8 Apr 2016

ஒத்தப்பனை,,,,,

சரீரம் பருத்த பாட்டியின் அன்றாடங்கள் எதுவாக இருக்கிறது இதுவரை?நான் அவளருகே சென்று கவனித்ததில்லை.அப்படியெல்லாம் கவனிக்க முடியாத அளவிற்குஅவளதுவீடு தூரம் தொலைவு என்றெல்லாம் கிடையாது. அதற்காக அவளுக்குஅருகில்போயோஅவளை வட்டமிட்டுக் கொண்டோஇருக்கஎன்கிற இலக்கணத்திற்கு உட்பட்டெல்லாம் இல்லை நானும்/

வழக்கமான தோல்தடித்துப்போன மிடில்கிளாஸ் தனங்களில் பக்கத்து வீட்டுக் காரரிடம்பேசுவது கூட அரிதாகிப்போகிறது.அப்படி இருக்கும் போது எப்படி,,,,,,? எங்களது தெருவின் இடது பக்கத்திருப்பத்தில் இருக்கிற வீடு.சுந்தரம் ,,,,,,,வீடு என்றுதான் அந்தப்பாட்டியின் வீடு அவரது கணவரின் பெயருடன் சேர்த்து அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.ரேஷன் கார்டிலும் வாக்காளர் அடையாள அட்டையிலும்அப்படியேதான்.

அவரதுவாலிபவயதிலும்சரி,உடலில் உழைப்பின் சக்தி உள்ள வரைக்கும் சரி.ரயில்வே குட்செட்டில் வேலை பார்த்தவராம்.லோடு மேன்களில் அவர் ஒரு ஸ்பெசலிஸ்டாகவே/

நூறு கிலோ மூட்டயை கழுத்து நரம்பு புடைக்க ஒற்றை ஆளாக தலையில் தூக்கிப்போகிற அளவிற்கு பலம் வாய்ந்தவராய்/சைக்கிளில் அவர் அடிக்கும் லோடுகளுக்குகணக்குக்கிடையாது.எதுஎதற்கோவிருதுவழங்கும் அரசாங்கம் அவரையும் அவர் போலான பிறரையும் கௌரவித்து பட்டம் ஏதேனும் வழங் கியிருக்கலாமே,,?பட்டங்களும்கௌரவங்களும்உயர்பதவிகளில்உள்ளவர்களு க்கும் அரசு பணி புரிபவர்களுக்கு மட்டும்தானா,,?இது போல் கீழ்த்தட்டில் வேலை செய்பவர்களை கண்டறிந்து இந்த அமைப்பு எப்பொழுது முன் வரும் எனத் தெரியவில்லை.

பின்அவர்விஷயத்தில்மட்டும் முளைத்தெழுந்தாவரும் அந்த மனப்பான்மை? தாத்தா பற்றி பாட்டி இவ்வாறெல்லாம் தொகுத்துச் சொல்லக் கேள்விப்பட்டி ருக்கிறேன்.

அவளுக்கு இருக்கிறபெரும்பிரச்சனையும் கவலையும் அவர்களது வீடு தெரு முனையில் இருக்கிறதே என்பதே/எந்த எடுபட்ட பயலாவது என்றாவது ஒரு நாள் இடித்துவிட்டால்,,,,,வீடு என்னத்துக்கு ஆக/ என்பது அவளின் கனமான வாதம்/வீடு திருப்பத்தில் இருப்பதால் தெருவிற்கு வரும் டூ வீலரிலிருந்து தண்ணீர்ட்ராக்டர்வரைஎங்களதுசுவரைஇடிக்கிறதுபோல்வந்துதிரும்புகிறது.

அவளது வாதத்தை சப்தமிட்டு சாட்சிக்கூண்டில் நின்று சொல்லாவிட்டாலும் கூட அங்கு வந்து போகிற அக்கம் பக்கத்தவர்களிடமெல்லாம் சொல்லித் தீர்த்தாள்.

நாங்கள் வீடு கட்டு போது எங்களது நிலத்தில்தானே ரோட்டுக்கு இடம் ஒதுக் கினோம்,ஆகவே இதுஎங்களதுஇடம்.இந்தரோட்டில்யாரும் போக வர உரிமை கிடையாது,நான் முள்ளை வைத்து அடைக்கப்போகிறேன் ரோட்டை என்றாள். முடிந்தால் அடைத்துக் கொள்ளுங்கள் என்று புதிதாக குடிவந்த கடைசி வீட்டுகாரிக்கும்அவளுக்குஒருநாள்சண்டையே வந்து விட்டது. கடைசி வீட்டுக் காரியிடம்அவள் போட்ட சண்டைதான் கடைசியிலும் கடைசியாக/ அதற்கப்புறம் அந்தத்தெருவிற்கு யாரும் புதிதாகவோ வாடைகைக்கோ குடி வந்துவிடவில்லை.ஆமாம் இந்தத் தெருவில்வீடுகட்டிகுடிவந்துவிட்டாலும்,,,, என்று தான் பேசிக்கொண்டார்கள் அந்தத்தெருவிலுய்ள்ள காலி மனைகளைப் பார்த்துச் சென்றவர்கள்.

பஞ்சாயத்து விதிமுறைப்படி முறையாக கட்டப்பட்டமைக்கப்பட்ட தெருவோ ரோடோ அல்ல அது.வீடு கட்டியவர்கள் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு வீட்டின் முன் விட்ட ரோட்டடிஇடமேஇப்போதுதெருவாய் உருவெடுத்து/ சீமைக்கரு வேலை முட்ச்செடிகளும்,பார்த்தீனியம் செடிகளுமாக காலி இடங்களை ஆக்க ரமித்து ஓங்கி வளர்ந்து செழிப்புடன் நிற்க அவற்றினூடாக தேங்கி நின்ற மழை நீரில்பன்றிகள்தாராளமாகஉழப்பித்திரிந்தன.

அவற்றின்உறைவிடமாகவும்உணவிடமாகவும்ஆகிப்போனஇடத்தில்முட்டை
யிட்டுகுஞ்சுபொரித்தகொசுக்கள்சைக்ளோத்திரின்காயல்களையும்திரவமருந்து க்களையெல்லாம் மீறி பச்சைப் பெயிண்ட் மஞ்சள் பெயிண்ட் வீடுகளுக்குள் படையெடுத்தன.இம்மாதிரியான தெருவின் ரோட்டிற்குத்தான் இப்படியாய் கச்சைக்கட்டிக்கொண்டு நிற்கிறாள் பாட்டி.

அவளும் லேசுப்பட்ட பாட்டியில்லை என்றுதான் இந்த வட்டாரத்திலும் தெரு விலும்பெயர் /

இன்றுகாலையில்கூட வார்டு மெம்பரிடம் சப்தம் போட்டுக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் பள்ளிக்குப்போக அவரவர்களின் வேலை அவசரம் என தெருவி லிருக்கிற வீட்டுக்காரர்கள் அனைவரும் தண்ணீர் பிடித்தது போக ஆறோ அல்லது ஏழோ குடம்தான் வருகிறது இந்த வயசான கட்டைப்பிடிக்க நான் என்ன செய்யட்டும் நீயே சொல்லு என அவரை பாடாய்ப் படுத்தி எடுத்து விட்டாள்.

அதற்கடுத்துவரும்நாட்களில் அவர் எங்களது தெருபக்கம் தலை வைத்து படுப் பதுகூடசிரமம்என்றேதான்தோன்றுகிறது.அப்படியானசிரமத்தைஎதிர்கொள்ளப் பிடிக்காமலும் அவளின் வாய் வார்த்தையை தாங்காமலும் அவளிடம் யாரும் நெருங்குவதோதொடர்பு வைத்துக்கொள்வதோ கிடையாது.

அந்தஅளவிற்கான எரிச்சலும் கோபமுமே அவள் சிக்கன் குனியா காய்ச்சலில் படுத்தபோதுஅந்த தெரு வாசிகள் அவரையும்அவளதுஅருகில்அண்டவிடவில் லை. என்னைத் தவிர/

டாக்டரிடம் போய் வருவதிலிருந்து சாப்பாட்டிற்கு வரை அவள் பட்ட சிரமங் கள் சொல்லி மாளாது/ஒத்தாசைக்கு தாத்தா இருந்தாலும் அவர் தாத்தாதானே?

அவரவர் அவரவரின் பிழைப்பின் முக்கியத்துவம் கருதி ஓடிக்கொண்டிருக் கையில் இந்த சண்டைக்காரப்பாட்டியின் பின்னால்யார் அலைவது? தெருவா சிகள்பாட்டியைமுன்னால்விட்டுபின்னால்பேசுவதுநிறையவே,,,/அந்தப்பேச்சுத் தப்பித்தவறி அவள் காதில் விழுந்து விட்டாலோ அல்லது கேள்விப் பட்டு விட்டாலோ பேசியவர்கள் மன்னிப்புக்கேட்கும் வரை விடமாட்டாள்.

என்னதான்பெரியதாகசண்டைபோட்டாலும் கூட மறு நாளே போய் விடுவாள் அவர்களது வீட்டிற்கு/.

என்ன தங்கச்சி என்ன செய்யிற என ஆரம்பித்து அது என்னவோ போ என்ன செய்ய,,,எனமுடிப்பாள்.காலைநீட்டிஅமர்ந்திருந்தவள்படியிலிருந்து எழுந்தவா றே திரும்பவும் ஒரு கால் மணி நேரமாவது பேசுவாள்.அன்றும் அப்படித்தான் கிழிந்து போன ரேஷன் கார்டின் கடைசிப்பக்கத்தையும் கார்டையும் தனித் தனியாககையில்ப்பிடித்துக்கொண்டுவந்திருந்தாள்.இப்பிடிசெஞ்சுதொலைச்சா எப்பிடி,,?இப்பிடிதனித்தனிதாளாக்குடுத்தாஎன்னயமாதிரிஆட்கதொலைச்சிட்டு நிக்கவா,.நீதான இத கோளாறா ஒட்டிக்குடு,தரையில் ரேஷன் கார்டை போட்டு விட்டு கால் நீட்டி அமர்ந்து விட்டாள்.

எனக்குக்கூட எரிச்சல்தான் ,உதவி கேட்டு வருபவள் இப்படியா முகத்தில் அடித்தாற்போல்நடந்துகொள்வது,,?

மனைவியைஏறிட்டேன்.பலஅர்த்தங்களைசொன்ன பார்வையுடன் பார்த்தவள் ரூமிற்குள் சென்று பசைப்பாக்கெட்டைஎடுத்துவந்தாள்/

நீட்டிஅமர்ந்திருந்த கால்களின் தடிமனும் உடலின் பருமனும் களைத்துத் தெரி ந்தசுருக்கங்கள்அற்ற உருண்டை முகத்தில் வழிந்தஎண்ணெய்மின்னதண்ணீர் கேட்டாள்.

பாட்டியின்உடன்பிறந்தவர்கள்பத்துப்பேராம்.எல்லோருமேஅவரவர்கள்பிழைப் பிற்குள்ளாய்அடங்கிப்போனவாழ்நாள்சூழலில்/உள்ளூரிலேயேஇருக்கிறதம்பி
யும் தங்கையும் அவரகளது பிள்ளைகளும் தோதுப்படுகிற போது வந்து எட்டிப் பார்த்துசாப்பாடுதின்பண்டம்கைச்செலவிற்குஎனஏதாவது க்கொடுத்து விட்டுப் போவார்கள். மற்றவர்கள் தூரங்தொலைவில் இருப்பதால் வெறும் விசாரிப்பு மட்டுமே ,,,/

எங்களையார்கவனிக்கிறார்களோஅவர்களுக்குத்தான்எங்கள்சொத்துஎல்லாம் எனவும் ஒடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் இப்பிடியே அல்லாடிக்கிற வேண்டியதுதான். எனவும் சொல்வாள்/

சமயங்களில்முதியோர் இல்லங்க ளைப்பற்றி அக்கறை எடுத்து விசாரிப்பாள். ஆனால் தாத்தாவின் எண்ணம் இந்த விசயத்தில் வேறு மாதிரியாக இருந்தது.

தாத்தாவுக்கும் பாட்டிக்கும்எதுஎன்றாலும்ஏழாம்பொருத்தமாகவே/ தாத்தாவை விட பாட்டிக்கு பத்து வயது குறைவு.

தாத்தா வீட்டிற்கு வெளியே பிளாஸ்டிக் சேர்ப் போட்டு அமர்ந்து விடுவார். உழைப்பின் தடங்கள் இன்னும் உருண்டு திரண்டு மிச்சமாய் தெரியும் உடம் பில் ஒரு துண்டும் நாலு முழ வேஷ்டியும் மட்டுமேயான காஸ்டியூமுடனும் வெற்றிலைபோட்டு சிவந்த வாயுடன்/

நீர்க்கட்டுக்காலுடன்அவர்எப்படியாவதுதாங்கித்தாங்கிநடந்துசென்றுவெற்றிலை யை மட்டுமாவது வாங்கி வந்து விடுவார்.பாட்டி கூட சப்தம் போடுவாள் தாத்தாவை.

கடை கடையா வெத்தல வாங்க அலையுற நேரத்துலவீட்டுக்குத்தேவையான காயி,கீயி ஏதாவது வாங்கீட்டு வரலாம்ல என்பாள்.பாட்டியின் அந்தப் பேச்சுக் கெல்லாம் தாத்தா ஒன்றுமேசொல்வதில்லைஎப்போதும்.

ஆனால் அப்படி தெருப்பக்கம் அடிக்கடிஎன போய் வரும்நேரங்களில் வேஷ்டி யிலேயே மலம்கழித்துவிடுவதும் உடல்நடுக்கத்தால்எங்காவதுகடை ஓரம் திண்ணை ஓரம் என உட்கார்ந்து விடுவதும் சமயா சமயங்களில் சாய்ந்து கீழே சாய்ந்து விடுவதுமாய்தான்அவரதுபெரும்பாலான தினங்கள் கழிந்தன.

இதையெல்லாம் பார்த்தவர்கள் சொல்லக்கேட்டும்,கேள்விப்பட்டுமே தாத்தா வை இப்படியெல்லாமுமாய் சப்தம் போடுகிறாள் பாட்டி/

ஒருநாள்இரவுஹோட்டலிலிருந்துபார்சல்வாங்கிவரும்போதுஅவரது வீட்டின் படியோரம்விழுந்துகிடந்ததைப்பார்த்தேன்.நினைவுஇருந்தது.அவரைத்தூக்கி அமரவைத்து தண்ணீர் கொடுத்து நெஞ்சை நீவி விட்டதும்தான் நிலைக்கு வந்தார் மனிதர்.

பாட்டிகடைக்குப் போயிருக்கிறாள் எனச்சொன்ன அவர்சிறிதுமௌனத்துக்குப் பின் கையில் என்ன புரோட்டா பார்சலா,சால்னா வாடை இங்க அடிக்குது என்றார்.

ஒரு பொட்டலத்தை எடுத்து அவர் கையில் கொடுத்த போது அதெல்லாம் ஒரு காலம் பகல் ராத்திரின்னு அதுவும் கணக்குக்கிடையாது.ஆடு கோழின்னு எல்லாம் சாப்டுட்டு அளவில்லாம வேலை செஞ்சிக்கிட்டு திரிஞ்ச நான் இப்ப பச்சதண்ணியபல்லுலஊத்துறதுக்குக்கூட்டயோசிக்கவேண்டியதிருக்கு என்றார்.

அவரின்பேச்சிலிருந்தஏக்கத்தையும்சோகத்தையும்உணரதனிமனம்வேண்டும். அங்கிட்டுஇங்கிட்டுதூரந்தொலைவுல இருக்குற கூடப்பொறந்தவுங்க ரெண்டு பேரும் இங்க வந்துருங்க,இங்க வந்துருங்கன்றாங்க.மதுரையில இருக்குற தம்பி வீட்லதான் கக்கூசு சகிதம் இருக்கு.ஆனா பாட்டிக்கு அங்க போக மனசு ஒப்பல.தனியாளா இருந்தாலும் இங்க இருக்குற சௌகரியம் அங்க வருமாங் குறா,என்னஇருந்தாலும் இன்னோர்த்தங்க வீட்ல போயி பொட்டிப்பாம்பா எப்டி இருக்க?அப்டீங்குறா என்ன செய்ய சொல்லு,,?

பேச்சற்றுக்கிடந்த சிறிது நேர இடைவெளிக்குப்பின் அவரேதான் தொடர்ந்தார். சீக்கிரமாகொண்டு போ வீட்ல புள்ளைங்கஆசையா காத்துக்கிட்டுக் கெடக்கும். எங்களுக்குத்தான்இப்பிடிஒருகுடுப்பினைஇல்லாமப்போச்சி.சொல்லும்போதே குரல் தழுதழுத்து அழுதவாறே உட்கார்ந்து விட்டார் தாத்தா.

பக்கத்திலேயே அவரது கண்ணீரை துடைத்தவளாய் பாட்டியும்/

பிள்ளைகளற்றஅந்தஅனாதைமுதியவர்களைபார்க்கும்போதும்கடக்கும்போதும் அவர்களின்அன்றாடங்கள்சோகம்கப்பியநினைவுகளுடன்நகர்வதாகவேபதிவா கிறது என்னுள்/

 (காக்காச்சோறு தொகுப்பிலிருந்து,,,,,,,,,,,,,,,,,,)


இந்தக்கதையின் நாயகர் மறைந்த நாள் இன்று,அவரது நினைவாக,,,,,,/

5 comments:

'பரிவை' சே.குமார் said...

கதையின் நாயகர் நினைவைப் போற்றுவோம்...

vimalanperali said...

வணக்கம்பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்
போற்றுவோம்

vimalanperali said...

வணக்கம்கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

துரை செல்வராஜூ said...

வற்றாத கண்களுடன் இன்னும் எத்தனையோ பேர்..
மனம் நெகிழ்கின்றது..