27 Sept 2010

சாப்பாடு



வட்டத்தட்டில்
வைத்திருந்த தானியம்
முழுவதுமாய் நனைந்திருந்தது.
நேற்றிரவு பெய்த மழையின்
வேகம் மாடியை நனைத்து
தட்டிலிலிருந்த தானியம்
முழுவதையும் தண்ணீருக்குள்
போகச்செய்திருந்தது.
பலசரக்குப் போடும் கணேசிடம்
மாதாமாதம்
அரைக்கிலோ தானியம்
வாங்குவோம்..
பறவைகளுக்கு போடுவதற்கென.
ஞாபகமுள்ள நேரங்களில் போடுவோம்.
மற்ற நேரங்களில் மறந்து போகும்.என
ப்ளாஸ்டிக் தட்டில்
போட்டு வைத்து விட்டோம்.
காலையில்
மாடியை பெருக்கும் போது
தட்டில் நிரம்பி நின்ற
மழை நீரை வடித்து விட்டு
தானியத்தை காயப்போட்டு விட்டு
வருகிறேன்.
நேற்று மழை பெய்த்துள்ளதால்
இன்று பறவைகள் வருமா
இறை தின்ன?
அப்படியே வந்தாலும்
நனைந்ததைச் சாப்பிடுமா?
அல்லது காயும் வரை காத்திருக்குமா?
வரட்டுமே கேட்டுத்தான் பார்ப்போம்.

2 comments:

முல்லை அமுதன் said...

nantru.
vaazhthukkal.
thodarka.
mullaiamuthan
'kaatruveli-ithazh.blogspot.com

vimalanperali said...

வணக்கம் முல்லை அமுதன் சார்.நலம்தானே?உங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி.