இவன் சொல்வது அவருக்கு சரியாகக்கேட்கவில்லை.இவன் மட்டுமல்ல யார் சொன்ன போது அவருக்கு சரியாகக்கேட்காதுதான்.
ஏன் இப்பிடி அடுத்தவுங்க சொல்றதும்கேக்காம நீங்களும் சங்கடப்பட்டுக் கிட் டு ரொம்ப செரமப்படுறீங்க, என அடுத்தவர்கள் சொன்ன போதும் அஞ்சோ பத்தோ ஆனா ஆயிட்டுப் போகுது ஏன் போட்டுக்கிட்டு துன்பப்பட்டுக் கிட்டு ,,,,,பேசாம ஒரு மிஷின வாங்கி மாட்டிக்கிற வேண்டியதுதான,என யார் சொ ன்ன போதிலும் உதாசீனம் செய்து விடுவார்.
அது எதுக்கு அதப்போயி காதுக்குப்பின்னாடி அசிங்கமா ஒட்ட வச்சிட்டு, இப்பிடியே இருக்குறதுல இன்னொரு சௌகரியமும் ஒண்ணு இருக்கு.யாரும் என்னையப்பத்தி யெசக்கேடா பேசுனாலும் கேக்காது.தவுர அவுங்க பேசுற ஒழுக்கக்கேடான பேச்சுக்கு நான் வருத்தப்பட வேண்டியது இருக்காது பாரு ங்க என சொல்லிச்சிரிப்பார்.
பாண்டியன்காலனியில்டீக்கடைவைத்திருக்கும்போது அதிகாலையில்மூன்று மணிக்கெல்லாம் விழித்து விடுவார்.
“ஏன் இப்பிடி இருக்கீங்க ,ராத்திரி தூங்கும் போதும் லேட்டாத்தான் தூங்குறீ ங்க,எப்பிடியும் பண்ணெண்டு மணி ஆகிப்போகுது.இப்ப இப்பிடி காலையில யும் சீக்கிரம் எந்திரிச்சி ஏன் இப்பிடி அழிச்சாட்டியம் பண்ணுறீங்க,கேட்டா கடையப்போயி தெறக்கபோறேன்றீங்க,இந்த நேரத்துல யாரு வந்து ஒங்க ளுக்காக கடை முன்னாடி வரிசை கட்டி காத்து ருக்காங்க,அப்பிடியே வந்தா லும் ஒங்கள மாதிரி ரெண்டு ஒண்ணு வந்து காத்துக்கிட்டு இருப்பாங்க, அந்த கடைசி வீட்டுக்காரரு ஒருத்தரு,மில்லுக்காரரு ஒருத்தரு,நடுத்தெருக்காரரு ஒருத்தரு,மாடிவீட்டுக்காரருஒருத்தரு,நாலாவதுவீட்டுக்காரருஒருத்தருன்னு ,,,,, இன்னும் நாலைஞ்சு பேருமா சேந்து வருவாங்க,எல்லாம் ஒங்க வயச ஒத்தவங்களதான் இருப்பாங்க,அவுங்க கூட வம்பு பேசிக்கிட்டு அவுங்களுக்கு டீக்குடுத்துக்கிட்டு இருக்குறதுக்கு பேசாம கூடக் கொஞ்ச நேரம் படுத்து எந்தி ரிச்சிக்கிட்டு நிம்மதியாப்போயி கடை தொறக்கலாம்ல”,என்கிற மனைவியின் பேச்சிற்கு தொறக்கலாம் இல்லைன்னு சொல்லலம்மா,ஆனா என்ன ஒரு துரதிஷ்டவசம்ன்னா காலையில அந்த நேரத்துல தொறந்தாத்தான் இப்பிடி யான ஆட்களெல்லாம் வருவாங்க,அப்பிடி வர்றவுங்க நீயி சொன்ன ஆட்க தவிர்த்து இன்னும் கூடுதலா ஆறேழுபேருக்கு மேல வர்றாங்க,எல்லாரையும் சேத்து வச்சிப்பாத்தா எப்பிடியும் பதினைஞ்சி பேருக்கு மேல வருவா ங்க,
”அவுங்களெல்லாம்அந்நேரம் வந்து பளபளன்னு விடியிற நேரம்போயிருவா ங்க, அப்பிடிவந்து போறவுங்கஎல்லாரும் டீக்குடிக்கனும்ன்னு மட்டும் வந்து போறது இல்ல.அவுங்க பொறந்தது வளந்தது,அவுங்க படிச்சது மேல அவுங் களோட இளம் பிராயம் மத்தபடி அவுங்க கல்யாணம் குடும்பம் புள்ள குட்டிங்க, அவுங்க படிப்பு வேலை அவுங்க கல்யாணம் குடும்பம் மகன் மருமக,பேரன் பேத்தின்னு நெறைய பேசுவாங்க,பரிமாறிக்கிருவாங்க,
“இதுல பென்ஷன் வாங்குறவுங்க,கைக்காசு வச்சிருக்குறவங்க,மக்க மாருக பேரன் பேத்தி கைய நம்பி இருக்குறவுங்கன்னு நெறையப்பேரு இருக்காங்க/,
”இதுல மில்லுக்காரரு நெலைமையின்னா இதுலயிருந்து கொஞ்சம் வேறு பட்டுநிக்குது.அவருக்குபாருங்கநெலையானவருமானம்ன்னு ஒண்ணும் கெடை யாது.மில்லு வேலையில இருந்து நின்ன ஒடனே வந்த மொத்தப் பணமும் வீட்டுப்பாட்டுக்குப் போக மிச்ச இருந்த பணத்த பேங்குல போட்டுட்டு அதுலயி ருந்து வர்ற வட்டிப்பணத்த வச்சித்தான் சாப்புட்டுறாரு,மத்தபடி அவுங்க மக்க மாருகளும் பேரன் பேத்தியும் கைச்செலவுக்குன்னு குடுக்குற பணத்த வச்சி ஓட்டிக்கிர்றாரு,
“அந்த விஷயத்துல அவரது பேரன் கெட்டிக்காரன்,அவனுக்குன்னு அன்றாடம் செலவுக்குகுடுக்குறகாசுலமிச்சம் வச்சி அவருக்குக்குடுப்பான்,அவரு எவ்வ ளவு தான் வேணாம்ன்னு சொன்னாலும் கேக்க மாட்டான்,வம்பா கொண்டு வந்து குடுத்துட்டுத்தான் போவான்,ஆரம்பத்துல கொஞ்சம் பிகுபண்ணுனாலும் கூட போகப் போக அவருக்கு அவன் தர்ற காசு தேவையா இருக்குறதுனால வாங்க ஆரம்பிச்சுட்டாரு.
அந்தக்காசுதான் அவருக்கு தினமும் டீக்குடிக்கவும் வடை சாப்புடவும் ஒதவுது தவுர அவர மனம் கோணாம வச்சிருக்குறது பேரன் கைச்செலவுக்குன்னு குடுக்குற கொஞ்சம் கைக்காசும்தான்,
இது ஒரு பக்கம்ன்னா அந்த மிலிட்ரிக்காரரு நெலம இன்னும் மோசம். அவரு க்கு வர்ற பென்ஷன் பணத்த அவரு கூடவே போயி அவரு வீட்டம்மா எடுத் துட்டு வந்துரும். பென்ஷன் பணத்த எடுத்த கையோட மிலிட்ரி கேண்டீன் போயி சாமான்க வாங்கீட்டு வருவாங்க,அதுல இவருக்குன்னு மிஞ்சுறது ஒரே ஒரு பிராந்தி பாட்டில் மட்டும்தான்.அதுல கூட கூட ஒரு பாட்டில் வேணு முன்னா வாங்க சம்மதிக்காது அவரு வீட்டம்மா, பின்ன அவரோட செலவுக்கு என்னங்குறாருன்னா அவரோட பேத்தி குடுக்குற காசுதான்,
“அவ ஒண்ணும் அவளுக்குன்னு குடுத்த காச சேத்து வச்செல்லாம் தர மாட் டா/அவ பாட்டிகிட்டப்போயி ரைட் அண்ட ராயலா சண்ட போடுவா,,,, பாட்டி பென்ஷன் பணத்துல தாத்தாவுக்குக் குடுக்க வேண்டிய பணத்தக் குடுன்னு சண்ட போட்டு வாங்கீட்டு வந்துருவா ,,,,அந்தப்பணத்துலதான் அவருக்கு டீ வடை மத்த மத்தது எல்லாம்,
“அது போக கல்யாணம் ஆகிப்போன அவரு பொண்ணு பெங்ளூர்ல இருக் காப்ல அந்தப் பொண்னுக்கு மூணு மாசத்துக்கு ஒரு முறை பணம் அனுப்பு வாரு, அவரு அனுப்புற பணம் அந்தப்பொண்ணுக்கு பெரிய அளவுல தேவை இருந்துறப் போறதில்லைன்னாக் கூட ஏதோ கைச்செலவுக்கு ஆயிட்டுப் போ குதுன்னு சொல்வாரு.
அந்தப்பொண்ணு கூட சொல்லுவா,ஏங் இவ்வளவு செரமப்படுறீங்க, நீங்க வாங்குற பென்சன் ,பணத்துல அங்க அம்மாகிட்ட புடுங்குபெத்துக்கிட்டு ஏன் போயி இப்பிடி பண்ணாட்டி என்னன்னு,,,,/
”ஆனாஇவரு விடாம அந்த வேலையபண்ணிக்கிட்டே இருக்காரு. அந்தப் பொ ண்ணுக்கும்பத்தாவதும் ஏழாவதும் படிக்கிற புள்ளைங்க இருக்காங்க ஆனாலு ம்இன்னும்பிரியம்மாறாமபணம்அனுப்புறகொணம்அவருகிட்டஇருக்கு,வாங்கிற மனசு அந்தப்பொண்ணுகிட்ட இருக்கு,அப்பன் மக ஒறவுன்னா இப்பிடி இருக் கணும்,
“இவரு அந்தப்பொண்ணுக்கு பணம் அனுப்புறது மட்டும் இல்ல,இவருக்கு ஏதாவது தேவைன்னா அந்தபொண்ணும் சும்மா வச்சி செலவழிங்கன்னு பணம் அனுப்பும், இதெல்லாம் அவுங்க பேச்சுல வரும்.
“இதுலகழிவிறக்கப்பேச்சு,பச்சாதாபப்பேச்சுன்னு நெறையவரும்,நெறைய போகு ம், இதுலயாரும்யாரைப்பத்தியாரையும் தப்பா பேசுனது கிடையாது, யா ரும் யாரைப் பத்தி பெறனி பேச மாட்டாங்க,
”வீட்டுல உள்ள மக்க மாருகளப் பத்தி, பேரன் பேத்திகளப் பத்தி கொற பட்டுக் குருவாங்களே தவுர தப்பா பேச மாட்டாங்க, தப்பா பேசுறது வேற கொற பட்டுக்குறதுவேற,இது ரெண்டையும் ஒண்ணாப் போட்டு கொழப்பக் கூடாது ன்னு அவுங்க பேசுறத வச்சி எப்பவாவது புரிஞ்சிக்கிற முடியும்,
“ஒனக்குதான் காது கேக்காதே பின்ன எப்பிடின்னு கேக்குறவுங்களுக்கு நான் சொல்றதுஇதுதான்எப்பவுமா இருந்திருக்கு, உணர்வுகளப் பகிர்ந்து பேசுறவுங்க பேச்சக்கேக்குறதுக்குகேட்புணர்வு எதுக்குன்னுதான் கேக்கத் தோணுது.,,,,, எனச் சொல்லித்தான் அன்றாடம் அவர் கடையைத் திறப்பார்.
அவரது கடை டீ ஒன்றும் அவ்வளவு சுவையாகவும் அது அற்றுமாய் இருக் காது என்கிற போதும் கூட அவரது கடைக்கு வருகிற கூட்டத்திற்கு பஞ்சம் இருக்காது,ஓட்டப் பந்தயத்தில் நான் ஒருவன் மட்டுமே ஓடினேன் என்பது போல்/
அவரதுகடை மட்டும் அங்கு நிலை கொண்டிருந்ததால்கூட்டம் வந்ததில் ஆச்ச ரியம் ஒன்றும் இல்லை.
”எல்லாம் சரிதான் ஒங்க நிம்மதிக்காவும் பொழப்புக் காவும்ன்னு சொல்லி கடை போட்டீங்க,என்னையும் போட்டு கொலையா கொன்னு கடையில ஒக்காரவச்சி வியாபாரத்த விருத்தி பண்ணுனீங்க சரிதான்.அதுல ஒங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி இருந்துச்சிங்குறது உண்மைதான்,அதே சமயம் கடையில சம்பாதிச்ச சம்பாதித்தியத்த மாசத்துக்கு ஒருக்கா,ரெண்டு தடவைன்னு ஆஸ் பத்திரியிலகொண்டுபோயி குடுத்துட்டுவந்துருறீங்களே, பிரஷரு,மூச்சுத் தெண றலுன்னு,,,அது எப்பிடி சரியாயிருக்கும் சொல்லுங்க” என்கிற மனைவியின் பேச்சுக்கு,,,,,”இது நா டீக்கடை போட்டதுனாலதா வருதா,சும்மா இருந்தாலும் வர்றதுதான,இதுல கழுதையப் போட்டுட்டு என்ன பெருசா வியாக்கினம் வேண்டிக்கிடக்கு,,,,,”எனச்சொல்லி சிரிப்பார் பெரிதாக/
இரவு பணிரெண்டு மணிக்குப்படுத்து அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து டீக்கடை வைத்து சம்பாதிக்கிற அவரின் சம்பாத்தியம் பாதி ஆஸ்பத்திரிக்கும் மீதி நேரம் அவரது நிம்மதியற்றதனத்திற்குமாய் செலவாகிப் போகிறது என்கிற நிஜம் அறிந்தவர்களாய் இருந்த அவரது வீட்டார்கள் அவரை கடை யை மூடச்சொல்லி விட்டு ”வேண்டுமானால் மாதாக்கோயில் கிட்ட நம்ம சொந்தக்காரங்க வச்சிருக்குற டீக்கடையில இருந்துக்கங்க சம்பளத்துக்கோ இல்ல பொழுது போக்குக்குக்கோ” என்றார்கள் வீட்டில்,/
அதற்குஅவர்சம்மதித்த மறு நாளிலிலிருந்து அந்தக்கடையில்தான் நிற்கிறார். அப்படியாய் அவர் நின்ற கடையைக்கடக்க நேர்கிற சமயங்களில் நின்று குடிக்கிறடீயின்பொழுதில் தான் இவ்வளவுமாய் வந்து விழுந்து விடுகிறது.பார் க்கவும் கேட்கவுமாய் நேர்ந்து போகிறது.
”காது கேக்கலைன்னா வருத்தப்பட வேண்டியதிருக்காது பெரிசாங்குறது சரி அதுக்காக கண்ணு முன்னால நடக்குற எத்தனையோ நல்லாஇல்லாததுகளப் பாக்குறதுக்கு வருத்தப்பட்டுகிட்டு பார்வை இல்லாம இருந்த நல்லா இருக் குன்னு நெனைக்கிறதா கிறுக்குப்பயலே” என அவரது சகவயதுக்காரர்கள் அவரிடம் சப்தம் போட்டுப்பேசும் போது ஏற்றுக்கொண்டு நிற்பார் மௌனம் காத்து.
ஆனாலும்அவர் மனம் சொல்கிற அச்சடி த்த பதில் இதுவாகத்தான் இருக்கும். ஏங் சௌகரியம் இது அதுக்காக ஊர்க் காரங்களுக்கு கண்ணில்லாம போறது பத்தி யோசிச்சா எப்பிடி என்பார்,எனக் கேத்தாப்புல எனக்குன்னு சமாதானம் பண்ணிக்கிறேன் அவ்வளவுதான் என்பார்,
அந்த அவ்வளவில்தான் அவரது பேச்சும் சமாதானமும் செயல்பாடும் இருக் கும்.அவரது காதுவாகு அப்படி எனத்தெரிந்தும் கூட கடை ஓனரும் சரி கடை க்கு வருகிறவர்களும் சரிஎன்னய்யா இது என கொஞ்சம் சலிப்பு சுமந்து பேசும் பேச்சை ஒரு மென் சிரிப்பில் கடந்து விடுவார்.சரி விடுப்பா,அவுங்க அப்பிடித்தான் நாம் இப்பிடித்தான் என்பார்.என்ன சமயத்துல ரோட்டுல போற வுங்க திரும்பிப்பாக்குற அளவுக்கு சப்தம் போடுறதுதான் சங்கடமா இருக்கு மனசுக்கு என்பார்.
இது ஒரு புறம் இருக்க அவர் பேசுவதும் சரியாக கேட்க வில்லை.அல்லது விளங்கவில்லை.அவர் பேசுகிற பேச்சில் இரண்டிற்கு ஒன்று இவனது காதில் விழும்.அதுவும் முழுதாக விழாது.நான்கு பேச்சென்றால் இரண்டுதான் வந்து சேர்கிறது.மற்றதெல்லாம் பின் தள்ளிப்போய் விடுகி றது.
போய் விடுகிறதென்றால் காற்றில் கரைந்து போய் விடுவதில்லை.பேசுகிற பேச்சை பாதி முழுங்கி விடுகிறார் அவர்.
உடன் வேலை பார்க்கும் இளம் குமாஸ்தாவை சிவகாசி ரோட்டில் இறக்கி விட்டுவிட்டு வரும்போதுதான் வந்து விடுமோ சடுதியாக என நினைத்து அச்சப்பட்ட மழை லேசாக சொட்டடிக்க ஆரம்பித்தது.
“சார் மழை வந்துருமோ பஸ்ஸேறுறதுக்குள்ள, கரெக்டா மழை துளி வாயி லேயே விழுகுது சார்” என்றார்.
அவருக்கு கவலை எங்கே மழை பெய்து தொலைத்து நம்மை ஊருக்குப் போக விடாமல் தாமதம் செய்து விடுமோ என்பதாய் இருந்தது. ”அடப் போங் கடா நீங்களும்,ஒங்க மழையும் எனக்கு வீட்டுக்குப்போகணும் காலகாலத்துல அங்க போயி பொண்டாட்டி புள்ளைங்கள பாக்கணும்.ஆபீஸீலபட்ட பாட்லயி ருந்து வீடடையப்போற தருணத்துல இப்பிடி போகவிடாம ஒரு மழையால தடுக்க முடியுதுன்னா எரிச்சல் தான் வருது எனச்சொன்ன அவர் வண்டி ஓட்டுகிற இவனை மனதிற்குள்ளாக மெலிதாகவாவது திட்டியிருக்ககூடும்.
அலுவலகம் முடிந்து இவனது இரு சக்கர வாகனத்தின் பின்னால் அவரை ஏற்றியதிலிருந்து அவர் இறங்க வேண்டிய இடத்தின் அருகாமைவரை முப்பதிலும் இருபதிலுமாய்த்தான் பயணிக்க முடிந்தது.
பணி முடிய இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன .பொதுவாக நேரத்திற்கு அமர்ந்து நூல்ப்பிடித்து நேரம் முடிய மட்டும் வேலை பார்ப்பது இவனது வழக்கமில்லை.மனசாட்சிக்கு விரோதமாய் அப்படி பார்க்க நேர்கிற நாட்களில் தூக்கமும் பிடிப்பதில்லை,கடுமையான மன வாதைக்கு உள்ளாகிப்போகிறதும் உண்டுதான்.
அப்படியான ஒரு நேரமாய்பார்த்துத்தான் அன் றும் பணிமுடிந்து எழ வேண் டியதாகவும் அவரை கூட்டிப்போக வேண்டி யதாகவும் ஆகிப்போகிறது. மென் மை கவிழ்ந்து முரட்டுத்தனம் காட்டாத நீலவானம் சற்றே கருமை சுமந்தும், குளுகுளுப்பை அள்ளீ வீசிக் கொண்டுமாய்,,,,,/
சற்றே ஆளரவம் குறைந்த சாலையில் ஆங்காங்கே மனிதர்களை அள்ளித் தெளித்துக்காண்பித்ததுசாலை.அப்படியானஅள்ளித்தெளிப்பின்முக்கியப்புள்ளி களாய் அடையாளம் காட்டப்பட்ட மனிதர்கள் இரு சக்கர வாகனங் களி லும் பாதசாரிகளாகவும்,திறந்திருந்த கடைக்குள்ளாகவும், டீக்கடை முன்பாகவும் காட்சிப்பட்டுத்தெரிந்தார்கள்.
அந்த காட்சி அவிழ்பின் காட்சியை கண்ணுற்றவனாகஅவரைபின்னமர வைத்து விட்டுமுன்னமர்கிறான்.
அலுவலக வாயிலிருந்து. சரவணன் தியேட்டர்,ரெங்கநாதர் கோயில்,பாய் டீக்கடை,,,,,,எனசென்ற நீண்ட சாலையின் எல்லை தாண்டி இன்கம்டாக்ஸ் ஆபீஸ் ரோடு திரும்பியதும் முன் சென்ற லாரியின் வால்ப்பிடித்து செல்ல வேண்டியதாகிப் போனது.
லோடு லாரி,நிறை பாரமாய் சென்றது.இப்படியான இடங்களில் இப்படியாய் நிறைபாரத்துடன் செல்கிற லாரிகள் மெதுவாக ஆடி அசைந்துதான் போகும் போலும்/
லாரியின் பக்கவாட்டு ஓரமாய் ஒதுங்கிப் போகலாம் என்றால் இடமும் இல் லை. கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது.வேறு வழியில்லை,ஸ்டேட் பேங்க் முக்கு திரும்பும் வரை இப்படித்தான் செல்ல வேண்டும்,
அகலம் காட்டிச்செல்லாத சிங்கிள் ரோடு,நீளம் ஜாஸ்தி,அகலம் குறைவு,அங்கு போய்தான் இந்த ரோடு முடிந்து மெயின் ரோட்டில் இணைந்து செல்லும்.
“இப்பிடி போறதுக்கு பேசாம உருட்டிக்கிட்டு போயிறலாம சார், கொஞ்சம் யெறங்குங்க,சார்,அப்பிடியே உருட்டிக்கிட்டே போவோம் கொஞ்ச தூரம்” என்றார் உடன் வந்த குமாஸ்தா/
கேலியும் கிண்டலுமாய் அவரை விட்டு வந்த வேளை லேசாய் சொட்டு வைத்துப்பெய்த மழை ஆழ ஊனி பூமிக்கும் வானத்திற்குமாய் நட்டு வைத்த வெளிக்கம்பிகளாய் ஆகித்தெரிந்தது.
இப்படியான சூழலில் நட்டு வைத்த வெள்ளிகம்பிகளை ஏற்றுத்திளைத்துத் திரிந்த வயதும் மனதும் அப்போது இருந்ததைப்போல் இப்போது இல்லை, இந்த 54 ல் அதை ஏற்று மகிழும் உடல் நிலையும் இல்லை.
ரயில்வே ஸ்டேஷனைத் தாண்டி விட்டான்.வலுத்துக்கொண்டு வந்த மழை இனியும் இப்படியே நீ சென்று விட இயலாது,எங்கேனுமாய் ஓரங்களில் நின்று விட்டு மழை நின்றதுமாய் கிளம்பு/என்றறிவித்ததை ஏற்றுப் பணிந்த வனாய் இரு சக்கரவாகனத்தை திருப்பிக்கொண்டு டீக்கடையில் வந்து நிற்கி றான்,
பழகிய கடை பழகிய முகம்,பழகிய பேச்சுதான் என்றாலும் கூட அவர் பேசியது சரியாக கேட்கவில்லை,
“வாங்க,நல்லா நனைஞ்சிட்டீங்க போல, கடைக்குள்ள போயி நில்லுங்க” என் பது அவரது பேச்சின் அர்த்தம் என்பதாய் புரிந்து கொள்கிறான்.
நன்றாக நனைந்து விட்டிருந்தான்,பேண்ட் சட்டை எல்லாம் தெப்பமாக நனைந் திருந்தது,பிழிந்தால் அரைக்குடம் தண்ணீராவது எடுக்கலாம் போலிருக்கிறது.
வடை எடுத்துகடிக்கலாம் என்றால் வடை இல்லை.இனிப்புப் பனியாரம்தான் இருந்தது,ரவையில் சுட்டிருப்பார்கள் போலிருக்கிறது, இருக்கமாக இருந்தது. கேட்டதில் ரவைப்பணியாரம் என்றார்கள்,
பணியாரத்தை சாப்பிட்டு நின்று கொண்டிருக்கும் போது பெய்து கொண்டிருந்த மழையின் வலு கூடிக்கொண்டு போனது தெரிந்தது.கடைக்குள்ளாக நின்று கொண்டிருந்த இவன் மீது தெரித்த மழையின் சாரல்கள் நனைந்து நின்ற இவனை மேலுமாய் நனைத்தது.சித்திரை வெயிலின் வெப்பத்தின் தாக்கத்தி லும் கூட உடல் லேசாக ஜில்லிட்டது.”இதுதான் சார் மழையோட அருமை, எவ்வளவு வெயில் அடிச்சாலும் கூட ரெண்டு மழைத்தண்ணி மேல விழுந்த ஒடனே ஒடம்பு ஜில்லிட்டுப்போகுது” என்றார்.
இன்னும் ஒரு மணி நேரமாவது கண்டிப்பா மழை பெய்யும் சார் என்றார், மேகத்தப்பாருங்க.அந்தா கரை கட்டுனாப்புல நிக்குது பாருங்க,அது இருக்குற வரைக்கும் மழை ஊனிப்பெய்யும் சார் என்றார்,இவருக்கு எப்படி இதெல்லாம் தெரிகிறது என்கிற ஆச்சரியத்தில் அவர் சொன்ன திசையில் பார்த்த போது வானத்தில் பார்ட்டர் கட்டி நின்றது போல் நின்றது மேகம்,
அப்படியாய் பார்டர் கட்டி நின்ற இடம் கருமை காட்டி அடர்த்தியாய் இருந் தது.
அவர் சொன்னது உண்மைதான் போலும்,இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மழை நிற்காது எனத்தோணியது.வீட்டிற்கு போன் பண்ணி சொல்லிவிடலாம் என நினைத்தால் வெட்டுகிற மின்னலும்,இடிக்கிற இடியுமாய் போன் பண்ண விடவில்லை.தவிர கரெண்ட் வேறு கட்டாகியிருந்தது,
டீக்கடைக்காரர்தான் பேசினார், இப்போதைக்கு போன் பண்ணமுடியாது நீங்க எங்கேயாவது மழையில நிப்பீங்கன்னு வீட்டுக்காரங்களுக்குத் தெரியும். என் றார். மனசின் பாஷை இவருக்குத்தெரியிமோ,,,?மழையின் பாஷை தெரிந்தது போல,,,,,/
தின்று முடித்து விட்ட ரவாப்பணியாரமும் குடித்து முடித்து விட்ட டீயும் மழைக்கு திருப்தியாய் இருந்தது.
இவன் கொண்டு போய் பஸ்ஸேற்றிவிட்ட குமாஸ்தா இந்நேரம் ஊர் நெருக்கி சென்றிருப்பாரா,அலுவலகத்தைஇந்நேரம்மூடியிருப்பார்களா,,?கல்லூரிசென்ற மகன் மழைக்கு முந்தி வீடு திரும்பி இருப்பானா,,,?என்ற கேள்விகளை உள்ளட க்கிய மனதினனாய் நின்றிருந்த வேலை நிற்பது போல் வலு இழந்திருந்த மழை திரும்பவுமாய் பெரிய துளிகளாய் பெய்ய ஆரம்பித்திருந்தது,
கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே எதிர்பார்த்திருந்த மழை இப்போது பெய்தது சந்தோஷமாகவே இருந்தது,அந்த சந்தோஷம் தாங்கி மழை நின்று கடையை விட்டு வெளியில் வரும் போது சொன்னார் கடையில் நின்றவர்,
சார் பழைய படிக்கும் பழைய யெடத்துலயே டீக்கடை போடப்போறேன் எப்ப வும் போல வாங்க,ஆதரவு குடுங்க என்று சிரித்தார்/
4 comments:
கல்லூரிசென்ற மகன் மழைக்கு முந்தி வீடு திரும்பி இருப்பானா,,,?என்ற கேள்விகளை உள்ளட க்கிய மனதினனாய் நின்றிருந்த வேலை நிற்பது போல் வலு இழந்திருந்த மழை திரும்பவுமாய் பெரிய துளிகளாய் பெய்ய ஆரம்பித்திருந்தது,
மழை பொழியட்டும் நண்பரே
அருமை தோழர்,
//சார் பழைய படிக்கும் பழைய யெடத்துலயே டீக்கடை போடப்போறேன் எப்ப வும் போல வாங்க,ஆதரவு குடுங்க என்று சிரித்தார்// நேர்மறை
வாழ்த்துகள்
தம +
மழை பொழியட்டும்,மண் மட்டுமல்ல,
,மனித மனங்களும் நனையட்டும்
இந்த மேதினத்தில்/
நன்றியும் அன்பும் சுமந்த
கருத்துக்கு வாழ்த்துக்கள்/
வணக்கம் மது சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/
Post a Comment