16 Oct 2015

துவர்ப்பு,,,,

          
 தேநீர் நன்றாக  இருக்கும் என்பதினாலெல்லாம் அந்தக் கடைக்கு செல்வதி ல்லை.
 
 வீட்டுக்குப் பக்கத்திலிருந்து கூப்பிட்டு தொலைவில் இருப்பதனாலும் கடை உரிமையாளரின் தட்ட முடியாத பழக்கத்தினாலும் அங்கு அடி எடுத்து வைக்க வேண்டியதாகிப்போகிறது.
 
 வைத்து விட்ட அடியின் அழுத்தம் ஆழமாய் பதிந்து வேர்விட்டு போக தினசரி 5.30மணியிலி ருந்து 6.00 மணிக்குள்ளாக எனது பிரவேசம்.
 
 டீயை குடித்து விட்டு அப்படியே பாலை வாங்கி வந்து விடுங்களேன் என்கிற மனைவியின் சொல்லுக்கும் தலையாட்டி விட்டு செல்கிறவனாய் நான் ஆகிப்போகிறேன்.
 
  சிவப்புச் சட்டையில் வெள்ளை கோடுகள் ஓட தொந்த் சரிந்து தேநீர் ஆற்றுகிற அவர் எனக்கு மூன்று ஆண்மக்கள் உண்டு என்கிறார்.இருந்தாலும் “நம்ம பொழப்ப நம்மளே பாத்துக்கிறனும் ன்னே,யார் கையையும் எதிர் பாக்கக்கூடாதுன்னு நெனைக்கிறேன்” என்கிறார்.
 
  அன்று ஞாயிற்று கிழமை என்பதால் வழக்கம் போல இரண்டாவது டீக்குடிக்க சென்றபோது வடையெல்லாம் வச்சிருக்க மாட்டிங்களா?என்கிற கேள்விக்கு தான் மேற்கண்டவாறு பதில் விரிக்கிறார்.
 
 "எனக்கும் வயசு 60பதுக்கு மேல ஆச்சு.இதுவரைக்கும் யார் கையையும் எதிர்பாக்காம  ஏங்கைய நம்பியே கர்ணம் பாஞ்சாச்சு.இனிமேலும் தலை சாய்க்கிறவரைக்கும் அப்பிடியே இருந்து காலத்த ஓட்டீருவோம்ன்னு ஒரு ஆசை.எப்பிடி வாய்க்குதுன்னு தெரியல.முடியலதான்,ஒடம்பு பாடா படுத்துதான்.இன்னைகி காலையில தண்ணி எடுக்கப்போறம்ன்னு இந்தா இந்த யெடத்துலதான் வுழுந்துட்டேன்.ஆனாலும் என்ன செய்ய?பொழப்ப ஓட்டனுமே.தூசி தட்டி எந்திரிச்சி வந்து நிக்குறேன் பாத்துக்கங்க.”என்கிற அந்த ஈர்ப்பு மிகுந்த ஈடுபாட்டுடனான பேச்சுக்காவே அந்த டீக்கடைக்கு செல்கிறேன்.
 
     மற்றபடி தேநீர் நன்றாக இருக்கும் என்கிறதானெல்லாம் அந்தக் கடைக்கு செல்வதில்லை.

12 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மனித நேயம் மிக்கதொரு பண்பினை உணர்த்தும் அனுபவப் பதிவு...

KILLERGEE Devakottai said...

யதார்த்தமான விடயம்
தமிழ் மணம் 2

'பரிவை' சே.குமார் said...

ஈர்ப்பு நிறைந்த பேச்சுக்காக செல்கிறேன்...
தேநீருக்காக அல்ல... அட அட... இதுதானே அண்ணன் வேணும்...
மனிதநேயம்... அது மட்டுமே வாழ்விக்கும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கடைசி வரி மனதை அதிகம் பாதித்தது. நன்றி.
வாய்ப்பு கிடைக்கும்போது மகாமகத் தீர்த்தவாரி கோயில்களைக் காண அழைக்கிறேன்.
http://drbjambulingam.blogspot.com/2015/10/2016.html

கரந்தை ஜெயக்குமார் said...

உழைப்போர் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்
போற்றுவோம்
நன்றி நண்பரே
தம +1

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
உழைப்பு எப்போதும் உயர்த்தும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 4

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் ரூபன் அண்ணா,
நன்றி வருகைக்கும்,.கருத்துரைகுமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார், நன்றிவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஜம்புலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கில்லர்ஜி டதேவகோட்டை சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் முகமது நிஜாமுதின் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக