28 Jul 2019

மலர்ச்செரிவு தாங்கி,,,,,

சென்றது பஜாரகவும் வந்தது வீடாகவும் இருந்தது,

பஜாருக்கு ஏழு கிலோ மீட்டர்களாவது பயணிக்க வேண்டும்,

ஆத்திர அவசரத்திற்கு நடந்து கடந்து விடக்கூடிய தூரமில்லை.ஒன்று டவுன் பஸ் அல்லது மினிப்போக்குவரத்துக் கழகம்தான்,

டவுன் பஸ்ஸிற்காக காத்துக்கிடக்கிற நேரத்தில் வரும் மினியில் பயணிப்ப துதான் சாத்தியமும் கைகூடியுமாய் வருகிறது ஈஸியாயும் இது நாள்வரை யிலுமாய்/

இவனுக்கு மட்டுமில்லை,அந்தஏரியாவாசிகள் எல்லோருக்குமேகிட்டத்தட்ட அப்படித்தான்,

ஆனால் இரு சக்கர வாகனம் வைத்திருக்கிறவர்கள் கதை வேறாய் இருக் கிறது,

நினைத்த நேரம் கொஞ்சம் பெட்ரோல்தானே,,,? ஊற்றிக் கொண்டு விரைந்து விடலாம்தானே,கொஞ்சம் கெத்தாகக்கூட இருக்கும் அது போல் போவதற்கு/

பின் இருக்கையில் ஆசை மனைவி,முன் இருக்கையில் ஓட்டிச் செல்லும் கணவன், அன்பும் காதலும் ஒரு சேர அவர்கள் சாலையில் பயணிக்கையில் கொடுத்து வைத்தது”அவர்கள் ஓட்டுகிற இரு சக்கர வாகனமா, இல்லை வாக னம் ஓடுகிற சாலையா,இல்லை வண்டி ஓட்டிகொண்டு போகிற கணவன் மனைவியா” என வாதிடத்தோணுகிறஅளவிற்கு கண்ணில் படுகிற காட்சி யாய் இருக்கும்,

“இதுக்குத்தான் ஒரு வண்டி வாங்கிப்போடுங்கன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்குறீங்க,சிக்கனம் ,நொக்கனமுன்னு பேசிக்கிட்டு,,,,,/வளந்து நிக்கிற புள்ளைங்க ஆசைக்காக வாங்காட்டினாலும் கூட இது போல ஆத்திர அவசர தேவைக்காவதுவாங்கலாம்ல்ல,,,,என்கிறமனைவியின்பேச்சைஇடைமறித்தவன் ”எனக்கு கூட ஆசைதான் வண்டி வாங்கனுமுன்னு, இப்பயெல்லாம் வண்டி வாங்கணுமுன்னு அவுங்ககிட்டப் போயி கேக்கக்கூட வேணாம், ,மனசால நெனைச்சாப்போதும்,நிப்பாட்டிர்றாங்க வீட்டுல கொண்டு வந்து,/

அதுப்பக்கப்புறம்தான் டாக்குமெண்டு, ரிஜிஸ்டேரஷன் பீஸீ, பணம் தவணை ங்குற மத்த, மத்த தான பேச்செல்லாம்,,ன்னு இருக்கும் போது நாளைக்கே கூட நம் நெனச்ச ஒரு வண்டிய வாங்கிகொண்டு வந்து நிறுத்தீறலாம்,இப்பத்தான் வாஸிங்க் மிஷின் தவணை முடிஞ்சி ,பிரிட்ஜ் தவணை ஓடிக்கிட்டு இருக்கு, இதுக்கு ஊடால வண்டின்னு ஒரு குறுக்குச்சால் ஓட்டுனமுன்னு வையி அவ் வளவுதான்,டப்பாவுக்கு டான்ஸீதான்,,,,என இவன் சொன்னதும் ஆமாம் எப்பப் பாத்தாலும் இத ஒண்ண சொல்லிக்கங்க,எப்ப நமக்கு நெறைவா இருந்து ச்சி,இப்ப இருக்குறதுக்கு,அப்படித்தான் ,இடிச்சிப்பிடிச்சி கோயில் கூட்டத்துல நின்னு சாமியப்பாக்குற மாதிரி அப்பிடி அப்பிடியே கொஞ்சம் பல்லக் கடிச்சிக் கிட்டு வாழ்க்கைய ஓட்டிக்கிற வேண்டியதுதான்,என்ன நம்ம மட்டும்தானா அதிசயம், எல்லா வீட்லயும் அதுதான,இதுல நம்ம மட்டும் விதி விலக்கா என்ன,,,?வாங்கிப்போடுங்க யோசிக்காதீங்க,

“சின்னவ கையில ஒரு பைக் படத்தவச்சிக்கிட்டு ஏங்கிட்ட வந்து அப்பாவ இந்த பைக்க வாங்கி ஓட்டச் சொல்லுங்கம்மான்னு நச்சரிச்சிக்கிட்டு இருக்கா”, என மனைவி சொன்ன படத்தை வாங்கிப்பார்த்த போது இவனுக்கு தூக்கி வாரிப் போட்டும் இரு சக்கர வாகனம்வாங்குற எண்ணத்தை குழிதோண்டி புதைத்து விடுமானஅளவிற்கான கோபமும் வந்தது,

”அடப்போடி போக்கத்தவளே,அவ ஏதோ படம் காட்டுனாளாம், இவளும் வாங்கிப் பாத்தாளாம்,அம்மாவும் பொண்ணுமா சேந்து என்ன வெளையாடுறீ ங்களா,அவ காமிச்ச பைக்கோட வெலை என்னன்னு தெரியுமா ,ஒண்ணே முக்கால் லட்சம்டீ கூறு கெட்டவளே,நம்ம மாதிரி உள்ள குடும்பங்க சின்னதா ஒரு விசேஷம் நடத்தி முடிச்சிறலாம் அந்தப்பணத்துல,ஆமாம் பாத்துக்க என்றவனை திறந்த வாய் மூடாமல் பார்த்தவள் ”அட பாதகத்தி மகளே,நான் ஒருகிறுக்கி இதுகூடத்தெரியாமஒங்ககிட்டவந்துசொல்லிப்புட்டேன் என்றாள்,

“வரட்டும் இன்னைக்கி புடிச்சி நாலு வாங்கு வாங்குனாத்தான் சரிக்கு வருவா அவ என்றாள்,

“வாங்குறதெல்லாம் இருக்கட்டும் ஒரு பக்கம் அவளுக்கு மட்டும் இந்த மாதிரி யான எண்ணம் வந்துருந்தா வாங்குறதுல தப்புல்ல,இப்ப ஆறு அல்லது அஞ்சி வீடுகள்ல இதுதா நிலைமயா இருக்கு,அட சின்னப்புள்ளைங்க ஆசைப்பட்டா ங்க நெனைச்சாங்கன்னாக்கூட பரவாயில்ல,பெரியவங்களே அப்பிடித்தான் இருக்காங்க என்ன செய்ய சொல்லு,கேட்டா கௌரவமுன்னு ஒரு வார்த்தைய படக்குன்னு யோசிக்காம சொல்லுறாங்க,

”அவசியத்துக்கு வாங்குனது போயி ஆடம்பரத்துக்கு வாங்கிக்குவிக்க ஆரம் பிச்சிட்டோம்,

வீட்டுலஒரு கார வாங்கி வச்சிட்டு அத தினமும்ஓட்டாமஅது அந்த வீட்டோ கௌரவக்கூறியீடாகாண்பிச்சிக்கிட்டு அதுக்கு மாசம்பத்தாயிரம் ரூபா செலவ ழிக்கிறாங்க,

“இன்னும் சில பேரோட நெலைம ரொம்ப மோசம் ,வாங்குன கார நிப்பாட்ட யெடமில்லாம வெளி யெடங்கள்ல வாடகை குடுத்து நிப்பாட்டிக்கிட்டு இருக் குறாங்க, எனக்குத் தெரிஞ்சி ஒருத்தரு வாங்கன கார நிப்பாட்ட யெடமில் லாம பஸ்டாண்டு பக்கத்துல இருக்குற கார்ஸ்டாண்டுல மாசம் ரெண்டாயிரம் ரூபா வாடகை குடுத்து நிறுத்தி வச்சிருக்காரு,அவரயெல்லாம் என்னன்னு சொல்லு றது சொல்லு, இதுபோலத்தான் இன்னைக்கி எல்லாத்துலயும் வந்துரிச்சி, என்றவனை ஏறிட்டவள் சரி நீங்க நெனைக்கும் போது வண்டி வாங்கிக்கங்க,,” என்றாள்,

இவனுக்கும் மனதின் ஒரு ஓரமாய் இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் இல்லை.

கூடைய பறவைகள் வீடு வந்துதானே ஆகவேண்டும்?

அகன்று பரந்த அத்து வானவெளியெங்குமாய் பறந்தலைந்து விளைச்சளற்ற பெருவெளியெங்கிலும் வட்டமிட்டுத் திரிந்தும் அலைந்தும் களைத்தும் தின்ன ஏதும் கிடைக்காமல் பசிமிகுந்த வெற்று வயிற்றை எக்கிக் கொண்டு அடர்ந்து கிளைத்த மரத்தில்(அடர்ந்து காண்கிற மரம் கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும்) கூடு கட்டி தன் துணையுடன் காதல் மொழி பேசி கூடிக்குழாவி குஞ்சு பொரித்து பின் வாழ்கை நடத்தும் இடமாய் இருக்கிற கூடுகளை விடுத்து எங்கே செல்ல ,சொல்லுங்கள்,இது எனது இடம் ,நான் இங்குதானே உறை கொண்டு இருக்க முடியும்,,,எனக்கேட்டவாறே வீட்டிற்குள் நுழைந்த பொழுது ரிப்பேர் பண்ணி வந்த மிக்ஸியின் ஜாரை பையிலிந்து எடுத்து ஓரமாய் வைக்கிறான்,

காலையில் கொஞ்சம் தாமதம் காட்டித்தான் எழுந்தான்,

இப்பொழுதெல்லாம் அப்படித்தான் எழ முடிகிறது.உடல் அலுப்புடன் சேர்ந்து கொள்கிற மன அலுப்பும் மன அலுப்புடன் சேர்ந்து கொள்கிற உடல் அலுப்பு மாய் கைகோர்த்துக்கொள்கிற நேரங்களில் அப்படியே அசதி காட்டி படுக்க வைத்து விடுகிறது,

இத்தனை மணிக்கு எழுந்தால்தான் இத்தனை மணிக்கு வேலைக்குப்போக முடியும் என்கிற கட்டாயத்தில் வம்படியாய் உடலைத்தூக்கிக்கொண்டு எழ வேண்டியுள்ளது.அது போல்த்தான் இன்றும் எழுந்தான்,

பஜார் செல்லலாமா இன்று என்கிற பேச்சில் பெரிதாய் ஏதும் திட்டமெல்லாம் இல்லை,

காலைஎழுந்துடீக்குடித்துக்கொண்டிருக்கையில்சொன்னாள்மனைவி ,”மிக்ஸி ஜார் நேத்து சட்னி அரை பட்டுக்கிட்டு இருக்கும் போது நின்னு போச்சி” என/

அரை பட்டுக்கொண்டிருக்கிற விஷயங்கள் பல பாதியில் நின்று போவதும், வந்த வேகத்தில் காணாமல் போய் விடுவதும், பின் வாங்கி விடுவதுமாய் இருக்கிறது கண்கூடு,/

”யானை பாக்க வெள்ளெழுத்தா” அது அப்படித்தான் தெரியாதா என்கிறார்கள் அனுபவஸ்தர்கள் இது போலாய் காணாமல்அல்லது பின் வாங்கிக் கொள்ளப் படுகிற விஷயம் கண்டு/

சரிதான்அவர்களது அனுபவத்தைக்கூட வயதாகக் கொள்ளாதவர்கள் பேசுகிற பேச்சும்புறம்கொள்கிறநைச்சியத்தனமும்எல்லைதாண்டியபயங்கரவாதமாய்/

கேட்டால்உங்கள்வழிஉங்களுக்கு எங்கள்வழிஎங்களுக்குஎன்பதாய் சொல்லிச் செல்கிறார்கள்,” சரி சொல்லிச்செல்கிற எல்லா வழியும் ஊருக்குள் தானே என்றால் அது தங்களுக்கு தேவையற்ற விஷயம் என்பதை தயக்கமில்லாமல் பதிவு செய்கிறார்கள்.

அந்தப்பதிவு “வீட்டுக்கு அடங்காத புள்ள ஊருக்குள்ள செருப்படி வாங்கும்” என்கிற சொல்தாங்கி, செயல் வடிவு காட்டி நிற்கிறது சமயா சமயங்களில்/

மிக்ஸி ரிப்பேர் பண்ண வேண்டும் ,இவனுக்கு ஒரு பை வாங்க வேண்டும் கௌரவமாய்சாப்பாடுஎடுத்துச்செல்ல,இரண்டும்அடுத்தடுத்துசெய்யவேண்டும்,

இப்போதுவீடு முழுவதுமாய் அடை கொண்டு கிடக்கிற பைகள்ஒன்று பெரிதா வோ இல்லையானால் சிறிதாகவோ இருக்கிறது,

பெரியதில் சாப்பாடுக்கேரியரை வைக்க முடிவதில்லை, சாப்பாடுகொட்டிப் போகிறது பைக்குள்ளாகவே,சின்னது இடம் போதவில்லை,

அதனால் கொஞ்சம் தேவைக்குத் தகுந்தாற்போல வாங்கினால் நன்றாக இருக் குமே என விளைந்து தெரிந்த எண்ணத்தை மனம் சுமந்து கொண்டு நாகர் கோவிலார் கடையில் மிக்ஸியை ரிப்பேருக்குக் கொடுத்து விட்டு பக்கத்தில் கடை வரை போய் விட்டு வந்து விடுகிறோம் இதோ கால் மணியில் அதற்குள் ளாக ரிப்பேர் செய்து வையுங்கள் என்கிற சொல்லை விதைத்து விட்டு நாகர் கோவிலார் கடைக்கு திரும்புகிற முக்கில் இருக்கிற பைக் கடைக்குச் சென்றா ர்கள்,

அவர் டீக்குடிக்கப் போயிருப்பதாய்ச் சொன்னார் பக்கத்துக் கடைக்காரர்,

பொதுவாக இது போலான கடைகளுக்கு டீ தேடி வந்து விடும் இனிமையான தென்றலைப்போல,,,,

அவரது கடையுடன் சேர்த்து அங்கிருக்கிற நான்கு கடைகளுக்கும்/

அது போக அந்த வரிசை தாண்டி இன்னும் இன்னுமாய் இருக்கிற பத்து பணிரெண்டு கடைகளுக்கும் வழக்கமாய் டீத்தருகிறவர் இன்று வரவில்லை என்றார்கள்,

அவரது வீட்டில்விஷேசமாம், அவரது சின்னமகள் வயதுக்கு வந்து விட்டாளா ம், நேரம் வாய்க்கிற பொழுதுகளில் சொல்லிக் கொண்டிருப்பார் டீக்கொடுப் பவர்.”சின்னப்பொண்ணு எப்ப உக்காரப் போறான்னு தெரியல” என,அவரது சொல் இன்று நிஜம் தாங்கி நிற்கிறதாய்/

இவன் பை வாங்கச்சென்ற கடைக்காரர்தான் சொல்வார் எண்ணன்னே ,போன மாசத்துக்கு இந்த மாசம் ஆளு மெலிஞ்ச மாதிரி தெரியிற, சாப்பாடு கீப்பாடு சரியில்லையா, வீட்ல அக்கா பட்னி போட்டுர்றாங்களா,இப்பிடி சாப்புடாம கொள்ளாம இருக்குறதுனால நடக்கப்போறது நடக்காம இருக்கப்போகுதா நடக் காமஇருக்குறது ஏதும் நடந்துருமா அதிசயமாசொல்லுங்க,அதது நடக்க வேண்டிய நேரத்துல சரியா நடக்கும்ண்ணே,விடுங்க நமக்கும் மேல ஆண்ட வன்னு ஒருத்தன் இருக்காண்ணே அவன்பாத்துப்பான் ஆமாம் நம்மளப் போலவும் நமக்கும்கீழ இருக்குறவுங்களுக்கும் இந்த ஒலகத்துல வாழாமயா இருக்காங்க, விடுங்கண்ணே.எனச்சொன்னகடைக்காரர் மதுரையிலிருந்து வருகிறார்,

அன்றாடங்களில் காலை ஒன்பது மணிக்கு கடை திறந்து விடுவார், எந்த மழை,எந்த வெயில்,எந்தப்பனி,எந்த காற்று ,,,என இத்தியாதி இத்தியாதியாய் எத்தனை இயற்கை இடர் பாடுகள் வந்தாலும் கூட அவர் கடை திறந்துருக் கும் கண்டிப்பாக என நம்பிச்செல்லலாம்/

காலையில் ஒன்பது மணிக்கு நடை திறப்பவர் இரவு அவர் செல்கிற கடைசி ரயிலை எட்டிப்பிடிக்கிற அரை மணிக்கு முன்பாய் தான் கடையைச் சாத்துவார்,

ஒரு குளிர் நாளின் இரவொன்றில் கடை சாத்தப் போகிற நேரமாய் அவசரம் காட்டி வந்த கஷ்டமர் ஒருவர் ”நாளை காலை வெளியூர் கொண்டு செல்ல அவசரமாய் ஒரு பை வேண்டும்,மற்ற கடைகளில் போய் இதுநாள்வரை வாங்கிப் பழக்கமில்லை எனக்கு,அதனால்தான் தங்களைத் தேடி வந்தேன், என்ன கொஞ்சம் தாமதம் காட்டி வந்து விட்டேன், எனச்சொன்னவரிடம் போய் வாருங்கள் தயக்கமில்லாமல்,கண்டிப்பாக நாளைக்காலை உங்களது எதிர்பார்ப்பிற்கு மேலாக ஒரு பை இருக்கும் உங்கள் கையில் ,விலையெல் லாம் அப்புறம் பேசிக்கொள்ளலாம் என அன்று இரவு வீட்டிற்க்குச் செல் லாமல் தெருவில் ரோந்து செல்லும் வாட்ச்மேனுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து பக்கத்திலேயே வைத்துக்கொண்டு பையை தைத்துக் கொடுத்தார். மறுநாள் பை வாங்க வந்த கஷ்டமர் நெகிழ்ந்து போனார், தனது நெகிழ்வை கடைக்காரர் பைக்கு கேட்ட விலையை விட அதிகமாக ரூபாய் ஐம்பது கொடுப்பதில் காட்டினார்,

”அவர் பை விலையை விட அதிகமாய்க் கொடுத்த ரூபாய் ஐம்பதிற்காய் அவருக்கு பை தைத்துக் கொடுக்கவில்லை நான்,என் மீதும் எனது கடை மீதுமாய் அவருக்கு இருந்த நம்பிக்கை பொய்த்துப்போகக்கூடாது என்பதற் காய் என்னை நானே வருத்திக் கொண்டு அந்த வேலையை அன்று செய்து கொடுத்தேன்” என்றவரிடம் பையை வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.

அவர் கொடுத்த பை சாப்பாடு கொண்டு செல்வதற்கு சரியாக இருக்குமா இல்லையா என்பது தாண்டி மனம் பிடித்திருந்தது,சரி பண்ணி வாங்கிக் கொண்டு வந்த மிக்ஸியைப்போல.

இனி மிக்ஸி ஓடும்,சாப்பாடு பொங்கும்,சமையல் சிறக்கும் இவனும் கொண்டு போவான் புதிதாய் வாங்கிய பையில்,,,/

சென்றது பஜாராகவும் திரும்பி வந்தது வீடாகவுமாய் இருக்கிறது,

வீட்டிற்குத் திரும்புகிற வழியில் சாலை ஓரமாய் இருந்த வாகை மரங்களும், ஒற்றைக்கொன்றை மரங்களும் சாலையெங்குமாய் பூக்களை வாரிச் செரிந் திருந்தன,

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்ஸியைப்போல மனமும்...

vimalanperali said...

அன்பும் பிரியமுமான கருத்து!