4 Feb 2019

கடிபட்ட பொழுதுகளின் உத்திரவாதங்கள்,,,

சுற்றிக் கொண்டிருக்கிற ஒற்றைக்கொசு கடிக்கும் என்கிற எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

நீண்ட நேரமாய் சுற்றிக்கொண்டிருக்கிறது,

”என்ன வேணும் உனக்கு,எனது ரத்தம்தானே உட்கார்ந்து உறிஞ்சி எடுத்துக் கொண்டு போ” என உடல் முழுவதையும் திரை விலக்கி காட்டிவிட முடியாது தான்,

”எத்தனையோ விதங்களில் யார்யாரோலோ என்னனென்ன விதமாகவோ ரத்த மும் வியர்வையும் வேர்வையும் உழைப்பும் உறிஞ்சி எடுக்கப்படும் பொழுது நீ உட்கார்ந்து கொஞ்சம் உன் உணவுக்கான தேவையாய் எடுப்பதால் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லைதான்.”

கொசு சொல்கிறது,”குறைந்து விடப்போவதில்லை என்பது வாஸ்தவம்தான். அதற்காக ஒரேயடியாய் உறிஞ்சி கொண்டே இருக்க முடியாதுதானே,,,? நாங் களும்ஓர் உயிரி நீங்களும் ஓர் உயிரி.உயிரிக்கு உயிரி பரஸ்பரம் தர்மம் இருக் கும்தானே,தன் அடிப்படையில் நான் கொஞ்சம் உறிஞ்சி எடுத்துக் கொண்டு போகிறேன் எனது உணவிற்காய்” என்கிற எழுத்து பதிவு எதுவும் இல்லாமல் சுற்றி வந்து கொண்டிருக்கிறது கொசு.

ஆனால் கடிக்காது என்கிற எந்த உத்திரவாதமும் இல்லை.கடிக்கும் கடிக்காது என்பதைத்தாண்டி ஊமைத்தனமாய் ஏதாவது செய்து விட்டுப்போய் விட்டால் வம்பாய் போய் விடுமே என்கிற மிகை உணர்வு இல்லாமலும் இல்லை.

கடித்தால் கடித்து விட்டுப் போகிறது என்று சமயாசமயங்களில் விரட்டுப் பார் த்து எரிச்சலுற்றும் கொசு விரட்டி பேட் மூலமாய் விரட்டிவிட்டுப்பார்த்தும் போகாத கொசுவை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கவோஇல்லை தகவல் சொல்லாமல் வந்தததனால் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டவோ முடியவி ல்லை.

விரித்து வைத்த ரத்தின கம்பளத்தில் தெரிகிற சணல் நாரின் திரடுகளும் அது அல்லாததுமானதுமானவைகளில் தட்டித்தடுக்கிவிடுகிற கொசுக்களும் அது கடிப்பதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள முயற்சி எடுத்துத்தோற்றுக் கொ ண்டிருக்கும் மனிதங்களும் ஒன்றுடன் ஒன்றாய் கைகோர்த்து ஒரு நல்லமர்வு அமர்ந்து கொஞ்சம்பேசிக்களிக்கலாமே சந்தோஷித்து என்பதான எண்ணத்தை நீங்கதான் உடைக்கிறீர்கள் என்கிறது காதருகில் ரீங்கிட்ட கொசு.

ரீங்கிடுவது என் குணம்.பேட்டை தூக்குவது எங்கள் குணம்,கொசுவடிச்சான் பேட் ஒன்றை கண்டு பிடித்திருக்கிறீர்கள்.

அதுஇப்பொழுதுதானே அதற்கும் முன்னாய் என்னனேமோ மருந்துமாயங்கள் எனநிறைய நிறைய உபயோகித்துப்பார்த்து அலுத்துத்தான் போனீர்கள் பாவம்.

கொசுவத்தி என்றீர்கள்,காயல் என்றீர்கள்,உடலில் பூசிக்கொள்ளும் கிரீம் என்றீ ர்கள்.இன்னும் இத்தியாதி இத்தியாதியாய் என்னென்னெமோ செய்து பார்த்து விட்டீர்கள்,இத்தனை செய்தும் உபயோகித்தும் என் முன்னோர்களில் கொஞ் சம் பேரை கொன்று விட்டு இப்பொழுது என் வரை இந்த கொசு அடிச்சான் பேட்டை தூக்கிக் கொண்டு நிற்கிறீர்கள்,

சந்தோஷம் ,ஆனால் இந்த சந்தோஷத்திலும் நிலை கொண்டு நிமிர்ந்த ஒரு வருத்தம் இருக்கிறதுதானே,,,?

எத்தனை செய்து என்ன ,எங்களை உங்களால் முழுவதுமாய் அழிக்க முடிகி றதா, இல்லையானால் மருந்து மாயங்களால் எங்கள் இனத்தை குரைத்து விட முடிகிறதா,இல்லையே மாறாய் எங்களில் ஒன்று அழிந்தால் பலவாய் பெருகி வருகிறோமே,,,/

நீங்கள் தந்த மருந்து மாயம் ,கிரீம் என எல்லாம் உட்கொண்டும் எதிர் கொண் டுமாய் இன்னும் இன்னுமாய் பலம் தாங்கி நிற்கிறோமே,சிறியதாய் எனது கால் சைஸில் இருந்த நான் இப்பொழுது வளர்ந்து ஒரு ஈயின் சைஸிற்கு வளர்ந்து நிற்கிறேனே அதற்கெல்லாம் யார் காரணமாக இருக்க முடியும் சொல்லுங்கள்,ஒன்று நீங்கள் கொடுத்த கொளுத்தி வைத்த கொசு வத்தியும் உடலில் தடவிக்கொண்ட கிரீமுமாய் இருக்க வேண்டும்.அல்லது என்னை ஒழிக்க தயாரித்த மருத்துக்களின் உள்ளிருப்பாய் இருக்க வேண்டும்.

இவை எல்லாமும் சேர்ந்து எனது உடலின் சக்தியில் புயலைப் புகுத்தி விட் டது என்றுதான் சொல்லவேண்டும்.

ரத்தம் எடுத்த கொசு ஒன்று இப்படியாய் இவனிடம் பேசிச்சென்ற பொழுது கொஞ்சம் சீக்கிரம் தூங்கியிருந்தால் இந்த வம்பு வரப்போவதில்லைதான் இப்பொழுது.

சாப்பிடும்பொழுது இரவு பத்து மணியிருக்கும். ”இந்நேரத்துக்கு சாப்புட்டுட்டு எந்நேரம் தூங்க சொல்லுங்க,?என மனைவி சப்தமிட்ட பொழுது ஏன் இப்படி எதுக்கெடுத்தாலும்சத்தம்போட்டுக்கிட்டேஇருக்க,என்னஇப்ப,சாப்பிடகொஞ்சம் நேரம் ஆகிப்போச்சி அவ்வளவுதான,அதுக்குப்போயி எதுக்கு இவ்வளவு ஆர்ப் பாட்டம்,

”ஆர்ப்பாட்டத்துக்கு இல்லைங்க,நீங்க கொஞ்சம் சீக்கிரம் சாப்புட்டு முடிச்சீங்க ண்ணா நான் காலாகாலத்துல துங்கப்போவேன்,அது இல்லாம இப்பிடி கொட் டான் கொட்டான்னு முழிச்சிக்கிட்டு இருந்தீங்கண்ணா எப்பிடி”? என்றாள்.

”நீயி சாப்பாடு பொங்கி முடிக்கவே ஒன்பது மணியாகிப்போச்சி,அதுக்கப்புறம் புள்ளைங்கசாப்புட்டப்பெறகுநான்சாப்புடலாமுன்னுஇருந்தேன்,அதுக்குள்ள,,,, சொல்லப் போனா நீயும் சாப்புடலையில்ல,”,,,என மனைவியைப் பார்த்து இவன்கண்ணடித்தபொழுது”ஆமா நான் என்னைக்கி ஒங்களவிட்டுட்டு சாப்புட் டுரு க்கேன், இன்னைக்கிச் சாப்புட,,,சொல்லுங்க,அது என்னமோ ஒருகவளம் சோறு ன்னாலும்ஒங்க பக்கத்துலதான் ஒக்காந்து சாப்புடணுமுன்னு இருக்கு, அப்பிடி சாப்புட்டா கொஞ்சம் நல்லாவும் இருக்கு,கொஞ்சம் பேச்சு, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் ஆசுவாசம்,கொஞ்சம் பகிர்வுன்னு என்னென்னெமோவாவும் கலர்க் கலராவும் ஆகித் தெரியுது அந்த நேரத்துல,அது ஒண்ணுக்காகவாவது ஒங்க கூட ஒக்காந்து சாப்புடணுமுன்னு ஆசை,,,”என பேச்சை முடுக்கும் மனைவி யை இன்னும் கொஞ்சம் நேரம் பேசச்சொல்லி கேட்கலாம் போல இருக்கும், ஆனால் என்ன செய்ய சாப்பாடும் முடிந்து போகும் ,வயிறும் நிரம்பி விடும்.

அதற்கு மேல் பேச்சை தொடர்வதென்பது முடியாதுதான்,நாளையிலிருந்து சாப்பாட்டு நேரத்தைக்கொஞ்சம் நீட்டித்துசாப்பிட வேண்டும்,

ஆனால் எவ்வலவு நேரம் நீட்டிப்பது,சாப்பாடு கொள்ளும் வரைதானே வயிறு கொள்ளும்.அதற்கும் மேல் சாப்பிடுவது போல் நடிக்கக்கூடத் தெரியாதே,

மேடையில் தவிர்த்து நிஜவாழ்க்கையில் நடிக்கத்தெரியாதததால் தோற்றுப் போய் விட்டவனாகித் தெரிவான் அப்புறம்,

இப்பொழுதே அப்படித்தான் தெரிவதாகச் சொல்கிறார்கள்,

ஆனால் பரஸ்பரம் தோற்றலும் ஜெயித்தலும் வாழ்க்கையில் உவப்புடையது தானே, எனச்சொல்லும் போது சிரிக்கிற மனைவி,,,,

”ஆனா பாருங்க நீங்க ரொம்ப நேரம் இழுத்து வந்து சாப்புட்டு முடிக்கீறீங்க, இந்தா நீங்க சாப்புட ஒக்காந்துருக்கீங்க,மணி பத்து,இனி பேசிக்கிட்டே சாப்பு ட்டு முடிக்கும் போது மணி பதிணொன்னு ஆகிப் போகும்.

அதுக்கப்புறம் வழக்கம் போல நீங்க தூங்க பணிரெண்டு மணியாகிபோகும், நான் பதினோரு மணிக்கு மேல தூங்கி காலையில எந்திரிச்சி மிஷினா சுத்த ஆரம்பிக்கணும்,இப்பிடியேசுத்திக்கிட்டேஇருக்கேன்ஓய்வுஒளிச்சல்இல்லாம,  எப்ப ரிப்பேராகி  நிக்கப்போறேன்னு தெரியல,என்றாள்.

இன்னைக்கிகாலையிலஅஞ்சர மணிக்கி எந்திரிக்கும் போதே கொஞ்சம் தலை சுத்தலாத்தான் இருந்துச்சி ,அதுக்காக திரும்ப வந்து படுத்துற முடியுமா மொகத்தக்கழுவீட்டு பால் வாங்க கெளம்பீட்டேன்,பக்கத்துத்தெரு அக்காதான் கூட வந்தாங்க சொன்னேன்,அது அப்பிடித்தான்க்கா,இப்பத்தான் நமக்கு கொம ரிப் புள்ள வயசு ஆகுதாக்கும்,எனக்கும் அப்பிடித்தான்க்கா இருக்கும் சமயத் துல.அதோடத்தான் ஓடிக்கிட்டுத்திரிவேன்,நீங்களாவது வீடு,வேலைன்னு மட் டும் இருக்குற ஆளு,நான் வீட்டு வேலைய முடிச்சி புள்ளைகளுக்கும், வீட்டுக் காரருக்கும் சாப்பாடு பொங்கி வச்சிட்டு,புள்ளைங்கள பள்ளிக்கொடத்துக்கும், வீட்டுக்காரர வேலைக்கும் கெளப்பி விட்டுட்டு காலையில ஒன்பது மணிக்கு பஸ்ஸீ வர்றதுக்குள்ள மில்லு வேலைக்கு கெளம்பி ரெடியா நிக்கணும்.

அதுக்குள்ள ஒடம்பு இப்பிடி கொஞ்சம் பாடா படுத்தி எடுக்கும்தான்,என்ன செய்ய,அதோடத்தான்தாங்கீட்டு ஓடிக்கிட்டு திரிய வேண்டியதிருக்குஅது போ லான ஓட்டமும் நடையும் வேலையுமா இருக்கும் போது ஒண்ணும் தெரியல எனக்குங்குறாங்க அந்தக்கா,

அவுங்களப் பாக்கும் போது ஏங் நெலமகொஞ்சம் பரவாயில்லைன்னு தோ ணுது.

ஆனாலும் காலையில டீப்போட்டுட்டு சோறு பொங்கி ஒங்களையும் புள்ளைக ளையும் அனுப்பிச்சிட்டு அதுக்கப்புறம் நான் துணிதொவைச்சி பாத்திரம் வெல க்கி,வீட்ட சுத்தம் பண்ணி நிமிரும்போது மதியம் ரெண்டு மணிக்கு மேல ஆகீ ரும்,சாப்புட்டு கொஞ்சம் நேரம் அசந்தா பால்க்காரரு வந்துருவாரு,பால 
வாங்கி அடுப்புலவச்சிட்டு இருக்கும் போது புள்ளைங்க வந்துருவாங்க ஸ்கூல் விட்டு, அதுக்கப்புறம் அவுங்களுக்கு டீப்போட்டுக்குடுத்துட்டு மாடியில போயி காயப் போட்ட துணிகள எடுத்துக்கொண்டு வந்து மடிச்சி வச்சிட்டு இருக்கும் போது நீங்க வந்துருவீங்க,அப்புறமா பழைய படியும் ஒங்களுக்கு டீ,கொஞ்சம் பேச்சு ன்னு ஒக்காந்தா நேரம் ராத்திரிக்கு நகண்டு போயிரும் ,அப்பிடியே ராத்திரிச் சாப்பாடு புள்ளைங்க படிப்பு,டீ வி சினிமா,செய்தின்னு கொஞ்சம் கொஞ்சமா நகண்டு போயி படுக்கைக்கு தள்ளீரும் நாளு/

”இப்பிடியா நகர்ற ஒவ்வொரு நாளும் பொழுதும் எனக்கு இப்பிடித்தான் விடி யுது இப்பிடித்தான் அடையுது, அதெல்லாம் வெளிக்காட்டிக்காமத்தான் ஒங்க ளோட பேசவும் சிரிக்கவுமா இருக்கேன்,”

”எனக்குமட்டும் இல்ல,முக்கால் வாசி பொம்பளைகளுக்குஇதுதான் நெலைம, என்னதான்விஞ்ஞானம்முன்னேறிவேலைக்குப்போற நெலைமைக்கு பெண் கள் வந்ததுக்கப்புறமும் கூட அப்பிடித்தான் இருக்கு நெலை,நானாவது பரவா யில்லை, வேலைக்குப்போற பொம்பளைகளுக்கு இன்னும் கொஞ்சம் பாரம் ஜாஸ்தி,அதுமனசளவுலயும்சரி,ஒடம்பளவுலயும்சரி.”எனப்பேசுகிறமனைவியைஆற்றுப்படுத்துவதுகொஞ்சம் சிரமமாய்த்தான் ஆகிப்போகும் இது போலான தருணங்களில்/

ஆனால் இவனால்தான் சீக்கிரமாக தூங்கிவிட முடியவில்லை தினமும் நகர் கிற இரவுகளில்/

பருத்து விட்ட மிகை உணர்வும்,பரந்து பட்டு கிளை பரப்பிய எண்ணங்களும் என்னில்உன்னில்நம்மில்படர்ந்துபரவுவதுஇயற்கைதானே,,,?என்பார்அண்ணன் மிக்கேல் அவர்கள்,

மைக்கேல் என்பதாய் மிக்கேலாய் மருவி அழைக்கப்பட்டிருப்பது அறியாமல் அவரது பெயரை அவரே மிக்கேல் என்று இதுநாள்வரை ஏற்றுக்கொண்டும் பதிவு செய்து கொண்டு மாய் வருகிறார்,எல்லா இடங்களிலும் எல்லா நாட்க ளிலுமாய்,,,,,/

”என்ன மிக்கேலண்ணே சௌரியம்தானா”,,? என்கிற பேச்சை கேட்ட மாத்திரத் தில்வந்து ஓடோடி வந்து பசை இட்டுவிடுகிற கள்ளம் கபடமற்ற வெள்ளந்தித் தனத்திற்கு சொந்தக்காரர்.

”வாங்கண்ணே ஸ்டாரங்கா டீக்குடிப்போம் என்றால் சரி கூப்புடுறீங்க நீங்க மறுக்கவா முடியும்,இப்பத்தான் டீ சாப்புட்டேன் இருந்தாலும் சாப்புடலாம் வாங்க,”எனச்சொல்கிற மிக்கேல் அண்ணன் டீ சாப்புடுவதை பார்க்க குடுத்து வைக்க வேண்டும் போலத்தோணும்,அது அவருடன் நெருங்கிப்பழகியவர்களு க்கு மட்டுமே தெரிந்திருந்தது.

அப்படியாய்பழகியவர்களில் இவனும் ஒருவன்போலும்,,”போலும்” என்றுதான் சொல்லமுடிகிறது.உறுதியாய்அறுதியிட்டுச்சொல்லிச்செல்லமுடியவில்லை.

காரணம் இவனகில் மிக்கேல் எப்பொழுதும் இருந்ததில்லை.நெருக்கம் காட்டி பழகியதும் இல்லை,நெருக்கம்,நெருக்கம,நெருக்கம் என்கிற நேரங்களில் அது இல்லை,இல்லை இல்லை என காரணம் காட்டிச்சொல்லிச்செல்வதாய் பல இருந்தாலும் கூட அவருடன் ஒட்ட முடியா தருணங்களும் நிலை கொள்ள முடியா உறவுகளுமே இவனில் ஆய்ந்து அவரலும் அவரில் மாய்ந்து இவனி லும் ஓடோடி வந்து ஒட்டிக்கொள்வதாய் தெரிகிறது.

பரஸ்பரம்ஒட்டிகொள்கிறஉறவுகளில்உரசல்கள் கிளிஞ்சல்களாய் இல்லாமல் இப்படித்தான் எட்ட நின்று பார்த்து ரசிக்க முடிகிற இனியவையாய் மனம் தாங்கியும் அடை கொண்டுமாய்,/

அடைகொண்டவைகளின்மனமாச்சரியங்கள்பரஸ்பரம்இவரைப்பற்றிஅவரிடமும் அவரைக்கொண்டு இவனிடமும் காட்சிப்பட்டும், உறைகொண் டும்,,/

பார்க்கிற இடங்களில் பார்க்கிற நேரங்களில் பார்க்கிறவற்றை வைத்தும் காணக் கிடைக்கிறவைகளினூடும் பயணிக்கிற நல்ல மனம் எப்படி அவருக்கு வாய்த்தது என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமே/

அடர்ந்து பருத்த ஆலமரத்தின் பருத்துத்தெரிகிற கிளைகளும், அடர்ந்து தெரிகி ற இலைகளும் அதன் மேல் படர்வாய் காட்சிப்படுகிற கொடிகளும் இறங்கி மண்தொடும்விழுதுகளும்,,,தன்னகத்தேஅடைகொண்ட பறவைகளைகளுக்கு அடைக்கலம் கொடுத்தும்,கூடு கட்ட இசைவு தந்தும் அவைகள் கொஞ்சி பேசி காதல் ,மொழி பறிமாறக் கொள்வதை மனமுவந்து ஏற்றுக்கொண்டுமாய் கறுப்பும் சிவப்பும் வெளிர் நீலக்கலருமாய் இருந்த பறவைகளை தினமுமாய் பார்க்கவும்அவைகளின் அமர்தலையும், இருத்தலையும்,பறத்தலையும் ரசிக்க வுமாய் இருந்தகணங்கள் சுற்றிப்பறக்கிற கொசுவைப் பார்க்கிற போது ஞாபகம் வருவதாய் தெரிகிறது.

இறகுகிருக்கிற கொசுவாய் இருக்குமா இல்லை இறகற்ற கொசுவாய் சுற்றி வருகிறதா என்பது புரியவில்லை.

“இறகில்லையானால்எப்படிப்பறப்பேன் நான் என்கிற நியதி கூடத் தெரியாமல் என்னசொல்கிறாய் நீ,கிறுக்குத்தனமாயும்,லூசுத்தனமாயும் அர்த்தமற்றும் கேட் கிறாயே”என மனதில் நினைத்த கொசு ஒன்று இவன் வலது தோள் உரசிச் சென்ற போது”இல்லை இப்பொழுது கேட்பதும் நடப்பதும் வெளிப்பட்டுத் தெரி வதும் இன்னும் இன்னுமாய் ஆயிரம் சேதிச் சொல்லிச் செல்கிற எல்லாமும் அப்படியா அர்த்தம் கொண்டு காட்சி கொள்கிறது, இல்லையே,

“நினைத்தவன்நினைத்தவண்ணம்நினைத்ததைஎடுத்துக்கையாண்டு,துவம்சப்
படுத்தி துன்பப்படுத்தி விடுவதில்லையா,அது போல்தானே இது போலான தவறு பூத்த எண்ணங்களும்,

“பூத்த பூவின் புஷ்பித்தல் நிலைகொண்டதுதானே எப்பொழுதும் என்றாலும் கூட அதன் துளிர்ப்பிலும் நிலை கொள்ளலிலும் காட்சிப் பட்டுப்போகிற சரி தவறுகள் எல்லாமும் அப்படிப்பட்டதுதானே என சொல்கிற போது அதுதான் வாஸ்தவமும் சாஸ்வதமுமாய் ஆகித்தெரிகிறது,

”சரி தவறுகள் முளைத்துத்தெரியாத எண்ணங்களும்,பிழைகள் ஆகித்தெரி யாத காட்சிகளும் எதுதான் இந்த வெளியில்,,” என சொல்லிய இவனின் வலது தோளை தொட்ட கொசு இப்பொழுது இடது பக்கமாய் வந்தமர்ந்து கொஞ்சம் தைரியம் காட்டிப்பேசியதாய்ப் படுகிறது.

சுற்றி வந்து கொண்டிருக்கிற ஒற்றைக்கொசு கடிக்கும் என்கிற எந்த எதிர் பார்ப்பும்இல்லை,ஆனாலும் கடிக்காது என்கிற எந்த உத்திரவாதமும் இல்லை.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த சிந்தனை வித்தியாசமாக இருந்தது...

vimalanperali said...

வணக்கம் சார்,
நன்றியும் மிகையன்புமாய்,,,/

vimalanperali said...

வித்தியாசங்கள் சமூகங்களில் விதைக்கப்பட்டும்
காணவுமாய் கிடைக்கிற போது
எழுத்துக்களீலும் சிந்தனையிலும்
வித்தியாசம் இருப்பது இயற்கைதானே,,,,?

vimalanperali said...

நன்றியும் அன்பும் சார்,,,/

vimalanperali said...

சேதிகள் பலவற்றை சொல்லிச்செல்கிற
சமூகம் இதையும் கொஞ்சம் காட்சிப்படுத்துவதாய்,,/

Kasthuri Rengan said...

கவித்துவமான தலைப்பு வாழ்த்துகள்

vimalanperali said...

நன்றியும் அன்பும்,,/