23 Apr 2017

ஓட்டத்தைக்கடந்த படிகள்,,,,,,

ஓடிகடந்த படிகள் மூன்றாக இருந்தன.

வராண்டாவிலிருந்து தெருநோக்கியும், தெருவிலிருந்து வராண்டா நோக்கி யுமாய் இருந்த படிகளை கட்டுகிற போது லாபம் நஷ்டம் லாபம் எனச் சொல்லித்தான் அல்லது கணக்கு வைத்துத்தான் கட்டினார்கள்.

முதல் படி லாபம்,எட்டெடுத்து வைப்பது இரண்டாவது படி நஷ்டம் எடுத்து வைத்த எட்டை மேலுமாய் எடுத்து வைத்து கடப்பது மூன்றாவதுலாபம் கடந்த எட்டைதிரும்பவுமாய் எடுத்து வைப்பது,,,என்கிறஅர்த்தத்தில் லாபம் நஷ்டம் லாபம் என்றார்கள்.

தெரு முழுக்கவுமாய் பறந்து பட்டுக் காணப் படுகிற வெளியில் ரோட்டடிக் கென ஒதுங்கியது போக தெருவின் வலதும் இடதுமாய் இருந்த வெட்ட வெளியில்முளைத்துத்தெரிந்த வீடுகள் அருகில் இருந்த மரங்களின் நிழலில் ஒதுங்கி நின்றது போல் இருந்தது சிறிது தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு/

புதர்காடாய் அடர்ந்து தெரிந்த மரங்களுக்குள்தான்அந்தத்தெருவலமும் இடமு மாய் காத்து வைத்திருந்த எல்லா வீடுகளின் கழிவு நீரும் அந்தந்த வீடுகளின் குப்பைகளும் அங்குதான் வந்து விழு ந்தன,ப்யூஸ்போன ட்யூப்லைட்டை கூட அங்குதான்போட்டார்கள்.

தெரு முழுக்கவுமாய் பறந்து கொட்டிக்கிடக்கிற குப்பைகளை அள்ள பஞ்சா யத்திலிருந்து ஆட்கள் வருகிறார்களோ இல்லையோ,அடிக்கிற காத்து அள்ளிக் கொண்டு போய் குப்பைகளை தெரு முழுக்கவும் மரப்புதரிலுமாய் போட்டு விடும்.

எப்பொழுது பார்த்தாலும் புதர் முழுக்கவுமாய் தூசியும் மண்ணும்,சாக்கடை கழிவுநீர்அடர்ந்ததுமாய்த்தான் தெரியும்.

அந்தப்பக்கம் போகவே பிடிப்பதில்லை.ஒரே வாடை, ஆய்,,,,சேய் என முகம் சுளித்துக்கொண்டு போய் விடுவான்,பால சுந்தரத்தின் மகன்.

அந்தப்பக்கம் வந்தால் மூக்கைப் பிடித்துக்கொள்வான். சேய் லே,,, அங்கிட்டுப் போகவேணாம் ஊம் ஏய்ய்ய்,,,,என்பான்.ஐந்து வயதுதான் இருக்கும் அவனுக்கு,

“மிஸ் சொல்றாங்க,ஆய் இருக்குறபக்கம் போகக்கூடாதுன்னு சொல்றாங்க, அப்பன்னா மிஸ் ஒங்க வீட்ல நித்தம் ஆயிப்பக்கம் போவீங்களா இல்லை யான்னு பதிலுக்கு நான் கேட்டப்ப சொன்னாங்க வாய மூடிக்கிட்டு பேசாம பாடத்த கவனிக்கனும்ன்னு/சரின்னு அன்னையில இருந்து நானும் ஒண்ணும் கேக்குறதில்ல.அவுங்களும் ஒண்ணும் சொல்லிக்கிறதில்ல. என்பான்.

பால சுந்தரம் பாண்டியன் காலனியில் இருக்கிற ஒரு பல சரக்கு கடையில் வேலை பார்த்தார் சிறு வயதிலிருந்து/

அந்தக்கடை முதலாளியின் பழக்கத்திற்காக கடை கொஞ்சம் ஓடுகிறது என் றால் பாலசுந்தரத்தின் நல்ல பழக்கத்திற்காவும் குணத்திற்காவும் கொஞ்சம் அதிகமாகவே ஓடியது எனலாம்,முகம் சுண்டாத பேச்சு,கனிவான சிரிப்பு அளவான பழக்கம்,வேகமான வேலை,இதுதான் அவனை அப்படியாய் அங்கு நிலைநிறுத்தியிருந்தது,

இது தவிர கடைக்கு வருகிற பெண்களில் பாதிக்கும் மேலான பெண்கள் இவன் இருந்துசரக்குவாங்கினால்தான் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்  எனச்சொல்வார்கள்.

இது கடைக்கு வருகிற பெண்கள் கடைக்கொள்கிற முறை என்றால் அவர் களைப் பற்றி பாலசுந்தரம் ஒரு கணக்குப்போட்டு வைத்திருப்பான். அவர்க ளின் பழக்கமும் அவர்கள் கடையில் சரக்கு வாங்க வருகிற முறையும் பால சுந்த ரத்திற்கு அத்து படி.

யார் யார் எந்தெந்ததெருவிலிருந்து வருகிறார்கள் என்ன வாங்கு வார்கள். கடன் சொல்வார்களா இல்லை வாங்குற பொருள்கள் பாதிக்கு காசு கொடுத்து விட்டு மீதிக்கு கடன் சொல்வார்களா என்பதிலிருந்து வாங்குற பலசரக்கை சடுதியில் வாங்கிப்போவார்களா இல்லை சரக்குகள் வாங்க வருவது போல் வந்து ஒப்பேற்றுவார்களா என்பது முதல் கொண்டு பாலசுந்தரத்திற்கு அத்து படி/

கடை ஓனர் கூப்பிட்டிச்சொல்லி விடுவார்,யப்பா நீயி அந்த பொம்பளயாள்கள கவனி,ஒண்ணொன்னும் ஒவ்வொரு திசையில இருந்து ஒவ்வொரு நோக்க த்தோட வரும்.ஒண்ணொன்னும் ஒண்ணொன்னு சொல்லிக்கிட்டு வரும், நமக்கு அவுங்கள கவனிச்சி அனுப்புற அளவுக்கு நிதானம் போதாது.நீயே பாத்துக்கப்பா என்பார்.அதபெருமையா நெனைச்சி ஓனர் சொன்ன வேலைய செய்யாட்டிக்கூட சரி அதுவும் ஒரு அனுபவம்தான என்கிற முறையில் எடுத் துச் செய்வான்.அந்த அனுபவமும் பழக்கமும் அவனுக்கு கை கொடுத்தது. பின்னாளில்.அந்தக்கடையிலிருந்து விலகி தனியாக கடை வைத்த போது அவனுக்கு இந்த பழக்கமும் முதலாளி சொல்லிக்கொடுத்த அனுபவமும் கை கொடுத்தது.

இன்னும் சொல்லப்போனால் அவர்தான் கடை வைத்துக்கொடுத்தார். அவரி டம் அது பற்றி பலரும் பல மாதிரியாகச்சொன்ன போதும் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை,விடுப்பா நம்மபள நம்பி வந்த பையன்,அவனுக்கு நம்ம செய்யாம யாரு செய்வா,நான் இன்னும் கூட கொஞ்சம்கூட யோசிக்கிறேன்.

அவனுக்கு கடை வச்சிக்குடுத்து கல்யாணமும் பண்ணி வைக்கலான்ம்ன்னு நெனைக்கிறேன்,எனக்குதெரிஞ்சகுடும்பம்ஒண்ணு,இல்லாத குடும்பம் ,பொண் ணுக்குஅம்மாகெடையாது,அப்பாமட்டும்தான்,அண்ணன்ஒரு குடி கேடி, அவன் சம்பாத்தியம் அவன் குடிக்கே சரியாப்போகும்.பொண்ணு தீப்பெட்டி ஆபீஸீல வேலை பாத்து தனக்குன்னு கொஞ்சம் சேத்து வச்சிருக்கா, இவன்கிட்ட ஒரு தடவ கேட்டப்ப வீட்ல கேட்டுட்டு சொல்றேன்னான்.அந்தப்பையன் வீட்ல போயி நானும் கேட்டேன் ரெண்டொரு தடவ/அவுங்களுக்கு பையன் கல்யா ணம் பண்ணி செட்லாகுறதுல எந்த வித ஆட்சேபனையும்இல்ல,

ஆனாஅவன் அப்பா சொல்றாரு, இப்பத்தான கடை வச்சிக் குடுத்துருக்கீங்க, அதுவே நாங்களும் ஏங்பையனும் செஞ்ச மிகப்பெரிய புண்ணியம்,அதுக்கு எங்க ஒடம்ப செருப்பா தச்சிப் போட்டாலும் காணாதுங்ய்யா, கோவிச்சிக்கிறா தீங்கய்யா இப்பிடியெல்லாம் பேசுறோம்ன்னு, கொஞ்சம் மூச்சு வாங்கிக்கி றோம்ய்யா,ஒரு ஒரு வருசம் டயம் குடுத்தீங்கன்னா அவனும் கொஞ்சம் ஏதோகால்ஊனிக்கிருவான்.அழுத்தமா இல்லாட்டிக்குக்கூட கொஞ்சம் சுமாரா வாவது நெலையாகி நின்னுட்டான்னாக்கூட போதும்,அப்புறம் நீங்க சொல்ற பேச்சுக்கு மறு பேச்சு இல்லாம ஏத்துக்கிறம்ய்யா,,,,,என்ற பாலசுந்தரத்தினது அப்பாவின் பேச்சை இடை மறித்த கடை ஓனர் வாஸ்தவம்தான் நீங்க சொ ல்றதெல்லாம்,மறுக்குறதுக்கில்ல.ஆனா அங்கபொண்ணோடஅப்பன் நெலை மை ரொம்ப சீரியஸா இருக்கு,ஆளு கொஞ்சம் நெலையில்லாம இருக்காரு, அதுக்காகத்தான் இவ்வளவு அவசரப்பட வேண்டியதிருக்கு,இல்லைன்னா அவன் ஏனோதானோன்னு இல்ல நெலையாகால் ஊனுனப்பெறகு கூட கல்யா ணம் வச்சிக்கிறலாம். என்ற கடைக்காரரின் பேச்சை ஏற்று அடுத்த முகூர் த்ததில் திருமணம் நடந்து முடியவும்,திருமணம் எப்பொழுது முடியும் எனக் காத்திருந்ததுபோல்திருமணம் முடிந்த சிறிது நாட்களில் பெண்ணின் அப்பா இறந்து போனார்.

அவர்இறக்கிற பொழுது பாலசுந்தரத்தின் மகன் வயிற்றுப் பிள்ளையாக இருக் கிறான்.அவன்தான் இப்பொழுது சீய் ஆய் எனச் சொன்னவனும், கற்றுக் கொ டுக்கிறவளிடம்அந்தக்கேள்வி கேட்டதும்,அதற்கு பதில் பேச்சு பேசியவனு மாய் ஆகிப்போகிறான்.

படியைக் கட்டிக்கொடுத்த கொத்தனார்கள் எழுநூற்றுச்சொச்சம் சதுர அடி வீட்டில் முன்புறம் படி வைப்பதில் மட்டும் லாபம் நஷ்டம் என முடித்து விடு கிறார்களே ஏன் எனத் தெரியவில்லை.

அந்தலாப நஷடத்திலும் சரி மாடிப்படிகளில் ஏறும் போதும் சரி ஓடித் தாவித் தான் ஏறுகிறான்,கடக்கிறான்,

அலுவலத்தில்உடன் வேலை பார்க்கிறவர் கேட்கிறார்,என்ன சார் இது நடக்கச் சொன்னா ஓடுறீங்களே என்பார் கேலியாக/

பொதுவாகவே அலுலகத்திற்குள் இவனது நடை கொஞ்சம் வேகம் சுமந்தே இருக்கும். அதிலும் இவன் காசாளர் அறையில் அமர்ந்திருந்தானானால் காசா ளர் அறையிலிருந்து பெட்டக அறைக்கும் பெட்டக அறையிலிருந்து காசாளார் அறைக்குமாய் ஓட்டமும் நடையுமாகத்தான் இருப்பான்.அல்லது எட்டுக்களை பெரிதாக எடுத்து வைப்பான்.

கேலியாய் பேசியவர் திரும்பவுமாய் சொல்வார். ஒங்க வேகத்துக்கு எங்களால ஈடு குடுக்க முடியல என.அதற்கு இவன் சிரிப்புமாயும் அது அல்லாமலுமாய் சொல்வதுண்டு.

“சார் வயசு இப்ப அம்பத்தி மூணி ஆகுது சார்.இப்பவே கொஞ்சம் ஒடம்பு பிஞ் சின் வாங்க ஆரம்பிக்குது,அதான் வம்பா ஏதாவது ஒடம்பவருத்துவோம்ன்னு இப்பிடி செஞ்சிக்கிறது,

நம்மளப்போல ஆள்களுக்கு உடல் உழைப்பு கிட்டத்தட்ட இல்லைன்னு ஆகிப் போச்சி சார்,அதான் இது போலான வேலைகள உடல் உழைப்பா நெனைச்சி செஞ்சிக்கிறேன்என்பான்.ரெண்டாவதுஇந்த ஓட்டத்துலதுலயும் வேகத்துல யும் இருக்குற ஒரே பிரயோஜனம் தொந்தாந்தொசுக்கான்னு ஓடி ஓடி ஒக்கா றாம கொஞ்சமாச்சும் ஒடம்ப சொன்னபடி கேக்க வச்சிக்கிறலாங்குற நப்பா சை தான் சார்” எனவுமாய் சொல்வான்.

இவன்சொல்வதை கேட்கிற அவர் சரி என்பது போல்ஆமோதிப்புஇல்லாமல் தவறுதான்எனஆமோதிப்பற்று இல்லாமலும்மெலிதாய் ஒரு மென் சிரிப்பை மட்டுமாய் சிரித்து வைப்பார்.பொதுவாக அந்த சிரிப்பு உங்களுக்கும் வேண் டாம் எனக்கும் வேண்டாம் என்பது போல் இருக்கும்.

அதுகூடபரவாயில்லை,இவனுடன்கூடவேலைபார்க்கும் பெண் கிளார்க் ஒரு வர் ஏன் இப்பிடி எந்த நேரம் பாத்தாலும் பரபரன்னு இருக்கீங்க என்பார்,அதற்கு இளைஞன் நான் அப்பிடித்தான் இருப்பேன் என்கிற இவனின் எளிமையான பதில் கேட்டு சிரிக்காதவர்கள் யாரும் கிடையாது அந்த அலுவலகத்தில்/

அந்த இளவட்ட வேகம்தான் படியில் இறங்குற பொழுதும் ஏறுகிற பொழுது மாய் இருக்கிறது.

ஓடிகடந்த படிகள் மூன்றாக இருந்தன.

வராண்டாவிலிருந்து தெருநோக்கியும், தெருவிலிருந்து வராண்டா நோக்கி யுமாய் இருந்த படிகளை கட்டுகிற போது லாபம் நஷ்டம் லாபம் எனச் சொல்லித்தான் அல்லது கணக்கு வைத்துத்தான் கட்டினார்கள்.

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இளவட்ட வேகம்
நல்லதுதானே

இராய செல்லப்பா said...

படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்த்து.
- இராய செல்லப்பா நியூஜெர்சி

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் செல்லப்பா சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/