அன்பே எங்கிருக்கிறாய்
நீ,அங்கிருக்கிறேன் நான்.உன் நினைவுகள் சூழ்ந்த மனதில் மையம் கொண்ட நான் மனம் நிறைமகிழ்வுடனும்,
மையலுடனுமாய்.
இன்று காலைவீட்டைவிட்டு
அலுவலகம் கிளம்புகையில் நீ இல்லாது போன வீடு வெறுமை சூழ்ந்தே காணப்பட்டதாய்,பள்ளி இறுதி
வகுப்புபடிக்கும் இளைய மகனும்,கல்லூரி இளங்களை இறுதியாண்டு படிக்கும் பெரிய மகளும்
உடன் இருந்த போது கூட ,,,,,,,/
உறவினர் வீட்டுத்திருமணத்திற்காய்
சொந்தங்களுடன் வெளியூர் சென்ற நீ இன்றுமாலைவருவதாய்ச்சொல்லி விட்டுச்சென்றாய்/
வாஸ்தவம்தான்.நேற்றுகாலையிலிருந்துஇன்றுமாலைவரைஒன்றும் நீண்டு விட்ட தூரம் இல்லைதான்.
உள்ளங்கைக்குள்ளாய்உலகம்
வந்துவிட்ட பின்னாய் தூரங்கள் பெரிய விஷய மற்றுப்போய்விடுகிறது. ஆனாலும் நீ இல்லாத
பொழுது வீண் பொழுதாயும் வெற்றுப் பொழுதாயுமாகவே/
காற்றற்ற பலூன்
போலவும்,ஈறமற்ற மனது போலவுமாய் அரை மனதினாய் திரிகிறநான்மனதளவில்என்கிறநிதானம்அற்றுப்போனவனாய்
இப்பொழுது/ உள்ளே பூனை பிராண்டுகிறது,எழுதிய எழுத்தை பாதியில் விட்டுவிட்டு இந் த இளங்காலையில்டீக்கடைசென்றபோதுகடையினுள்ளாய்கால்தூக்கிபிராண்டிக் கொண்டிருந்தசாம்பல் நிறப்பூனைஒன்று கடைக்காரரின்ப்ரியத்திற்குரியதாய்.
கடைக்குளாய்
இருந்த சின்னதான் ஒரு சாக்கின் மீது கால் தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்ததாய்/
இதற்கு முன் வளர்த்த பூனை அவரது மனைவி இறப்பதற்கு முதல் நாள் முன்பாய் ஆக்ஸிடெண்டில்
இறந்து போன து எனவும் பிராணிகள் ப்ரியம் பற்றியுமாய்
பேசிகொண்டிருந்தார்.
வீறு கொண்ட
மனங்களில் நெச விட்ட மென்மனது ஒன்றோடு ஒன்று உரசி யும் கைகுலுக்கியுமாய்/ குலுக்கிய
கைகளின்வாஞ்சையும், உரசலில் ஏற்ப ட்ட மனதின் படர்வுமாய்ஒன்றையொன்று எடுத்தாள்வதாகவும்பக்கம்
நின்று துணை கொள்வதாகவும்/
அதிக்காலையின்
மென் சூரிய வெளிச்சத்தை இன்று பார்க்கவேயில்லை. முதல் நாள் இரவிலான கண் விழிப்பும்
டீ,வீ பார்த்தலும் அதிகாலையில் எழ விடாமல்
அசதியை ஏற்படுத்திவிட தூங்கிப்போகிறேன் அப்படியே/விழித்த விழியும் படுத்திருந்த உடலும்
அசதியை முன்னெடுத்துச்செல்ல எழுந்து கொள்கிறேன் அலுவலகம் செல்லத்தயாராகவும்,இதர முஸ்தீபுகளில்
முன்னி றங்கிக் கொள்ளவுமாய்/
படுத்திருந்த இடம் கட்டாந்தரையாகவும் அது தாங்கிய
கோரம்பாயாகவும். 50க்கு 50 சதமானம் தாங்கி/
காலை 7.30
மணிக்கு எரிந்து கொண்டிருந்த ட்யூப் லைட் சுழன்று கொண் டிருந்த மின்விசிறி என படுக்கையிலிருந்து
அண்ணாந்து பார்த்தவனை பெயிண்டஉதிர்ந்துஉருவம் காட்டும் சுவர் மெல்லெனகவ்விக்கொள்கிறதாய்/
கவ்வட்டுமே,கவ்வித்தான்
கொள்ளட்டுமே, என்ன இப்பொழுது கெட்டுப் போனது இப்பொழுது/என்னையும்,உன்னையும் சேர்ந்து
பார்த்த உருவங்க ளும் உள்ளங்களும் செய்வதென்னவென தெரியாத நிலையில் விக்கித்து நின்ற
காட்சி என உருத்தரித்துச் செல்வதாயும், கோர்த்தகையின் இறுக்கிப் பிடிப்பில் இதம் தந்து
தெரிவதாயும் பூ ஒன்று மலர்ந்துவிரிவதாயும் அர்த்தம் சொல்லிச்செல்கிறதுசுவரின்பெயிண்ட்
உதிர்வு/
நன்றாகத்தான்
இருக்கிறது.இப்படியேஎழுந்தமர்ந்தோ,அல்லதுபடுத்தவாறோ தொலைக்காட்சியின் ஏதாவது ஒரு சேனைலில் மனம் வரும்
இளம் மென் மெலடிகளைமொட்டவிழும் மென்சப்தத்துடன் கேட்டுக்கொண்டிருந்தால்,,,,/
கேட்டுக்கொண்டிருக்கலாம்தான்
அப்படியே,,,,,,,,,,/பின்பசிக்கிறவயிற்றுக்கு,? உதட்டோரம் எழுந்த மென் சிரிப்பை பெரிதாக்கி
கடகடவென சுழல விட விரும்பாமல் படுக்கையை விட்டு சோம்பல் முறித்து முகம் கழுவி தேனீர்
குடிக்கையில் வரிதாங்கிய கண்ணாடிகிளாஸில் இருந்த முக்கால்வாசி அளவே இருந்த மென்திரவம்
குளிர்பட்டுச்சிலிர்ப்பதாக/
சிலிர்த்த
திரவம் நாவின் சுவையறும்புகளில் பற்றிப்படர்ந்து உள்ளிறங்கி பயணப்பட்டவேளைடீக்கடைகடந்துபயணப்பட்டமுதிரிளம்தம்பதிகள்முதிரிளம்
காதலர்களாகவே பட்டு விரிகிறார்கள் பார்வையின்
விழிப்படர்வில்/
குளித்து முடிந்து பஸ்ஸேறி பயணிக்கிற ஒன்பது மணிபொழுதின்
ஒவ்வொ ருஅசைவும் தினத்தின் நினைவையும்,மேன்மையையும் போற்றிச் செல்வ தாய் சொல்லஉயிரேஉயிரேஉனக்காகவே
என பேருந்தினுள் சுற்றிய பாடலி ன்இனியநினைவுகளுடனாய் இறங்கி பயணிக்கிறவனாய் பணிபுரிகிற இடம்
நோக்கி/
பணி வயிற்றுக்கும்,உன்
நினைவு இதயத்திற்குமாய் எனச்சொன்ன உள்ச் சொல்லின்
விளிம்பு தொட்டு அலுவலகம் சென்று பணிபுரிகிற
கணங்களி ளெல்லாம் தொடுகிற கம்பூட்டர், லெட்சர், பென்சில்,பேனா அனைத்தும் உனதுருவம்
உருதாங்கித் தெரிவதாகவே/
தாங்கியவைகளின்
தாங்காத மனம் பட்டுச்சென்ற எட்டு மணி நேரமும் எட்டு நிமிடங்களாய் கரைந்து போக பஸ்ஸேறி
வீடு நோக்கி விரைகிறவ னாய்/
அன்பே உறவினர்
வீட்டுத்திருமணம் முடிந்து வந்து கொண்டிருப்பாய் அல்லது வந்து விட்டிருப்பாய் நீ அன்பே.உன்
சுமந்த நினைவு தாங்கி வந்து கொண்டு இருக்கிறேன்நானும்அன்பே,இத்தினத்தில் வாழும் நம் காதல் சத்தியம் என்கிற உயிர் வாசகம் தாங்கி/
அன்பே எங்கிருக்கிறாய்
நீ,அங்கிருக்கிறேன் நான்.உன் நினைவுகள் சூழ்ந்த மனதில்மையம் கொண்ட நான் மனம் நிறைமகிழ்வுடனும்,
மையலுடனுமாய்.
2 comments:
பணி வயிற்றுக்கும்,உன் நினைவு இதயத்திற்குமாய்
அருமை நண்பரே
தம+1
வணக்கம் கரந்தை ஜெயக்குமர் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment