7 May 2016

ஒரு நாள், ஒரு பொழுது,,,,,,,,,

தண்ணீரில் தாவித்திரியுமா பச்சோந்தி? தெரியவில்லை சரியாக/
 
யாரைப் போய்க் கேட்பது இந்நேரம்?வேண்டாமேஅனாவசியமாகஇந்நேரம் என்றெல்லாம் இல்லை.அப்படிப்போய்கேட்கும் அளவு அருகாமையிலோ, அடுத்தடுத்தவீதிகளிலோ, யாரும் இல்லை.நட்பும் தோழமையுமான வட்டா ரங்களில்அப்படியாரும்இருக்கிறார்களா,இல்லையாஎனஇவன்அவ்வளவாக தெரிந்து வைத்திருக்கவில்லை இவன்.

எப்பொழுதோஒருமுறைபெயர்தெரியாதஒருஆங்கிலச்சேனலில் பார்த்ததாக ஞாபகம்.மனைவிபிள்ளைகளின்அருகாமை சூழ்ந்திருக்க ஒரு விடுமுறை தினத்தின் காலைப்பொழுதான சாப்பாட்டு வேளையில்/

பெரியவள் அந்நேரமே குளித்து முடித்திருந்தாள்.குளித்துமுடித்ததலையில் துண்டைசுத்தியிருந்தாள்.அதுஇவனதுமனைவியின்பழக்கம்.அதைஎப்பொழுது அவளிடமிருந்துகடன்வாங்கினாள்எனத்தெரியவில்லைஇவனுக்குத் தெரியா மல்.கடன் வாங்கினாளா அல்லது இவனது மனைவி வம்படியாக பிடித்து தள்ளிவிட்டாளா என்பது யாருக்கும் தெரியாத ரகசியமாகவே/

எத்தனைமுறைகேட்டுகெஞ்சியபோதும்கூட அதைச் சொல்ல மறுத்தவளாய் மகள்.”அட விடுங்கப்பா,அம்மா சொல்லித்தந்ததா இருந்தா என்ன இல்ல நானா கத்துக்கிட்டதா இருந்தா என்னஎப்பிடியோ ஏங்கிட்ட வந்து ஒட்டிக் கிட்ட நல்லபழக்கம் நன்மை விளைவிக்கிறதாவே இருந்துட்டுப்போகட்டும்” என்பாள்.

சரியம்மாஏங் செல்லமே,ஓங்கிட்ட பேசி ஜெயிக்கவா நானு,பெருமையா இருக் குடா ஒரு வகையில பாத்தா,ஆனாவுக்கு அடுத்து என்னன்னு பேசத் தெரியாத குடும்பத்துலயிருந்து வந்தவுங்கடா நானும் ஒங்க அம்மாவும்/ பொறந்தது, வளந்தது படிச்சது,கல்யாணம் கட்டிக்கிட்டது எல்லாமே அந்த மாதிரியான ஊர்லயின்னுஆகிப்போச்சா,அதனாலஅப்பிடியேஇருந்துட்டோம்.

கல்யாணத்துக்கு அப்புறமா தேவைய ஒட்டி ஊரவிட்டு வந்த பெறகு நாலு வெளியாளுக பழக்க வழக்கம், பேச்சு வார்த்த,ஒழுங்குன்னு இப்பத்தா ஏதோகொஞ்சம் பட்டதீட்ன மாதிரி இருக்குற நேரத்துல நீயி இப்பிடி சூதான மாவும் பதனமாவும் பேசுறது மனசுக்கு சந்தோசமா இருக்குப்பா,சந்தோசமா இருக்கு” என நெகிழ்வு கொள்கிறான் இவன்.

இவன்அப்படிச்சொன்னபோதுஇளையவன்மின் விசிறியின்சுவிட்சைபோட்டு விட்டு திரும்பவுமாய் அமர்ந்தான்.அதே இடத்தில் வட்டத்தட்டில் அவித்தெ டுத்தஇட்லிகள் வெண்மைகாட்டிபரவியிருந்ததேங்காய்ச்சட்னியும்,அதற்குத் துணையாய்,அதன் பக்கத்தில் பொட்டு வைத்தது போல் இருந்த தக்காளிச் சட்னியுமாய் ஒன்றை ஒன்று தொட்டுகொண்டும் ஊடுருவிக்கொண்டுமாய் இருந்த நேரத்தில் ஐந்தில் மூன்று விரல்களை மட்டுமே மூலதனமாக்கிக் கொண்டு பிய்த்தெடுத்த இட்லியின் விள்ளலை சாப்பிடப்போன பெரியவள் இவனின் சம்மணமிட்டிருந்த இடது பக்க மடியின் மீது தனது கை ஊன்றிய வளாய்லேசாக சாய்ந்து கொண்டு அமர்ந்திருக்கிறாள்/ஏன் அப்படி எனத் தெரிய வில்லை,இவனது அருகாமையாகவோ அல்லது இவன் மடி மீதோ அவள் சாய்ந்தமர வாய்க்கிற இடம் பெரும்பாலுமாய் இடது புறமாகவே ஆகிப் போகிறது,இது தற்செயல் நிகழ்வா அல்லது ஏற்படுத்திக்கொள்வதா அப்படியாய் எனத்தெரியவில்லை.அவளுக்கும்இடதுஎன்றால்மனம்பிடித்துப் போன ஒன்றாகவே இருந்திருக்கிறது இதுவரையிலும், .பார்க்கிறாள் தானே தினமும்,இவன்தொழிற்சங்க,கூட்டம்,படிப்புஎழுத்துஎனவும்,இத்தியாதி, இத்தி யாதி எனவுமாய் இயங்குவதை/

இனிபோகிறநாட்களின் நகர்வுகளில் எப்படி எனத் தெரியவில்லை.அதுவும் திருமணத்திற்குபின்னாய்என்னஆவாள்என்பது முற்றிலும் உறுதியில்லை.

கட்டம் போட்ட கைலி ஊதாக்கலரில் தன் நிறம் காட்டி தெரிந்ததாய்/

இந்தக்கைலிஎஸ்,எஸ்டெக்ஸ்டைல்ஸ்ஸில்எடுத்ததுதானே?என்றாள் மகள்/ அங்கும் எம்,என் கடைக்கும் தவணைப்பணம் கட்ட வேண்டும் இம்மாதம். என ஞாபகப்படுத்தினாள்மகள்.“ஒருதடவஎன்னயஅங்க கூட்டீட்டுப் போனிங் கதானே? எனக்கானசுடிதார் மெட்டீரியல் அங்க சரியில்லைன்னு ஒடனே எஸ்,எஸ்டெக்ஸ்டைல்ஸில போயி சுடிதாரு எடுத்துக்குடுத்தஆளுல்லப்பா நீங்க,ஒங்க பாசம் இருக்கே ,அப்படியே அடிச்சிபோடுற பாசம் இல்ல,தள்ளி வச்சி நிக்குற பாசமும் கெடையாது”.

இட்லித்தட்டின் முன்னாய் அமர்ந்துஅவள்இப்படிச் சொல்வது ஒன்றும் புதிதில்லை.வார நாட்களின் நகர்வுக்கு ஊடாக பலதடவை பேசிவிடுவாள். அப்படியானஅவளதுதுள்ளல்பேச்சுஇவனுக்கும்,இவன்மனைவிக்கும்உவப்பற்ற
தாகவோகசந்து போனதாகவோ இருந்ததில்லை.

அரசுக்கல்லூரியில்இளங்கலைமூன்றாமாண்டுபடிக்கிறாள்,முதலாமாண்டு சேர்க்கையிலேகல்லூரியின்அடையாளமாகித்தெரிந்தவளாய்ஆகிப்போனாள்/
கல்லூரியில்சேர்ந்தமுதல்மாதத்திலேயேஉடன்படித்தஒருவன்தரக்குறைவாய் பேசிவிட்டான் என செருப்பெடுத்துக்காட்டி விட்டாள். அவன்அன்றிலிருந்து பீல்ட்அவுட் என்றார்கள்.அவளும் சொல்லிப் பார்த்திருக்கிறாள் கேட்கவில் லை, உடன்நட்பானவர்களிடம்கேட்டதற்குஅவன் அப்படித்தான் வேண்டாம் வம்பு அவனிடம் எனச்சொல்லி விட்டார்கள்.சரி என இவளால் விட்டுவிட முடியவில்லை.மனம்கறுகறுவெனஇருந்தஒருபொழுதன்றில் கூடிக் கொண் டே போன அவனது பேச்சு முற்றிப்போய் விட செருப்பெடுத்துக் காட்டி விட்டாள்.

யாரும் எதுவும் பேசிவிடவும் தடுக்கவும் முன் வர வில்லை. தலையைக் குனிந்துகொண்டுபோய்விட்டான்அவனும்அவன்உடன்வந்தகூட்டாளிகளும்/

மகள் கல்லூரிலிருந்து வந்து விஷயம்கேள்விப்பட்டதும்கொதித்தும் பொங் கியும்போய்விட்டாள்அவளதுதாய்,/”நீபேசாம வீட்டுல கெட,நாளையிலயிரு ந்து/ இப்படி போற யெடம் வார யெடத்துலயெல்லாம்வம்பு இழுத்துக்கிட்டு வந்தி யின்னா எப்பிடி,,,,?எவனாவது மனசுல வன்மம் வச்சிக்கிட்டு இருந்து ஏதாவது பண்ணீட்டான்னா,,”,எனநீளம்கொண்டுபேசியஅவளதுஅம்மாவினது பேச்சின் ஊடாகவே இவன் வந்து விடுகிறான் வீட்டிற்குள்ளாய்/

“அட போவியா சும்மா அங்கிட்டு,,,,,அதெல்லாம் பெரிசுசா நீ நினைக்கிற மாதிரிஒன்னுமில்ல,வெடலத்தனம்மொளச்ச யெளந்தாரி வயசுப்பய, கொஞ் சம் ஓவரா பேசியிருக்குறான்,அதாநம்ம பொண்ணு இப்பிடி நடந்துக்கிற வேண்டியதாப் போச்சு,சீக்குக்கோழியா வீட்டுக்குள்ள மொடங்கிக் கெடந்த அந்தப்பையன அவுங்கவீட்லபோயி பாத்து பேசீட்டுதான் வர்ரேன், விஷய த்தச்சொன்னதும் அவுங்க அப்பா,அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க ,சமாதா னம்சொல்லீட்டு வர்ரேன்.பொம்பளப்பசங்கன்னா அப்பிடியே எது சொன்னா லும் கேட்டுட்டு பேசாம தலைகுனிஞ்சி போனதெல்லாம் இனி நடக்காது, ஏங் பொண்ணு இப்பிடித்தான் இருப்பா,இன்னம் சொல்லப்போனா காலே ஜுல அவள அந்த மாதிரி செருப்பெடுத்து காம்பிக்கச்சொன்னது நாந்தான். என்ன நான்அடிச்சிட்டுவரச்சொன்னேன்,அவசெருப்பகாம்பிச்சிட்டுவந்துருக்கா,அதுக் கே அவன் பீல்ட் அவுட்டு,இனிமே நம்ம பொண்ணு காலேஜிக்கு நிம்மதியா போய் வருவா”,எனஅன்று சொன்ன சொல்தான் அவளை அந்தக் கல்லூரியில் அடையாளப் படுத்தியது.கூடவே நல்ல படிப்பும், அவளது நன் நடைத்தையும் அவளை கைதூக்கி விட்டதாய்/

பிஸ்கட்க்கலரில் சின்னச்சின்னதாய் மலர்ந்திருந்த பூக்கள் சிரிக்க அவள் அணிந்திருந்தசுடிதார்எஸ்.எஸ் டெக்ஸ்டைல்ஸில் எடுத்ததுதான். அவளது சுடிதாரின் நிறத்தை ஒட்டித்தெரிந்த தரையின் டைல்ஸ்கள் ட்யூப் லைட் வெளிச்சம் பட்டு மின்னியதாய்/

நல்லதானவெளிர்க்கலர்டைல்ஸ்,அழுக்குத்தெரியாமல்இருக்கஏதாவதுஅடர்க் கலரில் எடுங்கள் என மனைவி சொன்னதையும் கேட்காமல் பிடிவாதம் காட்டி வாங்கிய டைல்ஸ் இது.

”ஹிம்,,,,இதெல்லாம்கொடுமதான்,இந்தக்கொடுமயஎங்கிட்டுகொண்டோயிசொல்றாதுன்னுதெரியல,,,,,எதெடுத்தாலும்வெளிர்க்கலர்தானா?வெளிர்க்கலர் பொடவ, வெர்க்கலர் ஜாக்கெட்டு,வெளிர்க்கலர் சுடிதாரு வெளிர்க்கலர் பேண்ட்,வெளிர்க்கலர் சட்டைன்னு இப்பிடியேபோயிக்கிட்டிருந்தாஅப்பறம் நம்மவீட்டுஅடையாளத்தையும்வெளிர்க்கலர் வீடுன்னு சொல்ல ஆரம்பிச்சு ருவாங்க/ ஆமாம் பாத்துக்கங்க” என்றாள். இந்த டைல்ஸ் பதித்த அன்று..

”விடும்மாஅப்பாஎதுசெஞ்சாலும்சரியாத்தாம்மாஇருக்கும்,என்ற பெரியவள் அப்படியே கையில் நுனியில்இருந்தஇட்லியின் விள்ளலை தட்டில் போட்டு விட்டு இவனின் மடியில் சாய்ந்து கொண்டாள்.

சுழன்று கொண்டிருந்த மின் விசிறியின் சுழற்சியும்,எரிந்து கொண்டிருந்த ட்யூப் லைட்டின் வெளிச் சமும் மகளின் முகத்தை பிரகாசமாக்கிக் காட்டி யது. தலையின் முடிகள் இவனதுமடியிலும்,தரையிலுமாய்படர்ந்திருந்தது.

படித்திருந்தவளை தலை கோதியவாறே சிறிதுநேரம்உற்றுப்பார்த்தவனின் கண்களில் நீர் சுற்றிவிடுகிறது. இப்படித்தான் ஆகிப்போகிறதாய் மனது பெரும்பாலான நேரங்களிலும்,நெகிழ்வுக்குள்ளாகிற பொழுதுகளிலுமாய்/

மனதின்ஆற்றாமைஇப்படி கண்ணீராய் சுற்றிவிடுகிற நேரங்கள் நன்றாகத் தான் இருக்கிறது.சிறிதே மந்தமாயும்,செயல் பாடற்ற மனோநிலை நிறைந் துமாய்/

இதை உணர்ந்தவளாகவோ என்னமோ இவனுக்கு எதிர்த்தாற்ப் போல் அம ர்ந்துசாப்பிட்டுக்கொண்டிருந்தமனைவி ஏய்,,,,,சாப்புட்டுஎந்திரிங்கமொதல்ல ரெண்டு பேரும் என இவனுக்கு வலப்புறமாய்மடியில் படுத்திருந்த சின்ன வ னையும் சேர்த்து சப்தம் போட்டாள்.

சிரித்தவாறே எழுந்த பெரியவள் சின்னவனைப்பார்த்து கண்ணடித்து இது ”அம்மாவோட யெடமாம்,நம்மல்லாம் படுக்கக்கூடாதாம்”.என்றாள்.

“ஆமாடிஎன்னஇப்ப,ஏங்புருசன்மடிஎனக்குத்தான்.நாங்கநெனைச்சாநாளைக்கே கூட ஊருக்கெல்லாம்பத்திரிக்கவச்சிஇன்னொருகல்யாணம் கூட பண்ணிக் குவோம்”. என்பாள்.

“பண்ணிக்கங்க,பணிக்கங்கயாருவேணாண்ணாங்க,தெனம்,தெனம்கூடஒரு
கல்யாணம்பண்ணிக்கங்க,மாங்கல்யம்தந்துனானேன்னுநானும்தம்பியுமா
வந்துவாழ்த்துச்சொல்லிதாலிக்கயிறுஎடுத்துத்தர்ரோம்.”என்கிறபேச்சுக்கு மகளையும்,மனைவியையும்பார்த்தவாறுஏதும் சொல்லாத வனாய் சிரித்துக் கொள்வான். இவன்.

விளைந்துநிற்கிறாள்,மகள்.வீட்டில்அவளதுஅம்மாவின்நகைதவிர்த்துதங்கம் எனச்சொல்லிக்கொள்ள ஒரு பொட்டு கிடையாது, நாளைக்கே மாப்பிள்ளை அமைந்தாலும் பார்க்க வேண்டியதுதான்.

அன்று ஆங்கிலச்சேனல் பார்த்துக்கொண்டிருக்கும்போது வீட்டின்னுள்ளாய் வந்த நினைவு இன்று மறுமுறையுமாய் மனம் கொள்கிறதாய்.

நேற்று ஒருமணி நேரம் நிற்காமல் சிந்தாமல்,சிதறாமல் பெய்த மழையின் ஈரம்தரைகாத்து தண்ணீராய் கட்டிக்கிடக்கிறது வீட்டின் முன்உள்ளவெற்று வெளியில்/

விழிவிரித்துப்பார்த்தபோதுதெரிந்தகாட்சியை உற்றுநோக்க கண்களை விழி விடுத்து கழட்டி அனுப்புகிறான்,தண்ணீரின் மேற்பரப்பெங்கும் நீந்தித் திளைத்து பரவித்தெரிந்த பூச்சி,பொட்டுகள்,மற்றும்,மற்றுமான ஜந்துக்களை ஓங்கி வளர்ந்திருக்கிற சீமைக்கருவேலை முட்களின் ஊடாக பார்த்து திளைத்துவிட்டுவந்து திரும்பவுமாய் வந்து விழிஉருண்டைகள் இரண்டும் தன்இடம்தேடிமிககவனமாயும்,ஜாக்கிரதையுடனுமாய்அமர்ந்து கொள்கிறது.

தண்ணீரில்தாவித்திரியுமா பச்சோந்தி தெரியவில்லை சரியாக, டட்,டட்,டட் ,,,,,,,,,,,,,,பரந்த் விரிந்திருந்த தண்ணீரின் மென் பரப்பின் மீது எறியப் பட்டகல் ஒன்றுசெதுக்கிசென்றால்அதன் வேகமும் ,கனமுமாய் சேர்ந்து எலுப்பும் வட்ட வரிகளை பார்ப்பது போல் இருந்தது.தண்ணீரில் இருந்து தாவி வந்து தரை தொட்டபச்சோந்தியை பார்க்கிற பொழுது/

தண்ணீர்பரப்பின் மீது விரிந்த வட்டங்கள் பச்சோந்தி தரை தொட்டு கடந்த பின்னுமாய்விரிந்துகாட்சிப்படுகிறதாய்,விரிந்தவட்டங்களின்விரிவுபட்டஅகல
த்தைபார்த்தவாறேகையிலிருந்தகாய்கறிப்பையுடன்வீட்டிற்குள்ளாய்நுழைகி றான்.

அன்று ஆங்கிலச்சேனலில்பார்த்தபச்சோந்தி இன்று இங்கு தரை தொட்டுப் போகிறதாய்/

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
ஆனாலும் இப்பதிவின் செய்திகளை ஏற்கனவே படித்த நினைவு வருகிறது

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக.
ஏற்கனவே பதிவிட்ட பதிவுதான்,
இது ஒரு ஞாபக மூட்டலே......./

துரை செல்வராஜூ said...

ஏற்கனவே பதிவிடப்பட்டது தான்- எனினும்,
எனக்கு புதிய பதிவு..

அருமை.. அருமை!..

vimalanperali said...

வணக்கம் துரை செல்வராஜ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் சமீபத்திய வெளியீடான ‘இச்சி மரம் சொன்ன கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலில் இதே கதையைப் படித்து மகிழ்ந்தேன். இங்கு மீண்டும் படித்ததில் மகிழ்ச்சியே.

தங்களின் ’இச்சி மரம் சொன்ன கதை’ தொகுப்பு நூல் பற்றி என் வலைத்தளத்தினில் ‘நூல் அறிமுகம்’ என்ற தலைப்பினில் தனிப்பதிவாக இன்று வெளியிட்டுள்ளேன்.

அதற்கான இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2016/07/blog-post_26.html

இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

பாராட்டுகள். வாழ்த்துகள்.

அன்புடன் VGK