இன்று அதிகாலை சாலை விபத்தில் சங்கை
திருவுடையான் மரணமடைந்தார், இது போலான காலத்தின் அடையாளமானவர்களின் மரணம் மிகவும் கொடுமையானதாகவே,,,/
அவர் பாடிய பாடலே அவருக்கு அஞ்சலியாக,,,/
பாடலைக்கேட்க,,,,,
http://asunam.blogspot.in/2016/03/aathaa-un-sela.html
ஆத்தா உன் சேல -
இசை : ----- பாடல் : ஏகாதசி
குரல்கள் : கரிசல் திருவுடையான்
ஆத்தா உன் சேல - அந்த
ஆகாயத்தப் போல
தொட்டில் கட்டித் தூங்க
தூளி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க
அப்பனுக்கு தல தொவட்ட
பாத்தாலே சேத்தணைக்கத் தோணும் - நான்
செத்தாலும் என்னப் பொத்த வேணும்
செத்தாலும் என்னப் பொத்த வேணும்
( ஆத்தா உன் சேல...
ஆங்... இடுப்புல கட்டிக்கிட்டு நீச்சல் பழகினதும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
வெறுந்தர விரிப்புல நான் படுத்துக் கெடந்ததுவும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
இறக்கென காயும் போது வானவில்லா தெரியும்
இத்துப்போன சேலையில் உன் சோகக்கதை புரியும்
கஞ்சி கொண்டு போகையிலே சும்மாடா இருக்கும் - நீ
சேலகட்டி இறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்
சேலகட்டி இறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்
( ஆத்தா உன் சேல...
அக்கா கட்டி பழகினதும் ஆடு கட்டி மேச்சதுவும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
வெக்கையில விசிரியாகும் வெயிலுக்குள்ள குடையாகும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
பொட்டிக்குள்ள மடிச்சு வெச்சேன் அழகு முத்து மாலை
காயம் பட்ட வெரல்களுக்கு கட்டுப்போடும் சேல
மயிலிறகா உஞ்சேல மனசுக்குள்ள விரியும்
வெளுத்த சேலத்திரி வெளக்குப் போட்டா எரியும்
வெளுத்த சேலத்திரி வெளக்குப் போட்டா எரியும்
( ஆத்தா உன் சேல...
4 comments:
நாங்கள் எங்கள் பகுதியில்
அவருடைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம்
ஒரு இரண்டு மணி நேரம் ஒட்டுமொத்தக்
கூட்டமும் அசையாது அவர் இசையில் பாடலில்
குரலில்,தொனியில் மயங்கிக் கிடந்தது
இப்போதும் நெஞ்சில் நீங்காது பசுமையாய் இருக்கிறது
அவரது இந்த அகால மரணம் நிச்சயம்
கலை உலகிற்கு ஒரு பெரும் பேரிழப்பே
நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொள்வோம்
ஆழ்ந்த இரங்கல்கள்.
இழப்புகள் சுமந்த நினைவுகள்,,,/
வலி நிறைந்த நினைவுகள்,,,/
Post a Comment