30 Jan 2016

பூவாகி காயாகி,,,,,,

கோழி கிளறியதும் நல்லதாகவே ஆகிப்போகிறது.சனிக்கிழமை அலுவலகம் முடிந்து பசியோடு வீட்டுக்கு வந்த மதியவேளையில் வீட்டின் பக்கவாட்டு வெளியில் கூட்டிக்குவிக்கப்பட்டிருந்த குப்பை கிளறப்பட்டு வேப்பமரத்திலை களும், பன்னீர்மரப்பூக்களுமாய் காட்சியளிக்கின்றன. 

இரண்டுநாட்களாய்கூட்டிக்குவிக்கப்பட்டிருந்தகுப்பையின்குவியல்அது. வீட்டி னுள்ளே அன்றாடம் கூட்டி அள்ளிய தூசியும், இரண்டும்,இரண்டும் நான்கு மாய் நின்ற வேப்ப மரங்களிலிருந்தும்,பன்னீர் மரங்களிலிருந்தும் உதிர்ந்த இலைகளையும்,பூக்களையும் சேர்த்து குப்பையாய்க்கூட்டி தீ வைத்து எரிக்கும் முன்பாக இப்படி ஆகிப்போகிறது. 

கால்நகங்களில்வலுவுள்ளகோழிகள்நான்குவந்துஇப்படிசெய்துவிட்டுப்போயி ருக்கிறது.

சேவல்கள் இரண்டு, கோழிகள் இரண்டு போனால் போகிறதெனகூட வளரிளம் பருவத்தில் இருக்கிறகுஞ்சு ஒன்று.

கருப்பும், வெள்ளையும், ப்ரெவுனுமாய் நடமிட்டு வருகிற அவைகள் சற்றே மிரட்டலாய்த்தான் தெரிகின்றன இந்த விஷயத்தில்.

இரண்டு நாட்கள் தொடர்ச்சியாய் காலையிலும்,மாலையிலும்,மற்றும் இரவி லுமாக பெய்தமென் தூறல்,அதில் நனைந்து போயிருந்த குப்பை,இதை இப்போ தைக்கு ஒன்றும் செய்து விட

இயலாது,பேசாமல் கூட்டி ஓரத்தில் வைத்து விடலாம் என்கிற யோசனையில் விழுந்தமென் கீறலாய் இந்த கிளறல்.

அதைப்பார்த்ததும் எரிச்சல்தான் வருகிறது.”இந்த மரங்கள வெட்டுங்கன்னு சொன்னா கேக்குறீங்களா?இதுகள்லயிருந்து விழுகிற யெலதலைகள கூட்டி அள்ளுறதுங்குள்ள ஏன் ஜீவன் போயிருது,நான் வீட்டு வேலைகள பாக்குறதா? இல்ல சுத்தம் பண்ணீட்டு திரியிறதா?”

எனச்சொன்ன மனைவியை விரல் காட்டி “உஸ்” சொல்லிவிட்டு(சப்தமாய் பேசாதே அவைகளுக்கு கேட்டுவிடக்கூடும்) அதன் உதிர் இலைகளையும், பூக்களையும் கூட்டி அள்ளுபவனாகிறான் இவன்.

அன்றிலிருந்து இன்றுவரை மரங்கள் முளைவிட்டு பரந்து நிற்கிற வீட்டின் பக்கவாட்டு வெளியை பூக்களுடன் பேசிக் கோண்டே கூட்டியவைகளை ஓரிட த்தில் குவித் தும் எரிக்கவுமாய் இருந்த இவன் கோழி குப்பையைக்கிளறியதும் நல்லதாக வே போயிற்று என இப்போது நினைக்கிறான்.

பரவிச் சிதறியிருந்த குப்பை காய்ந்து போயிருக்க அவற்றை மொத்தமாய்க் கூட்டி எரிக்கிறான். 

வைத்த தீ பற்றிக்கொள்ள முதலில் பேப்பர், கேரிபேக், தேங்காய்க்குடுமி,,,,,, என இருந்தவைகள் பற்றி எரிந்து,எரிந்து,,,,,,கடைசியாகஒட்டுமொத்தக் குப்பை யு ம் எரிகிறது. 

இரண்டு நாட்கள் முன்புவரை மரத்திலிருந்து தலைகீழாக தொங்கிபேசிச் சிரித்த பூக்கள் இன்று வாடிய சருகுகளாய் குப்பையில் எரிகின்றன.

3 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

யதார்த்தம். இதுதான் வாழ்க்கை.

KILLERGEE Devakottai said...

உண்மைதான் மனிதனும் ஒருநாள்....
தமிழ் மணம் 1

vimalanperali said...

வனக்கம் டாக்டர் ஜம்புலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/