கூப்பிட்ட பெயரை பாதியாக உச்சரித்து விட்டு நேரமாகிறது என இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுகிறான்.
அதுஎன்ன பாதி பெயரின் உச்சரிப்புஎன்கிறதான அதுபற்றியானஆராய்ச்சி ஒரு பக்கம்இருக்கட்டும்.ஆனால் அப்படியாய்பாதிப்பெயர் சொல்லிஉச்சரிப்பதிலும் அவ்வாறுஅழைப்பதிலும்ஒருசின்ன சந்தோஷம் இருக்கிறதுதான்.
கட்டியிருந்தபுடவை கலரைவிடகட்டியிருந்தவளின்மனம் முக்கியமாய்ப் படுகிறது.
காலை ஐந்து முப்பதிற்கு எழுந்த மகளுக்கு தேநீர் போட்டுக்கொடுத்து அவள் குளித்துக் கிளம்பி இவனுடன் அனுப்புகிற வரை அவள் படுகிற பாடு சொல்லி மாளாதுதான்.
டீப்போடஅடுப்பை பற்ற வைத்து விட்டு பால் வாங்கி வருவாள்,மாடு வளர்க்கி றவர்களின் வீட்டில் போய்.அவர்களானால் அதிகாலை ஐந்து மணிக்கே பால் விற்கஆரம்பித்துவிடுவார்கள்.பாலை மாட்டிலிருந்து கறக்கிறார்களா அல்லது மாடுகள் தன்னாலேயே வந்து அவர்களிடம் பாலைபொழிந்து விட்டுப் போகி றதா என எண்ணும் அளவிற்கு ஆச்சரியம் கலந்து விற்கும் இடமாய் அது இருக்கும்.,
அந்நேரமேபத்து பேர் வந்து வரிசையில் நின்று வாங்கிக் கொண்டிருப்பார்கள் அந்த வரிசைப்பெண்மணியில் இவளும் ஒருவளாக நின்று வாங்கி வருகிற பால் டீக்கு உதவுகிற வேளை இவன் கிட்டத்தட்ட தூங்கிக் கொண்டிருப்பான், இன்னும் விழிக்கவில்லையா உங்கப்பா,,என்கிற குரலை அரை குறையாய் காதில் வாங்கிக்கொண்டே/
இவன்விழித்தெழுகிறவேளைமகள்டியூசனுக்குஆயத்தமாகிக்கொண்டிருப்பாள். இங்கிருந்து டியூசன் போக வேண்டிய இடம் இருக்கும் ஒரு இரண்டு கிலோ மீட்டர்களாவது.
சரியாக9.00மணிக்கு டியூசன்,இப்போதே மணி 8.45 ஐ எட்டித்தொடப் போகிறது, வட்டவடிவ கடிகாரத்திற்குள் சின்ன முள்ளும் பெரிய முள்ளும் கைகோர்த்துக் கொண்டுவிநாடிமுள்ளைதுணைக்கழைத்துக்கொண்டு காண்பிக்கிற மணியை புறந் தள்ளி விடமுடியாதுதான்.சடுதியில் கிளம்பி விடுகிறார்கள் சரி என/
வழியெல்லாம் ஓடுகிற இருசக்கர வாகனத்தின் பெருக்கம் சற்றே அச்சம் கொள்ள வைக்கிறதுதான்.ஒருவண்டி ஓட வேண்டிய இடத்தில் பத்து வண்டி ஓடுகிறது, இவனதுவண்டியையும் சேர்த்து .இது போக சாலையில் மற்ற மற்ற வாகனங்களும்/
இரு சக்கர வாகனப்பெருக்கம் போல் நான்கு சக்கர வாகனப் பெருக்கமும், பேருந்துகளூம் இன்னபிற கனர இலகு ரகவாகனங்களுமாய் விரைகிற சாலை யைப் பார்க்கையில் சற்றே மனது அச்சம் கொள்கிறதுதான் உள்ளின் உள்ளாக/
அச்சமென்றால்வண்டியைஉருட்டிக்கொண்டுபோகிறஅளவிற்கெல்லாம்இல்லை. அது முதன் முதலாய் ஒரு சக்கரவாகனத்தை ஓட்டப்பழகிய நாட்களில் அரங் கேறிய திறந்த வெளி ரகசியம்/
சமீபமாய் சற்றே சிறிது நாட்களுக்கு முன்னாய் பெய்து ஓய்ந்த மழையில் அரிக்கப்பட்டிருந்த சாலைகள் அங்கங்கே குண்டும் குழியுமாய் காட்சிப்பட்டுக் கொண்டும் சாலையில் செல்கிறவர்களை கவனமாக செல்லுமாறு எச்சரித்துக் கொண்டும்,/
அது இருக்கும் இருபது வருடங்கள் பின்னோக்கி,இவன் இவனது நண்பர்கள் ஒரு நான்கு பேர் சேர்ந்து இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்து விட்டு வரும் பொழுது சாலையில் தோண்டிப் போடப்பட்டிருந்த பள்ளத்தைப்பார்த்து இவன்தான் சொன்னான் ஒரு நண்பனின் பெயரைச்சொல்லி/ஒரு வேளை அவனைப் பிடிப்பதற்காய் தோண்டியிருப்பார்களோ என, அவன் கொஞ்சம் குண்டாகயிருக்கிறான் சரி அதற்காக இப்படியா சொல்வது என உடன் வந்த ஒரு நண்பர் சொன்னது ஞாபகம் வருகிறதுதான் இப்பொழுதும்/
வண்டியை சர்வீஸீற்கு விட வேண்டும் கூடவே வாட்டர் வாஸீம் பண்ண வேண்டும்,இதற்குமுன்பாய் வாட்டர் வாஸ் பண்ணி சர்வீஸ் செய்த மறு நாள் மழைவந்துவிட்டது,அன்றுசகதியாகிப்போனவண்டிதான்,இன்னும் கழுவ வில் லை கழுவலாம்தான், இவனாக ஆனால் கொஞ்சம் பயமாக இருக்கிறது, கழுவும் போது இஞ்ஜினில் தண்ணீர் விழுந்து விட்டால்,,,,என்கிற உயர் அழுத்த மனோநிலையினால்அந்தவேலையைச் செய்வதில்லை. அக்கம் பக்கத்தார்கள் வண்டியைக்கழுவுகிறபோதுஇவனுக்குசற்றுபொறாமைகலந்தஆச்சரியமாகக் கூட இருக்கும்,
இம்முறை சர்வீஸிற்கு விடும் போது இந்த வண்டிக்கு கல் டயர் இருக்கிறதா எனக்கேட்க வேண்டும். அது என்றால்பஞ்சர் ஒட்டும் விவகாரம் இல்லை. அன்றே கேட்டிருக்கலாம் விட்டுப் போனது, அடுத்த தெருவில் ஒரு வீட்டுக் காரரின்வண்டிக்கு பஞ்சர் ஒட்ட வந்த சைக்கிள் கடைக்காரரிடமாவது/ அவரது செல் நம்பர் வாங்கி வைத்திருக்கலாம்.ஆத்திர அவசரத்திற்கு உதவும் அல்லது கல்டயர்போலான தகவல்களை கேட்டுக்கொள்ளலாம்/அவரும் பிரியமாய் சொல்வார்.
அவர் போலதான் டூயூசன்சொல்லிக்கொடுக்கிற வாத்தியாரும் ”பரவாயில் லை தங்களது மகள்.படிப்பில் கொஞ்சம் கோட்டை விட்டாலும் கூட அவளது குணம் நன்றாக இருக்கிறது.இப்படியாய் வெள்ளந்தியாய் இந்தக்காலத்தில் பிள்ளைகள் அமைவது ரொம்பவும் ஆச்சரியம்” என்பார்.
இவன்போய்மகளைட்யூசன்சென்டரில் இறக்கிவிடும்போது8.58 ஆகியிருந்தது. டியூசன் சென்டருக்கு எதிர்தாற்ப்போல்தெரு முனையில் பூ விற்கிற அம்மா விடம் வழக்கமாய் வாங்குகிற ஒற்றை ரோஜாவை இன்றும் வாங்கி மகள் தலையில் வைக்கப் போகிற நேரமாய் ”கொஞ்சம்இருங்கள்ஐயாநான்வைத்து விடுகிறேன்தங்களது பிள்ளைக்கு” என இவனது கையிலிருந்த ஒற்றை ரோஜாவை வாங்கி வைத்து விடுகிறாள் வாஞ்சையுடன் மகளுக்கு/
எப்பொழுதும்இல்லாத ஒன்றாய் ஏன் பூக்கடைக்காரி இப்படி செய்தாள் என்கிற கேள்வி தாங்கியவனாய் மகளை டியூசன் சென்டரில் இறக்கிவிட்டு விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தான்.

2 comments:
வழக்கம் போல மிகவும் அற்புதமான படைப்பு....
வாழ்த்துக்கள் அண்ணா...
அருமைநண்பரே
Post a Comment