15 Mar 2019

அம்பிட்டு,,,,

வழக்கமாகச்செல்கிறபஸ்தான்.அருளானந்தம்ட்ரான்ஸ்போர்ட்,காலைஒன்பது மணி டயம்,டயமறிந்து அதன் அருமை புரிந்து அந்த பஸ்ஸில் ஏறுபவர்கள் ஏறலாம்,இல்லையா அடுத்த வண்டிதான்,வந்தால் வாருங்கள் இல்லையா போங்கள் ,என்கிற சொல்லாக்கத்தை உள்கட்டி வைத்தும் அதை செயலளவில் காண்பித்துமாய் இந்த எழுத்து உருக்கொள்கிற நிமிடம் வரை பாட்டுடனும் பயணிகளுடனுமாய் ஓடிக்கொண்டிருக்கிற பஸ்,

பஸ்ஸிற்காய் காத்திருக்கிற நிமிடங்கள் அழகானவை என்று கூடச்சொல்ல லாம்,இல்லையென்றால் ரம்யம் வைத்த நிமிடங்கள் அது என உருக்கொள்ள வைக்கலாம்,பட படர்கிற மனதுடன் கைக்கடிகாரத்தைப்பார்த்துக்கொண்டே அருகில் இருப்பவரிடம் பஸ் போய் விட்டதா எனக்கேட்கிற பொழுதுகளையும் அது அல்லாது மூன்று இடங்களில் காத்திருந்து ஏற ஸ்டாப் வைத்து பஸ் வரும் வரை காத்திருக்கிற நிமிடங்களையும் அது வராதவரை அங்குள்ள டீக்கடைகள் ஏதாவது ஒன்றில் இளஞ்சூட்டுடன் டீகுடித்து விட்டு பஸ்ஸே றலாம் என மனம் துளிர்க்கிற ஆசையையும் அவ்வளவு லேசில்புறந்தள்ளி விட முடிவதில்லைதான்.

ஆனால் பஸ் ஸாப்பில் இப்பொழுதெல்லாம் யாரும் பேசுவதில்லை,கையகல பிளாஸ்டிக் போர்த்திய டப்பா போல் இருக்கிற செல்போன் ஒன்றை வைத்துக் கொண்டு அதில் சமையல் செய்வது தவிர்த்து எல்லாம் செய்து விடுகிறா ர்கள்,அவ்வளவு பெரிய விஞ்ஞான சாதனத்தின் பயன் குறுகிய அளவிலாய் அவர்களின் கைக்குள்ளாய் முடங்கிப்போகிறதுதான்,

அருகில் இருக்கும் மனிதர்களின் முகம் பார்க்க மறுத்து,பேச மறுத்து,சிரிக்க மறுத்து,,,இன்னும் இன்னுமாய் ஸ்னேகம்,அன்பு,பாசம்,வாஞ்சை சக மனிதர் கள் மீதான மதிப்பு எல்லாம் மறுத்தும் மறந்துமாய் செல்போனே உலக மாய் பஸ் வரும்வரை அதை கையில் வைத்து பார்த்துக் கொண்டும், பேசிக் கொண் டும்விளையாடிக்கொண்டும்பாட்டுக்கேட்டுக்கொண்டும்இன்னும் இன்னுமான ஏதேதோ செய்து கொண்டுமாய் தான் நிற்கிற பரப்பை நிறைக்கிறவர்களாய் இருக்கிறார்களே ஒழிய அருகில் இருப்பவர்களிடம் மறந்தும் கூட பேசுவதில் லை,இவர்கள் பேசாதது மட்டுமல்லாமல் யாராவது வந்து பேசினால் ஏதோ ஒரு மாதிரியாய் பார்க்கிறார்கள்,

ஒரு இடத்திற்குச் செல்வது எப்படி என அருகில் அடந்து செல்பவர்களிடம் கேட்காமல் உடன் பஸ்ஸில் பயணிக்கிறவர்களிடம் கேட்க மறுத்து செல் போன் மேப்பில் தேடிகண்டு பிடிக்கிறவர்களாய் இருக்கிறவர்கள் என்ன பேசி விடுவார்கள் பெரிதாய்,அப்படியே தப்பித்தவறி பேசினாலும் கூட என்ன படம் என்ன பாட்டு என்ன ஆப்,,,இப்படி இப்படித்தான் அவர்களது பேச்சின் எல்லை சுருங்கி நிற்கிறதாய் தெரிகிறது,

வளர்ச்சிக்கான விஞ்ஞான சாதனம் வளர்ச்சியற்றுபோய் விட்டதோ என எண்ணத்தோணுகிற அளவிற்கு அவர்களது நடவடிக்கை இருக்கும் ,இதில் கூடவே காதில் மாட்டி தொங்கிக்கொண்டிருக்கும் வயர் வேறு,,,/

இதையெல்லாம் பார்க்கிற இவன் யாரிடமும் எதுவும் கேட்காமல் கைக் கடி காரத்தைப்பார்த்தவாறே டீக்கடையில் போய் தஞ்சமடைந்து விடுவான்,

கைபற்றிய கண்ணாடிகிளாஸின் கொஞ்சமாய் இருக்கிற டீயின் மிடறுகள் நாவின் சுவையறும்புகள் தொட்டு கொஞ்சம் கொஞ்சமாய் வாய்க்குள் பயணிக் கிற கணம் சொர்ண நிமிடங்களாய் இருக்கும்,

நகர்கிற சொர்ணங்களும் அது பிடித்த கையும் கை சொல்லி ஏற்றிய மனதும் ஒரு சேர கை கோர்த்து நிற்கிர நேரம் பஸ் வந்து விடும்,இவனும் ஏறிப்போய் விடுவான்,

முதல் ஸ்டாப்பில் பஸ்ஸேறக்காத்திருக்கிற நேரம் கண்டிப்பாய் ஒரு டீக் கிடைத்து விடுவதுண்டு,

ஒன்று இவனது சொந்தக்காசில் குடிப்பான்,அல்லது பூமி பிளந்து முளைத்தது போல் தற்செயலாய் வந்து சேர்ந்து விடுகிற நண்பர்கள் தோழர்கள் யாரையா வது சேர்த்துக்கொண்டு கூடுதலாய் கொஞ்சம் காசு செழவழித்து குடித்து விட்டு வருவான்,

நண்பர்கள் தோழர்கள் எப்பொழுதும் பூமி பிளந்து முளைப்பதில்லை,என்றாவ து ஒரு நாளில் இவனே எதிர்பாராத கணத்தில் வந்து நிற்பார்கள்,

அந்நேரம் கையில் காசு கூட இருப்பதில்லை,வழக்கமாக குடிக்கிற குருசாமி கடைதான் என்றாலும் கூட அவரிடம் கடன் சொல்லி டீ க்குடிக்கிர அலவு இன்னும் தைரியம் இருந்ததில்ல்லை,

அட போங்க சார் நீங்க ஒரு பக்கம்,யார் யாரோ வர்றாங்க, போறாங்க, டீக்குடி க்கிறாங்க,அத்தனைபேரும் காசி குடுத்தா டீக்குடிக்கிறான்னு நெனைக்கிறீங்க, இல்லை சார்,இங்க பாருங்க கணக்கு நோட்டு ,இது போல இண்ணொன்னு கடைக்குள்ள அலமாரியில இருக்கு ,இதுல வருசக்கணக்குல பெண்டிங்க் கெடக்குற கணக்கெல்லாம் சேர்த்தி.,

அப்படி வருஷம் மாசமுன்னு கணக்கு நோட்டுல துட்டு எழுதி வச்சிட்டு போற வுங்களுக்கு மத்தியில ஏதோ ரெண்டு இல்ல மூணு டீ மிஞ்சிப்போன அதோட சேத்து ரெண்டுமூணு வடை,இதகணக்குலசொல்லி சாப்புடஇவ்வளவு சங்கடப் பட்டா எப்பிடி சார்,

கடன் குடுக்காம எங்களுக்கு கடையும் ஓடாது,பை நெறைய காசி வச்சிருந் தாலும் கடன் கேக்காம ஏங் கடைக்கி வர்ர கஷ்டமர்க சிலருக்கு தூக்கமும் வராது,என டீகடைக்காரர் சொல்கிற கணங்களில் இவனுக்குக்கொஞ்சம் பெரு மையாகவும் நெஞ்சு நிமிர்வாகவும் இருக்கும்,

அந்த நெஞ்சு நிமிர்வுக்காகவும் ,பெருமைக்காகவும் ஊரெல்லாம் கடன் பட்டுக் கொண்டு திரிய முடியாதுதான் என இறுக்கட்டிய மனதுடன் இன்று வரை பயணித்துக்கொண்டிருக்கிறான்.

முதல் பஸ்டாப்பில் சரி ,இரண்டாவது மூன்றாவது ஸ்டாப்பில் இருக்கிற கடைகளில் நல்லதான கடைகளை தேர்தெடுத்து டீக்குடிப்பது இவனது வழக் கம்,நல்லதான,,,,,என்றால் இவன் வழக்கில் நா மணக்கிற அல்லது கொஞ்ச மேனும் சுவையான டீக்கிடைக்கிற கடைகள் நல்ல கடைகள் என அர்த்தப் படுத்திக் கொள்வான்,

வீட்டிலிருந்து கிளம்பி வருகிற நேரம் கொஞ்சம் அனுமதித்தால் இரண்டாவது அல்லது மூன்றாவது ஸ்டாப்பில் போய் பஸ்ஸேறிக்கொள்வான்,

இல்லையெனில் முதல் பஸ்டாப்,குருசாமிகடை டீ,,,,

இவனுக்காய்குருசாமி கடைகள் பஸ்டாப்தோறுமாய் காத்துக்கிடக்கிறதுதான். நாவின் சுவையறும்புகளில் டியின் ஒவ்வொரு மிடறுகளூம் படர்ந்து பரவ,,,/

எந்த மழை,எந்த வெயில் எந்த காற்று என சீதோஷ்ண நிலைகளில் எந்த மாற்றம் வந்த போதும் கூட தன் நிலையில் எந்த மாற்றமும் கொள்ளாது ஓடிக்கொண்டிருக்கிற பஸ்ஸாய் அது/

எந்த பருவ நிலை மாற்றத்தின் போதும் பஸ்ஸின் மேல்ச்சட்டையான அதன் டிசைன்களும் பஸ்ஸின் வெளிப்புறம் முழுவதுமாய் படர்ந்து பட்டு பரவியிரு க்கிற பூக்களின் வாடாத தோற்றமும் மலர்தலும் மண் பிளந்து துளிர்த்து வளர் ந்து,கிளை பரப்பி இலை வைத்து பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் நிறைந் திருக்கிற இளம் மரத்தின் படரிலம் கொடிகளும் இலைதளைகளும் அதன் மேனி முழுவதுமாய் படர்ந்து பட்டு வாசனை நிரப்பி வருவது போல் கண்ணுக் குளிர்ச்சியாயும் பசுமை தாங்கியுமாய் வருகிற பஸ்ஸை பார்க்கிற போது யாருக்குத்தான் அந்த பஸ்ஸேற ஆசை வராது,

கூடவே அந்த பஸ்ஸினுள்ளாய் ஒலிக்கிற பாடல்களை கேட்கிற போது,,,,? தினமுமாய் மாறிக்கொண்டிருக்கிற டிரைவர் கண்டக்டர்களுக்குத்தகுந்தாற்ப் போல காலை நேரம் பஸ்ஸிற்குள்ளாய் ஒலிக்கிற பாடல்கள் மாறும்,

இவன் கூட கேட்பதுண்டு டிக்கெட் வாங்க வருகிற பையனிடம்,என்ன இன் னைக்கி இளையராஜா சாரை யெறக்கி விட்டுடீங்களா,வேற பாட்டு ஓடிக்கிட்டு இருக்கு. என/

ஓங்கி ஒலிக்கிற இசையின் லயங்கள் மனம் தாலாட்ட இறங்க வேண்டிய ஊர் வரை இவன் இசை ரசனைக்கு ஒரு மெல்லிய தாலாட்டை பஸ் வழங்கி விட்டுப் போகும் தற்சமயமாய்,

வாழ்நாளில் தற்சமயமும்,தற்செயலும் மிகவும் முக்கியம் வாய்ந்த கணங்க ளாய்/

”அத ஏங்கேக்குறீங்க சார்,டிரைவரு படுத்துற பாடு அப்பிடி,என்ன செய்ய சொல் லுங்க,”என்பார்,

கண்டக்டர் என்றால் நேரடி கண்டக்டர் இல்லை அவர்/

இவன் மகனைவிட நான்கு அல்லது ஐந்து வயது அதிகமாய் இருக் கும் அவர் செக்கர் அல்லது துணை கண்டக்டர் என்கிற நிலையில் அந்த பஸ்ஸில் இருக் கிறார்,

கூட்டமான நேரத்தில் கண்டக்டர் பஸ்ஸின் முன்புறம் நின்றாரென்றால் பின் புறம் இருக்கிறவர்களிடம் எந்த ஊர் எனக்கேட்டு அதற்கான டிக்கெட் காசை வாங்கி வைத்துக்கொள்வார்,கையில் இருக்கும் ஒரு துண்டு வெள்ளைப் பேப் பரில் இந்த ஊர் இத்தனை டிக்கெட் இந்த ஊர் இத்தனை டிக்கெட் என குறித் து வைத்துக்கொண்டு அவரவர்களுக்கு மீதம் தர வேண்டிய சில்லறையை மனக் கணக்காய் வைத்துக்கொண்டு கண்டக்டரை எட்டித்தொட்டு டிக்கெட் வாங்கிக் கொடுப்பார்,

”எப்பிடித்தம்பி காசு மீதம் தரும் போது யாருக்கும்தராம தப்பீறாதா எனக் கேட் டால் அது தப்பும்தான் சார்,இது மாதிரி சமயத்துல கையில் இருக்குற ஏங் சொந்தக்காசும் போயிரும் சார்,இதுபோல எத்தனையோ மொறைநடந்துருக்கு சார்,

”வேணுமுன்னே சில பேரு ஒரு ரூபா தர வேண்டிய யெடத்துல ரெண்டு ரூபா தரணுமுன்னு மல்லுகு நிப்பாங்க,சில பேரு ஒரு ரூவா,ரெண்டு ரூவாய ப்போயி என்னத்த கேட்டுக்கிட்டுன்னு விட்டுட்டுப் போயிருவாங்க” என்பவர் கருப்பட்டிபானையில கைய விட்ட கதைதான் சார் ,சமயத்துல ஈ எறும்பு கடிக்கும்,, சமயத்துல கை இனிக்கும்,எல்லாத்தையும் ஏத்துக்குற வேண்டியது தான். அதுதான் சார் கணக்கு” என்பார்.

இதுல பாத்தீங்கன்னா சமயத்துல எதிர் பாக்காத வம்பெல்லாம் வந்து நிக்கும், போன மாசம் பாத்தீங்கன்னா ஒருத்தருக்கு ரெண்டு ரூபா குடுக்க மறந்துட் டேன்,வேணுமுன்னே நான் செய்யல உள்ளபடிக்கும் அன்னைக்கி இருந்த கூட்டத்துல மறந்துட்டேன், பஸ்ஸீல அந்தகடைசிக்கும் இந்தக்கடைசிக்குமா ஓடிக்கிட்டுத்திரியிறேன். எனக்கு மதி பூராம் பஸ்ஸில இருக்குற யாரும் டிக் கெட் எடுக்காம யெறங்கீறக்கூடாதுங்குறதுதான்,ஆனா அவரு மறக்காம ஞாப கம் வச்சி கேட்டு வாங்கிட்டாரு,நானும் ஸார் சார் ,குடுக்க மறந்து போச்சி ன்னு சொல்லிக்கிட்டே காசக்குடுத்துட்டு நகரும் போது கண்டமானிக்கி பேச ஆரம்பிச்சிட்டாரு,எனக்குன்னாரொம்பதர்மசங்கடமாப்போச்சி,திரும்பவும்அவரு கிட்டப்போயி சார் மன்னிச்சிக்கிடுங்க, கூட்டத்துல குடுக்க மறந்து போயிட் டேன்,அதுக்காக இப்பிடியெல்லாம் பேசாதீங்க சார்ன்னு சொல்லியும் கேக்காம ஒழுக்கம்,படிப்பு அது இதுன்னு பேச ஆரம்பிச்சிட்டாரு,டிரைவர் பஸ்ஸ நிறுத்தீட்டு வந்து சமாதானம் சொல்றாரு கேக்க மாட்டேங்குறாரு, பஸ்ஸீல வர்றவங்கள்ல சில பேரு சொல்றாங்க ,கேக்காம குரல் உயர்த்தி பேசிக்கிட்டே இருக்காரு,சார் ஒங்க பையன் வயசு அவனுக்கு அவந்தான் சொல்றான்ல தெரியாம நடந்து போச்சின்னு,அத்தோட விடாம ஏங் சார் பேசிக்கிட்டே இருக்கீங்கன்னு சொல்லியும் கூட கேக்காம பேசிக்கிட்டே வந்த அவரு அன்னைக்கி சாயங்காலமே போயி எங்க ஓனர்கிட்டபோயி சொல்லீட் டாரு,

“ஓனரு இவரு சொன்னதையெல்லாம் கேட்டுக்கிட்டு,,,,,,,ஐயா நடந்தது தப்புத் தான் அது ரெண்டு ருபாய்ன்னாலும் சரி ரெண்டாயிரமானலும் சரி,நடந்த தப்புக்கு மனசு வருந்தி மன்னிப்புக் கேட்டுருக்குறான் அந்த பையன்,அத அப்பிடியே விட்டுட்டுப் போகாம இங்க வரைக்கும் தூக்கீட்டு ஏங்கிட்ட வந்து கம்ளெயிண்ட்டுக்கு நின்னா சரியாப்போச்சா,,?

”ஏன்யா நான் தெரியாமத்தான் கேக்குறேன்,அப்பிடி என்னைய பெரிசா தப்புப் பண்ணீட்டான் அந்தப்பையன்,குடுக்க மறந்த காச மன்னிப்புக்கேட்டுட்டு திரும் பக் குடுத்துருக்கான்,அந்தமனசு அந்த வயசுல அவனுக்கு வாய்ச்சதே பெரிய விஷயம்,அத அவன் செதற விடாம கட்டிக் காப்பாத்தி வச்சிக்கிட்டு ஓங் கிட்ட வந்து மன்னிப்புக்கேட்டுட்டே தர மறந்து போன ரூபாயக் குடுத்துருக் கான் பாருங்க,அது பெருசில்லையா,அத விட்டுட்டு பஸ்ஸீ நெறைஞ்ச கூட்டத்துல அவன அம்மணமாய் நிறுத்துன மாதிரி நிறுத்தீருக்கேங்களேன்யா, கொஞ்சம் கூடமன சாட்சி இல்லையாயா ஒங்களுக்கெல்லாம்,,,?

நீங்க நெனைக்கிற மாதிரி உண்மையிலேயே அந்தப்பையன் ஓங்கிட்ட காசக் குடுக்கக்கூடாதுன்னு நெனைச்சிருந்தான்னு வையிங்களேன்,நீங்க தலை கீழா நின்னிருந்தாலும் அன்னைக்கி ஒங்க ரெண்டு ரூபா ஒங்களுக்குக் கெடச்சிரு க்காது பாத்துக்கங்க,அவன் நல்ல ஒழுக்கமானவனா இருக்கப்போயி ஓங் காச ஓங்கிட்ட சேத்துட்டு மன்னிப்பும் கேட்டுருக்கான்,

நானும் பஸ்ஸீல கண்டக்டரா இருந்துதான் இந்த மொதலாளி நாற்காலியில ஒக்காந்துருக்கேன்,அதுனால யாரு யாரு என்னென்ன செய்வாங்ன்னு எனக்கு ம் தெரியும்,

எங்க ஒங்க மனசத்தொட்டுச்சொல்லுங்க,பஸ்ஸீல போகும் போது ஒரு தட வையாவது டிக்கெட் எடுக்காம போயிருக்குறீங்களா,,,,?

”ஒண்ணு டிக்கெட் எடுக்க மறந்து போயி தூங்கீருப்பீங்க,இல்லை வேற ஏதா வது யோசைனையில இருந்துட்டு யெறங்கப்போற யெடம் வந்ததும் கொஞ் சம் மனச்சங்கடத்தோட டிக்கெட் எடுத்துருபீங்க இல்லையா,ஒரு வழியில பாத்தாபையன் செஞ்ச செயலுக்கும் ஒங்க செயலுக்கும் என்ன பெரிசா வித்தி யாசம் இருக்கு சொல்லுங்க”ன்னு அவர அனுப்பி வச்சாரு ஓனரு,,,/,என்றார் கண்டக்டர்/

10 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வேணுமுன்னே சில பேரு ஒரு ரூபா தர வேண்டிய யெடத்துல ரெண்டு ரூபா தரணுமுன்னு மல்லுகு நிப்பாங்க,சில பேரு ஒரு ரூவா,ரெண்டு ரூவாய ப்போயி என்னத்த கேட்டுக்கிட்டுன்னு விட்டுட்டுப் போயிருவாங்க”

உண்மை
உண்மை

திண்டுக்கல் தனபாலன் said...

கண்டக்டர் நிலைமை சிரமம் தான்...

வெங்கட் நாகராஜ் said...

கண்டக்டர் - அவருக்குத் தான் எத்தனை எத்தனை அனுபவங்கள்...

ஸ்ரீராம். said...

பேருந்தில் ஏற்படும் அனுபவங்கள்..!

vimalanperali said...

நன்றியும் அன்பும்,,,./

vimalanperali said...

அனுபங்களின் பாடங்கள்,,,/

vimalanperali said...

வணக்கமும் நன்றியும் அன்பும் பிரியமும்,,,/

vimalanperali said...

ஆனால் அந்த சிரமர்கள் இல்லாமல்
இயக்கம் இல்லை எதிலும்,,./

Kasthuri Rengan said...

வணக்கம்
அருமையான பதிவு

vimalanperali said...

அன்பும் பிரியமும்!