16 Jul 2019

மைல்க்கல்லிடை மனிதராய்,,,,/

அருளானந்தம்,,,

அருள்,,,

அருளண்ணன்,,,,,,என்கிற உயிர் சுமந்த மூன்று நாமகரணங்களில் எங்கள் எல்லோர் உள் மனதிலுமாய் ஓடோடி வந்து ஒட்டிக்கொண்டது அருளண்ணன் என்கிற பெயரே/.

வெப்பப்பிரதேசத்தின் ஈர மிகு மனிதர்.

அவர் என்னில் உறை கொண்டதும் நெசவிட்டதும் 80 களின் பிற்பகுதியில்/

நான்அப்பொழுதுஎம்.ரெட்டியப்பட்டியில் வேலைபார்த்து கொண்டிருக்கிறேன், வளரிளம் பருவத்து இளைஞனாயும் அரும்பிய மீசையை தக்க வைத்துக் கொள்கிற கவனமிகு பருவத்துடனும்./

மீசை அரும்பிய அளவிற்கு ஆசை அரும்பவில்லை என்பதற்கு காரணம் என்னவெனத் தெரியவில்லை,

அதுவா,மாடு மிதிச்சிருச்சாம்,,,,என்பார்கள் கேலி பேசுபவர்கள்,

இருக்கட்டுமே மிதித்த மாடு இளகிய மனம் கொண்டதாய் இருந்திருந்தால் சேதாரம் ஒன்றும் பெரிய அளவில் இருந்திருக்காதுதானே,,,,?

இப்பொழுது இந்த வார்த்தையை எழுதத்தெரிகிற அளவிற்கு அப்பொழுது பேசும் தைரியமில்லை.(அட இப்பொழுதும் கூட அப்படித்தான் என வைத்துக் கொள்ளுங்களேன்,,,,,)

”அடவிட்றா கைப்புள்ள,,,(அப்பொழுது கைப்பிள்ளை இல்லாவிட்டாலும் கூட,,) மனம் தேற்றிக் கொண்டவனாய் நாட்களை நகர்த்திக்கொண்டும் வேலையில் மனம் ஊன்றிக்கொண்டுமாய்.,,,,/

கடந்தபதினான்காம்தேதி(14.7.2019)ஞாயிற்றுகிழமைஎனதுஅம்மாவின்நினைவு நாள்.

அம்மாவின் நினைவு நாளை நினைக்கும் போது அம்மாவின் பழைய சேலை யை மறக்க முடியவில்லைதான்,

அது பட்டுச்செலியாகட்டும்,நூல் சேலையாகட்டும்,மில் சேலையாகட்டும், அம்மாவின் சேலை என்றால் அதற்கு பெயர் அம்மாவின் சேலை தவிர்த்து வேறொன்றுமாய் இருக்கமுடியாதுதானே,,?

ஆனால் இத்தனையிலும் அம்மா வைத்திருந்த நூல் சேலைதான் எனக்கு மனம் பிடித்ததாய்,,/

பிரிபிரியாய் நூல் கோர்த்தும் ஒரே கலரில் சாயம் முக்கியம் பாவு காய்ச்சி எடுக்கபட்ட நூலில் நெய்த ஆடையாய் இருந்த சேலையை அன்று முழுக்க உடல் போர்த்திக் கொண்டிருந்திருக்கலாம் போலும் எனத்தோன்றியது,

ஆனால் துரதிஷ்டவசமாய் கிடைக்கவில்லை அது,

மனம் நினைத்தது கிடைக்கவில்லையானால் என்ன,கிடைத்ததை வைத்து நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள வேண்டியதுதானே என்கிறவனாய் மனம் தேற்றிக்கொள்கிறேன்/

அன்று ராமேஸ்வரம் சென்று எனது தாய்க்கு முதல் திதி செய்ய வேண்டும் என மனம் கீறி முளைவிட்ட ஆசையை தீர்க்க ஆராய்ந்து முடிவெடுத்தோம் எங்களின் கடுமை காட்டும் ஆலோசகர் தலைமையில்/

முடிவெடுத்த நாளிலிருந்து ராமேஸ்வரம் போய் சேரும் நாள் வரை ”புது மண் புது இடம் ,புது மனிதர்கள் புது வாசனை”,,,, அவைகள் சுமந்த புது பழக்க வழக்கங்கள் என்கிற பதட்டம் யாரும் சொல்லாமல் வந்து தொற்றிக் கொள் கிறது லேசாக,,/

அங்கு போய் யாரைப்பார்த்து என்ன செய்து,எங்கு தங்கி எப்படி நினைத்த காரியம் செய்து வரப்போகிறோம் என்கிற மலைப்பு மனம் முழுவதுமாய் மையம் கொண்டிருந்த வேளை,,,/

தவிர்த்து ஊர் மட்டும் புதிதாய் இருக்கப்போவதில்லை.அங்கு செல்கிற தினத் தில்அத்தனை பேரும் தங்குவதற்குநல்லதாய் ஒரு லாட்ஜ் அல்லது காட்டேஜ் வேண்டும்,

அங்கு குறைந்த பட்ச வசதிகளாவது இருக்கிறதா என உறுதி செய்ய வேண் டும்.

அது போக சாப்பாடு ,போக்குவரத்து இதர இதர,,, என யோசிக்கையில் கொஞ் சம் மலைப்பில் விழுத்தெழுகிறது மனம்.

அங்கு மொத்தமாய் தங்குவதற்கு ஒரு வீட்டைகூட வாடகைக்கு எடுக்கலாம். ஒரு நாள் இரண்டு நாட்களுக்கு என அரிச்சலாய் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர்த்து உண்மையில் அப்படி உண்டா இல்லையா என்பது தெரியாது.

அது பற்றி பேச வேண்டும்.அது பற்றி அளாவளாவ வேண்டும்.அது பற்றி விசாரிக்க வேண்டும் கொஞ்சம் விலாவாரியாய்,,,,,என ஒரு மாதத்திற்கு முன்னாய் அந்தப்பேச்சின்முதல் பிரதியில் காலடி எடுத்து வைத்தபோது யாரிடம் கேட்க,,, எப்படி விசாரிக்க,,,,என்ன செய்ய என்கிற எண்ண வடிவுடன் அன்றாடங்களைகடந்து நகன்று கொண்டிருந்த நேரம் மனதில் திடீரென சுழியி ட்டதுபோல் ஞாபகத்தில் துளிக்கிறார் அன்பின் மனிதர் அருளானந்தம் என்கிற அருளண்ணன்.

”ஆகா அருமை வாய்ந்த மனிதரை மனதில் அடை வைத்துக்கொண்டுதானா இவ்வளவுதூரம்மெனக்கெட்டோம்,வெட்கக்கேடு”,,,என தலையில் குட்டிக் கொள்ளாத குறையாய் அவரிடம் தொடர்பு கொண்டபோது ”அட எண்ணன்னே இதுக்குப்போயா இம்புட்டு தூரம் யோசிக்கிற,யாரு யாருக்கோ என்னனெ ன்னெமோ செய்யும் போது ஒனக்கு இது கூட செய்ய மாட்டேனா,,,,,இது ஒருபெரிய விஷயமே இல்ல”,எனவும்”என்னனென்ன வேண்டும், எத்தனை பேர் வருகிறார்கள்,சாப்பாடு எப்படி,?கையுடன் கொண்டு வருகிற ஏற்பாடா இல்லை,கடையிலா,வருகிறவர்களில்முதியவர்,குழந்தைகள் எத்தனை பேர்,,, .உடல் நலமில்லாதவர் யாரேனும் வருகிறார்களா,,?” என இன்னும் இன்னு மாய் விசாரித்தவர் ”ஒன்றுமில்லை,நீங்கள் சொல்வதற்கு தகுந்தாற் போல் ஏற்பாடுகள் செய்து வைக்கத்தான் கேட்டேன், நீங்கள் வருகிற நாள் மணி எல்லாம் சேர்த்துச் சொல்லி விடுங்கள்,,” என்றார்.

”சரி சொல்லிவிடுகிறேன் இரண்டொரு நாட்களில்,,,” எனச்சொல்லி விட்டு பேசிக்கொண்டிருந்த பேச்சை திருகி முடிக்கிறேன் அந்த வெப்பபிரதேச மனித ரிடமிருந்து/

பிரியும் பொழுது 1985 ன் பின் வெயில் காலம்,இப்பொழுது அவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியது 2019 ன் பின் உதிர்க்காலம்,

”ஆமாம் யார் இந்த அருளானந்தம், எப்படி எனக்குப்பழக்கம்,யார் சொல்லி என்னில் குடி புகுந்தார்,,,,,?

அது எண்பத்தைந்தின் பிற்பகுதி,வருடம் முடியப்போகிற நேரம்,அப்பொழுது எம்.ரெட்டியபட்டியில் வேலை செய்து கொண்டிருந்தேன்,

ஒரு வெயில் நாளின் காலைப்பொழுதாக அலுவலகம் திறந்து பிஸியாக இயங்கிக் கொண்டிருந்த வேளையாய் ”சார் அப்பாயிண்மெண்ட் ஆர்டர்,,” என அப்பொழுது கிளார்க்காய் இருந்த ராஜா பழனியப்பன் அவர்களிடம் கவரை நீட்டுகிறார்,

அவரும் பிரித்துப்பார்த்து கைநீட்டி கைகுலுக்கியவராய் அவரை அமரச்செய்து விட்டுஅலுவலகத்தின் அனைவருக்குமாய் அவரைஅறிமுகம் செய்விக்கிறார், அதில் மட்டட்டற்ற மகிழ்ச்சி கொண்ட அருளானந்தம் என்கிற அருளண்ணன் தனது பெயர் எழுதப்பட்டிருந்த வருகைப்பதிவேட்டில் ஆனந்தக்கண்ணீருடன் கையெழுத்திட்டுவிட்டுஅன்றிலிருந்து எம்.ரெட்டியபட்டியிலேயே ஒரு மரத்துப்பறவைகளாய்கூடடைந்து தங்கியிருந்த எங்களில் ஒரு புதுப்புறாவாகி ப் போ கிறார்,

நாங்கள் சாப்பிடும் ஹோட்டலிலேயே சாப்புடுகிறார்,நாங்கள் தங்கியிருந்த அறையிலேயே தங்குகிறார்,நாங்கள் பேசுகீற பேச்சில் சிரிப்பில் மகிழ்வில் துக்கத்தில்,,,இன்னும் இன்னுமான எல்லாவற்றிலுமாய் கலந்து கொள்கிறார் அவர்,

அப்படியான கலந்து கொள்ளலும் கலகலப்பும் கைகுலுக்கலுமாய் இருந்த நாள் ஒன்றின் நகர்வில் ”உனக்கு மாறுதல்” என என்னை வேர் விட்ட மண் ணிலிருந்து பிடுங்கி சாத்தூரில் ஊன்றி விடுகிறார்கள்,

அதனால் என்ன அங்கும் மனிதர்களும்,மண்ணும் அவர்கள் சார்ந்த வாழ்வும் தானே,,,,? என்கிற தைரியத்தில் அவரிடமும் உடன் பணி புரிந்த அனைவரிட மும் கை கொடுத்து விட்டுப் பிரிகிறேன்,அவருடன் சிறிதே நாட்களான நட்பையும் தோழமையையும் பிரிந்து,,,,/

நான் சென்ற வேளை நல்ல வேளை என சுப ஓரையில் குறித்திருப்பார்கள் போலும்.

சாத்தூரில்42 பி எல் தெருவைப்பார்க்கிறேன்,அங்கு உறைகொண்டிருந்த தலை வர்கள், தோழர்கள், நண்பர்கள்,,,என இன்னும் இன்னுமானவர்கள் என்னில் ”பாண்டி யன் கிராம வங்கி ஊழியர் சங்கத்தின்” ரத்தமும், சதையும், ஊனும், உயிருமாய் ஆகித் தெரிகிறார்கள்,

அவர்கள் ஊழியர் நலனுக்காய் பாடு பட்டார்கள்,ஊழியர் உரிமை பேசினார்கள், ஊழியர் உரிமை வேண்டி போராடினார்கள், இந்த வங்கியில் பணி புரிபவர்க ளுக்குஇல்லாதிருந்ததைப் பற்றி நிர்வாகத்திடம் எடுத்துரைத்தார்கள்,மறுக்கப் பட்ட சலுகைகள் தங்களது உரிமை என்றார்கள்,

இது உள்ளதுதானே,இது எல்லோருக்கும் பிடிக்கும்தானே,அப்படியாய் மனம் பிடித்துப் போன இடம் உலைக்களமாய் இருக்க,அதில் வார்க்கப்பட்ட ஒருவ னாய் நானும் ஆகித்தெரிகிறேன்,

தலைவர்கள்பி.கிருஷ்ணகுமார்,சோலைமாணிக்கம்,மாதவராஜ்,காமராஜ்என்கிற இன்னும் இன்னுமாய் பெயர் சொல்ல மறந்த பொறுப்பாளர்களின் கடைசி வரிசையில்நானும்கூடவேஅருளானந்தம்என்கிற அருள் அண்ணனும்.

அப்பொழுதெல்லாம் போராட்டம்,போராட்டம் போராட்டம்,,,இதுவே எங்களின் வாழ்வாய் இருந்த நேரம்,

பசித்துக்கிடக்கிற ஒருவனின் எண்ணம் உணவு நோக்கி பாய்வது இயற்கை தானே,,,?

உண்ணா விரதம்,கேட் மீட்டிங்,தர்ணா,ஆர்ப்பாட்டம்,,,வேலை நிறுத்தம்,,,என இன்னும் இன்னுமான பலபோராட்டங்களில்எங்களின்உயிரையும் உணர்வை யும் கலந்து விட்டிருந்த நேரம்.

விடிய விடிய விழித்திருப்போம்,விடிய விடிய பசித்திருப்போம்,விடிய விடிய விவாதித்திருப்போம்.

அப்பொழுதெல்லாம்இப்பொழுதுபோல்செல்போன்வசதிஇல்லை,பஸ் போக்கு வரத்து இவ்வளவு எளிதாய் ஆக்கப்பட்டிருக்கவில்லை.

ஒருவரை தொடர்பு கொள்வதென்றால் ஒன்று கடிதம் அல்லது தந்தி,இவை இரண்டே வழி,,/

இதையெல்லாம் மீறி தொடர் கன்னியாய் முடியிட்ட மனிதச்சங்கிலி மனம் மூலமாய் அவரை தொடர்பு கொள்கிற சமயங்களில் இதோ வருகிறேன் கிளம்பி என வந்து நிற்பார் சொன்ன நாளின் மறு விடியலில்/

அப்பொழுதெல்லாம் எங்களிடம் பை நிறைய பணம் இருந்ததில்லை,வந்து விட்ட ஊரிலிருந்து திரும்பிச்செல்ல பஸ்ஸிற்கு பணம் இருக்காது,அடுத்த வேளைச் சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்கிற கேள்வி மனம் முழுக்க தொக்கி நிற்கும்,

இருந்தாலும் இவை எல்லாவற்றையும் சங்கம்(பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம்)பார்த்துக்கொள்ளும் என்கிற ஆகப்பெரிய நம்பிக்கை இருந்தது,

அந்த நம்பிகைக்கு சங்கமும் பங்கம் செய்யததில்லை எந்நாளும்/

நான்மட்டுமில்லை,அருள்அண்ணன்மட்டுமில்லைஎங்களைப்போன்றநூற்றுக் கணக்கான ஊழியர்கள்சங்கம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்தார்கள்,

என்ன அதில் முதல் வரிசையில் நின்ற பெருமை எனக்கும் அருளண்ணனுக் குமாய் இருந்தது.

வேலை நிறுத்தமா,?தான் வசிக்கும் ராமநாதபுரத்திலிருந்து அதற்கான திட்டமி டலுக்கு சாத்தூருக்கும் விருதுநகருக்கும் வருவார் அருளண்ணன்/

உண்ணாவிரதமா,,,,,?தான் வேலை பார்க்கிற ராமநாதபுரம் ஏரியா கிளைகளி லிருந்து ஊழியர்களை வேன் பிடித்து அழைத்து வருவார் அருளண்ணன், சமயத்தில் தனது கை காசு போட்டும்/

தர்ணாவா,,,?அதே முஸ்தீபுடனும் சற்றும் சளைக்காத வேகத்துடனும் கலந்து கொள்வார்,

ஒண்ணரை மணி நேர வாயிற்கூட்ட ஆர்ப்பாட்டமா,அதற்கும் யோசிக்காமல் தன் செய்நேர்த்தியை செவ்வனே செய்வார்.

இப்படியாய் ரத்தமும் சதையுமான பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்க போராட்டக்களத்தில்தான் எங்களது உறவு வளர்ந்தது,

எம்.ரெட்டியபட்டியில் அவரைவிட்டு பிரிந்ததற்கு அப்புறமாய்சங்கத்தின் நடவ டிக்கைகளில் கூட்டங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணாக்களில் அவரை நான் பார்க்கிறேன், கை குலுக்குறேன், மனம் கலக்கிறேன்,தோழை பூக்கிறேன், நட்பு கொள்கிறேன்.பேசுகிறேன் சிரிக்கிறேன்,விவாதிக்கிறேன்,ஆக்கப்பூர்வம் கொள்கிறேன்,அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டும்,என்னிடமிருந்து அவர் பகிர்ந்து கொண்டுமாய்,,,/

நான் மட்டும்தான் இதைச்செய்தேனா என்றால் இல்லை அவரும் அதையே செய்த மனிதராய் இருந்தார்.

பேசினோம்,விவாதித்தோம்,சங்கம் பற்றி ,சங்கத்தின் செயல் பாடு பற்றி அதன் தலைவர்கள் பற்றி,அதன் உறுப்பினர்கள் பற்றி,அதன் போராட்டம் பற்றி ,அதன் நல் வழி பற்றி, என நேரம் காலமில்லாமல் மணிக்கணக்கு இல்லாமல் குடும்பம் சாப்பாடு தூக்கம் என்கிற காலவரையறைக்குள்ளாய் அடைபட மறுத்து பேசினோம் பேசினோம் பேசி கொண்டே இருந்தோம்.

விவாதித்தோம்,விவாதித்தோம்,விவாதித்துக்கொண்டே இருந்தோம்,

ஆக்கபூர்வமாய்யோசித்தோம்யோசித்தோம்யோசித்துக்கொண்டேஇருந்தோம்,

செயல் பட்டோம் ,செயல் பட்டோம் ,செயல் பட்டுக்கொண்டே இருந்தோம்,

இப்படி பேசவும் விவாதிக்கவும்,யோசிக்கவும்,செயல் படவும் மனம் படர்ந்து தோழமை கொள்ளவுமாய் எங்களுக்குள் அந்த வெளியை ஏற்படுத்திக் கொ டுத்தது பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம்தான்,

ஒரு வேளை பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம் மட்டும் இல்லாது இருந்திருக்குமானால் நானும் அருள் அண்ணனும் இவ்வளவு நெருக்கம் கொண்டிருப்போமா தெரியவில்லை.

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ படித்து வேறு வேறு ஊர்களில் பணி புரிந்த போதும் கூட தங்களின் சுய விலாசமாய் பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்தை கருதியவர்களுள் அருளண்ணன் வெகு முக்கியமானவ ராகித் தெரிகிறார்,

அப்படியான முக்கிய மனிதர் பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம் 42 பி எல் எப் தெரு சாத்தூர் அலுவலகத்தின்மாடிப்படிகளில் ஒன்றாய் கைகோர்த்து இறங்கிய 90 களின் முற்பகுதியிலிருந்து இன்று வரை நினைத்துப்பார்க்கப் படுகிறவராய் இருக்கிறார், பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம் நெச விட்டுக் கொடுத்த உறவின் மூலமாய்,,/

அப்படியான இளநெசவின் மூலமாய் நினைத்துப்பார்க்கப்படுகிற மனிதர் நான் சொன்னதும் எனக்காக ராமேஸ்வரம் சென்று காடேஜ் புக் செய்து விட்டு,திதி காரியங்கள் செய்யவரை பேசி விட்டு கோவிலுனுள் தீர்த்தத்திற்கு சொல்லி விட்டு நீ ஒன்றும் கவலைப்படாதே சகோதரா,செல்ல வேண்டிய ஊருக்கு, செல்ல வேண்டிய நாளில்,செல்ல வேண்டிய நேரத்திற்கு சென்று விடு,நான் சொல்லி வைத்த நபர் நீ இறங்கி ராமேஸ்வரம் மண்ணில் கால் வைத்த கணத்திலிருந்துநீதிரும்பிஊர்கிளம்புவதுவரைஉன்நிழலாய்இருந்து உன்னைப் பாதுகாத்து அனுப்பி வைப்பார் கவலை கொள்ளாதே எனச் சொன்னார்,

வெறும் சொல்லில் மட்டும் இல்லாமல் சொன்ன சொல்லை நிஜப்படுத்திக் காண்பித்த அன்பின் மனிதர் ,அருளானந்தம் என்கிற அருளண்ணனையும் என் போன்றவர்களையும் மன நெருக்கம் கொள்ளச்செய்து புடம் போட்டு உறவிட வைத்த ”பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம்” என்கிற சொல்லும் நினை வும் இருக்கும் வரை அருளானந்தம் என்கிற அருளண்ணன் நினைத்துப் பார்க் கப் பட்டுக் கொண்டே இருப்பார் என் போன்றோர்களால்/

”அருளண்ணே இன்னும் காலமும் நேரமும் இருக்கு நமக்கு பேசுவோம், சிரிப் போம்,விவாதிப்போம்,அளாவளாவுவோம்,,,,,என்கிறசொல்தவிர்த்துவேறொன் றும் சொல்லத்தோணவில்லை இந்தக்கணத்தில்,,,/

2 comments:

வலிப்போக்கன் said...

இதைத்தான் தோழமை என்பார்கள்.....!!

vimalanperali said...

தோழமை உயிர்க்கும்தானே!