13 Jun 2019

கூடடைவு,,,,,

உட்கார சீட் கிடைத்து விடுகிறது.ரோஸ் கலர் வைத்த சீட், ஒன்றன் பின் ஒன்றாய் வரிசை காட்டி அடுக்கப்பட்டிருந்த சீட்டுகள் வலதும் இடதுமாய் மனிதர்களை அடைக்கலம் கொடுத்து உட்காரவைத்திருந்தது,

கொஞ்சம் நிம்மதியாயும்,சந்தோஷமாயும் இருந்தது,கூடவே ஓடோடி வந்து ஒட்டிக்கொண்ட ஆசுவாசமும்/

சந்தோஷமும், ஆசுவாசமும்,நிம்மதியும் லேசில் கிடைப்பதில்லை,ஆகவே கிடைக்கிற பொழுது கைப்பற்றிக்கொள்ள வேண்டியதுதான்.ஆசுவாசத்தையும் நிம்மதியையும் சேர்த்துக்கொண்டால் கூடுதல்.

கூடுதலாய் கொஞ்சம் சோறு,கூடுதலாய் கொஞ்சம் கூட்டு,கூடுதலாய் கொஞ் சம் மட்டன் இல்லையென்றால் சிக்கன் என கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்துக் கொண்டு சுவை ஏற்றிக்கொள்வது போல்,,./

ஏன்இப்பிடி கறி கறின்னு உயிர விடுறீங்க,அதான் போனவாரந்தான எடுத்துச் சாப்ட்டீங்க,அதுகுள்ள என்ன நாக்கு அரிப்பெடுக்குதாக்கும்,,,?என்கிற மனைவி யின் கேள்விக்கு சாப்புடுறது வாயி,அத ருசி பாக்குறது நாக்குன்னு வச்சாலும் அத வேணுமின்னு கேக்குறது மனசுதான,,,,இல்லையா,,?என்பான்,

வீட்டிலிருந்து கிளம்பும் போது கேட்க விட்டுப்போன இளையராஜாவின் பாட லின் மீதி இங்கு தொடர்வதாய் தெரிகிறது,

செல்போனில் பாடிக்கொண்டிருந்தார்கள்,எஸ்,பி பாலசுப்பிரமணியம் அவர்க ளும் ஜானகி அம்மாவும்,அடுத்தடுத்ததாய் வந்த சித்ரா அவர்களும் ஜென்ஸி யும் மனோவுமாய் இன்னும் இன்னுமான பாடகர்களும் இளையராஜாவின் இசைக்கு பாடல் கோர்த்துக் கொண்டிருந்தார்கள்,

டீக்கடைகள் இரண்டு இருக்கின்றன,இவன் பஸ்ஸிற்காய் காத்து நிற்கிற அதே வரிசையில் ஒன்றும் ,எதிர் சாரியில் காட்சிப்பட்ட கடை ஒன்றுமாய்/

எதிர்சாரியில் காட்சிப்பட்ட கடையில் டீ எப்பொழுதும் நன்றாக இருக்கும்.

ஒரு குடிக்கான்,ஒரு கடிக்கான்,,,,,என டீயுடன் சேர்த்து வடை சாப்பிடுவது இவனுக்கு வழக்கமாகிப்போனது,

முன்பெல்லாம் கொட்டிக்கொடுத்தாலும் கூட வடை சாப்பிட மாட்டான் டீக் கடையில்/இப்பொழுது என்னவோ அப்படி ஒரு ஆசை,

வயது ஏறா ஏற இப்படியான ஆசைகள் மனம் சூழ்ந்து கொள்ளும் போலும்.

அந்த எதிர் சாரிக்கடையில் டீயா, வடையா எது இவனை ஈர்த்தது என் தெரியவில்லை.ஆனால் எதையும் விட்டு விட்டுச்சாப்பிட்டதில்லை இது நள் வரையில்/

கடை வாடகை ,கரண்ட் பில்,வேலையாள் சம்பளம்,,,இது போக டீத்தூள், சீனி, வண்டித் தண்ணி வடைக்கு என இன்னும் இன்னுமாய் ஆகிப்போகிற செலவி ற்குள் கடை தள்ளாடுகிற பொழுது அதை தூக்கி நிறுத்துவது இவனைப்போல் டீ சாப்பிடுபவர்களின் எண்ணிக்கைதானே,,?

வியாபாரத்தைதீர்மானிப்பதுஇவர்கள்போலானவர்களின்எண்ணிக்கைஎன்றால் எண்ணிக்கையில் கூடி குறைந்து வருகிறவர்களுக்கு ருசி கூட்டி டீ தருவதும், வடை காட்டுவதும் கடைக்காரர்களின் பொறுப்பாகிப் போகிறதுதான்,

ஆனால் பஸ்ஸிற்கு காத்து நிற்கிற வரிசையில் இருக்கிற கடையில் டீ கொஞ்சம் சுமார்தான்,ஆனால் வடை எதிர்சாரி கடையை விட நன்றாக இருக் கும்,

”நம்ம தம்பிதான், நாந்தான் கடை வச்சிக்குடுத்தேன்,ஆளாகுறவரைக்கும் நம்மகாலச்சுத்திக்கிட்டுத்திரிஞ்சான்,இப்பஆளாயிட்டான்,நாளைக்கிஅவனுக்கு ஒரு குடும்பம் ,புள்ளை குட்டின்னு ஆகிப்போச்சுன்னு வையிங்க, இந்தக் கடை யில வேலை செய்யிற வருமானம் மட்டும் எப்பிடி பத்துமுன்னு கேக்குறேன், அதுனாலத்தான் அவனுக்குன்னு ஒரு கடைய வச்சிக்குடுத்தேன்,”

”இங்க நம்ம கடைக்கி வந்து போறவரு ஒருத்தருகிட்ட சொல்லி வச்சிருந்தே ன், இன்னும் சொல்லப்போனா அவருதான் இது போலான ஐடியாவக் குடுத் தவரு,

”எண்ணாண்ணேபையன் வளந்து பருவத்துல நிக்கிறான்,அவனுக்கு நாளைக்கி ஒரு நல்லது கெட்டது பண்ணிப்பாக்கணும்,இப்பயே வாழ்க்கையில செட்டில் ஆனாத்தான சரியாயிருக்கும் ,அவனுக்குக்கென்ன வயசு கொறஞ்சிக்கிட்டா போகுது,”ன்னு/

”அவரு சொல்றதும் சரியாத்தான் இருந்துச்சி,”,,/

அவனுக்குன்னு இப்பவே ஒரு வாய்க்காலு வெட்டி விட்டிவிட்டாத்தான அதுல தண்ணிபாய்ச்சி அவன் நெலம் நோக்கி கொண்டு பயிர் செஞ்சி பலனெடுக்கிற அக்கறையும் முயற்சியும் வரும் அவன்கிட்ட,,,/

”இல்லைன்னா அரிசி வெளையிற யெடம் அரிசிக்கடைன்னு சின்னப்புள்ளை ங்க புரிஞ்சிக்கிர்ற கதையாகிப் போகும்,

”இன்னும்சொல்லப்போனால்வளந்த பிள்ளைகளே அப்படித்தான் இருக்குதுக,. அவுங்க வீட்டில உள்ள பொருள் எங்கிருந்து வருதுங்குறது இன்னும் அவுங் களுக்குப் புரியாததுபோல்இவனும் வாழ்க்கை அருமை புரியாமல் கரட்டுச் செடியா வளர்ந்து போவான்” எனச் சொல்பவர்,,,,,,,,

அப்படியெல்லாம் வளர்ந்து விடாமல் தடுக்கும் யோசனையில் இருந்த ஒரு மழை நாளில் ”நல்லது பண்ணனுமில்ல”,என சொல்லியவரே காலிக்கடை இருக்கிற இடத்தை காண்பித்து இந்தக்கடையை பையனுக்குக் கேட்கலாம் என்கிற ஆலோசனையையும் சொன்னார்,

காலியாக இருந்த கடைதான் ,கடையுடன் சேர்ந்து வாடகை இடத்திற்கும், டீக் கடையுடன் ஹோட்டலும் நடத்தலாம் என்கிற ஐடியாவில் அந்தகாம்பள்க்ஸ் கடையைப்பிடித்துப்போட்டிருக்கிறார்கள்,

ஊரெல்லாம்காம்ளெக்ஸாய்இருந்தால் யார்தான் வாடகைக்குவருவது, என்ன கடைதான்வைப்பதுஎனத்தெரியாமலேயே,,,,,,,காம்ளக்ஸ்கள்சிலபூட்டியிருந்த நேரத்தில் இப்படியாய் இருந்த கிடைத்த வாய்ப்பு,,,/

கிடைத்த வாய்ப்பு கடையாய் உருவெடுத்து நிற்கும் போது டீ வடை,இட்லி தோசை மொச்சை ,,என அவர்கள் சக்திக்கு கட்டி இழுத்தார்கள்,

அன்று ஆரம்பித்து இன்றுவரை வேர் ஊன்றி நிற்கிற அந்தக்கடையில் டீயு டன் சேர்த்துஇளையராஜாவின் பாடல்களும் இலவசமாய் ,அது இவன் போலா னவருக்கு கொஞ்சம் உயிரோட்டமாயும்,ஈரம் காத்துமாய்,,,/

பாடல்களைக்கேட்பதற்காய் அங்கு போன அநேக நாட்கள் இவனுக்கு நேர்ந்த து இதுதான்.

மெல்ல சொல்லி இறங்குகிற டீயின் ஒவ்வொரு மிடறும் லயம் கலந்த இசை யை மனமெங்குமாய் விரவ விட்டும் டீக்குடிக்க வருகிறவர்களை மெல்லத் தாலாட்டியவாறாய்,,,,,,,/

நல்லதொரு காதல் பாடல்,வீட்டு டீ வியின் ஏதோ ஒரு சேனலில் ஒலித்துக் கொண்டிருந்ததை கையில் சொடக்கிட்டவாறே கேட்டுக்கொண்டு பிரிய மன மில்லாமல் வந்திருந்தான் பஸ்ஸேற/ வீட்டில் கேட்க விட்டுப்போன மீதிப் பாதி இங்கு தொடர்வது கொஞ்சம் சந்தோஷமாயும் கொஞ்சம் கண்களில் நீர் கட்டிக் காண்பிப்பதுமாயும் இருந்தது,

டவுன்பஸ்களில்எப்,எம் ரேடியோ ஒலித்த காலங்களில் ஒருபஸ்ஸில் இறங் கும் போது கேட்ட பாடலின் பின் பகுதியை இன்னொரு பஸ்ஸில் கேட்கிற பாக்கியம் கிடைத்தது.

அது ஒரு பொற்காலம்,அதன் இனிமையும்,பேறும் வேறு,வேறு,,,,,/

தூரத்து கிராமம் ஒன்றில் பணி புரிந்த தினங்களில் என்றாவது ஒரு நாள் அந்த தனியார் பஸ்ஸில் பயணிக்கிற பாக்கியம் கிடைத்து விடுவதுண்டு.

வீட்டிலிருந்து எட்டு மணிக்கு கிளம்பி வந்து எட்டே கால் மணிக்கு அந்த பஸ்ஸை எட்டிப்பிடிக்கிற சிரமம் தவிர்த்து வேறொன்றும் இருந்ததில்லை, பெரிதாய்,,/

பயணிகள்அமர்ந்திருக்கிற இருக்கைகள் முழுவதுமாய் போர்த்தபட்டுக் காணப் பட்டிருந்தகலர் துணிகள்,வண்ண வண்ணமாய்கலர்க் காட்டி பஸ்ஸில் உட்புற டாப்பில் எரிந்து வரிசை காட்டி ஓடிக்கொண்டிந்த கலர் பல்புகள் டிரைவருக்கு சிவப்பும் மஞ்சளும் ஊதாவுமாய் நட்டு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பூக்கள் தொட்டியில் சிரித்தன. பூ ஜாடிக்கு முன் பக்கம் தொந்தி சரிந்து சிரித்த குபேரர் பொம்மையும் அதன் அருகில் ஊதுவத்தி ஸ்டாண்டும் இருந்தது. கூடவே இளையராஜா அவர்களின் பாடல்களும்/

அந்த பஸ்ஸில் ஏறினால் சிவகாசியில் போய் கனெக்ட்டிங் ,பஸ் மாறுவதற்கு சரியாக நிற்கும்,

அந்த பஸ்ஸை தவற விட்டு விட்டால் கொஞ்சம் சிரமமே,,,/

பெரும்பாலுமாய் அந்தபஸ்ஸை தவறவிட மாட்டான்.

அன்று கிடைத்தது அந்த பாக்கியம்,டிக்கெட் எடுத்ததும்தான் கேட்கிறான் பேரு ந்தினுள்ளாய் ஒலித்துக்கொண்டிருந்த பாடல்களை,

ஆகா,மனதின்அருகில்வந்துஇனிமயாய் ஒலித்துப்போகிற பாடல்கள், இன்னும் சிறிது நேரம் அதை அசை போட்டுக்கொண்டும் கொஞ்சம் பிடித்து வைத்துக் கொண்டுமாய் மகிழ்ந்து இருக்கலாம்.சூப்பர்,சூப்பர்,,,,/

மனதின்எண்ணங்களுக்கு வண்ணம் சேர்கிற பாடல்களாயும் வண்ணம் சேர்த்த எண்ணங்களை தொட்டில் கட்டி தாலாட்டி அருகில் வைத்துக் கொள்ளலாம், இறங்க வேண்டிய ஊரை விட்டு அடுத்த ஊருக்கு டிக்கெட் எடுத்து விட்டான்,

இன்னும் கொஞ்சம் பாடல்களை கேட்கலாம்,காதுக்கும் மனதிற்கும் இதமாக இருக்கும்,

கண்டக்டர்தான் கேட்டார்.”என்ன சார்,இறங்க வேண்டிய ஊரை விட்டுட்டு வேற ஊருக்கு டிக்கெட் எடுக்குறீங்களே” என/

இவன் காரணம் சொன்னபோது அதிராமல் சிரித்தார்,

”அப்பிடிப்பாத்தா நாங்களெல்லாம் ரொம்ப ரொம்ப குடுத்து வச்ச ஆளுகளாவு ள்ள ஆகிப்போவம்” என்றார்,

இரண்டு சட்டை,ஒருபேண்ட் ,பனியன் ஜட்டி கர்சிப், அழுக்கில் கிடந்தது,இன்று துவைத்தால்தான்,இல்லையென்றால்அழுக்கின் கணக்கு கூடிப்போய் விடுகிற ஆபத்து இருந்தது /

கண் முன்னால் படம் காட்டிக்கொண்டிருக்கிற ஆபத்தை அடைகாத்துக் கொ ண்டு’நாளைதுவைக்கலாம்,நாளை துவைக்கலாம்..,’எனவிட்டுவிட்டால் மனது இன்னும் கொஞ்சம் கரடு தட்டிப்போய் செய்கிற வேலையில் மெத்தனம் ஏறி வேலை செய்கிறவனின் கையைக் கட்டிப் போட்டு விடும்.

வீட்டின் மூலையில் கட்டப்பட்டிருக்கிற நைலான் கொடி,ரூமிற்குள் இருந்த அழுக்குக்கூடை,,,,, என ஒவ்வொன்றிலும் அழுக்கின் அடையாளம் கொண்டு அடை கொண்டு விடுகிற துணிகள் கட்டப்பட்டிருக்கிற கைகளின் மிகுதிகளில் காட்சி கொண்டலைகிறதாய் ஆகிப்போகும்/

ஒருபேண்டை இரண்டு தினங்களுக்கு போட்டுக்கொள்ளலாம்,சட்டையை ஒரு நாளைக்கு மேல் போட முடிவதில்லை,, வெயில் வேர்வை கசகசப்பு,வாடை அடித்து விடுகிறது,

இவைகளைத்தான் துவைக்க வேண்டி இருந்தது,முதல் நாள் மித மிஞ்சிய உடல் சோம்பல் காரணமாகவோ அல்லது அழுப்புக்காரணமாகவோ துவைக் காமல் விட்டதால் கூடச்சேர்ந்து போன ஒரு சர்ட் தவிர்த்து வேறொன்றுமில் லை,

இரண்டு நாட்களுக்கான இரண்டு சட்டை ,ஒரு பேண்ட்,அந்த இரண்டு நாட்க ளின்கர்சீப்,ஜட்டி,பனியன்,,,எல்லாம் பேண்ட் சர்ட்டுடன் சேர்ந்து கொள்ள கொஞ்சம் கூடிப்போனதாய் காட்சிப்பட்ட துணிகளை துவைக்க நேரமாகிப் போகிறது கொஞ்சம்,

ஆஸ்க்கலர்பேண்டும்ஊதாக்கலரும்,ரோஸ்க்கலருமானசட்டைகள் இரண்டும் காலையில் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது,

லைட்க்கலரில் ஒரு பேண்ட்,எப்பொழுதும் இவனது உடனேயே இருக்கும், பழையதுகிழிபடுவதற்குஒருமாதம்அல்லது இரண்டுமாதங்களுக்கு முன்னாய் துணி எடுத்து வைத்துக் கொள்வான்,

சில வேளைகளில் எடுத்த பேண்ட்டை உடனே தைத்துக் கொள்வான், ஆனால் அதற்கான துணி எடுப்பதற்குள்ளாய் பரமப்பிரயத்தனம் கொள்ளவேண்டியதிரு க்கிறது.

பொதுவாக மேட்டித்துணிகளின் மீது இவனுக்கு ஒரு அலாதிப்பிரியம் இருந்த துண்டு,

ஆனால் இப்பொழுதெல்லாம் எங்கு தேடியும் கிடைப்பதில்லை,கடைகளில் அதிகம் காணமுடிவதில்லை,கேட்டால் வருவதில்லை என்கிறார்கள்,

கடை,கடையாக ஏறி இறங்கி பத்துக்கடைகளில் ஏதாவது ஒன்று அல்லது இர ண்டில் கிடைக்கும் இவன் தேடிப்போன துணி,

உடனே யோசிக்காமல் எடுத்து வந்து விடுவான்,

அது ஏனோ தெரியவில்லை,மேட்டித்துணியால் தைத்தப்பேண்ட் அணிவதில் இருப்பதே தனி சுகம்தான்,,,/

மற்றப்பேண்ட்களைஅணிந்தது போல் சாக்கைச் சுற்றியது போல் இருக்காது,

காற்றாய் லேசாக இருக்கும்,எவ்வளவு வெயில் அடித்தாலும் வேர்க்காது, ஃப்ரியாக இருக்கும்.

பேண்ட் அணிய ஆரம்பித்த நாளிலிருந்து இவனிடம் எப்பொழுதும் ஒரு மேட்டித் துணியால் தைத்த பேண்ட் இருந்ததுண்டு,

இன்று அந்த பேண்ட் ஆஸ்கலரில் துவைப்பிற்கு உள்ளாகிப் போனது.

காலையில் எழுந்திருக்கும் போதே கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்திருந் தான்,உள்ளபடிக்கும் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து விட்டான்,

மிகுதியாகிப்போனஉடல்வலியா இல்லை சலிப்புத்தட்டிப்போன மன நிலையா தெரியவில்லை,

எழுந்ததும் திரும்பப்படுத்து விட்டான்,சிறிது நேரம் அமர்ந்திருந்து விட்டு மனைவி டீ கொண்டு வருவதற்குள்ளாய் தூங்கிப்போனான்,

திரும்பவும் ஏழு மணிக்கு எழுந்தவன் மனைவி கொண்டு வந்து கொடுத்த டீயைக் குடித்து விட்டு அப்படியே சமைந்தவனாய் அமர்ந்து விட்டான்.

என்னவெனத் தெரியவில்லை.அப்படியான ஒரு நிலை அல்லது மனது வாய்த் துப்போகிறது சமயாசமயங்களில்/

அது காலை அல்லது மாலை இல்லை இரவு எந்த நேரம் என கணக்கில்லை, அலுவலக நேரத்தில் வராது ,வரவும் இவன் அனுமதித்ததில்லை.

மீறி வந்துவிட்டால் இவன் கதை கந்தல் என தெரியும்,அதனால் அலுவலகத் திற்குள்அலுவலனாய் மட்டுமே இருந்து விட்டு வெளிவந்தவுடன்தான் இது போலானவைகளைஅனுமதிக்கவும்,மனம்நுழையவுமாய் ஏற்றுக் கொள்வான்.

மர சோபாவின் மேல் சாய்ந்து அமர்ந்தவன் மணியைப்பார்க்கிற பொழுது அது இவனைப்பார்த்துஎந்தரகசியமும் வைக்காமல்எட்டாகப்போகிறதை சொல்லிச் செல்கிறது சப்தமாய்/

இப்பொழுது எழுந்துதுணிகளைத் துவைத்து விட்டு பாத்ரூம் போய் விட்டு பல் விளக்கிக் குளித்தால்தான் ஒன்பது மணி பஸ்ஸைப் பிடிக்க முடியும் என்கிற நினைப்பில் இருந்தவன் அவசர மனோ நிலை காட்டி துணிகளைத்துவைத்து விட்டு குளித்துமுடித்து விட்டு வேர்க்க விறுவிறுக்க பஸ் ஸ்டாப்பிற்கு வந்த போது பஸ்வரவும் இவன் ஏறி அமரவும் சரியாக இருந்தது.

வேர்த்த உடலில் விரவியிருந்த வியர்வை முத்துக்கள், மெது காட்டி வந்த மூச்சு, வேகம் காட்டி வந்த பரபரப்பு, அவசரம்,நினைத்ததை எட்டிப்பிடித்து விடமுடியுமா என்கிற எண்ணம் வந்த களைப்பிற்கும் அவசரப் பட்டு வந்த மனோ நிலையின் பரபரப்பிற்கும் கண்டக்டர் சிரித்த சிரிப்பு முற்றுப்புள்ளி வைத்தது.

2 comments:

வலிப்போக்கன் said...

தனியார் பஸ்களில் எல்லாம் இளையராஜா பாடல்கள்தான் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன...

vimalanperali said...

இளையராஜா அவர்களின் பாடல்களை இன்னும் உயிர்ப்பித்துக்கொண்டிருப்பது தனியார் பஸ்களின் டிரைவர் கண்டக்டர்தான் போலும்