஏஜ் பெண்கள் 40-50 இல் இருப்பவர்களை அதிகம் பாதிக்கும் அவர்களை நொறுக்கிப்போடும் ஒரு விஷயத்தை எழுதியுள்ளீர்கள் .பல பெண்களுக்கு கர்ப்பப்பை என்பது ஒரு முக்கியமான உறுப்பு அதை இழக்க அவர்களை தயார்படுத்துவது மிக கடினம் ..குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கை துணை இவர்களின் ஒத்துழைப்பும் அன்பும் மிக அத்தியாவசியம் .அதோடு அந்த வயதில் ஹார்மோன் பிரச்சினையும் சேர்ந்து பெண்களை பாடாய்படுத்தும் ..மன ரீதியா சந்தோஷமா இருக்க இப்படிப்பட்டோருக்கு கவுன்சலிங் தேவை ,தாங்கள் எதற்கும் லாயக்கற்றவர்களாகி விடுவோமோ என்ற சுய பச்சாதாபம் பயம் அவர்களை மேலும் நோயாளியாக்கிடும் .இதில் படிச்சவங்க படிக்காதவங்க ஏழை பணக்காரன் பாகுபாடே இல்லை ..மிகவும் நல்லதொரு கதைக்கருவை எளியமக்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக்கி தந்திருக்கிறீர்கள் சகோ ..
பிள்ளைங்க ஓடி ஆடி விளையாடினா தன்னம்பிக்கை வருவது போலத்தான் மத்திம வயது பெண்களும் முடிந்த அளவு உடற்பயிற்சி ,மனமகிழ்ச்சி பொழுதுபோக்குகளில் மனதை திசை திருப்பணும்

vimalanperali said...

அன்பும் நன்றியும் சகோதரி நீண்ட கருத்துரைக்கும் வருகைக்கும்!