11 Sept 2016

டிக்கெட் புத்தகம்,,,,


 
வீட்டை விட்டுக்கிளம்பும் போது மணி 10.55 ஆகிப்போகிறது. நேரங்களின் 
கூட்டுதலில் 10,11 என வரிசைப்படுத்தப்பட்டு வருகையில் விநாடி முள்ளுடன் கைகோர்த்துக்கொண்ட சின்ன முள்ளும் பெரிய முள்ளுமாக சேர்ந்து கொண்டு காட்டிய நேரம் அதுவாக இருக்கிறது.

காலைவெயிலின் கிரகணங்கள் கொஞ்சம் இளசையும் தாண்டி தனது உக்கிரத்தை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தது.

இரண்டாவது சனிக்கிழமை விடுமுறையின் இருப்பு விழித்தெழுந்து வெளிக் கிளம்பும் நேரத்தை தாமதமாக்கியிருந்தது.எவ்வளவு நேரம் விழித்திருப்பது எவ்வளவு நேரம் தூங்குவது என்கிற கணக்கெல்லாம் இவனை பொறுத்த மட்டிலுமாய் பிணக்கு ஆமணக்கு ஆகியிருந்தது.

இரவு பணிரெண்டு மணிக்கு மேல் தூக்கம் பிடிக்க ஆகிப்போகிற சமயங்களில் சமயாசமயங்களில் தனது மாயக்கரத்தை இரண்டு மூன்று மணிவரை கூட நீட்டித்து இழுத்து விடுவதுண்டு.

அம்மாதிரியான நீட்சிகள் இருக்கிற நாளின் மறு நாளைய பொழுதுகளில் உடலும் மனதுமாய் கொஞ்சமே அல்ல,கூடுதலாகவே ஒத்துழைக்க மறுக்கும்.

வம்பாக பாரத்தை தூக்கிக்கொண்டு அலைகிற பொழுதுகள் ஆகிப்போகும்.அது போல இன்றும் ஆகிப்போகவே கிளம்புவதற்கு இந்தத்தாமதம் என நினைக்கிறான்.

பனியன் போடாத வெற்றுடலில் சட்டை வேர்வை பிசுபிசுப்புபூத்து ஒட்டிக் கொள்கிறது.பனியன் போட்டிருக்கலாம்.லீவு நாள்தானே ஒரு நாளாவது பனியனுக்கு லீவு விடுவோம் என்கிற எண்ணம் தவிர்த்து தினமுமாய் துணி துவைக்கிற மனைவிக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாம் என்கிற எண்ணத் திலாவது பனியன் போடுவதை தவிர்த்திருக்கலாம்.நாளெல்லாம் சமையல றையும் துணிதுவைத்தலும் பாத்திரம் கழுவுதலும் மட்டுமே உலகமாகிப் போனவளின் கைகள் கொஞ்சம் பனியன் துவைத்தலிருந்து விடுபடட்டும் என்கிற உயரிய எண்ணமாகக்கூட இருக்கலாம்.வசதி வருகிற போது வாஷிங் மிசின் ஒன்று வாங்கிப்போட வேண்டும்.

இரண்டு மூன்று தடவைகளுக்கு மேல் மிதித்தால்தான் ஸ்டார்ட் ஆகிற இரு சக்கர வாகனத்தைப் பார்க்கையில் இதற்கு பழைய வண்டியே தேவலாம் என்கிற நினைப்பு வருவது தவிர்க்க இயலாததாகிப்போகிறது.

பேசாமல் போகிற விலைக்கு விற்று விட்டு வேறொரு வாகனம் வாங்கி விடலாமா மாற்றாக என்கிற யோசனை வராமல் இல்லை.தெரு முக்கு திரும்புகையில் மினி பஸ் கண்டக்டரின் மனைவி மல்லிகா அக்கா எதிர்பட்டாள்,

”என்னவோ தம்பி போ இப்பிடித்தான் இருக்கு பொழப்பு” என்பதுதான் அவளது பேச்சின் ஆரம்பப்புள்ளியாயும் சலிப்பு முனை கொண்டதாகவும் இருக்கும்.

அப்பிடியெல்லாம் இல்லக்கா,இன்னும் எப்பிடி, எப்பிடியாவோ இருக்கு வாழ்க்கை,,,,,,,,,ரொம்ப சலிச்சிக்கிறாதீங்க என்கிற சொல்லில் லேசில் சமாதானம் ஆக மாட்டாள்,

லேசில் பேசிவிடமாட்டாள் யாருடனும் ,பழகி விட்டால் உயிராக இருப்பாள். இவன் வீடு கட்டி குடி வந்த புதிதில் இவனுடனோ,இவனது மனைவி பிள்ளைகளுடனோ பேசமாட்டாள் பேசாதது மட்டுமல்ல ,ஜாடை பேச ஆரம்பித்திருந்தாள்.ஜாடைகளின் எச்சம் அதிகமாகிப்போன ஒரு நாளில் அலுவலகம் விட்டு வருகிற பொழுதுகாலில் மாட்டியிருந்த செருப்பைக் கழட்டி அவளது வீட்டு வாசலில் எறிந்து விட்டு வந்து விட்டான்.

அன்றிரவே வந்து விட்டாள் வீட்டிற்கு.”என்னப்பா தம்பி ஓங் அக்கா மாதிரி நானு,நானு ரெண்டு பேச்சு பேசக்கூடாதா சொல்லு, என்னைய மாதிரி வீட்டுல இருக்குற பொம்பளைக்கு பேச்சுதான் பக்க தொணையா இருக்கு,என்ன செய்ய சொல்லு,புள்ளைங்க பள்ளிக்கூடம் போயிறாங்க,வீட்டுக்காரரு வேலைக்குப் போயிர்றாரு,ஒத்தையில கெடக்குற நானு வீட்டு வேலை செஞ்ச நேரம் போக இப்பிடி பேச்சக்கட்டிக்கிட்டுதான் அழுக வேண்டியிருக்கு.இதுல பக்கத்துல இருக்குறவள்க கொஞ்சம் ஏத்தி விட்டுற்ராங்க,அதுல கொஞ்சம் வம்பாகிப் போகுது.என்ன செய்ய சொல்லு, பள்ளிக்கூடத்துலயிருந்து புள்ளைங்க வர்ற துக்குள்ள வீட்டுக்காரரு சமயத்துல டூட்டி முடிஞ்சி வந்துருவாரு,

அவரு வீட்டுக்கு வர்றதும் ஒன்னுதான் வராததும் ஒண்ணுதான்,பேசாம அவருபஸ்ஸு செட்டுலேயே படுத்து எந்திரிச்சி வேலைக்கி போயிக்கிறலாம்,

மாசம் பொறந்தா சம்பளத்தக் குடுக்குற தோட சரி,வீட்டுல அரிசி பருப்பு அரசலவு மொத்தக்கொண்டு கரண்டுப்பில்லு புள்ளைகளுக்கு ட்யூசன் பீஸீ அக்கம் பக்கம் எல்லாம் எந்தலையிலதான். இதுல எங்க வீட்டுக்காரருக்கு வாரத்துக்கு ஒருக்க கவிச்சி கண்டிப்பா வேணும்,ஒரு வாரம் சிக்கன்,மறு வாரம் மட்டன்,அதுக்கு மறு வாரம் மீனுன்னு இருக்கணும் அதையும் நாந்தான் போயி வாங்கிட்டு வரணும்,இதுல ஏதாவது ஒரு வாரம் மாத்தி வாங்கிட்டா அவ்வளவுதான் குய்யோ முறையோன்னு ஒரே சத்தக்காடு தான்.ஏங் பொறப்பு வளப்புலயிருந்து ஏன் பொறந்த வீட்டு வரைக்கும் அவரு பேச்சாலேயே ஒரு படம் வரைஞ்சி தீத்துருவாரு.அதுல சமாதானம் ஆகவே எனக்கு ரெண்டு நாளு ஆகிப் போகும்.

இந்த லட்சணத்துல தண்ணி வேற ,ஏதாவது விருந்துக்கும் மருந்துக்கும்ன் னாக் கூட சரிங்கலாம்,ஓயாம அதே சோலியா திரிஞ்சா,ஒடம்பு போறதும் இல்லாம கெட்ட பேரும் வேற,

நாலு பேரப் போல குடிச்சிட்டு ரோட்டு வழியா சத்தமெல்லாம் போட்டுத்திரிய மாட்டாரு,குடிச்சிட்டாருன்னா குனிஞ்ச தல நிமிராம வீட்டுல வந்து கவுந் தடிச்சிப் படுத்துருவாரு மனுசன். இத்தனைக்கும் வெளியில யாருகூடயும் அனாவசிய பேச்சு வம்பு கிம்புன்னு எதுவும் கெடையாது. இது நா வரைக்கும் யாரும் அவர கைநீட்டி குத்தம் சொன்னது கெடையாது,வேலை பாக்குற யெடத்துலயும் சரி,வெளியில பழகுறயெடத்துலயும்சரி,நல்ல பேருதான் வாங்கிருக்காரு,வீட்டுலதான் இப்பிடி வம்பு கட்டிக்கிட்டு அலையிறாரு. அதுனாலதான் நான் இப்பிடி பேச்சக் கட்டிக் கிட்டு அலைய வேண்டியிருக்கு ஆமாம்,அதுல சமயத்துல கொஞ்சம் வம்பு கூடிப்போகுது,அது நானா விரும்பி ஏத்துக்கிர்றதும் இல்ல.அக்கம் பக்கத்துல் வம்பு இழுத்து விட்டுற்ராங்க,என்ன செய்யட்டும் நானு,இப்பிடித்தான் ஒன்னைய மாதிரி ஆள்க மனசு புண்ப்படும்படி ஆயிருது,இத அவர்கிட்ட சொன்னம்ன்னு வையி,என்னைய தான் நாற வசவு வையும்.என்றாள்,அவளது பேச்சு இவனது செயல் தவறோ என எண்ண வைத்து விட்டது.

மல்லிகா அக்கா சொல்வதும் நிஜம்தான்,ஆனால் கொஞ்சம் பொய் கலந்து சொல்லி விட்டாள். வெளியில் ஏதும் வம்பு தும்பு வைத்துக் கொள்ளாத அவர் வேலை செய்கிற இடத்தில் அனைவருடனும் ஒத்து நடந்து கொள்ள மாட்டார்.

அதிலும் அவர் ஓடும் பஸ் ஏறி விட்டாரானால் ட்ரைவருடன் ஓயாத சண்டை தான்,ட்ரைவர் பெரிதாக ஒன்றும் கேட்டு விட மாட்டார்,ஏய்யா,,,,நீயீ வம்பு புடிச்ச ஆளுங்குறது சரி,அதுக்காக பஸ்டாப்பு வந்தாக்கூட விசில் அடிக்க மாட்டயா என்பார்,

அதெல்லாம் அடிப்போம் இல்ல என்பார்,சைசாக,அப்புறம் எதுய்யா ஓங் வேலை என்றால் வருவேன் போவேன் அதத்தவர எதையும் கேக்கக்கூடாது என்பார்.அப்பறம் என்ன ,,,,,,,,,,பஸ்ஸீல கண்டக்டரா வர்ற எறங்கிப்போயிற வேண்டியதுதான பஸ்பயணிகள் சிலபேர் ஒரு நாள் கேட்டபோது நீங்களெ ல்லாம் அதக்கேக்கக்கூடாது,ஒங்களுக்கெல்லாம் அந்த ரைட்ஸ் கெடையாது. எனக் கூறிய ஒரு நாளில் பஸ் பயணிகளுடனும் டிரைவருடனும் சண்டை வந்து விட்டது,

அசரவில்லைஅவரும்,சண்டையானால்சண்டைபாரதப்போருக்கு குறைவில் லாத சண்டை.விஷயம் கேள்விப் பட்டு கடைசிதடவை பஸ் இன்னும் செட்டுக்கு வரவில்லையே எனமுதலாளி பஸ்ஸை தேடி வந்து விட்டார்,

நல்ல வேளை அவர் வந்தது.இல்லையானால் டிரைவர் கண்டக்டர்,ப்ளஸ் பயணிகள் என மோதல் வந்திருக்கும்,டிரைவர் சொன்னால் கூட கேட்டுக் கொள்வார்.ஆனால்கண்டக்டர்,,,,,?,வழக்கமாக ஓடும் ரூட்டுக்குச் சொந் தக்காரர்,

ஆனால் கண்டக்டர் சொன்னால் கேட்டுக்கொள்ள மாட்டார்கள்.அவன் சட்டம் பேசுரவனப்பா,தனக்குன்னாஒண்ணு,அடுத்தவனுக்குன்னாஒன்னுன்னு பேசு வான்,அதுலயும் பஸ்ஸீல போறவுங்க வர்றவுங்களுக்குள்ளயேசண்டஇழுத்து வுட்டுறுவான்,போன வாரம் நம்ம ஏரியாவுல இருந்து ஏறி பஸ்டாண்டுல எறங்குற ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ள் நம்ம குமரேசனுக்கும், முருகேசனுக்கும் சண்டை இழுத்துவுட்டு பஸ்டாண்டுல கட்டி உருளாத அளவுக்குப்பண்ணீட்டான்,

அதுனாலத்தான் அவுங்க ஓனர் அவர தினம் ஒரு பஸ்ஸின்னு நாலு பஸ்ஸீ லயும்ஒண்ணொண்ணுலஓட வுடுறாரு, இந்த லட்சணத்துல பஸ்ஸீல வர்ற பெட்டிக்கடைக்காரரு ஒருத்தருகிட்ட அப்பப்ப தண்ணி அடிக்க காசு வேற கேட்டு தொந்தரவு பண்ணிக்கிருவாரு,இல்லைன்னா நீயி கொண்டு வர் ற சரக்குகளுக்கு லக்கேஜ் போடுவேன்னு சொல்லி ஒரு வெத்து அரட்டு அரட்டிக் கிறது.என்ன செய்ய மொதலாளி இவருக்காக இல்லைன்னாலும் அவுங்க குடும்பத்துக்காகப்பாக்குறாரு,இல்லைன்னாஇந்தமாதிரிஆளுகளையெல்லாம் தூக்கி எறிய எத்தன நேரம் ஆகுன்றீங்க என்பதுவும் கண்டக்டரைப் பற்றிய பேச்சாக இருந்தது.காற்று வாக்கிலும் நேரிலுமாக வருகிற பேசுகிற பேச்சுக்களையும் அவரது செய்கைகளையும் நேரில் பார்த்த இவன் எப்பொழு தாவது ஒரு நாளில் கண்டக்டரை நேருக்கு நேர் பார்க்க நேர்கிற போது பேசியிருக்கிறான், அவரிடம் அப்படியாய்ப்பேச நேர்ந்த காணங்களில் இவன் மனதில் தோன்றி குடி கொண்ட எண்ணங்கள் தவிர்க்க இயலாமல் போவ தாகவே, நன்றாக படித்து நல்ல வேலையிலும் நல்ல சம்பளத்திலுமாய் இருக்கிற ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவன் விருதாவாய் அலைவ தற்கும்,சுமாராகப்படித்து சுமாரான வேலையுடனும் சுமாரான சம்பாத்தியத் துடனுமாய் இருக்கிறவன் நல்லொழுக்கம் கொண்டவனாய் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே,,,,,என்பதுதான் அது.

வேறு ஒருவராய் இருந்தால் அந்தக்கண்டக்டரை வேலையிலிருந்து நீக்கிரு ப்பார்கள்.

ஆனால் அப்படி நீக்கப்படாததற்குக்காரணம் அவரது மச்சினன் இளமுருகுதான் காரணம் என்றார்கள்.அதுதான் உண்மையும் கூட/

வீட்டுக்காராம்மாவின் தம்பி இளமுருகு/அவன்தான் கண்டக்டரின் செயலுக்கு ஊக்கம் கொடுத்தானா அல்லது இளமுருகு இருக்கிற தைரியத்தில் கண்டக்டர் அப்படிச்செய்தாரா என்பது தெரியவில்லை.

இளமுருகு இல்லாவிட்டால் பஸ் ஓனருக்கு கையும் ஓடாது காலும் ஓடாது, அவன்தான் எல்லாம் முதலாளிக்கு.சப்ளை அண்ட் சர்வீஸீலிருந்து பஸ் கம்பெனியின் கணக்கு வழக்கு பார்ப்பது வரை எனலாம்/சுருக்கமாகச் சொன் னால் அவனன்றி ஒரு அணுவும் அசையாது அந்த இடத்தில்/

தினசரிகளில் அவனது வேலையே மினி பஸ் ஓடுகிற ஊர்களுக்குப் போய்ப் பார்ப்பது,பஸ்களின் கணக்கு வழக்கு ட்ரைவர் கண்டக்டர் பிரச்சனை, அவர்க ளதுசம்பளம் போக்குவரத்து போனஸ் ,அட்வான்ஸ் குடும்பப்பிரச்சனை மற்றும் இதர இதரவான எல்லாவற்றிற்குமாய் அவன்தான்,

கண்டக்டர் சம்பந்தமான பிரச்சனை எப்பொழுதும்முதலாளியின் காதுக்கு வரு வதுதான், பிரச்சனை முத்திப்போகும் சமயங்களில் இளமுருகுவைக் கூப்பி ட்டு முதலாளி என்ன எழவுடா இது,,,, நித்தமுமா என்கிற ஒற்றை வரைவை இளமுருகுவின் முன் வைப்பதுடன் சரி/

அவனும் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்பான்.இளமுருகுவிடம் பிரச்சனையை சொன்ன ஒரு வாரம் அல்லது நான்கு நாட்களுக்கு பேசாமல் இருப்பார் கண்டக்டர்,அப்புறம் ஆரம்பித்து விடுவார்,அப்புறம் மறுபடியுமாக இளமுருகு,முதலாளி,பேச்சுசமாதானம்இத்தியாதி,இத்தியாதி,,,,,என்கிற ரூபங் களுக்குள்ளாய்  விரியும்/

பார்ப்பார்களெல்லாம் கேட்கத்தவறுவதில்லை. இளமுருகுவிடம், எதுக்குப் போயி அந்த ஆளு கண்டக்டருக்காக இவ்வளவு தவதாயப்படுற,அவரு ஒங்க அக்காபுருசங்குறதுசரிதான்அதுக்காக,இப்பிடியா தொல்லையத்தூக்கி தோள்ல போட்டுக்கிட்டு அலைஞ்ச மாதிரி,

அது ஒனக்கு அக்காதான்னாலும் கூடப்பொறந்த அக்கா இல்லையில்ல,என்ன இருந்தாலும் ஒங்கஅப்பாவோடரெண்டாவதுசம்சாரத்தோட பொண்ணுதான அதுக்காகப்போயி எனச்சொல்லும் சமயங்களில் அப்படியாய் பேசுபவர்களை இளமுருகு ரொம்பவுமாய் பேசவிடுவதில்லை மேற்கொண்டு.

அக்காவிடம்மாறாமல் குடிகொண்டிருக்கும் முக்கிய பாசமே இதற்கு காரணம் எனலாம்.ரெண்டு சம்சாரம் கட்டுனவன் ஒரு வேளை சோத்துக்கு திண்டா டுறான் என்கிற ஊர் சொல்படி இரண்டு தாரங்கள் கட்டிகொண்ட இளமுருகு வின் அப்பா மனைவியின் மயக்கத்தில் இரண்டாவது தாரத்தின் வீட்டிலேயே இருந்து கொண்டு முதல்தாரத்தையும் அவரது குடும்பத்தையும் கவனிக்காமல் விட்டு விட்டார்,

தனி வீட்டில் இருந்த அவர்களது குடும்பம் மிகவும் திண்டாடிய நாட்களில் இரண்டாவது தாரத்தின் பெண்தான் அவர்களை ஓரளவுக்கு கரை சேர்த்தி ருக்கிறாள் அப்பாவிடம் சொல்லியும் அவருக்குத் தெரியாமலும்/அந்த பாசமே இப்பொழுது வரை இழுத்து வந்திருக்கிறது அவர்களிருவரையும் ஒரே நூழி லையில்/

முத்தலாம்பட்டி வழியாகத்தான் சென்றான்,மெயின் ரோடு வழியாக சென்றி ருக்கலாம்தான்,ஆனால் இவ்வழியாகப்போவது சிறிது நாட்களாய் இவனுக்கு வாய்த்துப்போன பழக்கமாய் இருந்தது.

ரயில்வே லைன் கடந்து பாலம் தாண்டி மெயின் பஜார் போய் காய்கறிகளும் வெங்காயமும் வாங்கி வரவேண்டும்.

நேற்று அலுவலகம் விட்டு வரும்போதே வாங்கி வந்திருக்கலாம்தான்.போன் பண்ணினாள்மனைவி,சரி என பதில் சொல்லிவிட்டு அப்போதைக்கு போனை வைத்து விட்டு பிறகுதான் யோசித்தான்,கையில் பை இல்லை என/

சரிபரவாயில்லைநாளைவாங்கிக்கொள்ளலாம் என வந்தது இப்போதைக்கு தவறு எனத்தெரிகிறது,காய்கறி மட்டும் என்றால் பரவாயில்லை, வெங்கா யமும் சேர்த்து வாங்க வேண்டும்,இவனைப்பொறுத்த அளவில் வெங்காயம் வாங்குற நாளில் காய்கறி வாங்குவதில்லை,காய்கறி வாங்கிற நாளில் வெங்காயம் வாங்குவதில்லை என்கிற ஆழமான பாலிசி வைத்திருப்பவன்.

பாலிசிக்குக் காரணம்,இரண்டு கடைகளும் பக்கத்துப்பக்கத்தில் இருப்பதுதான். காய்கறிக்கடைக்காரர் இவனுக்குபழக்கம் ஆவதற்கு முன்பாகவே வெங்காயக் கடைக்காரின் பழக்கம் இவனில் வேர்விட்டிருந்தது எனலாம்.

அதிருக்கலாம் ஆறு ஏழு வருடங்களுக்கு முன்பாக.ஆனால் இப்பொழுது கடை வேறு ஒருவருக்கு கைமாறியிருந்தது.கை மாறியிருந்த சிறிது நாட்களில் அவரது கடைக்குப்  பக்கத்தில் சும்மா இருந்த கடையில் புதியதாய் ஒருவர் கடை போட்டிருந்தார்.அவரது கடையில் காய்கறி மட்டும் இல்லாமல் வெங்கா யமும் தேங்காயும் இருந்தது.காய்கறிகடைக்காரருக்கு மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால் வேறெங்கும் போகாமல் நம்மிடம் மட்டுமே காய்கறி வாங்கு கிறவர் வெங்காயமும் தேங்காயும் சேர்த்து வாங்க மாட்டேன்கிறாரே என்பது தான் அது.

இவனிடம் ஒரு சில தடவை கேட்டும் உள்ளார்,ஏன் சார் இங்கயே எல்லாம் கிடைக்கும் போது,,,,,,,,என ஆரம்பித்த அவர் பேச்சை முடிக்கும் முன்பாகவே அதெல்லாம் சரிப்பட்டு வராதுண்ணே இப்ப ஒரு பேச்சுக்குக் கூட வச்சிக்கிரு வோம்  வெங்காயக்கடைக்காரர் அவர் கடையில காய்கறி யேவாரம் ஆரம்பிச் சாக் கூட ஒங்ககிட்டத்தான் காய்கறி வாங்குவேனே தவிர்த்து அவரு நீங்க கேட்ட மாதிரியே கேட்டாக்கூட அங்க போயி காய்கறி வாங்கீற மாட்டேன் என்றான்,

பழக்கத்த திடீர்ன்னு மாத்துனா மரவேறு அந்து போற மாதிரி,அப்படி மரவேறு அந்து போக எனக்குச்சம்மதமில்ல.இப்ப என்ன ஒங்க கிட்ட ரெண்டு,அவர் கிட்ட ரெண்டுன்னு வாங்கீட்டுப்போறேன் என காய்கறிகளையும் வெங்காயத் தையும் வாங்கிக்கொண்டு வருகிறான்/

தெரு முக்கு திரும்பும் போது பார்த்தான்,மல்லிகா அக்காவீட்டின் முன் புள்ளிகளில்சிரித்தகோலம் பெரிதாக /கோலத்தின்அருகில்மல்லிகா அக்காவும் அவரது வீட்டுக்காரரும் இருந்தார்,

10 comments:

Nagendra Bharathi said...

எழுத்து வீச்சு அருமை

Unknown said...

பகுதி நேரத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

இன்று இருக்கும் கால கட்டத்தில் வீட்டில் இரண்டு பெரும் வேளைக்கு போனால் கூட குடும்ப செலவு சமாளிக்க முடியவில்லை .அப்படி இருக்கும் பொழுது மேற்கொண்டு எப்படி சம்பாதிப்பது என்று பலரும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

சரி வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறது இன்டர்நெட் காங்நேச்டின் இருக்கிறது ஆன்லைன் வேலை செய்து மாதம் ஒரு 2000 சம்பாதித்தால் கூட வாடகை கட்டிவிடலாம் என்று எண்ணி நிறைய பேர் ஆன்லைன் வேலை தேடி ஏமாந்து கடைசியாக இந்த ஆன்லைன் வேலை என்றாலே ஏமாற்று என்று நினைப்பவர்கள் மத்தியில் .எங்களிடம் உள்ள நண்பர்கள் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் எடுக்கிறார்கள் .சரியான வழிமுறைகள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு முன் உதாரணம் .இங்கு ஏமாறுவதற்கு வாய்ப்பு இல்லை ஏமாற்ற எங்களுக்கு மனதும் இல்லை .நானும் உங்களை போன்று ஆன்லைன் வேலைகளை தேடி தேடி அலைந்தவனில் நானும் ஒருவன் இப்பொழுது .நான் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்குஉள்ளேன். நீங்கள் வேலை செய்தால் கண்டிப்பாக பணம் பெற முடியும் .நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களது ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் இல் தான் உங்களது பணம் இருக்கும் .
அதனால் எந்த பயமும் தேவை இல்லை நீங்கள் உழைக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை .உங்கள் உழைப்பு வீண் போகாது. எங்களது நேரமும் நாங்கள் வீணாக விரும்பவில்லை .தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் பயன் பெறலாம்.
நன்றி வாழ்க வளர்க
மேலும் விவரங்களுக்கு

Our Office Address
Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com
Our Websites:
Datain
Mktyping

vimalanperali said...

நன்றி நாகேந்திர பாரதி சார்,
கருத்துரைக்கும் அன்பிற்குமாக/

vimalanperali said...

நன்றி தகவலுக்கு.

Yaathoramani.blogspot.com said...

முடித்த விதம் வெகு வெகுச் சிறப்பு....வாழ்த்துக்களுடன்

vimalanperali said...

பிரியங்களுக்கு நன்றி ரமணி சார்/

வலிப்போக்கன் said...

பழக்கத்த திடீர்ன்னு மாத்துனா மரவேறு அந்து போற மாதி.....அப்படீங்களா.....!!!!!

'பரிவை' சே.குமார் said...

அழகான நடை...
அருமையான எழுத்து...
கலக்கல் கதை...

vimalanperali said...

அப்படியே ஆகட்டும்.நன்றி வருகைக்கு !

vimalanperali said...

பிரியங்கள் விதைத்த மனது.நன்றி வருகைக்கு!