4 Jul 2019

கைபிடிச்சுவர்,,,,

பாலம் ஸ்டாப்பில்தான் இறங்கினான்,

இவனது வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம்,நடந்து போய் விடுகிற தூரம் என்றி ல்லா விட்டாலும் கூட நினைத்தால் போய் விடக்கூடிய தூரம்தான் இரண்டு கிலோமீட்டர்கள் இருக்கும்,

எப்பொழுதும் அந்தப்பாலத்திற்கு சென்று பஸ் ஏற வேண்டிய கட்டாயம் இவனுக்கு ஏற்பட்டதில்லை.

ஏதாவது வெளியூர் செல்கிற வேளைகளில் அல்லது பணி நிமித்தமாய் வெளி யூரின் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிற போது மட்டுமேஅந்தப்பாலத்தில் நடந்தும் நின்றும் பயணித்துமாய் போயிருக்கிறான்.

வெளைச்சட்டைகறுப்புக்கலர் பேண்ட் என்கிற மேட்சிங்க் போல ஏதாவது ஒரு லைட்க்கலர் பேண்ட் அடை ஊதா நிறத்தில் சட்டை என்பதே இவனது உடை நாகரீகமாய் இருந்தது சமீப காலங்களாய்,,,/

ஸ்டைல்மாஸ்டர் டெய்லர் தைத்துக்கொடுக்க கறுப்புக்கலரில் டக் வைத்த பேண்ட்டும் ஊதாக்கலரில் பொடியாய் கோடு போட்ட சட்டையும் முழுக்கை யாய் உருவெடுத்து போட்டுக்கொண்டலைய அப்பொழுதெல்லாம் அணிகிற உடை பற்றியும் உடை மீதுமாய் ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது,

இப்பொழுது இருக்கிறதுதானே எனச்சொல்பவர்களுக்காய் ஒரு கேள்வி.சரக்கு முறுக்கா,சரக்கு விற்பவர் முறுக்கா என்கிற கேள்வியே பெரும் ஊருவெடுத்து நிற்கிறது,

மாறி மாறி சிறிது நாட்கள் வேலை நிமித்தமாய் பயணித்த நாட்களில் இது வே அவனது உடை நாகரீகமாயும் ஆகித்தெரிந்தது.

பயணம் போன நாட்களை விட பயணித்துச்சென்ற இடங்களும் அது தந்த மனோ நிலையுமே முக்கியமாய் படுகிறது.

காலையில் இளைய மகள் கொண்டு வந்து இறக்கி விட்டு விட்டுப்போனாள். அவளுக்கு கல்லூரிக்குச்செல்ல தாமதம் ஆனாலும் சரி வந்து விடுவாள். இவனை பஸ்டாப்பில் இறக்கிவிட,,/

இறக்கிவிடும் போதே கேட்பான்,என்னப்பா ஏதும் காசு ஏதும் வேணுமா, காலேசில செலவழிக்க என,

ஆமாப்பா காசு தேவை இருக்கு,அம்மாகிட்ட வாங்கிக்கிருறேன்,அம்மா தரலை யின்னா ஒங்ககிட்ட நீங்க வந்ததுக்கு அப்புறமா வாங்கிக்கிறேன் என்பாள்,

சரி ஏதாவது காலையில சாப்பாட்டுக்கு வடை கிடை வாங்கீட்டுப்போறியா என்றால் அதற்கும் வேண்டாம் எனச்சொல்லி விடுவாள்.

என்றைக்காவதுஒரு நாள் ”ஆமாம் ஆசையா இருக்கு வடை சாப்புடணு முன்னு, ஒங்ககிட்ட ஒங்க பஸ்ஸீக்கு தேவையான காசுக்கு மேல இருந்தா மட்டும் வாங்கிக்குடுங்க” என்பாள்.

ஒவ்வொரு பைசாவாக கணக்குப்பார்த்து வழக்குச்சொல்லி அதுக்கு இது இதுக்கு அது என ஈடு கூட்டி கைக்குள் வைத்திருப்பவள்,

கைகால் முளைத்தபட்டாம் பூச்சி,விரித்த இறகுகளில் ஆயிரம் கனவுகளை யும் ஆசைகளையும் ஒரு சேர அடை காத்து வைத்திருக்கிற உயிர்ச்சிறகு,,,/

அவளிடம் இவன் அதிகமாய் பேசியது கூட இல்லை,அவசியம் எனக்கருதுகிற கணங்கள் தவிர்த்து அனாவசியம் எனக்கருதுகிற நேரங்கள் அர்த்தம் பொதிந் தவை,,,/

எல்லாமே அவளது அம்மாவிடமே பகிர்ந்து கொள்வாள்,வயதிற்கு வந்ததும் பெண்பிள்ளைகள்அம்மாவிடம்தஞ்சம்கொள்வதுதவிர்க்கஇயலாதது போலும்/

பஞ்சாரத்துக்கூடாய் அம்மாக்களும் அவளை பொத்திப்பொத்தி பாதுகாக்கிறா ர்கள்,

இரு சக்கர வாகனம் ஓட்டும் பொழுது அவள்தான் ஓட்டி வருவாள் பெரும் பாலும்.அவளது பத்து பேச்சிற்கு இரண்டு பதில் பேசுவான் இவன்,

”என்னப்பா ஏன் மேல எதுவும் கோபமா,இல்ல எதுவும் ஆத்தாமையா, வீட்டு லயிருந்து கெளம்புனதுலயிருந்து இதுவரைக்கும் ஒரு பேச்சுக்கூட பேசலை யேப்பா” என்பாள்.

”அப்பிடியெல்லாம்இல்லைப்பா,ஏதோ ஒரு யோசனை,அதுல அப்பிடியே ஒறை ஞ்சி ஒக்காந்துட்டேன்,சொல்லுப்பா என்ன பேசணும்”,,,,?என்கிற போது ”நீங்க இவ்வளவு பார்மலா பேசுறதுக்கு பேசாமாயே இருந்துறலாம்,,” என்பாள்.

வேண்டுமென்றெல்லாம்இல்லை.இவனது பழக்கமேஅதுவாகத்தான் உள்ளது, சமீப காலமாய் அது இன்னும் கொஞ்சம் கூடிகொண்டு வருவதாய் ஆகித் தெரிகிறது.

போன மாதத்தின் கடைசி தினத்தன்று இவனும் மனைவியுமாய் கடைவீதி வந்து திரும்பி வரும் போது பஸ்டாண்டில் பஸ்ஸேறியதிலிருந்துவீடு வரை ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை அருகருகே அமர்ந்திருந்த போதும் கூட/

அதே மினி பஸ்ஸில் இவர்களுடன் பயணித்த இவர்களது ஏரியாக்காரம்மா மறு நாள் கடையில் பார்த்த போது மனைவியிடம் கேட்டிருக்கிறாள்.

”என்னம்மா ஒனக்கும் ஓங் வீட்டுக்காரருக்கும் ஏதும் மனஸ்தாபமா,பஸ்ஸில பக்கத்துல,பகத்துல உக்காந்துகிட்டு வர்றீங்க,மறந்து கூட ஒரு வார்த்தை பேசிக்கிறலையே புருசனும்,பொண்டாட்டியும்,/”

”அப்படியெல்லாம் மனஸ்தாபம் இருந்தா ஏன் அத வெளியில காட்டிக் கிறணும்,ஏன் ஒன்னாச்சேந்து வெளிய வரணும்,ஏன் நம்ம மதிப்ப நம்மளே கொறைச்சிக்கிறணும்,

”ஒலவாயமூடலாம்,ஊர்வாய்மூடமுடியுமாசொல்லு,,,?”என்றவள்”ஒங்களுக்குள்ள என்னன்னு எனக்கு தெரியாது,என்னவா இருந்தாலும் இப்பிடி வெளிப் படையா காம்பிச்சிக்கிறது குடும்பத்துக்குக்கேடு/,புருசன் பொண்டாட்டிக்குள்ள கோபம் தாபம் இருக்க வேண்டியதுதான். அது ஒரு எல்லை தாண்டாம பாத்து க்கங்கஎன்கிற அவளது பேச்சை சுமந்து வந்த இவனது மனைவி இவனிட ம் சொன்ன போது மனதும் வாயும் கொள்ளாமல் சிரித்தான்.

இதை மகளும் அறிவாள்,

அவளுக்கு ஸ்கூட்டி வாங்க வேண்டும் என விருப்பம்.

ஊரெல்லாம்அழகழகான வர்ணங்களில் இரு சக்கர வாகனங்கள் ஓடும் போது அப்பாமட்டும் இப்படி ஒரு பழைய வண்டியை வைத்துக்கொண்டுபரிதாபமாக அலைந்தால்,,,,?

அதைதுடைப்பதுதண்ணீர்ஊற்றி அலசிசுத்தமாகவைத்துக்கொள்வது ம்ஹூம்/

வண்டியை எடுக்க,பின் வண்டியை திருப்பிக்கொண்டு நிறுத்த இதுதான் அவனின் அன்றாடம்,,,/

ஒட்டிய தூசி ஒட்டிக்கொண்டும் அப்பிய மண் அப்பியுமாய் பார்க்க பரிதாப நிலையில் மியூசியத்தில் இருக்கிற பழைய இரும்புப்பொருள் போல் இருக் கும்.

எந்த நேரமும் பழைய வண்டியின் தோற்றம் போலவே இருக்கிற இதை விற்று விட்டு வேறு வாங்கலாம்தானே என்பதும் வர வரசெலவும்அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் அவளது ஆதங்கம்.

வண்டியும் பழையது,வண்டி ஓட்டுபவரும் பழையவரே என்கிற அடையாளம் கொண்ட தோற்றம் அப்படியே அச்சாகிவிடக்கூடாது,

அறுபது அறுபத்தைந்து வயதுக்காரர் கூட பெரிய வண்டியில் அனாவசியம் காட்டி இறக்கை இல்லாமல் பறக்கிற போது இவன் வயதிற்கு தாராளமாய் ஒரு பெரிய வண்டி வாங்கிப் போடலாம்.

ஆனால் சின்ன மகள் ஒரேயடியாய் வேண்டாம் என்கிறாள்,பெரிய மகளுக்கு இவன் பெரிய வண்டி வாங்க வேண்டும் என்பது ஆசை.

சென்னம்பட்டிக்கார பூ வியாபாரி இந்த அறுபத்தைந்திலும் தெளிவாக வண்டி ஓட்டுகிறார்,

தலையில் ஏறிய தலைப்பாக்கட்டு,வெற்றிலை மென்று கொண்டிருக்கிற வாய் மடித்துக்கட்டியவெள்ளை வேஷ்டி,வெள்ளைச்சட்டை,,,பூண்ட அட்டையாளங் களுடன் தினசரி எங்காவது போய்க்கொண்டுதான் இருப்பார்,

”என்னசெய்யச்சொல்லுறீங்கசார்,தோட்டத்துலகொஞ்சம்பூப்போட்டுருக்குறேன், மல்லிகைப்பூ,என்னையப்போல இன்னும் நாலைஞ்சி பேரு பூப்போட்டிருக்கா ங் க,அவுகங்க எல்லாராலையும் மார்க்கெட்டுக்குப்போயி விற்பனைக்கு பூக்கொண்டுட்டுப் போக முடியாது.அப்பிடிபோக முடியாதவுகஎல்லாம் என்னு ட்டதான் குடுத்து விடுவாங்க,

”அவங்க பூவையெல்லாம் நான் கிலோவுக்கு ஒரு ரூவா வச்சி வாங்கீட்டுப் போயி வித்துட்டு வருவேன் பின்ன கொண்டு போற எனக்கு ஏதாவது வேணு மில்ல,”என்கிறவரை முதியவர் என்கிற அடையாளத்திற்குள் அடைத்து விட முடியவில்லை.

”அப்பிடியானவுங்களெல்லாம் புதுப்புது வண்டியில போகும் போது இவரு வாங்குனா என்ன,,,?” என்பது இளைய மகளின் எண்ணம்.

இதை அவள் இவன் மனைவியிடம் சொன்ன போது”இந்தா பாரு இதெல்லாம் ஓங் பாடு ஒங்க அப்பா பாடு, நா இல்ல யாரு சொன்னாலும் கேக்கமாட்டாரு மனுசன்,

”ஒரு விஷயத்துல ஒரு முடிவுன்னு எடுத்துட்டாருன்னா அவர மாத்துறது கஷ்டம்,இனி ஒங்க காலம், நீங்களாவது நிமுத்தப்பாருங்க,,”என்கிற பேச்சோடு நிறுத்திக் கொள்வாள்,

”ஆமாமா,சொன்னாங்க,சொன்னாங்க,”,,,,என அவளது பேச்சை மறுக்கிற மகள் ”இதெல்லாம்சும்மாவெளிப்பேச்சு,நீங்கசெய்யிறதெல்லாம்எங்களுக்குதெரியா துன்னுநெனைக்கிறீங்களா,,,,,,?நானும்அக்காவும்காலேஜீக்குபோனதுக்கப்புறம் நீங்கரெண்டு பேரும் இந்த சக்கடா வண்டிய எடுத்துக்கிட்டு ஊரு சுத்திக்கிட்டு இருக்குறதா கேள்விப்பட்டேன்,” என்கிற போது சிரிக்கிற இவனைப் பார்த்து ”கேட்டா மோகத்தையும் ஆசையையும் முப்பதுக்கும்,அறுபதுக்கும் தத்துக் குடுத்துறாம வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்ன்னு,,” ஏதோ கதை சொல்றீங்க, அது என்ன அப்பிடி ஒரு வாழ்க்கை ஒங்களுக்குன்னு வாழ லெவிச்சிருக்குன்னு தெரியல,சரிதான்,,”என அவள் இருவரையும் பார்த்து கண்ணடித்துச் சிரிக்கிற சமயங்களில்,,,,,,

”ஏய் போ அங்கிட்டு கழுத,போயி காலேஜீக்கு கெளம்புற வழியப் பாரு”,என பொய்யாக அடிக்க கை ஓங்குவாள் மனைவி,”நீ என்ன பேசுனாலும் ஒங்கப்பா பேசாமத்தான் நிப்பாரே தவிர்த்து புள்ளை இப்பிடி பேசுதே கண்டிப்பமேன்னு நெனைக்க மாட்டாரு/”

”என்னத்தகண்டிக்க இருக்கட்டும் விடு,சொந்தக்கூட்டுல இருக்குற வரைக்கு மாவது சிறகையும் மனசையும் விரிச்சி சந்தோஷமாஇருக்கட்டும். விடு” என்பான்,

”ஏன்பா அதான் ஸூகூட்டி வேணுமுன்னு மனசுல நெனைச்ச மறுகணம் வீட்ல கொண்டு வந்து நிறுத்த எத்தனையோ ஷோரூம்க ரெடியா இருக்காங்க, தவணைக்கிதானவாங்கப்போறீங்கவாங்கிப்போடுங்களேன், என்னகொறஞ்சிறப் போகுது” என்றாள்,

”இல்லப்பா தவணைக்கி ஸூகூட்டி மட்டுமில்ல,இன்னும் இன்னும் என்னனெ ன்னமோ வாங்கலாம்தான்,

”ஆனா கை விரிச்சி வாழப் பழகீட்டம்ன்னா விரிச்ச கையும்,அனுபவிக்க ஆரம் பிச்சஆடம்பரமும்நிக்காதுப்பா,,,”என்கிறஒற்றைச்சொல்லுக்குள்ளாய் அவளது ஆசையை புதைத்துக்கொள்வாள்,

பெண் பிள்ளைகள் அப்பிடித்தான் போலும், பெரும்பாலுமாய் ஆசைப்பட்டதை நேரத்திற்கும்,இடத்திற்கு தகுந்தாற்போல் மட்டுமே பொருத்திக்கேட்க வேண்டி யதிருக்கிறது.

காலையில் பார்த்த பாலம்,இப்பொழுதான் பார்க்கிறான்,கிட்டதூரத்தை எட்டிப் பார்க்க வைக்கிற ஆச்சரியம்.

அம்மாவும் பெண்ணுமாய் இருப்பார்கள் போலும் ,பாலத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். மகள் வயதில் இருந்தவள் சிவப்புக்கலர் புடவை அணிந் துகொண்டிருந்தாள்,

பார்க்க பளிச்செனநன்றாக இருந்தது,அவளது நிறத்திற்கும் உயரத்திற்கும் ஏற்றதோற்றம்காட்டியதாய்,அம்மாக்காரிஅடர்க்கலரில் ஒரு புடவை அணிந்தி ருந் தாள்,

கையில் வைத்திருந்த பை நிறைய துணிகள் இருந்திருக்கும் போலும். இழு த்து மூடிய ஜிப்பை மீறி பிதுங்கிக்கொண்டு தெரிந்த துணி ஊதாக்கலரில் இருந்தது,

வெளியூரிலிருந்து திரும்பிக்கொண்டிருப்பார்கள்போலும், முகமெங்குமாய் வீடு திரும்புகிற களைப்பு.

மகள்என்னவோதாயிடம்சொல்ல தாய்என்னவோ மகளிடம் சொல்ல பையை திறந்து பார்த்தவாறே போகிற வழியில் இருக்கிறகடையில் சாப்பிட்டுச் செல் வோம் என்கிறாள் தாய்/

இப்படி வெளியே வருகிற நேரங்களில் சாப்பிட்டால்தான் உண்டு.என்கிற மன சமாதானத்துடன் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்,இருவரும்/

இப்பொழுதுதான் பார்க்க வாய்த்திருக்கிறது, பாலத்தை/இடைப்பட்ட நேரத்தில் இடைப்பட்டதூரத்தில்எத்தனைபேர் பயணித்திருக்கக்கூடும்,என்னவெல்லாம் நடந்திருக்கக் கூடும்,

“இதுநடப்புல இருக்குற விஷயந்தான நண்பா,என்னமோ புதுசா உள்ளது போல இல்ல பேசுற,அது அப்பிடித்தான் பயன்படுத்திக்கிறவங்களுக்கும் பயன் படுறவுங்களுக்கும்யெடையில இருக்குற விஷயம். இதுல நம் சொல்றதுக்கும் சொல்லிஆத்திக்கிறதுக்கும் என்ன இருக்கு ,சரி விடு வா டீ சாப்புடப் போவம்” என அழைத்துக்கொண்டு போவான்,

”அவனுக்கு டீ சாப்பிடும் போது ஏதாவது ஒன்று தின்பதற்கு இருக்க வேண் டும், இல்லையென்றால் கத்தி ஊரைகூட்டி விடுவான்.இல்லையென்றால் கடையை விட்டு காதா தூரம் போய் விடுவான்,

அப்புறமாய் அவனை சமாதானம் பண்ணிக்கூட்டி வர ஒரு தனிபடையை அமைக்க வேண்டி இருக்கும்,

அதிலும் வடை என்றால் அவனது மனதும் நாக்கும் அடகு போய் விடும் சட்டென்று/

இல்லையென்றால்இருக்கிற பிஸ்கட்,முறுக்கு,சேவு பாக்கெட், மிக்சர் பாக் கெட், இப்படி இத்தியாதி இத்தியாதியாய் வேறு வேறு முகம் காட்டி இருக்கிற ஏதாவது ஒன்றை எடுத்துச் சாப்பிடுவான்,

கடைக்காரர் கூட கேட்பார் ”ஏண்ணே இப்பிடி,அதுல ஒண்ணு அதுல ஒண்ணு ன்னு எடுக்குறீங்க,அப்புறம் அதுல கொஞ்சம் அதுல கொஞ்சமுன்னு சாப்புட் டுட்டு ஒண்ணு குப்பையில் போட்டுறீங்க, இல்லைன்னாகூடடீக்குடிக்க வர்ற வுங்களுக்குதர்றீங்க,அவுங்களும்வேண்டாமுன்னுடாங்கன்னாவீணா கீழதான் போகுது நீங்க வாங்குறது,எனக்கு இதுல ஒண்ணும் நஷ்டம் கெடையாது,நீங்க வாங்குற ஒவ்வொரு அயிட்டத்துக்கும் காசுதான,என்ன நீங்க வாங்குற பொருள ஏங் கண்ணு முன்னாடியே சாப்புடாமயே கீழ போடுறீங்ன்னு வருத் தம் தவிர்த்து வேற ஒண்ணுமில்லை பெரிசா, என்பார் கடைக்காரர்,

இந்தக்கடையில்தான் மணியண்ணன் வந்த அன்று டீ சாப்பிட்டான்,

தெரிந்தவர் அண்ணன் மகனது கடை ,டீ நன்றாக இருக்கும்,என டீக்கு சொ ல்லிவிட்டு காத்திருக்கும் போது பன்னுசாப்பிடுவோம், கெடைக்குமா என்றார்

பன்னு சாப்புடுறதுக்கு பதிலு வேற ஏதாவது சாப்புடுவோம் என இவன் தான் இனிப்புக் கேக்கை எடுத்துக் கொடுத்தான்.

நன்றாகஇருக்கிறது எனச் சாப்பிட்டவர் வீட்டுக்கென நான்கு கேக்கை வாங்கிக் கொண்டார்,

கடையின் அருகில் இருந்த மரத்திலிருந்து செம்போத்துப்பறவைகள் இரண்டு பறந்து போய்க் கொண்டிருந்தன தூரத்து வானம் நோக்கி,,,/

5 comments:

வலிப்போக்கன் said...

..வீட்டு(நாட்டு) நடப்பை.அப்படியே.....அருமை

கரந்தை ஜெயக்குமார் said...

எல்லாமே அவளது அம்மாவிடமே பகிர்ந்து கொள்வாள்,வயதிற்கு வந்ததும் பெண்பிள்ளைகள்அம்மாவிடம்தஞ்சம்கொள்வதுதவிர்க்கஇயலாதது போலும்/

உண்மை
உண்மை

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த ஒற்றைச்சொல் சிறப்பு...

vimalanperali said...

நன்றியும் அன்புமாய்!

vimalanperali said...

சிறப்பு செய்தமைக்கு நன்றி சார்!