8 Jun 2019

அழுத்தங்களில்,,,,,




விடுமுறை தினம்தான்,இன்று.ஆனாலும் வேலை சரியாகத்தான் இருக்கிறது. அப்படியே  வேலை என பெரிதாய் ஒன்றும் இல்லை என்றாலும் கூட இருப்ப தாய் சொல்லிக் கொண்டு பொய் பரபரப்பு காட்டி டீ,வி நீயூஸ் காபி டீ டிபன் சாப்பாடு தூக்கம் பின் பொழுதின் ஓட்டம் என சரியாகத்தான் ஆகிப்போகிறது.

அதிகாலை எழலாம் என நினைப்பதெல்லாம் சரிதான் ,எழுந்திருப்பதும் கூட சரிதான்,ஆனால்அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வரவில்லை என்பதுவும் முடியவில்லை என்பதுவும் சோகத்திலும் படு சோகமாய் /

”கத்தி போயி வாலு வந்தது டும் டும் டும்”,,,கதையாய் ஆகிப் போனது,

அதற்காக சோகம் கப்பிய முகத்துடன் அலைவதென்பது முடியாத அல்லது இயலாத காரியம் இவனைபொறுத்த மட்டில்/

”எப்படி முடியும்,இல்லை எப்படி முடியும் எனக்கேட்கிறேன், ஒருவரைப் பார்த் ததும் அல்லது அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது பளிச்சென சிரித்து விடுவது அல்லது அவருடனான பேச்சில் மனங்கலந்து விடுவது இவனுக்கு கைவந்து விடுகிற போது எப்படி சோகமாய் இருப்பது தெரியவில்லை,அல்லது காட்டிக்கொள்வது என்பதும் தெரியவில்லை.என்பான்ம் நண்பன்/

அதுஇவனுக்கு சுட்டுப்போட்டாலும் வராது கூட/ இது நாள்வரை வந்ததில்லை, இனிமேல் எப்படி என்பதும் தெரியவில்லை.

வம்பாக பிடித்திழுத்து வந்து ஒட்ட வைக்க முடியாத சில பழக்கங்களில் இதுவும் ஒன்றாகிப் போகிப் போனது  போலும்.சரி விட்டு விடலாம்.

ரொம்பவும் பேச வேண்டாம், போரடித்து விடக்கூடும்,பின் படிக்க மாட்டார்கள், அடிக்க வந்து விடுவார்கள்.கல்லெடுத்து/

பின் கல்லைக்கண்ட இடங்களிலெல்லாம் ஒழிந்து திரிய வேண்டி இருக்கும், கல்லைக்கண்டால்இவன்தெரியமாட்டான்,இவனைக்கண்டால்கல்தெரியாது. என்கிற நிலை உருவாகிப்போய் விடக்கூடும்.

சீக்கிரம் எழலாம் என்கிற எண்ணத்தை கைவிட்டு விட்டு அப்படியே தூங்கிப் போனான்,

அரை குறையான தூக்கம்தான்,முழிப்பு பாதி தூக்கம் பாதி கலந்து செய்த கல வையாய்,,/

பக்கத்தில் மலர்ந்து கிடந்த போர்வையை அள்ளிப்போர்த்த மனமில்லை, உட லெல்லாம் பட்டு மென் பூக்கள் விரித்திருக்க பூவாயும் மலர் பூத்த வனமாயும் காட்சி தந்து பக்கத்தில் விரிந்து கிடந்த போர்வையை அள்ளிப்போர்த்த மனமின்றி அப்படியே விட்டு விட்டு கைகளால் உடலைபோர்த்திக்கொண்டு தூங்குகிறான்,

போர்த்திய கைகளின் விரிசல்களும்,விரவல்களுமாய் ஒன்று சேர்ந்து உடலை இடைவெளியேதுமின்றி போர்த்தி மென் காத்திரத்துடன் தூங்கச்செய்வதாய்,,,/

தூங்கிப்போனஇவன்சிறிதுநேரஇடைவெளியில் கண்டகனாவின்சொல் விரிவு கனாக்கண்ட கதைதான்.

கனாக்கள் ஆழ்நிலை தூக்கத்தின் போதுதான் வருகிறது என்பது இவனைப் பொறுத்த அளவில் மிகவும் பொய்யாய் பழங்கதையாய் ஆகிவிட்ட ஒன்றாய்த் தான் ஆகித்தெரிகிறது,,,/

பஸ்ஸில் வருகிற போது அசந்து தூங்கிப்போகிற கால் மணி நேர பிரயாண இடைவெளியில் ஏதாவது ஒரு கனா வந்து போய் விடுகிறது பட்டென்று.

என்னடா இது,இந்த பஸ்ஸீற்கும்,டிரைவர் கண்டக்டருக்கும் வந்த சோதனை யா எனச்சொல்லிச்சிரித்தார் கண்டக்டர்,டிரைவர் அதற்கு மேல் தலையில் தலையில் அடித்துக்கொண்டார் இவன் கனவு கண்டதை சொன்ன போது,,,/

”பேசாம பஸ்ஸீக்குமுன்னாடி கனவுலகசொர்க்கமுன்னுஎழுதிப்போட்டுரலாம் சார்” என்றார்,

டிக்கெட்டு எடுத்துட்டு போயிச்சேர வேண்டிய யெடத்துல போயி பத்தரமா யெறங்காம சீட்டுல ஒக்காந்த மானிக்கி கனவு கண்டுக்கிட்டா திரியிறீங்க, கனவு, என்றார் பக்கத்து இருக்கைக்காரர்,

அவர் எப்பொழுதும் இவனை மதிப்புடன் பார்ப்பவர்,பழகுபவர்,,,,

இவனுக்குக்கூட தோணுவதுண்டு,ஏன் அப்படியெல்லாம் இருக்க வேண்டும், அதற்கு அந்த மதிப்பு இல்லை மரியாதை,,,,,?

எப்பொழுதும் போல் என்ன என்றால் என்ன,வணக்கம் என்றால் வணக்கம், வாங்க என்றால் வாங்க,,,,அவ்வளவுதானே,,,,,இதில்என்ன மதிப்பு பெரிதாய் என்கிறஇவனது மனதின் பேச்சைஉணர்ந்தவராகவோஎன்னவோ இல்லை சார் ஒருவரது நடத்தையைவைத்துத்தானே அவர் மீது மரியாதை செலுத்துவதா வேணாமா என்பது முடிவு செய்யப்பட வேண்டும்,அது விடுத்து சும்மா போகிற வருகிற எல்லோர் மீதுமா செலுத்தி விட முடியும்,இன்னும் சில பேர் அவர்கள் மீது இருக்கிற பயத்தை மரியாதை என தப்பாக முடிவு செய்து வைத்திருக் கிறார்கள்.

அப்படியெல்லாம் இருப்பதை விடுத்து இப்படியாய் உருக்கொண்டு தென்படுகி ற உங்களைப் போலானவர்களைப் பார்க்கிற போது வருகிற ஒன்றை எப்படி தவிர்க்கமுடியும்,,,?சொல்லுங்கள் உங்களைத் தவிர்த்து இந்த பஸ்ஸில் வரு கிற உங்களைப்போல இன்னும் இரண்டு மூன்று பேர் இந்த மரியாதைக் கணக்கிற்குள் அடங்குவார்கள்.

அந்த வரிசையில் உறைகொண்டுள்ள உங்களை உங்கள் சம்மதமில்லாமல் இப்படிமரியாதையாய்பார்ப்பதுதவறென்றால்அந்தத்தவறைதிரும்பத்திரும்பச் செய்யநான் ரெடியாய் இருக்கிறேன் என்றார்.

முதல் நாள் இரவு கொஞ்சம் தூக்கத்தை தள்ளிப்போட்டு விட்டு ஏதாவது சினிமாப்பார்க்கலாம் என நினைத்தவனுக்கு இரண்டுநாட்களுக்கு முன்னாய்ப் பார்த்த சினிமாதான் ஞாபகத்திற்கு வந்தது.,

புதுப்படம்தான்,சென்ற வருடம் வெளிவந்த தமிழ் படம்.எத்தனை தடவை அந்தப்படத்தைப்பார்த்தான் என்பது நினைவில் இல்லை.இனி எத்தனைமுறை பார்ப்பான் என்பதும் தெரியவில்லை,

கட்டம் போட்ட கைலியை கட்டிக்கொண்டு வெற்றுடம்புடன் மேல் தோளில் துண்டை போட்டுக்கொண்டு தாவாங்கட்டைக்கு இடது கையை முட்டுக் கொ டுத்து ஆவவென திறந்த வாய் மூடாமல் சினிமாப் பார்ப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது,

மனம் பிடித்த சினிமாவும்,மனம் பிடித்த பாடல்களும் மனம் பிடித்த புத்தகங் களும் எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் படித்தாலும் அலுத்துப் போ வதில்லைதான்.

அதெல்லாம் அழுக்காதுங்குறது வாஸ்தவம்தான்,அதுக்காக இப்பிடி ராத்திரி யெல்லாம் முழிச்சிக்கிட்டு  உக்காந்துக்கிட்டு அப்புறம் ஒடம்பு வலிக்குது கை வலிக்குது கால் வலிக்குதுன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சா எப்பிடி,,?என்பாள் இனிமை சொல் காக்கிற மனைவி,

சத்தம் போட்டுப்பார்த்து அழுத்துப்போகிற அவள் சமயா சமயங்களில் இவனு டன் அமர்ந்து படம் பார்க்க ஆரம்பித்து விடுவாள்,

அவளுக்கும்நல்லசினிமாவையும் ,பாடல்கலையும்,புத்தகங்களையும் படிக்கப் பிடிக்கும்தான்,ஆனால் இவன் போல் வெளியில் சொல்லிக் கொண்டு திரிவதி ல்லை,

வீட்டு வேலைகள் ஒழிந்த நேரம் போக அதையெல்லாம் செய்வாள்.

அவளுக்கும் அது மிகவும்  மனம் பிடித்த வேளை,,,/

அப்படியெல்லாம் நன்றாக இருந்த பொழுதும் கூடஇரண்டு நாட்களாய் படுத்தி எடுக்கிற உடல் தொந்தரவிலிருந்து தப்பிக்கலாம் என நினைத்து தூங்கி விட்டான்,தூங்கினால்கொஞ்சம்சரியாகிப்போய்விடும் உடல்வலிஎன நினைத் தவனாய்,,,,/

அது என்னவெனத் தெரியவில்லை.எடுக்கிற உடல் வலிக்கு தூக்கமும் ஓய் வும் அரு மருந்துதான் போலும்,

அதிசயம்,நேற்று இரவுதான் கொஞ்சம்சீக்கிரத்தில் படுத்திருக்கிறான்,அதுவும் இடையில் கண் முழிக்காமல்/

அதுவே கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தது,இந்த ரிலாக்ஸ் ஒன்றே போதும் போலும் இப்போதைக்கு.”பார்வை ஒன்றே போதும்” என்கிற அளவிற்காய்,,/

பொதுவாக ரிலாக்ஸ்கள் புத்துணர்ச்சி தருகிற டானிக்காயும்,சர்வரோக நிவா ரணியாயும் அமைந்து போகிறது,

நிவாரணிகளையும் ,டானிக்களையும்,,,,விடுத்து வேறு மாதிரியாய் இதற்கென மருந்து மாத்திரை மருத்துவம் எனபோகும் பொழுது வம்பாகியும் வீண் செல வாகியும் போகிறதுதான்,

எதற்கது அனாவசியமாய் என்பதாயும் அது தேவையில்லாது எனவுமாய் முடி வெடுத்து ரிலாக்ஸ் காட்டி விடுவது அவ்வப்பொழுதான இவனது வழக்கங்க ளில் ஒன்றாய் அமைந்து போனது,

ஆனால்அந்த வழக்கம் சமீபங்களில்அதிகரித்துக்கொண்டே போகிறது.

மன அழுத்தம் என்பது சமீப காலங்களாய் அதிகரித்துப்போவதும்,அதற்கான ஆலோசனை மையங்களும் ,மருத்துவம் பார்பவர்களும் அதிகரித்து விட்ட நிலையில்“எனக்கெல்லாம் மன அழுத்தம்ன்னுவந்தா பேசாம டீ வி பாப்பேன், இல்லைன்னா படுத்து தூங்கீருவேன் என்றாள் போனவாரம் டீ வி நிகழ்ச்சி யில் பேசிய பெண்.

பொதுவாகவே அப்படித்தானே இருந்திருக்க வேண்டும் ,அதுதானே சாத்தியம், மன அழுத்தம் என்பது திடீரென கை கால் முளைத்து ரத்தமும் சதை கொண்டு எழுந்து வந்து விடுகிற உருவல்லவே.

இவ்வளவு விஞ்ஞான வசதி இல்லாத அந்தக் காலங்களில் கன்சல்டேட்டிங்க் மற்றும் கவுன்சிலிங்க் சென்டர்கள் அற்ற நிலையில் என்ன செய்திருப்பார்கள் நம் முன்னோர்கள்,,,?மன அழுத்தம் மற்றும் இதர விஷயங்களுக்கு,,,,?

செய்தார்கள்,உடலும்மனமும் அழுத்துப்போக வேலைசெய்தார்கள்,பிறருடன் பேசினார்கள், உறவாடினார்கள், மனம் கலந்தார்கள்,அதில் ஈரமான பகிர்வு இருந்தது,நட்பு இருந்தது ,அன்பும் தோழமையும் கொஞ்சம் அருகில் வந்து கை கோர்த்து உறவாடிச்சென்றது,

இன்னும்இன்னுமான இத்தியாதி இத்தியாதிகளாய் இவைகளெல்லாம் இருந்த போதுஅவர்களுக்கு மன அழுத்தம் போக்கிக் கொள்ள மையம் ஏதும் தேவைப் பட்டிருக்கவில்லை,

காலையில்எழுந்துடீக்குடித்துமுடிக்கஒன்பதுமணிக்குஅருகில்ஆகிப் போனது.

சின்னதையும் பெரியதையுமாய் கூட்டிக்கொண்டு விநாடி முள்ளுடன் கை கோர்த்து இத்துணூண்டு வட்டத்திற்குள்ளாய் சுற்றி காலத்தின் அளவை பிசகாமல் சொல்லிச்சென்று கொண்டிருக்கிற கடிகாரத்தை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு எழுந்து குளிக்கச் செல்கிறான்,

இரண்டு நாட்களாய் துவைக்காமல் விட்டுப்போன துணிகள் சேர்ந்து போய் இருந்தது, கொடியிலும், ஹேங்கரிலுமாய் தொங்கிக்கொண்டு,,/

குளிக்கும் முன்னாய் துணிகளை துவைத்து விட்டு கையோடு குளித்து விட்டு வெளியே வருகிறான்,

லீவு தினம் ,எங்காவது போகலாம் வெளியில் என்கிற நினைப்பு எந்தளவிற்கு கை கூடி வரும் எனத்தெரியவில்லை,

கூடி வரா பல நினைப்புகளில் இதுவும் ஒன்று போலும்,அது சமீப காலங்க ளாய் அதிகமாகிக்கொண்டே வருகிறது,

வழக்கமாய் லீவு தினம் என்றால் காய்காறி வாங்கக்கிளம்பி விடுவான், இன்றும் அப்படித்தான் கிளம்பி விட்டான்,

காய் கறிவாங்கிக்கொண்டு ஏதேனும் வேலைகள் இருந்தால் செய்து முடித்து வரலாம் என,,,

பிற வேலைகள் என பெரிதாய் ஒன்றுமில்லை,சேர்ந்து சென்றிருந்த மனைவி யுடன் வீடு திரும்பி வந்தது தவிர்த்து,,,/

12 comments:

Yarlpavanan said...

சிறப்பு, பாராட்டுகள்

கரந்தை ஜெயக்குமார் said...

மனம் பிடித்த சினிமாவும்,மனம் பிடித்த பாடல்களும் மனம் பிடித்த புத்தகங் களும் எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் படித்தாலும் அலுத்துப் போ வதில்லைதான்.
உண்மை
உண்மை

vimalanperali said...

அன்பும் பிரியமும்,,/

vimalanperali said...

பிரியங்கள் விளைக,,,/
நல்ல புத்தகங்களும் சினிமாக்களும் பாடல்களும்
பாடங்களாய் அமைந்து போகிறதுதான்,,,,,

ஸ்ரீராம். said...

//கனாக்கள் ஆழ்நிலைத் தூக்கத்தில்தான்...//

இல்லை.. உண்மையில் கனவு காண்பவர்கள் சரியான உறக்கத்தை எட்டாதவர்கள் என்றே சொல்வார்கள்.

Nagendra Bharathi said...

உண்மை . அருமை

வலிப்போக்கன் said...

நல்ல உறக்கத்தில்தான் கனவு எனக்கு வருகிறது... சிறிது நேர பயணத்தில் வருவது கனவா.... நினைவா..என்பது புரிபடவில்லை...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை தோழர்... உண்மையும் கூட...

vimalanperali said...

நன்றியும்,பிரியமும்,,,,!

vimalanperali said...

பிரியங்களுக்கு நன்றி!

vimalanperali said...

அன்பின் பரப்பு!

vimalanperali said...

கனவு பற்றிய்ழ் ஆராய்ச்சியில் கொஞ்சம் மனிதம் பேசிக்கொள்ள முடிகிறது,,,