மழை பிடித்துக்கொள்கிறது நாங்கள் போன நேரமாய்,
வீடு கடந்து வாசல்மிதித்து இரு சக்கர வாகனம் ஏறி பயணிக்கையில் மழை வருவதற்கான எந்த அறிகுறியும் முன்னறிவிப்பும் இல்லைதான்.
முன்னறிவிப்பு இல்லாத விஷயம் நடக்கக்கூடாதா என்ன வாழ்க்கையில்,அது எப்படி அப்படி நடக்கலாம் என யாருக்கும் எந்த வித விளக்கமும் கேட்டு எந்தக்கடிதமும் கொடுத்து விட முடியாது,இந்த வேளையில்/
கே.எஸ் ஏ மில்லுக்கு அருகில் போகையில் தூறலாக பெய்து கொண்டிருந்த மழை கொஞ்சமாய் வலுத்தது,ஆகா இப்படிப்பெய்கிறதே எப்படிப் போவது என பின்னால் அமர்ந்திருந்த மனைவியிடம் கேட்டபொழுது கிளம்பும்பொழுதே இக்கன்னா வைத்துவிட்டுக்கிளம்பினால் இப்படித்தான் ஆகும்,நல்ல மனசு வேணும் எதற்கும் என்றாள்,மனசு இருக்கட்டும் ஒரு பக்கம்,முதலில் மழைக்கு எங்காவது ஒதுங்க இடம் கிடைக்க வேண்டும். அதைப்பார்ப்போம் என்றான் இவன்,
பெய்த மழை வீட்டிலிருந்து கிளம்பிமுத்தாலம்பட்டி கடந்து மில்லுக்கு வரும் முன் பெய்து பெய்திருந்தால் திரும்பியாவது வீட்டிற்குப்போயிருந்திருக்கலாம் அல்லது முத்தாலம்ப ட்டியில் ஏதாவது ஒரு வீட்டு வாசலில் நின்றிருந்தி ருக்கலாம்.ஆனால் அப்படிச்செய்ய அனுமதித்திருக்கவில்லை மழை.
பெய்த கோடுகோடாய் வானத்திலிலிருந்து நெசவிட்டிருந்த வெள்ளிக் கம்பி களைப் போல் இறங்கிய மழையின் கனம் கொஞ்ச கொஞ்சமாய் கூடி விட்டதுதான்,என் செய்ய பஜாருக்குப்பொவதற்குள்ளாய் நனைந்து போவோம் முழுவதுமாக என நினைத்தவர்களாயும் பேசியவர்களாயும் வீடு திரும்பி விட்டார்கள் இவனும் மனைவியுமாக,ஜில்லிட்ட ஈரத்தையும் குளிர்ச்சியையும் உடல் நனைத்த ஈரத்தையும் உள் வாங்கியவர்களாய்,,,,,/
6 comments:
அருமை
மழை பொழியட்டும்
இனி மழைதான்...நன்றி வருகைக்கு.
..
மழை பெய்யட்டும்...
உங்கள் எழுத்து மழை அருமை.
வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கு,உங்கள் கருத்து
மழையும் சேர்ந்து பொழியட்டும்,வாழ்த்துக்கள்/
அருமை
நன்றி நகேந்திர பாரதி சார்
வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment