Showing posts with label சொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம். Show all posts
Showing posts with label சொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம். Show all posts

20 May 2017

பொங்கச்சோறு,,,,,,

தூக்கம் வந்து விடுகிறது அப்படிப்படுத்த போது கூட/கட்டம் போட்ட கைலியும், சரிந்து பருத்திருந்த தொந்தியின் மேல் போர்த்தியிருந்த ஊதாக் கலர் முண்டா பனியனுமாய் ஆரஞ்சு வர்ண வயரில் பின்னப் பட்ட கட்டிலில் வலதுபக்கமாய் ஒருக்களித்துப்படுத்திருந்த அவர் அந்தக்கடையின் சொந்தக்காரர் ஆகித் தெரி- -கிறார்.

முன்னால் தெரிந்த சாக்கடை அதன்இருப்பில் வீசிய துர்நாற்றம்,அதில் பறந்து திரிந்தகொசுக்கள், ஓடித்திரிந்த வண்டுகள்,தேங்கிநின்றநீர்,பக்கத்தில் இடமும், வலமுமாய் அடுக்கப்பட்டிருந்த கடைகளென இருந்ததையும் கணக்கில் கொள் -ளாத அவரது தூக்கம் வரம் வாய்க்கப்பெற்றதாய்/

நான்வந்து கொண்டிருந்தவேலை இரவு எட்டுமணியாய் இருக்கலாம். அல்லது அதைத்தாண்டிய அல்லது முந்தியஐந்து,பத்து நிமிடங்களுக்குள்ளாய் இருக்க லாம்.என்னஅதனால்இப்பொழுதுஎட்டுமணியாய்என்றுதானே சொன்னேன், எட்டு மணி என தீர்மானித்துச் சொல்லவில்லையே/

25வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நான் வேலைபார்க்கும்நிறுவனம் எனக்குத் தந்த பரிசுப்பொருள்.சின்னதும், பெரியதுமான முட்களுடன் வட்ட வடிவ டயலுக்குள்ளாய் நொடிமுள்ளையும் கைபிடித்து ஒருங்கிணைத்துக் கொண்டு இன்றுவரை நிற்காமல் மணிகாட்டிக்கொண்டிருக்கிற வாட்சாய்இது.

”அது கண் பிடித்துக்காட்டும் மணிக்கொண்டுதான் தீர்மானிக்கிறேன் என் நகர்வைஎப்போதுமே/அன்றுகடிகாரம்கட்டியிருக்கவில்லை.மறந்துபோனேனா அல்லது மிதமிஞ்சிப்போன சோம்பலா தெரியவில்லை.

மனைவிகூடச் சொல்கிறாள் என்ன முன்ன மாதிரி வாட்ச் கட்ட மாட்டேங்கிறீ ங்க? என/ அவளது சொல்லில் புதைந்திருந்த வாஸ்தவம் என்னை கவனப்படு த்திய போதும்கூட எதற்கு இது கையில் கசகசவென வியர்வை பிசுபிசுப்புடன்/ அதுதான் செல் போன்இருக்கிறதேஅதில்பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

இப்போதெல்லாம் செல்போன்களில் பேசுவதுடன்சேர்த்து மற்ற எல்லாம் செய்து கொள்ள முடிகிறது.(சமையல் செய்து சாப்பிடும் அளவு இன்னும் வசதி வரவில்லை.) என்ன அதில் உள்ள ஒரே அசௌகரியம் இருசக்கரவாகனத்தில் அல்லது சைக்கிளில்போகும்போது கையை திருப்பிமணி பார்த்துக் கொள்ள முடியவில்லை.சட்டைப்பையிலிருந்துசெல்லைஎடுத்து,,,,அடேயப்பா,,விடிந்து
தான் போகிறது,”

பாய் கடைக்கு மூன்று தடவைகளுக்கு மேலாய் ரிப்பேருக்குபோய் வந்து விட் டது.வாட்ச். பெரிதாக ஒன்றுமில்லை.பேட்டரி போட ,வாட்சின் வார் மாற்ற மற்றும் ஏதோ ஒன்றென நினைவு,,,,,,இதில் ஒரே ஒரு முறை மட்டுமாய் அவர் இல்லை என லட்சுமி நகரிலிருக்கிற ஒரு கடையில் கொடுதேன் வேலைக்கு, அவ்வளவுதிருப்தியில்லைஎன வைத்துக் கொள்ளுங்களேன். சொல்வார்கள் முடிவெட்டும் கடையும் டெயிலர் கடையையும் மாற்றக் கூடாது என/அந்த வகையில் வாட்ச் கடையையும் இப்பொழுது சேர்த்து விட்டார்கள் போலும். பாய் கடையில் இல்லாத ஒரு சௌகரியம் சேஷையா கடையிலும்,சேஷையா கடையில் இல்லாத ஒரு சௌகரியம் பாய் கடையிலுமாய் மாறி,மாறி புலப் பட்டுத்தெரிந்த பொழுதுகளில் ரிப்பேர்ப்பண்ணப்பட்ட வாட்சும் கையுமாய் திரிந்த தினங்களின் பதிவு இன்றுவரை தெரிவுபட்டுத் தெரிவதாக/

பாய் கடைக்குப்போனவுடன் கேட்டு விட்டார்,என்ன சார் ஆளே தட்டுப் படல என/நான் குடியிருக்கும் ஏரியாவில்தான் பாயின் வீடு.வாட்ச் கடைக் கார பாய்வீடுஎன்றால் மிகவும் பிரசித்தம்.இப்போது வீட்டை ஒட்டியே வாட்ச் கடை ஒன்று போட்டிருக்கிறார் சிறியதாய்.வீட்டின் பக்கவாட்டு ரூம் சும்மா கிடந்த தென அதற்கு முன் பக்கமாய் வாசல் வைத்து கண்ணாடி போட்ட மரக்கதவுட னாய் கடையை ஆரம்பித்து விட்டார் ஒரு சுப முகூர்த்த மற்றதினத்தன்று/ காலையில் கடைதிறந்து வைத்துஒருமணிநேரம்இருப்பார். அப்புறமாய் மாமி யை கடையில்அமரவைத்துவிட்டுசென்றுவிடுவார். பைபாஸ் ரோட்டிலிருக் கிற கடைக்கு/

25 வருடங்களுக்கு முன்பான ஸ்தாபிதமது. இப்பொழுது போல:யூஸ்அண்ட் துரோ:மனோ நிலை இல்லாதிருந்த காலமது. எதுவானாலும் சரி,கடைசிவரை ரிப்பேர் பார்த்து ஓட்டிவிட வேண்டும் எப்படியாவது என பெரும் பிரயத்த னங்கள் பட்ட நேரம்.அந்த பிரயத்தங்கள் எல்லாவற்றிலுமாய் மிகுந்து காணப் பட்ட பொழுதுகளில் வாட்ச் கடையும் அதில் ஒன்றாய் காட்சிப்பட்டு/

பாய்போனபின்பாய் கடையிலிருக்கிற மாமி வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு கடையையும் பாத்துக்கொள்வார்.மாமி ரிப்பேர் என வருகிறவற்றை வாங்கி வைத்துக்கொள்வார்.அவ்வளவே/பாய் இரவு அந்தக் கடையை முடித் து விட்டு வந்து வேலை பார்ப்பார்.ஆனால் அந்தக்கடை போல சௌகரியம் இதில் இருந்து காணப்பட்டதில்லை.

ஒரு முறை நண்பரது மகள் திருமணத்திற்கு பரிசளிக்க அங்குதான் வாட்ச் வாங்கினேன்.கடைநடை ஏறியதும் சொல்லி விட்டேன் பாயிடம்,இது பரிசளிப் புக்காகவென.அவரே இதற்குள் ”என்ன விலை இருந்தால் உங்களுக்கு சௌகரியப்படும், டிசைனை மட்டுமாய் முடிவு செய்யுங்கள் நீங்கள், விலை யை நான் பார்த்துக் கொள்கிறேன் என அவர் காண்பித்த வாட்சுகளில் ஒன்று தான் இன்றுவரை நண்பரின் மகளது கையை அலங்கரித்துக் கொண்டி ருப்பதாவும் அவளுக்கு பிடித்துப்போன ஒன்றாகவும்/அது வெறும் வாட்ச் மட்டும் இல்லை.அன்பும் வாஞ்சையும் அடைபட்டுத் தெரிகிற ஒரு காலக் கண்ணாடி என்கிறார் அவர்.

விளைகிறபிரியங்களில்செய்கிற விஷயங்கள் இதுபோலஉருபட்டுத் தெரிவது இயற்கைதானே என்கிறார் நண்பர்.

பாயைப்போலவே டீக்கடைகாரரும் உருப்பட்டுத்தெரிகிறார்.டீக்கடை இருந்த வரிசையிலேதான்பாயின் வீடும் இருந்தது.முத்தாரம்மன்கோயிலைத்தாண்டி/

முத்தாரம்மன்கோயில்பொங்கல் மூன்று நாட்களுக்கு நடக்கும்.பொங்கல் நடக்கிற மூன்று தினங்களுமாய் ஏரியா அல்லோகல்லப்பட்டுப் போகும், பந்தல் ,சீரியல் செட்,ரேடியோ, அலங்காரம், மேளம் சாமி அலங்காரம்,,,,,,,,,, என்பதைத்தாண்டி அந்ததெருவில் குடி கொண்டிருக்கிற வீடுகளில் தலைக் கட்டு வரி வாங்குவதில் விழா ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு முனைப்பு இருந்த துண்டு எப்பொழுதுமே/.

மனம் பூத்துத் திரிவார்கள் கோயிலுக்காய் வேலை செய்கிற இளவட்டங்கள். குறிப்பிடவர்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட கோயில் விழாவில் அந்தக் கோயிலைச் சுற்றி யிருக்கிறஐந்துதெருக்காரர்களின் மனதும், கையும் கலந்தி ருக்கும்,அவர்களதுவீட்டின்தலைக்கட்டுவரியும்அவர்கள்வீட்டுபெண்கள்பொங்
கலன்றும் மற்ற நாட்களிலுமாய் போடுகிற கோலம் கோயில் வாசலை அலங்கரிக்கும். இது போன்ற ஈவுகளேகோயில்விழாவின்போதுஏற்படுகிறச் சின்னச் சின்ன சச்சரவுகளைசரி பண்ணிக் கொண்டுபோகும்.

சின்ன தாய் ஒருபீடம்வைத்து தெருவோரமாய் கேட் போட்டுபூட்டப்படிருந்த கோயிலிருந்து சரியாக22ஆவதுநடைவாசலாக பாயின் வீடு. சுற்றிலும் தெரு வின் இருமருங்கிலுமாய் இருக்கிற வீட்டின் வாசல்களில் புள்ளி வைத்து சிரித்த கோலங்கள் கலர்க்கலராயும், வெள்ளையாயும் தென்பட்ட பொழுது களில்அவரதுவீட்டின்வாசல்மட்டும் வெறுமையாய்எந்தஅடையாளமும் சுமக் காமல்/

முதல் நாள் பொங்கல்,இரண்டாம் நாள் நாடகம் அல்லது ஆடலும், பாடலும், மூன்றாம் நாள் விளையாட்டு போட்டி என நடக்கும் பொங்கலில் பாயின் வீட்டில் மட்டும் தலைக்கட்டு வரிவாங்கமாட்டார்கள்.”அப்ப வாட்ச் கட பாயின் வீடு” என்கிற சொல்லுடனும் சிலரின் மனத்தயக்கத்துடனான பேச்சுக்களுட னுடனுமாய் பாயின் வீட்டுப்பக்கம் விழாக்கமிட்டியினர் வர தயங்கிய தினங் களின் நகர்வில் பாய் தானாகவே வந்து வரிதந்து விட்டுப் போனார். ”ஏங்கிட்ட பணம் கேக்க ஒங்களுக்கு என்ன தயக்கம், வரின்னு இல்லாட்டிக் கூட ஏங்பங்கு நன்கொடையா வச்சிக்கங்க,எங்க வீட்டுப் புள்ளைங்களும் நீங்க வைக்கிற பொங்கல விரும்பிச்சாப்புங்க,,,,என்கிற சொல்லு டன்வரி கொடுத்து விட்டு வந்த நாளன்று முத்தாரம்மன் கோயிலில் கிண்டப் பட்டபொங்கல் பாயின் வீட்டிற்குமாய்அனுப்பிவைக்கப்பட்டது.என்பதுஒவ்வொருவருடமும்பொங்கல் நடக்கிறதினத்தன்றுபேசப்படுகிற பேச்சாய் இன்று வரைஇருக்கிறது.

அன்று பொங்கலை பாயின் வீட்டிற்கு கொண்டுவந்து கொடுத்தவர் டீக் கடைக் காரையும்,வாங்கியவர் பாயின்மனைவியுமாய்இருந்தார்.

”எண்ணண்ணே இந்த வயசான காலத்துல இந்த நீர்க்கட்டுக்காலோட நீங்க அலையாட்டி என்ன?நீங்கஒக்காந்துக்கிட்டு இந்தா இந்த மாதிரி யெள வட்ட ங்களஅனுப்பிவைக்கவேண்டியதுதான?என்றாள்.சங்கடம்என்னம்மா, சங்கடம் என்னைக்குஅவ என்னய விட்டுப் போனாளோ அன்னையிலிருந்து ஆரம்பிச்ச சங்கடம் இப்பவரைக்கும் விட்ட பாடில்ல,அவ என்னைய ஒரு கொழந்தையப் போல பாத்துக்கிட்டா,இப்ப ஆண் ஒண்ணு,பொண் ஒண்ணுமா உள்ளூர்ல இருந் தப்பக் கூட பாக்கமாட்டேங்கிறாங்க.அவுங்க குடும்பம், அவுங்க பாடு ,புள்ள குட்டின்னு ஆயிப்போனபிறகு நான் இத்போயி எதிர் பாக்குறதும் தப்புத்தான். சரி அதனால என்ன இப்ப ஆணடவன் விட்ட வழிம்மா. சரி வர்ரேம்மா, அப்பிடியே இந்ததெரு முழுக்க எல்லா வீட்டுக்கும் குடுத்துட்டு வரும் போது ராத்திரி பத்து மணிக்கு மேல ஆயிடும். இன்னும் கோயில் பக்கத்துல ஒருத்தன் தண்ணியப் போட்டுட்டு சலம்பீட்டு இருக்கான்றாங்க, நாங்க வரும் போது ஆரம்பிச்ச வந்தான்,இன்னும் ஓஞ்சபாடில்ல, நான்போயி சொன்னாகேப்பான்,. மரியாதைக்காக இல்லாட்டிக் கூட நாளப் பின்னகடைக்கு டீக் குடிக்க வரணு மில்ல, அதுக்கு பயந்துட்டாவது கேட்டுக் குருவான். அதுக்காகத்தான் என்னை ய மாதிரி ஆள்களையும் வச்சிருக்காங்க. என்றார்/

அன்று அவர் சொன்ன சத்தியமான வார்த்தைகளை உள்பொதித்தவாறாய் தூக்கம் வந்து விடுகிறது அவருக்கு அப்படிப்படுத்தும் கூட/

23 Apr 2017

நூலறுந்து,,,,,,,,,,,



அரசு நூலகத்தின் கிராமத்துக்கிளையில்
பணிபுரிந்தவள்  அந்த நூலகத்திற்கு
வருகிற உறுப்பினர்களுக்கு
நாவல்கள் எடுத்துக்கொடுத்தாள்.
சிறுகதை நூல்கள் படிக்கக்கொடுத்தாள்.
கவிதை நூல்களையும் கட்டுரை நூல்களையும்
அறிமுகம் செய்து வைத்த அவள்    
வாழ்க்கை வரலாறு நூல்கள் கேட்கையில்
எடுத்துக்கொடுக்க சிறிதே தயக்கம் காட்டுகிறாள்.
நான்காம் வகுப்புப்படிக்கிற பெண்குழந்தையுடனும்,
இரண்டாம் வகுப்புப்படிக்கிற ஆண் மகவையுடனுமாய்
தன்னை நிராதரவாய் நடுவீதியில் நிர்கதியாய்
விட்டுவிட்டுச்சென்று விட்ட கணவனைஎண்ணியும்
குழந்தைகளின் எதிர்கால வாழ்வை நினைத்துமாய்
அன்றாடங்களில் கவலை சுமந்து கொண்டிருக்கிறஅவள்
தன் வாழ்க்கை வரலாறை நினைத்து
பிறரது வாழ்க்கை வரலாறு நூல்களை
எடுத்துத்தரவும் பரிந்துரைக்கவுமாய் தயங்குகிறாள்.

16 Jan 2017

சொவரொட்டி,,,,,,,/

ஆள்க நிக்குறாங்க சீக்கிரம் போயி குட்டிகளப்புடிச்சிட்டு வாங்க, என்கிற பேச் சைஎதிர்கொண்டவனாய்த்தான் கறிக்கடை முன் போய் நிற்கிறான், சொன்னது கடைக்காரர் பாண்டியன்,கேட்டது இவனாய் ஆகிப்போகிறான்,

பாண்டியன் மிகவும் அப்பாவியான தோற்றம் கொண்ட மனிதர்,பழகுவதற்கு இனிமையானவர்,அன்பு காட்டி நிற்கக்கூடியவர்,என்ன பாண்டியண்ணே,எப்படி இருக்கீங்கஎன்றால்நல்லாயிருக்கேன் சார் என தவறாமல் சிரிக்கிறவர், இவன் வேலை பார்க்கிற நிறுவனத்திற்கு வேலையாய் வருகிற போது ஏற்பட்ட பழக்கம்,இப்போது கொஞ்சம் கிளை விட்டு நிற்கிறது.

பொதுவாகவே இவன் பேச்சில் யாரிடமும் ஒட்டிக் கொள்வது போல அல்லது ஒட்ட வைத்துக்கொள்வது போல ஒரு பழக்கம் இருந்தது,அது தானாக கை வரப்பெற்றதா இல்லை பழக்கத்தில் வந்ததா தெரியவில்லை.அது போலவே பாண்டியண்ணனும்,பேச்சின்ஒட்டுதலில்பழக்கத்தின்நெசவில்என்ன பாண்டிய ண்ணே கடை யேவாரமெல்லாம் எப்பிடியிருக்கு என்பது தாண்டி கேட்டதில் லை. அவரும் அது தாண்டி சொன்னதில்லை.நல்லாயிருக்கீங்களா என்பதற்கு அடுத்தபடியானசொல் அம்பு அல்லது அல்லது பேச்சரவணைப்பு என்று சொல் லலாம்.

ஒரு வெயில் நாள் பொழுதின் முன் மதிய நேரமாக அலுவலகத்திற்கு வந்தி ருந்தபாண்டியண்ணனை நீண்ட நேரமாக கவனிக்கவில்லை இவனும்.என்ன வேலையாக வந்தாரோ,எப்பொழுது வந்தாரோ,வந்த வேலையை யாரிடமும் சொன்னாரோ என்னவோ தெரியவில்லை.நல்ல பசி வேளை வேறு,என்ன ஏது என்று கேட்டான்,

சார் ஒரு நகைய திருப்பி அது கூட சேத்து கையில உள்ள பொருளைக் காண்பித்து இதையும் சேத்து வைக்க வந்தேன்,ஒங்களப்பாத்தேன் ஆளக் காங்கல,சரி ஏதாவது வேலையா இருப்பீங்கன்னு நெனைச்சிக்கிட்டேன் என்று சொன்னவர் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தார்,என்ன ஏது என்று கேட்காமலேயே அது ஒண்ணும் இல்ல சார்,என்னதான் பழகுனாலும் வச்சா லும் சொந்தம்ன்னாலும் கூட தனக்குன்னு வரும்போது காலடியில போட்டு மிதிச்சி காலி பண்ற மனநிலை வந்துரும்.போல இருக்கு சார்.

ஒண்ணும் இல்ல சார்,சொந்தக்காரப்பைய ஒருத்தன் பொண்டாட்டி வழியா சொந்தம்,உருப்படியில்லாம திரிஞ்சான்.நல்லா படிச்ச பையந்தான்,+2 முடிச்சி காலேஜ்லகாலடிஎடுத்துஒருவருஷம் ஒழுங்காத்தான் படிச்சான்.மறு வருஷம் சேர்வார் சேர்க்கையில கெட்டு சீரழிஞ்சி தூர்ந்து போனான்.நல்லா நீட்டா திரிஞ்சிக்கிட்டிருந்தவன் நடவடிக்கையில தீடீர்ன்னு ஏற்பட்ட மாறுதலு எங்களுக்கு சந்தேகத்த உண்டு பண்ணீருச்சி,

போட்டுருக்குற சட்டை கசங்காம பாத்துக்கிறவன் பேண்டு கலருக்கு ஏத்தா ப் புல சட்டை போட்டுக்கிறவன் திடீர்ன்னு ஷேவிங்க் பண்ணாம போட்டுருக்குற துணி மணிமேல அக்கறை இல்லாம திரிஞ்சத என்ன ஏதுன்னு போயிப்பாத்து அவதானிக்கிறதுக்குள்ள பையன் ரொம்பவே தூர்ந்து போயிருந்தான் தூர்ந்து/

சரி என்ன செய்யலாம் அடுத்துங்குறதுக்குள்ள பையன் ரொம்ப தூரம் போயிட் டான்,கொஞ்சவயசுவேறயா,காலேஜ்ல,ஒயின்ஷாப்புல,போறவாறயெடத்துல,,,,,,  இவ்வளவு எதுக்கு முடிவெட்டுற கடையில ,கூட சண்டை,ஒரு தடவ இவன் சொல்லாம மீசைய எடுத்துட்டான்னுசொல்லிகடைநடை வாசல்ல இருந்த கண்ணாடிய ஒடைச்சிப் போட்டான்.கடைக்காரரு வந்து ஒரே புகாரு ஒங்க மொகத்துக்குத் தான் பாக்குறேன்,இல்லைன்னா அன்னைக்கே ஆள உண்டு இல்லைன்னு பண்ணீருப்பேன் என்றார்,

என்ன செய்ய பின்ன,,,,,,,,நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டுட்டு ஒடைஞ்சி போன கண்ணாடிக்குரிய பணத்தக்குடுத்துட்டு ரெண்டு பேருமா போயி அப்பிடியே கடையில சாப்புட்டு வந்தோம்.

இது போலதான் அவன் நஷ்டம் ஏற்படுத்துன யெடத்துலயெல்லாம் போயி பணத்தாலயும் பழக்க வழக்கத்தாலயும் சரிக்கட்டி சொல்லி நெரப்பீட்டு வந்தேன்.

சரி இவன இப்பிடியேவிட்டாலாயக்குப்படாதுன்னு அமுக்கிப்பிடிச்சி ஒக்கார வச்சி யேவாரத்தப்பழகிக்கடா ஏதோகடவுள்புண்ணியத்துல நான் சம்பாரிச்சி வச்சிருக்குற ஆள்க ஒனக்கும் அறிமுகம் ஆயிக்கிருவாங்கடா,நீயும் ஒரு ஆளாயிருவடான்னு சொன்னதுக்கெல்லாம் சரி சரின்னு தலையாட்டிக்கிட்டு திடீர்ன்னு ஒரு நா விடியல்ல வந்து ஓங்கடைக்குப்பக்கத்துலயே யெடம் பாத்து எனக்கு தனியா கடை வச்சிக்குடு நான் யாரு கிட்டயும் கைநீட்டி வேலபாக்கப்பொறந்தவன் கெடையாது,நான் நல்லாயிருக்கணூன்னு நெனைச் சிங்கின்னா எனக்கு இன்னும் ஒரு வாரத்துல கடை வச்சி குடுங்க,,,,,,,,சொல் லீட்டு அப்பிடி யே வாசல்லயே சரிஞ்சி விழுந்துட்டான்.

அந்நேரம் அந்த கருமத்தப் எங்க போயி குடிச்சான்னு தெரியல,வந்திருந்தான் தலை நெறைஞ்ச போதை யோட/

நாங்கல்லாம்இப்பஎன்னகுடியாமயாஇருக்கோம்.ஏதோவிருந்துக்கும் மருந்துக் குன்னா பரவாயில்ல,நெதம் விடிஞ்தெஞ்சிரிச்சி இதே வேலையா திரிஞ்சா எப்பிடி,,,,,,?சொல்லிப்பாத்தோம்கேக்கல,என்னசெய்ய,அவனுக்கு தனியா கடை வச்சிக்குடுப்போம்ன்னு முடிவாகிப்போச்சி,அதுக்குத்தான் இந்தா இந்த நகைய வைக்க வந்துருக்கேன்.

நாங்க நெனைச்சது வேற நடந்தது வேற அவன கொஞ்ச நா கைக்குள்ள வைச்சிக்கிட்டே அவனுக்கும் தொழில்ன்னா என்னான்னுதெரிஞ்ச பொறகு தனியாகடை போட்டு குடுக்கலாம்ன்னு முடிவு பண்ணுனம்.இப்ப அது அப்பிடி யே மாறி தலை கீழா வந்து நிக்குது. அவனுக்குன்னு இப்ப தனியா கடை வச்சி ஒண்ணும்ஆகப்போறதில்ல.அத அவன் ஒழுங்கா நடத்தபோறதுமில்ல, நல்லா தெரியுது,தெரிஞ்சே குழிக்குள குதிச்ச கதையா ஆகிப்போச்சி, என்றார்.

அவரை சாமாதனம் சொல்லி அனுப்பி வைத்து விட்டு சாப்பிடுவதற்குள் பசி ஆறிப்போனது.அல்லது மறந்து போனது. இதுதான் பாண்டியனைப்பற்றிய இவனது எண்ணம் அல்லது இவனில் அவர் உருக்கொண்டிருந்த விதம்.

அவரது கடைக்குப்போகிற போதெல்லாம் அல்லது அவரை பார்க்கிற கண தோறுமாய் இந்நினைவுகள் இவனில்முளைவிடாமல் இல்லை,இவனில் இப்ப டியெல்லாம் உருக்கொண்டிருந்த பாண்டியண்ணனிடம் இவன்எப்படி உருக் கொண்டிருக்கிறான் என அவரிடம் கேட்டால்தான் தெரியும்.
அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து கடைக்கு வரவேண்டும் என நினைத்திருந்தான்.முடியவில்லை,

தீபாவளியன்று நான்குமணிக்கெல்லாம் கறி எடுக்கப்போயிருந்தான்,இவன் வீட்டிலிருந்து கிளம்பி கறிக்கடைக்கு செல்கிற வரை பகல் போலத்தான் இருந்தது.

தெருவிலிருக்கிற டீக்கடைகள் நைட் டிபன் சென்டர் எல்லாமும் திறந்திருந் தது.அது மட்டும் இல்லை.ஒன்றிரண்டு பலசரக்குக்கடைகள் கூட திறந்திரு ந்தது,

அப்படித்திறந்திருந்த எல்லாக்கடைகளின் முன்பும் அதை ஒட்டியும் கம்புகள் ஊணி ட்யூப் லைட்கள் எரிந்தது.அப்படி எரிந்த ட்யூப் லைட்டுக்களில் சுற்றிப் பறந்த கொசுக்களும் ஈக்களும் கறிக்கடை முன்பாய் பறந்து கொண்டிருந்தன.

அதைக்கடந்து போய்க்கொண்டிருந்த பொழுது டீக்கடையில் நின்று கொண்டி ருந்த நண்பர் ஒருவர் நேத்து நைட்டு 9.30 மணிக்கெல்லாம் கறி எடுத்தாச்சி, கோழிதான் எடுத்தேன்,வீட்டிக்காரிக்கு கோழிக்கறிவைக்கிறதுன்னா கொஞ்சம் நல்லா வரும்.ஒன்பது மணிக்கெல்லாம் இங்க கறி போட ஆரம்பிச்சிட்டாங்க ,சரி எடுத்து வச்சிருவம் காலகாலத்துல, காலையில வெள்ளன எந்திரிக்க முடியுமா என்னன்னு தெரியல,அதான்நேத்தேஎடுத்து வச்சிட்டேன்,அந்நேரமே வாய் நிக்க மாட்டாம கொஞ்சம் கொழம்பு வச்சி தோசைக்கு தொட்டுக்கிட்டு சாப்புட்டாச்சி,அதான் இன்னைக்கி காணுமோ காணாதோன்னு ஒரு அரைக் கிலோ எடுத்துட்டுப்போவன்னு வந்தேன்.

பெரியமகன்வர்ரேன்னுசொல்லீருக்கான்,தஞ்சாவூர்லபேங்குலவேலைபாக்குறான். பஸ்டாண்டுல வந்து யெறங்குன ஒடனே போன் பண்றேன்னு சொல்லீரு க்கான்,அதான் ரெடியா வந்து நிக்குறேன்.இந்தா டீ சாப்புட்டு வரணும் நீங்க வாங்குற கடையிலதான் நானும் வாங்குவேன்.இந்தா கால் மணி இல்ல அரை மணிநேரத்துலபண்ணீருவான்.கடையில போயி கறிக்குச்சொல்லீட்டு அவனப் போயி கூட்டீட்டு வரணும் என சொல்லிவிட்டுக் கிளம்பினார்.அவர் சென்ற பிறகு அவர் பேசி விட்டுச்சென்ற பேச்சின் நூற்பு இவனை ஆட்க் கொண்ட தாக,,/

பையன் தஞ்சாவூர்ல வேலை பாக்குறான்.வாரத்துக்கு ஒரு தடவை இல்ல ரெண்டு வாரத்துக்கு ஒருதடவை வருவான்.அவன் குடும்பம் இங்க இருக்கு ,எங்க தெருவுக்கு அடுத்ததெருவுலதான் இருக்கு.ரெண்டு பசங்க இருக்காங்க, பெரியவன் எட்டாவது படிக்கிறான்,சின்னவன் நாலாவது படிக்கிறான்.மகன் தஞ்சாவூர்லயிருந்துராத்திரி பதினோரு மணிக்கு வருவான். மறுநாஞாயித்துக் கெழம நடு ராத்திரி ரெண்டு ரெண்டரை மணிக்கு வீட்ட விட்டு கெளம்பீருவா ன்.

குடும்பத்த கூட்டிக்கொண்டு போய் அங்க வச்சிக்கடான்னு சொன்னாலும் மாட்டேங்குறான்,இன்னும் கொஞ்ச நாளையில ட்ரான்ஸ்பர் ஆகி வந்துருவே ன்னு சொல்றான்.சரின்னு விட்டாச்சு,அதுக்கு மேல பெரிசா நானும் ஒன்னும் சொல்றதில்ல.என்றவர் ஏங் பையனும் கறிக்கடை பாண்டி சொந்தக்காரரும் ஒண்ணா[ப்படிச்சவுங்கதான்.இவன்இப்பிடிபோயிட்டான்,அவன்அப்பிடிஆகிட்டான், சரிஅவனவன் நேரக்கூறுன்னு போக வேண்டியதுதான்,எனச்சொன்ன அவர் ஏங் மகன் ஊருக்கு வர்ற போதெல்லாம் பாண்டி சொந்தக்காரன் கையில தான் கறி வாங்குறான் என்றார்.

நேற்றுஇரவு தூங்குவதற்கு 12.30 ஒருமணிஆகிப்போனது,பின்மூன்று மணிக்கு வந்து விட்ட விழிப்பை தள்ளிப்போட்டு விட்டு தன்னையறியாமல் தூங்கும் போது மணி எத்தனை இருக்கும் எனத் தெரியவில்லை. அசந்து விட்டான், எழுந்திருக்கும்போதுமணிஆறுஆகியிருந்தது, இந்நேரம்போனால் கடையில் கூட்டம் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை.

மனைவிகூடச்சொன்னாள்.நீங்கதான நாலு மணிக்கெல்லாம்எந்திரிச்சி கடைக் குப் போற ஆளா என,,,,,,,,/

சரி போகலாம் என்ன இப்பொழுது அதற்கு என்ன கொஞ்சம் அசந்து விட் டேன்,சரிவிடுஎன்றவாறு முகத்தை கழுவி விட்டு வந்து சட்டையை போட்டுக் கொண்டு கிளம்பினான்,

வீட்டில் சற்றே மங்கலாக எரிந்து கொண்டிருந்த ட்யூப் லைட்,திறந்திருந்த ஜன்னல் வழியே வந்த தெரு விளக்கு வெளிச்சம் வீட்டிற்குள் பாரபட்சமில் லாமல் பறந்து திரிந்த கொசுக்கள் காறி படம் போட்டு சுவரில் சிரித்துக் கொ ண்டிருந்ததினசரிகாலண்டர்,அமைதியாய்ப்இருந்தகிச்சன்,பெட்ரூமில்தூங்கிக் கொண்டிருந்த இரண்டாவது மகள்.ஷோக்கேஸ் அருகில் வைக்கப் பட்டிருந்த ஊதுவத்திஸ்டாண்ட்டீவி கொடியில் தொங்கிக்கொண்டிருந்த துணிகள்,,,,,, என எல்லாவற்றையும் பார்த்தவனாய் கிளம்புகிறான்,

என்ன என்னமோ இப்பத்தான் வீட்டை புதுசா பாக்குற மாதிரி பாக்குறீங்க, என்றவாறு காசை கொடுத்தனுப்பிய மனைவியின் அருகாமை என்கிற கூட்டி சைவில் கிளம்புகிறான்.

இவன்எதிர்பார்த்துப்போனஅளவிற்கெல்லாம்கூட்டம் இல்லை கடையில், இவன் நினைத்திருந்தான் எப்படியும் தீபாவளி அன்று இருந்ததைப்போல இருக்கும் என,,/

தீபாவளிக்கு முதல் நாள் இரவே மெயின் ரோட்டில் நெடுக ட்யூப் லைட் கட்டி கடையைதிறந்து விட்டிருந்தார்கள்,முதல் நாள் இரவு பத்து பதினோரு மணிக் கெல்லாம் ஆடு உரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இவன் பாண்டியனை இரண்டு நாட்களுக்கு பஜாரில் வைத்துப்பார்த்த பொழுது சொல்லி வைத்திருந்தான்.நாளைக்கு கறிஎடுக்க வருவேன் கொஞ்சம் பார்த்துப் போட்டு விடுங்கள் என,,,/

கறிக்கடைக்காரர்தெளிவாகசொல்லிவிட்டார்,அண்ணேவாங்கண்ணேநாளைக்கு நீங்க வர்ற நேரம் என்ன இருக்கோ அதுதான் ,நாளைக்கு திருநா கூட்டமா இருக்கும் கடையில ,நாங்க எத ஞாபகம் வச்சிட்டு யாருக்குன்னு போடுறது சொல்லுங்க,இப்ப நீங்க சொன்னது பூரா அப்பிடியே மறந்து போகும்,நாளைக்கு வாங்க நீங்க என்ன முடியுமோ ,முடிஞ்ச அளவுக்கு நல்லதா போட்டுத் தர்றோம் என்றார்.

அவரதுபேச்சைக்கேட்டுக்கொள்ளலாம்.நம்பிஏற்றுக்கொள்ளலாம்,ஆனால்,,,,,,,,,,,,,,

இதற்கு ஆத்தமாட்டாமல்தான் பேசாமல் கோழிக்கறி எடுத்து விட்டுவிட்டுப் போய் விடுகிறார்கள்.

அங்கும் கூட்டமான கூட்டம் இல்லை.

இவன் வீட்டிலிருந்து வருகிற வழி தோறும் கிட்டத்தட்ட பத்துக்கடைகள் வரை முளைத்திருந்தது.அங்கெல்லாம் கறி எப்படிஇருக்கும் எனத்தெரியவில்லை.

ஆனால் அங்கெல்லாம் வாங்காமல் எப்பொழுதும் வாடிக்கையாய் வாங்குற கடையில் போய் நின்றான்,கூட்டம் அவ்வளவாக இல்லாத போதும் கூட ஒரு மணி நேரம் வரை காத்து நிற்க வேண்டியிருந்தது. 

இந்த ஒரு மணி நேர இடைவெளியில் டீ சாப்பிட்டுவிட்டு வந்து விடலாம். எனத் திரும்பிப்பார்த்த பொழுது தூரங்களில்தான் கடை தெரிந்தது.

சரி வேண்டாம் இப்போதைக்கு வேண்டாம் டீ,கறி எடுத்துகொண்டு போய் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்கிற முடிவில் கடைவிட்டு நகராமல் நிற்கிறான்.

அப்பொழுதான் வயதான அம்மா ஒருவர் கால் கிலோ கறி வேண்டி நின்று கொண்டிருந்தார்,கடைக்காரர் சப்தம் போட்டுக்கொண்டிருந்தார்,இந்தக் கூட்ட த்துல வந்து கால்கிலோ கறி வேணும்ண்ணா எங்க போக சொல்லுங்க, ஒரு கிலோரெண்டுகிலோகேக்குறவுங்களுக்கேபோட்டுக்குடுக்க முடியல. இதுல,,,,,,

நேற்றைக்கு முன் தினம் பொங்கலுக்கு சாமான் வாங்க பஜார் சென்றிருந்த பொழுதுஇவனதுநண்பர்கனகராஜனைப் பார்த்தான்,காய்கறியெல்லாம் வாங்கி விட்டான்,மிச்ச சாமான்கள் வாங்க வேண்டும்,பை காணவில்லை, இன்னும் கண்ணுப்பூழைச்செடி,பனங்கெழங்கு மற்றமற்றதெல்லாம் வாங்க வேண்டும், அதற்காக பை ஒன்று வாங்க வேண்டும் இப்போதைக்கு என்கிற முடிவுடன் பஜாரில் சென்று வாங்கிய காய்கறியை வைத்து விட்டு பை விற்கிற கடை யை நோக்கி சென்று கொண்டிருக்கும் போதுதான் நண்பர் கனகராஜன் எதிர்ப் பட் டார், 

பேசிக்கொண்டிருந்தார்கள்,சிறிதுநேரம்,பொங்கல்,அதற்காகவாங்கியசாமான்கள் அதன் விலை வளர்ந்து நிற்கிற பிள்ளைகளின் படிப்பு,,,,இத்தியாதி இத்தியாதி எனப்பேசிக்கொண்டிருக்கையில்தான்மிகவும் குறை பட்டுக்கொண்டார் நண்பர் கனகராஜன்,

மொதப்பையனுக்குகல்யாணம்முடிஞ்சாச்சி,இன்னும்ஒரு பையன் இருக்கான், அவனுக்கு இன்னும் ஒரு வேலை அமையல, அமைஞ் சிருச்சின்னா அவனுக் கொரு கல்யாணத்தப் பண்ணி வச்சிட்டு நிம்மதியா ரிட் டையர் ஆயிறலாம். என்றவனிடம் இவன் சொன்னான்,விடுங்க ராஜீ, நீங்களாவாது ஒரு பையனு க்கு கல்யாணத்த முடிச்சிட்டீங்க,பேரன்பேத்தி எடுத்துட்டீங்க,,,, என்னையச் சொல்லுங்கஇனிமேதான்இங்கஎல்லாம்,,,,,,கிட்டத்தட்டஒங்க வயசுதான் எனக் கும்,,,,, என்கிற பேச்சினூடாக சரி பொங்கலுக்கு கறி எங்க சொல்லீருக்குறீங்க ,நான் என்னோட சொந்த கிராமத்துலயே சொல்லீட்டேன் என்றார், 

இவன்நான்உள்ளூரில்தான்சொல்லியிருக்கிறேன்,வேறெங்கும்போய்எடுக்கும் முடிவு இல்லை இப்போதைக்கு என்றான்,சரிதான் அந்த முடிவு என்றவனாய் கிளம்பிவந்துவிட்டான்,பஜாரிலிருந்தும் கனகராஜனின் பேச்சிடை கட்டுமான த்திலிருந்தும்/

கனராஜன் கிளம்பிப்போகும் ப,மாஞ்சாது பார்த்தான் அவரை,அவர் சரக்கு வாங்கிய பையிலிருந்து நீட்டிக்கொண்டிருந்த கண்ணுப் பூழைச்செடிகளின் காய்ந்த பூக்களும்,மஞ்சள் கிழங்குச்செடியின் இலையும் மஞ்சள் கிழங்கும் கண் சிமிட்டி சிரித்தன,

அது ஏனோ இப்பொழுது ஞாபகம் வர வாங்கிய கறிக்கு ரூபாயை கொடுத்து விட்டுக் கிளம்புகிறான்.

3 Jan 2017

பேப்பர் மடக்கு,,,,,,,,

மடக்கப்பட்டிருந்த காகித்ததின் நீள அகலம் எவ்வளவு எனத்தெரியவில்லை. அதன்மடக்குகள்எத்தனைஇருக்கும் என பிரித்துப்பார்க்கவும் தோணவில்லை,

என்ன பேப்பர் இது ,எப்படி இங்குவந்தது.அதை ஏன் அங்கு கொண்டு போய் வைத்ர்திருக்கிறார்கள் ,வைத்தது யார் தெரிய வேண்டும் முதலில்,அதை மடக்கி ஏன் வைக்க வேண்டும்,மடக்கலின் மத்தியம் வைத்த பேப்பர் ஏதோ டிசைன் கொண்டு உருவாகப்பட்டது போல் இருந்தது,

இது போலான வேலைகளை சின்னவள்தான் செய்வாள்,எதோ ஒரிகாமி என்கிறார்கள்,பேப்பரிலேயே செய்யும் பொம்மையை அப்படிச்சொல்கிறார்கள்.

மேலும் மேலை நாடுகளில் அது ஒரு கலையாகவே அளார்ந்து வருகிறது எனச்சொன்னார்நண்பர்ஒருவர்,இவனும்அவ்வப்பொழுதுநீயூஸ்பேப்பர் பார்க்கை யிலும் பார்த்திருக்கிறான்,

பேப்பரில்கலைஞாயிறு அல்லது ஓவியம் சம்பந்தமான பகுதியில் இவன் கண் டதுண்டு,

அந்நேரம் அது போலாய் செய்து பார்க்க ஆசைப்பட்டு மனம் துடித்ததுண்டு. அது அந்நேரமே அவ்வளவுதான்,விட்டு விட்டு மற்ற வேலைகளைப் பார்க்கப் போய் விடுவான்.

அலுவலகம்வீடு,பிரச்சனை,இத்தியாதி,இத்தியாதிஎனமூழ்கிவிடுகிற அன்றாட நகர்வுகளில் மாட்டிக்கொள்கிறவனாய் ஆகிப்போனபின்பு,,,,,நியூஸ் பேப்பர் அதில் பார்த்த,படித்த கட்டுரை ஓரிகாமி,பேப்பரில் கலைவண்ணம் என்கிற இத்தியாதி,இத்தியாதிகளெல்லாம் மறந்து போகும்,

முதலில் யார் வைத்திருப்பார்கள் இந்தப்பேப்பரை எனகேட்டுவிடுவது சாலச் சிறந்ததுஎன்கிற நோக்கில் மனைவியிடம் கேட்கிறான்,மூத்த மகனிடம் கேட்கி றான், இளைய மகளிடம் கேட்கிறான்,அனைவருமே ஒன்று சொன்னது போல் இல்லை என்கிறார்கள்.

அதோடுநிறுத்திக்கொண்டால் பரவாயில்லை,நீங்கள்தான் ஏதாவது பேப்பரைக் கொண்டு வந்து வைக்கிறீர்கள்,அதில் போன் நம்பர் குறித்துக்கொண்டு வருகி றீர்கள்,அல்லது ஏதாவது முகவரியை எழுதி வைத்திருக்கிறீர்கள், இல்லையா னால்ஏதாவதுஅலுவலகக்குறிப்புஎன குறித்து வைத்துக்கொண்டு வருகிறீர்கள், அது என்னமோ ஏதோ அதன் முக்கியத்துவம் என்னவோ என நாங்களும் எடுப்பதில்லை அதை/

அது போலான பேப்பர்கள் சேர்ந்து சேர்ந்து சேர்ந்து,,,,,,ஒரு வழியாய் இப்படி குப்பை போல் ஆகிப்போகிறதுதான் இந்த இடத்தில்,ஆகவே அதை முதலி அப்புறப்படுத்தப்பாருங்கள் என இந்த நேரத்தில் வலுவானதொரு கோரிக்கை வைக்கிறோம் தங்களிடத்தில்.

நீங்கள் மட்டும் யூனியன்,நிர்வாகம்,பேச்சுவார்த்தை என்கிற அடிப்படிடையில் கோரிக்கை கோரிக்கையாய் வைத்து போராடும் போது அப்படி கோரிக்கை வைக்கும் தங்களிடம் நாங்கள் ஒரு கோரிக்கை வைக்கக்கூடாதா,,,,,,?என்கி றதில் ஒன்று சேர்ந்து கொண்ட அனைவருடன் பேச்சுக்கு செவி மடுத்து தூங்கிவிட்டு மறு நாள் ஓட்டத்தில் கலந்த போது எல்லாம் மறந்து போக இப்பொழுது,,,,,,

ஏறிட்டுப்பார்க்கிற அளவு உயரம் கொண்ட ஷெல்பில் மூன்றாவது அடுக்கில் செல் போன் வைக்கிற ஸ்டேண்ட் அருகே இருந்தது,பேப்பர்.

ஸ்டேண்ட் எல்லாம் ஒரே தூசி,முன்பு கீ பேட் போன் புழக்கத்தில் இருந்த காலத்தில்வாங்கியஸ்டேண்ட்,மரமும்இல்லை.பிளாஸ்ட்டிக்கும்இல்லை, இரண் டும்கலந்ததுமாயும்அதுஅல்லாததாயும்இருந்தது,ரெண்டு கெட்டானாய், ஆனால் பார்க்க அழகாவே இருந்தது ,

ரெண்டு கெட்டான்கள் பார்ப்பதற்கும்,உபயோகிப்பதற்கும் அழகற்றுத் தான் இருக்க வேண்டுமா என்ன,,,?

அந்தபோன்கள் உபயோகத்தில் இருந்த போது வாங்கினான்,இரண்டு செல் போன்களுக்கு இரண்டு ஸ்டேண்ட்கள்/

,டச் போன் வந்து விட்ட இப்பொழுது அது வெறும் ஞாபகார்த்தப் பொருளாய் மட்டுமே வீட்டில்/

ஞாபகார்த்தப்பொருள் சரி,அதன்மீது படிந்துள்ள தூசி என அதைப்பார்க்கிற போதெல்லாம் அவன் மனது அவனைக் கேட்டு செல்லாமல் இல்லை.

செல் போன் ஸ்டேண்ட் அருகில் இருக்கிற பேப்பரை எடுத்து பார்க்கவும் இல் லை, அதன் அகல நீளம் எவ்வளவு எனத்தெரியவும் இல்லை.அதில் இருக்கிற மடிப்புகள் உத்தேசமாக எவ்வளவு இருக்கும் என்பதை இவன் ஊகித்துக் கொள்ள கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள் என கேட்க வேண்டும்.

மிகச்சரியாக நாற்சதுரம் கொண்ட பேப்பரை அல்லது அது அல்லாமல் ஏதோ முனை செவ்வகமாக,நீளமாக இருக்கிற பேப்பரை கையில் எடுத்துவிட்டால் போதும்,அல்லது கீழே கிடப்பதை பார்த்து விட்டால் போதும், அதை எடுத்து சாதா கப்பலிலிருந்து கத்திக்கப்பல் வரை எல்லாம் செய்த காலமெல்லாம் உண்டு,

அதுவும் பறக்கும் கப்பல் செய்வது என்றால் ரொம்ப இஷ்டம், சாதாகப்பலுக்கு நாற்சதுரமான பேப்பரில் நான்கு மடிப்புகள் போதுமானது,கத்திக்கப்பலும் அப்ப டியே,ஆனால்பறக்கும்கப்பலுக்கென்றால் மடிப்புகளும் முனைகளும் கொஞ்சம் கூடும்.

அதனால் என்ன,கூடிவிட்டால் கூடி விட்டுப்போகிறது, பேப்பரை எடுத்து மடித்து கப்பல் செய்கிற மெனக்கெடல்தானே இங்கு முக்கியம்.இவனுக்குத் தெரிந்த அரசின் உயர் அதிகாரி ஒருவர் இப்படித்தான் கண்ணில் காண விடமாட்டார் பேப்பரை.எடுத்து மடித்து ஏதாவது உருவம் செய்து விடுவார்.

முக்கியமாக அவரிடம் ஏதாவது பேசிக்கொண்டிருக்கும் போது கூட அப்படித் தான் ஆகிப்போவதை கண்டுவிடுவான் கண்கூடாக,அவரும் அதை மறைத்து வைத்தெல்லாம் செய்ய மாட்டார்.

டக்,டக்,டக்,,,,,,,,,கையும் கண்ணும் மனதும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய கூட்டுருவாய் மடமடவென செய்த ஏதோ ஒரு உருவம் அவரை திருப்பதியி ஆழ்த்திய திருப்தியோடு இவன் உட்பட எல்லோரும் பேசிக்கொண்டிருக்கீற மேஜை மீது வைப்பார்,

அவர் அது போலாய் உருவம் செய்து வைத்த கணத்தில் மறந்து போகும், பேசுகிற பேசப்போகிற பேசி விட்ட எல்லாமும்,,,/

அது போலான தருணங்களில் அவரை வியந்து பார்ப்பதுண்டுதான் இவன், இவரிடம் குடிகொண்டிருக்கும் குழந்தைத்தனத்தை,,,/

அது போலான குழந்தைத்தனம் கொண்டு யாரேனும் பேப்பரை மடித்து ஏதா வதுஒரு உருவம் செய்ய முயற்சித்திருக்கக்கூடும்,யாராக இருக்கக்கூடும் அது என்கிற நோக்கில் மனம் நிரம்பிய கேள்வியுடன் பேப்பரை கையிலெடுத்து பிரித்துப்பார்த்துக்கொண்டிருக்கும் போதுதான் அருகில் வந்து சொல்கிறாள் இளைய மகள்.

அப்பா நீங்கதானே முந்தா நேத்து இந்த பேப்பர வச்சி என்னவோ உருவம் செஞ்சிக்கிட்டு இருந்தீங்க,,,,,/

மடக்கப்பட்டிருந்த பேப்பரின் நீள அகலத்தையும் அதன் மடக்குகளையும் பிரித்துப்பார்த்த திருப்தியில் இப்பொழுது இவன்/

10 Apr 2016

இரண்டு டீயும் ஒரு சர்பத்துமாய்,,,,,/

இரண்டு டீக்களும் ஒரு சர்பத்துமாக குடித்ததில் ஒத்துக் கொள்ளவில்லை வயிறு, சற்றே ஊத்தப்பட்டுத் தெரிகிறதான தோற்றமும் உணர்வும் தருகிறது.

உண்மை என்னவென தெரியவில்லை,தோற்றமே முக்கியப்பட்டுத்தெரிவ தாயும் உருவகப்பட்டு நிற்பதாயும் இங்கு பிரதானமாய் என்கிறார் இவன் பதிவாய் வைத்தியம்பார்க்கும்ஹோமியோபதி மருத்துவர்/

அவரிடம் மருத்துவத்திற்காய் போகும் சமயங்களில் கொஞ்சம் கவனம் கட்டிக் கொண்டு போக வேண்டியிருக்கிறது.”ஏன் மாமா திடீர்ன்னு பொய் எல்லாம் சொல்றீங்க,ஒங்களுக்குத்தான்சுட்டுப்போட்டாலும் வராதே அது, பின்ன ஏன் அனாவசியமா போய்க்கிட்டு”,,,,,,என்பார்,
 
நண்பரின் மகன்தான் டாக்டர் என்ற போதிலும் கூட இன்னும் சில விஷய ங்களை சொல்வதில் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது,இருந்த போதிலும் கண்டுபிடித்துவிடுகிறார்,

நாக்கும் மனதுமாய் அரிப்பெடுத்து அடக்க மாட்டாமல் தண்ணீர் சாப்பிட்ட நாளன்றின் மறுநாள் வைத்தியத்திற்கு போனால் மறுநாள் அவரிடம் வைத் தியத்திற்குப் போகிற பொழுது அவர் சொல்கிற வார்த்தைகள் இவை/

என்னசெய்யபின்னே தலை குனிந்து கொண்டு சமாளித்துச்சிரிப்பதை தவிர அந்த இடத்தில் வேறொன்றும் இல்லை பராபரனே/

அவர் சொன்ன அனாவசியம் டாக்டரிடம் மட்டும் என இல்லை, வீட்டில் வெளியில் நண்பர்களிடம், தோழர்களிடம் அலுவலகத்தில்,,,,,,,,,,,என மாறி மாறி பல இடங்களில் தெரிபட்டுபோகிறதாய்/

பரவாயில்லை இவனின் மெய்த்தன்மைதானே தெரிபட்டுப் போகிறது அதனால் என்ன என்கிற மனச்சமாதானம் எழுகிற நேரங்களிலும் கூட இவனது உள் மனம் என்ன இது ஒரு பொய் கூட ஒழுங்காக சொல்ல வரவில்லை என்றால் எப்படி,,,,?என இவன் மீதே இவன் கோபம் கொண்ட நாட்கள் நிறைய உண்டுதான்.

ஒருசிலரைப்போலஎந்நேரமும்பொய் புரட்டு ஊர்ப்பொரணி எனவும் சிரித்துக் `கொண்டேகழுத்தை அறுக்கிற நய வஞ்சகத்தனமும் தெரியவில்லை. தெரியா தது கேட்பின் வரியாதது வந்து சிக்கும் என்பார்கள்.

அல்சருக்காய் வைத்தியத்திற்குப்போன அன்று அதே வைத்தியர் அதே வார்த்தைகளை கொஞ்சம் கண்டிப்பாகச்சொன்னார் என்றால் மிகையில் லை .மாமா விருந்துக்குத்தான் எப்போதாவது தண்ணி சாப்பிடுரேன்னு சொல்லீட்டு மருத்துக்கு வந்து நிக்குறது எப்பிடி சரியாயிருக்கும் சொல் லுங்க, விருந்து ன்னா நல்லதப்பொல்லத சாப்புடுங்க,அத விட்டுடு இந்த கருமாயத்த போட்டுக் குடிச்சாஒடம்பு பின்ன கெட்டுப்போகாம என்ன பண்ணும் ,சும்மாவே ஒடம்பு நெறஞ்ச அல்சர்,பி பி.சுகரு இதுல அப்பப்ப கைகால் வலி ஒடம்பு நோகுதுன்னு வந்துநிக்குறீங்க,,, இத்தனையையும் சொல்லீ ட்டு சத்தம் இல்லாம தண்ணியச் சாப்டுட்டு வந்துர்றீங்க,அது வேலைய பின்ன அதுகாட்டத் தான செய்யும், வைத்தியத்தால எத்தனையசரி பண்ண முடியும்ன்னு நெனைக்கிறீங்க,என கொஞ்சம் கண்டித்துச்சிரித்தவாறே மருந்து கொடுத்தார். அவர் சொல்வதும் சரியே அவரது கூற்றுப்படி என நினைத்தவனாய் இனிமேல் குடிக்கக்கூடாது என நினைத்துக்கொள்வான் அவ்வப்பொழுதாய்/

முதலில் சாப்பிட்ட டீ பாய் கடையில் சாப்பிட்டது.பெரும்பாலான நேரங்க ளில் விரும்பிச்சாப்பிடுவது இல்லை. அலுவலகம் விட்டு வருகிற மாலை நேரங்களில் ஏற்படுகிற மண்டைக்காய்ச்சலைப்போக்கஏதாவது ஒன்று எங்கா வது நின்று தின்றும் குடித்தும் ஆக வேண்டியதே இருக்கிறது.

அந்த வகையில் பாய்டீக்கடையில் தினசரி அலுவலகம் விட்ட மாலையில் ஒரு டீ என்பது இவனது பதிவான மாலை நேர பழக்கமாகிப் போகிறது. தேவை யை விட பழக்கங்களே சாஸ்வதமாகிப்போகிறதாய்/

முன்பெல்லாம் பாய் கடையில் டீ சாப்பிடுவதற்கு மாலை நேரம் கனிந்து வர வேண்டியதில்லை.ஒரு நாளைக்கு அவரது கடையிலேயே பத்து டீயை எட்டி விடும்,அலுவலகத்திற்குப்போகும் பொழுது,அலுவலக வேலையாய் வெளி யில் போகும் பொழுதும் திரும்பி வரும் பொழுதும் போஸ்ட் ஆபீஸ் போய் வருகிற சமயங்களிலுமாய் என இவன் காலடியும் இவனது வருகையும் பாய் டீக்கடையில் பெரும்பாலுமாய் இருக்கும்.

கைக் காசெல்லாம் கிடையாது,கணக்குத்தான்.இவனது பெயரில் இருக்கிற பக்கங்கள் எப்பொழுதும் கொஞ்சம் கூடுதலாகவே காணப்படும் கடையின் பக்கங்களில் கடைக்காரர் கூடச் சொல்லுவார்,அண்ணே நீங்கவேலபாக்குற ஆபீஸூல இருக்குற மாதிரி ஒரு தடி நோட்டுப்போட்டாத்தான் கட்டுபடி யாகும் போலயிருக்கு சும்மா ஒரு குயர் ரெண்டு குயர் நோட்டெல்லாம் காணாது ஆமா என்பார்,

கடையில் கணக்கு வைத்திருப்பவர்களை விடஇரண்டு பக்கமாவது அதிகம் இருக்கும்/கடைக்காரருக்குமாதக்கடைசியில்இவனது கணக்கைக் கூட்டுவது கொஞ்சம் சிரமமாய் இருக்கும்,இவனையே கணக்குக்கூட்டிப்போட்டுக் கொ ள்ளச் சொல்லுவார். அப்படியே சேர்த்து நான்கைந்து பேருக்கும் கணக்கை கூட்டிப்போடுத் தரச் சொல்லுவார்.

டீ மாஸ்டர்தான்சொல்லுவார்,அடிக்கடி,இதுக்கு பேசாம அவர கல்லாவுல ஒக்கார வச்சிறலாம்ல என,/ அவர்தான் சொல்வார் இவன் அவரிடம் டீயை வாங்கு கிற சமயங்களில்/

கொஞ்சம் டீயக்கொறச்சிக்கங்கண்ணே பின்னாடி ஒடம்பு தாங்காது என, அவர் சொல்வாஸ்தவமாகிப்போனது. இப்பொழுது உடல் தாங்கவில்லை, டீயும் சாப்பிடுவதில்லை.ஆனாலும் டீக் கடை முன்பு போய் நிற்பதில் இருக்கிற ஒரு மன சுகம் போக மாட்டேன் என்கிறது,
 
வடக்கு தெற்காய் நீளவாக்கில் வகுந்து ஓடுகிற ரோட்டில் கிழக்குப்பார்த்த வாசல் கொண்ட கடை/
 
காலை முன் வெயிலும்,மாலை நிழலும் கடை வாசலை நனைக்கும்/

அப்படியான முன் பின் நனைவு கொண்ட கடையிலிருந்து நடந்து செல்கிற தூரத்தில் இருக்கிற ரயில்வே ஸ்டேசனுக்குவிரைகிற ஆட்டோக்களும் இரு சக்கரவாகனங்களும்பாதசாரிகளையும்டீக்குடித்துக்கொண்டுபார்த்துக் கொண் டே இருக்கலாம். கிளகிற நினைவுகளை உட்ப்பொதித்துக்கொண்டதானஇது போலான காட்சிகளை பார்க்க நன்றாக இருக்கிறதுதான்.அந்த நேரத்தில்/ அம்மாதிரியான பொழுதுகளில் படபடக்கிற பட்டாம் பூச்சிகள் வானத்தில் பறந்து போவது போலவுமாய் இருக்கும்,இருக்கட்டுமே.அதில் இரண்டு கீழி றங்கி வந்து இவனை தொட்டுவிட்டுப்போகக்கூடாதா எனவுமாய் தோணாமல் இருந்ததில்லை.

இதில் காலைக்கும் மாலைக்குமாய்பட்டுத் தெரிகிற வித்தியாசங்கள் இருக்கி றதே, அதை அனுவித்தவர்களுக்குத்தான் தெரியும் என்பார் நண்பர்.

தொலை தூரத்தில் வேலையாய் இருப்பவர்,அவரது வேலை கல்ப்பாக்கத்தில் என முருகதாஸ் சொன்னதாய் ஞாபகம்.

பாதரூம் கதவின் பின் பக்க தகரம் அரித்துப் போய் தொங்கிக் கொண்டிருந்தது. குளிக் கும் போதும் மற்ற நேர தண்ணீர்ப்புழக்கத்தின் போதும்தண்ணீர்பட்டு தண்ணீர் பட்டு இற்றுப்போயிருந்த தகரம் பிய்ந்து தொங்கிப் போய் உதிர்ந்து காணப் பட்டது.

தினந்தோறும் பாத்ரூம் போகும் போதும் குளிக்கிற போதும் முதல் வேலை யாக் முருகதாஸைப்பார்த்து கதவை சரி செய்யச் சொல்ல வேண்டும் என நினைத்துக்கொள்வதுண்டுதான்/

தச்சு வேலை பார்க்கிற முருகதாஸை எப்பொழுதிலிருந்து பழக்கம் என சரியாகத் தெரியாவிட்டாலும் கூட அவர்களுக்குள்ளாய் பழக்கம் ஏற்பட்டு பத்து வருடங்களுக்கு மேலாக இருக்கும் என உறுதியாக ஆணியடித்துக் கூறி விட முடிகிறது.

இவன்,சேகரன்,பாண்டித்துரை,கண்ணன் என ஆனந்தா ஹோட்டலில் எப்பொ ழுதாவது சந்திக்கிற நாட்களில் நேரங்காலமில்லாமல் பேசிக் கொண்டிருக் கிற பேச்சின் ஊடாக முருகதாஸீம் கலந்து கொள்வார்.

இதில் சேகரனும் பாண்டித்துரையும் தன் வாழ்நிலையை பொது வெளிகளில் ஒப்படைத்து விட்டார்கள்.பொதுவாழ்க்கைகென அர்ப்பணிக்கப்பட்ட அவர்க ளது வாழ்க்கை திரும்புகிற திசையெல்லாம் எப்பஒழுதும் போல கசப்பும் இனிப்பும் இன்னும் பல சுவை கலந்துமாய் இருந்தது. போஸ்டர் கொடி தோர ணம் தட்டி போர்டு நோட்டீஸ் ,,,,என இன்னும் இன்னுமான வேலைகளோடு அவர்கள்கை கோர்த்து நிற்கிற போது இவனுக்குக்கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்திருக்கிறது.

அந்தநேரங்களில் கண்ணன் அரசு வேலை ஒன்றில் ஐக்கியமாகி காக்கி உடை யுடன் நிற்கிறார்.இவன் ஒரு காலூன்றாத நிலையற்ற வேலையில் என்கிற உருக்கள் தாங்கி இருந்த நாட்களில் நிகழ்கிறசந்திப்பின்நூழிலையில் அறிமுக மானமுருகதாஸ்இப்பொழுதுநகரில்முக்கியவேலைக்காரராக/ஆடிட்டர்வைத்து கணக்கு வழக்கு பார்த்துக் கொள்கிற அளவிற்கு சொந்த வீடு இரு சக்கர வாகனம் பிள்ளைகளின் இங்கிலீஸ் மீடியப் படிப்பு என செட்லாகிப் போனான்.

நல்லதான மழை நாளின் மாலை நேரமொன்றில் தூவானம் போட்டுக் கொண் டிருந்த தூறலின் ஊடாக அவரது மரப்பட்டறையில் வைத்து அவரைப்பார்த்து விஷயத்தைச்சொன்னமறுநாளில்வந்துபாத்ரூம்கதவைசரிசெய்துகொடுத்தார்,

அவரும்வேலைபார்க்கவருகிறபோதெல்லாம்சொல்வதுண்டு.அண்ணேஒண்ணு பேசாம கதவ மாத்துங்க இல்ல நாகத்தகடு வாங்கி அடிச்சுருங்க என/

ஆனால்அவர்சொல்லிப்போன நாளிலிருந்து இன்று வரை இவன் கதவை மாற் றவோஅல்லதுநாகத்தகடுஅடிக்கவோஇல்லை.அதற்குக்காரணம்சோம்பேறித் தனமோ அல்லது கையில் காசில்லாமலோ இல்லை,

ஏதோ ஒரு நிலை அல்லது ஏதோ ஒரு வேலை கவனம் காரணமாகத் தட்டிக் கொண்டு போய் விடுகிறதுதான். காலை வெயிலின் சுகந்தத்தை சுகித்தவனா ய் ஒரு நாளன்றின் காலையில் டீ குடித்துக்கொண்டிருக்கும்போது அங்கு அவ் வழியாகப்போனமுருகதாஸ்இவனைப் பார்த்ததுமாய் நின்று விட்டார்,

இவனது பழக்கம்தான் தெரியுமே ஊருக்கெல்லாம்,யாராவது நெருக்கமான வர்களைப்பார்த்தால் உடனேஅடுத்தவார்த்தைடீக்குடிக்கிறீர்களா எனக் கேட்
பது தானே,,,?

அது போலவே முருகதாஸைப் பாத்துக்கேட்டதும்தான் அவனது முகத்தைப் பார்க்கிறான்.என்ன இது இப்படி சூம்பிப்போய்க்கிடக்கிறது முகம்.ஏன் இப்படி யாய் அணைந்து போய்க்கிடக்கிறான் எனநினைத்துக் கேட்டபோது பின்ன எண் ணண்னே பிடிக்கலைன்னா பேசாம இருந்துட்டு போக வேண்டியது தான, ஏன் இப்பிடி வம்புபண்றாங்கஎண்ணையப்போட்டுஎன சேகரனும் பாண்டித் துரை யும் தன்னை அவர்கள் பக்கமாய் இழுக்கப்பார்க்கிறார்கள் என இவனிடம் சொன்ன போது இவன் பொத்தாம் பொதுவாக சொல்லி வைத்தான். உங்கள் மனதுக்கு எது சரி எனப்படுகிறதோ அதைச்செய்யுங்கள் என/

அந்த சொல்லில் கட்டிப்பொதித்து வைக்கப்பட்டிருக்கிற சொற்கட்டுகள் பாய் டீக்கடையில் நிற்கிற காலை மாலை வேலைகளின் ரம்யத்தில் உணர முடிகி றது.

பாய் கடையில் டீ சாப்பிட்டு விட்டு கொஞ்சம் நேரமிருக்கிறது என கலெக் டர் ஆபீஸ்வரை போய் வந்தான்,இரு சக்கர வாகனத்தில் எங்கும் தூரமாகப்போய் ரொம்பவும் நாளாகிப் போனது.

கொஞ்சம் போய் வந்தால் தெம்பாக இருக்கும் மனதிற்கும் உடலுக்கும் என நினைத்துதான் வந்தான்.

வந்த இடத்தில் ஞாபகம் வருகிறதுதாய் நண்பனின் முகம்,அவர் குடியிருக் கிற ஏரியாவிற்கு வந்து விட்டு அவரைப்பார்க்காமல் போனால் எப்படி,,,,,? என்கிற கேள்விதாங்கி அவரிடம் போனில் பேசுகிறான்,

உங்களது ஏரியாவில்தான் இருக்கிறேன் உங்களைப்பார்க்க வேண்டும் என கண் அரிக்கிறது,வரலாமா கொஞ்சம்,,,,? எனக்கேட்ட பொழுது அவர் சிறிது நிமிட அவகாசங்களில் வந்து விடுகிறேன் அங்கு என்கிறார்.

போன இடத்தில் எப்படி சும்மா நிற்க முடியுமா என்ன வெறுமனே,,, அந்தப் பக்கம் போய் விட்டால் வழக்கமாய் டீ சாப்பிடும் மாரியண்ணன் டீக் கடை யில்டீக்கிளாஸீடன் நின்று கொண்டுதான் போன் பண்ணினான் நண்பருக்கு/

என்ன பாய் கடையில் டீசாப்பிட்டு விட்டு இங்கு வர அதிக பட்சம் கால் மணி அல்லது இருபது நிமிடங்கள் ஆகி இருக்கலாம். அதற்குள்ளாகவா இன்னொரு டீ,உன் தினவெடுத்த நாக்கில் சூடு வைக்க வேண்டும் முதலில். அப்பொழுதான் சரிப்படுவாய் அதிகமாய் டீக்குடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவாய் என்கிற மனதின் சப்தத்தை ஓரம் கட்டி விட்டு டீக் கிளாஸீடன் நின்றிருந்த வேலை யில் வந்து விட்டார் நண்பர்.
 
அவர் அப்பொழுதான் மதுரைக்கு ஒரு இலக்கிய கூட்டத்திற்கு போய் வந்ததாகவும் அதன் பதிவுகள் தன்னிடம் நிறைய இருக்கிறது.வாருங்கள் பேசிக்கொண்டே செல்லலாம் என கூட்டிக்கொண்டு போகும் பொழுது ஓரித் தில் நின்று கடையில் டீ சாப்பிடுவோமா என்றார்,”ஐயையோ வேண்டாம் டீ ஏற்கனவே குடித்த இரண்டு வயிற்றை நிரப்பிஉடலையும்நிரப்பி விட்டது.

வேண்டுமானால் ஏதாவது கூல் டிரிங்க்ஸ் சாப்பிடுவோம் என்றவனை கூட்டிக் கொண்டு போய் விட்டார் கடைக்கு,/

அவர் சொன்ன இலக்கிய விசாரங்களையும் கூட்ட விபரங்களை விடவும் இவன் குடித்த சர்பத்தான் இவனது மனதிலும் நெஞ்சிலுமாய் நின்றது, ஏண்டா குடித்தோம் என்றாகிப்போனது,

வேலியிலபோறத எடுத்து,,,,,கதையாகிப்போனது.நல்ல வேளையாக வாந்தி எதுவும் வந்து விடவில்லை.பழைய தண்ணீரில் கலந்திருப்பார்கள் போலும் சர்பத்தை/
 
குடித்ததுமாய் ஒரே அழுக்கு வாடை,ஏற்கனவே இரண்டு டீக்கள் குடித்ததில் வயிறு வேறு திம்மென இருந்ததா,மிகவும் யோசனையாக ஆகிப் போனது இவனுக்கு/

வயிறுஊதிக்கொண்டுஏப்பம்ஏப்பமாய் வந்து கொண்டிருந்தது,சரி வீட்டிற்குப் போய் மற்ற வேலைகளில் ஈடுபட்டால் சரியாகிப்போகும் உடல் என்கிற தான நினைப்பில் போக்குவரத்து சிக்னலில் பச்சை விளக்கு எறியவும் ட்ராபிக்கில் காத்து நின்ற இவன் பாலம் திரும்பி வீட்டிற்கு வருகிறான்.

இரண்டு டீக்களும் ஒரு சர்பத்துமாக குடித்ததில் ஒத்துக் கொள்ளவில்லை வயிறு, சற்றே ஊத்தப்பட்டுத் தெரிகிறதான தோற்றமும் உணர்வும் தருகிறது.

25 Mar 2016

பிரதி பிம்பம்,,,,,,,,

வீட்டிற்கு தபால்க்கொடுக்க வந்திருந்தவரைப்பார்த்து ஸ்னேகித்துச்சிரித்து அவர்கேட்டகுடிநீரைக் கொடுத்த போது அவர் சொல்லிப்போனநன்றிஇன்னும் மனம் இனித்துக்கிடக்கும் ஒன்றாக.

அவர் சொல்லிபோய் வாரம் ஒன்றை தாண்டியிருக்கும்.

ஒரு விடுமுறை நாளின் வெயில்ப்பொழுதில்தான் வந்தார், அவர்வரும் பொழுது மதியம் ஒரு மணி இருக்கலாம்,இன்னும் சாப்பிட்டிருக்க மாட்டார் போல் தோணியது,அவர் வைத்திருந்த சைக்கிள் போலவே அவரும் நைந்து போய் காணப்பட்டார்,

தலை கலைந்து களைத்துப் போய் வாடி நின்று அவரும்டல்லாகி பார்ப்பவரை யும் டல்லாக்கி,,,,என்கிற ஏற்பாட்டிற்குள்ளெல்லாம் இல்லாமல் கொஞ்சமாய் களைத்துக்காணப்பட்டார்,

அன்றைக்குஇவனுக்கு லீவு என்பதால் வீட்டில்தான்இருந்தான்.அப்பொழுதான் பஜார்வரைப்போய் வந்திருந்தான் காய்கறி வாங்கி வர/

காய்கறி வாங்க வேண் டிய தேவை என ஏதும் இல்லாத நாட்களில் கூட ஏதாவது ஒரு சாக்கு வைத்து போய்விடுவான் பஜார்ப்பக்கமாய்.

மனைவிகூடவைவாள்ஏன் இப்பிடி கால்ல சக்கரத்தக் கட்டிக்கிட்டு ஓடிக்கிட்டு திரியிறீங்க,அங்க போய் வர்ற நேரத்துல வீட்ல ஏதாவது உதவியா இருக்க லாம்ல என/அவள் என்னதான் பொரிந்த போதும் கூட வீட்டில் பெயரு க்கு இரண்டு வேலைகளை அரைகுறையாக வேணும் செய்து முடித்து விட்டு கிளம்பி விடுவான்.

நீண்டநாட்களாய்இவனுக்குள்இருக்கிறஆசைசைக்கிளோட்டிக்கொண்டுபஜாரு க்கு போகவேண்டும்என்பதே.

நினைத்துநீண்டநாட்கள் ஆனபோதிலும் கூட ஆசை இன்னும் நிறைவேறாம லேயே. இன்றும் அப்படியாய் மனதில் குடிகொண்ட ஆசை நிறைவேறாமல் போய் விட்டது,

மனதினுள்ளாக உருவகிக்கிற ஆசையை செயலில் உருவெடுக்க வைக்கை யில் கொஞ்சும் பின்னடைவு அல்லது சுணக் கம் ஏற்பட்டுப் போகிறதுதான்.

சில சமயங்களில், சில சமயங்களில் கூட இல்லை பல சமயங்களில் அந்த வேலை நடக்காமல் விட்டுப்போனதுண்டு. அப்படித்தான் இன்றும் விடுபட்டுப் போனது.

அப்பொழுதான்வந்துஇறங்கியிருந்தான்,பஜாரிலிருந்து வரும்வழியில் எங்கும் செல்லமுடியாத பாத்ரூம் வேலையைமுடித்து விட்டு மனைவியிடம் ஒரு டீயைப்போடச் சொல்லி விட்டு வாங்கிவந்த காய்கறிகளை பையிலி ருந்து எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான்,

பரவாயில்லைபைகொஞ்சம்தாங்குகிறதுபை.போன தடவை காய்கறி வாங் கியி ருந்தான்,இது போல்தான் காய்கறி வாங்கப்போன ஒரு நாளன்றின் மாலை வேளையில் இவனது தோள்பை காய்கறிகளை உள்ளடக்கிவைத்துக் கொள்ள போதுமானதாய் இல்லை.

இத்தனைக்கும்மனைவி போன் பண்ணும் பொழுது தக்காளியும் தேங்காய்கள் இரண்டும்மட்டும்போதும் என்றிருந்தாள்.இவனுக்குத்தான்காய்கறிகடைக்கு ப் போனதும்கூடஇரண்டு காய்கறி களை சேர்த்து வாங்கும் ஆசை வந்துவிட்டது, எப்பொழுதும்வாங்குகிறதக்காளி, முட்டைக்கோஸ் உருளைக் கிழங்கு,,, இன் னும்இன்னுமானசிலகாய் கறிதவிர்த்துவாழைப்பூவும்,முள்ளங்கியும் சேனைக் கிழங்கும் அப்பொழுதான்பிடுங்கிவந்தது போல புதிதாக இருந்தது, தக்காளி யைப் பார்த்த கண்களில் மேற்பட்ட காய்களின் குளிர்ச்சி தட்டுப்பட்டு விட வாங்கிப் போட்டுக் கொண்டான்,

காய்வாங்க பணம்இருந்தது மனமும் இருந்தது, ஆனால் வாங்கிய காய்கறி களைக்கொண்டுபோகபைதான் இல்லை என யோசித்த போது வாங்கியதுதான் இது,

இருபதுரூபாய் என்றார்கள்.என்ன யூரியா சாக்குல தைத்ததா என கடைக்கார ரிடம்கேட்ட பொழுது அவர் இல்லை,இது ஒரு தார்ப்பாலின் மெட்டீரியல் போ ன்ற ஒன்றில் தைத்தது என்றார்,

நல்ல கனமாக இருந்தது, வாங்கிஅந்தஅன்று மனைவிஆச்சரியப்பட்டாள், பரவாயில்லையே ,இந்த வெலையில இப்பிடி ஒண்ணு கெடைக்குதுன்னா ஆச்சரியம்தான் என/

பையிலிருந்து காய்கறிகளை எடுத்து வெளியில் வைத்துக்கொண்டிருக்கை யில்தான் வந்து விட்டார் தாபால்க்காரர்,

ஊரெல்லாம் லீவாய் இருக்கையில் அவர்களுக்கு வேலைநாளாய் இருக்கும், அவர்களுக்குலீவாய்இருக்கையில் ஊரெல்லாம் வேலை நாளாய் இருக்கும்.

சார் வாங்க நல்லா இருக்கீங்களா என்பதேஇவன் கேட்கிற முதல்கேள்வியாய் இருக்கும்யாரைசந்தித்தபோதும்/அப்படித்தான்தபால்க்காரரைப்பார்த்ததுமாய்க் கேட்டான்,அவரும்நன்றாகஇருக்கிறேன்எனச்சொல்லிவிட்டுகுடிக்க தண்ணீர்  கிடைக்குமா எனக்கேட்டு வாங்கிக்கொண்டார்,

மணிஒன்னாகப்போகுது இனிதான் போயி சாப்பாடு, போறதுக்குள்ள இதோ ஒரு நாலஞ்சி தபால் இருக்கு ,நாலஞ்சும் நாலஞ்சி தெருவுல இருக்கு ,சைக் கிளில்ல வெக்கு வெக்குன்னு மிதிச்சிப்போயி குடுத்துட்டு போயி சாப்புடு றதுக்குள்ள பாதி பசியடங்கீரும், என்ன செய்ய அப்படியே சாப்புட்டுட்டு கெளம்பி மதிய டெலிவரிக்கி கெளம்பீருவோம்/இப்பிடித்தான் இருக்குஎங்க பொழப்பு.எனசலித்துக்கொண்டவரின்பேச்சுக்குப்பின்னால் இருக்கிற உண்மை இவனைப்போன்ற கடை நிலை ஊழியர்களுக்கு தெளிவாக புடி படுவதாக/

வந்திருந்ததபால்இண்லட்லெட்டராகஇருந்தது,அதுஎங்கிருந்துவந்திருக்கிறது, என்னசெய்தியை உள்ளடக்கி இருக்கிறது எனத்தெரிய வில்லை, இப்போதைக் குள்ளாகஇவனுக்கு இம்மாதிரியாய் எதும் தபால் வந்ததாய் ஞாபகம் இல்லை.

போன வாரம் கூட இவனுக்கு ஒரு தபால்வந்திருந்தது. அதுவும் கூட முழு கவரில் தான் வந்தது,அதுவும் கொரியரில்.

இது போலான இண்லண்ட் லெட்டரில்கடிதம் எழுதி பலகாலம் ஆகிவிட்டது. இவனுக்கும் இப்போதைக்கு இது மாதிரியாய் எதுவும் வந்ததில்லை, முன்பெ ல்லாம் கையில் எப்பொழுதும் பத்துக்கும் குறையாமல் இண்லண்ட் லெட்டர் வைத்திருப்பான், நினைத்த நேரங்களில் இவன் நினைக்கும் நபருக்கு கடிதம் எழுதி அனுப்பி விடுவான்.ஒன்றும் விஷயமிருக்காது பெரிதாக ,என்ன ஏது எப்படியிருக்கிறீர்கள், நலமா வீட்டில் அனைவரும் எனக்கேட்டு எழுதி அனுப் புகிற கடிதமாய்த்தான் இருக்கும் பெரும்பாலுமாய்/

இனிப்பையும்கசப்பையும் சிரிப்பையும் வருத்தத்தையும் சேர்த்துக்கட்டி அனுப் பிய கடிதங்கள் இவனில் சில சமயங்ளில் சந்தோஷங்களையும் சில சமயங் களில்வருத்ததையுமாய் உண்டு பண்ணியிருக்கிறது.

அம்மாதிரியானவருத்தங்களையும்சந்தோஷங்களையும்இவன்கடிதம்அனுப்பி யவர்களுக்கு, ஒரு சேரவும் காலதாமதமாகவும் பகிர்ந்து கொண்டதுண்டு,

இவனில்அந்தப்பழக்கம் எப்பொழுது குடி கொண்டது அல்லது எப்பொழுது கை வரப்பெற்றதுஎன்பதுசரியாகஞாபகம்இல்லாவிட்டாலும்கூட அரிச்சலாகவும் கொஞ்சமாகவேனும் ஞாபகம் உள்ளது.

இவன்தற்காலிஊழியனாக வேலைபார்க்கிற சமயங்களில் சங்க அலுவலகத் தில்இருந்தஅந்த தலைவரைப்பார்த்து ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வந்த பழக் கம் எனகூடச்சொல்லலாம்.

அவர் அப்படித்தான் ஒரு நாளின் பாதியில் ஏதாவது எழுதிக்கொண்டே இருப் பார் விடாமல்/

யாருக்குஎன்னஎழுதுவார்அப்படிஎனஎண்ணத்தோன்றினாலும்கூடஅவர்கடிதம் எழுதும்முறைஅதைகவரில் போட்டு அனுப்பி வைக்கும் அழகு என இவனை மிகவும் கவர்ந்ததுண்டு,

பெரும்பாலுமாய் வெள்ளைப் பேப்பரில்தான் எழுதுவார்,எழுதிய கடிதத்தை மடித்து கவருக்குள் வைத்து விட்டு அதை ஒட்டி அட்ரஸ் எழுதிவிட்டு அட்ர ஸிற்கு ப்பக்கத்தில் டிசைன் போடுவார், அல்லது ஏதாவது ஒரு சின்ன தான ஸ்டிக்கர் ஒன்று ஒட்டி அனுப்புவார்,

அதில் பெரும்பாலுமாய் பூ அல்லது பறவை,மீன்,ஏரோப்ளான் என இன்னும் இன்னுமான நிறைந்து போன படங்கள் காணப்படும்.அப்படியாய் அவர் அனுப் பும்ரசனைமிகுந்த கடிதங்களை இவன்தான்கொண்டு போய் போஸ்ட் பண்ணி விட்டு வருவான்.

போஸ்ட் ஆபீஸில் இவனுக்குத்தெரிந்தவர் ஒருவர் இருந்தார். அவர் பெட்டி திறந்து கடிதம் எடுத்து முடித்து விட்ட போதும் கூட இவன் தபால் கொண்டு வருவதற்காய் காத்திருப்பார்.

இவன்வந்ததும்தான்தபால்களைபைக்குள்ளாகப்போட்டுக்கட்டுவார்,தபால்கள் போடப்பட்ட பையை இழுத்துக் கட்டி அரக்கு சீல் வைத்து தள்ளு வண்டியில் வைத்து ரயில்வே ஸ்டேசன் வர அவர் கொண்டு போகிற அழகே தனி/

அந்த அழகும் ரசனையும்தான் இவன் கடிதங்கள் கொண்டு வரும்வரை அவ ரை காத்திருக்க வைத்திருக்கிற ரகசியம் என பின்னாளில் ஒரு பொழுதில் அவரிடம் பேசிய பொழுது தெரிந்து கொண்டான்,

பெரிசா ஒண்ணுமில்ல சார்,ரோட்டுல போகும் போது நல்ல பாட்டு கேட்டா தலையசைக்கிறமில்லையா,அதுதான் இங்கயும் சாத்தியமாயி இருக்கு,நீங்க கொண்டு வர்ற கடிதங்க எப்பிடியும் ஒரு நாளைக்கு பத்தாவது இருக்கும்,அந்த பத்துலயும் தெரியிற பத்து மாதிரியான அழகு என்னைய ரொம்பவே கவர்ந்து ருக்கு,அதுனாலதான் நீங்க வர்ற வரை காத்திருந்திருக்குறேன், பலநாட்கள்ல எங்கமேல்அதிகாரிகிட்டதிட்டுவாங்குனப்பக் கூட என்பார்,

வாஸ்தவம்தான் முகம் தெரியாத சரியாக பழகாத ஒரு மனிதரின் மேல் ஈர்ப்பு ஏற்பட வைக்க அவரது செயல்பாடுகளே காரணமாகி போகிறது எனலாம்,

இவனும் கூட அது போல் முயன்றிருக்கிறான் கடிதம் எழுத ஆனால் வந்ததி ல்லை,என்ன இருந்தாலும் அசல் அசல்தான் நகல் நகல்தான் என்பார் இவனு டன் வேலை பார்த்த ரமேஷ் கண்ணன்.

இவனதுவேலை,சம்பளம்,ஹோட்டல்சாப்பாடு ரூம் என இருந்த நாட்களில் ரமேஷ் கண்ணன் இவனைஒரு நாள் இரவில் ஒரு திருமண வீட்டிற்கு டெகரெஷன் பண்ணக் கூப்பிட்டுப்போயிருந்தார்,

மறுநாள் கல்யாணம்முதல்நாள் இரவு மண்டபத்தை அலங்கரிக்க வேண்டும், இரவு டிபன் முடித்தப் பிறகு எல்லோரும் தூங்கிப் போன இரவில் ரமேஷ் கண்ணன் சேர் போட்டு முன்னால் அமர்ந்து கொள்ள இவன் ஒருவனாக டெகரேஷனை செய்து முடித்தான்.டெகரேஷன் பண்ணிக் கொண்டிருக்கும் போது திருமண மேடையில் டாப்பில் தொங்கிய வயரில் கைபட்டு விட கரண்ட் அடித்து விட்டது,

நல்லவேளையாக பெரிதாக ஒன்றும் இல்லை பாதிப்பு.இதைமறு நாள் ரமேஷ் கண்னனிடம் சொன்ன போது ஏன் அப்பொழுதே சொல்லவில்லை என கோபி த்தார், நீங்கள் தூங்கிப்போன பின் எப்படி வந்து சொல்வது என விட்டு விட்டேன் என்றான்.

ரமேஷ்க்கண்ணன் மறு நாள் திருமண வீட்டாரிடம் விஷயத்தைச்சொலவும் பயந்து போனார்கள் அவர்கள்.நல்ல வேளையாக ஏதும் ஆகவில்லை அந் நேரம் இல்லையெனில்,,,,நினைத்துப்பார்க்கவே முடியவில்லை என திருமண வீட்டார்கள் ரமேஷ் கண்ணனிடம் உங்களிடம் சொன்னது போல வேறு யாரிடமும்இப்படிசொல்ல வேண்டாம்எனசொல்லுங்கள் எனச்சொல்லி விட்டு ரமேஷ்கண்ணன்கையில்ஐநூறுரூபாயைக்கொடுத்துஅனுப்பியிருக்கிறார்கள்,

இது அந்தப் பையன் நேற்று இரவு முழுவதும் கண்விழித்து வேலை செய்தற் கான சம்பளம் மட்டுமில்லை.கரண்ட் ஷாக் அடித்த அந்நேரம் ஏதும் களேபரம் பண்ணாமல் இருந்ததற்காக எனச்சொல்லியிருக்கிறார்கள்.ரமேஷ்க்கண்ணன் வந்து அதை அப்படியே சொல்லிவிட்டார் இவனிடம்,

அப்பொழுதான் ஏதோ புடிபட்டது போல் இருந்தது,அந்த புடிபடல் பல நேரங்க ளில் பல உருக்களில் இவன் முன்னாய் காட்சிப்பட்டு நிற்பதுண்டு.

அப்படியான விஷயங்களெல்லாம் இவன் எழுதும் கடிதங்களில்பட்டுபிரதிபலி ப்பதுண்டுதான் சமயங்களில்/

இவன்எழுதுவதுஎல்லாம்பெரும்பாலுமாய் இன்லண்ட் லெட்டரில்தான். அதை வாங்க ஹெட் போஸ்ட் ஆபீஸ் போக வேண்டும்.

இவன்வேலைபார்க்கும்ஆபீஸிற்கு பக்கமாய் இருப்பது ஆர் எம் எஸ் போஸ்ட் ஆபீஸ்தான்.இவனுக்கு அதுதான் பக்கம் என்பதை விட அங்கு போவதே சௌ கரியமாய்இருந்தது,

மாலைஅலுவலகம்முடிகிறஐந்துமணிபொழுதிற்குஅல்லதுஅலுவலகஇடை
வேளையின் போது போய் வந்து விடுவான்.

அங்குதான் சீனி பெரியப்பா வேலை பார்க்கிறார்,அவரை இவனுக்கு சொந்தம் என ஆரம்பத்தில் தெரியாது.அவரது ஊர்எனத்தெரியும்.ஆனால் யார் என்ன எனத்தெரியாது. அவர்தான் சொன்னார். நான் இன்னார் என/

அதற்கப்புறம் போஸ்ட் ஆபீஸ் போகும் ஒவ்வொரு முறையுமாய் அவர் தட்டுப்படுகிறாரா எனபார்க்க ஆரம்பித்து விடுவான்,அந்த ஆபீஸில் அவரும் ஒரு போஸ்ட் மாஸ்டர் அம்மாவும் மட்டும்தான் இருந்தார்கள்.

அவர்தான் ஒருமுறை கேட்டார், எப்படியும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறையாவது பத்துப்பத்து இன்லண்ட் லெட்டர் வாங்கி விடுகிறீர்களே, என்ன அவ்வளவு பேருக்கா கடிதம் எழுதுகிறீர்கள் என,ஆமாம் எழுதுவேன் எதையாவதை படித்ததை ,கேள்விப் பட்டதை,பார்த்ததை,,,,என இன்னும் இன்னுமான பலவற்றைபற்றி எழுதுவேன் என்பான்.

கடிதம் வாங்க வந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு நாளில் வெளியில் இருந்து ஆபீஸிற்குள் நுழைந்த சீனிப்பெரியப்பா வேலைமுடிஞ்சி போகும் போது சொல்லு, நானும் கூட வர்றேன் என்றார்,என்ன விசேஷமா எனக் கேட்டபோது விஷேசம்ன்னு என பெரிசா ஒன்னும் இல்லை,சும்மா ஓங் கூட வந்து டீ சாப்புட்டு வரலாம்ன்னு இருக்கேன் என்றார்,

டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுதான்சொன்னார்,டேய் தம்பி அந்தம்மா வுக்குஒருபொண்ணு இருக்கு பத்தாவது படிச்சிக்கிட்டு இருக்கு,ஒனக்கு வேணு ம்ண்ணா கேப்பமா, ஒனக்கு என்ன 25 வயசுதான ஆகுது ,அந்தப்பொண்ணுக்கு பதினைஞ்சி வயசு, பத்து வயசு இடைவெளி ஒண்ணும் பெரிய வித்தியாசம் இல்ல.நல்ல அழகா இருப்பா ஓன் ஒசரத்துக்கும்,ஓன் கலருக்கும் ஈக்கோலா, வீட்ல கேட்டுச்சொல்லு, பேசுவம் வேணும்ண்ணா என்றார்,

இதை ரமேஷ் கண்ணனிடம் சொன்ன போது நீ வேற சும்மா கெட,பொண்ணு நல்ல பொண்ணுதான்ங்குறதுல எந்த மாத்தமும்இருக்க முடியாது,ஆனா பத்து வயசு வித்தியாசத்துலயா ஒரு பொண்ண போயா கல்யாணம் பண்ணுவாங்க என்றார்,

இவனுக்கும் அது சரிதான் எனப் பட்டது.அந்தசரிப்படல் இந்த52வயதிலும் பலவிஷயங்களிலும்இவனைசரியாகவே இயக்கிக்கொண்டிருக்கிறது.

போஸ்ட்மேனிடமிருந்துகடிதத்தைவாங்கிக்கொண்டு வரும்போது செங்காவி பூசிய வாசலின் படிகள் மூன்றும் இவன் பாதம் படக் காத்திருந்ததாய்,

வேல்க்கொத்தனார்தான்சொன்னார்வீடுக்கட்டிக்கொண்டிருக்கும்போது, அதெ ல்லாம் ஒன்னுமில்லை சார்,படிக்கட்டு அழகா இருக்கணுமுன்ன மார்பிள் கல்லு தான் பதிக்கணுமின்னு யாருசொன்னது/தேவையிலை சார், பேசாம சிமிண்ட வச்சி பூசி மேல செகப்புக்காவிய வாங்கி தேச்சமுண்ணு வைங்க சும்மாபளபளண்ணுபளிங்குக்கல்லுகணக்க ஆகிப்போகும் படிக்கட்டு, அப்புறம் பாருங்க வீட்டுக்கு வந்து போற எல்லாரும் கேப்பாங்க நீங்க பதிச்சிருக்குறது பளிங்குக்கல்லான்னு,,,என்றார்/

அவர் சொன்ன படியே வீடு கட்டி முடிக்கும் போது பலபேர் கேட்டார்கள் ஆனால் வேலைதான் கொஞ்சம் இழுத்து விட்டது,வேல்க்கொத்தனார் அப்படி ஒன்றும் காசுக்கு ஆசைப்பட்டு வேலையை இழுப்பவரல்ல,ஆள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி வேலையில் அதே வேகம் அதே தெளிவு,பின் ஏன் படி வேலை மட்டுமாய்இப்படிஇழுத்து விட்டது எனக்கேட்டதற்குச்சொன்னார்,

இந்தவேலை இழுக்கத்தான் செய்யும் சார்,ஏன்னா படிக்கட்ட கட்டி முடிச் சிட்டு விட்டு வந்துட்டா பரவாயில்ல,

மேல காவி பவுடற போட்டு கரண்டியால நல்லா தேய்க்கணும் சார். அப்பத் தான் பளபளப்புக் கெடைக்கும் சார்,இல்லைன்னாஒருமாதிரி மக்கடிச்ச மாதிரி மூடிப்போயிஇருக்கும்,எவ்வளவுக்கெவ்வளவுதேய்க்கிறோமோ அவ்வளவுக்க வளவு நல்லது செட்டாயிருக்கும் பளப்பும் கூடித்தெரியும்என தாமத்திற்கான காரணத்தைச்சொன்னார்.அந்தக்காரணம்இப்பொழுது மனம் குடிகொண்டிருக்க படி ஏறி வந்தவனின் பிரதிபிம்பம் படிக்கட்டுகளில் பிரதிபலித்ததாய்/

14 Feb 2016

மஞ்சள்த்தரை,,,,,

எதிரில் அமர்ந்திருந்த அவள் முகம் அப்பொழுதுதான் மலர்ந்திருந்தபூப்போல பூத்துக்குலுங்கிசிரிக்கிறதாக/

வட்டவடிவமானசின்னமுகத்தில் அப்பொழுதுதான் மஞ்சள் பூசிக்குளித்திருந் ததுபோலவும்,சரியாதுவட்டாதகூந்தலில்காதோரமாய் நரைத்துச் சுருண்டிருந்  த ஒற்றை நரை முடியில் இறங்கிச் சொட்டிய தண்ணீர்த் துளியின் கடைசிச் சொட்டு கீழே விழஅனுமதி கேட்டு நிற்பது போலவுமாய் தெரிகிறது.

ஜன்னல் கம்பிகளின் ஊடாக வந்திறங்கி வர்ணம் காட்டிய காலை நேரசூரிய வெளிச்சம் தரையில் பிரதிபட்டுத் தெரிவதாகவே உணர முடிகிறது.

நெற்றியில்ஒன்றிரண்டாய் புரள்கிற நரை முடியும்,காதோரமாய் இறங்கிச் சரி கிறநரைமுடிகற்றையும்ஏதோஒருஒற்றுமையைஉணர்த்திவிட்டுச்சென்றதாக/ கட்டியிருந்த புடவையில் மலர்ந்து சிரிக்கிற பூக்களில் ஒன்றிரண்டு தன் கவனம் மீறி கீழே விழுந்து விடுவோமோ என்கிற எச்சரிக்கையுடன் ஒட்டிக் கொண்டிருப்பதாகவும் ,புடவையில் நாற்றாங்கால் இட்டிருப்பதாயும்/

அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலமிடுகையில் நடமிடுகிற 
கையும், உயர்மனரசனையும் அவளில் எப்பொழுதும்வெளிப்பட்டுத் தெரிவதா க வே/

வரைமுறைகட்டி இழுக்கப்படுகிற கோடுகளும்,அதனுள்ளே ஆங்காங்கே இடப் படுகிற புள்ளிகளும் சிறிது நிமிடங்களில் வாசலின் முன் தோற்றத்தை மாற்றிப் போட்டு விடும் புதிதான ஒன்றாக/

நான்குபுள்ளியிலிருந்துஎத்தனையோ புள்ளிகள் ,கோடுகள்,கட்டங்கள் அடர்ந்த பார்டர்கள் கலர் பொடிகள்,,,,,,என இத்தியாதி இத்தியாதியாய் சின்ன வாசலின் முன்பாக அவள் கலர் காட்டியும் அது அல்லாமலும் வரைகிற கோலம் தினந் தோறும் காலையில்நட்டுவைத்த செடி போலவும்,ஊன்றி நீரூற்றி வளர்த்த மரம்போலவுமாய் காட்சிப்பட்டுத்தெரிவதுண்டு.

இவன் கூறியதான ஞாபகமா அல்லது அவளாக தெரிந்தெடுத்துக்கொண்ட தெரிவா என ஞாபகமில்லை சாரியாக/சும்மா வெறும் தண்ணீர் கொண்டு தெளிப்பானேன் வாசலை.அதில் கொஞ்சம் மஞ்சள் பொடியை மிகைப்படாமல் கலந்து தெளித்தோமானால் வாசல் கொஞ்சம் நன்றாககாட்சிப்பட்டும் மஞ்சள் வர்ணத்தில் கண்ணடித்துமாய்/

பார்த்ததுதான்சில பல இடங்களில்,பெரும்பாலுமாய் இவன் பார்த்தது அருப்புக் கோட்டைசாலைசெல்லும்வழியில்ரோட்டின் இடது ஓரம் சற்றே உள் வாங்கி தன் கம்பீரம் காட்டி அமர்ந்திருக்கிற திருமண மண்டபத்தின் வாசலில் தான். பெரியதானமண்டபத்தின்தோற்றத்திற்கேற்ப பெரியதான வாசல் ,அதை வாசல் என அவர்கள் சொல்லா விட்டாலும் கூட அந்த மண் வெளியே வாசலாய் மாறி பிளக்ஸ் பேன்னர்களும்,அலங்கார வளைவுகளும் வைக்கப் படுகிற இடமாய் காட்சிப்பட்டுப்போனது.

சரி அப்படியான இடத்தை மண்ணின் இயற்கை நிறத்திலேயே சும்மா விடுவா னேன் அன்றாடம் தெளிக்கிற தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள் பொடிகலந்து தெளித்து விட்டால்தரை நிறம்மாறித்தெரியும்தானே என்கிறஉயர்ரகஉத்தியில் செய்த வேலையாகக்கூட இருக்கலாம்/ஆனால் அவ்வளவு பெரிய வாசலுக்கு அவ்வளவு தண்ணீரை எப்படிசளைக்காமல் தெளிக்கிறார்கள் என்பது தெரிய வில்லை.

முதன் முதலாய் அங்கு பார்த்ததற்குப்பின்னாலும் அது இவனது கண்ணுக்கு பாரிய அழகாய் காட்சிபட்ட பின்புமாய் சில இடங்களில் வீடுகளின் முன்னா யும் பார்க்க நேர்ந்ததன் விளைவு அம்மாதிரியான மஞ்சள் நிற பவுடர் எங்கு கிடைக்கும் என தேட வைத்து விட்டது.

அது மஞ்சள் பவுடர் இல்லை,அதன் பெயர் சாணப் பவுடர், இன்றிலிருந்து அப்படியே பெயர் மாற்றம் செய்து கூப்பிடுங்கள். இல்லையெனில் ஏதாவது பிழையாகிப்போகும் என்றறிவித்தவர்கள் என்ன விலையில் எங்கு கிடைக்கும் எனச்சொல்ல மறந்து போனார்கள்.இவனும் இவன் குடியிருக்கிற ஏரியாவில் இருக்கிற கடைகள் முழுவதுமாய் அலசித்தேடிய போது எங்கும் கிடைக்காம ல் பஜாரில் கிடைக்கிறதென வாங்கி வந்து தண்ணீரில்கலந்து வாசலில் தெளித்த போது தெரிந்த அழகு வாசலை யாரும் கண்வைத்துவிடக்கூடாதே என கவலை கொள்ளவைத்து விட்டது.நெருக்கிப் பூசியிருந்த மஞ்சளின் மத்தியில் பூத்துத்தெரிந்த கொடிபோல் காட்சிப்பட்ட கோலத்துடன் தெரிந்ததா கவே உணர்கிறான்.

வாங்கி வருகிற பாலின் அளவுகொஞ்சமேயானாலும் பணியை முடித்த கையோடு சென்று வாங்கி வருகிற பாலில் மணம் கொஞ்சம் தூக்கலாகவே உணர முடிகிறதாகித்தெரிகிறது.போக வேண்டிய தூரம் நிறையத்தான் என்றா லும் வீட்டிலிருந்து சிறிது தூரம் போய்த்தான் வாங்க வேண்டியதிருக்கிறது பாலை.

வாங்குற பால் விலை கொடுத்தா அல்லது இலவசமாகவா என்கிற சந்தேகம் சமயா சமயங்களில் முளைத்துப்போய் விடுகிற அளவிற்காய் பட்டுத்தெரிகிற அவர்களது பேச்சு வாங்கப்போனஅளவை விடஇன்னும் கொஞ்சம் பாலை அதிகமாகவே வாங்க வைக்கும்.அப்படியாய் வாங்கிப்போன தினங்கள் இவர்க ளது வீட்டின் காலண்டர்களில் நிறைந்து குறித்து வைக்கப்பட்டிரு ப்பதாய்/

இயந்திரங்களை பார்த்திருக்கிறோம்தான் நிறைய,ஆனால் இப்படியாய் கை கால்முளைத்த ரத்தமும் சதையுமான இயந்திரத்தை இவர்கள் பால்வாங்கும் வீட்டில்தான் பார்க்க முடிந்திருக்கிறது.

ஐந்துமாடுகள்வரிசை கட்டி நிற்கிற இடத்தில் அதிகாலையின்மூன்றுமூன்றை மணிக்கெல்லாம் சுழியிடுகிற அவர்களது உழைப்பு ஓரிடத்தில் புள்ளியிட்டு முடிய மணி ஒன்பதை நெருங்கிவிடும் எனக் கேள்விப் பட்டுள்ளான். மிகவும் அவசரப்பட்டு சீக்கிரமாக முடித்தால் எட்டு முப்பதில் ஆகும் எனவும் சொல் வார்கள்.அதற்கப்புறமாய் அவர் குளித்து முடித்து வேறு வேலைக்குச் செல்கி றார்.

அவரை அனேகமாக பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அப்படித் தெரிந்திருந்தவர்கள்அனைவரும்அவரைப்பால்க்காரர்என்றுதான்சொல்கிறார்கள், கூப்புடுகிறார்கள்,பேசுகிறார்கள்.

வாங்க பால்க்காரரே, என்ன பால்க்காரரே, எப்பிடியிருக்கீங்க பால்க்காரரே ,,,,,,, என்கிற பேச்சுக்களில் நிறைந்து தெரிந்த வாஞ்சையும், நெருக்கமும் அவரது பெயரை மறக்கச் செய்து விட்டிருந்தது.அவருக்கு மட்டும் அல்ல இந்த நிலை அவரதுமனைவிக்கும் இதே நிலைதான் எனச்சொல்லவும் வேண்டுமா என்ன,,? அவரது பெயர் தெரிந்தவர்கள் அவரது மனைவியும் பிள்ளைகளாகவும், மனை வியின் பெயர்தெரிந்தவர் அவராகமட்டும்தான் இருப்பார் எனகருதுமளவிற்கு/

வாங்கி வந்த பால் இடைவெளி காட்டிக்காட்டி பாத்திரத்தில் பொங்கிச்சரிந்த வேலையில் சிவப்பு நிறத்தில் எரிந்த நெருப்புச் சுடர்களை சற்றே குறைத்து சிம்மில் எரிய வைத்து ஊதாக்கலராக மாற்றிவிட்ட இடைவேளையினூடாக வந்தமர்ந்த பொழுது இவன் படுக்கையை விட்டு இன்னும் எழுந்தமராத பொழுதாக இருக்கிறது.

பின்னிரவில்தூங்கியதூக்கம்முன்காலையில்எழுந்திருக்கமனமற்றுதூக்கத்தை தொடரச்செய்து விடுகிறது.எதன் காரணமாகவோ அல்லது என்னவோவெனத் தெரியவில்லை. தூக்கம் தொலைந்து போன பல இரவுகளைப் போல நேற்றும் தொலைந்து போன தூக்கத்தை எட்டிப்பிடிக்க மனமின்றி விழித்துக்கொண்டே படுத்திருந் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்பார்த்துக் கொண்டும் அதை அணைத்து விட்டுமாய்/

தூக்கம்மறந்த விழிகள் இரண்டும் ஒருவழியாக பெரிய மனது பண்ணிதூக்கத் தைஎட்டிப்பிடித்த நேரம்இரவு இரண்டுஅல்லது இரண்டரையாக இருக்கலாம். அந்நேரத்திற்கு சற்றுமுன்பாக தொலைக்காட்சியில் சிரிப்பூட்டிய நகைச் சுவை நடிகரின் நினவும் அவரின் சிரிப்படங்கிய பேச்சுமாய் தூங்கிப்போன வேளை சற்று கழித்து வந்து விட்ட விழிப்பு மணி காலை நாலை என்பதை சுட்டிக் காட்டுகிறது,

சுற்றிச்சுழலும்சின்னச்சதுரத்திற்குள் இருந்த சின்ன முள்ளும் பெரிய முள்ளும் விநாடி முள்ளை விடாப்பிடியாக கைகோர்த்து அழைத்துக் கொண்ட படிமணி அறிவித்துச்சென்றுகொண்டிருக்கிறதுதான்ஓயாமலும் ஒழியா மலுமாய்/

ஓயாததுசரிஒழியாமல்ஏன் இருக்க வேண்டும்.என்கிற கற்பனையும் சொல் லும் உதைக்கிறதுதான் மனதை எட்டி/

விழிப்புகொள்ளசெய்துவிட்ட நாலு மணி திரும்பவுமாயதூக்கத்தைக்கொண்டு வந்துதரநாலரை மணியாகிப்போகிறது.நாலரை என்பது சரிதான், ஆனால் அது விழிப்பு வந்து விடுகிற அதிகாலைப்பொழுதல்லாவா,இருக்கட்டுமே என்ன அதனால் இப்பொழுது,அதிகாலையோ,பின் மாலை பொழுதோ இருக்கட்டும் அதனதன் தனித்தன்மையுடனும்,என நினைத்து தூங்கச்செல்கிற வேளை லேசாக எடுத்திருந்த பசி அதிகம் காட்டிச்செல்கிறதாய் தோணுகிறது.

அதுஎதனால்அப்படி எனத் தெரிய வில்லை.பசிக்கிறதுதான்இப்படியாய், ஒன்று அதிகாலை வேலையில் அல்லது நடு இரவிலாய்/

அல்சர்வந்தநாட்களிலிருந்துஇப்படித்தான்பாடாய்ப்படுத்துகிறது.சரி சாப்பிட்டு விடலாம் கொஞ்சமாக இல்லயெனில் பசியில் சுழியிட்ட வயிறு வலியில் போய் புள்ளிவைக்கும்.சமயத்தில் கோலமும் இட்டுவிடும். அப்படி யாய் கோல மிட்ட எத்தனையோ இரவுகளில் அரசு ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைக்குப் பிரிவிற்குப்போய் மருத்துவம் பார்த்துவிட்டு வந்திருக்கி றான். அப்படியான விடியலாக இது ஆகி விடக்கூடாதே என்கிற எண்ணத்தில் குக்கரின் மூடியை திறந்தபோதுகுக்கரின்அடிப்பாகத்தில்கிடந்தசாப்பாடு இரு கையளவு இருக்கும் எனச்சுட்டிக்காட்டுகிறது.

இரு கையளவு என்கிற சொல்பதம் இவன் கண்களில் அல்லது இவனது புலனுறுப்பில் எங்காவது தட்டுப்படுமாயின் அல்லது கேள்விப்படுகிற நேரங் களிலும் இவனைப்பின்னோக்கி இழுத்துப்போய் விடுவதுண்டுதான்.

காலம்கிழித்துப்போட்டபழைய காலண்டர் தேதிகளை கஷ்டபடாமல் சேகரி த்துபின்னோக்கிச்சென்றால்காணக்கிடைக்கிற காட்சி இவன் எர்பிடித்து உழுது கொண்டிருந்ததை காட்சிப்படுத்திவிட்டுச் செல்லும்எளிதாக/

இவன்மட்டும்அல்லகிட்ணண்னன்,மலைச்சாமி,ராயப்பன்,,,எனகாட்டுக்காரர்களோடு சேர்ந்து ஆறு பேரும் இரண்டுஏக்கர்காட்டைசெம்மை படுத்தி விதைக்க முனை ந்து கொண்டிருந்தார்கள்.

மழை பெய்து முடித்த பிறகு கல் பாவிக்கிடந்த மானாவாரிகட்டந் தரையை உழுது கீறி பயிர் முளைக்கச்செய்து விடுகிற வித்தையை ஆறுபேருமாய் செய்து முடிப்பதென எடுத்த சத்திய உத்தேசத்தை மெய்ப்பிக்க கனவு கண்டு கொண்டிருந்தார்கள்.

விதைப்பு உழவு அது,பெய்துமுடித்திருந்த மழையை நம்பியும்,இனி மேலாய் அவ்வப்பொழுது பெய்யப் போகிற மழையை நம்பியுமாய் அத்துவானமாய் விரிந்து கிடக்கிற கட்டாந்தரையில் வரகு விதைக்க வந்திருந்தார்கள்.ஊடு பயிராய் துவரை/

வரகு கம்பு போல் இருக்கிற அரிசி,துவரை என்பது துவரம்பருப்பு என அருஞ் சொற்பொருள் சொல்லாமல் பிறந்த குழந்தை கூட அறிந்து கொள்கிற அந்த பூமியில் மண்ணை நம்பியும்,மழையை நம்பியுமாய் விதைக்கப் போயிருக்கி றார்கள்.விதைக்கப்போயிருக்கிறார்களேதவிர்த்துஅதற்கான அடையாளங்கள் அந்தக்காட்டில் எங்கும் இல்லை.

காடு முழுக்கவுமாய் ஆங்காங்கே வஞ்சனையில்லாமல்முளைத்துத்தெரிந்த மஞ்சனத்திச்செடிகளும் இன்னமும் பிற செடிகளும் கொடிகளுமாக/

மானாவாரிக்காட்டில் இதுதான் நடை முறை ,விதைப்பு நேரம் மட்டும் காட்டை சுத்தம்செய்து விதைத்து விட்டுவந்து விடுவார்கள்.பின் மழையும்மண்ணுமாய் கைகோர்த்துக்கொண்டு பயிரை மண் கீறி மேலெழச்செய்கிற வித்தையை காண்பித்துவிடும்.

ஆனால் இவன் உட்பட அனைவருமாக காட்டைஎட்டித்தொட்ட நேரம் காடு அம்மாதிரியான அடையாளத்தையோ,உறுதி மொழியையோ தப்பிதவறிகூட தந்து விடக்கூடாது என்கிற தோற்றம் காண்பித்துத்தெரிந்ததாய்/

காட்டில்கால்வைத்த ஆறுபேரில்நாலு பேர்கொண்டவேலையாட்கள் முதலில் காடுமுழுவதுமாய்தலையாட்டித்தெரிந்தமஞ்சனத்திச்செடிகளையும் இன்னும் பிறக்களைச் செடிக ளையுமாய் வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

கொஞ்சம் கவனம் செலுத்தி செய்ய வேண்டியவேலை அது,மழையின் ஈரத் திற்கு மஞ்சனத்திச்செடிகளின்அடியில் தேள்களும் இன்னும் பிற செடிகளின் அடியில் சுருட்டைப் பூச்சிகளுமாய் கை கோர்த்துக்கிடக்கும். நம்பிப் போய் கைகொண்டுசெடியை கூட்டிப்பிடிக்க இயலாது, பின் பங்கம் வந்து விடும் உடலுக்கு,அதை கவனத்தில் கொண்டே வெட்ட வேண்டும் செடிகளை ,வெட்டி னார்கள்,வெட்டிஅப்புறப்படுத்தினார்கள்.பின் காட்டின் நான்கு ஓரங்களிலுமாய் கரையை செதுக்கி உயரம் தூக்கிக்கட்டி காட்டின் பரப்பை புதுப்பொலிவு பெறச் செய்தார்கள்.முடிந்து விடவில்லை இத்துடன் வேலை.இருக்கிறது பாக்கி, இன்னும் சொல்லப்போனால் இனிதான் ஆரம்பிக்கிறது வேலையே என்கிற உறுதிப்பாட்டுடனுமாய் வேலையை ஆரம்பித்த பொழுதுமழை பெய்துமகிழ்ந் து போயிருந்த மண் தன் பொதும்பல் காட்டி பூரித்து இடம் தந்தது.

மண்கீறிஉழ உழ இன்னும்இன்னும் என வேலை பார்க்க நன்றாக இருக்கிறது. நான்கு ஏர்கள் மொத்தமாக ஒரே இடத்தில் உழுவதற்குப்பதில் இரண்டு இரண்டுஏர்களாகபிரிந்துகொண்டார்கள். இரண்டு ஏர்கள் ஒருஏக்கர்காட்டிலும், இன்னொரு இரண்டு ஏர்கள்இன்னொருஏக்கர் காட்டிலும் ஓடி உழுது காட்டை பண்படுத்தியிருந்தது, அப்படி உழுது முடித்திருந்த நிலத்தை (காட்டை)ப்பார்த்த காட்டுக்காரர் கண்களில் நீர்க்கோர்க்காத குறையாய் அக மகிழந்து போகிறார்.

காலையில் வந்த பொழுது பார்த்த கட்டாந்தரையான பூமி உழைப்பாளிகளின் வியர்வையில் விளைநிலமாய்மாறிகாட்சிப்பட்டிருக்கிறது.கட்டாந்தரை+ஆறு பேரின் உழைப்பு+ விளைநிலம்,,,,என்கிற காட்சி விரிய மதியம் சாப்பாட்டு வேளை நெருங்கிப் போகிறதுதான்.

காட்டுக்காரர்சாப்பிட்டுவிட்டுபின்வேலைபார்ப்போம்என்கிறார்.அவர்சொன்ன
தை நான்கு பேரில் இரண்டு பேர் அரை மனதாகவும் இன்னும் இரண்டு பேர் முழு மனதுடனுமாய் ஏற்றுக்கொள்கின்றனர்.இறுதியாக சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்ததில்கிடைத்தமுடிவு சாப்பிட்டு விட்டே வேலையை ஆரம்பிக்கலாம் என்பதே.

இதில் காட்டுக்காரரின் கணக்கு வேறொன்றாய்இருக்கிறது. வேலை செய்கிற வர்களின் வயிறு நிறையும் பொழுது அவர்களது மனமும் நிறையும்.அப்படி அவர்கள் வாழ்த்துகிற போது விதைத்ததெல்லாம் மண்ணில் பொன்னாக மலரும் என்கிற நம்பிக்கை.

சாப்பாடு என்றால் இலை போட்டு பரிமாறி என்பதெல்லாம் கிடையாது.கரை கஞ்சிதான்.இரண்டு மண் பானை நிறைய கட்டியாக எடுத்து வந்த கம்மங்கஞ் சியும் துவையலும்தான்.சரி அதை எங்கு வைத்து எப்படி உண்பது என்கிற போது காட்டின் நடுவில் நின்ற வன்னி வேலாமரத்தின் நிழலில் அமர்ந்து சாப்பிடவேண்டியதுதான்.

காட்டுக்காரம்மா நான்கு பேரையும் அரை வட்டமாக அமரவைத்துவிட்டு ஒவ்வொருவரின் முன்பாக சுத்தமாக கழுவிய கல்லை வைத்து அதில் ஒவ்வொருகுத்தாகசின்ன அளவிலாய் துவையலைஅள்ளி வைத்துக்கொண்டு போனாள், அடுத்ததாய் உரித்த வெங்காயம்,வறுத்த மோர் வத்தல்களை பங் கிட்டு வைத்துவிட்டு கரைத்து ரெடியாய் வைத்திருந்த கம்பங்கஞ்சியை குடிக்க எல்லோருக்கும்ஊற்றுகிறாள்.கூப்பிக்குவித்தஇருகைகளேஊற்றிய கஞ்சியை ஏந்தி வாங்கும் பாத்திரமாகிப்போக கூப்பிப்பிடித்த இருகைகளுக்குள்ளாய் விழுந்த குளிர்ச்சியான கம்மங்கஞ்சியை ஒரு வாய் குடிக்க குடித்து விட்டு குடித்து முடித்த அவசரத்துடன் துவையலை ஒரு விரலால் தொட்டு நக்கிக் கொள்ள,,,,என்கிற படலத்தில் சாப்பாடு முடியும்,

இதிலிருக்கிறபெரியதும்சின்னதுமானசிரமம்என்னவென்றால்கூப்பியகைக்குள்ளாய் இருக்கிற கஞ்சி கைகளின் இடை வழி வழியே நூலாக ஒழுகும், கஞ்சி யை வாயருகேக் கொண்டு போய் உறிஞ்சிக்குடிக்கிற போது வாயைச் சுற்றிலுமாய் வட்டம் போட்டதுபோல் கஞ்சி ஒட்டிக்கொள்ளும்.இதைவிட பிரதான மான தாய் குடித்து முடித்துவிட்ட கஞ்சிக்கு துவையலை எடுக்க கையை தாழ்த்தி ஆள் காட்டி விரலை கல்லில் இருக்கிற துவையலை எடுக்க நீட்டுகையில் கையில் மீதமிருக்கிற கஞ்சி நீட்டிய ஆட்காட்டி விரலின் வழியாக வழிந்து பட்டு பூமியைத் தொடும்.

இப்படியாய் எத்தனை கஞ்சி எவ்வளவு நேரம் வீணாவதுஎன்கிற வருத்ததிற்கு மாற்றாய் காட்டுக்காரம்மாளின் யோசனை ஒன்று முன் வைக்கப்படுகிறது.

கூப்பியகையில் இருக்கிறகஞ்சியை குடியுங்கள் தயங்காமல்,ஒவ்வொருவரது ஆட்காட்டி விரலின் மீதும் பொட்டு வைத்தது போல் நீங்கள் குடிக்கிற 
ஒவ்வொரு வாய்க்கஞ்சிக்கும் துவையலை வைத்து விடுகிறேன்,துவையல் வேண்டாம் எனக்கு,வத்தலும் வெங்காயமும் தாருங்கள் என்றால் வெங்கா யத்தை எடுத்து கஞ்சிகுள்ளும்,வத்தலை எடுத்து பத்து விரல்களின் ஏதாவது ஒருவிரலின் இடுக்கிற்குள்ளாகவும் சொருகி விடுகிறேன், கடித்துக்கொள்ளுங் கள் என்றார்.

இருகையளவு கொண்ட சாப்பாட்டை எங்கும்,எப்பொழுது பார்த்த நேரத்திலும் வந்து விடுகிற இந்நினைவு தவிர்க்க இயலாததாகவே இவனுள்ளாய்/

நேற்றைக்குமுன்தினமாய் வாங்கிய அரிசி ,சோறு கொஞ்சம் குழைந்து தெரிந் தது.கடைக்காரரின்பேச்சைபோல/செயற்கைத்தனமில்லாதஅவரது பேச்சும், குழைவும் யாரையும்ஈர்க்கும். அந்த ஈர்ப்பு அவர் கொடுக்கிற அரிசியில் தென் பட்டுத் தெரியும் நன்றாக/

அந்த அரிசியில் பொங்கிய சாப்பாட்டை பார்த்து விட்டு திரும்பவுமாய் படுத்து அரைத்தூக்கத்தில் இருந்த நேரம் அடுப்பில் டீயை ஏற்றிவிட்டு இவன் எதிரில் வந்து அமர்ந்திருந்த அவள் முகம் அப்பொழுதான் மலர்ந்திருந்த பூப்போல பூத்துக்குலுங்கிச் சிரிப்பதாக/