26 May 2019

பள்ளியெழுச்சி,,,,,

தினமும் அதிகாலையிலாய் அவசரம் காட்டி எழுந்திருக்கத்தான் வேண்டியதி ருக்கிறது,

"அதிகாலையில எந்திருக்கிறது நல்ல பழக்கம்தான்,இல்லைன்னு சொல்ல, அதுக்காக காலையில மூணுமணி நாலு மணிக்கெல்லாம் எந்திரிச்சி வீட்டுல இருக்குற மத்தவுங்க தூக்கத்தக் கெடுத்தா எப்பிடி சொல்லுங்க,,,,,,,"?என்பாள் மனைவி,,,,,,

வாஸ்தவம்தான் அவள் சொல்லுவதும்,இவ்வளவு சீக்கிரமாகவும்,இவ்வளவு அவசரம் காட்டியுமாய் எழுந்திருக்க வேண்டும் என்பது இவனது ஆசை எல் லாம் இல்லை,

இரவு தூக்கம் வருகிற நேரமாய் ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து படுக்கைக்குப் போய் விடுவான். படுத்தும் விடுவான்,கையில் ஏதாவது புத்தகம் அல்லது மனைவி மக்களிடம் சின்னதான பேச்சு,குறுக்கிடல்,விவாதம்,,என இத்தியாதி இத்தியாதியாய் கொஞ்சம் பேசுவான்,கொஞ்சத்தின் நீட்சி சமயத்தில் நீள் கொள்ளும்,இல்லையென்றால்அறுந்து போன கயிறாய் பிரி பிரியாய்துகள்கள் காட்டி உதிர்ந்து ஒன்றுமற்றுப் போய் விடுவதும் உண்டு,

”தூக்கம் வருது போரடிக்காதீங்கப்பா”,என்பாள் தைரியமாக சின்னவள்,பெரிய மகளுக்கு இது போலாயும்,இது தாண்டியும் சொல்வதற்கு தைரியம் இல்லா மல் இல்லை,அவளைப்பொறுத்த அளவில் பெரியவர்கள் மனம் நோக பேசி விடக்கூடாது என்பதில் வெகு கவனமாய் இருப்பாள்.

”மனம் தோணுனதச்சொல்றதுல என்ன மனம் நொந்து போகும்,நீயா என்னத் தையாவது ஒரு வெட்டி பில்டப்பக் குடுத்துக்கிட்டுத்திரியாத ஆமா,,,” என்பாள். சின்ன மகள்.

”ஏய் எதுலேவெட்டி பில்டப்பு,வருஷமெல்லாம் நம்மள தோள்லயும் மார்லயும் தூக்கிப்போட்டு வளத்து ஆளக்குனவுங்க மனம் நோக படக்குன்னு பேசிறக் கூடாதுன்னு சொன்னா அது வெட்டி பில்டப்பாப்போச்சா ஒனக்கு” என்பாள் பெரிய மகள்,

”என்னத்ததான் நம்ம வெளையாட்டாவும் கேலிக்கும் பேசுனாலும் கூட அது அவுங்களுக்கு ஒரு நேரம் இல்லாட்டி ஒரு நேரம் சுருக்குன்னு பட்டுரும்ந் தானே,,,? என்கிற பெரிய மகளின் பேச்சிற்கு,,

“இதுநாள் வரை அப்பிடி ஒண்ணும் ஏங் பேச்ச தப்பாவும் கோபப்படும் படியா வும் எடுத்துக்கிட்டதில்ல அப்பா,,,, அவரு எப்பக்கோபப்படுறாரோ அதுநாள் வரைக்கும் ஓடட்டும் இப்பிடியே, இப்பயே எதுக்குப்போயி பேசுற வாய் வார்த் தைகளுக்கு கட்டுப்பாடு விதிச்சிக்கிட்டு,அப்பாவுக்கும் மகளுக்கும் யெடை யில பேசுற பேச்சு கூட ஒரு விதிமுறையோட லெப்ட்,ரைட் போட்டுத்தான் போகணுமுன்னு நெனைச்சா எப்பிடி,,,? என்ற சின்ன மகளின் பேச்சில் ஞாய மில்லாமல் இல்லை என தூங்கச்செல்கிற பெரிய மகளை ஏறிட்டுவிட்டு படுக்கச் செல்கிற இவனுக்கு எந்த நேரம் தூக்கம் வரும் என்பதில் உத்தரவா தமில்லை.

பத்து அல்லது பதினோரு மணிக்கெல்லாம் படுக்கையில் விழுகிறவனுக்கு தூக்கம் வரகொஞ்சம் நேரமாகிப் போவதுண்டுதான்,எவ்வளவுநேரம் என்பதை கடிகார முட்கள் கணக்கில் கொள்வதில்லை.

சுற்றிவருகிறமுட்கள் இவனின்விழிப்பையும் விழிப்பு செய்துகொண்டிருக்கிற வேளையையும் கணக்கில் எடுத்துக்கொண்டும் கண்ணுற்றுக் கொண்டுமாய்,,,

வீடு முழுவதுமாய் எரிந்து கொண்டிருந்த அத்தனை விளக்கு களும் அமத்தப் பட்டு எரிந்து கொண்டிருக்கிற ஒற்றை ஜீரோ வாட்ஸ் வீடெங்குமாய் மங்கல் காட்டிய வெளிச்சத்தை இடறின்றி காட்டிக்கொண்டாய்,/

மட்டுமாய் எரிந்து கொண்டிருக்க இடறின்றி தென்பட்ட வெளிச்சத்தின் வழி யே உருக்கொண்ட தேவதை இவன் கைகோர்த்துக்கொண்டு போய் ”உய்ய லாலா,,,”பாட்டின் இடையிடயாய் வருகிற முத்தங்கள் ,கட்டிப்பிடித்தலென்கிர எந்த பார்முலாவிற்குள்ளுமாய் அடைபட மறுத்தவர்களாய் இருவரும் ஒருவ ரை ஒருவரை தொட்டுகொள்ளாமலேயே எட்ட நின்று பாடுகிறவர்களாயும் ஆடுகிறவர்களாயும்,,,/மிகவும் எட்டி,எட்டிப்போகாதீர்கள்,வளர்ந்து நின்று பெயி ண்ட் காட்டி நிற்கும் சுவர் பிளந்து வீட்டின் வெளிப்புறம் போய் விழுந்து விடக் கூடும் நீங்கள் ஜாக்கிரதை,”என்கிற எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பாடலையும் டான்ஸையும் தொடர்கிறவனாகிறான்,

அரைதூக்கம்கொண்ட விழிகள் இரண்டுமாய் கண்டுகொண்டிருக்கிற கனவின் மிச்சத்தை வீடு முழுவதுமாய் சிதறி விதைத்து விட்டும் நட்டு விட்டுமாய் நாற்று முளைகொண்ட நாற்றாங்காலாயும்,விதை கொண்ட நிறை காடாயும் ஆகித்தெரிய வண்ண வண்ண விளக்குகள் பொருத்தி ஆங்காங்கே வரை கொ ண்ட ஓவியங்களில் பொதி கொண்ட உருவங்கள் உயிர் பெற்றேழுந்து வீடு முழுவதுமாய் சுவர் பாவி நடமாடுவதாயும், ரம்யம் கொண்டுமாய்,,/

ரம்யம் கொண்ட வீடு அவர்களின் நடமாட்டத்தை அவதானித்து,கண்டு களிப் பதாயும்.கண்டு களிப்பின் எள்ளலில் துள்ளல் கொண்ட வீடுகளின் சுவர்களெ ங்குமாய் பிளவு கொண்டு வாய் திறந்து மூடுவதாய் இருந்தது.

திறந்த வாய்களில் சில துர்நாற்றம் வீசியும் சில நறுமணம் கமழ்ந்துமாய்,,,,/

கமழந்த வாய் கமழ்ந்த படி இருக்க ,துர்நாற்றம் கொண்டது துர்நாற்றம் வீசிய படி காணப்பட அழகிய உறையாய் காட்சி கொண்ட வீட்டின் பிளவு கொண்ட சுவரிலிருந்து திரும்பவுமாய் வெளி வந்த தேவதை இவனின் தலை மீதும் மார் மீதுமாய் மென்கரம் கொண்டு தடவி விட்டும், மென்மையாய் பூச்சுட்டு வது போல் இவன் தலை கோதி விட்டும் இவன் காதருகில் வந்து ஏதோ கிசுகிசுத்து விட்டுமாய் வான் விரைந்து பறந்து மறைகிறதாய்,

இப்பொழுது பிளவு கொண்ட சுவர்,,,வண்ணம் கொண்ட நாற்றாங்கால். அத்து வானம் காட்டி விரிந்து விதைகொண்ட நிலம்,அவற்றில் பழுதின்றி காணக் கிடைத்த மனிதர்கள் இத்தியாதி,இத்தியாதி எல்லாம் தாண்டி,,,,,கால் தரை யில் பட்ட பொழுது யார் வந்து என்ன சொன்ன போதிலும் இது இதாய்த்தானே நடைமுறை காட்டி நிற்கிறது இல்லையா,,,,,,?

”தூக்கம் தூக்கம் தூக்கம்,,,,,அது போயின், துக்கம்,துக்கம்,துக்கம்,,,, எனக்கூட பாட்டு இயற்றி விடலாம் போல,,,/ எது வந்து என்ன சொன்ன போதும்தான் என்ன,,,,?கண்ணுற்றுக் கொண்டு வருகிற வேளையில் அயர்வேதும் வந்து விடாமல் இருக்க தன்னைத்தானே புதுப் பித்துக் கொள்வது போல் பெண்டுல த்தை ஆட்டிக் கொண்டும் ஓய்வில்லாமல் சுற்றிக்கொண்டுமாய்,,,,/

சுற்றிக் கொண்டிருக்கிற கடிகாரம் தன்னைத்தானே ஒரு முறையும் இவனை ஒருமுறையுமாய் பார்த்துகொண்டே சுற்றிக்கொண்டிருக்கிற வேளை ஒன்று இரண்டு அல்லது மூன்று மணி என தூங்கிப்போவான்,

அழுத்தம்கொண்டநினைவுகள்,சுற்றிச்சுழல்கிறகனவுகள்,மனம்நெசவுகொள்கிற இளையராஜாஅவர்களின் பாடல்கள், சினிமா இசை வீடு அக்கம் பக்கம் அலுவ லகம்,மற்றும் உறவுகள் நண்பர்கள் மற்றும் தோழர்கள் என இத்தியாதி இத்தி யாதியாய் சேர்ந்து போகிற எல்லாம் மனம் காத்துசூழ்ந்து கிடக்க ஆழ் சூழ் உலகின் தாலாட்டில் மனம் கொண்டு அப்படியே படுத்துக் கிடப்பான்,

தூக்கம் உடலுக்கு மட்டும் அல்லவே,மனதுக்கும் சேர்ந்ததுதானே,,,, எனும் போது…மனைவி சொல்கிறாள்,

”நீங்க சொல்றது வாஸ்தமுண்ணே வச்சிக்கிருவோம்.ஆனா தூக்கம் வரலைங் குறதுக்காக அதோட பிடியில நீங்க போயி இருந்துக்கிட்டா எப்பிடி,கொஞ்சமா வது தூக்கம்வரல,வரலைன்னு தூக்கம் வர்ற வரைக்கும் டீ,வி பாக்க, நெட்டுப் பாக்கன்னு வெத்து ஒடம்போட கைலிய மட்டும் கட்டிக்கிட்டு ஒக்காந்துக்கிட்டு தெறந்த வாயி மூடாம ஒக்காந்துக்கிட்டு படம் பாத்துகிட்டு அழுதுக்கிட்டும், சிரிச்சிகிட்டும், உணர்ச்சி வசப்பட்டுக்கிட்டுமா இருந்தா எப்பிடி,,, என்னமோ இப்பத்தா ஸ்கூல்ப்புள்ள போல நெனைப்பு ஒங்களுக்கு, பாக்குறதுல பூராம் ஒன்றிப் போயிறணுமுன்னு நெனைச்சா,,,?அஞ்சி கழுத வயசாச்சி, இன்னும் போயிஎன்னமோ,,,,,,என்கிறஅவளின்பேச்சிற்குஏய்,,,,,என்னஇது,நான்என்னமோ
வேணுமின்னேஇந்தஉணர்ச்சிகளப்பூராம் வாங்கி எனக்குள்ள வச்சிக் கிட்டது போலஇல்லபேசுற,எல்லாத்துக்குள்ளயும்இருக்குறதுதா,எனக்குள்ளயும்இருக்கு,  என்ன ஆளாளுக்கு கொஞ்சம் வித்தியாசப்படுது, அவ்வளவுதான்,

”அந்த வித்தியாச விகிதம் எனக்குள்ள கொஞ்சம் கூடுதலா இருக்கலாம்,இதுல வயசு என்ன வயசு பெரிசா, வயசாயிருச்சேங்குறதுக்காக உணர்ச்சிகளக் கழட் டி கீழ வச்சிறவா முடியும்,,,,?இல்ல சட்டை ஜோப்புல வச்சிக்கிட்டு அலைய முடியுமா சொல்லு,அதப்பாக்குற நாலு பேரு அப்பறம் அது என்ன பொடப்பாத் தெரியுதுன்னு வந்து கேப்பான், கொஞ்சம் தைரியமானவன் பக்கத்துல வந்து தொட்டுப் பாப்பான், அதுல ஒரு சங்கடம் வந்து சேந்து போகும்,அப்பறம் நாடு பூராம் பொடப்பா இருக்குற சட்டை ஜோப்புகள ஆளாளுக்கு தொட்டுப் பாத்துக் கிட்டு, அமுக்கிப்பாத்துக்கிட்டும் திரிவாங்க, அது ஒரு அனாவசியப் பிரச்சனை யா உருவெடுத்து நிக்கும்.

“அப்பறம் அது டீ வி பேப்பருன்னு உருவம் மொளச்சி அன்றாட வாழ்க்கைய கெடுத்துக்கிட்டு நிக்கும்,ஒரு காலகட்டத்துல சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஆகி நாட்டுல நிம்மதி போயிரும்,

”அப்புறம் ரொம்பவும் உணர்ச்சி வசப்படாதீங்க,அப்பிடியே உணர்ச்சி வச்சப்பட் டாலும் அத சட்ட ஜோப்புல வச்சிக்கிட்டு அலையாதீங்கன்னு சட்டம் போட வேண்டிவந்துரும்,இதெல்லாம்எதுக்குஅனாவசியமான்னுதான்யோசிச்சிஇப்பி டியே வர்ற உணர்ச்சிகள் அழுகையா,சிரிப்பா இன்னும் பிற விஷயங்களா மாத்தி வச்சிக்கிறது.,,,,எனச்சொன்ன நாட்களில் தூக்கம் வரவில்லை.

அதற்கு மேல் இவன் என்ன செய்வான் பாவம், ஏறிப்போகி விட்ட வயதிற்கு என்னென்னமோ என வந்து போகிறது,

சிந்தனையாய், கனவாய், நனவாய், ஏறிப்போய் விட்ட மன அழுத்தமாய் இன் னும் என்னென்னமோவாய்,,,,ஆகிப் போய்விட அதிகாலை மூன்று மணி வரை யாய் முன்னுதாரணம் காட்டி நிற்கிறது,

4 comments:

 1. சிந்தனையாய், பயமாய், துக்கமாய், பட்ட துன்பமாய். கோபமாய் இவைகளுடன் ஏறிப்போய் விட்ட மன அழுத்தமாய் இன் னும் என்னென்னமோவாய்.....

  ReplyDelete
  Replies
  1. அன்பும் பிரியமும்!

   Delete
 2. தூக்கம் வராத நீண்ட இரவுகள் அவஸ்தை.

  ReplyDelete
  Replies
  1. பிரியங்கள் விளைக!

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...