28 Mar 2021

பயணம்,,,

 _________::        ::: 🎭🎭🎭🎭



அன்றாடங்களில் பயணிக்கிற பேருந்துதான்.

காலை வேளையில் அலுவலக  அவரசத்திற்கும் 

மாலையில் களைப்பு சுமந்து 

வருகிற பொழுதிலுமாய்


பயணச்சீட்டெடுக்கிற

அதே பேருந்துதான்.

அது அல்லாது விடுமுறை தினங்களிலும், என்றாவது வேறொரு தேவை நிமித்தமாய் ஒருமணிநேர பிரயாணதூரம் தேவைப்படுகிற அவ்வூருக்கு செல்கிற வேளையாய் பேருந்தில் அந்நடத்துனரைப்

பார்ப்பதுண்டு.

ஓட்டுனரை பெரும்பாலுமாய் பார்த்ததில்லை.

அஸ்திவாரங்கள் எப்பொழுதும் கண்ணுக்குப்புலப்பட்டதில்லைதானே?பேருந்தின் அக்கடைசிக்கும் இக்கடைசிக்குமாக உலகளந்த பெருமாளாய் அலைகிற நடத்துனர் எப்பொழுதும் யாருடனாவது எது பற்றியாவது பேசிக்கொண்டே இருக்கிறார்.

ஆண்களுடன் பேசுகிறார்,

பெண்களுடன் பேசுகிறார்,

சிறுவர் சிறுமிகளுடன் பேசுகிறார்.

முதியவர்களுடனும்,

கூடவே கை பேசியில் யாருடனாவது பேசுகிறவர்

பேசுகிற வார்த்தைக்கும்

கேட்கிற காதுக்கும் வலிக்காது பேசுகிறார்.

அவர் பேசி முற்றுப்புள்ளி வைக்கிற விஷயங்கள் எல்லாவற்றிலுமாய் பட்டுத்தெரிந்த ஏதாவதொரு அங்காலாய்ப்பின் பின்னனியாய்

தனக்கு இல்லாதிருக்கிற பெண்குழந்தை பற்றிய பதிவு இல்லாமல் இல்லை.


                          || ::               :::: 👥👥👥👥

No comments: