__________:: :: 👥👥👥👥
கம்பிபிடித்தேறியதும்தானா
அந்தப்பாடல் ஒலிக்க வேண்டும்.
பழைய பாடலாய் தெரியவில்லை.
புதிய பாடலின் சாயல் பூசியிருக்கிறதாய்
எதுவும் பட்டுத்தெரியாத நிலை.
பின் புற படிக்கட்டு வழியாகத்தான்
ஏற வாய்க்கிறது.
வாய்த்ததும்,வாய்க்கப்பெற்றதும்
கிடைக்கப்பெற்ற வரமாகவே!
கடைசி வரிசை இருக்கையில்
மடியில் குழைந்தையுடன் அமர்ந்திருந்தவள் பாடலின் நயத்திற்கு தாளமிடுகிறாள்.
தாளமிடுவதும்,ரசிப்பதும்,
இசையில் இளைவதும்
பேருந்தில் பயணிக்கிற ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமானதா என்ன,,,?
என்பதாய் கேள்வியிடாமலேயே
இசையில் நனைந்தவளாயும்
கையிட்ட தாளத்தையும்,
மனமிட்ட அசைவையுமாய்
நிறுத்தாது இறங்க வேண்டிய
நிறுத்தம் வரைக்குமாய் பயணிக்கிறாள்.
________:: :: 🍂🍂🍂🍂
No comments:
Post a Comment