29 Mar 2016

முன்னதும்பின்னதுமாக,,,,/

முன்னதும் பின்னதுமாய் சுற்றிச்சுழல்கிற சக்கரம் ஊர்ந்து கடக்கிற சாலை யில் பேருந்துகளும் இன்ன பிற வாகனங்களுமாய் இவர்களைக்கடந்து செல்வ தாக,

இதில் முன்னதில் பிரச்சனை ஏதும் இல்லை,பின்னதில்தான் இருக்கிறது பிரச்சனை.பெரிதாக ஒன்றும் இல்லைதான்,ஆனால் வந்து விட்டது பெரிதாகி விடக்கூடாதுஎன்பதில் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டியதிருக்கிறது தான்.

மேம்பட்டுப்போன அந்த கவனமே போனவாரத்தின் கடைசி நாளைக்கு முதல் நாளில்ஒர்க் ஷாப்பில் இருசக்கரவாகனத்திற்கு கோட்டம் பார்க்க வைத்து விட் டது,

இவன் போன நேரம் நல்ல மென் சாய்ங்காலமாக இருந்தது. அலுவலகத்தி லிருந்து சீக்கிரம் வந்து விட்ட முதல் நாளின் சாய்ங்காலமாய் இருந்தகண் வெளிச்சத்தில் வண்டியைக்கழுவினான்,

வாழ்க்கையில் முதன் முறையாகஅன்றுதான் இருசக்கரவாகனத்தை கழுவுகி றான், இதற்கு முன்னால் லெல்லாம் சைக்கிளைக் கழுவிதான் பழக்கம். சைக் கிளில்ஒருசௌகரியம்சைக்கிளைதலைகீழாகபோட்டு விட்டு தண்ணீர் ஊற்றிக் கழுவலாம்.

ஆனால் வண்டியில் அப்படியெல்லாம் செய்து விடமுடியவில்லை.முடிந்த அளவு தண்ணீர் ஊற்றி கழுவினான்,எவ்வளவுதான் கழுவிய போதிலும் இன்னும் இன்னுமாய் சுத்தமாக கழுவ வேண்டும் என்கிற நினைப்பு மட்டும் இவனில் இல்லாமல் இல்லை.அதே நேரம் இப்படியாய் தண்ணீர் ஊற்றிக் கழுவும்போதுஎஞ்சினில்தண்ணீர்ஏறிவிடுமோஎன்கிறபயமும்கூடவே இருந்தது.

இளைய மகள் சொன்னாள், ,தண்ணீர் விட்டு வண்டியைக்கழுவுகிற எல்லோ ருடைய வண்டியிலும் எஞ்சினில் தண்ணீர் ஏறியா விடுகிறது.அட போங்க ப்பா,,,,,,என்ற அவளை தூக்கி உச்சி மோந்து விட்டு திரும்பவுமாய் வண்டி யைக்கழுவ ஆரம்பித்தான்,

இன்னும்சிறிதுவருடங்கள் போனால் அவளை தொட்டுத்தூக்க முடியாது அந்த உரிமையை சமூகம் தக்கப்பன்களுக்கு வழங்கவில்லை..கேட்டால் தலைக்கு மேல்வளந்த பிள்ளையை,,,,,,,,,என அச்சடித்த வார்த்தைகளை வடாம் காயப் போட்டு வைத்திருக்கும்.

பின் சக்கரம் முன் அப்படியே பின் புற சீட்கொஞ்சம் என கொஞ்சம் கொஞ்ச மாய் வண்டியைத் துடைத்து முடிக்கையில் பின்சக்கரத்தில் நான்குகம்பிகள் உடைந்து போயிருந்ததைப்பார்த்தான்.அதற்கு மறு நாளில் வண்டியை ஒர்க் ஷாப்பில்கொண்டுபோய் நிறுத்திய போது ஒர்க ஷாப்க்காரர்சொன்னார், என்ன சார்இந்நேரம் கொண்டு வந்துருக்கீங்களே, காலையிலயே விட்டுட்டுப் போயி ருந்தா இந்நேரம் சர்வீஸ்பண்ணி வைத்திருக்கலாம் என்கிற அவரின் ஆதங் கத்தை/

அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் திருப்பதி வெங்கட்டைப் பார்த் தான்.திருப்பதி வெங்கட் இவனுக்கு மாப்பிள்ளை வேண்டும்,இருவரும் ஒரே ஊர்தான்.ஆனால் ஊரில் இருக்கிற வரை இவர்கள் இருவரும் அவ்வளவாக பேசிக் கொண்டதில்லை. ஊர் விட்டு ஊர் வந்து இங்கு டவுனுக்குள் குடி புகுந்த நாளிலிருந்து இவனை அவர் பார்க்கும் போதோ அவரை இவன் பார்க்கும் போதோ ரொம்பவுமாய் பிரியம் கட்டிப்பேசிக்கொள்கிற பழக்கம் கை வந்தி ருந்தது இருவருக்குமாய், தேவைதான் எதையும் தீர்மானிக்கிறது போலும்.

திருப்பதி வெங்கடேஷிடம் தமிழ் அல்லாத வேறு ஒரு மொழியில் பேசிக் கொண்டிருந்தது கண்டு சிரித்து விட்டார் ஒர்க் ஷாப்க்காரர்.

அவருக்கு புரியாத பாசை என்பதைவிட இப்படி ஒரு அந்நியமான பாஷை யுடன் கூடியபேச்சை இவர் இப்போதைக்குகேட்டதில்லை போலிருக்கிறது.

திருப்பதி வெங்கடேஷ் வேலை பார்க்கிறபள்ளியில் இவனது மூத்தமகளுக்கு வேலை விஷயமாகக் கேட்டிருந்தான்.இதோ இரண்டு நாளில் சொல்கிறேன் எனச்சொன்னவரைஇரண்டுமாதங்கள் கழித்து இப்பொழுது தான் பார்க்க முடிந் திருக்கிறது,

அவரதுசெல் நம்பரும் இவனிடம் இல்லை, இல்லையெனில் இந்நேரம் கேட்டு வைத்திருந்திருப்பான் எப்பொழுதோ/

திருப்பதி வெங்கடேஷை ஆவலோடுஎதிர்பார்த்து காத்திருந்தவனுக்கு இங்கு வந்துகாட்சிதருகிறார் அவர், வேலை இல்லையாம் இப்போதைக்கு,அப்படி சிரமப்பட்டு வேலை தர வேண்டுமானால் இதற்கு முன்பாக எங்காவது ஒரு அலுவகத்தில் அல்லது பள்ளியில் வேலை பார்த்த அனுபவம் வேண்டும் எனக் கேட்கிறார்கள் என்றார்.

இவன் எங்கே போவான் முன் அனுபவத்திற்கும் வேறு வேலையில் இருக்க வைக்கவுமாய்,தவிரவேறுவேலையில்இருந்திருந்தால் இங்கு எதற்கு வேலை க்கு கேட்கிறான்.சரி இரவு எட்டரை வாக்கில் வாருங்கள் வந்து எடுத்துக் கொள்ளலாம் வண்டியை என நிறுத்திவிட்டுப்போகச்சொன்னார்,

கோட்டம் விழுந்ததால் கம்பிகள் உடைந்து போயிற்றா அல்லது கம்பிகள் உடைந்ததால் கோட்டம் விழுந்ததா எனத்தெரியவில்லை.இவனும் இளைய மகளுமாக வண்டியை விட்டு விட்டு வீடுவரை நடந்துதான் வந்தார்கள்,

நடந்து நாட்கள் ரொம்பவும்தான் ஆகிப்போனது,கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் வரை எட்டித்தொட்டுநடந்தவன் ஒரு காலத்தில் ,இப்பொழுது எங்கு போவதானாலும் வண்டி வண்டி வண்டியே/

காலை ஐந்தரை வாக்கில் எழுந்திருப்பவன் தாத்தா கடையில் ஸ்டாராங்காக ஒரு டீ ,சமயத்தில் அது இரண்டாகக்கூட போகும்,குடித்து விட்டு அப்படியே நடந்தால் ஒரே நடைதான். இங்கிருந்து கிளம்பி போஸ்ட் ஆபீஸ் வழியாகப் போய் அருப்புக்கோட்டை ரோடு பிடித்துஅல்லம்பட்டி முக்கு போய் வலது பக்கமாக திரும்பி நான்காவது கேட் ரயில்வே லயனை ஒட்டிய ரோட்டில் வந்து முதலாவது கேட் வழியாக திரும்பவும் போஸ்ட் ஆபீஸைத் தொட்டு வீட்டிற்கு வந்து விடுவான்,

ஐந்து கிலோ மீட்டர்களாவது இருக்கும் இவன் தினசரி நடப்பது.இப்பொழுது அந்தப்பழக்கம்தூர்ந்து அடியோடு ஒழிந்து போனது. இப்பொழுதெல்லாம் எங்கு போனாலும் இருசக்கரவாகனம்தான்.

அதற்காகவீட்டிலிருந்துஒருபர்லாங்தூரத்திலிருக்கிறகடைக்குப்போய்வாழைப் பழம் வாங்கிவரக் கூடவண்டிதானாஎனமனைவி கேட்பாள் அடிக்கடி.

வெங்காயம் ,காய்கறிகள் மற்றும் தேங்காய்கள் இரண்டும் வாங்க வேண்டும்,, ஒரு நாள் வீட்டில் வைத்து கணக்குப் போட்டுப் பார்த்தபோது ஒரு நாளைக்கு ஐந்து தேங்காய்ச்சில்லாவது வாங்க வேண்டியதிருக்கிறது,கடையில்போய் தனியாக வாங்கினால் இருபது ரூபாய்ஆகிப்போகிறது.இதற்கு தேங்காயாக வாங்கினால் மிச்சமாகிப் போகிறது,காய்கறியும் அப்படியே என்கிற சொல் ஏற்றும் காய்கறிப்பை ஏந்தியுமாய் போய் வந்தார்கள்.

முன்னதும் பின்னதுமாய் சுற்றிச்சுழல்கிற சக்கரம் ஊர்ந்து கடக்கிற சாலை யில் பேருந்துகளும் இன்ன பிற வாகனங்களுமாய் இவர்களைக்கடந்து செல்வ தாக/

6 comments:

இராய செல்லப்பா said...

வசதிகளை அனுபவித்துவிட்டால், அதற்கு முந்தியிருந்த நிலையைக் கற்பனை செய்து பார்க்கவும் முடிவதில்லை. சைக்கிளோ, வேறு இரு சக்கர வாகனமோ எதுவாயினும் இதே நிலைமைதான். அழகான நடைச் சித்திரம். - இராய செல்லப்பா.

vimalanperali said...

வணக்கம் ராயச்செல்லப்பா சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

துரை செல்வராஜூ said...

அக்கம்பக்கம் பார்த்துக் கொண்டே காலார நடப்பதும் -
சைக்கிளைத் தள்ளியவாறு தோழமைகளுடன் பேசிக் கொண்டே நடப்பதும் -

மிக மிக சந்தோஷமான தருணங்கள்..

எத்தனை பேருக்கு அவை வாய்த்திருக்கும்!..

vimalanperali said...

வணக்கம் துரை செல்வராஜ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

எப்பவும் போல் இனிமையாய்....

vimalanperali said...

வணக்கம் சேக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/