3 Jun 2019

மிடறுகளின் அடர்வுகள்,,,,,,

பண்ட் ஆபீஸிற்கு முந்தைய டீக்கடையில்தான் வழக்கமாக டீக்குடிப்பான், ருசியான இருக்கிறது,

குடிக்கிற ஒவ்வொரு மிடறுக்குள்ளுமாய் ரகசியமாய் சுவையை ஒளித்து வைத்திருந்தார்கள்.

அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது,வெளிப்படையாய் இதுதான் இதன் ருசி என அறியக்காண்பிக்காமல் இப்படியாய் சாப்பிடும் பொழுது தெரிவதும், தெரிய வைப்பதும் நன்றாக இருக்கிறதுதான்,

பார்த்ததும் படோடோபமாக இருப்பது பொய்த்துப்போவதும்,அமைதியாக இருப் பது ஜெயித்து விடுவதும் ருசி விஷயத்தில் மெய்யாகிப்போகிறதுதான்.

கொடுத்த சுவையின் தித்திப்பும் அடர்த்தியும் கண்ணாடிக்கிளாஸில் இருந்த கொஞ்சமேயான திரவத்தை நிறைந்து இருப்பதாய் காண்பித்தது,

நாவின் சுவைறும்புகள் தொட்டு உள்ளின் உள்ளாய் பயணிக்கும் பொழுது ஏற்படுகிற சுகமே தனிதான், எழுதி வைத்து விடலாம் மனதை/

பெரிதாயும் அழகு காட்டியும் சுத்தமாகவும் இருந்த கடையில் எல்லாம் வை த்திருந்தார்கள் அரிசி பருப்பு,பலசரக்கு தவிர்த்து /

வலது கையில் வைத்துக் கொண்டிருந்த டீ டம்பளருடன் இடது கையால் கழுத்தைவளைத்துப்பிடித்து”டீரொம்பநல்லாயிருக்கு”,,,,,,,,,,,எனஒரு அழுத்தம் கொடுத்துச்சொல்லும் போது “ஊம் இருக்கும் இருக்கும், டீக்குடுக்குற எனக்குத் தெரியாதா நான் குடுக்குற டீ எப்பிடி இருக்குமுன்னு,இப்ப டீ நல்லா இருக் குன்னு சொல்லவா வந்தீங்க”,,,,,,என இழுத்துப்பேசியபேச்சின்ஊடாய் ஜன்னல் வழியாக வந்த காற்று முகத்தில் மோதி குளிர்வூட்டியது.

வெயில் காலத்தைய குளிர்,அக்னி நட்சத்திரம் முடிந்த இரண்டாம் நாள் அதிகாலையாய் அனுபவிக்கக்கொடுத்து வைத்திருக்கிற குளிர்.

மேனியெல்லாம் வெக்கையும் வேர்வையும் போர்த்தி தன் அடர்வு காட்டி பிடிவாதம் கொண்டு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாய் கோடையை பூமியில் இறக்கி வைத்துவிட்டு போயிருக்கிற நாட்களின் நகர்வுகளையும், அதன் இறுக்கத்தையுமாய் இந்த குளிர் சிலிசிலுப்பு கொஞ்சம் இதம் காட்டி யது,

குளிர்வை ஏற்றுக் கொண்ட மனமும் உடலும் ஜன்னலின் வழி வெளி சென்று படர்ந்தோடி அத்து வானங்களில் மிதந்து திரிவதாய்,.

காலை நேர இளம் குளிர்வும்,குளிர்வின் மிதத்தலும் கிழக்கின் மேகம் பிளந்த இளஞ்சூரியனின் எட்டிப்பார்த்தலும் கலவை கொண்ட மனதிற்கு இதம் காட்டி யதாய்/

மேலிருந்தது வந்து இறங்கிய கிரணங்கள் பூமியில் பட்டு விரிந்து போர்வை போர்த்திக்காணப்பட்டதாய்,,/

மிதத்தலிலும் மிதத்தலின் சுகந்தத்திலுமாய் சென்று கொண்டிருந்த போது வெகு அருகாமை காட்டி இவனருகாய் பறந்து போய்க்கொண்டிருந்த பறவை களில் சில இவன் தோள் உரசிச் சென்றும் ,இவன் காதருகே வந்து கொஞ்சு மொழி பேசிச் சென்றுமாய்/

தனது ஜோடியிடம் பேசமறந்த அல்லது பேச விட்டுப்போன மிச்சத்தை யாரிட மாவது சொல்லித்தீர்க்க வேண்டும் என்கிற கட்டாய நிலையில் இவனிடம் சொல்லிச்சென்றிருக்குமோ என்னமோ தெரியவில்லை.

சொல்லிச் சென்றதை அள்ளி அணைத்து அருகில் வைத்து நெஞ்சம் நிறைத்து தாலாட்டி மஞ்சம் காட்டி சீராட்டி வைக்க ஆசை கொள்வதற்குள்ளாய் எட்டப்பரந்து போய்த்தான் விடுகிறது,

அடை கொண்ட நெஞ்சங்களில் முளை கொண்டு விடுகிற ஆசைகளை யார் அறிய யார் யாருக்குக் கொடுப்பது எனத் தெரியாமல் அல்லாடுகிற ரகமாய் ஆக்கி வைத்து விட்டு போனதாய் பறவைகள்/

அது மட்டுமா,எட்டிப்பிடித்தால் கை கொள்ளாமல் இருக்கும் அவைகளை அள்ளிப்பிடிக்க ஆசை கொள்கிற நேரமாய் வேகம் காட்டியும் கண்ணடித்து மாய் பறந்து விடுகிறது.

தூரத்து பால்க்காரரின் சைக்கிள் மணி சப்தம் சங்கீதமாய் கேட்கிறது,கால் முளைத்து வந்தசங்கீதம் இவன் காதருகில் வந்து கொஞ்சம் செல்லமாய் ரீங் காரமிட்டு காலையின் மென்மை அர்த்தமாக்கியும் அடர்த்தி எற்படுத்தியுமாய்,

புத்தம்புதுகாலை,,,,,,,,,லல்லல்ல,லாலா,தன்னன்னன்னனானே,,,,,,,,முளைத்திரு
ந்த இறக்கையை கழட்டி வைக்க மனமில்லாமல் கடக்கிறான் அவ்விடத்தை/

அடுக்கி வைக்கப்படிருந்ததபேலாக்களும் ஆர்மோனியமும்,கிடாரும்,வயலி னும் வீணையும்,ட்ரம்ஸீம் இன்ன பிற இசைக்கருவிகளுமாய் இவனை அவ்விடம் விட்டு கடக்க விடாமல் மனம் பிடித்து இழுப்பதாய்,

முன் வேகம் கொண்ட ஒற்றை பெண் முன்னாய் வந்து மீட்டட்டுமா வீணை யை எனக் கேட்டதாய் அறிகிறான்,

வேண்டாம் தேவதையே,வேண்டாம்,அப்படியே இருக்கட்டும்,பொதி கொண்ட சிலவைகள் மீட்டப்படாமலும் அவைகளை மீட்ட ஆளில்லாமலுமாய் இருப் பது ஒரு விதத்தில் சுகமும் கனம் கொண்ட எதிர்பார்ப்புமே,,,.

அவைகலை உடனே மீட்டி எடுத்து பொய்த்துப்போகச்செய்வதில் எனக்கு விருப்பமில்லை என சொல்கிறான்,

அருகிலிருக்கிற வீதிகளிலும் அருகிலுமாய் அளவாய் அள்ளித் தெளித்த வாசல் தண்ணீர் வானத்திலிருந்து தூவானம் போட்டதாய் தெரிகிறது,

போட்ட தூவானம் சில்லிட்டுப்போக தெளித்த நீரை உள் வாங்கிய பூமிக்கும் அள்ளித் தெளித்த கைகளுக்குமாய் இருந்த மென்னுறவு நெசவு கொண்டு படர்ந்து காணப்பட்டதாயும் மென்மை காட்டிச் செறிந்த பூக்கள் பிரி கொண்டு மொத்தமாய் ஒரே நேரத்தில் பொழிந்து மழையாய் தூவியதாய் தெரிந்தது,

வரைந்து வைத்த ஓவியங்கள்தான் வீடுகளின் வாசல் முன்பு நட்டு வைத்த கோலமாய் மழைதூறலுக்கு ஊடாய் தெரிகிறது.

எந்தக்கற்றலுமின்றி இவ்வளவு அழகாய் கோலம் போட அவர்களால்தான் முடியும் போலும்.

வீதிகளின் இருபக்கமுமாய் ஊன்றி வைத்திருந்த வீடுகள் அல்லாத வெற்றிட த்தில் முளைத்து அடை கொண்டிருந்த முள் மரங்கள் தன்னை காத்திரம் காட்டி அடையாளப்படுத்திக்கொண்டிருந்தன.

மண்ணில் முளைவிட்டிருந்த மரங்கள் இரண்டை தன் பலம் காட்டி மிதித்துப் போட்டு விட்டும் முறித்து எறிந்து விட்டுமாய் முளை கொண்டிருந்தமுள் மரங்கள் தன் பலம் காட்டி ஆழத்தின் ஆழம் வரை வேர் இறக்கிச்செல்வதாய் காணக்கிடைக்கிறதுதான்,

ஊர்தலின் முடிவில் வந்து விட்ட நீர் நிலையில் குதித்த போது நீரின் உள் உறிஞ்சல் இவனை உள்ளின் உள்ளாய் ஆட்க்கொண்டு கைபிடித்து இழுத்துக் கொண்டு போய்நீந்திக் கொண்டிருந்த மீன்களையும் ஆக்டோபஸையும் இன்ன மும் பிற நீர் வாழ் உயிரியையுமாய் காண்பித்து கூட்டிகொண்டு வருவதாய்,

ஆழம் கொண்டவைகள் யாவும் எனக்கே சொந்தம் என மன நிமிர்வு காட்டி நீந்தித்திரிந்தவைகள் யாவும் இவனைச்சுற்றிக்கொண்டு குசலம் விசாரித்ததா யும் ஆழ் மனங்களில் நங்கூர மிட்டதாயும்,/

சுற்றி வந்தவைகளில் சேட்டை கொண்டது இருக்கும்தானே கண்டிப்பாக.

கொஞ்சம் கடித்தால் சரி,போனால் போகிறது எனலாம்,ஆனால் இடை விடா மல் கடித்துக்கொண்டே இருந்த இரண்டு கடித்தலில் கொஞ்சம் கிசும்பும் காட் டியது,

அடப்போய் விடு தூரமாய் என் அதனிடம் ,அங்கெல்லாம் கடித்து வைத்தா யானால் எங்கு போவது நான் பின்னே,,,என்கிற கேள்வியுடனும் இரைஞ்லுட னுமாய்,,,,/

ஆபத்தற்றவைதான் போலும் மீன்களும் ஆக்டோபஸீம் என நினைத்துக் கொ ண்டிருந்த நேரத்தில் வேகம் காட்டி வந்த ஆக்டோபஸ் ஒன்று இவனை சுற்றி வளைத்துக்கொள்ளஅதிலிந்து தன்னை விடுவித்துக்கொண்டவன் தண்ணீரின் மேல் நோக்கி மூச்சைப் பிடித்துக்கொண்டு நீந்தி வருகிறவனா கிறான்,

தம் கட்டிய மூச்சின் விடுவிப்பு சமயலறையில் வந்து மையம் கொள்ள என்ன தண்ணி,மீனு,ஆக்டோபஸா,,,அடமுட்டாமனுசாஇதெல்லாம்எனக்கும்தோணாம இல்லை.இல்லைன்னா இப்படியா கற்பனைபண்ணா எனக்கும் ஆசை இல்லாம இல்ல,ஆனா அப்பிடியே கற்பனை லோகத்துலயே திரிஞ்சிற முடி யாது இல்லையா,யதார்த்தத்துக்கு வந்து தரையில கால் ஊனி நிக்கணுமில்ல, அதுனாலத்தான் அங்கெல்லாம் போறதில்ல.போனாலும் பெரிசா ஒண்ணும் மனம் மாற்றம் வந்துறப்போறதில்ல,ஆனா சமையல் கட்டே கதின்னு கெடக் குற எங்களுக்கு அது மாதிரி போகக்கெடைச்சா நல்லது தான்,என்றாள்.

”குடுத்த டீயக்குடிச்சமா, காலி டம்பளர வச்சிட்டு வேலயப் பாத்தமான்னு இல்லாம,இப்பிடிசமையல் கட்டுல வந்துராவடிபண்ணிக்கிட்டுஇருந்தா எப்பிடி காலங் காத்தாலஅஞ்சி மணிக்கு,,,,? என்கிற பேச்சிற்குஅவள் கன்னம் பற்றிக் கடிக்கிறான்,

சேலை நன்றாக இருந்தது,எப்பொழுதும் அவள் விரும்பிக்கட்டுகிற காட்டன் புடவை.

சின்னதும் பெரியதுமான பூக்களில் இரண்டு இவனைக் கண்டதும் நாணம் கொண்டு புடவையிலிந்துகொஞ்சம் விலகி உதிர்ந்து தரை தொடுகிறதாய்,,,,/

தொட்ட பூக்களிலிருந்து கழண்ட இதழ்கள் அவ்விடத்தில் அடை கொண்டு நிற்பதாய்,,,,/

உதிர்ந்த வேகத்தில் தரை சேதம் ஆகிப்போய் விடக்கூடாது என்பதற்காய் திரும்பவுமாய் எடுத்து புடவையில் ஒட்ட வைத்துவிடுகிறான்.இதழ்களை,,,/.

இதழ் உதிர்ந்த பூக்கள் மலர்ந்து புடவையை அழகுபடுத்திக்காட்டியதாயும் அதன் இடத்தில் போய் ஒட்டிகொண்டதாயும்/

அப்பொழுதுதான்குளித்துவந்திருந்தாள்,அளவோடுபூசியிருந்தமஞ்சள்அவளது அழகிற்கு மேலும் அழகு சேர்த்ததாய்,,/

ஏய் மஞ்சக் கெழங்கு என காதைப்பிடித்துத் திருகியவனை ”சும்மா இருங்க, அந்தமானிக்கி, இப்பத்தான் மீசைஅரும்பி ஆசையக் கொண்டாந்து கண்ணு முன்னால படம் காட்டி நிக்கிதோ,,,,”என இடது பக்க முகத்தில் குத்திய போது லேசாய் வலித்தது.

”கன்னத்துக்கு கன்னம் எப்பிடி,நீங்க கடி நான் குத்து….” என கண்ணடிக்கிறாள்,

சிமிட்டிய கண்ணின் பார்வை சுருள் கொண்டு படர்ந்து பாவி தன் இருப்பு கா ட்டி இவனை வந்தடைந்த போது கைதாங்கியிருந்த டீடம்ளரை கீழே வைத் து விட்டு இரு கைகளாலும் அவளை இறுக அள்ளி கட்டிக் கொள்கிறான்,

”என்னவாம் ஐயாவுக்கு,,,? ”ஹோட்டல்ல இன்றைய ஸ்பெஷல் ரவா தோசை ன்னு”எழுதிப்போட்டுருக்குறது மாதிரி வீட்டுல இன்றைய ஸ்பெஷல் இதுவா,,,” என திரும்பவுமாய் அவள் கண்ணடித்த போது அப்படியே அவளது கைகளில் சரிந்து சாய்ந்து விடுகிறான்,

சாய்ந்தவனை தூக்கி நிறுத்தி வைத்து டீ டம்ளரை எடுத்து கையில் கொடு க்கும்பொழுது பெரியவள் வந்து விடுகிறாள்தூக்கத்திலிருந்து விழித்தவளாய்,/

எப்பொழுதும் கொஞ்சம்தாமதமாகத்தான் எழுந்திருப்பாள்,

அவளது கல்லூரிப்பாடங்களை முடித்து விட்டு படுக்கைக்குச்செல்லும் போது தினமும் இரவு பணிரெண்டு அல்லது ஒரு மணியாகிப் போகும்.

இதனால் காலையில் தாமதமாக அவள் எழுவது அன்றாடங்களில் வாடிக்கை தான்,

ஆனால் இன்றைக்கு இந்த அஞ்ரை மணிப் பொழுதிற்கு எழுந்து வந்தவள் சொல்ல வந்ததை விட்டு விட்டு “என்ன இது இளமை உஞ்சலாடுதாக்கும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும்.வீட்டுல நான் ஒருத்தி இங்க வெளைஞ்சி நிக்கி றேங்குறத மறந்துறாதீங்க,ரெண்டு பேரும் வெளியில சீரியஸா இருக்குறது போலகாண்பிச்சிக்கிட்டுநாங்களெல்லாம்தூங்கிப்போனஇப்படியானவேளையாப் பாத்து கொஞ்சிக்கிட்டுத் திரியிறீங்களாக்கும் என்கிறசிரிப்பின் ஊடே ”ஏய் போடி அங்கிட்டு ஏன் புருசன நான்கட்டிக்கிறேன், அதுல ஒனக்கு எங்கிட்டு இருந்து வருது பொறாமை,வந்தமா தண்ணியக் குடிச்சிட்டுப் போயி தூங்குன மான்னு இல்லாமா என்ன வெட்டிப்பேச்சு” என பொய்யாய் கை ஓங்கும் போது மகளும் பொய் பயம் காட்டி படுக்கைக்குப் போய் விடுவாள்.

ஒரு மழை நாளின் மாலைப் பொழுதில் அலுவலகம் விட்டு வருகிற பொழுது கொஞ்சம் சோர்வாய் இருக் கிறதென டீ சாப்பிட நினைத்தான்,

வைரம் கடையில் எப்பொழுதும் டீகுடிப்பது வழக்கம்,வர வர அங்கு கூட்டம் அதிகமாகித் தெரிகிறது, நிற்பதானால் கூட ஒரு சாய்த்துத்தான் நிற்க வேண்டி யதிருக்கிறது,

அப்படி நின்று கொண்டு டீயை வாங்குவதற்கு ஒரு தனி சாமர்த்தியம் வேண் டியதிருக்கிறது

டீயை வாங்கி வைத்துக்கொண்டு நிம்மதியாக குடிக்கக்கூட முடிவதில்லை,

இது போலான கடைகளில் கொஞ்சம் ஆசுவாசம் காட்டியும் நிம்ம தியாயும், அமர்ந்து குடிக்கவுமாய் முடிகிறது என நினைத்த நாளிலிருந்து இந்த டீக்கடை யில்தான் பெரும்பாலுமாய்,,,,/

இவன் டீக்குடிக்கச்செல்கிற தினங்கெளில்லாம் பெரும்பாலுமாய் அவனைப் பார்த்திருக்கிறான்,

பத்திற்கும் மிகாத வயது,கொஞ்சம் அழுக்குப்படர்ந்த உடல்,வாரப்படாத தலை முடி,,,என்கிற மிகை படா அடையாளத்துடன் காணப்படுகிற அவன் நடுக்குற கைகளுடன்வடையைபிய்த்துச்சாப்பிட்டுக்கொண்டும்,டீயைஉறிஞ்சிகுடித்துக் கொண்டுமாய்,,,,/

7 comments:

ஸ்ரீராம். said...

ம்ம்ம்.........

Thulasidharan V Thillaiakathu said...

வர்ணனைகள் நன்றாக இருக்கு

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

டீ வாசனை இங்கு வருகிறது தோழர்...

vimalanperali said...

வரட்டுமே.டீயை மட்டுமா கூடவே மனிதத்தையும் கூட்டி வருகிறதுதானே?

vimalanperali said...

நன்றியும்.அன்பும் சார்!

vimalanperali said...

பிரியங்கள் சார்!

வலிப்போக்கன் said...

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து டீ குடிக்கிற பழக்கம் இருந்ததில்லை.. ஆனால் டீ குடிப்பவர்களை ஆர்வமாய் பார்ப்பது உண்டு டீயும் புகையுமாய்...ஆனால் இங்கு வடையும் டீயுமாய்....