7 May 2019

மனம் பூத்த அஞ்சலி,,,,,

நேற்று இரவே தெரிந்து போகிறது விஷயம்,வெப்பம்பூத்த வெளிகளில் இரவெ ன்ன பகலென்ன என பிடிவாதம் காட்டி தன் நிலையிலிருந்து சற்றும் பிறழா மலும் பின் வாங்காமலும் தன்னை தக்க வைத்துக்கொண்டிருந்ததாய்/

வெயில்வெயில்வெயில்,,,,,வெப்பம்,வெப்பம்,வெப்பம்,,,,,,தாங்கிக்கொள்ளமுடிய வில் லை,மடக்கிக் கட்டப்பட்ட கட்டிடங்களுக்குள்ளாய் அமர்ந்திருப்பதும் வேலை செய்வதும் கொடுமையுடன் முடிச்சுப்போட்டு வைத்தது போல் இருக் கிறது,

அலுவலகத்தில் சேர் டேபிள்,பேன் எதைத்தொட்டாலும் சுடுகிறது,தண்ணீர் இருக்கிற மினரல் வாட்டர் கேன் கூட சுடுகிறது.

மண்பானை கொஞ்சம் பரவாயில்லை,இருக்கிற சூழல்தானே மனிதனை தீர்மானிக்கிறது.

தகித்துக்கிடக்கிற வெப்பம் போலவே அலுவலகத்திற்கு வந்து செல்கிற மனி தர்களும் உள்ளுக்குள் வேலை செய்கிறவர்களுமாய் காணக் கிடைக்கிறார்கள் தான். 

நாளெல்லாம் வெயிலைக்குடித்தகட்டிடங்கள் பொழுது ஆக,ஆக தன் ஆசை தீர மட்டிலுமாய் வெப்பத்தை இறக்கி வைக்கிறது கட்டிடத்தின் உள் இருக்கிற மனிதர்கள் மீது,,/

அவர்களும் என்னதான் செய்வார்கள்,பாவம்,இன்னும் ஒரு மாதத்திற்கு இப் படித்தான் இருக்கும் என்கிறார் நண்பர் ஒருவர்,

”ஆமாம்,அக்னிநட்சத்திரம்ஆரம்பிச்சிருச்சி,இன்னைக்கிலருந்துபதினாலுநாளு கணக்குப்பண்ணிக்க,முன்னேழு,பின்னேழு,,,இதுல முன்னேழு கூட கொஞ் சம் தாங்கிறலாம்,ஆனா பின்னேழு இதவிட கொஞ்சம் உக்கிரம் காட்டி இருக் கும், அந்த உக்கிரத்தோட தன் வேலைய முடிச்சோம்,வந்த வழி போனோ முன்னு வைகாசி பதினஞ்சி தேதிக்கு மேல காத்துக்கு வழி விட்டு வெலகிப் போயிருச்சின்னா ஒண்ணும் தெரியாது,ஆனா பின்னேழுக்கப் புறமும் நீடிச் சிச்சின்னு வையி,திண்டாட்டம்தான் நம்ம பாடு தெரிஞ்சிக்க என்பார் சிரித்துக் கொண்டே,,/

எப்பிடி ஒன்னால எதுக்கெடுத்தாலும் சிரிக்க முடியுது,எனக்கேட்டதும் முன்பு ஒருநாள் ஒரு மழை நாளன்று அதிகாலை டீக்கடையில் பார்த்தவர் ஞாபகத் திற்கு வருகிறார்,

அவர் ஒரு பேச்சு பேசுவதற்கு முன் பத்து தடவையாவது சிரித்து விடுவார், வாங்கிய டீ கிளாஸ் கையில் இருக்க தொடர்கிற அல்லது ஆரம்பிக்கிற அவ ரது பேச்சு அவரையும் அவரை சுற்றி உள்ளவர்களையும் கலகலப்பாக்கி விடும்.

மூச்சுக்கு முன்னூறு தடவை சிரிக்கக்குடுத்து வச்சிருக்க ஒன்னேட மனசு ரொம்ப அபூர்வமப்பா அது லேசுக்குள்ள யாருக்கும் வாய்க்காது,,,என கடைக்கு வருகிற பெரியவர் யாராவது சொல்லும் போதுதான் அவரது சிரிப்பின் அருமை சுற்றி நிற்கிற எல்லோருக்கும் பிடிபடுவதாக/

சாமி டீகடைக்கு நேர் எதிராகத்தான் இறங்கினான்,அங்குதான் பஸ் நிற்கிறது இப்பொழுதெல்லாம்,பஸ்டாப் எனப்பார்த்தால் இன்னும் சிறிது தூரம் போய் தவிட்டுக்கடைக்கு எதிர்த்தாற்போலத்தான் நிற்க வேண்டும்.ஆனால் அங்கு நிற்பது கொஞ்சம் இடைஞ்சலுக்கு உள்ளானதாகவே/

சாலையின் இரண்டு ஓரத்திலும் எதிரும் புதிருமாக காவல் துறையினர் நிறுத் தி வைத்திருந்த இரும்பு டைவர்ட்டர்களை தாண்டி வந்து நிறுத்தும் போது சாலை கொஞ்சம் இடஞ்சலாகவும் அந்த இடம் பஸ்கள் நிறுத்தத்தோது இல் லாமலுமாய் தெரிகிறது.

சென்ற வாரம் மாலை நேரமாய் பஸ்ஸிலிருந்து இறங்கிய வயதான மூதா ட்டி ஒருவரை பின்னால் வந்த இரு சக்கர வாகன ஓட்டி லேசாய் இடித்துத் தள்ளி விட்டு விட கீழே விழுந்த மூதாட்டி சிறிது நேரத்தில் மூச்சுப்பேச்சு இல்லாமல் ஆகிப்போனார்,எவ்வளவுதான் தண்ணீர் தெளித்து எழுப்பப் பார்த் தும் முடிய வில்லை,உடனே பக்கத்திலிருந்தமருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு போன தும் கண் விழித்திருக்கிறார் டாக்டரின் வைத்தியத்தால், மூதாட்டியின் உடன் வந்தவர் பிழித்தது மறு பிழைப்பு என்றவாறு சென்று கொண்டிருந்தார் மூதாட் டியைக்கூட்டிக்கொண்டுஅன்றிலிருந்து பஸ்ஸை அங்கு நிறுத்துவதில்லை. அதனால் இங்கேயே இறங்கிவிடப்படுகிறார்கள் இந்த நிறுத்தத்தின் பயணிகள்.

அப்பொழுதுதான் வந்திருந்தான் வீட்டிற்குள்ளாய்,,,

அமானுஷ்ய அமைதி கொண்டதாகவெல்லாம் இல்லை இப்பொழுது வீடுகள், அது நல்லதும் இல்லை,

கைகால் முளைத்து புஷ்பித்த இளம் பூக்களாய் காட்சிப் படுகிற பிள்ளைகள் இருக்கிற வீடுகள் ஏன் அமானுஷயம் காக்க வேண்டும்,,?

”பூத்துக் கெடக்குற பூச்செடிக தன் இஷ்டத்துக்கு தன்னைபோல நகர்ந்து திரிய ட்டுமேப்பா, எதுக்குப் போட்டுக்கிட்டு அதப்போயி,யெடைஞ்சல் பண்ணிக்கி ட்டு, பாவமில்லையா அது,,?”என்கிற பேச்சு ஊடுபாவாய் நடமாடித்திரிகிற நாட்களில் மையம் கொண்ட புயலாய் இருப்பு கொண்ட வீடாய் வீடு துள்ளல் கட்டிக் கொள்ளும்,

கொஞ்சம் தாட் பூட்,தக்கா புக்காவெனவே இருக்கட்டுமே இப்பொழுது என்ன கெட்டுவிடப்போகிறது,

விகசித்து சிரிக்கிற பிள்ளைகளை சிரிக்க விடாமலும்,மனம் நொந்து அழுகிற பிள்ளைகளை அழ விடாமலும்,ரத்தமும் சதையும் உயிரும் உடலுமாய் காட்சி கொண்டிருக்கிற பிள்ளைகளை ஓடி ஆடி விளையாடவிடாமலுமாய் இறுக்கிப் பூட்டி வைத்திருக்கிற வீடுகளையும் இன்னபிறவைகளையுமாய் வெறுக்கிற கணத்தில் வீடுகள் ஏன் அமானுஷ்யம் கொள்ள வேண்டும் என்கிற கேள்வி எழுவது எல்லோருக்குள்ளும் இயல்பானதாகவே,,/

சின்னவள் நன்றாகச்சிரிப்பாள் வாய் கொள்ளாமலும் மனம் கொள்ளாமலும் வெகு முக்கியமாய் கையில் செல்போன் இல்லாமலுமாய்,,,,/

பெரியவள் அ[ப்படியில்லை ,கையில் செல்போன் இருந்தால்தான் அவளுக்கு எல்லாம் ஓடும்,ஏழு கடல் ஏழு மலை தாண்டி இருக்கிர குகையின் கூண்டில் இருக்கிற கிளியின் உடலுக்குள் உயிர் இருப்பது போல் இன்று பலருக்கும் செல்போனுக்குள் உலகமும் உயிரும் இருக்கிறது எனலாம்,

அவசியத்திற்கு பயன் படுத்தியது போய் அதை பயன் படுத்துவதையே அவசி யமாக்கிக்கொண்டு விட்டார்கள் என்ற நண்பனை ஏறிட்டுப்பார்க்காமல் இருக்க முடியவில்லை,

அவன் வேறு யாரை விடவும் செல்போனை அதிகமாக பயன் படுத்துவான், ஆனால் அவசியத்திற்கே,அது தாண்டி கோடி கொடுத்தாலும் ம்ஹூம்,,,,/

”ராத்திரி எட்டுமணிக்கு மேலஆகிப்போறஅளவுக்கா வேலை இருக்கப்போகுது ஆபீஸுல,”,,,,,?என்கிற கேள்வியை மனம் தேக்கி உள் வைத்திருந்த மனைவி ”ஏழு மணிக்கு கெளம்பீருப்பீங்க,ஒரு மணி பிரயாணதூரம்கடந்து எட்டு மணிக்கு பஸ்டாப்புல யெறங்கி இப்ப வீடு வந்திருக்குறீங்க,,,,

என்ன இவ்வளவு தாமதம் ஆகிறுச்சின்னு அழுத்திக்கேட்டா இனிமே அப்படித் தான்,தாமதங்களும் தவிர்க்க இயலாதவைகளும் சர்வசாதானமாகிப் போகும் அலுவலக வாழ்க்கையிலைன்னு சொல்லுவீங்க,,,” என்றவாறே வீட்டின் உள் நுழைந்தவனிடம் ”தாருங்கள் பையை,,” என இடது தோள் தாங்கியிருந்த பையை மெல்லமாய் வாங்கிக்கொண்டு உள் நுழைகிறாள்,

நைந்து வெளுத்துக்காணப்படுகிற பையை தூரபோட்டுவிட்டு வேறொரு பை வாங்க வேண்டும்,

உறவினர் ஒருவர் அவரது வீட்டு விஷேசத்தின் போது வந்திருந்த அனைவரு க்கும் கொடுக்க பை ஒன்று அடித்து வைத்திருப்பதாய்ச்சொன்னார்,

நேரம் வாய்க்கும் போது கொண்டு வந்து தந்து விடுகிறேன் கண்டிப்பாக, என் று சொன்னவர் நேரத்தை ஒரு மாதத்திற்கும் மேலாய் வாய்க்கச் செய்கிறார்,

சரி வாய்க்கப்பண்ணுவதை வாய்க்கப் பண்ணட்டும். தரும் போது வந்து தரட் டும், என மனம் ஊன்றியிருந்த எண்ணத்தை மறந்து போனான் இவனும்.

வீட்டினுள் போனவளை பின் தொடர்கிறான் இவனும்/

எப்பொழுதும் அப்படித்தானே இருந்திருக்கிறது, முன் செல்பவர்களாயும் ,வழி நடத்துபவர்களாயும் தலைமை ஏற்று குடும்பம் கொண்டவர்களாயும் அவர்கள் தானேஇருந்திருக்கிறார்கள்,பின்ஏன்இடையில்வந்த மாற்றமாயும் ,கலைத்துப் போட்ட மணல் வீடாயும் ஆகிப்போனது அப்படியான ஏற்பாடு என்பது புரிய வில்லை.

அவ இருந்த வரைக்கும் வீடு வீடா இருந்ததுப்பா,அவ இல்லையின்னு ஆனது க்கப்புறம் ஒண்ணும்மில்லாம தூந்து போச்சுப்பா வீடு எனச்சொல்பவர்களை இன்றுவரை பார்த்து வந்துக்கிறான்,

இடது தோளில் மாட்டியிருந்த பையை கழட்டிக்கொடுத்த போது அவள் கேட் டாள்,ஏன் எப்பப்பாத்தாலும் யெடது பக்கமாவே பையைத்தொங்கப்போட்டுக் கிட்டு திரியிறீங்க,கொஞ்சம் மாத்தி வலது தோள்ல போட்டாத்தான் என்ன,,, என்கிற அவளின் கேள்விக்கு,,,,,,?

அது ஏன் எனத்தெரியவில்லை,எப்பொழுதும் அல்லது பெரும்பாலான பொழு துகளில் தாங்குகிற சக்தியும் சகித்துப்போகிற மனதுமாய் இடதாகவே இருந்து விடுகிறது,

குடிக்க தண்ணீர் கொடுத்தவளின் அன்பினூடே”பிள்ளைகளின் இரவுப் படிப்பும் வீட்டுப்பாடமும் முடிந்து போனதா,,,? இரவு சாப்பாட்டிற்கு என்ன ரெடி யாகிக் கொண்டிருக்கிறது,கடையில் மாவு வாங்கி தோசை வார்த்துக் கொடுக்கப் போ கிறாயா இல்லை வழக்கம் போல் சாப்பாடுதான் வைக்கப்போகிறாயா,,,” எனக் கேட்டு விட்டு கழுவிய முகத்தையும் கை காலையும் துடைத்து விட்டு கொஞ் சம் தேநீர் கொடேன் ,”உடல்கொண்ட அலுப்பும் மனம் தாங்கிய கிலேச ங்க ளும் ஒன்றாய் தீர்ந்து போகிற அளவிற்காய்,,,/”எனக்கேட்ட சமயத்தில் இடுப் பில் கை வைத்து முறைத்த மூத்த மகள் .”இப்பிடியே அம்மாவை நைஸ் பண்ணிப்பேசியே காரியம் சாதிச்சிருங்க, அதான் இந்நேரம் பஸ்ஸ விட்டு யெறங்குன ஒடனே ஒரு டீ சாப்புட்டுருப்பீங்களே,அப்புறம் என்ன,,, அதுக்கு ள்ள,,?,

“இதுக்கும் இதுக்கும் எவ்வளவு தூரம் இருக்கும்,டீக்கடையில இருந்து வீட்டு க்கு வர்றதுக்கு ஒங்களுக்கு கால் மணி நேரம் இல்லை பத்து நிமிஷம் ஆயிருக்கும்,அதுக்குள்ள ஒரு டீயா,அம்மா நீ டீப்போட்டுத்தராதம்மா அப்பா வுக்கு,,” என்கிற மகளை ஏறுடுகிறான்,

”நேற்றுதான்,,,”அங்கா,அங்கா”,,,எனமழலை மொழி பேசி தோளில் படர்ந்திருந் தவள் போல் இருந்தவள் இன்று என் உயரம் மீறி நிற்கிறாள்.என்கிற எண்ணம் மனம் தேங்கி நிற்க மகளின் அக்கறைப்பேச்சை மனம்ஏந்தி செவியுற ஏற்றா லும்,,,,

,”அடக்கிறுக்கி டீக்காகவா அவரு இவ்வளவு நேரம் தவமா தவமிருக்குறாரு ன்னு நெனைச்சிக்கிற,நான் குடுக்குற டீயோட ஒவ்வொரு மடக்கையும் நாக்கோடசுவையறும்புகள்ல படர விட்டுட்டு குடிக்கிற போது என்னைய அண் ணாந்து பாத்து ”நலந்தானன்னு” ஓரக்கண்ணால நாதஸ்வரம் வாசிக்கிற அவ ரோட அன்புகாகவும்,பிரியத்துக்காவும்,வாஞ்சைக்காவும் ஒரு டீ என்ன எத்த னை டீ வேணுமுன்னாலும் தரலாம்,,,”எனச்சொன்ன அவளிடம்செம்பு நிறை ந்த தண்ணீரை வாங்கிக்குடித்து விட்டு டீக்காக காத்திருந்த நேரத்தில்தான் சட்டைப் பையிலிருந்த செல்போனை எடுத்து வாட்ஸப் மேஸேஜைப் பார்க் கிறேன்,

கொஞ்சம் அதிர்ச்சியும் வாழ்வின் நிஜம் கொண்ட உறைவும்/

கொஞ்சம் மனம் நெருக்கம் காட்டியும் தோழமை பூத்த உறவிற்கு சொந்தக் காரருமாய் என்னில் உறைகொண்ட தோழர் அவர்களின் தாயார் இறந்து போ னார் தன் தள்ளாத வயதில் என்கிற செய்தி சொல் தாங்கிய எழுத்தாய் செல் போன் திரையில் காட்சிப்படுகிறது,

தோழர்என்னில் எப்பொழுது உறை கொண்டார்,அவருடனான பழக்கம் எப்பொ ழுதிலிருந்து துளிர்விட்டு கிளைபரப்பி நின்றது என்பதெல்லாம் நினைவில் இல்லை இப்பொழுது,

ஆனால் இவனை பார்க்கிற நேரங்களில் அவரும் அவரைப் பார்க்கிற பொழுது களில் நானுமாய் மரியாதை கலந்த வணக்கங்களையும் சிற்சில சொல் பரிமா ற்றங்களையும் மட்டும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த பரிமாற்றங்களிலும்,வணக்கங்களிலுமாய் துளிர்த்தும், படர்ந்தும் நின்ற தோழமைதான் எப்பொழுதும் இவர்களுள் மிகை மீறா மரியாதையுடனுமாய் இது நாள் வரை நெசவிட்டுக்கொண்டிருக்கிறது,

மேற்கொண்டநெசவைமனம் தாங்கி பார்த்துக்கொண்டிருந்த வாட்ஸப் செய்தி யை திரும்பவும் ஒரு முறையாய் விழி விரித்துப்பார்த்த பொழுது இறந்தது இன்று,தகனம் நாளை காலை என சொல்லிச் செல்கிறது.

சரி காலையில் போய் கொள்ளலாம் என நினைத்து இரவு உணவை முடித்து விட்டு படுக்கப்போகும் முன் எதற்கும் கேட்டு விடலாம் மாரிக்கனி அவர்க ளிடம் என நினைத்தவனாய் அவரிடம் கேட்ட பொழுது அவரும் இவன் மனம் கொண்ட நினைவை முன் மொழிகிறார்,

இவர்களின் முன்னத்தி ஏறுக்குத்தெரியாதா இவர்களின் எண்ணங்கள், மனம் கொண்டதையும் ,செயல் ஆக்கியதையும் எண்ணமாய் எழுத்தாய் சொல்லாய் சமைக்கிறபொழுதுஇவர்களின் உற்ற நண்பராய் ,தோழராய், வழிகாட்டியாய், ஒரு தத்துவவாதியாய்,,இன்னும் இன்னுமாய் மனம் தேக்கிய அக்கறை கொண்டவராய் நிறைந்து போனவற்றை கனிந்து பகிர்பவராய் காட்சி கொண் ட அவர் சொல்வது மனதிற்கு கொஞ்சம் இசைவானதாகவே.,,,/

அவர் சொன்னபடியும் இவன் சுழியிட்ட முடிவின் படியுமாய் மறு நாள் காலை தோழர் அவர்களின் தாயாருக்கு அஞ்சலி செலுத்த சென்ற நேரம் அங்குக் காணக் கிடைத்தவர்களாய் முகமறிந்த தோழர்களும் முகமறியா நட்புகளும் இன்னும் இன்னுமானவர்களுமாய் தெரிந்தார்கள்,

இதில் முதன்மைப்பட்டவர்களாய் இருந்ததோழர்கள் தவிர்த்து இன்னும் சில பேர்களை இது போலான தருணங்களில்தான் சந்திக்கவும் பேசிக் கொள்ள வும், அவர்களுடன் அளாவளாவிக்கொள்ளவுமாய் முடிகிறது என்கிற எண் ணம் சுமந்து கொண்டு போயிருந்த மாலையை தோழரின் தாயாருக்கு போட் டு விட்டும் ,தொட்டுக்கும்பிட்டு விட்டுமாய் அவரது வீட்டு வாசலைக் கடந்து வெளிவந்த நேரம் இயல்பாய் ஒரு கேள்வி ஓடோடி வந்து ஒட்டிக் கொள்கி றது மனதில்,,/

வருடமெல்லாம்தான் குடிகொண்ட இயக்கிற்காய் இயங்கிய தோழரது தாயா ரின் இறுதி நிகழ்விற்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தவர்களை அங்கு அழை த்து வந்தது அவர் சார்ந்திருந்த அமைப்பன்றி வேறெதாக இருக்கமுடியும்,,,?

2 comments:

ஸ்ரீராம். said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை....

vimalanperali said...

அன்பும் பிரியமும்!