21 May 2019

ஒற்றை விரிச்சிறகு,,,,,

ஆர்,எஸ்,பி பங்களாதாண்டிப் சென்று கொண்டிருக்கையில்தான் போன் வருகி றது,

பங்களாவிற்கு இப்பொழுதான் இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் பெயி ண்ட் அடித்திருக்க வேண்டும் போலும்/ பளிச்சென்றிருந்தது,சுவருக்கு அடித் திருந்த பெயிட்ண்டுக்கு த் தகுந்தாற்போல் கொடுத்திருந்த பார்டர் நன்றாக இருந்தது பார்ப்பதற்கு.

இது போலாய் அவசரம் காட்டி செல்கிற தருணங்களில் வருவது கொஞ்சம் எரிச்சலூட்டி விடுகிறதுதான்,

அது மட்டுமில்லை,போனின் ரிங்கடோன் வேறு ,சமீப காலங்களாய் எரிச்ச லாயும்,தலை வலியாயும் இருந்ததால் சினிமாப்பாடல்களிலிருந்து இசையை எடுத்து ரிங்க்டோனாய் வைத்துக் கொள்வது என்கிற நடை முறையை கை விட்டான்,

பதினெட்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு வாங்கிய போனில் சப்தமாய் ரிங் டோன் வைக்கக் கூட இந்த சமூக வெளியில் அனுமதியில்லையா.,,?

கடைகளில்விலைஅதிகம் என சின்ன மகள்தான்ஆன்லைனில்ஆர்டர் பண்ணி வாங்கிக் கொடுத்தாள், ஒரு செல்போனை இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டுமா என அதை வாங்கிய நாளிலிருந்து இரண்டு நாட்களாய் தூங்கவில்லை.சாப்பாடு கூடசரியாய் இறங்கவில்லை,

”அப்பறம் ஏன் வாங்கச்சொன்னீங்க,,,,?, சொல்லி ஆர்டர் போட்டு எல்லாம் வந்ததுக்கப்பறம் மூஞ்சத்தூக்கி வச்சிக்கிட்டு இருந்தா எப்பிடி சொல்லுங்க,,,,, ஒங்க மன வருத்தத்துக்கு தாந்தான் காரணமுன்னு நெனைச்சிக்கிட்டு சின்ன மக ஒரு பக்கம் போயி ஒக்காந்துருக்கா மொகத்தத் திருப்பிக் கிட்டு,,,, மொத ல்ல அவளப்போயி சமாதானப்படுத்துங்க,நல்ல அப்பா,நல்ல புள்ள,வாங்கக் கூடாததவாங்க வேண்டியது,அப்புறம் யோசிச்சிக்கிட்டு அண்ணாந்து பாத்துக் கிட்டுஒக்காந்துருந்தாப்புலசரியாப்போச்சா,,,’எனஇன்னும்இன்னுமாய்கொஞ்சம் கூடுதலாயும் குறைச்சலாயும் பேசிய மனைவியின் சொல் கேட்டு மகாலை அழைத்து அருகில் வைத்துக்கொண்டு”வெடித்துச் சிரிக்கிற மலர் எப்பொ ழுதும் வாடி நிற்கக்கூடாது,மலர்ந்து சிரிக்க மட்டுமே வேண்டும். அதுதான் பூக்களின்இலக்கணம்,அதுதவிர்த்து,,,,,வேண்டாம்கண்ணே,இப்படிமுகம்வாடிப் போய் இருப்பதுஉனக்கும் அழகல்ல,பூக்களுக்கும் அழகல்ல,ஒரு வகையில் பார்க்கும் பொழுது பூவும் நீயும் ஒன்றுதானே,,,? ஒன்றுதானே என்கிற சொல் சுழற்சியை கையில் எடுத்தவனாய் அவளை கூப்பிட்டு மடியில் அமர வைத்து”நீங்கவாழ்றதுரூபாய்களின்காலம்,நாங்க வாழ்ந்தது அணாப் பைசாக்க ளோட காலம், ஒரு பைசாவுலயும் ,ரெண்டு பைசாவுலயும்,அஞ்சி பைசா விலும்,பத்து பைசா விலுமா ஒட்டிக் கிடந்த வேர்வையோட ஈரமும், உழைப் போட அருமையும் எங்கள அந்த பைசாக்கள கண்ணுல ஒத்திக்கச் சொல் லும்.அள்ளி அணைச்சி பத்திரம் கொள்ளச்செய்யும்,நாளைக்கி மறு நாளைக்கி அது வேணுமுங்குற ஜாக்கிரதையைஎங்ககிட்ட வளத்துச்சி,நாங்களும் பத்திர மா கண்ணுக் கண்ணா, பொண்ணுக்குப் பொண்ணா பாதுகாத்து வந்தோம்.

“ஆனா ரூபாய் அப்பிடி பாதுக்காக்கப்படுறதா எனக்குத் தெரியல.அந்த ரூபா யோட அருமை அதசெலவழிக்கிறவங்களுக்குத் தெரியல,பிறந்த நாள் கொண் டாட்டமுன்னு கூசாமப்போயி ரெண்டாயிரத்து ஐந்நூறுரூபாய்க்கு கேக் வாங்கிக் கிட்டு வந்து அதுல ஆயிரம் ரூபா இல்லைன்னா ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு மட்டும்தான் கேக் சாப்புடுறாங்க, மிச்சக் கேக்கு மூஞ்சியில தடவ வும், குப்பையில போடவும்தான் ஆகுது. அந்த கொண்டாட்ட மனோ நிலை பொத்தி வச்சி பாதுகாக்கப்படுது,வளத்து விடப்படுது, ஏண்ணா ஒரு பொறந்த நாளன்னைக்கி கேக்கு மட்டுமில்ல,பரிசுப்பொருளு ட்ரெஸ் ,இத்தியாதி இத்தி யாதின்னு எவ்வளவு விக்கிதுன்னு நெனைக்கிறீங்க,,,/ அப்பிடி யெல்லாம் எங்க காலம் இப்பிடி காண்பிக்கல,ஏன்னா அன்னைக்கி பிறந்த நாள் கொண்டா டுறதுஎல்லாம் தெரியாது,அப்பிடியே தெரிஞ்சிருந்தாலும் மத்த நாள் போல அதையும் ஒரு நாளாத்தான் எடுத்துக்கிட்டு அவுங்கவுங்க பொழப்பப்பாக்க போயிட்டாங்களே தவிர்த்து இப்பிடியெல்லாம் மெனக் கெட்டு கொண்டாடி கொண்டாட்ட மனோநிலைய நாங்க வளத்துக்கல,,/

தவிர அப்ப அணாப்பைசாக்கள்ல இருந்த வேர்வை வாசனையையும், உழைப் பையும் மதிச்சோம்,மாசம் முச்சூடும் கஞ்சி கஞ்சின்னு கஞ்சிப்பாட்டுக்காக ஓடிக்கிட்டு இருந்தாலு கூட அணாக்கல் மேல அவ்வளவு மரியாதையா இருந்தோம்.,ஆனா இப்ப ரூபாய்கள்ல இருக்குற வேர்வை வாசனையையும் உழைப்பும் நெனைச்சிப்பாக்கவும் மதிக்கவும் ஆள் இல்லை,அதுதான் இந்த நெலமைன்னுநெனைக்கிறேன்,தவிரசின்னவன்,பெரியவன்,அனுபவம்,விடலைத் தனம் எதுவும் கணக்குல எடுத்துக்கபடாததா ஆகிப்போச்சி.

“உழைப்பையும் திறமையையும்,தகுதியையும் பின்னுக்குத்தள்ளி விட்டுட்டு ,நல்லா ஓடிக்கிட்டு இருக்குற ஒருத்தர கீழ தள்ளிவிட்டுட்டு எந்த நேரம் மேல ஏறி ஒக்கறலாமுன்னு நெனைக்கிறான்.

“பரஸ்பரம்இருந்தஈவு,இரக்கம், கருணை,அன்பு பச்சாதாபம்எல்லாமும் கெட்ட வார்த்தையா ஆகிப் போச்சி இப்ப,இதுபோக எத்தனையோ எத்தனை,, அதெல் லாம் ஒண்ணா சேரும் போது அந்த விட்டேத்தித் தனமும் திமிர்த்தனமும் ஒண்ணு சேர இப்பிடியான மதிக்காத தன்மை நெலை பெற்றுப் போகுது,அந்த நெலை பெறலே இங்க சாஸ்வதமாகித்தெரியும் போது ஒரு வித மேனா மினிக்கித்தனம் மேலோங்கி மனசு மரத்துப்போயி இது போல விஷயங்க ளுக்கு ஆடம்பரத்த கைகொள்றத தப்பா நெனைக்கிறதில்ல, ஒரு வேளை நானும் அப்பிடி ஆயிட்டேனோன்னு ஒரு நெனைப்பு எனக்குள்ள வந்தப்பத் தான் இப்பிடீ ஆகிப்போனேன், அதுக்கு ள்ள ஒங்கம்மா ஒன்னைய அழைச்சி பெரிசா சத்தம் போட்டு ஊரக்கூட்டீட்டா வேறொண்ணுமில்லை,என சொன்ன நாளில் கவர் பிரித்து எடுத்த புது போன் இன்னும் அப்படியே இருக் கிறது கடந்த ஆறு மாதங்களாய்.

இவனது சட்டைப்பையில் இருந்து செல் போனை எடுத்து இரு சக்கர வாகன த்தின் பின்னால் அமர்ந்திருந்த மகளிடம் கொடுத்தான்,

ஆர்,எஸ்,பி பங்களாவின் இடது ஓரமாய் இருக்கிற மண் வெளியில்போய்க் கொண்டே,,,/

ரோட்டை விட்டு இப்படியாய் இறங்கிப் போவது கொஞ்சம் ரிலாக்ஸாகவே,,,/

சிவப்புக்கலர்டாப்ஸீம்,கறுப்புக்கலர்பேண்ட்டுமாய்அவளுக்குநன்றாகஇருந்தது. நட்டு வைத்த பூச்செடி ஒன்று வேருடன் கழன்று வந்து வண்டிக்குப் பின்னால் ஆசை கொண்டு அமர்ந்துருப்பது போல/

பூச் செடிகளுக்கு நேரமிருப்பதில்லை,தன்னைத்தானே திரும்பிப்பார்த்துக் கொள் வத ற்கும் கண்ணாடியில் பார்த்து திருப்திப்பட்டுக்கொள்வதற்குமாய்,/ நாம்தான் சொல்ல வேண்டியிருக்கிறது ”நன்றாக வளர்,நன்றாக மலர்,நன்றாக வாசம் வீசி நல்ல நிலையில் இரு” என,,,,,/

இவன் அப்படி ஏதும் சொன்னதாய் ஞாபகம் இல்லை,ஆனாலும் அதனதன் போக்கில் அதது/

காலையில் கொஞ்சம் சீக்கிரமாய் எழுந்து விட்டான்தான்,ஆமாம் ஏழு மணிக் கு எழுவது இப்பொழுது கொஞ்சம் சீக்கிரமாய் எழுவதற்கு சமமாய் ஆகிப் போகிற விஷயமாய்த்தான் தெரிகிறது,

முகம் கழுவி விட்டு டீக் குடிக்க அமர்ந்தலிருந்து நேரமாகி விடும் கொஞ்சம் தாமதித்தாலும்எனஇப்பொழுதுவண்டியில் செல்கிற வரைஅவசர அவரமாய்க் கிளம்பி வந்து கொண்டிருந்தான்,

எப்பொழுதும்வண்டியைஐம்பதுக்கு வேகம் கொண்டு ஓட்டியதில்லை. தேவை தான் எதையும் தீர்மானிக்கிறது போல,கொஞ்சம் மெதுவாகவே போங்கள் எனச்சொன்ன மகளின் பேச்சு காற்றில் கரைந்து போகிறதாய்/

எட்டு இருபது பஸ்ஸைப்பிடித்தால் ஐம்பது நிமிடம்அல்லது ஒரு மணி நேரத்தில் சிவகாசி பஸ்டாண்டிற்கு போய் விடலாம் ,பஸ்டாண்டில் சென்று இறங்கியவுடன் அங்கு ரெடியாக நிற்கிற ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்தில் ஏறினால் சரியாய் அரை மணியில் இவன் போய் இறங்க வேண்டிய இடமும் இடம் காத்த அலுவலகமும் வந்து விடும்,அதை விட்டால்கொஞ்சம் சிரமமே,,,,,/

”பஞ்சம் பிழைக்கப்போய் வா” என வேர் விட்ட அலுவலகம் இவனைத்தூக்கி சிவகாசியில் ஊன்றிய முதல் நாளன்று எப்பொழுது பஸ் எனத்தெரியாமல் சிறிது சிரமப்பட்டான்,

மறு நாள் ஐந்து நிமிடம் ஆகிப்போன தாமதம் இந்த பஸ்ஸை அறிமுகம் செய்து வைத்தது,தாமங்களிலும் கொஞ்சம் பலன் இருக்கிறதுதான் போலும் .பளிச்சென துடைத்து வைத்தது போல் இருந்த பஸ்ஸில் ஏறி காலையில் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுத்தான் போனான்.சிவப்பும் மஞ்சளும் கத்தரிப்பூக்க லருமாய் இலையுடன் சிரித்தப் பூக்கள் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் பூந்தொட் டிகள் இரண்டுக்கும் மத்தியிலாய் தொந்தி சரிந்து சிரித்த தங்கக்கலரிலான குபேரர் பொம்மையின் முன் சில்வர்க்கலரில் ஊதுவத்தி ஸ்டாண்ட் இருந்தது,அதில் எரிந்து முடிந்து போன ஊதுவத்திக்குச்சியின் அடி நுனிகள் கருகிப்போய்,,,,,/ தூரப்பார்வையில் விழிகள் இரண்டையும் அனுப்பி சாலை யின் நேர்கோடு பிடித்து கண்ணாடி வழியாய் பார்வைபடர்வு கொண்டு வட்டக் கட்டையை இறுக்கப்பற்றி ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுனர் நடத்துனரைப் பார்த்து அவ்வபொழுது ஸ்னேகமாய் சிரித்துக் கொண்டார்,

பஸ்ஸின் உள் புறம் முழுவதுமாய் துணி போட்டு போர்த்தியது போல் இடதும் வலதுமாய்வரிசை காட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்த சீட்டுகளின் மேல் உறைகளாக துணி தைத்துப் போட்டிருந்தார்கள்.

பஸ்ஸின் உட்புற மேலடுக்கில் இருபக்கமுமாய் எரிந்த விளக்குகளும் துடை த்து வைத்தது போல பளிச்சென இருந்தது இன்னும் அழகு சேர்ந்தது. கொஞ் சம் கூட்டத்தை சகித்துக்கொண்டால் பஸ் நகரும் ரதமே,

மித வேகமாகவும் இல்லாமல் ,அதிக வேகம் காட்டியும் செல்லாமல் நடு வாந்திர வேகமெடுத்துச் செல்கிற பேருந்து இளையராஜாவை கூடவே கூட்டி வந்தது,

“ஆகா இது ஒன்று போதாதா என்ன எவ்வளவு கூட்டத்திலும் போய் வரலா மே, கூட்டம் என்ன பெரிதாய் கூட்டம்,எல்லோரும் நம் போன்ற மனிதர்கள் தானே, அவர்களும் இவன் போல் ஆன் லைனில் செல் போன் வாங்கியவர் களாயும் ,மகள் அல்லது மகனுடன் இரு சக்கரவாகனத்தில் வந்து இறங்கிய வர்களாயும் இருக்கலாம், ஆனால் யாராய் இருந்தாலும் சிலர் பஸ்ஸிற்குள் ஏறிய மறு கணம் ஸ்நேகம் போர்த்தி விடுகிறார்கள்,போய் இறங்குற நேரத் திற்குள்ளாய் அவர்களுக்குள்ளாய் நெசவு கொண்டு விடுகிற உறவு என்ன வேகத்தில் பூத்து என்ன வேகத்தில் அமரும் என்கிற கணக்கெல்லாம் பொது வானவைகளுக்கு அப்பாற்ப்பட்டது போலும்.இதற்காகவே இந்தக்காலை நேரத் தில் இவ்வளவு அவசரமும் ஐம்பது கிலோ மீட்டர் தாண்டிச்செல்வதும், அவசியமாக இருப்பதில் கொஞ்சம் உடன்பாடே,,,/

ரிங்க்டோனின் சப்தம் அதிகமாக இருக்கிறது என,இவன் தான் புதிதாக ரிங் டோன் செட் பண்ணி வைத்தான்.

அதிக சப்தமில்லை என்றாலும் கூட போன் வந்திருக்கிறதை கவனப்படுத்தி விடுகிறது. மகள் பேசி விட்டு உங்களது நண்பர் என்கிறார்,

“நான் அவருடை மகள்தான் பேசுகிறேன் அப்பா வண்டி ஓட்டிக்கொண் டிருக் கிறார்என்பதைச்சொல்” எனக் கூறி விட்டுவண்டியை ஓட்டுகிறவனாய்,, இவன் வண்டியை நிறுத்திப் பேசினால் தாமமாகிப்போகும் செல்வதற்கு என நினைத்து போனை மகள் பேசி முடித்த பேச்சின் மிச்சத்தை இவன் பஸ்டாப் பில் போய் பேசுகிறான். என்ன செய்ய மனதையும் முழு மனிதனையும் ஆட்டி விக்கிற சக்தியாகவும் தனக்குள்ளாய் வசியம் செய்து வைத்துக் கொண்ட முழு பெட்டியாகவும் எப்பொழுது செல்போன் ஆகிப்போன நாளி லிருந்து காலை விழிக்கிற பொழுதுகளும் இரவு தூங்கச்செல்கிற வேளைக ளும் இப்படித்தான் ஆகிப் போகிறது, என்றாவது அல்லது ஏதாவது நாட்களின் பொழுதான நகர்வுகளில் இது நடப்பதில்லை கொஞ்சம்,இது போக பொது வெளிகள் தோறுமாய் இந்த செயல் ஒரு மேனியாவாய் தொற்றிக் கொண்டு திரிகிறதுதான்,

அன்றைக்கு ஒரு நாள் பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும் பொழுது இவனது அருகாமை இருக்கையில் அமர்ந்து வந்து கொண்டிருந்த வயதுப்பையன் ஒரு வன் செல்போனில் பேசிக்கொண்டு வந்தான், அவனது பேச்சைவைத்துயூகிக்க முடிந்தது எளிதாக, உன்னுடன் பேசிப்பேசியே எனக்கு ஜலதோஷம் பிடித்து விட்டது என்றான்,

மாற்றுப்பாலின ஈர்ப்பை காதலென நினைத்துக்கொண்டு பேசிப்பழகி வெட்ட வெளிகளிலும் சமூகத்தின் பொது இடங்களிலுமாய் தறிகெட்டு ஓடவிட்டுக் கொண்டிருக்கிற விடலைகளில் இவனும் ஒருவன் என நினைத்தவனாய் வேறு ஒரு இடம் தேடிப்போய் அமர்ந்து கொள்கிறான்,

செல்போனில் இன்னும் சமைத்துச்சாப்பிடுவது ஒன்று மட்டும்தான்இன்னும் சாத்தியமாகவில்லை.

இன்னும்சிறிது நாட்களில் அதுவும் வந்து விடலாம்.விஞ்ஞான வளர்ச்சி இரு முனையும் கூர் முனை கொண்ட கத்தி போல்தான்,அது காய்கறியும் வெட் டவும் ஆகும். கழுத்தையும் அறுக்கவும் உதவும், இப்பொழுது பலர் கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கிறது, செல்போன்,,,/

ஒன்றுமில்லை அதிகமாக அவரது பேச்சு/எப்பொழுது வருகிறீர்கள், எப்பொ ழுது சந்திக்கலாம் என்பதே அவரது பேச்சின் மையமாயும் ஆரம்பமாயும் இருக்கிறது,மையம் கொண்ட பேச்சின் ஆரம்பமும் முடிவுமான நெசவை மனம் தாங்கிக் கொண்டு.அவரது பேச்சின் நுனி பிடித்து சிவகாசியில் போய் இறங்கிய பொழுதின் நகர்வில் டீ சாப்புட்டுட்டுப்போகலாம் என்பதே அவரது பேச்சி ன் சுழியிடலாய் இருந்தது.

வீடு தவிர்த்து இது போலான பொது இடங்களில் அல்லது பொது வெளிகளில் பார்த்துக்கொள்கிறபோது இது போலாய் கேட்டுக் கொள்வதும் கேட்ட வார்த் தை வலுவாமல் வாங்கிக்கொடுத்தலும் பரஸ்பரம் ஏற்பட்டதுதானே,,,?

சிறு வயதுக்காரராய் இருந்தார்,இவனது மகனின் வயதை விட இரண்டு வயது வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம்.மெலிந்து ஒடுங்கிய தேகம்,குருந்தா டி வைத்திருந்த முகம்,வெளிக்கலரில் கட்டம் போட்ட சட்டையும் அடர்க் கலரில் அப்பாவியாய் ஒரு பேண்ட்டும் போட்டிருந்தார்,

அவர்அணிந்திருந்தசட்டைக்குபேண்ட் மேட்சா,பேண்ட்டுக்கு சட்டை மேட்சா,,, ,?  என்கிற விவாதமெல்லாம் இல்லாமல் என்கிற கருத்து வேறுபாடெல்லாம் தாண்டி நன்றாக இருந்தது,

அவரது கலருக்கும் அவரது உயரத்திற்கும் அவரதுஅவர் அணிந்திருந்த பேண்ட் சர்ட் நன்றாக இருந்தது,

“இல்ல சார் இப்பத்தான் பஸ்ஸீல இருந்து யெறங்குன ஒடனே டீக்குடிச்சி ட்டு வந்தேன், டீக்குடிக்கிறதுக்காக மெனக்கெடுறவிங்க நாங்க, குடிச்ச டீ நல்லா இருந்துச்சின்னு சேர்ந்தாப்புல ரெண்டு டீ குடிச்சிட்டு வந்தேன்.

நான் போயி டீக்கேட்ட நேரம் டீ மாஸ்டர் சாப்புடப்போயிட்டாரு,அவரு வர்ற துக்காக காத்திருந்து பாத்துட்டு சரி கெளம்பலாமுன்னு கெளம்பப்போற நேரமாப் பாத்து மாஸ்டர் வந்துட்டாரு.டிபன் சாப்புட்டு முடிச்சிட்டு,/

“என்னத்த சார்,கடைச்சாப்பாடு,வீட்டுல ஒரு கை தண்ணிச்சோத்த சாப்புட்ட ருசியும்,திருப்தியும்ஐநூறு குடுத்து கடையில சாப்புட்டாலும்கெடைக்கப் போற தில்ல, எனச்சொன்ன மாஸ்டர் போட்டுக் கொடுத்த டீ சாப்பிட நன்றாக இருந்தது,

”நல்லாயிருக்கு மாஸ்டர் என அவரிடம் சொல்லலாம் என ஆசைதான், ஆனா லும் சொல்லி விடவில்லை நேராக, மனதுக்குள்ளேயே பாராட்டிக் கொண்ட வனாய் டீயைக் குடித்து விட்டு நேர் கோடிழுத்தது போலாய் அலுவலக த்திற் குள் வருகிறான்.

நீண்டு விரிந்திருந்தது அலுவலகம்,ஒரு அலுவலகத்தி ற்கு தேவையான அத்தனையையும் அதனதன் இடத்திலேயே வைத்துக் கட்டியிருந்தார்கள்,

தரை பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் பார்ப்பதற்கு அழகாய் இருந்தது. அளவெ டுத்துவைக்கப்பட்டது போல் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டிருந்த சேர் டேபிள்கள்,மற்றும் கணிணிகள்,எழுது பொருட்கள்,பேப்பர் பேனா மேஜை கூடவே இவர்களுமாய் இருந்த நேரம் வேண்டாம் என்று சொன்ன போதும் வந்து விட்ட டீயைக்குடித்து விட்டு கூட்டை விட்டுக் கிளம்புகிற பறவையாய் சிறகு விரிக்கிறான்,,/

6 comments:

Thulasidharan V Thillaiakathu said...

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இப்போது ஆடம்பரமாய் ஆகிவிட்டதுதான்..

சிறகு விரித்து அவன் பறந்து சந்தோஷமாய் இருக்கட்டும்

கீதா

vimalanperali said...

அன்பும் பிரியமும்!

வலிப்போக்கன் said...

செல்போனில் உள்ள பேஸ் புக்தான் எனக்கு என் பிறந்த நாள் நிணைவூட்டி...

vimalanperali said...

பிரியங்கள் விளைக...!

திண்டுக்கல் தனபாலன் said...

11-வது விரல்....?!

vimalanperali said...

பதினோறாவது விரல்,
கேட்கவே கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது.
ஒற்றை வரியில் ஒரு வண்டிக்கருத்து,
நன்றியும் அன்பும்,/