17 Feb 2019

வேறெதுவுமாயும்,,,,,,



வேறெதிலும் ஒட்ட முடியவில்லை.

வேறெதையும் சிந்திக்க மறுக்கிறது மனம்

வேறெதிலுமாய் கவனம் கொள்ள முடியவில்லை.


வேறெதுவும் படிக்க ஒப்பவில்லை,

வேறெதுவும் எழுதி விடமுடியவில்லை.

வேறெதுவும் பார்த்து விட முடியவில்லை,

வேறெந்த பக்கமும் போய் விடமுடியவில்லை,

மனைவி மக்களுடனும் அக்கம் பக்கம் மற்றும் உறவுகளுடனும்

எதையும் பேசிக்கொள்ளவோ, பகிர்ந்து கொள்ளவோ

உரையாடிக் கொள்ளவோ மறுக்கிறது மனம்.

டீக்கடைக்காரரிலிருந்து உடன் வேலை பார்க்கிற யாருடனும்

வேறெங்குமாய் பேசிய பேச்சுக்கள் யாவும் உயிரற்றதாய்/

பேசிய பேச்சுக்களிலிருந்து செய்து முடித்த செய்கைகள்

யாவிலும் எதிலும் எந்த ஒட்டுதலுமில்லை.

சாப்பாடு தண்ணீர்,உடை உடுத்துதல் என மற்ற மற்ற

எல்லாவற்றிலும்  குவிய மறுக்கிறது கவனம்,

தூங்க மறுத்து அடம் பிடிக்கிற தொட்டில் குழந்தையாய்

உடலும்,மனமும் சமனப்பட மறுத்து அடம் பிடிக்கிறதாய்,,,/

புல்வாமாவின் உறை பனியில் நாட்டைக் காக்கும் பணியில்

உயிரிழந்த  ராணுவ வீரர்களின்  நினைவு தவிர்த்து

வேறெதுவும்  உயிரற்றதாய்,,,,/

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// உரையாடிக் கொள்ளவோ மறுக்கிறது மனம் // உண்மை...

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை

Thulasidharan V Thillaiakathu said...

வேதனையான மிக மிக மனதை பாதித்த நிகழ்வு.

துளசிதரன், கீதா

vimalanperali said...

வேதனையின் உச்சம்!

vimalanperali said...

மனம் பிசைந்த வேதனை!

vimalanperali said...

கோழைகளின் செயல் என எண்ணத் தோனுகிறதுதான்!