29 Sept 2019

பின்னிருக்கை,,,

பேருந்தின் பின்னிருக்கையில் ஒட்டப்பட்டிருந்த பச்சைநிற ரெக்ஸின் இடது ஓரமாய் கிழிந்து தொங்கிறது காற்றில் ஆடிய படி/

ஆடிக்கொண்டிருந்த ரெக்ஸினை இருக்கையின் பின் பக்கமாய் அழுத்தி பிடித்த படி கண்டக்டரிடம் டிக்கெட் வாங்குகிறான்.

”அதை ஏன் அழுத்திப்பிடித்துக்கொண்டு?விடுங்கள் தன்னிஷ்டத்திற்கு”என்ற கண்டக்டரை ஏறிட்டவன்,”முகத்திலடித்து இடைஞ்சல் செய்கிறது அதனால் தான்” என்றவனாய்,பேருந்து ஏறப்போகையில் வீட்டு வாசலில் நின்று வழிய னுப்பிய தாயின் நினைவை மனம் கொள்கிறான்.

படிய வாரியிருந்த தலை ,என்ன செய்தும் அள்ளிச்சேர்க்க முடியாமல் முன் புறம் தொங்கிய ஒற்றை முடி,மிகைப்படாத எண்ணெய்ப்பூச்சு, மை தடவாத நரை முடியின் அசல்.நெற்றிக்கு இட்டிருந்த குங்குமம், அதன் மேலே கீற்றாய் மின்னிய திருநீறு.வகிடெக்கும் இடத்தில் மின்னிய செந்தூர்க்கம், பாந்தமாய் உடுத்தியிருந்த காட்டன் புடவை எல்லாம் மனதில் மையம் கொள்ள காற்றில் ஆடிய ரெக்ஸின் சீட்டை அழுந்தப் பிடித்திருந்த கையை எடுத்து விடுகிறான் காற்றின் அசைவில் ரெக்ஸின் சீட்டின் ஓரம் இவன் முகத்தில் அறைபடும் போதெல்லாம் தாயின் காட்டன் புடவை இவனில் உறை கொள்வதாக,,,/

2 comments:

Yarlpavanan said...

சிந்திக்க வைக்கிறியள்

vimalanperali said...

நன்றியும் அன்பும்,,,/