கனி டிபன் சென்டரில் ரமேஷ் சாப்பிடப்போகச்செல்கிற நாட்கள்தோறுமாய் அவனைப்பார்ப்பதுண்டு.
ஆரம்பத்தில்அவனை யார் என்ன என்பது அவனுக்குத் தெரியாது. கடைக்குச் சாப்பிடிட வருகிறவர்களில் ஒருவராய்த்தான் அவனை நினைத்தான்ரமேஷ்/
பெரும்பாலுமாய் ரமேஷ் சாப்பிடப் போகும் போதோ அல்லது சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதோகடைக்குள்ளாய்நுழைவான்நெஞ்சைமுறுக்கிவிடைத் தவனாய்/
அவன் வருகையில்கடையில் இருக்கிற அனைவரும் பயப்படவேண்டும் என நினைப்பான்போலிருக்கிறது.எனஅனைவரையும்நினைக்கவைக்கிறதோற்றம் தாங்கிய வனாய்த்தான் கடைக்குள் வருவான்.
கடைக்கு வெளியே சைக்கிளை ஸ்டாண்ட் போடும்போதே அவனது முரட்டுத் தனம் தெரியும்.கடைக்கு வெளியில் இருக்கும் கட்டாந்தரையில் சைக்கிளை சப்தத்துடன் ஸ்டாண்ட் போட்டு நிறுத்துவான்.அவன் சைக்கிளை நிறுத்துகிற சப்தம் கடையின் வாசல் வரை எட்டும்.
அதுவரை கடைக்குள்ளாய் பாடிக்கொண்டிருந்தரேடியோசப்தம்நின்றுபோகும். ஏனென்றால் இவன் கடைக்குள் வரும் பொழுது எந்த சப்தமும் இல்லாமல் கடை நிசப்தமாக இருக்க வேண்டும்.
அவன் சாப்பிடும் போது அவனது செல்போனிலிருந்து பாடல்கள் மட்டுமே கேட்கும்,
போன வாரத்தில் ஒரு நாள் கடைக்குச்சாப்பிட வந்திருந்த ஒருவர் இப்படித் தான் போனில் பாட்டுக்கேட்டவாறே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் அவன் வந்த பின்னுமாய் பாடல்களை கேட்டுக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தி ருக்கிறார்.அவனுக்கு கோபம் வந்துவிட எவண்டா நான் சாப்புடர்ற நேரத்துல பாட்டுக்கேட்டுக்கிட்டுஇருக்குறது,எவனாஇருந்தாலும் கடைய விட்டு வெளிய போயிரு என சப்தம் போட்டான், பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தவர் ஒன்றும் பேசாமால்சாப்பாட்டைதொடர்ந்துகொண்டிருந்தார்பாட்டைக்கேட்டுக் கொண் டே/
நிறை கடையாக ஆட்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
சாப்பிடஉட்கார்ந்தஅவன்எழுந்துபோய்பாட்டுக் கேட்டவாறே சாப்பிட்டுக் கொண் டிருந்தவரிடம்போய்நான்சொல்றது காதுல விழலயா ஒனக்கு, தடிமாட்டு,,,,,,,,,,, ஒழுக்கமா எந்திரிச்சிப் போயிரு இல்ல, ஒடம்பு ஒடம்பா இருக்காது பாத்துக்க,, என அவன் சொன்ன மறு நிமிடம் சாப்பிட்டுக் கொண் டிருந்தவர் சாப்பிட்ட கையோடு எழுந்து ஏண்டா,,,,,,,,,,,,,,,என ஓங்கி அடித்து விட்டார் அவனை/
அடித்தவருக்கு வயது 60 வயதுகுள்ளாய் இருக்கலாம்,ஏண்டா,,,,தினத்துக்கும் ஒனக்கு இதே வேலையாப் போச்சா,ராஸ்கல்இனிமநான் சாப்பிட்டு இருக்கும் போதுஒன்னையப்பாத்தேன் தோல உரிச்சி தொங்கவுட்டுருவேன் என சப்தம் போடவும் ஆடிப்போனஅவன் ”என்னைய ஆள வச்சா அடிக்கிறீங்க” என சப்தம் போட்டுக்கொண்டே போய் விட்டான்.
அன்றிலிருந்துபாட்டுக்கேட்டபெரியவர்சாப்பிடும்போதுஅவன்வருவதில்லை. கேட்டால் வியாபாரம் நடக்குற யெடத்துல எதுக்கு சண்ட சத்தம் போட்டுக் கிட்டுஎன்பான்,ஆனால் யாதர்த்தம் வேறாக இருந்தது, பெரியவரை ரோட்டில் பார்த்தால் ஒன்று தலையை குனிந்து கொள்வான் அல்லது பார்வையை வேறு பக்கமாய் திருப்பிக் கொள்வான்.இதையும்மீறி ஒருநாள் டீக்கடையில் வைத்து அவனைப் பார்த்த பெரியவர் தலையை குனிந்தவாறே அமர்ந்திருந்த அவன ருகே போய் தம்பி அன்னைக்கி ஒங்கள அடிச்சிருகக்கூடாது,ஏதோ ஒரு வேகம் ,ஏதோ ஒரு கோவம்,நீங்க நித்தமும் கடையில நடந்துக்கிற முறை,,,,, எல்லாம் சேந்து என்னைய கோவப்பட வச்சிருச்சி தம்பி,அதான் தம்பி கை நீட்டீட்டேன்,மன்னிச்சிக்கங்க, தம்பி நல்லாயிருந்தா ஒங்களுக்கு ஏங் பையன் வயச விட பத்து வயசு கம்மியா இருக்கும்.,,,,,,என அன்று அவனிடம் நிறைய பேசியவர் கடைக்கு வருவதில்லை மறுநாளிலிருந்து/
கடைக்குள் நுழையும் போது வெளியில் இருக்கிற ப்ளாஸ்டிக் வாளியில் கை கழுவி விட்டு உள்ளே வருபவன் கல்லாவின் அருகே வெட்டி வைக்கப்பட்டி ருக்கிற இலைகளில் ஒன்றை எடுத்துப் போய் எடுத்துப்போய் கடைக்குள்ளாய் போடப்பட்டிருக்கிற மூன்று டேபிள்களில் ஏதாவது ஒன்றில் உட்கார்வான்,
அந்த இடத்தில் அத்தனை டேபிள்களையும் அதன் முன்னால் உட்கார்வதற்கு சேரையும் போடுவதே பெரிய விஷயம்/
சின்னக்கடைகள் தோறுமாய் காட்சிப்பட்டுக்கிடக்கிற விஷய மாய்கடையின் மேற்க்கூரையாய் ஓடுகளை மூடிக்கொண்டிருந்த கட்டிடத்தின் சுவர்கள் ஆங் காங்கே பெயர்ந்து சுண்ணாம்பு தெரியும்.தரையின் தளம் கடை முழுவதுமாக பெயர்ந்தும் பள்ளம் விழுந்தும் விரிசல் விட்டுப்போயுமாய்/ இதெற்கெல்லாம் வழிவிட்டும் இதன் மீதுதான் டேபிளை போட்டும் அதனூடாக நடமாடியும் பரிமாறியும் அதை ஹோட்டல் என்று அர்த்தப்படுத்தி வைத்திருந்தார்கள்.
கட்டையான உருட்டுக்கட்டை உடலைத்தூக்கிக்கொண்டு வருகிற அவன் டேபிளில் அமர்ந்ததும்ரெடியாகபரிமாறஆள்வரவேண்டும். பெரும்பாலுமாக அவனது மாமியார்தான் அவனுக்குப்பாரிமாறுவார்.இட்லி, தோசை, பொங்கல் பூரி வடை என ரகத்திற்குஒன்றாகச் சாப்பிடுவான். சொந்தக் கடை தானே என ரகத்திற்கு ஒன்றாக சாப்பிடும் அவன் அமைதியாக வையாமல் சாப்பிடும் நாட்கள் ரொம்பக்குறைவு.என்ன சமைக்கிறீங்க இட்லி கல்லுப்போல இருக்கு, தோசை சரியாவே வேகல,பொங்கல் இப்பிடியா வெறச்சிப்போயி இருக்குறது. பூரி என்னமோ அப்பளத்த நொறுக்கிப்போட்ட மாதிரி,,,,,கொடும மனுசன் சாப்பு டுவானஇத,நித்தம்இந்தஅக்கப்போரா,,,,,எனஅவனாக யாரிடமும் சொல்லாமல் காற்றில் பேசுவது போல பேசிவிட்டும் முழுதாக சாப்பிட்டு விட்டுமாய்/
கழுவிய கையின் ஈரம் காயாமல் கல்லாவில் கையை விட்டு அம்பதோ நூறோ எது சிக்குகிறதோ எடுத்துக்கொள்வான்.ஐம்பது என்றால் இரண்டு நோட்டுக்கள்,நூறுஎன்றால் ஒரு நோட்டு மட்டும்,,,,என நிமிர்ந்த பார்வையுடன் தெனாவெட்டாய் போய் விடுவான்.
அவன் போனதும் அவனது மாமியார்புலம்ப ஆரம்பித்து விடுவார். இந்த கைப் புள்ளைக்காத்தான் பொறுத்துப் பொறுத்துப் போக வேண்டியிருக்கு.இல்லைன் னாஎன்னைக்கே அத்துவிட்டுப்போயிருக்கலாம்.நாசமாப்போனயெழவெடுத்த பய,மில்லுல வேல பாக்குறான், ஓரளவு சம்பளம் வாங்குறான்.உள்ளூர்ப்பய அதுவும் ஒரே தெருவுல குடியிருக்கான்னு நெனைச்சிதான் ஏங் மகள இவனுக்குக் குடுத்தேன்.இப்ப ஒரு கைப் புள்ள வேற ஆகிப்போச்சி,ஒழுக்கமா வேலைக்கிப்போகாமமைனர்த்தனம்பண்ணிக்கிட்டுஊரச்சுத்தீட்டு திரியிறான், இவன் கெட்ட கேட்டுக்கு அது ஒண்ணுதான் கொறச்சலு, வேலைக்குப் போகாம இருந்தாக்கூடபரவா யில்ல,பேசாம கடையப்பாத்துக்கிட்டு எங்க கூட ஒத்தாசை யாவாவது இருந்துட்டுப் போலாம்.எனக்கு இன்னொரு ஆம்பளப் புள்ள இருக்குன்னு நெனச்சிக்கிறேன். அதவிட்டுட்டுஇப்பிடி சோக்குத் தனம் பண்ணிக் கிட்டுத் திரிஞ்சா அது எத்தனை நாளக்கி எங்க போயி நிக்கும்ன்னு தெரியல,எல்லாம்ஏங்தலையெழுத்து.எனதலையில்அடித்துக்கொண்டுஅழுவாள் மாமியார்காரி.
கடைக்கு வருகிறவர்கள் இதை சங்கடமாக உணரக்கூடும் என பூரி சுட்டுக் கொண்டிருப்பவர் சொல்லவும் கண்களைத்துடைத்துக்கொண்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவாள்.
அந்தசங்கடத்தையும் அழுகையையும்கனி டிபன் செண்டரில்சாப்பிடச் செல் கிற தினங்கள் தோறுமாய் கடையில் பார்க்க நேர்வதுண்டு/
8 comments:
இப்படியும் மனிதர்கள்..
யாருக்கு எது நேருமென்று யாரறியக் கூடும்!..
காட்சிகள் கண் முன் தோன்றுகின்றன! அருமை!
யதார்த்த வாழ்க்கை சில பேருக்கு...
த.ம. 2
வணக்கம் கில்லர் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் துரை செல்வராஜ் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அருமை
நன்றி நண்பரே
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment