22 Jun 2019

திகித்தடங்கி,,,,


குடிக்கிற நீரை காலடியில் கொண்டு போய் வைக்காதீர்கள்,,/

அது பாவம் அல்லது ஆகாது ,அந்த நீரை அள்ளிக்குடிக்கிறவருக்கு அல்லது எடுத்து பருகிறவருக்கு உடல் நலத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டுப் போக லாம்.

பின் மருந்து மாத்திரை,ஆஸ்பத்திரி,,மருத்துவர் மருத்துவம் என அலைந்து திரிய வேண்டி இருக்கும்,

வேண்டாமே இந்த வம்பெல்லாம், இடதும் வலதுமாய் அருகருகே இருக்கிற கால்கள் அதன் பாதத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிற செருப்பு, செருப்பில்விடாப் பிடியாய் ஒட்டி இருக்கிற தூசி என ஏதாவதுஒன்று ஓடோடிப் போய் ஒட்டிக் கொண்டு விடலாம்,

பொதுவாகவே இவனது பழக்கம் அதுவாகத்தான் இருந்தது,வேலை பார்க்கிற இடத்தில் போய் அமர்ந்து விட்டால் எடுக்கிற தாகத்தையும்,வருகிற இயற் கை உபாதையையும் தள்ளிப் போட வேண் டிய கட்டாயம் வந்து விடுகிறது தான்.

இயற்கைஉபாதை சரி,வேறு வழியில்லை தள்ளிப்போட்டுத்தான் ஆகவேண்டி வந்து விடுகிறது,ஆனால் தாகத்திற்கு தண்ணீர்,,,,?

பூமிக்குக்கீழ் நூறிலிருந்து ஐநூறு அடி வரைக்குமாய் போர் போட்டு பூமிக்குள் அடைகொண்ட நீரை உறிஞ்சி தன் கைக்குள் வைத்துக்கொள்வது போல் மண் பானைத் தண்ணீரை பாட்டிலுக்குள்ளாய் அடைத்து பக்கத்தில் வைத்துக் கொ ண்டால்என்ன எனத் தோணிய யோசனை முழு உரு பெற்ற பொழுதுதான் தண்ணீர் பாட்டிலை வேலைபார்க்கிற இடத்தின் அருகில் வைத்துக் கொண் டான்.

பச்சைக்கலரில் டிசைன்வைத்த பாட்டில்,குறுக்கும் நெடுக்குமாய் போடப்பட்ட கோடுகளும்,அதன் உள் வெளி வடிவ தோற்றங்களும் விளிம்புகளின் முனை சுமந்த கலரின் அடர்த்தியும் பார்க்க அழகாய் இருந்ததுதான்,

கையின் பிடிக்குள்ளாய் உள் அடங்கிப்போகிற சின்னகுழந்தையாயும்,அதன் பஞ்சுப்பொதி மேனி போலவும் பாட்டிலைப்பிடித்து தண்ணீர் குடிக்கிற போது அடங்காத தாகம் கூட அடங்கிப்போவதாய் ஒரு கற்பனை.

நேற்றைய முன் தினம் காலை பஸ் விட்டு இறங்கி வரும்பொழுது ரோட் டோரக் கடையில் பார்த்த பூரி வட்ட சைஸில் அழகு காட்டி வீற்றிருக்க அது மலர்ந்து சிரித்த ஆழகான பெண்ணின் முகமாய்த்தெரிந்தது,

அலுவலகத்தி வந்து சொன்ன போது தலையில்,தலையில் அடித்துக்கொண்டு சிரித்தார் உடன் வேலை பார்ப்பவர்,,,/

பார்க்க அழகாய் இருக்கிற பலவிஷயங்கள் தண்ணீர் பாட்டிலுக்குள்ளுமாய் குடி கொண்டிருக்கிறதுதான்,

சின்னப்பொருள் செய்து விற்ற போதும் அதில் ஒரு உள் அழகைப் பொதித்து வைத்து விற்பது இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகிப்போகிறது, அது நன்றா கவும் இருக்கிறது கூட/

கவனக் குறைவாய் கால்பட்டு சிந்தி விடலாம் தண்ணீர்,அல்லது தண்ணீரில் தூசி பட்டு விடலாம், இல்லை கைதவறி தண்ணீரை எடுக்கும் போது கைதவறி பாட்டில் கீழே விழுந்து விடலாம்.இத்தனை இடைஞ்சல் இருந்தாலும் வேறு எங்கு கொண்டு போய் வைக்க?

இடதுபக்கமாய் இருக்கிற கொசூண்டு வெற்றிடம், வலது பக்கம் கேஷ் கவுண் டரின் டிராயர்,ட்ராயர் நிறைந்து ஐநூறும், இரண்டாயிரமும்,நூறும் இருநூறும், ஐம்பதும்,இருபதும், பத்துமாய் நோட்டுக்கள் அடுக்கபட்ட இடத்தில் தண்ணீரை வைப்பது உசிதமல்ல,/

”ட்ராயரைத்திறந்தால் காட்சிப் படுகிற ரூபாய் நோட்டுக்கள் உங்களைப் பொறு த்த அளவில் வெறும் பேப்பரே, அதை மதிப்பற்ற ஒரு விஷயம் என்றும்அதன் மீது மையல் கொண்டு மனம் பறிகொடுத்து விடாமல் இருங்கள் என்றுமாய் போதித்த 42 பி எல் எப் தெரு இவனில் மையம் கொண்ட 85 லிருந்து இவன் புடம் போடப்பட்டதாய் அறிகிறான்,

துருத்தி வழி வெளி வருகிற காற்று நெருப்பாய் பட்டறையில் தகிப்பது போல தகித்தடங்கிய நிமிடங்களும் நொடிகளுமாய் இவனில் நிறைய நிறையவே அந்த நாட்களில். பொதுவாக ஒரு சங்கம் ஒருவரை உறுப்பினராய் வைத்துக் கொள்ளும்,ஆனால் தன் உறுப்பினரை முழுத் தகுதியினனாக்கிய மந்திரத்தை செய்தது இவன் சார்ந்திருந்த தொழிற்சங்கம்,,,/

இலக்கியம் பேசியவர்களுடன் எழுதியவர்களுடன் உறவிட்டது,

ஆழ்ந்த சமூகப் பார்வை கொண்டவர்களுடன் தன்னை முடிச்சிட்டுக் கொண் டது,

மாற்று துறைகளில் பணிபுரிகிற தொழிற்சங்கத்தினருடன் தன்னை நெசவிட் டும், நேசமிட்டும் கொண்டது,

விளிம்புநிலையில்பணிசெய்து வாழ்கிறநிப்புத்தொழிலாளர்களிலிருந்து நகரச் சுத்தித் தொழிலாளர்கள் வரை அவர்கள் தோள் மீது கை போட்டு ஆதுரம் காட்டியது,

கிராமத்திலிருந்து முதல் பஸ்ஸில் விடிந்தும் விடியாததுமாய் வந்திறங்கி எங்களை எழுப்புகிற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள், எப்பொழுதும் எட்ட நின்று கைகட்டிவாறே பார்த்துப்பழகிய எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி சார் அவர்கள்,”என்னப்பா எப்பிடியிருக்குற” எனக் கேட்ட வாறே மாடிப்படியேறி சங்க அலுவலகம் வருகிற எங்களின் அன்பு ஆசான் எஸ்,ஏ,பெருமாள்அவர்கள்,மற்றும் மற்றுமாய் நிப்புக்கம்பெனி தொழி லாளர்கள், நகரச் சுத்தித்தொழிலாளர்கள்,இன்றைய தலைவர்களாய் இருக்கிற அன்றைய மாணவர்கள் எல்லோருமாய் வந்து உறை கொள்கிற இடமாயும் கருத்துப் பரிமாறிக் கொள்கிற களமாயும் பயிற்சி எடுத்துகொள்கிற பட்டறை யாயும் ஆகித்தெரிந்த ”42,பி எல் எப் தெரு” வின் உயிர் சாட்சியாய் இருந்த ”பாண்டியன் கிராம வங்கிஊழியர்சங்கம்”இவன் போன்ற சாமான்ய உறுப்பி னர்களுக்கு அடையாளப் படுத்திய சங்கத்தின் தலைவர்கள் திரு,பாரதி கிருஷ்ணகுமார்,தோழர் சோலைமாணிக்கம் அண்ணா,தோழர் மாதவராஜ், தோழர் காமராஜ் ,சங்கரலிங்கம் அண்ணா ,,,,இவர்களின் ஊடு பாவாயும் இவர்களும் நெசவிட்டுமாய் அந்தக்கட்டிடத்தை அடைகாத்துக்கொண்டிருந்த எனதருமைத் தோழன் வரதராஜப்பெருமாள்,,,,,என இன்னும் இன்னுமாய் சொல்ல விட்டு போன தலைவர்கள் தோழர்கள் நண்பர்கள் என எல்லோ ருமாய் அன்று சொல்லிக்கொடுத்த விஷயங்களே இன்று வங்கிப் பணியின் விளிம்புகளை தொட்டுச்சென்று ஆழ நேசிக்கச்செய்கிறது,

பரஸ்பரம் அன்பு செய்தல், அடுத்தவருக்காய் இரங்குதல்,ஈகை ,நேசம் இவை யெல்லாம்கிட்டத்தட்ட கெட்ட வார்த்தை என்கிறாகிவிட்ட நிலையில் குடிக் கிற நீரை காலடியில் கொண்டு போய் வைக்காதீர்கள் என்கிற அசரீரீ தூரத் திலிருந்து கேட்க தண்ணீர் பாட்டிலை எடுத்துதள்ளி வைப்பவனாகிப் போகி றான்.

பொதுவாகவேதண்ணீரைதள்ளித்தானேவைத்திருக்கிறோம்,கூடவே தண்ணீர் பற்றிய எண்ணத்தையும்,அவதானிப்பையும்,,,/

8 comments:

 1. சிந்திய தண்ணீர் பரவுவது போல பரவட்டும் அன்பும்...

  ReplyDelete
  Replies
  1. பரவும் நிச்சயமாய்,
   அன்பும் பிரியமும்,,,,!

   Delete
 2. ஆற்றிலோ...குளத்திலோ குளிக்கும்போது... சிறுநீர் கழிக்க கூடாது என்று எனது தாயார் சொன்னதுநிணைவுக்கு வந்தது..காலடியில் தண்ணீரை வைக்கக்கூடாது என்பதின்மூலம்

  ReplyDelete
  Replies
  1. காலடியில் என்றால் காலுக்கு அருகில் என கொள்வோம்!

   Delete
 3. பதிவுகள் தொடரட்டும் தோழர்

  ReplyDelete
  Replies
  1. அன்பும் பிரியமும்!

   Delete
 4. சிறப்பான பகிர்வு...
  நிச்சயம் பரவுமென நம்புவோம்.

  ReplyDelete
  Replies
  1. பிரியங்கள் விளைக!

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...