10 Apr 2016

இரண்டு டீயும் ஒரு சர்பத்துமாய்,,,,,/

இரண்டு டீக்களும் ஒரு சர்பத்துமாக குடித்ததில் ஒத்துக் கொள்ளவில்லை வயிறு, சற்றே ஊத்தப்பட்டுத் தெரிகிறதான தோற்றமும் உணர்வும் தருகிறது.

உண்மை என்னவென தெரியவில்லை,தோற்றமே முக்கியப்பட்டுத்தெரிவ தாயும் உருவகப்பட்டு நிற்பதாயும் இங்கு பிரதானமாய் என்கிறார் இவன் பதிவாய் வைத்தியம்பார்க்கும்ஹோமியோபதி மருத்துவர்/

அவரிடம் மருத்துவத்திற்காய் போகும் சமயங்களில் கொஞ்சம் கவனம் கட்டிக் கொண்டு போக வேண்டியிருக்கிறது.”ஏன் மாமா திடீர்ன்னு பொய் எல்லாம் சொல்றீங்க,ஒங்களுக்குத்தான்சுட்டுப்போட்டாலும் வராதே அது, பின்ன ஏன் அனாவசியமா போய்க்கிட்டு”,,,,,,என்பார்,
 
நண்பரின் மகன்தான் டாக்டர் என்ற போதிலும் கூட இன்னும் சில விஷய ங்களை சொல்வதில் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது,இருந்த போதிலும் கண்டுபிடித்துவிடுகிறார்,

நாக்கும் மனதுமாய் அரிப்பெடுத்து அடக்க மாட்டாமல் தண்ணீர் சாப்பிட்ட நாளன்றின் மறுநாள் வைத்தியத்திற்கு போனால் மறுநாள் அவரிடம் வைத் தியத்திற்குப் போகிற பொழுது அவர் சொல்கிற வார்த்தைகள் இவை/

என்னசெய்யபின்னே தலை குனிந்து கொண்டு சமாளித்துச்சிரிப்பதை தவிர அந்த இடத்தில் வேறொன்றும் இல்லை பராபரனே/

அவர் சொன்ன அனாவசியம் டாக்டரிடம் மட்டும் என இல்லை, வீட்டில் வெளியில் நண்பர்களிடம், தோழர்களிடம் அலுவலகத்தில்,,,,,,,,,,,என மாறி மாறி பல இடங்களில் தெரிபட்டுபோகிறதாய்/

பரவாயில்லை இவனின் மெய்த்தன்மைதானே தெரிபட்டுப் போகிறது அதனால் என்ன என்கிற மனச்சமாதானம் எழுகிற நேரங்களிலும் கூட இவனது உள் மனம் என்ன இது ஒரு பொய் கூட ஒழுங்காக சொல்ல வரவில்லை என்றால் எப்படி,,,,?என இவன் மீதே இவன் கோபம் கொண்ட நாட்கள் நிறைய உண்டுதான்.

ஒருசிலரைப்போலஎந்நேரமும்பொய் புரட்டு ஊர்ப்பொரணி எனவும் சிரித்துக் `கொண்டேகழுத்தை அறுக்கிற நய வஞ்சகத்தனமும் தெரியவில்லை. தெரியா தது கேட்பின் வரியாதது வந்து சிக்கும் என்பார்கள்.

அல்சருக்காய் வைத்தியத்திற்குப்போன அன்று அதே வைத்தியர் அதே வார்த்தைகளை கொஞ்சம் கண்டிப்பாகச்சொன்னார் என்றால் மிகையில் லை .மாமா விருந்துக்குத்தான் எப்போதாவது தண்ணி சாப்பிடுரேன்னு சொல்லீட்டு மருத்துக்கு வந்து நிக்குறது எப்பிடி சரியாயிருக்கும் சொல் லுங்க, விருந்து ன்னா நல்லதப்பொல்லத சாப்புடுங்க,அத விட்டுடு இந்த கருமாயத்த போட்டுக் குடிச்சாஒடம்பு பின்ன கெட்டுப்போகாம என்ன பண்ணும் ,சும்மாவே ஒடம்பு நெறஞ்ச அல்சர்,பி பி.சுகரு இதுல அப்பப்ப கைகால் வலி ஒடம்பு நோகுதுன்னு வந்துநிக்குறீங்க,,, இத்தனையையும் சொல்லீ ட்டு சத்தம் இல்லாம தண்ணியச் சாப்டுட்டு வந்துர்றீங்க,அது வேலைய பின்ன அதுகாட்டத் தான செய்யும், வைத்தியத்தால எத்தனையசரி பண்ண முடியும்ன்னு நெனைக்கிறீங்க,என கொஞ்சம் கண்டித்துச்சிரித்தவாறே மருந்து கொடுத்தார். அவர் சொல்வதும் சரியே அவரது கூற்றுப்படி என நினைத்தவனாய் இனிமேல் குடிக்கக்கூடாது என நினைத்துக்கொள்வான் அவ்வப்பொழுதாய்/

முதலில் சாப்பிட்ட டீ பாய் கடையில் சாப்பிட்டது.பெரும்பாலான நேரங்க ளில் விரும்பிச்சாப்பிடுவது இல்லை. அலுவலகம் விட்டு வருகிற மாலை நேரங்களில் ஏற்படுகிற மண்டைக்காய்ச்சலைப்போக்கஏதாவது ஒன்று எங்கா வது நின்று தின்றும் குடித்தும் ஆக வேண்டியதே இருக்கிறது.

அந்த வகையில் பாய்டீக்கடையில் தினசரி அலுவலகம் விட்ட மாலையில் ஒரு டீ என்பது இவனது பதிவான மாலை நேர பழக்கமாகிப் போகிறது. தேவை யை விட பழக்கங்களே சாஸ்வதமாகிப்போகிறதாய்/

முன்பெல்லாம் பாய் கடையில் டீ சாப்பிடுவதற்கு மாலை நேரம் கனிந்து வர வேண்டியதில்லை.ஒரு நாளைக்கு அவரது கடையிலேயே பத்து டீயை எட்டி விடும்,அலுவலகத்திற்குப்போகும் பொழுது,அலுவலக வேலையாய் வெளி யில் போகும் பொழுதும் திரும்பி வரும் பொழுதும் போஸ்ட் ஆபீஸ் போய் வருகிற சமயங்களிலுமாய் என இவன் காலடியும் இவனது வருகையும் பாய் டீக்கடையில் பெரும்பாலுமாய் இருக்கும்.

கைக் காசெல்லாம் கிடையாது,கணக்குத்தான்.இவனது பெயரில் இருக்கிற பக்கங்கள் எப்பொழுதும் கொஞ்சம் கூடுதலாகவே காணப்படும் கடையின் பக்கங்களில் கடைக்காரர் கூடச் சொல்லுவார்,அண்ணே நீங்கவேலபாக்குற ஆபீஸூல இருக்குற மாதிரி ஒரு தடி நோட்டுப்போட்டாத்தான் கட்டுபடி யாகும் போலயிருக்கு சும்மா ஒரு குயர் ரெண்டு குயர் நோட்டெல்லாம் காணாது ஆமா என்பார்,

கடையில் கணக்கு வைத்திருப்பவர்களை விடஇரண்டு பக்கமாவது அதிகம் இருக்கும்/கடைக்காரருக்குமாதக்கடைசியில்இவனது கணக்கைக் கூட்டுவது கொஞ்சம் சிரமமாய் இருக்கும்,இவனையே கணக்குக்கூட்டிப்போட்டுக் கொ ள்ளச் சொல்லுவார். அப்படியே சேர்த்து நான்கைந்து பேருக்கும் கணக்கை கூட்டிப்போடுத் தரச் சொல்லுவார்.

டீ மாஸ்டர்தான்சொல்லுவார்,அடிக்கடி,இதுக்கு பேசாம அவர கல்லாவுல ஒக்கார வச்சிறலாம்ல என,/ அவர்தான் சொல்வார் இவன் அவரிடம் டீயை வாங்கு கிற சமயங்களில்/

கொஞ்சம் டீயக்கொறச்சிக்கங்கண்ணே பின்னாடி ஒடம்பு தாங்காது என, அவர் சொல்வாஸ்தவமாகிப்போனது. இப்பொழுது உடல் தாங்கவில்லை, டீயும் சாப்பிடுவதில்லை.ஆனாலும் டீக் கடை முன்பு போய் நிற்பதில் இருக்கிற ஒரு மன சுகம் போக மாட்டேன் என்கிறது,
 
வடக்கு தெற்காய் நீளவாக்கில் வகுந்து ஓடுகிற ரோட்டில் கிழக்குப்பார்த்த வாசல் கொண்ட கடை/
 
காலை முன் வெயிலும்,மாலை நிழலும் கடை வாசலை நனைக்கும்/

அப்படியான முன் பின் நனைவு கொண்ட கடையிலிருந்து நடந்து செல்கிற தூரத்தில் இருக்கிற ரயில்வே ஸ்டேசனுக்குவிரைகிற ஆட்டோக்களும் இரு சக்கரவாகனங்களும்பாதசாரிகளையும்டீக்குடித்துக்கொண்டுபார்த்துக் கொண் டே இருக்கலாம். கிளகிற நினைவுகளை உட்ப்பொதித்துக்கொண்டதானஇது போலான காட்சிகளை பார்க்க நன்றாக இருக்கிறதுதான்.அந்த நேரத்தில்/ அம்மாதிரியான பொழுதுகளில் படபடக்கிற பட்டாம் பூச்சிகள் வானத்தில் பறந்து போவது போலவுமாய் இருக்கும்,இருக்கட்டுமே.அதில் இரண்டு கீழி றங்கி வந்து இவனை தொட்டுவிட்டுப்போகக்கூடாதா எனவுமாய் தோணாமல் இருந்ததில்லை.

இதில் காலைக்கும் மாலைக்குமாய்பட்டுத் தெரிகிற வித்தியாசங்கள் இருக்கி றதே, அதை அனுவித்தவர்களுக்குத்தான் தெரியும் என்பார் நண்பர்.

தொலை தூரத்தில் வேலையாய் இருப்பவர்,அவரது வேலை கல்ப்பாக்கத்தில் என முருகதாஸ் சொன்னதாய் ஞாபகம்.

பாதரூம் கதவின் பின் பக்க தகரம் அரித்துப் போய் தொங்கிக் கொண்டிருந்தது. குளிக் கும் போதும் மற்ற நேர தண்ணீர்ப்புழக்கத்தின் போதும்தண்ணீர்பட்டு தண்ணீர் பட்டு இற்றுப்போயிருந்த தகரம் பிய்ந்து தொங்கிப் போய் உதிர்ந்து காணப் பட்டது.

தினந்தோறும் பாத்ரூம் போகும் போதும் குளிக்கிற போதும் முதல் வேலை யாக் முருகதாஸைப்பார்த்து கதவை சரி செய்யச் சொல்ல வேண்டும் என நினைத்துக்கொள்வதுண்டுதான்/

தச்சு வேலை பார்க்கிற முருகதாஸை எப்பொழுதிலிருந்து பழக்கம் என சரியாகத் தெரியாவிட்டாலும் கூட அவர்களுக்குள்ளாய் பழக்கம் ஏற்பட்டு பத்து வருடங்களுக்கு மேலாக இருக்கும் என உறுதியாக ஆணியடித்துக் கூறி விட முடிகிறது.

இவன்,சேகரன்,பாண்டித்துரை,கண்ணன் என ஆனந்தா ஹோட்டலில் எப்பொ ழுதாவது சந்திக்கிற நாட்களில் நேரங்காலமில்லாமல் பேசிக் கொண்டிருக் கிற பேச்சின் ஊடாக முருகதாஸீம் கலந்து கொள்வார்.

இதில் சேகரனும் பாண்டித்துரையும் தன் வாழ்நிலையை பொது வெளிகளில் ஒப்படைத்து விட்டார்கள்.பொதுவாழ்க்கைகென அர்ப்பணிக்கப்பட்ட அவர்க ளது வாழ்க்கை திரும்புகிற திசையெல்லாம் எப்பஒழுதும் போல கசப்பும் இனிப்பும் இன்னும் பல சுவை கலந்துமாய் இருந்தது. போஸ்டர் கொடி தோர ணம் தட்டி போர்டு நோட்டீஸ் ,,,,என இன்னும் இன்னுமான வேலைகளோடு அவர்கள்கை கோர்த்து நிற்கிற போது இவனுக்குக்கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்திருக்கிறது.

அந்தநேரங்களில் கண்ணன் அரசு வேலை ஒன்றில் ஐக்கியமாகி காக்கி உடை யுடன் நிற்கிறார்.இவன் ஒரு காலூன்றாத நிலையற்ற வேலையில் என்கிற உருக்கள் தாங்கி இருந்த நாட்களில் நிகழ்கிறசந்திப்பின்நூழிலையில் அறிமுக மானமுருகதாஸ்இப்பொழுதுநகரில்முக்கியவேலைக்காரராக/ஆடிட்டர்வைத்து கணக்கு வழக்கு பார்த்துக் கொள்கிற அளவிற்கு சொந்த வீடு இரு சக்கர வாகனம் பிள்ளைகளின் இங்கிலீஸ் மீடியப் படிப்பு என செட்லாகிப் போனான்.

நல்லதான மழை நாளின் மாலை நேரமொன்றில் தூவானம் போட்டுக் கொண் டிருந்த தூறலின் ஊடாக அவரது மரப்பட்டறையில் வைத்து அவரைப்பார்த்து விஷயத்தைச்சொன்னமறுநாளில்வந்துபாத்ரூம்கதவைசரிசெய்துகொடுத்தார்,

அவரும்வேலைபார்க்கவருகிறபோதெல்லாம்சொல்வதுண்டு.அண்ணேஒண்ணு பேசாம கதவ மாத்துங்க இல்ல நாகத்தகடு வாங்கி அடிச்சுருங்க என/

ஆனால்அவர்சொல்லிப்போன நாளிலிருந்து இன்று வரை இவன் கதவை மாற் றவோஅல்லதுநாகத்தகடுஅடிக்கவோஇல்லை.அதற்குக்காரணம்சோம்பேறித் தனமோ அல்லது கையில் காசில்லாமலோ இல்லை,

ஏதோ ஒரு நிலை அல்லது ஏதோ ஒரு வேலை கவனம் காரணமாகத் தட்டிக் கொண்டு போய் விடுகிறதுதான். காலை வெயிலின் சுகந்தத்தை சுகித்தவனா ய் ஒரு நாளன்றின் காலையில் டீ குடித்துக்கொண்டிருக்கும்போது அங்கு அவ் வழியாகப்போனமுருகதாஸ்இவனைப் பார்த்ததுமாய் நின்று விட்டார்,

இவனது பழக்கம்தான் தெரியுமே ஊருக்கெல்லாம்,யாராவது நெருக்கமான வர்களைப்பார்த்தால் உடனேஅடுத்தவார்த்தைடீக்குடிக்கிறீர்களா எனக் கேட்
பது தானே,,,?

அது போலவே முருகதாஸைப் பாத்துக்கேட்டதும்தான் அவனது முகத்தைப் பார்க்கிறான்.என்ன இது இப்படி சூம்பிப்போய்க்கிடக்கிறது முகம்.ஏன் இப்படி யாய் அணைந்து போய்க்கிடக்கிறான் எனநினைத்துக் கேட்டபோது பின்ன எண் ணண்னே பிடிக்கலைன்னா பேசாம இருந்துட்டு போக வேண்டியது தான, ஏன் இப்பிடி வம்புபண்றாங்கஎண்ணையப்போட்டுஎன சேகரனும் பாண்டித் துரை யும் தன்னை அவர்கள் பக்கமாய் இழுக்கப்பார்க்கிறார்கள் என இவனிடம் சொன்ன போது இவன் பொத்தாம் பொதுவாக சொல்லி வைத்தான். உங்கள் மனதுக்கு எது சரி எனப்படுகிறதோ அதைச்செய்யுங்கள் என/

அந்த சொல்லில் கட்டிப்பொதித்து வைக்கப்பட்டிருக்கிற சொற்கட்டுகள் பாய் டீக்கடையில் நிற்கிற காலை மாலை வேலைகளின் ரம்யத்தில் உணர முடிகி றது.

பாய் கடையில் டீ சாப்பிட்டு விட்டு கொஞ்சம் நேரமிருக்கிறது என கலெக் டர் ஆபீஸ்வரை போய் வந்தான்,இரு சக்கர வாகனத்தில் எங்கும் தூரமாகப்போய் ரொம்பவும் நாளாகிப் போனது.

கொஞ்சம் போய் வந்தால் தெம்பாக இருக்கும் மனதிற்கும் உடலுக்கும் என நினைத்துதான் வந்தான்.

வந்த இடத்தில் ஞாபகம் வருகிறதுதாய் நண்பனின் முகம்,அவர் குடியிருக் கிற ஏரியாவிற்கு வந்து விட்டு அவரைப்பார்க்காமல் போனால் எப்படி,,,,,? என்கிற கேள்விதாங்கி அவரிடம் போனில் பேசுகிறான்,

உங்களது ஏரியாவில்தான் இருக்கிறேன் உங்களைப்பார்க்க வேண்டும் என கண் அரிக்கிறது,வரலாமா கொஞ்சம்,,,,? எனக்கேட்ட பொழுது அவர் சிறிது நிமிட அவகாசங்களில் வந்து விடுகிறேன் அங்கு என்கிறார்.

போன இடத்தில் எப்படி சும்மா நிற்க முடியுமா என்ன வெறுமனே,,, அந்தப் பக்கம் போய் விட்டால் வழக்கமாய் டீ சாப்பிடும் மாரியண்ணன் டீக் கடை யில்டீக்கிளாஸீடன் நின்று கொண்டுதான் போன் பண்ணினான் நண்பருக்கு/

என்ன பாய் கடையில் டீசாப்பிட்டு விட்டு இங்கு வர அதிக பட்சம் கால் மணி அல்லது இருபது நிமிடங்கள் ஆகி இருக்கலாம். அதற்குள்ளாகவா இன்னொரு டீ,உன் தினவெடுத்த நாக்கில் சூடு வைக்க வேண்டும் முதலில். அப்பொழுதான் சரிப்படுவாய் அதிகமாய் டீக்குடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவாய் என்கிற மனதின் சப்தத்தை ஓரம் கட்டி விட்டு டீக் கிளாஸீடன் நின்றிருந்த வேலை யில் வந்து விட்டார் நண்பர்.
 
அவர் அப்பொழுதான் மதுரைக்கு ஒரு இலக்கிய கூட்டத்திற்கு போய் வந்ததாகவும் அதன் பதிவுகள் தன்னிடம் நிறைய இருக்கிறது.வாருங்கள் பேசிக்கொண்டே செல்லலாம் என கூட்டிக்கொண்டு போகும் பொழுது ஓரித் தில் நின்று கடையில் டீ சாப்பிடுவோமா என்றார்,”ஐயையோ வேண்டாம் டீ ஏற்கனவே குடித்த இரண்டு வயிற்றை நிரப்பிஉடலையும்நிரப்பி விட்டது.

வேண்டுமானால் ஏதாவது கூல் டிரிங்க்ஸ் சாப்பிடுவோம் என்றவனை கூட்டிக் கொண்டு போய் விட்டார் கடைக்கு,/

அவர் சொன்ன இலக்கிய விசாரங்களையும் கூட்ட விபரங்களை விடவும் இவன் குடித்த சர்பத்தான் இவனது மனதிலும் நெஞ்சிலுமாய் நின்றது, ஏண்டா குடித்தோம் என்றாகிப்போனது,

வேலியிலபோறத எடுத்து,,,,,கதையாகிப்போனது.நல்ல வேளையாக வாந்தி எதுவும் வந்து விடவில்லை.பழைய தண்ணீரில் கலந்திருப்பார்கள் போலும் சர்பத்தை/
 
குடித்ததுமாய் ஒரே அழுக்கு வாடை,ஏற்கனவே இரண்டு டீக்கள் குடித்ததில் வயிறு வேறு திம்மென இருந்ததா,மிகவும் யோசனையாக ஆகிப் போனது இவனுக்கு/

வயிறுஊதிக்கொண்டுஏப்பம்ஏப்பமாய் வந்து கொண்டிருந்தது,சரி வீட்டிற்குப் போய் மற்ற வேலைகளில் ஈடுபட்டால் சரியாகிப்போகும் உடல் என்கிற தான நினைப்பில் போக்குவரத்து சிக்னலில் பச்சை விளக்கு எறியவும் ட்ராபிக்கில் காத்து நின்ற இவன் பாலம் திரும்பி வீட்டிற்கு வருகிறான்.

இரண்டு டீக்களும் ஒரு சர்பத்துமாக குடித்ததில் ஒத்துக் கொள்ளவில்லை வயிறு, சற்றே ஊத்தப்பட்டுத் தெரிகிறதான தோற்றமும் உணர்வும் தருகிறது.

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

சர்பத்தில் பிழிந்து விடப்படும் எலுமிச்சை
தேநீரில் இருக்கும் பாலைத் திரித்துவிடும் அல்லவா
தம +1

vimalanperali said...

வணக்கம் கரதை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
பால் கலவாத கடுந்தேநீரில்
எலுமிச்சை சாறு கலந்து குடிக்கும் போது
நல் மருந்தாகிப்போகிறதுதான்.
தவிர சர்பத் இங்கு குளிரையும் டீ
இங்கு வெயிலையும் குறிக்கிற மாதிரி
பொருள் பட பதியப்பட்டிருக்கிறது,
சீதோஷ்ண நிலைகள் பலதுக்கும்
ஆட்படுபவன்தானே மனிதன்/

துரை செல்வராஜூ said...

அதிலும் இதிலுமாக அலைக்கழிக்கப்படும் மனிதன்
எதையும் அறிந்து கொண்டானில்லை..

உட்புறம் விளங்க
உள்மனம் துலங்கும்!..

vimalanperali said...

வணக்கம் துரை செல்வராஜ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல விவரணம்...வெகு நாட்களாகிவிட்டது தங்கள் பதிவுகளை வாசித்து...மீண்டும் தொடர்கின்றோம்..