3 Aug 2016

பிச்சிபூ,கதம்பம்,சம்பங்கி,,,,

மாலை வாங்கிப்போவது ஒன்று மட்டுமே இறந்தவர்களுக்குச்செய்யும் மரியா தையாக நினைத்து விடவில்லை இவன். 

அப்படியானால் வேறெதுதான் மரியாதை சொல் ஒழுங்காக,இல்லையானால் உருப்படியாய் வீடு போய்ச் சேரமாட்டாய் என்பான் உரிமை எடுத்துப் பேசும் நண்பன் ஒருவன், 

அனாவசியங்களில் மிதக்காமல் யாதார்த்தங்களில் கால் பதித்துத் திரிபவன், அன்றாடங்களில்அவன்சுழற்சிபொறுத்தே வாழ்க்கை சூழல் நகறும் நிலையில் இருப்பவன். மனைவி மக்களைஉள்ளார்த்தமாய் போற்றி மதித்து ஒண்டுக் குடித்தன வாடைகைவீட்டில் வசிப்பவன்.கிடைக்கிற வருமானம் நான்கில் இரண்டுஅல்லதுஒன்றைமிச்சப் படுத்தி வாழ வேண் டும் என்கிற பிடிவாதத் துடன்இன்றுவரைஇருப்பவன். அது படியே முடிந்த வரை செய்தும் காட்டிக் கொண்டிருப்பவன்.

உடன்படித்த அவனிடம் இவனுக்கும் இவனிடம் அவனுக்குமாய் பாசாங்கற்ற கூடுதல் பிரியம் ஒட்டிக்கிடப்பதுண்டு.அவன்தான் சொல்கிறான் இப்படி.

அவனது சொல்லிலும் ஞாயம் இல்லாமல் இல்லை. அதற்காக இவன் அதைச்
சொல்லிவிளக்கி விடவும் தயாராக இல்லை. எனக்கு பிடிக்கவில்லை. அதை தர்க்கரீதியாக உன்னிடம் விளக்கிவிடவும் முடியவில்லை.நீ பேசாமல் இரு இதுகுறித்தெல்லாம் மிகவும் கவலை கொள்ளாமல் என்பான் இது போலான பேச்சுஎழுகிற சமயங்களிலெல்லாம்/ 

அதற்காக அது போலான எண்ணங்களை புறந்தள்ளிவிடவும் முடியவில்லை. மாலை வாங்க கடைகள் தேடி அலைந்த நாட்களில் இவன் கண்டு கொண்டது கோவில்அருகிலும்பஜார்மத்தியிலும்தெப்பக்குளத்தின்அருகிலிருக்கிறகடைக ளையும் சொல்லலாம், அந்தக் கடைக ளையெல்லாம்அறிமுகம் செய்வித் ததும், பழகிவிட்டதும்இவனது நண்பன் தான் எனலாம், ஒன்றிரண்டு நண்பன் என்றால்இவனாகதெரிந்து கொண்டதுஅறிமுகமாகிக் கொண்டதுசிலகடைகள் எனலாம்,

பொதுவாக பூக்கடைகள் எல்லாவற்றிற்குமாய் எல்லாநாட்களிலும் போக வேண்டிய அவசியம்இருக்காது.அப்படிப்போய்என்னவாங்கிவிடப்போகிறான், பூக்களின் வாசனையை நுகரப் போனால்தான்உண்டுஎன்கிறமேல் நவிற்சி மனோநிலை யில் இல்லா விட்டாலும் கூட தேவையைஒட்டிபோகும் பொழுது களில் எல்லா கடைகளிலு மாக ஒவ்வொரு நாளிலும் எனபூக்களை வாங்கிக் கொள்வான்.அந்த வகையில் வஞ்சனை இல்லாமல் எல்லாக் கடைகளும் பழக்கம். 

இதில்பஸ்நிலையத்தின்அருகிலிருக்கிறபூக்கடையையும்வடக்குரதவீதியில் ஜெராக்ஸ்ஆபீஸின்எதிர்த்தாற்போலிருக்கிறபூக்கடையும்குறிப்பிட்டுச்சொல்லாம். ஆனால் அந்த இரண்டு கடைகளிலும்மாலைகள்இருக்கஇவன் பார்த்ததில்லை. 

பின்எதற்காககடமையேகண்எனஅந்தஇரண்டுகடைகளிலும்இரண்டு பெண்கள் அப்பாவியாய்உட்கார்ந்துகொண்டுயாருக்காகபூக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள் எனத்தெரியவில்லை.ஆள் இல்லாதகடையில்யாருக்காக இப்படி ஓடி ஓடி டீ ஆற்றுகிறீர்கள் எனக்கேட்கத்தோணும் அவர்களைப்பார்க்கிற பொழுதெல்லா ம்/

நாறெடுத்துபூக்களைஇணைத்துஅதைசரமாய்த்தொடுத்துபந்தாய்சுருட்டிவைத்த சிறிதுநேரத்தில்தான்தெரியும்,அவர்கள்கட்டியபூஅவரவர்கள் கடைகளுக்கு இல்லை அவர்கள் கட்டிய பூக்களை வாங்க ஒருவர் சைக்கிளில் வருவார்.

இப்படிகட்டியபூக்களைவாங்கிப்போவதற்கெனசைக்கில் வருகிற நபரை இவன் பூ வாங்கப் போனஒருமழைநாளின்மாலைவேளையாகபார்த்துக் கேட்டான். இந்த இரண்டு கடைகள் மட்டும்இல் லையாம்.மதுரைரோட்டில்இருக்கிற ஒரு கடையிலும்கடையில்லாமல் வீட்டில்வைத்துபூக்கட்டுகிறஇரண்டு வீடுகளிலு மாய்  வாங்கிக்கொண்டு போக வேண்டும்.

ஒருநாளௌக்குஐந்துதடவையாய் வாங்கிக்கொண்டு போகிற பூக்கள் யாவும் பஜாரில்உள்ளபூக்கடைகளுத்தான்போகிறது,மொத்தவியாபாரத்திற்குபூவிற்கிற  கடையில் விலைகொஞ்சம் விலைக்கொஞ்சம் குறைச்சலாக இருந்தாலும் அந்தக்கடையில் போய்எப்பொழுதும் இவன் பூவோ மாலைகளோ வாங்குவ தில்லை.அந்தக்கடைக்காரரின்கனிவில்லாதபேச்சுஇவனுக்குப்பிடிப்பதில்லை.  ஒத்தும் வருவதில்லை.

ஒட்டுமொத்தஊரையேதனக்குள்அடக்கிவைத்திருப்பதுபோலத்தான்உட்கார்ந்திருப்பார். 

பார்ப்பவர்களுக்கெல்லாம்தோணும்இரும்புக்கம்பியைவளைக்காமல்கொள்
ளாமல் நேரடியாக முழுங்கியிருப்பாரோ என/கொடுக்கிறகாசைவெடுக்கெனத் தான் வாங்குவார்.மீதிச் சில்ல றையைத்தூக்கித்தான்போடுவார்.மூஞ்சியில் எறிந்ததைப்போல/இஷ்டமிருந்தா கடையில சரக்குவாங்குஇல்லையின்னா போ, நீயெல்லாம் வந்து சரக்கு வாங்கலைன்னுயாரு அழுதாஇப்ப,,,,,, எனக் கடைக்குவந்திருந்தஒருவயதானபாட்டியிடம்சண்டைபோட்டுக்கொண்டிருந்த ஒருநாளில்தான்தற்செயலாய்கடைக்குச்சென்றிருந்தஇவன்கடைக்காரரின்
வழக்கமான எடுத்தெரிந்தபேச்சைகேட்டுவிட்டுசண்டைபோட்டு விட்டு வந்து விட்டான். 

அப்பொழுதான்அலுவலகம்விட்டுவந்திருந்தஅலுப்பும் மனச் சோர்வும் ஒன்று சேரபிடித்து விட்டான்ஒருபிடி/சண்டைபார்க்க கூடி விட்டகூட்டத்தைப்பார்த்து இவனுக்கே கொஞ்சம் சங்கடமாகிப்போனது ,தவிர இவனை விட வயதான வரிடம் கொஞ்சம் யெசக் கேடாக பேசிவிட்டோமோ என்கிற வருத்துடன் வந்து விட்டான்.

அதற்கப்புறமாய்பூவாங்கப்போக வேண்டுமென்றாலோ அல்லது மாலை வாங்க வேண்டு மென்றாலோநேராகதெப்பக்குளத்தின் அருகிலுள்ள கடையில் தான் வாங்குவான்.

இறந்துபோனதேசியத்தலைவரின் நினைவு நாளன்று அவரது படத்திற்கு போட மாலை வாங்கப்போனநாளன்றின் காலை வேளையாக அட நீங்க வேற சார்,ரோஜாப்பூ மாலையெ ல்லாம் வாங்கணுன்னா 500 ரூவா சார்,பேசாம இத வாங்கீட்டுப்போங்க சார் என 150ரூபாய்க்குவிற்றமாலையை125 ரூபாய்க்குக் கொடுத்தார். 

அன்றிலிருந்துஎப்பொழுது மாலை வாஙக்ப்போவதானாலும் அந்தக்கடைக்குத் தான்இவனதுஇருசக்கரவாகனம்அம்புகுறியிடும்.மலர்ந்தும்மொட்டுக்களுமாய் இருக்கிறமல்லிக்கைப்பூ, பிச்சி,சம்பங்கிரோஜாப்பூக்களைப்போல கடைக் காரரின் மனதுவிரிந்து பட்டதாகவே தெரியும் கடையை விட்டு வரும் பொழுது.

சின்னராசுஅண்ணன் தனது தோட்டத்தில் விளைந்த சம்பங்கிப்பூக்களை அங்கு தான்விலைக்குப்போடுவார்.

போனமுறைமல்லிபோட்டிருந்தார்,விலைஇல்லைஎனஇந்தமுறை சம்பங்கி போட்டிருக்கி றார்.ஊரேவழக்கமானவத்தல்கடலை,,,,என்கிறவழமை மாறாத விவசாயத்தில் இருந்த போதுசின்னராசுஅண்ணன்மட்டும்கோயிலாங் குளம் விவசாயப்பண்னையில் போய் விசாரித்துவிட்டுவந்துமுதல்முதலில் பூப் போட்டார். அப்பொழுதுதான் அந்த ஊர் தோட்டங்காடுகள்பூவாசனையை நுகர் ந்தது எனலாம்.

ஊருக்குள்நுழைந்தகாற்றுகூடபூவாசைனையைசுமந்து கொண்டு நுழைந்தது எனலாம்.அது மட்டுமில்லைஅடுத்தடுத்துஅவர்உழுகிற நிலங்களில் சாய்வாக கோடிழுத்து உழுதார், மூலைக்குமூலைசால்என்கிறகணக்கு. 

நிறையப்பேர்சொன்னார்கள்,’இப்படியெல்லாம் செஞ்சி நெலத்த பாழாக்கப் போறான் பாரு என. ஆனால்இவர்கள்எல்லோர்சொல்லையும்மீறிபூப்போட்ட விதத்தில் கொஞ்சம் முன்னேறி வந்தார்.

ஆறு மாதங்களுக்கு முன்பாக அவர்பூக்கொண்டுவரும்பொழுது அவருடன் ஊரிலிருந்து அவரது இரு சக்கர வாகனத்தின் பின்னால்அமர்ந்து வந்தான். 

என்னவெனத்தெரியவில்லை.சிறிதுதூரம்போனதும்தலைசுற்றல் வந்து விட்டது, சின்னத் ராசுஅண்ணன்கொஞ்சம்பொறுத்துக்கிட்டுஎன்னய இறுக்கமா புடிச்சிக்கிட்டு உக்காரு,நானும் மெதுவாத்தான்போவேன்.கடையில கொண்டு போயி பூவ தள்ளி விட்டுட்டு ஆஸ்பத்திரிக்குப்போவம்தேவைன்னா எனச் சொன்னபடி டவுனுக்குச்சென்றதும் பூவைப்போட்டுவிட்டு கடையில்சாப்பிட அழைத்துப்போய்விட்டுஅப்புறமாய்டாக்டரிடம்கொண்டுஅழைத்துப் போய் வீட்டில்கொண்டுவந்துவிட்டுப்போனார்.

இவனுக்குக்கூடஒருசின்னஆசைதான் அப்படியே அலுவலகத்திற்கு போய் விடலாம் என. சின்னராசுஅண்ணன்தான்வேண்டாம் என வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டுப் போனார் அவரிடம்கையைக்கூப்பி நன்றி சொன்னபோது ஏய் சும்மா இருடா,நன்றியெல்லாம் சொல்லிஎன்னையபெரிய மனுசன் ஆக்கிபூடாதப்பா,நான் ஏதோ நொஞ்சி போயி பொழப்பு நடத்துறேன்என்பார்.

இவனுக்குள்ளாய்எப்பொழுதிலிருந்து வீட்டிற்குபூவாங்கிச் செல்லும் பழக்கம் ஏற்பட்டது எனத்தெரியவில்லை.

பூவாங்கிச் செல்வதுமட்டுமல்ல, கோயிலுக்குச்செல்வது அர்ச்சனைத்தட்டு வாங்குவது,பூ பழங்கள்,ஜோசியரிடம் செல்வது,,,,என இன்னும் இன்னுமான பிறசெயல்கள் இவனிடம்எப்பொழுது முளை விட்டது,அல்லது இவனை அப்
பழக்கம் எப்பொழுது சுழியி ட்டதுஎன்பது சரியாகத்தெரியவில்லை. 

அனேகமாகதிருமணமானதும்என்பதாய்த்தான்நினைக்கிறான்.ஏதோஒருநாளின்அவசரத்தில்அலுவலகம்விட்டுச்செல்லும்போதுவாங்கிப்போனமல்லிகைப் பூ மறுநாளாக ஆபீஸில் சாப்பாடுபாக்ஸைஎடுக்கும் போதுபைக்குள்ளாக இருந்தது.அடசண்டாளப்பாவிகளா, இப்பிடியா செய்யிறது, என மனதுக்குள்
நினைத்தவாறுபெறுக்,பெறுக்,,,,,,,,என முழித்துக்கொண்டு நின்றபொழுது பக்கத் தில்அமர்ந்திருந்தசகஊழியர்மிகவும்சரியாககேட்டேவிட்டார்,என்னவாங்கீட்டுப் போனபூவவீட்லகுடுக்கமறந்துட்டயா,,,,,சரிவுடு ரொம பீல்ப்பண்ணாத எனச் சொன்னவர் சாப்புடப்பாமொதல்லஅப்புறம்பாக்கலாம், நாங்கவாங்காத பூவா,நாங்க படாத வருத்தமா, அப்பிடித்தான்இருக்கும் கொஞ்ச நாளைக்கி அப்புறம்எல்லாம்சரியாகிப்போகும்,ஒண்ணு செய்யிஇன்னைக்கி வேணுமின் னாநீயிவாங்குனபூவகாதுலசுத்தீட்டுப்போ,எனச்சிரித்தார்,அதுதான்இவன்பூவாங்கிக் கொண்டு போனநாட்களின்நினைவாகஇவனுள்ளாய் பதிவாகி இருக் கிறது. 

மேட்டமலையிலிருந்துவேலைமுடிந்துதெப்பக்குளத்தின் வழியாக வந்துவீடு வருவதுதான் இவனதுஅன்றாடமாகஇருந்தது.ஆனால்அப்படி வரும் பொழுது தெப்பக் குளத்தின் அருகிலி ருக்கிறபூக்கடையில் பூ வாங்கிகொள்வான். 

அப்பொழுதெல்லாம் முழுக்கை வெளிர் நிறசட்டை,அடர்க்கலரில் பேண்ட், இதுதான் இவனது உடையின் காம்பினேஸனாக இருக்கும்.அனேக நாட்களில்.

டீசர்ட்போடுகிறநாட்களில்இந்தகண்டிஷனும்கட்டுப்பாடும் இருந்ததில்லை இவனுள்/நினைத்தபேண்ட்நினைத்தடீசர்ட்இதுதான்இவன்உடைஅணியும் காம்பினேஷன்.அனேக நாட்களில் இவனுடன்ஒட்டிக்கொண்டிருக்கும் கறுப்புப்  பேண்ட எல்லாம் காணாமல் போய் விடும்அப்பொழுது/

ஸ்டைல்டைம்டெய்லரிடம்தைத்தது.இவன்பெரும்பாலுமாய்அவரிடம்தான்துணிகள்தைப்பான்,என்னஒருபெரியவம்புஎன்றால்அவரிடம்ஆல்ட்ரேஷன் என போய் நிற்க முடியாது.வாங்க மாட்டார்எனஇல்லை,மூணுகால்என்பார், அது கொஞ்சம் எரிச்சலாகிப் போகும்.மனதளவில் ஏன்தான்இவரிடம்கொண்டு வந்தோமோ என நினைக்க வைத்துவிடுவார்.அவரிடம் தைத்த கோடுபோட்ட முழுக்கை சட்டையைப் பார்த்து சொந்தக்காரர் ஒருவர் எங்கு தைத்த சட்டை இதுநன்றாகஇருக்கிறதேஎன்றார்.

அந்தநன்றாகஇருக்கிறதேவைகாப்பாற்றிவைத்திருந்த டெய்லர் கடையில் இப்பொழுது தைப்பதில்லைஎல்லாம்ரெடிமேட்தான்.

பிள்ளைகளுக்குவாங்குகிற சமயங்களில் அல்லது இவன்தனியாளாகபோகும் போது, நேரம் கிடைக்கையில் எடுத்துக்கொள்வான். 

அவரும் இன்றுவரைநான்கு கடைகள் மாற்றி விட்டார்.கொஞ்ச நாளைக்கு முன்பாகத்தான்அவரைப்பார்த்தான்.உடல்நலமில்லைஎனகடையைஒருமாதமாகமூடிவைத்திருக்கிறேன்என்றார்.ஆள்மிகவும்நலிந்துபோயிருந்தார்.அன்றுரொம்பநேரமாக பேசிக்கொண்டிருந்தவரை அடுத்துமுறைபார்த்தது அவரது கடையில்வைத்துத்தான்.

முதன்முதலாகஇறந்தவர்களுக்கெனமாலைவாங்கிப்போட்டதுஇவனதுஉறவினர் தாத்தப்பனுக்குத்தான்.

முதல்நாள்மாலைஅலுவலகம்செல்லும்போதுபெட்ரோல்பங்க்அருகில்பெட்டிக் கடைவைத்திருக்கிறசரசுமதினிதான்சொன்னாள் விஷயத்தை. நேற்றுக் காலையில்கவர்மெண்ட்ஆஸ்பத்திரிக்குபிரஸருக்காகமாதமாத்திரை வாங்கப் போன தாத்தப்பன் மயங்கி விழுந்த தனால் பெட்டில்சேர்த்திருக் கிறார் கள் என்றாள்.

கேள்விப்பட்டுநாங்களும்போய்பார்த்துவிட்டு வந்தோம். பொண்டாட்டியும்பு ள்ளைகளும் பக்கத்துலநிக்குறாங்க,பாவம்போல, வீட்ல சம்பாத்திய வழி அவருமூலமாமட்டுந்தான்.பெரியமகமில்லுக்குப்போறா,அவசம்பாத்தியத்துல ஒருபைசாக்கூடதொடுறதில்லஇவுங்க, எல்லாம் அவ கல்யாணத்துக்குன்னு சேத்து வைக்கிறாங்க,சின்னவன்படிக்கப் போறான் பத்தாம் வகுப்புக்கு, அவன் பள்ளிக்கூடம்போய்வந்தநாள்தவிர்த்துலீவுநாள்கள்லகொத்தவேலைக்குக்கூடப்போயிட்டுவருவான்.அவ்வளவுகருத்தானபையன்,வேலைக்குத்தான்போறான்னு வச்சிக்கிட்டாலும்கூடபடிப்பையும் விட மாட்டான்.அந்த அக்காவுக்குப் பாவம் யெளப்பு இருக்கு எங்கயும்வேலைக்கின்னு போக முடியாது. இதெல் லாம் படுத்திருக்குற அவரோட பெட்டச் சுத்திவருது.என்ன செய்ய பின்ன,,,,
என்ன  நடந்தாலும் வச்சாலும் வகுத்தவன் எப்பிடிவகுத்து வச்சிருக்கான்னு தெரியலையேஎனசொன்னசரசுமதினி நேரம் வாய்க்கும்போது போயி பாத்துரு என்றாள்.

இவனும்ஆஸ்பத்திரிக்குப்போய்தாத்தப்பனைபார்த்துவிட்டுத்தான்ஆபீஸிற்குப் போனான் ,ஆபீஸிற்குப்போய் பத்துடூ ஐந்தின் இயந்திரத்தனத்தில் மூழ்கிப் போனபின் தாத்தப்பனைப் பற்றியநினைவேமறந்துபோனது.

அன்று இரவு பணிரெண்டு மணி இருக்கும், சரசுமதினியின் வீட்டுக் காரர்தான்
போன் பண்ணினார், சரசுமதினியிடம்பேசிக்கொண்டிருந்த போதுபோன் நம்பர் கொடுத்து விட்டு வந்திருந்தான். கொஞ்சம்பதற்றமாகப் பேசியசரசு மதினியின் வீட்டுக்காரர் தாத்தப்பன் இறந்து போன தைச் சொன்னார்.அவர்இறந்த சேதி கேள்விப்பட்டதும்அதிகாலைஆறுமணிக்கு மனைவி பிள்ளைகளுடன் கிளம்பி விட்டான்.

இறந்து போகக் கூடியவயதா எனச்சொல்ல முடியாவிட்டாலும் கூட இறக்கக் கூடிய வயது அது எனஏற்றுக்கொள்ளலாம்.ஆனாலும்அவர்வாழ்ந்துவளர்ந்த சூழல்,வாழ்வின் வெளிக்குள் தன்னைபதியனிட்டுதக்கவைத்துக்கொள்ளஅவர் செய்த பரமப்பிரயத்தனம் இருக்கிறதே,,,,,, ஏயப்பா,அன்றாடம்கயிற்றின் மேல் நடக்கிற பாடுதான்.கட்டிய கயிறும் கையில் பிடித்திருந்த நீள்குச்சியும் நடந்த கால்களும்மட்டுமேவாய்க்கப்பெற்றிருந்தவாழ்க்கையைகைவசமாக்கித்தந்திருந்தது அவருக்கு.

அப்படியாய்உழைப்பின்கரம்பற்றிகையூன்றிஎழுந்தவருக்குமரியாதைசெலுத்தவாவது சீக்கிரம்போகவேண்டும்.ஆளைப் பொறுத்து வருவதுதானே மரியா தையும் மற்றவைகளுமெ ன்பதுவேசத்தியமாகிப் போன பின் அவரது இறந்த நிகழ்வுக்குப்போவதில்தாமதம்காட்டுவதுஏன் என நினைத்த காலை வேளையி லேயே கிளம்பி விட்டான்.பக்கத்தில் பதினைந்துகிலோ மீட்டரில்தான் ஊர். தகவல் வந்த நேரத்திற்கு அப்படியே கிளம்பி விடலாமாஎன நினைத்தான். மனைவியிடம் விஷயத்தைச்சொன்ன பொழுது பொறிந்து தள்ளி விட்டாள் பொறிந்துஉங்களுக்கென்னகோட்டி,கீட்டிபுடிச்சிருக்காவயசுப்புள்ளயக்கூட்டிக்கிட்டுநடுராத்திரியிலஆள்அரவமத்தயெடத்துலபோகணும்ன்றீங்க,பேசாமக்கெடங்க,கூறுகெட்டத்தனமாபேசிக்கிட்டு,,,என நீளமாகசப்தம் போட்டாள். பொம்பள புள்ளைகளகூட்டிட்டுப்போறமே, கிராமத்துலபாத்ரூம் வசதி மத்த மத்ததுகளுக்குஎன்னபண்ணுவாங்கன்னுயோசிக்கவேணாம்.என்றமனைவியின் பேச்சுகாலைஆறுமணியைஎட்டித்தொடவைத்து விட்டது.

அதுவரைக்கும்இவனுக்குசரிவரதூக்கம்கூடஇல்லை.இறந்தவர்பற்றியநினைவினிலேயே இருந்துவிட்டான்.இவன்உறக்கமில்லாததுகண்டுமனைவியும் எழுந்து  இவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

மறுநாள்ஊர்போய்ச்சேர்ந்ததும்இறந்த வீட்டில் பார்க்க நேர்ந்த அண்ணன் மகன் கேட்டகேள்விஎன்னமாலை வாங்கீட்டுவரலையா,,என,,,,,,/

அன்றிலிருந்துஎந்தச் சாவி வீட்டிற்குப்போனாலும் மாலை வாங்காமல் போவ தில்லை. ஆனால்மாலைமட்டுமே இறந்தவர்களுக்குச் செய்யும் மரியாதை யாக இவன் நினைத்து விடவும் இல்லை.

4 comments:

வலிப்போக்கன் said...

அன்றிலிருந்துஎந்தச் சாவி வீட்டிற்குப்போனாலும் மாலை வாங்காமல் போவ தில்லை.----..நானும்தான்...

'பரிவை' சே.குமார் said...

மிக நீண்ட பகிர்வு அண்ணா...
அருமை.

vimalanperali said...

வணக்கம் வலிப்போக்கன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/