30 Jan 2016

ஆகாரம்,,,,,,,,,

அவளின்அந்த செய்கையும் அவள் அப்படிக்கேட்டதும் முறைதானா அல்லது முறை யில்லையா?என்பதல்ல/கேட்டுவிட்டாள் அவனும் சொல்லி விட்டான்.
காலை வேளையின் ஒன்பதே முக்கால் மணிக்கெல்லாம் அவள் வந்து விடுகிறாள். உள்ளங் கையில் சுருட்டிவைக்கப்பட்டிருந்த பாரத்தை இறுக்கிப் பிடித்தபடி/
அவள்வந்தநேரமாய்அவன்சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.உலர்ந்ததேகம்,வாடியஉடல்மூப்பைச்சொல்லிச்செல்கிறவயது.இவைகள்சுமந்தஅடையாளங்களுடன்காட்சிப் படுகிறாள்.
நடந்துவந்தஅடையாளமும்அடையாளத்துடன்வந்தநடையுமாய்அவள்துண்டு பட்டுநின்ற காட்சி இன்னும் நினைத்தாலும் மனதில் நிற்கிறமென் படிமமா கவே/
வந்தால் சும்மா இருக்க மாட்டாள்,என்ன ராஜு என்ன செய்யிற,நல்லா இருக்கி யா, புள்ளைங்க எப்பிடி இருக்காங்க?சம்சாரம் நல்லாயிருக்கா?நல்லா பாத்து க்கப்பாஅவள ஓங் உசுருல பாதி அவ, ஆமாம் ஞாபகம் வச்சுக்க,மொதல்ல அவதான் ஓங் ஒலகம் அப்பறம்தான் புள்ளைங்க கூட ஆமாம் ராஜு,ஆமாம் என நிறைய பேசுவாள்.
பொதுவாகவேநடப்பதுதான்இது.மாதங்களின் பத்துநாட்களுக்குள்ளாகவோ அல்லது மாதம் பிறந்த அன்றோ வந்து விடுவாள்.பணம் எடுக்க வேண்டும் எனச் சொல்லியும் கையில் இறுகிப் பிடித்திருக்கிற பணம் எடுக்கிற படிவத்துட னுமாய்/
இந்த தள்ளாத வயதில் தன்னை ஒற்றை இருப்புக்காட்டியும் தக்க வைத்துக் கொண்டுமாய் அவள் அந்த கிராமத்தில்/மகன் வெளியூரில் வசிக்கிறார், பிழைப்பின் அவசியம் கருதியும் வெளியூரில் இருக்கிற தனது சொந்த பேக்ட்ரி யை கவனிக்கவுமாய் அங்கேயே குடுமபத்துடன் இருந்து விடுகிறார்.
மாதம்ஒருமுறைகுடும்பத்துடன்வந்து அம்மாவை பார்த்துவிட்டுச் செல்வார் கள். சொந்தக்கார்,வசதி,உயர் ரக ஆடைகள் நகைகள் உடல் மணக்கிற வாச னை திரவியங்கள் என்கிற ஜாபர்தஸ்துடன்/ வந்தவர்கள் அம்மா,அத்தை, பாட்டி என்கிற சொல்லையும், பாசத்தையும் தவிர்த்து கொண்டு வந்ததின் பண்டங்கள் சிலவற்றுடனுமாய் மாதா மாதம் வங்கியில் பணம் எடுத்துக் கொள்வதற்கான கையெழுத்திட்ட பாரங்கள் சில வற்றை கொடுத்து விட்டுச் செல் வார்கள்.
வங்கியில்அவளது மருமகளின் பெயரில் பணம்போட்டுவைத்திருக்கிறார்கள் . அந்த கணக்கிலிருந்துமாசாமாசம் மருமகள் கையெழுத் திட்ட படிவத்தைக் கொண்டு வந்து பணம் எடுத்துப் போவாள்.
அப்படியாய் மாதா மாதம் அவள் பணம் எடுக்கவருகிறநேரங்களிளெல்லாம் அவளது வருகை இப்படித்தான் இருந்து விடுவதுண்டு.
காலை வேலையின் ஒன்பதே முக்கால் மணிக்கெல்லாம் வந்து விடுவாள்/ பெரும் பாலுமாய் அந்நேரமோஅதற்குசற்று முன்பாகவோஅலுவலகம் வந்து விடுகிற வேளை அவன் காலை டிபன் சாப்பிடுவது அலுவலகத்தில் வைத்து தான்.
டப்பாவில்அடைக்கட்ட இட்லி,அல்லது தோசை அல்லது ஏதாவது மிருது பாய் ந்த உணவு வகைகளே அவனது காலை உணவாய் பெரும்பாலுமாய்/
புறப்படுகிறஅவசரத்திலும்,நேரமின்மையின்சுருக்கிலுமாய்காலைச்சாப்பாட்டைபெரும்பாலுமாய் கையில் எடுத்து வந்து விடுவான்.இன்றும் அப்படித்தான் கொண்டு வந்திருந் தான்.
மடக்கி வைக்கப்பட்டிருந்த தோசைகளின் இரண்டின் ஓரமாய் பூத்திருந்த சட்னியின் துணையுடன் வட்ட வடிவ டிபன் பாக்ஸில் அமர்ந்திருந்த தோசை களை பிய்த்து சாப்பிடப் போகிற நேரம்.பிய்த்த தோசையின் விள்ளல் கைக்கும் வாய்க்குமாய் தன் பயணத்தை தொடங்கப் போகிற நேரம்.வந்து விட்டாள் அவள்.
“என்ன ராசு சாப்புடுறியா,? என்ன சாப்பாடு, இட்லியா, தோசையா,அப்பிடியே இந்தக்கெழவிக்கும்ரெண்டுகுடு,சாப்புடுட்டு போய் சேர்றேன்என்கிறபேச்சுடன் பணம் கொடுக்கும் வரைஅவன் முன்பாய் நின்று கொண்டு நகர மறுப்பவளாக/

2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கதை தொடக்கமும் முடிவும் நன்று.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நதி நீராய் ஓடுதடி.:

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/