பச்சை பாரித்துப் பூத்துக் கிடந்த இலைகளும் அதனூடாய் மலர்ந்தும் மொட்டு விட்டுமாய் சிரித்துக்காணப்பட்ட பூக்களுமாய் அவ்விடத்தை அழகாக்கி நடை பாதையின் இரு புறமுமாய் அடைகாத்து நின்றன.
பெயர் தெரியாத பூக்களும் அதனை தாங்கி நின்ற முன் பின் அறியா செடிக ளும் பார்க்க அழகாக இருந்தன,இதைத்தான் ஒரு வேளை குரோட்டன்ஸ் செடிகள் என்கிறார்களோ, கலப்பின ஒட்டுவிதையின் கைங்கரியமாகக்கூட இருக்கலா ம்.
இதுபோலான செடிகளின் மினியேச்சர்களை சாத்தூர் செல்கிற வழியில் இருக் கிறநர்சரி கார்டனில் பார்த்திருக்கிறான்.
வீடு கட்டியபுதிதில்வீட்டின்பக்கவாட்டு வெளி சும்மா கிடக்கிறதென ஏதாவது மரக்கன்றுஅல்லதுசெடிநடலாம்என நர்சரி கார்டனில் போய்மரக்கன்றுவாங்கி வந்தான்.
ஒருகாலத்துலவிவசாயம்பாத்தகுடும்பம்தம்பி,ஒருவெதயமண்ணுல போட்டா பத்தா பலன்தர்ற தொழில் நொடிச்சிப்போச்சி பாக்கவும் முடியல. இழுத்துக் காப்பாத்தவும் முடியல, மண்ணுக்கும் மழைக்கும் பருவநிலைக்கும் நடக்குற போட்டியில சாமான்யமனுசனான என்னால ஒண்ணும் செய்ய முடியல,மனச கல்லாக்கிக்கிட்டுவிவசாயம்பண்ணுறதவிட்டுட்டேன்,ஆனாபழையவாசனை மறந்துபோகக்கூடாதுங்குறதுக்காகஇப்பிடி நர்சரி கார்டன்வச்சி செடிகளையும் மரக் கன்னுகளையும் வளத்து வித்துக்கிட் டிருக்கேன் என்றார்,
அப்பொழுது கையில்இது போலாய் பெரிய வண்டியெல்லாம்ஒன்றும்வைத்தி ருக்கவில்லை.சின்ன மொபட்தான் இருந்தது,அதைசர்வீஸ்செய்து சர்வீஸ் செய்து ரிப்பேர்பண்ணி ரிப்பேர் பண்ணி ஓட்டிக்கொண்டு இருந்தான்,அந்த வண்டியில்தான் போயிருந்தான் மரக்கன்றுகள் வாங்க,
இவன்வாங்கப்போனதுவேப்பங்கன்றுகள்கொஞ்சம்,சவுக்குக்கன்றுகள்மற்றும் பூச்செடிகள் மட்டுமே,
ஆனால் அங்கு போனதும் மலைத்துப் போனான்.செடிகளிலும் மரங்களிலும் இத்தனை வகைளா அதை எப்படி இவர்கள் கன்றுகளாய் பராமரித்துக் காக்கி றார்கள் எனக்கேட்ட போது நர்சரி கார்டன் காரர் சொன்னார்,சார் இன்னும் இருக்கு நிறைய ரகங்க மரத்துலயும் செடியிலயுமா எனச்சொன்ன போது அண்மையில் இவனும் மனைவியும் போய் வந்த திருமணத்தில் தாம்பூலப் பையில் மரக்கன்றுகளைப் போட்டுக் கொடுத்த்து ஞாபகம் வந்தது.
மொய்எழுதிசாப்பிட்டுமுடித்து விட்டு வெளியில் வரும் பொழுது அரை ஆள் உயரத்திற்கு வளர்ச்சிகாட்டி பிளாஸ்டிக் பைக்குள்ளாய் மண் போட்டு நிற்க வைக்கப்பட்டிருந்த மரக்கன்றுகள் இரண்டைக் கொடுத்தார்கள்.அது என்ன மரம் அதன் ரகம் என்ன,அதன் வளர்ச்சி எப்படியிருக்கும்,நம் சீதோஷ்ண நிலைக்கு அது தாங்குமா எனத்தெரியவில்லை என்கிற மனோ நிலை தாங்கி வந்து நாட்களை இந்த நர்சரி கார்டன் நினைவு படுத்திச் செல்கிறதாய்.
இது நாள் வரை இவன் பார்த்தறிதந்ததெல்லாம் வேப்பமரங்கள் புளிய மரங் கள் கொடுக்கா புளி மரங்கள் எப்பொழுதாவது மாமரம் சவுக்கு என்கிற சில வைகள் தாண்டி இவன் கேள்விப்பட்டதும் பார்த்ததும் கூட இல்லை. புதிதா கவும் வித்தியாசமாகவும் ஒன்றை பார்க்கிற போது ஏற்பட்டுப் போகிற ஈர்ப்பு தான் இதிலும் எற்பட்டிருக்க வேண்டும் போலும்./
அந்தத் தகவல் வந்த போது அலுவலகம் முழு வேகத்தில் இயங்கிக் கொண்டி ருந்தது.நேரம்பதினொன்றைநெருங்கிக்கொண்டிருந்ததாய்கடிகாரம்அறிவித்தது. இவனுக்குத்தெரிந்து பத்து வருடங்களுக்கும் மேலாய் ஒடிக்கொண்டிருக்கிற கடிகாரம்,
அப்பவப்பொழுது வரும் சிறு சிறு ரிப்பேர் தவிர்த்து பெரிதாக இதுவரை ஒன்றும் வந்ததில்லை.பேட்டரி போடுவதை எப்படி ரிப்பேர் எனச் சொல்ல முடியும்,,,என்பார் அந்த அலுவலகத்தில் சீட்டு வசூல்பண்ணுகிற கிருஷ்ண மூர்த்தி.
அவரும் இல்லா விட்டால் இந்த அலுவலகம் இயங்குவது மிகவும் கடினமே எனச்சொல்லமுடியாவிட்டாலும் கூட அவரது இந்த வயதில் இப்படியாய் உதவிசெய்யும் மனம் வாய்க்கப்பெற்ற ஒருவரை காண்பது அரிதிலும் அரிதே/
சின்னமுள்ளும்பெரியமுள்ளுமாய்விநாடிமுள்ளைகூட்டுச்சேர்த்துக் கொண்டு ஓடித்தேய்ந்த கடிகாரம் இதுவரை தன் வாழ்நாளில் ஆயிரம் பேருக் காவது மணி காட்டியிருக்கும்.வீட்டிலிருக்கிற கடிகாரத்திற்கும் வாழ்நாள் எப்படியும் எட்டு வருடங்களாவது இருக்கும்.அது காட்டிச்சொல்லும் நேரம் தான் இவனு க்கும்இவனது குடும்பத்தாருக்கும் சாஸ்வதமாகித் தெரிந்திருக்கிறது, இதுநாள் வரை/
அது சொன்ன நேரப்படி தான் இதுவரை நடந்திருக்கிறார்கள், இதுவரை அது கை காட்டிச்சொன்ன நேரத்திற்குள்தான் எங்கும் சென்றிருக்கிறார்கள், போய் வந்திருக்கிறார்கள்.சற்று நாட்களுக்கு முன்பு வரை சரியான நேரம் காட்டித் தான் ஒடிக்கொண்டிருந்தது,
பெரியவள்தான் சொன்னாள்.இப்படியெல்லாம்இருந்தால் சின்னவள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு கிளம்பமாட்டாள்,தாமதமாகிப்போகலாம்,பின் அவளது பள்ளியிலிருந்து தங்களை கூப்பிட்டனுப்பி சப்தம் போடுவார்கள்.பிள்ளையின் படிப்பிலிருந்து ஒழுக்கம்வரை எல்லாம் பேசுவார்கள்.பின் உங்களுக்கு பி பி ஏறிப்போகும் வேண்டாம்,ஏன் இந்த வம்பு,பேசாமல் அவளுக்குத்தெரியாமல் பத்து நிமிடம் முன்னே வைத்து விடலாம்.அவளும் சீக்கிரம் கிளம்பி விடுவாள். மந்தமாக இல்லாமல் என்பாள்.
அவள் சொன்ன படியே கூட்டி வைத்த பத்து நிமிடம் இப்பொழுது கால் மணிப் பொழுதைத்தாண்டிவந்துநிற்கிறது,அவளும்சீக்கிரம்கிளம்பிவிடுகிறாள்.
ஆனால்மந்தமும்உடலில் ஏற்பட்டுஇருக்கிறவயிற்றுக்கோளாறும், மாதந்திரப் பிரச்சனை இன்னும் இன்னுமான எதுவும் சரியாகவில்லை என்று தான் சொல்லவேண்டும் ,
டாக்டரிடம்காண்பித்துக்கேட்டதற்குபள்ளியின்இறுதி ஆண்டுப்படிப்பு அப்படித் தான் இருக்கும்,கவலை கொள்ளாதீர்கள் வீணே, எல்லாம் பிள்ளை படித்து முடித்ததும் சரியாகிப்போகுமென்றார்,
ஹோமியோபதி மருத்துவர் அவர்,அப்பொழுதுதான் படித்து முடித்து வந்து கிளினிக் போட்டு ஒருவருடம்கூடஆகியிருக்காது.அவர்வைத்தியம் பார்க்கை யில்அவருக்கு ஏற்பட்ட பள்ளி இறுதியாண்டு படிப்பு அனுபவத்தையும் சேர்த் துச் சொன்னார், அவர் கொடுத்த மருந்து மாத்திரையை விட அவரது பேச்சு நன்றாக இருந்தது எனலாம்.
இவன்வேலைபார்க்கிறதனியார் நிறுவனத்தின் பட்டியூர் கிளை கிளார்க்காக பணி புரிகிற கண்ணுச்சாமி ட்ரெயினிலிருந்து இறங்கி வருகையில் கொஞ்சம் கிட்டினெஸ் ஆக வந்து விட்டது என இவன் பணிபுரியும் அலுவலகத்திற்கு போன் பண்ணிவிட இவனும் முத்துசுந்தரமும்தான் போனார்கள் அவரைப் போய் பார்ப்பதற்கு,
ரயிலடியிலிருந்து வந்தவருக்கு கொஞ்சம்வாந்திவந்திருக்கிறது, ஒரு தடவை வாந்திஎடுத்தவர்அப்படியேபடபடபடப்பாகிஉட்கார்ந்து விட அங்கிருந்த வேப்ப மரத்தடியில் அவ் வழியாகப்போனவர்தான் அவருக்கு தண்ணீர் கொடு த்து வாய்கொப்பளிக்கவைத்துபக்கத்திலிருந்த டீக்கடையில் டீ வாங்கிக் கொடுத்து கொஞ்சம் நேரம் அப்படியே உட்கார்ந்திருங்கள் எனச்சொல்லி விட்டு அவரிட ம் போன் வாங்கி தகவல் சொல்லியிருக்கிறார்.
இவர்கள் போன நேரம் டீக்கடையில் உட்கார்ந்திருந்தார்,என்ன ஏதெனக் கேட்டு இவனும் முத்து சுந்தரமும்தான் அவரை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றார்கள்.
டாக்டர் ஒன்றுமில்லை பெரிதாக கொஞ்ச நேரம் ஆஸ்பத்திரியில் வேண்டு மானால் இருக்கட்டும்,ஒருமணி கழித்து வந்து கூட்டிப்போங்கள் எனச் சொல்லி அனுப்பினார்,
ஒருமணி நேரம்கழித்து இவர்களால் போக முடியவில்லை.அவராக போன் பண்ணிச்சொல்லிவிட்டுகுளுக்கோஸ்ஏற்றியதற்குபணம்கொடுத்தேன்டாக்டர் வாங்கவில்லை ஊங்களிடம் வாங்கிக்கொள்கிறேன் எனச்சொன்னார் எனச் சொல்லிவிட்டுக்கிளம்பினார்,
டாக்டர்இவனுக்குதெரிந்தவர்என்பதால்அவரிடம்பணம்வாங்கமறுத்து விட்டு இவனிடம் வாங்கிக் கொள்கிறேன் எனச்சொல்லியிருக்கிறார்.
இவனுக்கு அது ஒன்றும் புதில்லை என்ற போதும் கூட இப்படியாய் அடுத்த வருக்காக பணத்தை அப்புறம் தருகிறேன் எனச்சொல்வது முதல் தடவையாக இருக்கிறது.
சுந்தர பாண்டி சாரைப்பார்க்கபோகும் போது ரயில்வே ஸ்டேசன் ரஸ்தாவில் பார்த்த பச்சைபாரித்துக்கிடந்த இலைகளும் அதனூடாய் மலர்ந்தும் மொட்டு விட்டுமாய் சிரித்துக்காணப்பட்ட பூக்களுமாய் அவ்விடத்தை அழகாக்கி நடை பாதையின் இருபுறத்தையும் கட்டிக்காத்து நின்றன.

3 comments:
அருமை
நன்றி நண்பரே
வணக்கம்கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
>>> ரயில்வே ஸ்டேசன் ரஸ்தாவில் பார்த்த பச்சைபாரித்துக்கிடந்த இலைகளும் அதனூடாய் மலர்ந்தும் மொட்டு விட்டுமாய் சிரித்துக் காணப்பட்ட பூக்களுமாய் அவ்விடத்தை அழகாக்கி நடை பாதையின் இருபுறத்தையும் கட்டிக்காத்து நின்றன<<<
மனிதநேயம் மலர்கின்றபோதும் இப்படித்தான் இருக்கும்!..
வாழ்க நலம்..
Post a Comment