குமிழிட்டபஞ்சுபொதிபோலான அதன் உடலிலிருந்து
இரண்டு பக்கமுமாய் முளைத்து நீண்டிருக்கிற கால்கள் பாவ தரையிலோ அல்லது சுவற்றின் மீதோ
நிற்கையில் முதலில் அதை அடித்து விடத்தான் தோணுகிறது.
ஏன்அப்படிஎனத்தெரியவில்லை.பாம்புகடிச்சாபத்து நிமிஷம்,நட்டுவாக்காலி கடிச்சாநாலுநிமிஷம் என கட்டவிழ்த்து விடப் பட்டிருக்கிற
கதைகளில் எட்டுக் கால்ப்பூச்சியைப்பற்றிய கதையும் அடங்கியதாய் இருந்தது.
”பாம்பு பல்லி பூரான்,தேள்,,,,என்கிற எந்த
விஷப் பூச்சியை விடவும் எட்டுக் கால்ப்பூச்சிஆபத்தானது சார்.கடித்தால் உடலெல்லாம்
தடிப்புதடிப்பாக வந்து விளார்விளாராகவீங்கி விடும் ஜாக்கிரதை,இனி அந்தப்பூச்சியைப்பார்த்தால்
தள்ளி நில்லுங்கள் எட்டடி,அதைப்பற்றி நினைப்பு வந்தால்போய்விடுங்கள் காதாதூரம்”என்பது
இவனுக்குத்தெரிந்த ஒருவரின்அகராதி,,/
இன்றுகாலையில்குளிக்கச்செல்லும்முன்பாகபாத்ரூம்கதவைதள்ளிதாளிடப் போகும்போதுதான்கவனித்தான் வலது புறச்சுவரின் மேலாய் எட்டுக் கால்ப்
பூச்சி நின்றிருந்ததை/
அந்தக்கதவைசெய்வித்தவன்யாராக இருக்கும்
என யோசிக்கையில் சீட்டுப் போட்டுகுலுக்கிப்பார்க்காமல்சட்டென நினைவுக்கு வருவது தச்சுத் தொழில்
பார்க்கிற முருகவேல்தான் என்ப்பது சாஸ்வதமே/
முருகவேலை பரம்பரைத்தச்சுத்தொழில் செய்பவர்
என யாரும் சொல்லி விட மாட்டார்கள் என்ற போதும் அவர் அதைத்தான் செய்து வந்தார். முரு கானந்ததின் அப்பா விவசாயி,இரண்டே முக்கால் குறுக்கம்நிலம் வைத்துக் கொண்டு சளைக்காமல் பாடுபடுபவர்,மாற்றுப்பயிரைதேடித்தேடிவிதைத்து மகசூல் எடுப்பவர்,
ஒருதடவைவிதைத்ததைமறுதடவைவிதைக்கமாட்டார்.முதலில் மிளகாய்ச் செடி நட்டிருந்தால்
இரண்டாம் முறை கம்பு கேப்பை எனப் போடுவார், மூன்றாம் முறை வேறெதாவது,நான்காம் முறை
இன்னும் இன்னுமாக என ஏதாவது செய்து திரும்ப ஒரு முறை வலம் வர இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆக்கிவிடுவார்.அதனால்
அவருக்கு போட்ட பயிர் கொஞ்சம் கைகொடுத்தது,
”எது போட்டாலும் அவரு தோட்டத்துல நல்லா வருதுப்பா,நம்ம
சேந்தடியா கொஞ்சம் நேரம் நின்னிருந்தம்ன்னா நம்ம காலடியில வேர் விட்டுரும் போல இருக்கு,அப்படி
வச்சிருக்காரு தோட்டத்து மண்ண”,,,எனச்சொன்ன அவரது தோட்டத்தில் ஒரு முறை மிளகாய்ச்செடி
நட்டிருந்த சமயம், அது விளைந்து பழங்களாய்த்தொங்கியநேரம் மிளகாய்ப்பழம் பெறக்கப் போயிரு க்கிறார்கள்
நான்கு பேர். கூலியாட்களோடு சேர்த்து முருகவேலின் அம்மா வும்/
போனநான்கு பேரில் ஒவ்வொருமாய் ஒரு நிறை
எனபிடித்துப் போயிருக் கிறார்கள்.ஒவ்வொருவர் முன்புமாய் அந்தப்பக்கம் இருப்பது இந்தப்பக்கம்
தெரியாததுபோல்அடர்ந்து வளர்ந்து மிளகாய்ச்செடிகள் நிறைந்து குலுங்கி நிற்கிறது. குனிந்து
பழம் பெறக்குகிற பெண்களின் பார்வையில் செடிகள், செடிகளில் காய்த்து நிற்கிற மிளகாய்ப்பழங்கள்
அடர்ந்து நிற்கிற இலைகள் இவைகள் தவிர்த்து வேறெதுவும் தெரியாததாகவே இருக்கிறது.
செய்கிறவேலையில்மட்டுமேகவனம்கொண்டமுருகவேலின்அம்மாமிளகாய் ப்
பழங்களை பெறக்கிக்கொண்டுமுன்னேறிப் போயிருக்கிறாள்.
வேலையில்இருந்தகவனம்,கைகளின் வேகம்,வேலையில் காட்டிய முனை ப்பு
தவிர்த்து வெறெதுவும்அவளது கவனத்தில் படாமல் போக செடிகளின் உள்ளே தனது முன்னால் எட்டிச்சென்று
கொண்டிருந்த பாம்பை கவனிக்கா மல் லேசாக மிதித்தும் விட்டாள், மித்தவள் சுதாரித்து காலடியில்
நெளு நெளுப்பு கண்டு ”அய்யோ பாதகத்தி,,,,செத்தேன் இன்னைக்கி……..”என பின் நோக்கி ஓடி
விட்டாள்.
அவள் வேகமெடுத்து மூச்சு வாங்கி படபடப்புடன்
பின் நோக்கி ஓடவும் சினம் கொண்ட பாம்பு சீற்றம் கொண்டு எழுந்து ஆளுயரத்திற்கு நிற்கவும்
மிகவும்சரியாகஇருந்திருக்கிறது,முருகவேலின்அம்மா போட்டசப்தம் முருக வேலின்அப்பாவை
எட்டித்தொடவும் ஓடிவந்து விட்டார் கையில் கம்புடன்/ மோட்டார் ரூமில் எபொதுமே வைத்திருக்கும்
சுட்டமூங்கில் கம்பு உதவியி ருக்கிறது அந்நேரத்திற்கு/தலை தூக்கி நின்ற பாம்பின்கழுத்தில்ஓங்கி
ஒரு அடி,கவனம்பிசகாமல்அடித்ததில்அந்தப் பக்கமாய்
பக்கத்துத் தோட்டத்தில் போய்விழுந்திருக்கிறது. காற்றின் திசையில் அடியின் வேகம்தாங்கிபறந்து சென்றி விழுந்த பாம்புவிழுந்தவேகத்தில்அரை உயிராகக்கிடந்திருக்கிறது.
பக்கத்துத்தோட்டம்தரிசாய்இருந்ததுசௌகரியமாகப்போய்
விட்டது, விழுந்த பாம்பு நெளிந்து நின்றதை அடையாளம் காண தோதாய் இருந்தது.
அந்தஅடையாளமேமுருகவேலின் அப்பாவை சரியான
அடையாளம் கண்டு பாம்பை அடிக்க வைத்திருக்கிறது,”ஏண்டி ராஸ்கல் ஏம் பொண்டாட்டியவா கடிக்கவர்ற,நான்
கூடஅவள ஒருசுடு சொல் சொன்னதில்ல இதுநாவரைக் கும், நீயி எம்புட்டுக் காணுவ,நீயி வந்து
அவளத்தொட வர்றயா கொன்னு புடுவேன் கொன்னு”எனச்சொல்லியவாறேயும் இறைத்த மூச்சைகையில் பிடித்தவாறும்
ஓங்கி ஓங்கி பாம்பை அடித்திருக்கிறார்.பாம்பு விரைத்து இறந்து போனது,
அவர் மனைவியின் மேல் கொண்ட நேசத்தையும் பாசத்தையும்
அன்பை யும் காதலையும் அவர்களது ஊரே அறியும்.காலம் போன காலத்துல தேவையா அவுங்களுக்கு
இதெல்லாம் எனச்சிரித்துப்பேசுபவர்கள் ஒரு முன்கதையைச்சொல்வார்கள் முருகவேலின் அம்மாவைப்பற்றியும், அப்பா வைப் பற்றியுமாய்/
ஒரு வெயில் நாளின் பின் இரவிலாய் பத்து மணிக்கும்
மேலாய் குளித்து விட்டு ஈரத்தலையுடன் அமர்ந்திருந்தவளின் கூந்தலை துவட்டித்து விட்டு
அள்ளி முடிந்து கொண்டை போட்டு வலை மாட்டிவிட்டு கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு,,,கொண்டவள்
முகமோ,,,,என ராகம் இழுத்திருக்கிறார் எல்லோரும் தூங்கிப்போன இரவுதானே யாருக்கும் கேட்காது
என்கிற தைரிய த்தில்/ உண்மையில் அந்த அம்மாளுக்கு கூந்தல் வெளுப்பு,அவள் வைக்கும் குங்குமம்
லேசாக திருநீறு கலந்து இருக்கும்/
தூங்கிப்போன பிள்ளைகளுக்கு கேட்காத பாட்டு
கேட்காத சப்தம் அந்த நேரமாய்வெளியில்நடமாடிக்கொண்டிருந்தபக்கத்து வீட்டுக்காரருக்கு
கேட்டு விட்டது,
”கறுப்பாமில்லகறுப்பு,சிவப்பாமில்ல சிவப்பு
வாடி வா மாப்புள காலையில ஒன்னைய இழுத்து தெருவுலவிடுறேன்”என உறைத்தசூளின் படி செய்தும்
விட்டார்.
பக்கத்து வீட்டுக்காரருக்குக்கேட்டது ஊருக்கெல்லாம்
தெரிந்தது எப்பொழுது எனத் தெரியவில்லை. மறுநாள் விடியலில்/
எல்லோரும்கேலிபண்ணவும் ஏய் போங்கடா,போங்கடா
போக்கத்த பையலு களா,ஏங்பொண்டாட்டிக்குநான்தலைவாரிவிடுறதயாருகேக்குறதுஎனச்சொல்லி சிரித்துத்தட்டி
விட்ட பேச்சு பின் மாயங்களில் உருவெடுத்துத் திரிந்தது வேறு கதையாய்,,,,,புள்ளைக இல்லாத வீட்ல துள்ளி வெளையாடும்ன்னு
கேள்விப்பட்டுருக்கோம்,இதுங்கஎன்னாடான்னா ரெண்டும் புள்ளைங்க இருக் கு ம் போதே துள்ளி
வெளை யாடுதுக போலயிருக்கு,,/
இந்த ஐம்பத்தி ரெண்டு வயசுல இப்பிடியெல்லாமா
ஒரசிக்கிட்டுத் திரியச் சொல்லுதுஎனச்சொன்னவர்கள்முன்பு
நாங்கஅப்பிடித்தான்எனதைரியமாகச் சொல்லி சொன்ன சொல்படி இன்றைக்கும்மனசுக்குள் இளம்
காதலர்களாய் ஒப்பனைபூண்டுதிரிபவர்களாய் காட்சிப்பட்டார்கள் என்பதுவே அவர்களைப் பற்றிய
முன் கதைச்சுருக்கமாக ,,,/
அவர்களது பையன் முருகவேல்தான் கதவு செய்தது.
அந்தக் கதவின் மேலாகநின்றிருந்தசுவரில் நின்ற
எட்டுக்கால் பூச்சியின் இருப்பையும் அதன்
அசைவற்றிருந்த தன்மையையும் பார்த்தவன் அதன் பார்வை எங்கோ நிலை குத்தி எதையோ குறி வைத்துக்காத்திருக்கிறது
போலும் என அவதானிக்கிறான்.
அதன் நிறத்தையும் உடலையும் கால்களையும் மட்டுமே
பார்த்த இவன் இது நாள்வரைஅதன் கண்களைப் பார்த்ததில்லை.
அவ்வளவு உயரத்தில் இருக்கிற அதை எப்படி எட்டி
கை நீட்டி அடிப்பது,,,?என யோசித்துக்கொண்டிருக்கையில் முதுகு தேய்க்கிற பிரஷ் சோப்புக் கல்லில்
இருப்பது தெரிந்தது.எடுத்து அதை தலை கீழாக திருப்பி வைத்துக் கொண்டு எட்டி கை நீட்டி
அடிக்க முனைகையில் ஓடி விடுகிறது வலது புறச்சுவரிலிருந்து அதன்பக்க வாட்டுச்சுவருக்கு/அடசண்டாளப்பாவி
தப்பிச் சிருச்சா,,,,,என பக்கவாட்டுச் சுவரில் அது படர்ந்திருந்த இடத்தை நோக்கி ஒன்றுஇரண்டுமூன்று என அடிக்கையில் ஒவ்வொரு அடியும் அது இருந்த இடத்தை விட்டு வௌகி வேறு
வேறான இடத்தில் விழுந்து நான்காவது அடியாக அதன் மீது விழுந்ததில் சட்டென சுருண்டு விழுந்து
விடுகிறது. கீழேவிழுந்ததைபாத்ரூம் குழிக்குள்ளாக தள்ளிவிட்டு விட்டு நிமிர்கையில்
லெட்ரின் கதவில் தொங்கிய பேண்ட்டின் நுனி லேசாக
தலை தடவிச் செல்கிறது.
நேற்று மாலைபோட்டிருந்த பேண்ட் அது.சட்டை
பேண்ட்டிற்குஅடியிலாய் இருந்தது.நேற்று முடிவெட்டிக்கொள்ளும் போது போட்டிருந்த பேண்ட
சட்டை இது.கடைக்காரர் கூடச்சொன்னார்,”வீடு பக்கத்துலதான இருக்கு போய் ட்ரெஸ் மாத்தீட்டு
வந்துரலாம்ல”என,/
இவந்தான்”இருக்கட்டுண்ணே,வீட்டுக்குப்போனாடீக்குடிக்கஅப்பிடியேஉக்காந்து எந்திரிக்க, டீவியில ரெண்டு பாட்டக்கேக்கன்னு போயிரும்
பொழுது, அப்படியே கொஞ்சம் சோம்பலாவும் ஆயிரும்/
இதுன்னாஇப்பிடியேஒரேதா வேலைய முடிச்சிட்டுப்போனமாதிரிஇருக்கும், இப்பயே முடி ரொம்பக்கூடிப்போன மாதிரி இருக்கு ,சின்னப்புள்ளைங்க
பாத்தாஒடம்புக்கு வராதது வந்துரும் போலத்தெரியுது.எனக்கே என்னையப் பாத்தா பயமாத்தெரியுது
ஆமாம் என்றான் கடையில் முடிவெட்டிக் கொள் பவரிடம்/
வீட்டில் பிள்ளைகள் சொல்வார்கள்,இப்ப என்ன
முடி வளந்துருக்குன்னு போயி வெட்டிக்கப்போறீங்க,பேசாம போயி வேலையப்பாருங்க என்பார்கள்,
அதிலும் சின்ன மகள் பண்ணும் கேலி இடுப்பைக்கிள்ளி விடும்/
இடுப்பைப்பற்றிப்பேசும்பொழுது இங்கு முத்துக்கிளி
அவர்கள் ஜெயச்சந்திர னின் இடுப்பைப்பற்றி கேலி பண்ணி பேசுவதை குறிப்பிட்டே ஆக வேண்டி யிருக்கிறது,
ஜெயச்சந்திரனை முத்துக்கிளி மாமா என்றுதான்
கூப்பிடுவார்,”மாமா ஒங்க இடுப்பு அழகா இருக்கு மாமா ஐ லைக் யுவர் இடுப்பு மாமா” என்பார்,
அப்படியாய்அவர் லைக் பண்ணிய இடுப்பைக்கொண்ட
ஜெயச்சந்திரன் ஆடி அசைந்து வருகிற தேர் போல்இருக்கிற வெள்ளை மனதுக்குச் சொந்தக் காரர்.
நல் உள்ளம் கொண்ட மாமனிதர்,
“ஒங்க வயசுக்கும் ஒங்க உடம்புக்கும் இப்பிடியெல்லாம்
பரோஉபகாரியாய் இருக்க ஒரு தனி மனசு வேணும்,,,”என்றால்”எல்லாம் ஆண்டவன் செயல் .நான்
என்ன செய்யப்போறேன் இதுல பெரிசா, ஏதோ என்னால முடிஞ்சது” என்பார்.
உடனே முத்துக்கிளி பேச்சின் ஊடாக விழுந்து
”சரி சரி அண்ணன் கூட பேசுனதுபோதும்,ஒடனேஇன்சூரன்ஸ்ஆபீஸ் போயி இடுப்பை இன்சூரன்ஸ்
பண்ணிருங்க,டக்குன்னுபோனாத்தா உண்டு,ஆமாம்,போனா வராது பொழுது போனாக் கெடைக்காது இந்தவாய்ப்பு”, ஆமாம்சொல்லிப்புட்டேன் என்பார்,
உடனேஉடன்இருக்கிறசெல்லமுத்துசார்ஏண்டா,டேய்ஏண்டாஅவரப் போயி,,, எனச் சிரிப்பார் கடகடவென,,,,,,/
பொதுவாகவேஅவரின்சிரிப்புஒருகிலோ மீட்டர்
தூரத்திற்கு போய் திரும்பும், இருந்த இடத்திலிருந்தேஇப்படியாய்ஒட்டு மொத்த அலுவலகத்தையே தன்
இடுப்பின்இருப்பால் சிரிக்கவைக்கும் ஜெயச்சந்திரனுக்கு முத்துக் கிளியை விட்டால்
வேறுஆள்இல்லை,முத்துக் கிளிக்கு ஜெயச்சந்திரனை விட்டால் வேறு ஆள் இல்லை. கேலி பேசுவதற்கு.
அப்படியாய் இடுப்பைக்கிள்ளுகிற பேச்சு எனவருகிற
சமயம் இது போலான நிறைந்து கிடக்கிற நினைவுகள் தவிர்க்க முடிவதில்லை.
அதுபோலாய் சின்ன மகள் முடி வெட்டிக்கொள்வது
பற்றிப்பேசும் பொழுது சிரிப்பு அள்ளி விடுகிறதுதான் இடுப்பைக் கிள்ளிக் கொண்டே,,/
ஆனாலும்கேட்கமாட்டான்இவன்,பழகிவிட்டதுஇவனுக்கு,,முடியைகுறைத்து வைத்துக்கொண்டே/
என்னத்துக்கு இதுக்கு பேசாம மொட்ட போட்டுட்டு
போகலாம்ல,,, எனச் சொல்பவர்களிடம் அழுத்தமாய் சிரித்திருக்கிறான் அவ்வப்பொழுதாக/ முடி
வெட்டுபவர் கூடக்கேட்டிருக்கிறார் ”ஏன் சார், இவ்வளவு ஒட்ட வெட்டாட்டி என்னஎன,,அதற்கும்
சிரிக்கிற இவன் என்ன இப்ப இதுதான் எனக்கு சௌக ரியமா இருக்கு” என்கிற ஒற்றைச்சொல்லி
நகர்ந்து விடுவான்.
சலூன்கடைக்காரர்தான் சொன்னார் ,”முந்தா நாளுதான்
சார் ஒரு வீடு முடிச்சோம்எல்பிஎஸ் நகர்ல”,,,,”அது பாருங்க கிட்டத்தட்ட 27 லட்ச ரூபாய் க்குச்
சொன்னாங்க, பலபேரு வந்து பாத்துட்டு போயிக்கிட்டு இருந்தாங்க, ஒண்ணும்தெகையிற மாதிரித்
தெரியல,எங்க பார்ட்டிக்காரரும் போயி பாத் து ருக்காரு,வீடுபுடிச்சிருக்கு வெலை தான் ரொம்ப
இடிச்சிக்கிட்டு நின்னு ருக்கு பாத்துக்கிடுங்க,
”நானுதற்சமயமாஅங்கிட்டு இன்னொருத்தருக்கு
வீடு காட்ட போனவன் அவருஅந்தப்பக்கமாபோனத பாத்துட்டு என்ன ஏதுன்னு கேக்குறப்பச் சொன் னாரு,இந்தமாதிரிவிஷயம்ன்னு,,,, நான் கேட்டேன் ஒங்களுக்கு வீடு புடிச்சி ருக்கா ன்னு,ஆமாம்புடிச்சிருக்குன்னு
சொன்னவரு ஆனா அவுக சொல்ற வெலையத் தான் தாங்கிக்கிற முடியலன்னாரு,நான் நேரா வீட்டுகாரர்
கிட்டகேட்டப்ப27லட்ச ரூபாய்க்கு ஒத்த ரூபா கொறையாதுன்னாரு, நானும் சரிஇப்பிடியேநீங்களும்
27 லட்சம்ன்னு எத்தன மாசமா வெலை சொல்லிக் கிட்டு இருப்பீங்க, வீடும்இப்ப6மாசமாசும்மா
கெடக்கு, 27 லட்ச ரூபாய்க்கு ஆறு மாசத்துக்கு வட்டி போட்டு பாருங்க,ஒரு பைசான்னு வச்சாக்கூட
கிட்டத் தட்ட 1.50 லட்சத்துக்கு மேல வருது,இன்னும் இப்பிடியே போட்டு வச்சிருந்தீங்கன்னா
வந்து வந்து வீட்டப்பாத்துட்டுப்போறவுங்க கட்டி முடிச்சிஏன்இத்தன மாசமா வெலைப்போகலன்னு
யோசிக்க ஆரம்பிச்சிரு வாங்க, பேசாம நான் சொல்ற வெலைக்கு எறங்கி வாங்க இப்ப ஒரு நல்லதொகையாஅட்வானஸ்போட்டுருவோம்,மூணுமாசம் கழிச்சி மொத்தத் தொகையும் குடுத்துருவோம்.
ஒங்க நெலத்தோட வெலை,கட்டி முடிச்ச செலவு எல்லாம் வச்சிப்பாத்தாக்கூட இப்ப நான் சொல்றது
ஒங்களுக்கு நல்ல வெலை அண்ணாச்சி ,அதுக்கு மேல பாத்துக்கிடுங்கன்னு ஏங் போன் நம்பரக்
குடுத்துட்டு வந்துட்டேன்,ரெண்டு நா கழிச்சிக்கூப்புட்டாரு,கொஞ்சம் கூட்டிவச்சிமுடின்னாரு,கூட்டுறதுக்கெல்லாம்
வழியில்ல அண்ணாச்சின்னு ஒரு நல்ல நாளாப்பாத்து ரெண்டு லட்சம் ரூபாய அட்வான்ஸா போடுட்டு அவரு சொன்ன
படியே ஒரு மூணு மாசம் கழிச்சி பத்திரம் முடிச்சோம்,
“வீடுவாங்குனவுங்களுக்குஒரேசந்தோஷம்,வீட்டவாங்குனவருநல்லெண்ண மில்லுல வேல பாக்குறாரு,அவரு வீட்டம்மா ஈ.பீ ஆபீஸில வேலை பாக்கு றாங்க,,,,ரெண்டு பேருக்கும் வீடு வாங்கிக்குடுத்த வகையில ரொம்ப சந்தோஷம் ஆகிப்போச்சி,வீடு
பால் காய்ச்ச்சி குடியேறுற அன்னைக்கி கூப்புட்டுசொளையா இருபத்தஞ்சாயிரம்குடுத்தாங்க,5லட்ச
ரூவாக்கொறச்சி பேசிவாங்கிக்குடுத்ததுக்குஇதவச்சிக்கன்னாரு,சந்தோமாப் போச்சி மனசுக்கு,
“இதுதான் சார் நெலைக்கும் எப்பவும், ஒருத்தங்க
மனசு குளுந்து குடுக்கு றது வேற,மனசுஎறிஞ்சிகுடுக்குறது வேற, சார்” எனச்சொன்னவரிடம்
முடி வெட்டிக் கொண்டு எழுந்திருக்கையில் சொன்னான்
”எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தரு போஸ்டாபீஸில வேலை பாக்குறாரு, அவரு வீடு வேணுமின் னு சொன்னாரு
வடகைக்கு,நாளைபின்னஅவரப்பாக்கும் போதுஅவருகிட்ட ஒங்க கடை அட்ரஸ் சொல்லிஅனுப்பி விடுறேன்,
பாத்துக்கிடுங்க,,,,,,” எனச் சொல்லியவாறு கடையை விட்டு வெளியே வருகிறான் இவன்/
7 comments:
அருமையான கதை
வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
ரசித்தேன். நன்றி.
வணக்கம் ஜம்புலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
பின்கதைக்கு முன் கதை அருமை...
அருமை அண்ணா...
வணக்கம் வலிப்போக்கன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment