9 Feb 2019

அடர்வின் அழகு பட்டு,,,

அடர்ந்து கிளைத்திருந்த முடிகள் சில சிலிர்ப்பு காட்டியும் சில அடர்ந்துமாய் காணப்படுகிறது.

முடிகளுக்கென்ன அப்படித்தான் இருக்கும், கொண்டுள்ளவர்களுக்கல்லவா பிரச்சனை இப்பொழுது.

ஆனால் எல்லோருக்கும் அப்படியாய் இல்லை என்பதாய்த்தான்த் தெரிகிறது, அவரும் அதை உணர்கிறார்,

எனக்கு மட்டும் ஏன் இப்படி?அவர்களைப்போல் பூனை முடிகளை உடலில் அங்கங்கே தூவி விட்டிருக்கலாமே,,?அது விடுத்து இப்படியா நட்டு வைத்த கரும்பயிர்களைப்போல,,,,,?

“அட போங்கப்பா,” என சலித்துக்கொள்வது தவிர்த்து ஒன்றும் செய்து விட இயலவில்லைதான் இது விஷயத்தில்.

பரிணாமத்தின் மிச்சமாயும் முன்னோர்கள் இட்டுச்சென்றதின் அடையாளமா யும், உடலெங்குங்குமாய் இருக்கிற முடிகள் சமயா சமயங்களில் மனமெங்கு மாய் குடி கொண்டு/

உடம்பு கொள்ளாமல் முளைத்து கிடக்கிற முடியை மழித்தெடுக்க இல்லை யானால் ஒன்று போல் வெட்டி விட சலூனுக்குத்தான் போக வேண்டும்,

அவருக்கானால் முடி வெட்டிக்கொள்வது தவிர்த்து வேறெதற்குமாய் சலூ னுக்குப் போய் பழக்கமில்லை,

இந்தஐம்பத்தைந்துவயது தாண்டிய இது நாள் வரைஒருதடவைகூட சலூனில் போய் சவரம் பண்ணிக் கொண்டதில்லை.

காசு ஒரு பக்கம் என்றாலும் கூட இவனின் எதிர்பார்ப்பு போல் இருக்காது என்பதே அதற்கான காரணமாய் ஆகித்தெரிகிறது,

முகம்மழிக்கிற போது முதலில் ஒரு பக்கம் மழித்து விட்டு பின் அதற்கு எதிர்ப் பக்கமாய் மழிக்கும் போது எரிகிறது, காந்தலெடுக்கிற முகம் திகு திகு என எரிய ஆரம்பித்து அது தணியும் நேரம் வரை சலூன் கடைக்காரரிடம் முகத் தைக் கொடுத்து விட்டுஅமர வேண்டியதாகிப் போகிறது,

அதுவரைக்குமாய் நடக்கிற ஷேவிங்கை பொறுத்தக்கொள்ள முடியாமல்தான் போவதில்லை கடைக்கு,இரண்டு நாள் லேட்டானலும் கூட பரவாயில்லை, வீட்டிலேயே பண்ணிக்கொள்கிறான்,

எப்பொழுதாவது முடிவெட்டிக் கொள்கிறதினங்களின் போது மனதிருந்தால் சேர்ந்தாற்போல் பண்ணிக்கொள்வான்,

அது போக வர வர முடி வெட்டிக்கொள்ளப் போகவே எரிச்சலாகிப் போகிறது,

பின்என்னசொல்லுங்கள் தொழில் நடக்கிற இடத்தில் பேச்சு பேச்சு பேச்சுதான், சென்றமுறைமுடி வெட்டிக்கொள்ளசென்ற போது பாதி முடியைவெட்டி விட்டு மீதி வெட்டும் முன் கடைக்கு வந்து விட்ட நண்பருடன் பேச ஆரம்பித்து விட்டார்,பொறுத்துப்பொறுத்துப்பார்த்தவர்”தம்பிகொஞ்சம் என்னையும் கவனி ங்க,,,,” என்ற பிறகு ஏதோ இவனுக்காக வெட்டுவது போல் வெட்டினார், கடையை விட்டு வெளியில் வரும் போது கடைக்காரரிடம் சொல்லி விட்டுத் தான் வந்தார்

“இனிமே உங்களுக்கான பேச்சுநேரத்த தனியா ஒதுக்கிக்கங்க, அந்த நேரத்துல என்னையப்போல இருக்குற ஆட்கள்உள்ள வர மாட்டமுல்ல,” என்ற போது கடைக்காரர் தன் தவறுனந்து கொஞ்சமாய் வருத்தப்பட்டுக் கொண்டார்,

என்ன பட்டாலும் ”பாடுனவாயும் ஆடுன காலும்”நிக்காதுதானே,,,,?அப்படியான வரிடம்போய்எப்படி உடலில் இருக்கிற முடியைமழித்துவிடவோ வெட்டி விட வோ சொல்ல முடியும்,,,?

சில பேருக்குத்தான் கை வரும் அது போலான வேலைகள்,எத்தனை பேர் கடை நிறைந்து உட்கார்ந்திருந்தாலும் சரி, கம்பங்கூட்டு முடியை மழிக்காமல் போக மாட்டார்கள்,

சட்டையை கழட்டி விட்டு கையை மேலே தூக்கி கம்பங் கூட்டின் கீழாய் சிறிதாய்துண்டு போட்டு முடியை மழித்து விட்டு சலூன் நாற்காலியில் இருந் தவாறேசட்டையைஉதறிப்போட்டுக்கொண்டுமுகத்தைத்திருப்பிகடை முழுவ தையும் முழுதாய் ஒரு பார்வைபார்க்கும் போது கடைக்குள் உட்கார்ந்திருக் கும்அவர்போன்றவர்கள்தான்லஜ்ஜைப்பட்டு வேறு பக்கம்முகத்தைதிருப்பிக் கொள்ள வேண்டும்,

அப்படியாயாய் யதார்த்தமும் நடப்பும் இருக்கையில் எங்கு போய் யாரிடம் மழித்துக்கொள்ள,,?இவனே பண்ணிக் கொள்ள வேண்டியதுதான், அது போல் பண்ணியும் கொள்வான்.

சேய்,,,,,முடிகள்,முடிகள்,முடிகள்,,,என்ன இது ஆண்டவா, கூப்பிட முடியவில் லை, கூப்பிட்டாலும் இது விஷயத்திற்காய் செவிசாய்ப்பாரா அவர் என்பது கொஞ்சம் சந்தேகம் காட்டியே,/

அதனால் ஆண்டவனை அனுதினமும் கும்புடுகிறவர்களே அவருக்கு ஆண்ட வன் ஸ்தானத்தில் தெரிய அப்படியாய் தெரிகிற மனைவியை ஆண்டவ னாயும் உற்ற துணையாயும், தோள் தொட்டவளாயும் கரம் பற்றியவளாயும் கடவுளாயும் காட்சிப்படுத்தி முறையிட்டுக் கொள்வார் எதாகினாலும்/

சிலிர்ப்புக் காட்டிக்கொண்டிருந்த முடிகள் சில்லிட்டும் தன் அடர்த்தியும் கன மும் கொண்டு முரட்டுத்தோற்றம் காட்டியும்/

காட்டிய தோற்றத்தின் அடர்த்தியும் ஆழமும் எப்பொழுதும் எங்கும் நிலை கொண்டதாய் காணக்கிடைக்கிறதுதான்,

”அப்புறம் என்ன ஒரேயடியா சிலிப்பிக் கிட்டே திரிஞ்சா எப்பிடி, கொஞ்சம் அடங்கித்தான் போகணும்,யாராவது ஒருத்தரு யெறங்கி வந்தாத்தான சரியா இருக்க முடியும் ,ரெண்டும் உச்சாணிகொம்புல ஏறிக்கிட்டு நின்னா எப்பிடி,,,? என்கிற சொல்லாக்கம் அவரது உடலில் வளந்து நின்ற முடிகளுக்கு முன் உதாரணம் காட்டியும் கட்டியம் கூறியுமாய்./

கூறிச் சென்ற கட்டியமும், உதாரணமும் கைகோர்த்து அவரது உடலில் இருந்த முடிகளை கட்டிக் காத்ததாய் தோனியது,

அடர்ந்தும்அதுஅற்றுமாய் காணப்பட்டமுடிகள் உடல் முழுவதுமாய் அல்லாம ல் அது தாண்டி முகம் கை கால் என வளர்ந்து வேரூன்றி காணப்படுவதாய்/

“ஏன் இப்பிடி அனத்திக்கிட்டே இருக்கீங்க, ஒங்களுக்கு மட்டுமா வருது ஊர்ல இருக்குற எல்லாருக்கும் வர்றதுதான, இன்னமும் சொல்லப்போனா எங்க ஊர்லஇருந்த ஒருத்தருக்கு பாத்தீங்கன்னா ஒடம்பு முழுசும்அப்பிடியே போர் வையக் கொண்டு மூடுனது போல இருக்கும்,

“ஒங்களுக்காவது பரவாயில்ல, அவரு இப்ப இல்ல ,நாங்க சின்னப் புள்ளை களாஇருக்கும் போது அவரு முடியில சின்னச்சின்னதா ஜடை போட்டு விட்டு வெளையாடுவோம்,அந்தத்தாத்தாவும் ஒண்ணும் சொல்ல மாட்டாரு, ஏங் பேத்திகளுக்கும்,பேரன்களும் ஏறி வெளையாடத்தானே இந்த ஒடம்புன்னுக் கிட்டே சிரிச்சிக்கிருவாரு,நாங்க போட்ட ஜடைகள திருகி விட்டுக்கிட்டும், அதைத் தொட்டுப் பாத்துக்கிட்டுமா,,,,,/

“அப்பிடி அவரு பேசும்போது பாத்தா அவரு கண்ணுகொஞ்சம் கலங்குன மாதிரி இருக்கும்,கண்ணு ரெண்டுலயும் கட்டிக்கிட்டு இருக்குற கண்ணீர்ல அவரு மடியில ஒக்காந்து வெளையாடுற எங்க உருவம் தெரியும்,அவ்வளவு ஈரமா இருப்பாரு,சமயத்துல ரொம்ப தேம்பிப் போயிட்டாருன்னா, சரி சரி வெளையாண்டதுபோதும்,எந்திரிச்சிபோங்கன்னுட்டுவீட்டுள்ள போயி கண்ண தொடச்சிக்கிருவாரு,அவருக்கு அவரோட பேரன் பேத்திக மேல உசிரு பாத்துக் கங்க,ஆனாஅவுங்கயாரும்பக்கத்துல இல்லாததால எங்களப்போல சிறுசுகளப் பாக்கும் போது அவருக்கு மனசு தேம்பிப் போகும் தேம்பி/

“அவருக்குள்ளஎங்களப்பத்திஎன்னநெனைப்பாருன்னுதெரியாது,ஆனாஎங்களப் போல ஊர்ல இருந்த எங்க பிராயத்து சின்னப்புள்ளைங்க அத்தனை பேரு கிட்டயும் பிரியமாத்தான் இருந்தாரு,

“பெரிசா காசு பெழக்கம் அவ்வளவா இல்லாத அந்த நேரத்துல தானியம் தவசியும் பருத்தியும் போட்டுதான் கடையில ஏதாவது தின்பண்டம் வாங்க ணும்,நாங்க போயிட்டமுன்னா போதும் ஒடனே சின்னப்புள்ள மாதிரி வீட்டுக் குள்ள ஓடிப்போயி கைகொள்ளாம பருத்திய அள்ளிக்கொண்டு வந்து எங்க கிட்ட குடுத்து சேவு வாங்கீட்டு வாங்க கடையில போயி.எல்லாருமா திம்போன்னுவாரு, நாங்களும் வாங்கீட்டு வருவோம்.,

“கடைக்குள்ளபோன ஒடனே கடைக்காரரு கேட்டுருவாரு,என்ன ஒங்க தாத்தா சேவு வாங்கீட்டு வரச்சொன்னாரா,ஒங்க தாத்தாவுக்கும் வேலை இல்ல, ஒங்க ளுக்கும் வேலை இல்ல,,,,,னுக்கிட்டே எடுத்துக்குடுப்பாரு, நாங்களும் வாங்கீ ட்டு வந்து தின்னுக்கிட்டே வெளையாண்டுக்கிட்டு திரிவோம், அப்பத் தெரியல அது ,

“ஆனா இப்ப நெனைச்சிப் பாத்தா அவரு குடுத்தது நாங்க தின்னது மட்டும் ஆயிரக்கணக்குல இருக்குமுன்னு தோணுது.

“அப்பஅதுபெரிசா தோணல ,இப்ப நெனைச்சிப் பாத்தா தெரியுது,அவரு அப்பிடி வாங்கிக்குடுக்குறதுக்காக செலவழிச்ச காச விட வாங்கிக் குடுக்கணுமுன்னு நெனைச்ச அவரோடமனசு முக்கியமுன்னு படுது.

”அப்பிடி வாங்கிக் குடுத்ததுக்கும்,வாங்கித்தின்னதுக்கும் ஊடாலநெசவோடுன நூழிலையா அவருகிட்ட நெருங்கி வந்த எல்லாச் சின்னக் கொழந்தைகளை யும் சொந்தமா நெனைக்கிற மனசு,எங்களுக்கு வாங்கிக்குடுக்கணுமுங் குற நெனைப்பும் இருந்துச்சிப்பாருங்க,அந்த கொணம் அவரு தலை போற வரைக் கும் அவரப் பத்தி பேச வச்சிச்சி ஊருக்குள்ள/

”ஒங்களப்பாக்கும் போது அவரோட நெனைப்பு வர்றது தவிர்க்க முடியாம போயிருது எனக்குள்ள,ஆனா அவரப் போல பரோபகாரியா இருந்தா இப்ப நம்மள இளிச்சவாயன்,பொழைக்கத்தெரியாதவன்னு பட்டம்கட்டிருவாங்க,

“அத மீறி இப்ப அந்த மாதிரி செய்யணுமுன்னுநெனைச்சாக்கூட செய்ய முடி யாம போயிருமுன்னு நெனைக்கிறேன். அப்பயெல்லாம் பணத்துக்கு இவ்வ ளவு முக்கியமில்லாத காலம்,எதுக்கெடுத்தாலும் பண்ட மாற்று மொறை தான இருந்துச்சி இப்பத்தான காசு காசுகாசுன்னு எதுக்கெடுத்தாலும் காசாயுருச்சி, வீட்டுக்கு முன்னாடி சின்னதா ஒரு யெடம் இருந்தாலும் கூட அத வளைச்சிப் புடிச்சி கட்டி காம்ளக்ஸீ,கடைன்னு கட்டி வச்சி லட்சக்கணக்குல அட்வான்ஸீ, ஆயிரக்கணக்குல வாடகைன்னு வாங்கீர்றாங்க,

”முன்னாடியெல்லாம் வீட்டுக்கு முன்னாடி கொஞ்சம் காலியெடம் இருந்துச் சின்னாதிண்ணை கட்டுவாங்க,மரம் வளப்பாங்க,இப்ப அதெல்லாம் ஒண்ணும் இல்லாம நிக்கிறோம்.

“ஒங்க ஒடம்புல அடர்ந்து கெடக்குற முடி போல முன்னயெல்லாம் எங்க பாத் தாலும் மரமா நின்னுச்சி, இப்பப் பாருங்க அது இல்ல,கொறஞ்சி போச்சி ,அது போல ஒங்க ஒடம்புல இருக்குற முடிய கொறைக்கணுமுன்னு நெனைக்கிறீ ங்க ,முடியல அது,/

ஒரு தடவை கூட வெயில் காலத்துல கசகசன்னு இருக்குறதாச்சொல்லி முடிய வெட்டி விட்டீங்க,அப்புறமா மொத்தமா புடிச்சி வழிச்சி விட்டீங்க, ஆனா அது கொஞ்ச நாளுலயேகாடு போல வளந்து நின்னுருச்சி.என்ன செய்ய பின்னன்னு அப்பிடி செய்யிறதையே விட்டுட்டீங்க,இப்ப அது சகசன்னு இருக் குறதா சொல்லுறீங்க என நீளமாய் பேசிய மனைவியை ஏறிட்டவர் அவர் தனது உடலில் அடர்ந்திருந்த முடிகளில் இளசு ரெண்டு வேகம் காட்டியும் முதியது ரெண்டு உதிரப் போவதுமாய் மாற்றி மாற்றி தன்னை இருத்திக் கொண்டு ,ஒன்றின் உதிர்வில் ஒன்று வளர்வதும்,வளர்வது நின்று நிலைத்து உதிர்வதுமாய்ப் பட்டது,

அதுஇயற்கை தானே, இதில் போய் என்ன பெரிதாய் என்கிறார் அவரது நண்பர். ”வாஸ்தவம்தான், வளந்த முடி வளந்தது போலவே உதுந்துட்டா பிரச்சனை ஒண்ணும் இல்ல, ஆனா ஒடம்பு மட்டுமில்லாம மொகத்துலவந்து தாடிங்குற பேர்ல வளந்து நிக்குது,பாருங்க, அத ரெண்டு நாளைக்கி ஒரு தடவை, இல்ல வாரத்துக்கு ரெண்டு தடவை கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு மொகத்த மழிச்சிக்கிற எரிச்சல் இருக்கே அது போல வேற ஒண்ணும் இருக்காதுன்னு நெனைக்கிறேன்,

”மொகத்துல முடிவளராம இருக்குறதுக்கு லேகியம் ஏதாவது வாங்கி சாப்புட்ற லாமுன்னு இருக்கு,என்கிற அவரது கதை வேறு,

காலையில் எழுந்து வாக்கிங் செல்கிற சாக்கில் வீட்டுக்குத்தெரியாமல் வீதி முக்கில் இருக்கிற கடையில் டீக்குடித்து விட்டு நிற்கும் பொழுது உடன் வந்து சேர்கிற நண்பர்களுடன் வாக்கிங் போய் விட்டு திரும்புவார்,

அவர் டீக்குடிக்கும் போது இளையராஜாவின்இசை, கண்ணதாசனின் பாடல் இதில் ஏதாவது ஒன்று வேண்டும் அவருக்கு,

அதிலும் பி.பி.ஸீ,,சுசிலா காதல் பாடல்கள் என்றால் டீக்கடைக்கே தன்னை அடகு கொடுத்து விடுவார். டீக்கடைக்காரரும் இவர் தெரு முக்கு திரும்பும் போதே பாடல்களை ஒலிக்க விட்டு விடுவார் சப்தமாக/

அந்த சப்தத்திலும் சந்தோஷத்திலுமாய் அவர் குடிக்கிற டீயின் ஒவ்வொரு மிடறும்நாவின் சுவைறும்பு தொட்டு இட்டுச் செல்லும் சுவையின் உச்சத்தி ற்கு/

இதில் எஞ்சி நிற்பது டீயின் சுவையா இல்லை பாடலின் இனிமையா என அவரை கேட்கிற மறு விநாடி கண்னை மூடிக்கொண்டு சொல்லி விடுவார்,

“இதில் டீயின் சுவையை குறை சொல்ல எனக்கு அனுமதி கிடையாது ஆனால் பாடலின் இனிமையைப்பற்றி சொல்ல எனக்கு முழு உரிமை உண்டு என நினைக்கிறேன் என சொல்லிவிடுவார் சட்டென,எனக்குப்பிடித்ததும் எஞ்சி நிறபதும் பாடலின் இனிமையே தவிர்த்து வேறொன்றுமில்லை என/

இப்படி சிரிப்பும் பேச்சுமாய் வாக்கிங்க் போய் விட்டு வீடு வந்து ரோமக் கட்டை தட்டாத ஷேவிங்,ஷேவிங் லோசன்,மற்ற மற்ற இத்தியாதிகளைப் போட்டுக் கொண்டு உள்ளதில் ஓரளவிற்கு நல்லதாய் ஒரு பேண்ட் சட்டை யை போட்டுக் கொண்டு கிளம்புவார் அலுவலகத்திற்கு/

இது அவரது அன்றாட வாடிக்கை,வேலையில் இருக்கிற போது அவர் ஷேவி ங்க் பண்ணுவதற்கு தேவையான ஷேவிங்க் கிரீம்,ஷேவிங் லோசன்,மற்ற மற்ற இத்தியாதி இத்தியாதி எல்லாம் வாங்கி வருவது அவரது மனைவி தான்,

இதில் யாருக்கும் தெரியாமல் வாங்கி வருகிற ஹேர் டையை குறிப்பிட்ட இடத்தில் வைத்து விட்டு ஷேவிங்க் பண்ணீட்டு லோசன் போட்டுக்கிட்டு வரும் போது மறக்காம அந்த ஹேர்டையவும் போட்டுக்கிட்டு வந்துருங்க என அழுந்த முத்தம் கொடுத்து விட்டுப் போவாள்.

அவள் கொடுக்கிற முத்தங்களிலும் அது தருகிற அழுத்தங்களிலுமாய் இருந்து மீண்டு அது உணர்ந்து போன பின் அவளிடம் போய் கேட்டிருக்கிறார்,

“ஏய் என்ன இப்ப ஒனக்கு,புள்ளைங்க ரெண்டும் தோளுக்கு மேல வளந்து நிக்கும் போது இப்பிடியா நடு வீட்ல வச்சி முத்தம் குடுத்துட்டு அலைவ, கிறுக்கி எனச் சொல்கிற அவர ஏறுடுகிற மனைவி.ஆமா நான் ஒங்க மேல கிறு க்கா இருக்குறதுனால நான் ஒரு கிறுக்கிதாங்க,

”நீங்க பேசுறது புது வம்பா இல்ல இருக்கு, மனசு நெறையவும் ஒடம்பு நெறை யவும் ஆசைய பொத்தி வச்சிக்கிட்டு என்னால ஆசை இல்லாதது மாதிரி நடி க்கக் கூட முடியாதுங்க,,” என்பாள்.

”நம்ம புள்ளைங்கதான பாத்தா பாக்கட்டுமே என்ன இப்ப கெட்டுப்போச்சிங்கு றீங்க, அதுகளும் தெரிஞ்சிக்கிறட்டுமே ஆசையஅறுபது நாளைக்கும்,மோகத்த முப்பது நாளைக்கும் தத்துக்குடுத்துட்டு என்னால நடிக்கக்கூட முடியாதுங்கு றதயும்,நடிக்கக்கூடாதுங்குறதையும்/

“அதுகளும் புரிஞ்சி இருந்துக்கிறட்டுமே,” என்கிற அவளைஅப்படியே அள்ளி வாரிச்சுற்றலாம்போலதோன்றுகிறபொழுதுகளில்உடம்பில் தெரிகிறநிறைந்த கறுப்பு முடிகளுக்கு மத்தியில் ஒற்றையாய் நீட்டித் தெரிகிற வெள்ளை முடியும், நிறைந்து தெரிந்த வெள்ளை முடிகளுக்கு மத்தியில் ஒற்றையாய் நீட்டித் தெரிகிற கறுப்பு முடியும் அடர்ந்து தெரிகிற முடிகளுக்கு மத்தியில் அழகு பட்டுத் தெரிந்ததாய்/

8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஏன் இப்பிடி அனத்திக்கிட்டே இருக்கீங்க, ஒங்களுக்கு மட்டுமா வருது ஊர்ல இருக்குற எல்லாருக்கும் வர்றதுதான, இன்னமும் சொல்லப்போனா எங்க ஊர்லஇருந்த ஒருத்தருக்கு பாத்தீங்கன்னா ஒடம்பு முழுசும்அப்பிடியே போர் வையக் கொண்டு மூடுனது போல இருக்கும்,

உண்மைதான் இதுபோன்ற பலரைப் பார்த்திருக்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான வர்ணனை...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

பலருக்குமாய் சேர்ந்து வாய்க்கப்பெற்ற
வாழ்க்கைதானே,,,/வலிதானே,
நன்றியும் அன்பும்/

ஸ்ரீராம். said...

முடியில் ஒரு முடிவில்லாத விஷயம்!

vimalanperali said...

நன்றியும் அன்பும்/

வலிப்போக்கன் said...

அடர்வின் அழகு பட்டுவை படித்தவுடன் எனது நினைவலைகள்..எனக்கோ என் தாயாருக்கோ உடல் நலமில்லா நாட்களில் என் தாயாரின் மருத்துவமனையான கோயிலுக்கு என் தலை முடியை கட்டணமாக (காணிக்கையாக) கொடுத்த காரணத்தினால் என் முடி கட்டையாக மாறிவிட்டது அதற்கு பெயரும் ஏற்பட்டுவிட்டது வணங்கா முடி என்று....

vimalanperali said...

வணக்கம் சார்,ஏதாவது ஒன்றை
ஞாபகப்படுத்திச்செல்வதும்,
மற்றொன்றை விதைத்துச்செல்வதும்
படைப்பின் பலம்தானே,,?