_________|| || || 👀👀👀
தனது மேனி முழுவதுமாய் திருநீறுக்கீற்றுகளை
செய் நேர்த்தியுடன் கோடிழுத்து
ஒரு கைதேர்ந்த ஓவியனைப்போலவும்
சிவப்பழமாயும் காட்சியளித்த பூசாரி
பணம் கட்டுவதற்காய் வங்கிக்குள்ளாய் நுழைகிறார்.
மனதின் ஈரம் காட்டியவராய் அவர்
வரும் பொழுதே
தெரிந்தவராய் ,பழகியவராய்,நட்பாய் தோழமையாய்,உறவாய்,,,
அடையாளம் பூண்டிருந்த அனைவரிடமுமாய் பேச்சுக்கொடுத்தவாறும்
நலம் விசாரித்தவாறுமாய் பதிவாகிறார்.
ஊர் பற்றி பேசுகிறார்.
கோவில் பற்றி பேசுகிறார்.
தெய்வங்கள் பற்றியும் பக்தி பற்றியுமாய் பேசிய அவர்
பண்டுவம் பற்றியும்,சித்தர்கள் பற்றியும்
அவர்களின் பண்பு பற்றியுமாய்
பேசுகிறார்.
அந்தப்பேச்சும் விசாரித்தலும். அக்கறையுமே
அவரது மனம் மற்றும் இளகுதலின் அடையாளமாயும்,நெருக்குதலாயும் ஆகித்தெரிகிறது.
அருகாமையின் சற்று தொலைவிலிருந்தே காசாளருக்கு சிரிப்பை அனுப்பி
வணக்கம் தெரிவித்தவர்
பணம் கட்டிவிட்டு செல்லும் பொழுது
சிலர் எழுந்து நின்று கரம் கூப்பி மரியாதை தெரிவித்து அனுப்புகிறார்கள்
அந்த கிராமத்துக்கோயில் பூசாரிக்கு,,,!
_________:: :: ::🍂🍂🍂
No comments:
Post a Comment