27 Jul 2019

வனமாகி,வரமாகி,,,,,/

வணக்கம் நண்பா,போய்க்கொண்டிருந்தேன் பேருந்தில்,

அது ஒரு இடை நிறுத்தப்பேருந்துதான்,

ஆம் அப்படித்தான் அந்தப்பக்கம் பேருந்து ஓட்ட முடியும், மொத்தமாய் கடக்கிற எட்டு ஊர்களுக்கு இருபத்தி இரண்டு இடங்களில் நிற்க வேண்டிய அவசியம் காட்டி அன்றாடம் தன் வழியில் சென்று கொண்டிருக்கிற பஸ்,

மழை வெயில் ,காற்று பனி,,,,,,, என இத்தியாதி இத்தியாதியாய் எத்தனை இயற்கைஇடர் வந்த போதும் கூட தனது பயணத்தை இடைவிடாமல் தொடர் கிற விரைவாய் தன் பயணத்தை இடை நில்லாமல் தொடர்வதாய்,

அது அப்படித்தான் ஆகிப்போகிறது சமயத்தில் /,

பூத்த பூவுடன் செடி ஒன்று தரை கழண்டு வான் பறக்கிற பறவை ஒன்றுடன் கைகோர்த்தும் போட்டி போட்டுமாய் சென்றால் எப்படி இருக்கும்,அது போலத் தான் சமயத்தில் பஸ் நிலையத்திலிருந்து பஸ் கிளம்பும் போது டயர்களை கழட்டி வைத்து விட்டு வேலை மெனக்கெட்டு இறக்கையை மாட்டி விடுகி றார்கள்.மாட்டிய இறக்கை தனது பங்கிற்கு வஞ்சகம் ஏதும் செய்யாமல் பெரும் எடை பேருந்தை கனம் கொண்ட மலர் ஒன்றை தூக்குக்கொண்டு செல்கிற பறவையின் லாவகத்து டன் வான் மீது ஏறிப்பறக்கிறதாய்,,,/

இந்தப் பறத்தலின் சந்தோஷத்திலும் வேகத்திலுமாய் ஏதாவது ஒரு ஊரில் நிற்காமல் போய் விட்டால் அவ்வளவுதான், மறு நாள் அந்தப்பக்கமாய் பஸ் ஓட்டி விட முடியாது,சிறிது நாட்களுக்கு முன்பான குளிர்கால இரவொன்றின் போது அவ்வழியே சென்ற கடைசி நேரப்பேருந்து நிற்காமல்போய் விட மறு நாள் அந்த ஊரைத்தாண்டி பஸ் போய் விட முடியவில்லை.

ஆணும் பெண்ணும் சிறுசும் பெருசுமாய் ஊரே கூடி விட பின் நேற்று பஸ்ஸில் ஓடியவர் புது டிரைவர்,அவருக்கு இங்கு ஊர் இருக்கிற விபரம் தெரியாமல் ஊரில் நிற்காமல் கடந்து போய் விட்டார்,இனி அப்படி நடக்காது என்கிற உறுதி மொழி தாங்கிச்சொன்ன சொன்னதும்தான் பஸ்ஸிற்கு வழி விட்டிருக்கி றார்கள்.

அதற்கப்புறமும் கூட யாரோ எறிந்த கல் பின் புறம் இருந்த லைட் கண்ணா டியை பதம் பார்த்திருக்கிறது,

அவசரத்திலும் நிதானம் இழக்கக்கூடாது அந்த வழியில்,,,,என்று சொன்ன டிரைவர் இப்பொழுது அந்த புது டிரைவரை அந்த ரூட்டில் பஸ் ஓட்ட அனு மதிப்பதில்லை.என்கிற சொல் உதிர்ந்த முதிர் காலைப்பொழுதின்றில் இடை நிறுத்தத்தில் நின்ற ஊரில் பேருந்தின் பின் புற படிக்கட்டு வழியாய் ஏறிய வன் ”ஒரு புள்ளதான் ,ஒரு வயசுதான் ஆகுது” என்றான்,

அவனது குரல் பேருந்து முழுவதுமாய் அசரீரியாய் பரவி அவரவர் முன் புறம் அமர்ந்திருந்த என் அது காதுகளில் குத்திய போது நான் மென்மை காட்டி பார்வையை திருப்புகிறேன்,

இருபத்தியெட்டுவயதிற்கும் மேற்படாத தோற்றத்தை போர்த்தியிருந்த அவன் தற்பொழுதுள்ள உடை நாகரிகத்திற்கு அப்டேட் ஆகியிருந்தான். அவனது மனைவி வழக்கமான மில் சேலையில்./தோள் சாய்த்திருந்த பிள்ளை அம்மா வின் மீது எச்சில் ஒழுக தூங்கிக்கொண்டிருந்தது,

பனிவிழுந்த மலர் வனத்தில் குழந்தையின் தூக்கம் ஒரு வரமாய்,,,,/

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்போதும் நிதானம் இழக்கவில்லை...

vimalanperali said...

அன்பும்,பிரியமாய்!

வெங்கட் நாகராஜ் said...

பேருந்து பயணங்கள் பல அனுபவங்களை அள்ளித் தருபவை. உங்கள் பதிவு வழி நானும் பயணித்தேன் அப்பேருந்தில்...

'பரிவை' சே.குமார் said...

அருமை...
பயணங்கள் எப்போதும் அருமையான அனுபவத்தினைக் கொடுக்கும்.

vimalanperali said...

நன்றியும்,அன்பும்!

vimalanperali said...

அன்பும்,பிரியமும்!

கரந்தை ஜெயக்குமார் said...

பயணங்கள் அனுபவங்கள் அல்லவா

vimalanperali said...

அனுபவங்கள் பயணங்களில் சிறக்கிறது,,,/