வழக்கமானநாட்களின்நகர்வுகளில்அந்தசம்பவம்ஓர்நாளின்நகர்வில்நடந்து
விடுகிறது.
இரண்டுவருடங்களாகவேலைபார்த்தகடையிலிருந்துதிடீரெனநின்றுவிடுகிறான் எனதுவேலையின்விலகல்".என்கிற எந்தவித தகவலும்இல்லைஅவனிடமிரு ந்து.
இரண்டுவருடங்களாகவேலைபார்த்தகடையிலிருந்துதிடீரெனநின்றுவிடுகிறான் எனதுவேலையின்விலகல்".என்கிற எந்தவித தகவலும்இல்லைஅவனிடமிரு ந்து.
காலையில் ஆறு மணிக்கு வேலைக்கு வருபவன் மதியம் இரண்டு மணிக்கு சாப்பிடப்போவான் வழக்கமாக. அன்றும் அப்படித்தான் சென்றுள்ளான்.
சாப்பிட்டு விட்டு திரும்பவரவில்லை.அவனது மாமாதான் அவன் சார்பாக வந்துள்ளார்கடை முதலாளியிடம் தகவல் சொல்லிவிட்டு மிச்ச சம்பளத்தை கணக்குப் பார்த்துவாங்கிச்செல்ல.
முதலாளி என்றால் அவரே கடையின் டீமாஸ்டரும், கடையின் முதலாளியு மாய்./
நிறைய டீக் கடைகளில் இன்று அதுதான் நிலை.கேட்டால் ஏறிப் போன சீனி
விலையிலிருந்து,வேலைக்காரப் பையனின் சம்பளம் வரை வரிசையாக மனப் பாடமாய்கணக்குச் சொல்கிறார்கள்.
அந்தப் பழக்கத்தின் தொடர்ச்சியாகவும்,நீட்சியாகவும் கடைப் பையன்களை கெட்ட
வார்த்தைகளில் திட்டுதல்,அடித்தல்,கேலி பேசுதல் எல்லாமும் .
இதைப் பொறுத்துக் கொள்ளாமல் மேலே போட்டிருக்கும் எருமைத் தோலை எடுத்துவிட்டால் வாங்கும் சம்பளத்திலும் மண்விழும்தான்.
இப்படியெல்லாம்
நடக்கும் என எதிர் பார்த்தும் அம்மாதிரி நடக்கும் சமயங்களி ல் பொறுத்துப்
பொறுத்துப் பார்த்து மனம் பொறுக்க மாட்டாமலும் வேலையை விட்டு நின்று
விடுகிறான் திடீரென.
நன்றாக இருந்தால் அவனுக்கு இருக்கலாம் வயது பனிரெண்டு.அவனை இந்த டீக்
கடையில் வேலைக்கு சேர்ப்பதற்காக பள்ளியிலிருந்து பிய்த்துக் கொண்டு வரப்
பட்டபோது அவனுக்கு படிப்பு நன்றாக வரவில்லை என்பதெல்லாம் காரணமில்லை.
அவன் வயதில்,அவன் படித்த வகுப்பில் படிப்பிலும், விளையாட்டிலும் படுசூட் டிகையாக இருந்துள்ளான்.
உள்ளூரிலுள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியில்தான் அவனது படிப்பு.அந்த
பள்ளிக்கு வரும் பாதிக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளைப் போலவே அவனும் பையில்
சத்துணவு தட்டு சுமந்தும், சாயம் போன சட்டை, டவுசர் அணிந்து கொண்டும்.
அப்பா விவசாயக் கூலி,அம்மா கிடைத்த நேரங்களில் கிடைத்த வேலைக்கு.
பெரும்பாலும்
சித்தாள் வேலைக்கும் காட்டுவேலைக்கும் பகிர்ந்து போவதே அவளுக்கு
வாய்த்திருக்கிறது. அப்பா வேலையில் கிடைக்கும் கூலியில் குடிக்க,கொஞ்சமாய்
வீட்டில் காசு கொடுக்க குடிவெறியில் அவன் அம்மாவை அடிக்க என்பதையே
வாடிக்கையாக வைதிருக்கிறார்.
வேறுஎன்னதான் செய்வாள் பாவம் அவனது அம்மா.கணவனை சத்தம் போட்டு விட்டு உயிர் கரைய உழைத்திருக்கிறாள்.
வீட்டில் உலை கொதிக்க வேண்டுமே?உடல் தேய உழைத்த அவளை அவளுக் குள் குடிகொண்டிருந்த காச நோய் மெல்ல,மெல்ல தின்றுகொண்டிருந்தது .
அரிசி,பருப்பு,மளிகை என அவளது சம்பளப் பணத்தில் செலவழிக்கும்
ஒரு தொகையைப் போலவே காச நோய்க்கும் செலவழிக்க வேண்டிய கட்டாயத் துக்கு
உள்ளானாள். அப்படியான கட்டாயங்களையெல்லாம் மீறி நோய் முற்றிய ஒருநாளில்
கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகப் படும் வழி யில் இறந்து போகிறாள்.
இறந்து போன அம்மாவின் நினைவாகவே பரிதவித்த அவனையும்,அவனது தம்பியையும்
விட்டு,விட்டு அவனது அப்பா வேறு ஒரு திருமணம் செய்து
கொள்கிறார்.குடும்பத்தை மறக்கிறார். புது மனைவியுடன் வெளியேறுகிறார்
ஊரிலிருந்து.
தனித்துவிடப் பட்ட இவனையும்,இவனது தம்பியையும் பாட்டியின் இறகு
பாது காக்கிறது.பாட்டிவயதானவள்.என்னசம்பாதித்து,என்னத்தைசாப்பிட்டு...........,,,,,,,,?
பிழைப்பு, சாப்பாடு என வரும் போது படிப்பு போன்ற அனாவசிய விஷயங்கள் (?/) சட்டென முடக்கி வைக்கப் பட்டுவிடுகிறதுதான்.
அவனதுபடிப்பு நிறுத்தப் பட்டு டீக் கடையில் வேலைக்குச் சேர்ந்த
அன்று மனதிற்குள்ளாகவே அவன் அழுத அழுகையும் ,பொருமிய பொருமலும் கொ ஞ்ச
நஞ்சமல்ல,
வீட்டிலிருந்து
வரும் போதே மற்றதெல்லாம் மற்ற நினைப்பெல்லம் மறந்து போக டீக் கடைமட்டுமே
பிரதானமாய் நிற்கும்.ஒருகிலோ மீட்டர் தூரத்தி லிருந்த வீட்டிலிருந்து
சூப்பர் மேனாய் பறந்து வருவான்.
இவன்
வயதுப் பையன்கள் நிலையாக ஒரே கடையில் ஆறு மாத்திற்கு மேலாக வேலைசெய்வதே
உலக அதிசயமாக பார்க்கப் படும் போது இவனது இரண்டு வருட உழைப்பு ஒரே கடையில்
இருந்தது ஆச்சரியம்தான் எனவும் பேசிக் கொண்டார்கள்.
அவனது
அன்றாட வேலைகளான கடையை கூட்ட,சுத்தம் பண்ண ,கிளாஸ் கழுவ,பால் வாங்கி
வர,கடைகளுக்குப் போக என இருப்பது போல வெளி யிடங்களில் டீக் கேட்போருக்கும்
கொண்டு போய் கொடுப்பதும்தான்.
அப்படிக் கொடுக்கப் போகும் கடைகள், இதர நிறுவனங்கள்,,விறகுக்
கடை, லாரிசெட் போன்ற இத்தியான இத்தியான இடங்களில் ஏதோ ஒரு இடத்தில் அவனை
கெட்ட வார்த்தைகளாலும் எடுத்தெறிந்தும் பேசியுள் ளார்கள்.
இறக்கைகள் பொசுக்கப் பட்ட பறவையாய் மனம் வெம்பி முதலாளியிடம்
சொல்லியிருக்கிறான்.பதிலுக்கு முதலாளியிடமிருந்து எனக்குத் தேவை
வியாபாரம்,உனக்கு நேர்ந்த மான,அவமான பிரச்சினை பற்றிய கவலை அல்ல என பதில்
வந்திருக்கிறது.
பார்த்தான்,மனம் பொருமிப்,பொருமி அதற்கு மேலும் பொருக்கமாட்டாதவனா ய் வேலையை விட்டு நின்றுவிடுகிறான்.திடீரென.
ஆனால் அவனது அடுத்த நகர்வு எதுவாய் இருக்கும் ? ஏதாவது ஒரு டீக்கடை யை நோக்கியோ,அல்லது பலசரக்குக் கடையை நோக்கியோதானே?
சரி வைத்துக் கொள்வோம்.அப்படியே அவனது பொழுதுகள் நகருவதாக/ ஆனால்இப்படியாகநகரும்பொழுதுகள்அவன்ஒருவனுக்குமட்டும்தானா?அவன் வயதில்டீக்கடைகளில்அன்றாடம்அவதிப்படும்மற்றசிறுவர்களுக்கும்தானா....,?
6 comments:
இறக்கைகள் பொசுக்கப்பட்ட பறவைகள் காணும் ஒவ்வொரு இடத்திலும் பாா்க்கவே முடிகிறது. இனி அப்பறவைகளை இந்த வாசிப்பினூடே கடந்து செல்ல வேண்டியதாக இருக்கும்.
இதுபோன்ற சிறுவர்கள் எல்லா இடத்திலும் பரவித்தான் இருக்கிறார்கள்
பெற்றோர்களுக்கு உதவி செய்கிறேன் என்ற போர்வையில் படிப்பை விட்டுவிட்டு, வேதனைதான் நண்பரே
தம +1
வணக்கம் சசிகலா மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அருமை அண்ணா...
வணக்கம் பரிவ சேக்குமார் அண்ணா
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment