3 Apr 2016

பொண்வண்டு,,,,,,

பார்க்கிறநேரங்களிலெல்லாம் காக்கிபேண்ட்,காக்கிசட்டையுடன்தென்படுகிற அவரை நான் மாமா என்றே அழைக்கிறேன்.

மாமாஎன்றால்தூரத்துசொந்தமோஎனதுரத்தசம்பந்தமானஉறவோஅல்ல.வேற்றுஜாதிகளுக்குள்உறவுமுறைகளை முடியிட்டு பொத்திப்பாதுகாத்து வைத்துக்கொண்டிருந்த எங்களது கிராமத்தில் நானும் அவரும் அப்படித்தான் பழக்கமானோம்.

உழைப்பைமடியில்கட்டிக்கொண்டுஅதைஉடல்மொழிமூலம் வெளிப்படுத்தி க் கொண்டுஇருந்தநாட்களில்பழக்கமானவர்மண்வெட்டிவேலை,பாத்திகட்ட,களை எடுக்க,மரம் வெட்ட,உழவுவேலைக்கு என எங்களது மட்டும் எனஇல்லாமல் பக்கத்துகிராமங்களின்தோட்டங்காடுகளிலும்எங்களதுஉழைப்பையும்வேர்வை வரிகளையும்எங்களதுஉடலின்முழுஅடையாளமாக்கிக்கொண்டிருந்தநேரமது.

உழைப்பு+வேர்வை=நாங்கள்என்கிறசொற்பதத்துடன் எங்களுக்குள்ளாக மனம் விரிந்தபூத்திருந்திருந்தநட்பையும்சேர்த்துக்கொள்ளலாம்கொஞ்சம் அதிகமாக வே பழகிவிட்டார். 

அதிகமாகவே ஒட்டுதலாகிப் போனார்.அது பரஸ்பரம் ஒருவர் குடும்பத்துடன் ஒருவர் நட்பு கொள்கிற அளவு நீண்டது.நான் அவரது வீட்டிலும்,அவர் எனது வீட்டிலுமாய் கை நனைக்கிற அளவு/

நான்கு பக்கமும் மடக்கி நட்டு வைக்கப்பட்டிருந்த மண் சுவரின்மீது வேயப்பட்டிருந்த கம்பந்தட்டைகூரை கொண்ட வீடு அவரது.அவர்,அவரது மனைவி, இரண்டு பெண்பிள்ளைகளுடன் குட்டிகள்இரண்டும், பெரியதுமாக இரண்டுமாய்இருந்த ஆட்டுக் குட்டிகளைக்கொண்டதான அடையாளம்தான் 
அவரதுவீடாகஉருக்கொண்டு காட்சிதந்தது.

கிழக்குத்தெருவின் மையமாக இருந்த அவரது வீட்டிலிருந்து கூப்பிடு தொலை வில் ஊர் மந்தை தெரியும்,வீட்டின் நடையில் உட்கார்ந்திருப்பவர் மந்தையில் எனது தலை தெரிந்தால் வந்து விடுவார்,

அப்புறம்எங்களதுகைகோர்ப்புடன் கண்மாய்க்கரை அல்லதுடீக்கடை ஒன்றில் எங்களது பேச்சுவிரிந்து மலர்வு கொள்ளும் கண்மாய்க்கரையின் மண் சிரிக்க, அங்கிருக்கிற செடிகொடிகள் கைகோர்த்துப் பேச அலைபாய்கிற காற்றில் நெளிகிற கண்மாயில் கட்டிக்கிடக்கிற நீர் காட்டுகிறரம்யம் இவைகளுடன் கண்மாய்க்கரையின்மரநிழலின்ஊர்கிறஎறும்புகளும்,நெளிகிறபுழு பூச்சிகளை யும் தள்ளிவிட்டு ஓரமாய் அமர்ந்து பேசுகிற எங்களின் பேச்சுகளில் அரை படுவது பெரும்பாலும் நாங்கள் செய்த வேலைகள்,தோட்டம்,காடுகள் சம்பளம் விளைச்சல் இது பற்றியதான பேச்சாகவே மட்டும் இருக்கும்.

இது மாதிரியான நேரங்களில் அவரது பேச்சின் முடிவு இப்படித்தான் இருந்தி ருக்கிறது. 

அதனுள்பொதிந்திருப்பதுஏக்கப் பெருமூச்சா அல்லது கேலியா என்பது புரிபடாத புதிராகவே/

“மாப்ள நீ மட்டும் வேற ஜாதி ஆளா போனய்யா,இல்லைன்னா ஏங் மூத்த பொ ண்ண ஒனக்கு கட்டிவச்சிருவேன்.இப்பயும்ஒண்ணும்மிஞ்சிப் போகல. எங்க சாதி,சனமும் வீடும் ஒத்துக்கிட்டா ஏங் பொண்ணு ஒனக்குத்தான்யா”,,,,,,,,, என அடிக்கடி சொல்பவரின் வயதும்,எனது வயதும் ஒன்றல்ல.

எனக்கும் அவருக்கும் இருக்கும் வயதின் வித்தியாசம்20 வருடங்கள் என விரி ந்து தெரியஎங்களது பேச்சின் எல்லைகளும் 20வருட வித்தியாசங்களுக்கு மதிப்பளித்து/

அவர்வெட்டியமண்ணிலிருந்தும்,அவர்கடப்பாரைபுரட்டியபாறையிலிருந்தும்,
அவரது அரிவாள்வெட்டிய மரங்களிலிருந்தும், ஏர்க்கலப்பை உழுத நிலத்தி லி ருந்தும், பரிமளிக்கிற இவரது உழைப்பின் தெளிவு எல்லோராலும் பேசப்படுப வையாக/

இப்படியாகதன்னை என்னுள்ளும்,அந்த கிராமத்து மண்ணிலுமாய்பதியனிட்டு அடையாளப்படுத்திக்கொண்ட மனிதரை இன்று மதியம் ஒரு மணி போலிரு க்கும் பார்த்தேன் அரசு மருத்துவமனையின் பின்புறமாய்/

நல்ல வெயில்,பெய்துமுடித்த மழையின் குளிர்வு வீசிக்கொண்டிருந்தபோதும் கூட வெயில் அதிகப்பட்டே தெரிந்தது.

காக்கி என்றால் அப்படி ஒருகாக்கி, எங்கு போய் தேடிப்பிடித்தார் எனத் தெரிய வில்லை.
 
கூடவேதோள்ப்பட்டையின் ஓரமாய் இருக்கும் சிவப்பு நிற பின்னல் கயிறும் பார்க்க போலீஸ் சீருடை போலவே இருக்கும்.

போய் விட்டேன் சிறிது தூரம்.கண்ணாடியில் தெரிந்த அவரது உருவத்தை வைத்தேஅவரைஅடையாளம்தெரிந்துகொண்டேன்.முன்பைவிடசற்றுமெலிந்தே காணப்பட்டார். 

ஏற்றிவாரியிருந்த தலைமுடியும்,அழகாக செதுக்கப்பட்டதுபோல்காணப்பட்ட அவரது சேவிங்க் செய்யப்பட்ட முகமும்,அவரது உடையும், அவரது உடல் நிமிர்வும் அவரை இளமைப்படுத்திக் காட்டியதாகவே/ 

என்ன மாப்ள எப்படியிருக்கீங்க, மாசச் சம்மளம் ஒங்க ஒடம்ப ரொம்பவே மாத்திரிச்சி போலயிருக்கு, என என்னைப்பார்த்ததும் தோள் மீது கை போட்டு ஒருபருப்பு மில்லில் வாட்ச்மேனாகவேலைபார்ப்பதாகவும்,பிழைப்பு உருண்டு ஓடுவதாகவும்ரோட்டோரக்கடையில்டீசாப்பிட்டுக்கொண்டிருக்கையில்சொன் னார். 

“ஊர்லதான்இருக்கேன்மாப்புள,மூத்தபொண்ணுக்குகல்யாணம் ஆயிருச்சி, 
ரெண்டு கொழந்தக,மாப்ளமில்லுலவேலசெய்யிறாரு பக்கத்தூருதான் இந்தா இருக்குற20 மையில்ல இருக்குது ஊருநல்ல சம்பாத்தியம்தான், கைநெறைய இல்லைன்னாலும் அவுங்க தேவைக்கு சரியாஇருந்துச்சிகையில ஒருவண்டி, ஒத்திக்குவீடுன்னுநல்லாத்தான்இருந்தாங்க.வண்டியெல்லாம்வச்சிருந்தாங்க ஒங்களமாதிரிஏதோஎன்னாளானஅளவுக்கு  போட்டுத்தான் கட்டிக்குடுத்தேன். 

ஆனாலும் போன யெடத்துல நிம்மதி இல்ல அவளுக்கு.அடிக்கடி கண்ணக்கசக் கீட்டு வந்துறர்றா,பொறந்த வீட்டுக்கு/என சொல்லிவிட்டுஎன்னையே பார்க்கி றார் அவர்.அந்த காக்கிச்சட்டையும்,அவரது கம்பீரமும் தொய்வுபட்டுத்தெரிய/ 

அவரும் நானும் கண்மாய்க்கரையில் அமர்ந்து பேசிய நாட்கள் என்னுள் நிழலாடியது/

5 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இவ்வாறான நிகழ்வுகள் என்றும் மனதைவிட்டு அகலாதவை.

துரை செல்வராஜூ said...

>>> ஆனாலும் போன யெடத்துல நிம்மதி இல்ல அவளுக்கு.அடிக்கடி கண்ணக் கசக்கீட்டு வந்துறர்றா,பொறந்த வீட்டுக்கு..
- என சொல்லிவிட்டு என்னையே பார்க்கிறார் அவர்..<<<

அவருடைய எண்ண ஓட்டங்கள் எங்களுக்கும் புரிகின்றன..

vimalanperali said...

வணக்கம் டாக்டர் ஜம்புலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் துரை செல்வராஜ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் துரை செல்வராஜ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/