1 May 2019

பஸ் டிக்கெட்டு,,,,

பெரும் அதிர்வு கொண்டு ஓடிய பேருந்துகள் வேகமெடுத்துக்கடக்கிற இடம் கிராமங்களாயும்நகரங்களின்ஊடுபாவுமாய்நெவிட்டுகாணக்கிடைக்கிறதாய்,,,/

நெய்த நெசவுகளின் திரடுகள் ஊடுபாவாய் நெசவிட்டவரையும் பாகு முக்கிய வரையும் பின் கடை விரிப்பவரையும் படமிட்டுக்காட்டுவதாய்,,,/

அதையும் மீறி ஒன்றாய் இரண்டாய் பிரிந்து தொங்கிய நூல்கள் நெசவின் அடையாளம் சொல்லித்தெரிந்ததே அன்றி வேறொன்றாய் காணப்படவில் லை.

இவன் சென்று கொண்டிருந்த பேருந்து நகரமாயும் இல்லாத கிராமமாயும் இல்லாத பை பாஸ் சாலையில் ஓடிக்கொண்டிருந்தது.

அள்ளித்தெளித்த சின்னச்சிறு பூக்களின் பேரரு நறுமணமாயும்,காற்றில் கல ந்து வீசுகிற பேருந்தினுள் இருக்கிற தூசியின் வாசமாயும் இருக்கிறது.

குனிந்து காலடியிலும் பஸ்ஸினுள்ளாயும் பார்வையை படர விட்டபோது விழி கழண்டு உருண்டோடிய பார்வை பேருந்தின் உள்வெளி முழுவதுமாய் பயணித்துவிட்டு ஆமாம் பேருந்தினுள் கொஞ்சம் தூசியும் மண்ணும் கலந்து இருக்கிறதுதான்,அதன் வாடையே இது என இறுதிப்பட்டியலிட்டு சொல்லி விட்டுச் சென்றது,

”பொது இடம் அப்படித்தான் இருக்கும்,அதிகாலைநாலைரை மணிக்குபேருந்து ஓட ஆரம்பித்ததிலிருந்து ஏறி இறங்குற பயணிகளின் எண்ணிக்கை, அவர்க ளின் வருகை,அவர்களது சுகம் மற்றும் துக்கம்,அவர்கள் சுமந்த எண்ணங் கள்,உடன் வருகிற அவர்களின் பிள்ளைகள் மற்றும் அவர்கள் உடன் கொண்டு வருகிற கைப்பொருட்கள் எல்லாம் எல்லாம்,,,,,எத்தனை எத்தனை,,,,,,?இத்த னையுடன் சேர்ந்து அவர்கள் அணிந்து வருகிற செருப்பில் கொஞ்சம் தூசியும் மண்ணும் ஒட்டிக்கொண்டு வந்தால்தான் என்ன குறைந்து போகிறது இப்போ து,,?அதையும் மீறி அவர்கள் அவர்கள் கொடுக்கிற காசுக்கு கொஞ்சம் மண் ணை தானமாய் தந்துவிட்டுப்போனால்தான் என்ன,மண் நம் எல்லோருக்கும் பிடித்த விஷயம்தானே,,,?ஒன்றைப்போட்டால் பத்தாக முளைகொண்டு பலன் காண்பிக்கிற மண் நம் உடலோடும் மனதோடும் ஒட்டி உறவாடிக் கொண்டி ருக்க இங்கு மட்டுமாய் செருப்பில் ஒட்டிக்கொண்டு வருகிற கொஞ்சோண்டு மண் நமக்கு அசூயை காட்டினால் எப்படி சொல்லுங்கள் என்பான் நண்பன், அது அப்படித்தான் என்ன செய்ய,,,?”அதது அதது செய்ய வேண்டிய வேலை களை செஞ்சிக்கிட்டுதான் இருக்கும், துர் நாற்றம் வீச வேண்டியது வீசித்தான் தீரும்,மணக்கவேண்டியது மணக்கத்தான் செய்யும்,மழையிலும் வெயிலிலும் காயவேண்டியதுகாயத்தான் செய்யும்,காற்றில் அடிச்சிகிட்டுப் போறது போகத் தான் போகும்.

“அது போல இன்னும் இன்னுமாய் நெறஞ்சி இருக்குற எல்லாமும் நம்மோட வாழ்க்கையில் ஒன்னாக்கலந்தது வந்ததுதானே,அதுக்காக கலந்துக்கிட்டு ஐக்கியமாகி இருக்கட்டும் தன் இஷ்டத்திற்கு எல்லாமும்ன்னு விட்டுறவும் முடியாது, கொஞ்சம் கட்டுக்குள்ளாவும் வச்சிருக்கணும்.

வீசுற காத்தோட அதிகத்தையும்,பெய்யிற மழையோட மிகையையும், சுள் ளிடுகிற வெயிலின் மென் அனலையும் இன்னும் இன்னுமானதையும் அப்ப டியே விட்டுறாம பிடிச்சி இழுத்து கொஞ்சமாவாவது கட்டுக்குள்ள வச்சிருக் கோம் தானே,,,,?அது போலத்தான் இதையும் கொஞ்சம் பிடிச்சிழுத்து கட்டுக் குள்ள வைச்சிருக்கலாமுன்னு தோணுது” என்பான் நண்பன் கூடவே,,,/

குனிந்தவாறு இருந்த இவன் மேலெழுந்து பார்த்த பொழுது பேருந்தின் முன் வாசலிலிருந்து பறந்துவந்த தூசி ஒன்று இவனது காலடி தொட்டு அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறதாய் காற்றில்,

அடித்த காற்று தூசியை மட்டுமில்லை,இவனது முகத்திலும் மோதி கொஞ்சம் கொஞ்சம் நெளிய வைக்கிறதாய்/

முன்பெல்லாம் ஜன்னலோர சீட் கிடைத்தால் விரும்பி அமர்வான். இப்பொ ழுதெல்லாம் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது.கொஞ்ச பயமாகவும் கூட,,,/

வலது பக்கம் முகப்பக்கவாத நோய் வந்ததிலிருந்து வலது காதில் காற்றுப் பட்டாலோ,சில்லென தண்ணீர் அடித்தாலோகொஞ்சம் குளிராகவும் முகம் ஒவ்வாமைக்குள்ளாவும் ஆகிப்போறது, அதனால்தான் இப்பொழுது ஜன்ன லோர சீட்டில் அமர்வதற்கு கொஞ்சம் யோசனையாக இருக்கிறது, அப்படியே அமர வேண்டிவந்தாலும் இடதுபக்க காது ஜன்னலோரக் காற்றில் படுமாறு அமர்ந்து கொள்வான்.

இப்பொழுது பஸ்ஸின் பின் புறத்தில் கடைசி சீட்டுக்கு இரண்டு சீட்டுக்கு முன்னாய் அமர்ந்திருந்தான், அதிலும் இடது காதை ஜன்னல் கம்பிக்கு காட்டியவாறு/

எங்கிருந்து வந்தது அந்த சப்தம் எனத்தெரியவில்லை,பேருந்துஅதிர்வெடுத்து செல்லச்செல்ல சப்தத்தின் அளவு கூடிக்கொண்டே தெரிந்தது.

இவன் பிடித்துக்கொண்டு வந்த கம்பிக்கு இரண்டு தள்ளி நின்ற கம்பியிலிரு ந்து தான் அந்த சப்தம் வந்தது.

கிரீச்,கிரீச்,கிரீச்,கிரீச்,,,என்கிற சப்தம் விடாமல் காதைக் குத்திய போது பேருந்தினுள்ளாய் இருக்கிற கம்பி மட்டுமாய் அப்படியில்லை,மாறாக எல்லா மும் அப்படித்தான் என்று சொல்லத்தோனியது.

மழை பெயதால் ஒழுகியது,வெயிலடித்தால் உள்ளே வெளிச்சம் எட்டிப்பார்க் கிறது,காற்றடித்தால் தூசு வந்து விழுகிறது.

ஒரு மழை நாளின் போது மதுரைக்குப்பக்கத்தில் இருக்கிற ஊருக்குப்போய் வந்து கொண்டிருந்த பொழுது பஸ்ஸில் டிரைவர் சீட்டுக்கு மேலே குடை கட்டியிருந்தார்கள்,

குடையிலிருந்துவழிந்தமழைத்தண்ணீர்அவரது வலது மற்றும் இடது கையை நனைத்தவாறிருந்தது,

வழிந்த நீரை துடைத்து விட்டுக்கொண்டே அவரும் பேருந்தை ஓட்டுக் கொ ண்டு வந்தார்,

இதுக்கு நம்ம பக்கம் ஓடுற பஸ்ஸீக தேவலை போலருக்கே என்கிற நினை ப்பை சுமந்து அன்று ஊர் வந்தான்.

”சின்னப்புள்ளை அவ ,அவளுக்கு என்னதெரியும் நல்லது கெட்டது,,” என்ற பேச்சின் போது ”நல்லது கெட்டது தெரியாதுன்னு மட்டும் சொல்லாத மாமா, எல்லாம் தெரிஞ்சிருக்கிற அவளை ஒண்ணும் தெரியாதுன்னு நம்ப வைக்கி றது அவளோட மூஞ்சிதான் மாமா அவளோட மூஞ்சிதான்”,

”அவளுக்கா ஒண்ணும் தெரியாதுன்னு சொல்ற,அவ இருக்குற இருப்புக்கும் திங்கிற தீனிக்கும்,,,,,,,,,,,ஹீங் கொடுமை,,,,

”நம்மளப்போல ஆட்கள்தான் இன்னும் ஈவு யெறக்கம், பாவம் புண்ணியமுன் னு நெனைச்சிக்கிட்டு திரியிறோம்,

அவளப்போலபுள்ளைகளுக்கு அப்பிடின்னா அது என்னன்னு கூடத் தெரியாது, இன்னும்சொல்லப்போனா அது ஒரு அனாவசியச்சொமைன்னு நெனைக்கிறா ங்க.நெருங்கிப்போயிக்கேட்டா அதெல்லாம் ஒருகெட்ட வார்த்தைங்க சார்ங்கு றாங்க,,,,,,

”சரி வளர்ப்பு அப்பிடி,,,அவ என்ன செய்வா பாவம்,,,,என்றவனைப்பார்த்து அதெ ல்லாம் வளப்பு அப்பிடின்னு சொல்லாதீங்க,இதுக்கு மேலா துப்புக்கெட்ட பழக் கம் இருக்குற வீடுகள்ல வளந்த புள்ளைங்கெல்லாம் நல்லா இருக்குறத நம்ம கண் கொண்டு பாக்குறமா இல்லையா,,,,?என இவனது இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் பேசிக் கொண்டு வந்தது இவனது காதைக் குத்தி மனம் நுழைந்ததாய் /

அவர்களது பேச்சிலிருந்த இலை மறைவு காய் மறைவு எல்லாம் தாண்டி காட்சிவிரித்தசொற்கட்டு நடப்பின் யாதர்த்தம் ஒன்றை பிம்பமாய் வைத்து விட்டுப் போகிறது,

போகட்டும் அதற்காக இப்படியா என்ற வினாவை மனதில் நிறுத்திய மறுக ணம்,”ஏய் மாமாஅவ வேற யாருமில்லை,ஒரு வகையில எனக்கு சொந்தம் தான்,,, நாங்களும் சொந்தமுங்குற உரிமையில எவ்வளவோ சொல்லிப் பாத் தோம் கேக்குற மாதிரி இல்ல,கழுத பட்டுத்திருந்தட்டுமுன்னு விட்டுட்டம்.

”இப்பயே இப்பிடி இருந்தையின்னா ஊருக்குள்ள திரியிற சல்லிக சீரழிச்சிப் போடுவாங்கம்மான்னு எவ்வளவோ சொன்னம்,ஒன்னையும் காதுல போட்டுக் குற மாதிரி தெரியல,அவன் புருசங்காரன் என்னடான்னா எனக்கென்னான்னு தொடைச்சிப்போட்ட மாதிரி அலையிறான்,

”நெருங்கிப்போயிகேட்டா இப்பிடிக்கழுதைகளகட்டிவச்சாலும்கயிற அத்துக் கிட்டு போயிருமப்பாங்குறான்,

சரிதான் ரெண்டு புள்ளைகளாகிப்போச்சி ,இனி என்னத்தபோட்டுக்கிட்டு அவ கிட்ட மல்லுக்கு நின்னுக்கிட்டு,பாக்க வேண்டியதுதான், ரொம்பத்துள்ளுனான் னா,நீஓங்வழியப்பாத்துக்கிட்டுப்போ,நான்ஏங் வழியப்பாத்துக்கிட்டுப் போன்னு போயிற வேண்டியதுதான்,

என்ன புள்ளைங்கதான் பாவம் ,அதுக மொகத்துக்காகத்தான் மருகி மருகி நிக்க வேண்டியதிருக்கு,இல்லைன்னா எப்பவோ நான் அவள விட்டுட்டு தூரப் போயிருப்பேன்றவங்கிட்ட என்ன பேச முடியும்,

ஒரு வகையில் பாக்கும் போது அவனும் பாவமாத்தான் தெரியிறான்,

”அவன் சொன்னது போல இந்த மாதிரி ஆள்க கட்டி வச்சாலும் அத்துக்கிட்டுப் போயிரும் மாமா” எனப் பேசியவன் அவனது காதில் ஏதோ சொல்லி விட்டு சிரித்தான் சப்தமாக/

கண்டக்டர் இருவருக்கும் தெரிந்தவராக இருப்பார் போலிருக்கிறது,

“ஏம்பா ஒங்க ரெண்டு பேருக்கும் வேற வேலை வெட்டி இல்லையாப்பா, அனேகமா வாரத்துல நாலு,இல்லைன்னா அஞ்சி நாளு இந்த டயத்துக்கு பஸ் ஸீல ஏறிறீங்க,பெரும்பாலும் இது போலான பேச்சுக்களத்தாம்பா பேசுறீங்க, ஒங்களுக்கு பேசுறதுக்கு வேற பேச்சே கெடைக்கலையா,நாட்டுல என்னென்ன நடக்குது அதெல்லாம் விட்டுட்டு இப்பிடி வாய்க்கு வெளங்காம பேசிக்கிட்டு திரியிறீங்களேப்பா,,,,,,கொஞ்சம் கூட ஒரு லஜ்ஜை இல்லாம,,,,

”நீங்க சொல்றது உண்மையாக்கூட இருக்கட்டும் அதுக்காக இப்பிடியா தம்பட் டம் அடிச்சிக்கிட்டு திரிவீங்க,வெளங்காத ஆள்களா,,,,,என சபதமிட்டவர் “ஏயப் பா,கொஞ்சம் முன்னபின்ன யோசனை பண்ணி பேசுங்க எதையும் ,நம்மளும் பொம்பளப் புள்ளைக கூட பொறந்துக்கம்.

”அப்பிடியே நீங்க சொல்றது போல இருந்தாலும் கூட ஒரு விஷயம் நடக்கு றதுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைன்னு ஒண்ணு இருக்குல்ல,,,,

”ஒங்க வயசு ஆள்க இதெல்லாம் நிதானிச்சி கணக்குல எடுத்துப்பேசுவாங்கன் னு கேள்வி, நீங்க என்னடான்னா,என்னமோ விரிச்சி வித்த கதையா பேசிக் கிட்டுஇருக்குறீங்க”,,,,,,என்ற கண்டக்டர்அடபோப்பா,,,,மொத வேலையா ஒங்க ரெண்டு பேரையும் ஒங்க ஊரு வந்ததும் யெறக்கி விடணும், இல்லைன்னா பஸ்ஸீ நாறிப்போகும் நாறி”எனப்பேசிய கண்டக்டரை அவர்களின் அருகில் இழுத்து அமர வைத்துக்கொண்டார்கள்,

”அடப்போங்கப்பா,போக்கத்த ஆள்களா”என்றவாறு அவர்களை விட்டு எழுந்து போய் கண்டக்டர் இருக்கையில் அமர்ந்தவர் சாலையை பார்த்துக்கொண்டும் அடுத்து வரப்போகிற ஊர் நிறுத்தத்தை எதிர் நோக்கிக்கொண்டுமாய்,,,/

இவன் போய்க்கொண்டிருந்த இடம் மதுரை பைபாஸ் சாலையாக இருந்தது,

நன்றாகஇருந்தால்மொத்தப்பேருந்திலும்இருபது பேருக்கும் குறைவாகத்தான் இருப்பார்கள்,

அவரவர்கள் அவரவது கதை பேசிக்கொண்டும் சாலையை வேடிக்கை பார்த் துக் கொண்டும் பேருந்தினுள்ளே எப்,எம் மில் ஒலித்த பாடல்களை கேட்டுக் கொண்டுமாய் உடல் சுமந்தும் மனம் சுமந்துமாய் பயணித்துக் கொண்டிருந் தார்கள்.

வழக்கமாக செல்கிற வழிதான்,வழக்கமாக பார்க்கிற ஊர்கள்தான்,ஆனால் அன்றாடம் பார்க்கக்கிடைக்கிற மனிதர்களும் அவர்களின் செய்கைகளும் காட் சிகளும் மாறி மாறித்தெரிவதாய்,,,,/

இன்றிலிருந்து மிகச் சரியாக பின்னோக்கினால் இரண்டு மாதங்களுக்கு முன் னால் இரு சக்கரவாகனத்தில் வந்து போய்க்கொண்டிருந்த நேரம்,

அசந்தர்ப்பவிதமாய் இந்த ஊரில் மாறுதல் கிடைத்த நாளன்றிலிருந்து கடந்த இரண்டு மாதங்கள் வரை இரு சக்கரவாகனத்தில்தான் பயணித்துக்கொண்டி ருந்தான்,

இரவு பகல் என எந்த நேரம் என கணக்கில்லை,பிறவிப்பயனே இந்த இரு சக்கரவாகனம்ஓட்டுவதே என முடிவெடுத்தது போல் அதில்தான் போய் வந்து கொண்டிருந்தான்,

இடையிடையில் போலீஸ் தொந்தரவு,லைஸென்ஸ் சிக்கல்,ஹெல்மெட் பிரச்சனை,,,,என இத்தியாதி இத்தியாதிகள் இருந்த போதும் கூட இரு சக்கர வாகனத்தை கைவிடுபவனாக இல்லை,

இதையெல்லாம்கூட தாங்கிக்கொள்ளலாம்போலும், சாலையின் மேடு பள்ள ங்களும்அதனால்எதிர்கொள்கிறசிரமங்களையும்தான்தாங்கிக் கொள்ள முடிய வில்லை.

ஓரளவிற்கு நிதானித்து இரு சக்கரவாகனத்தின் வேகத்தை சற்றே குறைத்து எதிர்ப்படுகிற பள்ளம்,

பள்ளத்தைத்தாண்டி வேகத்தை கூட்டி சிறிது தூரம் போகுமுன் அடுத்த பள்ள ம் வந்துவிடும்.

இப்படியாய் பள்ளத்தை எதிர்நோக்கி மெதுவாயும் பள்ளம் கடந்து வேகமெடுக் கவுமாய் அந்த சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகளின் வாழ்க்கை,அதில் இவனும் ஒருவனாய்,,,,/

இடையில் நின்ற ஊரிலிருந்து பஸ் நின்று கிளம்பும் போது ஒரு பாட்டி ஏறினார்கள்,எவ்வளவு நேரம் பஸ்ஸிற்காய் காத்து நின்றார்கள் எனத் தெரிய வில்லை,

பஸ் வந்ததும் இறங்கிய ஆட்களுக்கு வழி விட்டு விட்டு ஏறினாள், இறங்கி யவர்களில் கைக்குழந்தையுடன் இறங்கிக்கொண்டிருந்தப்பெண் ஏறும் முன் ஏறியவர்களை கொஞ்சமாய் கடிந்து கொண்ட அவள் ”ஏன் இவ்வளவு அவச ரம்,அதான்கைக்கொழந்தையோடஒருபொண்ணுவர்றாள்ல,,,அவசரப்படாட்டி என்னவாம்,,,,?என்றாள்,முண்டியடித்துக்கொண்டு ஏறியவர்களைப் பார் த்து/

கைக்குழந்தையுடன்இறங்கியபெண்ணைப்பார்த்து ”என்னம்மா,ஆணா, பொண் ணா”,,, நல்லாயிருக்கணும் என்றபடி பேருந்தினுள் ஏறினாள்,

”பாட்டிநீங்க கவனமா ஏறுங்க மொதல்ல,அப்பறம் பேசலாம் ஊராரோட”, எனச் சொன்ன கண்டக்டரிடம் ”அவ யாருன்னா என்ன தம்பி,இப்போதைக்கு ஏங் பேத்தின்னு நெனைச்சிக்கிருறேன் எனச்சிரித்தவள் கையில் வைத்திருந்த ஆளுயர கம்பை படியின் ஓரமாய் போட்டு விட்டு ஏறினாள்,

முதுகு கூன் போட்டிருந்தது.முகம் முழுக்கவுமாய் சுருக்கம் கண்டிருந்த தோ ல் மடக்குகள் உடல் முழுவதுமாய் ஆகித் தெரிந்ததாய்,,,/

”என்னபாட்டி இந்த வயசுல பஸ் ஏறி செரமப்படாட்டி,பேசாம வீட்ல கெடக்க வேண்டியதுதான,என்ற கண்டகடரின் கேலிப் பேச்சிற்கு ”ஆமா பேசாம எங்கி ட்டு வீட்ல கெடக்க,இந்தா இருக்கு அடுத்தது,பேத்தியா ஊரு,பஸ்ஸிக்குள்ள ஏறுன மாயம் தெரியாது யெறங்குன மாயம் தெரியாது, நீ டிக்கெட்டுக் குடுத்து முடிக்கிறதுக்குள்ள நா யெறங்க வேண்டிய ஊரு வந்துரும்,,,” எனச் சிரித்த படியே ”அப்பிடியே பெரிய ஊருக்கும் டிக்கெட்டு எடுத்துகுடுத்துரு போயிச் சேந்துறேன்,,,”என்றாள் கண்டக்டரிடம்,

பதிலுக்கு கண்டக்டர் அதெங்கிட்டுப்போக,அங்க ஏற்கனவே வரிசையில நிக்கி றாங்கலாமுல்ல, இதுல நீங்க வேற போயி நிக்கணுமுன்னா எப்பிடி,,/பேசாம இருக்குறசோத்தத் தின்னுட்டு இப்பிடியே பஸ்ஸேறி வாங்க,பஸ்ஸேறிப் போ ங்க,நானும்டிரைவர்அண்ணனும் இருக்கோம் எங்கள ஒங்க பேரப்புள்ளைங்க மாதிரி, நெனைச்சிக்கங்க,பத்திரமா ஒங்கள பஸ்ஸீல ஏத்திக்கொண்டு போயி எங்க யெறக்கணுமோ யெறக்கி விட்டுட்டுபோயிக்கிட்டே இருக்கோம், இப்பிடி நாங்கெல்லாம் தொணை நிக்கும் போது பெரிய ஊருக்கு டிக்கெட்டு கேக்காட் டி என்ன,,,,,? என்றவாறு டிக்கெட் கிழித்துக்கொடுத்த கண்டக்டர் மூதாட்டி யிடம் காசு வாங்கவில்லை.

கலர் பஸ்,டவுன் பஸ் இது இரண்டுதான் இவனுக்கு வாய்த்தது,

ஒன்பது மணிக்கு வந்தால் கலர் பஸ்ஸில் ஏறிக்கொள்ளலாம்,

தனியார் பேருந்து,உடல் முழுவதுமாய் பூசிகொண்ட வெள்ளைக்கலரின் மேல ள்ளித்தெளித்த பூக்களாயும் அதன் ஊடாய் தரை துளைத்து முளைத்த வான வில்லாய் கலர் காட்டி அங்கங்கே அள்ளித் தெளிக்கப்பட்ட மலர் கொத்துக்கள் பேருந்தின்முன்னும் பின்னும் பக்கவாட்டிலுமாய் முளைத்துத்தெரிவது போல பேருந்து முழுக்கவுமாய் தன் நிறம் காட்டியும் கலர் காட்டியுமாய்/

காட்டிய கலர்களின் சேர்க்கை கண் சிமிட்டி சிரிக்கிற பூக்கள் போல தூரத்தில் வருகிற போதே பஸ்ஸிற்காய் காத்திருக்கிறவர்களை கைதட்டிக்கூப்பிடுவ தை  போல் இருக்கும்.

கூப்பிட்டகுரலுக்குஓடோடிப்போய் ஏறுகிறவர்கள் ஏறவேண்டுமானால் ஒன்ப து மணிக்கெல்லாம் சரியாக பஸ்டாப்பில் இருக்க வேண்டும்.

கொஞ்சம் ஐந்து அல்லது பத்து நிமிடம் தாமதமாகிப்போனால் அடுத்து டவுன் பஸ்தான்.

இன்று கொஞ்சம் தாமதமாகிப்போனது,அடுத்த பஸ்ஸில்தான் போய்க் கொண் டிருந்தான்,

12 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மே தின வாழ்த்துகள் நண்பரே

vimalanperali said...

மேதின வாழ்த்துக்கள் சார்!

KILLERGEE Devakottai said...

இனிய மே தின வாழ்த்துகள் நண்பரே

vimalanperali said...

இனிய மேதின வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

தொழிலாளி தின வாழ்த்துகள்...

வலிப்போக்கன் said...

நாட்டு நடப்பை படம் பிடித்திருக்கிறீர்கள்...அருமை....

vimalanperali said...

மே தினநல்வாழ்த்துக்கள்!

vimalanperali said...

அன்பும் பிரியமும்!

Unknown said...

காலத்தின் மனவோட்டத்தில் கனவுகளும் கவலைகளும் தீர்வுகளற்று பயணித்துக் கொண்டேயிருக்கின்றன.

vimalanperali said...

வாஸ்தவமே,,,,/

Kasthuri Rengan said...

நேர்த்தி

vimalanperali said...

அன்பும் பிரியமும்!