8 Dec 2018

சிலந்தி வலை தட்டான்கள்,,,

அந்த நேரத்தில் அவளை அங்கு வைத்துப பார்ப்போமென எதிர்பார்த்திருக்க வில்லைதான்.

மென் பனி பொழிந்த முன் மாலைப்பொழுது,

இன்று பனியின் தாக்கம் சற்று கூடுதலாகவே தெரிந்தது, அழுத்திய உடல் சோர்வை விடவும் பசியும்,ஒண்ணுக்கும் நெருக்கிக்கொண்டு வந்தது,

இதில் பசியை தாங்கிக்கொள்ளலாம்,முட்டிக்கொண்டு வருகிற ஒண்ணுக்கை என்ன செய்து எங்கிட்டுக்கொண்டு போய் தள்ளுவது எனத்தெரியவில்லை,

தள்ள வேண்டாம்,முறையாக கழிக்க எங்காவது ஒரு இடம் வேண்டுமே,,,?

சாப்பிடவும் டீக்குடிக்கவும் ரோடு நெடுக்கவும் பிணைந்து இணைத்திருந்த கன்னிகளாய் இங்கு கடைகள் நிறைந்து இருக்கிறதுதான்,ஆனால் படக் கென போய் டீக்குடிக்கவும்,ஸ்னாக்ஸ் சாப்பிடவும் கொஞ்சம் ஆசுவாசப் பட்டுக் கொண்டு அமர்ந்தெழுந்து செல்ல பெண்களுக்கென்று ஒரு டீக் கடையோ காபி பாரோ கூட இல்லாதது மிகவும் துரதிஷ்டமாகவே/

அவசரமாய் இப்பொழுது ரெஸ்ட் ரும் போக வேண்டும் போல் இருக்கிறது. இவ்வளவு பெரிய ஏரியாவில் இதற்கு ஒரு வழி இல்லையே என நினைக்கும் பொழுது கொஞ்சம் வருத்தமாகவும் ஆத்திரமாகவும்/

இங்கு மட்டும் என இல்லை,வளர்ந்து தெரிகிற நகரங்களில் கூட ஆண்களுக்கு இருக்கிற பாத்ரூம் வசதி கூட பெண்களுக்கு இல்லை எனும் போது அதை யாரிடம் சொல்லி அழ.?

அன்றைக்கு மதுராம்பட்டினம் போயிருந்த போது நெரிசல் மிகுந்த சாலை யின் ஓரமாய் சிறுநீர் கழிப்பிடம் என ஆள் உயர சில்வர் டப்பாவை பொருத் தியிருந்தார்கள் அந்த சாலையின் சுவரோரமாய்/

அது போலானவைகள் ஆண்களுக்கு மட்டுமே பயன்படுமே ஒழிய பெண்களு க்கு எப்படி பயனாகி விட முடியும்?

அதுவும் நெரிசல்முகுந்த சாலையின் ஓரம்,,,?

ஆண்கள்போலபெண்களுக்கும் அந்தஉடல்உபாதைஇருக்கும்தானே,,,,,? அதை ஏன்,,,,?

வீட்டிற்கு போக இன்னும் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது, அதுவரை,,,?

இப்படியேதான் போகிறது இந்த மாதம் முழுவதுமாய்/

குளிர் காலம் அல்லது மழை காலம் ஆரம்பித்துவிட்டாலே இது ஒரு பெரும் பிரச்சனை சுமந்ததாகவே ஆகித்தெரிகிறது,

டாக்டர்சொல்கிறார்ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க,ஒடனேபோயிருங்க என, இப்படி நடு ரோட்டிலும் பஸ்ஸில்போய் வந்து கொண்டிருக்கையிலும் வரும் போதுஎங்குபோவது,,?மனம்ஒப்பாமலும்கட்டாயத்தின்பேரிலும்அடக்கிக் கொண்டுதான் ஆக வேண்டியிருக்கிறது,

இதில் இன்னொரு கொடுமை என்ன முட்டிக்கொண்டு வந்தாலும் பக்கத்தில் அல்லது உடன் வருபவர்சிரித்துப்பேசினால் சிரித்துப்பேசிக்கொண்டும்அவரது சுக துக்க பேச்சுக்களுக்கு ஏற்றவாறு கவனமாக தலையாட்டிக் கொண் டுமாய் வரவேண்டும்/கொஞ்சம் முகம்சுழித்தாலோஇல்லை கவனத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாலோ கூட இவன் என்ன பெரிய மண்டைக் கர்வம் புடிச்சவ ளா இருப்பாளோ நம்ம பேசுற பேச்சுக்குக்கூட மொகத்தத் திருப்பிக்கிறா, ஊம் இருக்கட்டும்,இருக்கட்டும்அவளுக்கு ஒரு நேரம் வந்தா நமக்கு ஒரு நேரம் வராமலையா போயிரும். கூட என கருவிக் கொள்வார்கள் மனதின் ஓரமாய்/

இது பரவாயில்லை.போன மாதம் மாலை நேரம் அலுவலகம்விட்டு பஸ்ஸில் வந்து கொண்டிருக்கையில் மாதவிடாய் வந்து விட்டது,நல்ல வேளையாய் உட்கார்ந்திருந்தாள்,
நின்று கொண்டு வந்திருந்தால் மானம் போயிருக்கும்.இந்தவிஷயத்தில் எத்த னைதான் பெண்களுக்கு பிரத்தியேகமாய் உடைவசதிகள்வந்துவிட்ட போதும் கூட இது போலான இக் கட்டுகளில் மிகவும் சிரமம் சுமந்தே நகர வேண்டியிரு க்கிறது.

இத்தனைக்கும் மாசாமாசம்தேதி தெரியும்,குறித்துகூட வைத்துக் கொள்வாள். இந்த மாதம் எப்படி மறந்தாள் எனத்தெரியவில்லை,

மறக்கவில்லை,எப்பொழுதும் இரவு தாண்டிதானே வரும் அல்லது இரண்டு மூன்று நாட்கள் முன்னும் பின்னுமாய்த்தானே வரும், பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியத்தில் போய் விட்டாள்.அலுவலகத்திற்கு/

தவிர இது போலான நாட்களில் இரண்டு தினங்களுக்கு முன்பாகவே பையில் நாப்கின் பாக்கெட்டை எடுத்து வைத்துக்கொள்வாள்.

இன்றைக்கு போகிற வழியில் வாங்கிக்கொள்ளலாம் என நினைத்தவளாய் கிளம்பி விட்டாள் அலுவலகத்திற்கு.

அப்பொழுதுதான்ஞாபகம்வந்தவளாக செல்கிற வழியில் கைப்பையை பார்த்த போது ஒரு நூறு ரூபாய்த்தாளும்ஒரு இருபதும் ஒருபத்தும்மட்டுமே கிடந்தது, கூடவே கொஞ்சம் சில்லறையும் ஒட்டிக்கொண்டு,,/

இதில் பெட்ரோல் போட நூறு ரூபாய் வேண்டும்,மிச்சம் இருக்கிற முப்பதில் எங்கிட்டுப்போய்,,,,?

நாகசாமி அண்ணன் கடையில் கடன் சொல்லிக்கூட வாங்கிக் கொள்ளலாம்.

அவரும்ஒங்கள நம்பிஇந்தக் கடையவே கூடகடனாதரலாமுக்கா, ஆனா நான் கடையதூக்கித்தந்துட்டுநடுத்தெருவுலபோயி நிக்கவும் முடியாது, நீங்களும் மனசொத்துவாங்க மாட்டீங்க,எதுக்குப்போயிக்கிட்டு வீணா ஆவிய போக்கடிப் பானேன் எனச் சிரிப்பார்.

அவருக்கு தெரிந்த ஒரே சொல் பெண்களென்றால் அக்கா,ரொம்பச் சிறியவர் கள்என்றால் வாப்பா போப்பா,ஆண்களென்றால்அண்ணன்,தம்பி,சார்இதுதான் அவரது அச்சிட்ட பேச்சு.

ஆனால் இவள் நாப்கின் வாங்கச்செல்கிற தினங்களில் இந்தப்பேச்சும் சிரிப்பும் அவரிடமிருந்து காணாமல் போய்விடுவதுண்டு,இல்லையென்றால்கடையை விட்டு சைஸாக எழுந்து போய் விடுவார்.

போய்விட்டு மனைவியை அனுப்புவார்,

வீடும் கடையும் ஒன்றாகவே இருந்தது,கடை கொஞ்சம் சிறியதுதான், அதில் எல்லாப்பொருளையும் வைத்து விட இடம் காணாது என்பதால் கடையின் பாதி வீட்டிற்குள் அடைகொண்டிருக்கும்,

வீட்டிற்குள்ளிருந்துவரும்போதே நாகசாமி அண்ணனின் மனைவி நாப்கின் பாக்கெட்டுடன்தான் வருவாள்,

”என்னாக்கா இது நான் வந்தாலே இது வாங்கத்தான் வர்றேன்னு அர்த்தமா ,என பொய்க்கோபம் காட்டி சிணுங்குகிற போது ,அப்பிடியில்லப்பா, ஒனக்கும் ஆபீஸ் போய் வந்தது போக நேரம் வாய்ச்சா அரிசி பருப்பு அரசலவுன்னு வாங்கவராமலையாஇருந்துரப்போற,ஓங் வேலை அப்பிடி,எந்நேரமும் கால்ல சக்கரத்தக்கட்டிக்கிட்டு ஓடிக்கிட்டு இருக்க, இதுல எங்கிட்டுப் போயி மத்தத யோசிக்க,நீயிஇதவாங்கவர்றதேபெரிய விஷயம்.

”ஏங் புள்ளைக ரெண்டுக்கும் நாந்தான் கொண்டு போய் எடுத்துக் குடுப்பேன், இத்தனைக்கும் வீட்டுல ஒரு மூலையில இருக்குதுக்கா,அத எடுத்து வச்சிக்கி றதுக்கு அதுக்கு ஒரு சோம்பேறித்தனம் பாத்துக்கங்க,

இதுலசின்னவகொஞ்சம்பரவாயில்ல,பெரியவஇருக்காளேதொட்டா சிணுங்கி, தேதி உட்பட நாந்தான் ஞாபகப்படுத்தணும் அவளுக்கு,பிரியட் தேதி வந்துச்சி ன்னாபோதும் அடுப்படிக்கி வந்து என்னையப்பொட்டு நைக்க ஆரம்பிச்சிருவா, மொதல்ல எனக்குப்புரியல,என்னடா இது எப்பை யும் அடுப்புப்பக்கம் வராதவ இன்னைக்கி வந்துருக்காளேன்னு யோசிச்சமுன்னா,அப்புறமா சொல்லுவா, பீரியட்டைம் ஒருநா லீவுபோட்டுக்கிறே ன்னு,

”போனதடவை இது போல பீரியட டையத்தப்ப லீவு போட்டப்ப அவுங்க டீச்சர் என்னைய கூப்புட்டு அனுப்பிட்டாங்க,நான் போனதும் கொஞ்சம் சத்தம் போட் டாங்க,கொஞ்சம் வருத்தப்பட்டாங்க,என்ன இது சின்னப்புள்ளைங்களப் போல, அவ படிக்கிறது பிளஸ் டூமா,நீங்க பாட்டுக்கு பீரியட் டைம் அது இதுன்னு லீவு போட்டா எப்பிடி சொல்லுங்க,இந்த வகுப்புல இருக்குற இத்தனை புள்ளைங் கள்ல யாருக்கு இல்லை ,இது போலான தொந்தரவு,ஏன் எங்களுக்கு இல்லை யா சொல்லுங்க,தாங்கீட்டுதான் வர்றோம்ன்னு சொன்னவங்க என்னைய தனியாகூப்புட்டுக்கிட்டுபோயிஎன்னைக்கிபொண்ணாபொறந்தமோஅன்னைக்கி இதெல்லாம்தாங்கிக்கிற பழகிக்கிற வேண்டியதுதான்,போக ரொம்ப பொத்திப் பொத்தி வளக்காதீ ங்க, கொஞ்சம் யதார்த்தம் காண்பிச்சி வளருங்க, அப்பத் தான் புள்ளைங்க நாளைக்கி வெளியில போகும் போது கொஞ்சமாவது நெஞ் சுரமா இருப் பாங்கன்னு கொஞ்ச நேரம் பேசி அனுப்புனாங்க,கூடவே பள்ளிக் கூட கேண்டீனுக்கு வந்து டீ வாங்கிக்குடுத்தாங்க,

”நான்ஸ்கூல விட்டு வரும் போது ஒண்ணு சொன்னாங்க,ஏங் புள்ளைக ரெண் டும்அந்ததேதி வர்றப்ப ஸ்கூலுக்கு நாப்கின எடுத்துட்டுப் போயிருங்க,அது மாதிரி சொல்லி அனுப்பப்பாருங்கன்னு” சொன்னாங்க,

”அவுங்க சொன்னது எனக்கு கொஞ்சம் மனச தடவி விட்டது மாதிரி இருந்தாக் கூட வீட்டுல வந்து சொன்னப்பா,ஆமா அவுங்க இப்படித்தான் சொல்லு வாங்க,ஆனா ஸ்கூலுக்குநாப்கின் பாக்கெட்டகொண்டு போனா அங்க வச்சி மாத்துறதுக்குக்கூட யெடம் இல்லம்மா,பாத்ரூமுல ரொம்ப நேரம்டைம் எடுத் துக்க முடியாதும்மா,நான்அங்க டைம் எடுத்துக்கிட்டா பாடம் போயிருமுன் னு பதட்டம் வேற,அவசர அவசரமா ஓடி வந்தா பதட்டத்துல ஏதாவது ஒண்ணு ஆகிப்போகுது,

”ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இப்பிடித்தான் ரீசஸ் பீரியட்ல போயி அவசர அவசரமா நாப்கின் வச்சிட்டு வந்தேன்,வச்ச அவசரத்துல கொஞ் சம் நகண் டுருச்சி போல ,நானும் கவனிக்காம வந்துட்டேன் வகுப்புக்கு சாய்ங்காலம் ஸ்கூல் விட்டுப்போகையில ரொம்ப சங்கடமா போச்சி, எனக்கு,

வீட்டுல வந்து சைக்கிள் சீட்டெல்லாம் சோப்புப்போட்டு கழுவுனேங்குறா. இதெல்லாம் சொல்லும் போது அழுகுற மாதிரி ஆகிப்போறா/

ஒரு பக்கம் அவ சொல்றதுலயும் தப்பு இல்ல,ஆனா சூழ் நெல,,,,

இதுல யெடையில யெடையில சரியில்லாம வந்துர்ற நாப்கின்களா வந்துற தொந்தரவு வேற,ஏதாவது அலர்ஜியாகிப் போகுது,

எல்லாம் தாங்கித்தான் ஓடுறாங்க பொம்பளப்புள்ளைங்க,ஒரு பக்கம் ஸ்கூலு, படிப்பு,மனப்பாடம்,டியூசன்னுதாங்கிஓடவேண்டியதாத்தான்இருக்கு.என்றவாறு நாப்கின்பாக்கெட்டைஇவளிடம் கொடுத்தாள் நாகசாமி அண்ணனின் மனைவி.

எத்தனை பேருக்கு இப்படி வரும் போது பஸ்ஸில் உட்கார சீட் கிடைத்திருக் கும் எனத் தெரியவில்லை,

“ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு பொண்ணு நான் பஸ்ஸீ ஏறுன யெடத்துல இருந்துநின்னுக்கிட்டேவந்தா,அடுத்த ஊர்ல பஸ்ஸீநிக்கும் போது ஒரு மாதிரி நெளிய ஆரம்பிச்சா, எனக்கு தெரிஞ்சி போச்சி,பஸ்ஸீல முன்னாடி நின்னுக் கிட்டு இருந்த அவள பின்னாடி சீட்டுல ஒக்காந்துருந்த நானு கூப்புட்டு ஒக்கார வச்சேன், தேங்ஸ்ன்னு கையெடுத்துக் கும்புட்டவ ஏங் யெடத்துல ஒக்காந்துக் கிட்டா, பின்னாடி இருந்து நெறஞ்சி நிக்கிற கூட்டத்துல பஸ்ஸீல நீந்திக் கிட்டு வர்றா ,கவனமா ஸ்கூல் பேக்க பின்னாடி புடிச்சி மறைச்சிக்கிட்டே/

ஒரு ஆளாவது தள்ளி நிக்கிற வழியகாணோம் ,அவ ஒக்காறயெடம் கேக்கு றா,ஒரு ஆளு கூட எந்திருச்சி யெடங்குடுக்கக் காணோம், ஆம்ப ளைங்கதான் இப்பிடின்னா பொம்பளைங்க,ஒரே பிடிவாதமா ஒக்காந்த யெடத்த விட்டு எந்திரிக்கிற வழியக் காணோம்,

“போன மாசம் ஏங் அண்ணன் வெளியூர் போயிக்கிட்டு வந்துக்கிட்டு இருந்து ருக்காரு,வந்த நேரம் ஸ்கூல் விட்ட டைம் போல இருக்கு,டவுன் பஸ்ஸீங் குறதால்ஒரேபள்ளிக்கூடத்துப்புள்ளைங்க கூட்டம், இவரு ஏற்கன வே தலை முடி நறைச்சிப்போயி பாக்குறதுக்கு வயசானவரு போல இருக்காறா,,? இவன் சீட்டு பக்கத்துல அந்தப்புள்ளையும் வந்துநின்னுருக்கு, இவனும்அதுகிட்ட இருந்து பைய வாங்கி வச்சவன் அப்பிடியே சீட்டுல சாய்ஞ்சி தூங்கீட்டாரு,

“கொஞ்ச நேரத்துல இவரு பக்கத்துல நின்னுக்கிட்டு வந்த அந்த புள்ள எங்க ண்ணன எழுப்பீருக்கு,எந்திரிச்சிப்பாத்தவரு ஒரு வேளை பையத்தான் கேக்கு தோன்னு நெனைச்சிப் புஸ்தகப்பைய குடுத்துருக்காரு,

“அது இல்ல சார் கொஞ்சம் ஒக்கார யெடம் வேணும்ன்னு சொல்லீருக்கு, கொஞ்சநேரம்அந்தபுள்ளையப்பாத்தவருபுரிஞ்சிக்கிட்டுஎந்திரிச்சிட்டாரு,ஆனா இவர் பக்கத்துல ஒக்காந்துந்துட்டு வந்த பையன் எந்திரிக்க மாட்டேன்னு சொல்லீருக்கான்,அப்புறம்ஒருவழியாஅந்தப்பொண்ணு ஸ்கூல்ப் பைய அந்தப் பையனுக்கும் இந்தப்பொண்ணுக்கும் நடுவால வச்சிக்கிட்டு உக்காந்துக் கிட்டு வந்துருக்கு.

அந்தபொண்ணு பாவம் பஸ்ஸீல உக்காந்து வந்துக்கிட்டு வந்த நேரம் பூராம் பாவம் மழையில நனைஞ்சகோழிக்குஞ்சு போலஆகிப்போச்சாம்.

மொகம் வெம்பி சிரிப்பு மாறி கிட்டத்தட்ட அழுகுற நெலையில இருந்த அந்தப்பொண்ண பாக்கவே பாவமா இருந்துச்சின்னாரு எங்கண்ணன்,

ஒரு வேளை வயசுக்கு வந்து கொஞ்ச நாளுதான் ஆன பொண்ணா இருக்கு மோ என்னமோ தெரியல.,,,,

எங்கண்ணன், அந்தப்பொண்ணு பக்கத்துல ஒக்காந்துக்கிட்டு வந்த பையன் எல்லாரும் ஒரே ஊர்லதான் யெறங்கீருக்குறாங்க,யெறங்குன ஒடனே எங்க அண்ணன்அந்தப்பையனகூப்புட்டுவிஷயத்தச்சொல்லிஅதுனாலதான்ஸ்கூல்ப் பொண்ணு எந்திரிக்கச்சொல்லி யெடம் கேட்டுச்சின்னு சொல்லவும் அய்யய் யோ ஸாரி சார்,ஸாரி சார்ன்னு சொன்னவன் நேரா போயி அந்தப் பொண்ணு கிட்ட மன்னிப்புக்கேட்டுட்டு எங்க அண்ணன் கிட்ட வந்து சொல்லீ ருக்கான்

“எனக்கு இதெல்லாம் யோசிக்கிற வயசில்ல,ஆனாலும் ஏங்கூடப்பொறந்த பொண்ணுங்க ரெண்டு பேர் இருக்காங்க.அவங்களோட உடல் மற்றும் மனோ ரீதியான பிரச்சனை தெரிஞ்சிருந்தும் கூட இந்தப்பொண்ணு எந்திரிக்கச் சொல்லி கேட்டப்ப நான் ஏங் அதப் புரிஞ்சிக்கலைன்னு தெரியலை சார்,

அந்த நேரத்துலநான் நடந்துக்கிட்டத நெனைச்சா எனக்கே வெக்கமாஇருக்குது என தலை குனிஞ்சவன கூப்புட்டுப்போயி டீ வாங்கிக்குடுத்த எங்க அண்ணன் ,அட விடு தம்பி ,ஒனக்காவது அந்த குற்ற மனப்பான்மை இருக்கு, இங்க எத்தனை அப்பாக்களுக்குதன்னோட வயசு வந்த பொண்ணோட பீரியட் டைம் பத்தி தெரிதலும் அக்கறையும் இருக்கு சொல்லுங்க, அந்த வகையில நீங்க எவ்வளவோ பரவாயில்ல தம்பின்னு ”சொல்லீட்டு கலைஞ்சி வந்துருக்காங்க, ,, ”எனச் சொன்னவள் ரெஸ்ட் ரூம் நோக்கியும் எடுத்த பசிக்கு உணவு தேடியும் வீடு செல்கிறாள்.                                                              

8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பெண்களின் நிலை இக்காலத்திலும் கடினம்தான் நண்பரே

vimalanperali said...

அதுதான் மனம் சுடுகிற உண்மை/

வலிப்போக்கன் said...

அதிகம் பேர் எந்தவித குற்றணர்வே இல்லாமல்தான் இருக்கிறார்கள்..வாழ்கிறார்கள்..

vimalanperali said...

நன்றி சார் அன்பும் பிரியமுமான வருகைக்கு./

vimalanperali said...

இயந்திர உலகில் இதையெல்லாம்
நினைத்தாவது பார்க்கிறோமா
என்கிற ஐயம் வருகிறதுதான்,
நன்றி சார் வருகைக்கு/

திண்டுக்கல் தனபாலன் said...

வருத்தப்படும் உண்மை...

vimalanperali said...

வாஸ்தவம்தான் சார்,,,/

vimalanperali said...

இது விஷயத்தில் கொஞ்சம் புரிதலும்
வேண்டியதிருக்கிறது சார்/