6 Oct 2016

ச்சும்மா,,,,,,

ஏழு ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பதினைந்து நூறு ரூபாய் நோட்டுக்களின் கூட்டுத்தொகை ஐயாயிரம் ரூபாயாக இருந்தது,

நண்பன் கொடுத்தது.நண்பன் என்றால் ஆருயிர் நண்பன் எல்லாம் இல்லை, அதே நேரத்தில் அது இல்லாமலும் இல்லை.அவன் ஒரு அரசாங்க அலுவ லகத்தில் பணியாக இருக்கிறான்,நல்ல மனதுக்குச்சொந்தக்காரன்,

இரண்டுவருடங்களுக்கு முன்பாக ஒரு திருநெல்வேலியில் இருக்கிற தெரி ந்தவரின் கிரகப்பிரவேச வீட்டிற்குச்சென்றிருந்தோம்.இரண்டு பேரும் பேசி வைத்துக்கொண்டு முதல் நாள் இரவே சென்று விட்டோம்.

புது வீடு அதன் வாசனை,சுகந்தம் மற்றும் மற்றும் மற்றுமான எல்லாம் கலந்தும் புத்தம் புது மனிதர்களுடன் காட்சிப் பட்ட வீட்டின் முன்பாக  வேப்ப மரம் ஒன்றை நட்டால் நன்றாக இருக்கும் என்கிற யோசனையை பகிர்ந்து கொண்டவன் கையோடு வீட்டின் எதிர்த்தாற்ப் போல் இருந்த வெற்று வெளியில்முளைத்துக்கிடந்த  வேப்பமரக்கன்று ஒன்றைப்பிடுங்கிக் கொண்டு வந்து நட்டான்,

அவனது அந்நேரத்தைய செயலின் அர்த்தம் சரியானதுதானா அல்லது தப்பானதா தெரியவில்லை,ஆனால் அவன் ஊன்றிய மரக்கன்று இன்று மரமாய்வளர்ந்துநிற்பதாக நாங்கள் சென்ற கிரகப்பிரவேச வீட்டின் சொந்தக் காரர் ஒரு நாளில் சொன்னார்.

நல்ல நண்பன், நல்ல மனம் வாழ்க,அவனது செயல் என அவர் சொல்லச் சொல்ல நான் பாராட்டிக்கொண்டேன் மனதிற்குள்ளாக.

அப்படியாய் பாராட்டுப் பெற்ற நண்பனிடமிருந்துதான்  வாங்கி வந்தேன் ஐயாயிரம் ரூபாய்,

ஏழு ஐநூறில் நான்கு பழுப்பு கலந்தும் மூன்று புதிதாகவும் காட்சிப் பட்டது, நூறில் பத்து புதிதாகவும்  மீதம் ஐந்து பழுப்பு கலந்துமாய் காட்சிப்பட்டது. இதில் பழுப்பு கலந்த நோட்டுகளின் வெள்ளை ப்பகுதியில் ஏது மற்றும், புதிதான நோட்டுக்களின் வெள்ளைப்பகுதியில் ஆண் பெண் பேர் எழுதி ஆட்டீன் வரைந்து அம்புக்குறியிட்டிருந்தார்கள்,(லவ்வாமாமாம்,,,)

ஏயப்பா,காதலை தெரிவிக்க இருக்கிற எத்தனையொ நாகரிக  வழிகளில் இதுவும் ஒன்றாய் தெரிவு பட்டுகாட்சிப்படுகிறது.


என்ன சொல்ல மொத்தததில் ரூபாய் நோட்டுகளுக்குப்பிடித்த கேடாய்ப் போகிறது,பலசரக்குக்கடைகளிலிருந்து அரிசிக்கடை வரைக்குமாயும் இன்ன பிறவற்றிற்குமாய் பயணப்படுகிற நோட்டுக்கள் இப்படியாய்த்தான் காட்சிப் படுகிறது நீண்ட நாட்களாய் என்கிற எண்ணம் சுமந்தவனாய் ஐந்நூறுகளில் ஏழு நோட்டுக்களையும்,நூறுகளில் பதினைந்து நோட்டுக்களையும் சுமந்த வனாய் வருகிறேன்,இதைக்கொண்டு போய் வேறோர் இடத்தில் சேர்க்க வேண்டும் என்கிற உத்வேகத்துடன்/

7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மரம் வளர்ப்போம்
தங்கள் நண்பரின் செயல் போற்றுதலுக்கு உரியது

KILLERGEE Devakottai said...

பாராட்டுக்குறியவர் அந்த நண்பர்
த.ம.1

vimalanperali said...

வணக்கம் காசிராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கில்லர்ஜி தேவகோட்டை சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

போற்றுதலுக்குரியவர் தங்கள் நண்பர்...
அவரை வாழ்த்துவோம்...

vimalanperali said...

வணக்கம் சேக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/