14 Feb 2019

கூடு விட்டு,,,,

அன்று காலையில் பற்றிகொண்ட பரபரப்பு மாலை வரை மாறவில்லை.

பற்றிக்கொண்டது பரபரப்பு மட்டும்தானா,இல்லை வேறு ஏதேனுமா என பிரித் தறிய முடியாத படிக்கு உள் மனம் மற்றும் வெளிமனத்தின் அறைகூவல்கள் மற்றும் படபடப்புகள்,

இருக்கட்டும் இருக்கட்டும் அப்படியே இருக்கட்டும் படபடப்பு பரபரப்பும் எனச் சொன்னவாறெ எதிர்ப்பட்டவர் இவனுக்கு அண்ணன் முறை வேணும்

ஆனால்இவன் நாக்கில் வசம்பு வைத்துத்தேய்த்தாலும் கூட அண்ணன் என்று கூப்பிட மாட்டான்,

டேய் அண்ணா,என்னடா அண்ணா எப்பிடிடா இருக்க, ரொம்பநாளா ஆளையே பாக்கமுடியலையே,ஓவர்அலைச்சலா,,,,எனகண்ணடிக்கும் போதே இவனைப் பார்க்கிற அவர் அடப்போடா அங்கிட்டு நானே அத்தலைஞ்சி போயி வந்துரு க்கேன்,

நூறு பக்கம் போயி ஐம்பது வேலை கூட ஆகலைங்கும்போது கொஞ்சம் வருத்தமாவும் மனவேதனையாவும் இருக்குடா என்பான்,

சரி வா வந்து டீ வாங்கிக்குடு என்கிற பேச்சில் நிற்கிறவன் வாய்க்குள்ளாக வே பழைய சினிமாப்பாடலை முனகிக்கொள்வான்,

பழையதுஎன்பது பேருக்குத்தான்,இவனது சாய்ஸ் எப்பொழுதும்இளையராஜா தான்,

வேலைக்காக ஆமத்தூர் செல்கிறவன் தினசரி அந்த தனியார் பேருந்தில்தான் ஏறுவான்.

காலை ஒன்பது மணிக்கு டயர் கௌடவுன் பஸ்டாப்பில் நிற்பவன் ஒன்பதரை க்கு வருகிற பஸ்ஸில்தான் ஏறுவான்.

அந்த பஸ்ஸிற்கு பெயரே பாட்டு பஸ்தான்.பஸ்ஸின் வெளி ஓரங்களில் பொடிப்பொடியான எல்,இ,டி லைட்டுகளின் வெளிச்சம் ஓடிக்கொண்டிருக்க பஸ்ஸின் உள்ளே இளையராஜா எல்லோரையும் இளைத்துக்கொண்டிருப்பார் இசையில்,இவனும் அந்தஜோதியில் கலந்துகொள்வான்.இளைவான். உடலும் மனதும் சந்தோஷமாகிப் போக/

அப்படியான சந்தோஷத்தின் உச்சமாய் பாடல்களை கேட்டவாறே பஸ்ஸிற்கு தன்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டே வருபவன் இறங்க வேண்டிய ஆமத்தூ ரை விட்டு அடுத்த ஊரில் இறங்குவான்.

இவன் விஷயத்தில் அப்படி இறங்குவதை வேறு மாதிரியாய் பார்த்தான், இவன் இறங்க வேண்டிய ஊர் ஆமத்தூரிலிருந்து பத்துகிலோதாண்டி/ பத்து கிலோ மீட்டருக்குள் நிறைய பாடல்களை கேட்கலாம்,மனம் முழுக்கவுமாய் பாவிப்பரவிய இசையில் நனைந்து மூழ்கி திளைக்கலாம்,

உடலும் மனமும் இசைபுகுந்த கூடாகி மெல்லியதாய் முளைத்த இறகுகளை விரித்து வானம் முழுவதுமாய் பறந்து விட்டு திரும்பவுமாய் பஸ்ஸின் உள்ளேஅமர்ந்துபயணிக்கலாம்என்கிற எண்ணத்தின் நீட்சியைக் கண்ட இவன் என்னடா அண்ணா என்னவிஷயம் பழைய படிக்கும் பாட்டு,,பஸ்ஸீ,,, பத்து கிலோ மீட்டர்,,,,மனசுக்கு மொளைச்ச றெக்கைன்னு,,,,நெனைப்பு வந்துருச்சா? என்கிற பேச்சின் கையைப் ற்றிக் கொண்டே டீக்கடையில் போய் நிற்பார்கள்.

லைட் ஸ்டார்ங்க் என்பதைத்தாண்டி குடிக்கிற டீயின் ஒவ்வொரு மிடறும் கொஞ்சம் இதமாயும் ருசியாயும் இருந்தால் போதும் எனச்சொல்வான்.

ஈர வாசனையை இன்னும் தனக்குள்ளாய் தக்க வைத்துக்கொண்டிருந்த தை மாதத்தின் ஈரம் உறையா நாளின் நகர்வாய் அன்று,

பஸ்ஸேறிய நிமிடங்களிலிருந்து இறங்கி வந்த இந்த நொடி வரை ஈரம் ஈரம் ஈரம் சுமந்தே காட்சிப்பட்ட மனிதர்களும் ,மண்ணும் இடங்களுமாய் காட்சிப் பட்டது.

காட்சிபட்ட இடங்களின் மனிதர்களையும் மண்ணையும் மண் சுமந்த ஈரத்தை யும் மொத்தமாய் அள்ளிக்கட்டிய மனதின் அவிழ்வை அள்ளி முடிய மனமில் லாமல் கூடவே கூட்டிக்கொண்டு வந்தது இப்பொழுது வரை பட்டுப்படர்ந்திரு ப்பதாய்/

பத்து மணியாகிவிட்ட போதும் கூட இன்னும் கொஞ்சம் லேசாய் குளிர்வது போல் பட அது உண்மைதானா என ருசுப்படுத்திக்கொள்ள மென் இளம் காட்சி கொண்ட தேநீரை சாப்பிட்டு விட்டு அடித்த குளிர்மட்டுப்பட அலுவலகத்திற் குள்ளாய் நுழைகிறான்/

நுழையும் பொழுது அலுவலக வாசலில் படர்ந்து பட்டு வரவேற்ற இளம் வெயில் இவன் மீது லேசாய் படர்ந்தும் முகம் திருப்பிகொண்டுமாய்,/

இவனைப்பார்த்ததும்வெயிலுக்கென்ன நாணம்எனத்தெரியவில்லை. நாணமா இல்லை அது அற்று வேறொதுவுமோ எனசொல்லத்தெரியா அளவுக்கு ஒன்று புரியாததாய் இருந்தது.

அதற்குக்காரணம் என்னவென சரியாகத் தெரியவில்லையானாலும் கூட பட ர்ந்திருந்த வெயில் இவன் மேனி பட்டு காதோரம் வந்து லேசாய் சொல்லிச் செல்கிறது இளம் காதலியின் கொஞ்சு மொழியைப் போல/

என்னஇதுஉன்னைப்பார்த்ததும்நாணம்கொண்டுவிட்டேன்எனமட்டும்நினைக்காதே, அப்படியாய் நாணம் கொண்டால் இந்த இடமும் நீயும் தாங்க மாட்டாய் என்கிற உயரிய எண்ணத்தில்தான் நாணம் கொள்ளாமல் கொஞ்ச்ம அசைவு காட்டிகொள்கிறேன்,ஞாபகம் கொள் என்ற வெயில் இயற்கையான என்னிடம் நாணம் அது இது என்று இதர இதரவாய் அர்த்தமில்லாமல் பேசாதே,,,என எச் சரித்தது போல் பட்ட வெயில் சொன்னது.

”சிறிது நேரம் எனது நிழலில் காய்ந்தால்த்தான் என்ன இப்பொழுது,,,?வேக வேகமாய் அவசரம் காட்டி அப்படியெல்லாம் ஓடி எதை சாதிக்கப் போகி றீர்கள்,

இயற்கை அனுப்பி வைத்திருக்கும் கால நிகழ்வின் காட்சித்தூதுவன் நான், வெள்ளுள்ளம் கொண்ட நான் மழையாய்,வெயிலாய், காற்றாய் இன்னும் இன்னுமான பலவற்றாய் காட்சிப்படும் போது அதன் நனைவில் காய்தலில், நிழலில் ,சுவாசங்களில் கொஞ்சம் ஆசுவாசித்துத் திரியுங்களேன் என செவி மடலோரமாய் உரைத்துச் சென்ற வெயில் சொல்லிச்சென்றதற்கு கட்டுப்பட்டு கையையையும் காலையும் உடலையும் மட்டுமல்ல மனதையும் கட்டுப் படுத்தி அங்கேயே சிறிது நின்று விட்டும்,உரைக்காமல் அடித்த வெயிலில் நனைந்து கொண்டும், சிறிதே அங்குமிங்குமாய் நகர்வு கொண்டு படம் காண் பித்த வெயிலிடம் சொல்லிக்கொண்டும் அலுவலகத்திற்குள் நுழைகிறான்,

வெறும் செங்கலும் சிமெண்டும் மட்டுமா அலுவலகம்,இல்லையை,அங்கு பணிபுரிபவர்கள், அவர்கள் சுமந்த கதைகள் அவர்களின் பாடு ,குடும்பம்,சுகம் துக்கம் ,பிள்ளைகள் அவர்களது படிப்பு இத்தியாதி இத்தியாதி தாண்டி அவர் களின் அன்றாடம் என்பதை சொல்லியும் உடன் பணி புரிபவர்களிடம் கொண் டிருக்கும் உயிர் துடிப்பான நட்பும் தோழமையும்,உறை கொண்டு ரத்தமும் சதையுமாய் காடிசிப்படுகிறதை எப்படி ஒற்றை வார்த்தையில் அதை கட்டிடம் என வரையறுத்து விடமுடியும்,,,?

அப்படியாய்வரையறுக்குள் உட்படாத ஆபீஸிற்குள் நுழைந்தபோதுபூத்துத் தெரிந்த முகங்களில் முதல் முகம் இவர்களின் நிழல் படர்வாய் உறை கொ ண்ட மனிதரின் நல் முகமாய் ஆகித் தெரிகிறது,

அவரைப்பார்த்ததுமாய்சொன்னவணக்கத்தின் ஈரம் வாஞ்சை படர்ந்து காணப் பட்டதாய்/

இவன் அவரை இதற்கு முன்னாய் ஓரிரு சந்தர்ப்பங்களில் ஓரிரு இடங்களில் ஓரிரு தடவையே பார்த்து அறிந்திருக்கிறான்,அவருடன் பணி புரிந்ததில்லை, அவர் பற்றி தெரிந்து கொண்டதில்லை,அவருடனான நட்பு,பேச்சு பழக்கம் உரையாடல் இன்னும் இன்னுமான எதுவுமே இவனுக்கு வாய்த்ததும் கைவர ப் பெற்றதும் இல்லை.

ஆனாலும் அவரது பெயரை சொன்ன மாத்திரத்தில் அவரது பெயரை கேட்ட கணத்தில் மனதில் ஓரமாய் ஓடோடி வந்து உட்கார்ந்து கொள்கிற மரியாதை தவிர்க்க இயலாததாகித் தெரிந்தது.

ஏன்அந்த மரியாதை,,இது வரை தன் வாழ்நாளில் அவரைப்பார்த்தது கூட இல் லையானாலும்கூடமானசீக குருவை தன்னுள் வரித்துக்கொண்ட ஏகலைவன் ஆகிப்போகிறான்.

(அதற்காக கட்டை விரலை எல்லாம் கேட்கக்கூடாது,,,?)

அந்த மரியாதையுடனும் மனம் கொண்ட அடக்கத்துடனுமாய் அவருக்கு வண க்கம் சொல்லி விட்டு ஓடோடிப்போய் இவனது இருக்கையில் அமர்ந்து பணி களை செய்ய ஆரம்பிக்கிறான்,

அது என்னவெனத்தெரியவில்லை ,பொதுவாகவே இத்தனை வருடங்கள் கடந் தும் கூட பணி என இருக்கையில் அமர்ந்து விட்டால் இவனது உடலில் வந்து அமர்ந்து கொள்கிற சின்னதான இயந்திரத்தை பிரித்து எடுத்து விட முடிய வில்லை.

இன்னமும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் அது போலான ஒரு இயந் திரம்இருக்கட்டும் கூடவே என பிரியப்பட்டிருக்கிறானே ஒழிய பிரித்து எடுக்க பிரியபட்டதில்லை இது நாள்வரை/

வேகம் கூட்டிய இயந்திரம் இவனை இயக்க இவன் தன் வேலையைப்பார்க்க என இருந்த அன்றைய நாளின் நகர்வினூடாய் காலை வேலை நகர்கிறது மெல்ல மெல்ல/

நகரட்டுமே மெதுவாக,அசையாமல் ஆடாமல் அசையாமல் இருந்தால் நல்ல துதானே,வாடிக்கையாளர்கள்,அவர் தம் மனது அவர்கள் சுமந்து வருகிற கோரி க்கைகள், அவரின் தேவைகள் மற்றும் இதர இதரவையான எல்லாவற்றை யும் நிறைவேற்ற மெதுவான நகர்தலே ஏற்றது,

அந்த மெதுவிலும் கூட பிரச்சனைகள்சில தலைதூக்கிக்கொண்டு வந்து விடு கிறதுதான்,

வந்தது வந்ததுதான் என விட்டு விடாமல் பிரச்சனை எதுவான பொழுதிலும் சரி,உடனே போய் தலையிடுவான்,

அது போலான தலையீடல்களும் முறையிடல்களும் இவனில் உறைபட்டு காணக்கிடைக்கிற பொழுதுகளிலும் கூட இவன் தலையீடு நின்றதே இல்லை இது நாள்வரை./

நிற்காத தலையீடுகளை தலை தாங்கி சுமந்தும் கழுத்து வலிக்க ஏற்றுக் கொண்டுமாய் இருந்த அன்றாடங்களில் இன்றும் ஒன்றாய் ஆகித்தெரிகிறது.

காலை நகன்று மதியம் வந்து உறை கொண்டு மாலை பூப்பு கொண்டு நிற்கி றது,

காலை மதியம் மாலை எல்லா நாட்களிலும் வருவதுதானே,இன்றைக்கு மட் டும் வந்தாய் பெரியதாய் காட்சிப்படுத்தி எழுதாவிட்டால் என்ன எனக் கேட்ட வர்களின்காதோரமாயும்,மனதோரமாயும்போய்இவன்சொல்லிச் செல்கிறான்,

எங்களின் முன்னோடியும்,வழிகாட்டியும் பெரு மதிப்பிற்கும் அன்பிற்கும் பாசத்திற்கும்உரிய எங்களின் அன்புள்ளம் இன்று பணி ஓய்வு பெறுகிறார்,என/

அவரது பணி ஓய்விற்கு மரியாதை செலுத்த அவர் சார்ந்திருந்த தொழிற்சங்க த்திலிருந்து வந்தார்கள்.

அவர்கள் போர்த்திய பொன்னாடையும் மரியாதையும் அவர் மீது அவர்கள் வைத்திருந்த மரியாதைக்கு கட்டியம் கூறிச் சென்றது,

அடுத்ததாக அவரது உயரதிகாரி வந்திருந்து வாழ்த்தி விட்டுச்சென்றது அவர் மீதான மரியாதையை இன்னமும் கொஞ்சம் கூட்டி விட்டு சென்றது.

சரி அவர்கள் அனைவரும் வந்தார்கள் வாழ்த்தினார்கள்,சென்றார்கள்,

அடர்ந்து பறந்திருந்திருந்த ஆலமரமாய் காட்சி கொண்ட இவனது அலுலக த்தின் ஒரு மரத்துப்பறவைகள் செய்ய போவது என்ன என்கிற மெகா சைஸ் கேள்வி ஒன்று முன்னகர்ந்து வந்து இவன்முன்னாய் நின்ற பொழுது இல்லை இல்லை உங்களின் மனதிற்குள்ளாய் வந்து குடிகொண்டுள்ள கேள்வியைப் போல் அல்லாமல் சிறியதான ஒரு விழாவிற்குரிய பாங்குடனும் ஏற்பாடு டனும் எல்லாம் செய்து முடித்து விட்டோம்,

ஒருமித்த கருத்துடன் கரம் கோர்த்தும் மனம் கோர்த்தும் நாங்கள் அனை வருமாய் செயல் பட்டு ஒரு உருவை கொண்டு வந்து நிறுவியிருக்கிறோம், அதுதான் பணி நிறைவு விழா எனும் ஆகப் பெரிய ஒன்று/

அந்த ஆகப்பெரிய ஒன்று எங்களது உயிரிலும் உணர்விலும் கலந்து நடந்து முடிந்து விட்டது கிட்டத்தட்ட என இவனது அருகில் இருந்த இளநிலை அலுவலர் சொல்கிறார்,

அதையே முழு அலுவலகமும் வழி மொழிந்து கொண்டிருக்கும் பொழுது மா லை அலுவலகம் முடிந்து அருகிலிருக்கிற அலுவகலக்கிளைகளிருந்தும், அலு வலக வாடிக்கையாளர்களும் குழுக்களுமாய் வந்து சேர்ந்தார்கள், பணி ஓய்வு விழாவை சிறப்பிக்க/

பொதுவாகவே பணி ஓய்வென்பது செய்து கொண்டிருக்கிற பணிக்கா,இல்லை பணிசெய்யச்சொல்லி கட்டளை இடுகிற மனதிற்கா என்கிற கேள்வியை உள்ளடக்கி பணி ஓய்வு விழாவை சிறப்பிக்க வந்திருந்தவர்களுக்கு ஓய்வறி யா சிந்தனை மனம் கொண்ட அவர் இதுநாள் வரை தான் சார்ந்திருந்த நிறுவ னத்திற்காய் உழைத்த பணிக்குத்தான் ஓய்வே தவிர்த்து அவரது மனதிற்க ல்ல,,,,,என இவனது அலுவலக ஊழியர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறி முடிக்க அன்புள்ளம் கொண்ட இவனது மேலாளரின் பணி நிறைவு விழா இனிதாக முடிகிறது, வாழ்க வளமுடன் என்கிற அனைவரின் வாழ்த் துடனும்,,,/

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனம் தேறுவதற்கு சிறிது நாளாகும்...

Thulasidharan V Thillaiakathu said...

அவர் இதுநாள் வரை தான் சார்ந்திருந்த நிறுவ னத்திற்காய் உழைத்த பணிக்குத்தான் ஓய்வே தவிர்த்து அவரது மனதிற்க ல்ல,,,//

இப்படியான வரிகள் ஒரு சிலருக்குத்தான் பொருந்துமோ...அருமை

துளசிதரன், கீதா

வலிப்போக்கன் said...

ஏகலைவன் என்றாலே..கட்டை விரல்தானே....

vimalanperali said...

வணக்கம் சார்,நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக,,/

vimalanperali said...

அன்பும் பிரியமும்/ஒரு சிலருக்குமட்டுமே
பொறுத்தமான வார்த்தைகள் என்பது
தாண்டி நில்லாதது மனது என்பதுதானே
காண்கிற உண்மையாய்,,,/

vimalanperali said...

கட்டை விரல் கேட்டவர்களின் தாகம்
இன்னும் இன்னுமாய் அடங்கவில்லை போலும்/